Notifications
Clear all
மதுர ஜில்லா... மச்சானே!-54
மதுர ஜில்லா... மச்சானே! -Praveena Thangaraj
9
Posts
9
Users
3
Reactions
208
Views
அத்தியாயம்-54
அதிகாலை சூரியன் மெல்ல எட்டிப் பார்க்க, இனியன் வீட்டுத் தோட்டம் பனித்துளிகளை தாங்கியபடி பசுமையாக காட்சியளித்தது.
கோழிகளின் கீச்சு, மாட்டுத் தொழுவத்தில் மாடுகள் எழுப்பிய சத்தம், சமையலறையில் பாத்திரங்கள் உரசும் ஓசை என்று வீடு வழக்கம்போல உயிர்ப்புடன் இருந்தது.
மாடியில் இருந்து ஜீன்ஸும் கருப்பு நிற முழுக்கை சட்டையும் அணிந்து இறங்கி வந்தான் இனியன். அவன் கையில் பைக் சாவி.
வேல்விழி அவனைப் பார்த்ததும், "இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்ட?" என்றார்.
"ஆமா அம்மா. தூரிகாவை கூட்டிட்டு காலேஜ் போகணும்" என்றார்.
அருளாளன் தினசரி செய்தித்தாளை மடித்துவிட்டு,
"நிஜமாவே தினமும் கூட்டிட்டு போகப் போறியா?" என்று கேட்டார்.
"பின்ன... நேத்து அந்த விளங்காதவன் கையை நீட்டியிருக்கான். போலீஸ் ஸ்டேஷன் வரை போயிருக்கான். அதெல்லாம் மனசுல வச்சிக்கிட்டு ஏதாவது பண்ணிட்டான்னா? அகிலன் வர்ற வரையாவது, நாம கொஞ்ச நாள் ஜாக்கிரதையா அவளை பார்த்துக்கறது நல்லதில்லாயா அப்பா. எனக்கும் அவ தங்கச்சி தானே அப்பா" என்றான்.
அருளாளன் திருப்தியாக தலையசைத்தார். "அது சரிதான்." என்றார். தம்பியிடம் மனம் விட்டு பேசியப்பின், மீனாட்சியிடம் மன்னிப்பு கேட்டப்பின், அவருக்கு மனதில் பதிந்திருந்த நஞ்சு அகன்று விட்டதென கூறலாம்.
அப்போது வேல்விழி சிரித்தபடி,
"இப்படி பேசறதை பார்க்க எவ்வளவு நல்லாயிருக்கு. அதை விட்டுட்டு...ஒரே குடும்பத்துல... நீங்களே வில்லனா முளைச்சிட்டு நின்னது தான் வருத்தம்." என்றார்.
அருளாளன் உடனே மனைவியை முறைத்தார்.
"ஏய்... என்னை நோண்டுற வேலையை விட்டுட்டு... மருமக சமைக்கறாளான்னு போய் பாரு. இல்லேன்னா... இன்னும் இரண்டு நாள்ல நீ பெருத்துடுவ." என்று ஜாடையாகக் கூறினார்.
அந்த வார்த்தையின் அர்த்தம் வேல்விழிக்கு மட்டும் புரிந்தது.
'மதுராவை தனியா விடாத... ஏதாவது யோசிச்சிடுவா.' என்ற எச்சரிக்கை அது.
"சரி... சரி... நான் சமையலறைக்கு போறேன்" என்று சமையலறைக்குள் சென்றார்.
அப்போது எழிலரசன் பையை தோளில் மாட்டிக் கொண்டு வந்தான்.
"அண்ணா... நான் வேணும்னா தூரிகா அக்காவை கூட்டிட்டு போகவா?" என்றான்.
"ஒண்ணும் வேண்டாம். நீ உன் வேலையை பாரு. நான் தூரிகவை பார்த்துக்கறேன்." என்று சுருக்கமாக முடித்தான் இனியன்.
அந்த நேரம் காலை உணவை மேசையில் வைத்து கொண்டிருந்த மதுரா,
இனியனைப் பார்த்தாள்.
அவனுக்கு பரிமாறியபடி,
"நிஜமாவே... தூரிகாவை தினமும் கூட்டிட்டு போறீங்களா?" என்றவள் குரலில் ஆச்சரியமும் நிம்மதியும் கலந்திருந்தது.
இனியன் அவளைப் பார்த்தான்.
சிறிது நேரம் ஒன்றும் பேசவில்லை. பிறகு மெதுவாக அவளருகே "ஏன்? உனக்கு சந்தோஷமா இல்லையா? நம்ம கல்யாணத்துல மூணாவது முடிச்சு போட்ட நாத்தனாரை... நான் பாதுகாப்பா கூட்டிட்டு போனா, நீ சந்தோஷப்படுவ தானே?" என்றதும் மதுரா உடனே தலைகுனிந்தாள்.
"சந்தோஷம் தான்." என்றாள்.
அவன் இன்னும் ஒரு அடி நெருங்கினான்.
"அப்புறம்... இன்னொரு விஷயம்." அவள் புரியாமல் பார்த்தாள்.
இனியன் மெதுவாக அவளது இடையில் கையை வைத்து தன்னருகே இழுத்தான்.
மதுரா பதறி சுற்றிலும் பார்த்தாள். "யாராவது பார்த்துடுவாங்க..." என்று பயந்தாள்.
எழிலரசன் தான் சாப்பிட்டுவிட்டு சிட்டாய் பறந்துவிட்டானே.
தந்தையும் குளிக்க சென்றுவிட்டார். அன்னையும் சமையல் கட்டில் இருக்க, தங்கள் இருவரது பேச்சில் தற்போது தனிமை தருவாரே தவிர கரடி அவதாரம் பூசமாட்டாரென இனியன் "பார்க்கட்டும்." என்று சிரித்தான்.
அவளது காதருகே குனிந்து ஆங்கிலத்தில் மெதுவாக சொன்னான். "I searched for gold... and almost lost a diamond." என்றதும் மதுரா இமைக்க மறந்தாள். இனியனின் நெருக்கத்தில்..
"ஆங்... என்ன சொன்னீங்க?" என்று இனியனை கேட்க ஒரு நொடி அவளைப் பார்த்தான்.
அவளுக்குப் புரியவில்லை என்பதை உணர்ந்தவன்,
"ஒண்ணுமில்லை.. காலையில எழுந்தா நான் சூறாவளியா உன்னை சுருட்டிடுவேன்னு பயந்து வாசல்ல பெரிய கோலம் போட்டு டைம் வேஸ்ட் பண்ணற. அதை குறைச்சிக்கோனு சொன்னேன்.." என்று மட்டும் கூறி சிரித்துவிட்டு விலகினான்.
அவன் மனம் மட்டும் அவளை பார்த்து சொல்லிக் கொண்டிருந்தது. 'தங்கத்தைத் தேடினேன்... வைரத்தைத் தொலைக்கப் பார்த்துட்டேன் மதுரா. நீ எனக்கான வைரம். காவ்யா அகிலனுக்கான வைரம்' என்று புறப்பட்டான்.
சிறிது நேரத்தில்... இனியனின் புல்லட் சத்தம் அதியமான் வீட்டு வாசலில் நின்றது. அந்த சத்தம் கேட்டதும் தூரிகா ஜன்னல் வழியே பார்த்தாள்.
"அம்மா.. அண்ணா வந்துட்டாரு..." என்று ஓடி வெளியே வந்தாள். ஆனால் அவள் முகத்தில் இருந்த பயம் இன்னும் குறையவில்லை.
அதியமான் அருகே வந்தார்.
"இனியா... தூரிகா காலேஜிக்கு போகணுமாப்பா?" என்றார்.
அவரது தயக்கமே எல்லாவற்றையும் சொல்லிவிட்டது.
இனியன் புன்னகைத்தான்.
"சித்தப்பா... நான் இருக்கும் போது எதுக்கு பயப்படறீங்க?
நிம்மதியா அனுப்புங்க." என்றான்.
தூரிகா மெதுவாக, "அண்ணா எனக்கும் ரொம்ப பயமாயிருக்கு." என்றாள்.
இனியன் அவள் தலையில் மெதுவாக தட்டினான்.
"ஏய்... நீ என்ன இப்படி நடுங்குற? எழிலரசன் நேத்து என்ன சொன்னான் தெரியுமா? அவன் காலேஜ் ஜாயின் பண்ணினப்ப, அகிலன் அண்ணனோட தம்பின்னு தெரிஞ்சதும்.. காலேஜ்ல லெக்சரர்ஸே.. ஏதாவது ஹெல்ப் வேணும்னா தயங்காம கேளுப்பா'ன்னு சொன்னாங்களாம். எப்பவுமே நல்ல ஸ்டூடண்டோட பிரசண்ட் எப்பவும் டீச்சர்ஸுக்கு தெரியும்.
நீ... அகிலன் அண்ணனோட தங்கச்சின்னு கெத்தாசொல்லு. பாதி பேர் மரியாதையிலேயே வழி விடுவாங்க." தூரிகா சிரிக்க முயன்றாள்.
"அண்ணா... நீங்க இருக்கற வரைக்கும்... நான் பயப்பட மாட்டேன்." என்று புஜத்தை பற்றினாள்.
"அப்படித்தான் இருக்கணும்."
என்று கூறி ஹெல்மெட்டை அவளிடம் கொடுத்தான்.
கல்லூரி வாசலில் புல்லட் நின்றது. மாணவர்கள் பலர் திரும்பிப் பார்த்தனர். அதில் வசந்த் வகுப்பு ஆட்களும் பார்த்திருந்தனர்.
அதில் ஒருவன் "அகிலன் அண்ணனோட அண்ணன் இனியனாம். நேத்து வசந்த் மூலமா போலீஸ் கேஸ் ஆனதுல.. இவர் தான் இருந்தாராம்." என்ற கிசுகிசு பரவியது.
தூரிகா உள்ளே சென்றாள்.
தொலைவில் ஒளிந்து நின்று கொண்டிருந்த வசந்த் கும்பல் அதை பார்த்தனர்.
அவனுடன் இருந்த நண்பர்களில் ஒருவன் உடனே சொன்னான்.
"டேய்... விட்று. நேத்து வாங்கின அடி போதாதா? அகிலன் வேற... இனியன் வேற... இரண்டு பேருமே நம்மள உயிரோட விடமாட்டானுங்க. அகிலன் வேற பஞ்சாயத்து தலைவன் தெரியும்ல. இதுல இனியன் தம்பியும் இங்க தான் படிக்கான்" என்றான்.
மற்றொருவனும், "எங்க வீட்டுலயே நேத்து என்னை கொன்றுட்டாங்க. இனி அந்த பொண்ணு பக்கம் போனா... வீட்டைவிட்டு வெளியே போயிட சொல்லிட்டாங்க." என்றான்.
இருவரும் மெதுவாக அங்கிருந்து நகர்ந்தனர்.
வசந்த் மட்டும் அசையவில்லை.
அவனது பார்வை இன்னும் தூரிகாவைத் துரத்திக் கொண்டே இருந்தது.
அந்த நேரம் இனியனை முறைத்தபடி அவர்களையும் கடந்து நிலானி நடந்து சென்றாள்.
நீளமான பின்னல், தோளில் புத்தகங்கள், எளிமையான சுடிதார். அவளைப் பார்த்ததும் வசந்தின் அருகே நின்றிருந்த மூன்றாமானவன் மெதுவாக வசந்தை சுரண்டி சுட்டி காட்டினான்..
"டேய்... இந்த குட்டச்சி தெரியுதுல... இவ... இனியன் கட்டிக்கிட்டிருக்கற பொண்டாட்டியோட தங்கச்சி. பெயர் நிலானி. இனியன் தம்பி எழிலரசன் கூட ரெண்டு மூணு தடவை பார்த்திருக்கேன்." வசந்தின் கண்கள் மெதுவாக சுருங்கின.
"அவளுக்கும் அந்த எழிலரசனுக்கும் காதல் கீதல் ஒன்னும் இல்ல. இனியன் குடும்பத்துக்கு, அவன் கட்டின பொண்டாட்டி குடும்பத்துக்கு நிலானி ரொம்ப முக்கியம். நீ வேண்டுமின்னா இனியனை பழிவாங்க இவளை யூஸ் பண்ணலாம். அவங்க வீட்டு பொண்ணுக்கு பங்கம்னா பதறுவான் இனியன். இவ மூலமா வேற குடைச்சல் தரலாம்" என்றான்.
வசந்தின் உதட்டில் மெதுவாக ஒரு ஆபத்தான புன்னகை மலர்ந்தது.
"மச்சி... உனக்கு இன்னொரு விஷயமும் தெரியாதுல.. இந்த பொண்ணை இனியன் தம்பி எழிலரசன் ஒரு கண்ணு வச்சியிருக்கான். ஆனா இந்த பொண்ணு, அவனை கண்டாலே ஒதுங்கும். நம்ம பிரபு காதலிக்கறேன்னு சொல்லவும், அதை நம்பி இதுவும் விரும்புது டா.
நீ லவ்வெல்லாம் பண்ணி ரிவேஜ் எடுக்க முடியாது. ஆனா தூரிகாவை தொடக் கூடாதுன்னு நினைக்கிறான்ல. அதுக்கு பதிலா.. இவளை ஏதாவது செய்யலாம். அவன் குடும்ப நிம்மதியை வேற வழியில குலைக்கலாம். பிரபுவை கைக்குள்ள போட்டுக்கலாமா?" என்று மெதுவாக முணுமுணுத்தவன்.
வசந்த் தீவிர யோசனைக்கு சென்றான்.
இனியனோ நான் ஒருத்தன் மட்டும் அமெரிக்கால படிக்க போயாச்சு. மீதி நாலு டிக்கெட்டும் இங்கதான் படிக்குதுங்க. இதுல நிலானி வேற. அவ அக்காவே என்னிடம் முகத்தை திருப்பிட்டு போகாம பேசறா. இவளுக்கு என்னவாம்.' என்று எண்ணினான்.
ஆனாலும் மதுரா முகம் திருப்பாமல் பேசுகின்றாள். ஆனால் தன்னை மன்னித்தாளா? என்று தான் தெரியவில்லை. அவளாக அறையில் பயப்படாமல் தான் இருக்கின்றாள். தன்னால் தான் அவளை நெருங்க கூட முடியவில்லை. ஏனோ இன்றும் வலிக்கின்றது.
நிறைய வலியை மதுராவுக்கு செய்துவிட்டதை இனியன் புரிந்துக் கொண்டாலும் மீண்டும் அன்பால் மனதை இணைக்க முடியாமல் தடுமாறினான். உடைந்த கண்ணாடியாக தன் வாழ்வு இருக்க, ஓட்டி பார்க்க முயன்றுக் கொண்டுள்ளான்.
மெது மெதுவாக அவன் துவங்க போகும் பிசினஸிற்கு, பணம் தரும் பேங்கிற்கு வந்து சேர்ந்தான்.
காவ்யாவும் இனியனும் சேர்ந்து துவங்கயிருந்த பிசினஸை, இனியன் தனியாளாக துவங்க ஏற்கனவே மற்ற வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான்.
இடமும் கூட பார்த்து வைத்திருந்தான். என்ன மெஷின்கள் வாங்க பணம் அதிகபட்சமாகவும் பேங்க் உதவியை நாடியிருந்தான்.
இன்று அதையும் சரிப்பார்த்து லோன் அப்ரூவல் வழங்குவதாக கூறியிருக்க, அவ்வேலையை முடித்தான்.
அருளாளனிடம் கூட எதையும் கூறாமல் தான் இனியன் ஆச்சரியம் மூட்ட முனைந்து இதற்காக அலைந்து திரிந்தான். அருளாளன் கூட சில நேரம் 'என்னடா ஊர்ல வெட்டியா திரியற. ஏதாவது வேலைனு ஆரம்பி. உத்யோகம் புருஷ லட்சணம் என்றார். என்ன தான் சொத்து பத்து இருந்தாலும் இனியன் படித்து முடித்து வந்து இந்த வேலையை பார்த்துக் கொள்கின்றான்' என்று சொல்லிக் கொள்ளும் வேலையை கூறுவதில் பெருமை உண்டல்லவா? அதிலும் மதுராவை கட்டி முடித்தப் பின்னும் ஊர்சுத்துவதாக அவர் கருதினார். இன்று ஊரெல்லாம் சுற்றவில்லை. தானும் உபயோகமாக தான் பிசினஸ் விஷயமாக அலைந்தோமென தெரிந்து, தந்தை மகிழ்வாரென நினைத்தான்.
ஆனால் அதையே காவ்யாவும் செய்ய முனைவதை அறிந்தால் என்ன நினைப்பானோ?!
பேங்க் லோன் பணம் இன்னும் நான்கு நாளில் வந்துவிடும் என்று கூறிட, சந்தோஷத்துடன் மதுராவை காண விரைந்தான்.
-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்
Posted : August 4, 2026 7:10 am
Topic Tags
-
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 54)அடப்பாவிங்களா ! காலம் காலமா ரிவென்ஜ் எடுக்க பொண்ணுங்களையே டார்கெட் பண்ண வேண்டியது. ஏன் டா, உங்க பழிவாங்குற படலத்துக்கு தங்கச்சிகளும், மனைவிகளும் தான் தொக்கா ?
இனியனை பேசாமல், காவ்யாவோட பிசினஸ் பார்ட்னரா சேர்ந்துக்கச் சொல்லிடுங்க. அதான் இப்ப ரெண்டு குடும்பமும் ஒண்ணு சேர்ந்திடுச்சுல்ல இப்ப.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Posted : August 4, 2026 8:29 am
Forum Jump:
Related Topics
-
மதுர ஜில்லா... மச்சானே!-28
7 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-67
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே-70 (முடிவுற்றது)
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-39
3 weeks ago
Forum Information
- 25 Forums
- 330 Topics
- 1,588 Posts
- 3 Online
- 420 Members
Our newest member: Indu19
Latest Post: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-14
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
