Forum

Pineapple Juice (அண...
 
Notifications
Clear all

Pineapple Juice (அண்ணாச்சி ஜூஸ்)

1 Posts
1 Users
0 Reactions
50 Views
(@praveena-thangaraj)
Posts: 265
Member Admin
Topic starter
 
[#179]

அன்னாசிப்பழ ஜூஸ் (Pineapple Juice)

தேவையான பொருட்கள்

அன்னாசிப்பழம் – 1(சிறுசிறு துண்டுகளாக நறுக்கியது)

குளிர்ந்த தண்ணீர் –1 கப்

சர்க்கரை அல்லது தேன் – 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் (விருப்பம்)

எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன்

ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு

புதினா இலை – சிறிதளவு (அலங்கரிக்க)

பால் தேவைப்படுவோர் சேர்க்கலாம். திக்காக வரும்.

செய்முறை

அன்னாசிப்பழத் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போடவும். நன்றாக மசித்திட, அதனுடன் தண்ணீர், சர்க்கரை (அல்லது தேன்) சேர்த்து நன்றாக கட்டி இல்லாத வகையில் அரைக்கவும்.

தேவையெனில் வடிகட்டி ஜூஸை எடுக்கலாம்.

எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்.

டம்ளரில் ஐஸ் கட்டிகளை போட்டு ஜூஸை ஊற்றவும்.

புதினா இலை வைத்து அலங்கரித்து குளிர்ச்சியாக பரிமாறவும்.(நான் அலங்கரிக்கலைப்பா)

அண்ணாச்சி பழத்தின் நன்மைகள்

* வைட்டமின் C நிறைந்தது.

*நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

* செரிமானத்திற்கு உதவக்கூடிய பிரோமேலின் (Bromelain) எனும் இயற்கை நொதி இதில் உள்ளது.

 எங்க வீட்ல இதை செய்வேன். வடிக்கட்டிய நார்சத்தை சர்க்கரை சேர்த்து அல்வா தயாரிப்பேன். அண்ணாச்சி சிறிதளவு கூட வேஸ்ட் ஆகாது. 


 
Posted : July 16, 2026 1:49 pm
Topic Tags

Scroll to Top