Forum

Beetroot Juice
 
Notifications
Clear all

Beetroot Juice

1 Posts
1 Users
0 Reactions
18 Views
(@praveena-thangaraj)
Posts: 265
Member Admin
Topic starter
 
[#178]

பீட்ரூட் ஜூஸ் (Beetroot Juice)

தேவையான பொருட்கள்

பீட்ரூட் – 1 (நடுத்தர அளவு)

இஞ்சி – ½ அங்குலம்

எலுமிச்சைச் சாறு – 1 டேபிள்ஸ்பூன்

தேன் – 1 டீஸ்பூன் (விருப்பம்)

குளிர்ந்த தண்ணீர் – 1 கப் (பால் வேண்டுமென்றால்) 

ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு

சர்க்கரை (தேவைப்படுவோருக்கு தேன் சேர்க்காமல் சர்க்கை சேர்க்கலாம்.)

செய்முறை

பீட்ரூட்டை நன்றாக கழுவி தோலை நீக்கி சிறிய துண்டு துண்டுகளாக நறுக்கவும்.

மிக்ஸி ஜாரில் பீட்ரூட், இஞ்சி மற்றும் குளிர்ந்த தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

அரைத்த கலவையை வடிகட்டியில் வடிகட்டவும். (நார்ச்சத்து பிடிக்கும் என்பவர் அப்படியே வேண்டுமென்றால் வடிகட்டாமல் குடிக்கலாம்.)

எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

ஐஸ் கட்டிகள் சேர்த்து உடனே பரிமாறவும்

குறிப்புகள்:

காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும்.

இனிப்பு அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம். மேலும் பாலை கலந்துக் கொள்ளலாம். 

எலுமிச்சைச் சாறு கடைசியில் சேர்ப்பதால் சுவையும் நிறமும் மேலும் நன்றாக இருக்கும்.

பீட்ரூட் ஜூஸின் நன்மைகள்:

*இரும்புச்சத்து நிறைந்தது.

*ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவுகிறது.


 
Posted : July 16, 2026 1:03 pm

Scroll to Top