Forum

நயனமே நான் தானடி-9
 
Notifications
Clear all

நயனமே நான் தானடி-9

2 Posts
2 Users
0 Reactions
21 Views
(@praveena-thangaraj)
Posts: 323
Member Admin
Topic starter
 
[#426]

அத்தியாயம்-9 

    தேவாவை அவசரமாக அழைத்துக்கொண்டு தன் தாய்மாமாவுடன் தனக்கான லாட்ஜில், தனி ரூமில் வந்ததும் நிம்மதியடைந்தான் ராஜ்குமார். 

 

  சந்திரா ஒப்புக்கு 'இங்க இருக்கலாமே ராஜ்குமார்' என்றதற்கும், சசிகுமார் "ஏன் ராஜ் சாப்பிட்டதும் கிளம்பணுமா? இங்க இரண்டு நாள் இருந்துட்டு பிறகாவது லாட்ஜ்ல தங்கலாமே " என்று சோகமாய் கேட்டும் மறுத்தவன் அறையில் சுவாதினமாக தண்ணீரை வாங்கி பருகினான். 

 

   சசிகுமார் பிறகு வந்து பார்ப்பதாக கூறி சென்றதும், தேவா கதவை தாழிட்டு "என்ன சார் இப்படி சாப்பிட்ட கை காயறதுக்கு முன்ன வந்துட்டிங்க. சொந்தம் வேண்டாம்னு சொன்னிங்க. அதுக்காக இப்படியா? உங்க மாமா கேட்டபடி இரண்டு நாள் இருந்துட்டு இங்க வந்திருக்கலாம்." என்றதும் ராஜ்குமார் தடுமாறினான்.‌

 

  சஞ்சனா தன்னிடம் பேசியதை தெரிவிக்கவும், தேவாவோ "இதுல தப்பென்ன சார்? அந்த பொண்ணுக்கு எத்தனை வயசுலயிருந்து உங்களை தான் அவங்களுக்கு கட்டிக் கொடுப்பதா பேசினாங்களோ? அந்த பொண்ணு உங்களை மனசுக்குள் எத்தனை வருஷம் காதலிச்சாங்களோ? 

   நீங்க விபத்துல சிக்கி கண்பார்வை இழந்ததையும், உங்க மனசுல இன்னொரு பொண்ணு இருந்ததையும் தாங்காம எப்படி துடிச்சிருக்கும்? 

 

அவங்களை பார்த்தாலே வாயில்லா பூச்சினு தெரியுது. அம்மாவை மீறி ஒரு வார்த்தை பேசவே அத்தனை முறை பயந்து உங்க பக்கம் வந்த பொண்ணு, உங்களுக்கு விபத்து நிகழவும் எப்படி தனியா பார்க்க சென்னை வரமுடியும்? 

     இதுல உங்க காதலை விட என் காதல் ஒரு படி மேலனு உசுத்தி காட்ட, உங்களை பார்த்ததும், இப்பவும் காதலிப்பதை மனம் திறந்து சொல்லிருக்கு. அதுக்கா சார் பயந்துட்டு ஓடிவந்துட்டிங்க?" என்று தேவா கேட்டிடவும், வார்த்தையால் திணறினான் ராஜ்குமார். 

 

   ஆனாலும் தன்னை சமாளித்து, "மாமா அத்தை எல்லாம் எனக்கு பார்வை போனதில் விலகி தான் இருக்காங்க தேவா. அப்படியிருக்க... சஞ்சனா இப்படி பேசவும், அட நம்மை ஒரு பொண்ணு விரும்புதேனு சந்தோஷப்பட முடியுமா? இதெல்லாம் வயசு வேகத்தில வர்ற வார்த்தை தேவா. இதை என்கரேஜ் பண்ண முடியாது. இனி அவ வந்தா என்னை தனியா விடாத. அப்பறம் நாம இங்கற இருக்கற வரை இந்த ரூம்ல தான் தங்கப் போறோம்." என்று முடிவாக கூறினான். 

 

  தேவாவும் அதற்குபிறகு சஞ்சனாவை பற்றி பேசவில்லை. 

 

  தேவாவுக்கு கொடுக்கப்படும் பணி அவன் ராஜ்குமாரை நன்றாக பார்த்துக்க வேண்டும். ராஜ்குமாரின் விருப்பு வெறுப்பு மட்டும் புரிந்து செயல்படவேண்டும். 

 

  அதனால் தேவா பெரும்பாலும் ராஜ்குமார் சொல்வதை மட்டும் கேட்டுக்கொண்டான். 

 

   ராஜ்குமார் பலமுறை கொடைக்கானல் வந்தவனாக இருக்கலாம், தேவாவுக்கு ஊர் சுற்ற ஆசையிருக்கும் அல்லவா?! அதனால் தனி காரில் இருவரும் ஊர்சுற்ற ஆரம்பித்தார்கள். 

 

  எதையும் தற்போது பார்க்க முடியாத ராஜ்குமாரின் கையை பிடித்து தேவா செல்ல, கடைசியில் கொடைக்கானல் சூசைட் பாயிண்ட் என்ற இடத்தில் நின்றனர். 

 

  சில நேரம் இந்த இடத்துல இருந்து விழுந்து செத்திடலாம்னு தோனுது‌ தேவா. ஆனா குருட்டு நம்பிக்கைனு சொல்வாங்களே.. அதுல வாழ்ந்தா தான் என்னனு ஒரு எகத்தாளம்‌.

 

   என் வாழ்க்கை எதை நோக்கி போகுதுனு தெரியலை தேவா." என்று பிதற்றினான். 

 

  "சார்... நாம இந்த இடத்துலயிருந்து கிளம்பலாம்." என்று அழைத்து சென்றான். மனதால் சோர்வானவர்கள் சில இடத்தை தவிர்ப்பது நலமென்று நினைத்தான் தேவா. 

 

  அப்படியிப்படி என்று இங்கு வந்து பதினைந்து நாட்களை கடத்திவிட்டார்கள். 

 

  சஞ்சனா தன்னை விரும்புவதால் மாமா வீட்டு பக்கம் கூட ராஜ்குமார் செல்வதில்லை.

 

இதில் பெரிதும் நிம்மதியை கண்டது என்னவோ சந்திரா தான். ஏதாவது அசைவ குழம்பு பிடித்த காய்கறி என்றால் சசிகுமார் ராஜ்குமாருக்கும் தேவாவுக்கு சேர்த்து எடுத்து வந்து தருவார். 

 

   எப்பொழுதும் ராஜ்குமாரை தேவா பிரையண்ட் பார்க்கிற்கு தினமும் அழைத்து செல்வதால், சஞ்சனாவும் அந்த நேரம் அட்டனனஸ் போட்டுவிடுவாள்‌. 

 

   ராஜ்குமாருக்கு பார்க்க முடியாததால் அவனுக்கு தெரியாது. ஆனால் தேவா சஞ்சனாவை கண்டு சில நேரம் யோசிப்பான். 

ராஜ்குமாரிடம் சஞ்சனா வந்ததை தெரிவிக்க முனைந்தால் எங்கே ரூமுக்குள் அடைந்திடுவாரோ என்று மறைத்திடுவான். 

 

சஞ்சனாவோ தேவா பார்த்தால் ராஜ்குமார் அத்தானிடம் கூறுவாரென் நம்பினாள். 

 

  ஒரு மாதம் முடியும் நேரம் வரவும் காதல் பாடலை கேட்டுக் கொண்டிருந்த ராஜ்குமார் முகம் விகாசித்தது.

 

  "என்ன சார் சென்னை போகப்போறோம் என்றதும் சந்தோஷமா?" என்று கேட்க ராஜ்குமார் ஜன்னல் அருகே உடலை ஊடுருவும் குளிரை ஏற்றவனாக, "சரியோ தவறோ நேத்ராவிடம் என் காதலை சொல்லப் போறேன் தேவா. விபத்து நேர்ந்து என் தன்னம்பிக்கையும் தைரியமும் இழந்து நின்றப்ப. எனக்கு தைரியத்தை கொடுத்தது அவ பேச்சு. இப்ப அவளை மாதிரி ஒருத்தி என் லைப்ல வந்தா என் மிச்ச வாழ்க்கையிலும் கண்ணு தெரியாதென்றலும் பயமில்லாம நான் வாழ்வேன்." என்று பேச தேவா அமைதியானான்.‌

 

     ராஜ்குமார் இப்படி பேசவும் இடையில் நிறுத்தி, 'சார் சஞ்சனா தினமும் உங்களை பார்க்க பார்க்குக்கு வர்றாங்க. அவங்க உங்களை இன்னமும் விரும்பறாங்க' என்று கூறுவதற்கு முனைந்தான். 

 

  ஆனால்... எப்பவும் போல சொல்வதற்கு தயக்கம். 

  நேத்ராவை ராஜ்குமார் உள்ளத்தால் பார்க்கின்ற போது, இதை சொல்வானேன்?

 

    "உங்க காதலை நேத்ரா ஏற்றுக்க வாழ்த்துகள் சார்." என்று கைகுலுக்கினான்.‌

 

"எல்லாத்தையும் பேக் பண்ணு தேவா. தேவா... பிடிக்குதோ இல்லையோ... உன் பேரண்ட்ஸ் உன் தம்பி தங்கைக்கு எல்லாருக்கும் கிப்ட் வாங்கிடு. அப்பறம் நேத்ராவுக்கும் வாங்கு." என்று கூற சம்மதம் கூறினான் தேவா. 

 

  ராஜ்குமார் பணித்த வேலைகளை முதலில் முடித்து விடுவதில் தேவா மும்முரமானான்.

 

  ராஜ்குமார் கிளம்புவது சசிகுமார் வீட்டில் தெரிவித்திருக்க, சந்திரா "அப்பாடா.. எந்த வில்லங்கமும் இல்லாம கிளம்பறது பெஸ்ட். பரவாயில்லைங்க ராஜ்குமாரால எந்த சிக்கலும் இல்லை.'' என்று நிம்மதியடைந்தார்.

 

  சசிகுமாரோ தேவா ராஜ்குமாரை கவனிப்பதை நேரில் பார்த்ததில் ராஜ்குமார் எங்கிருந்தாலும் பெயருக்கேற்றவனாக வாழட்டுமென வேண்டினார். 

 

  இங்கே இதயத்தில் சிக்கி தவித்து கொண்டிருந்தவள் சஞ்சனா மட்டுமே. 

 

  அவளாக ராஜ்குமார் இருந்த இடத்தில் வந்து, "அத்தான்... ஊருக்கு போறதா கேள்விப்பட்டேன். இது என்னோட கிப்ட். பிடிச்சிருக்கோ பிடிக்கலையோ ஆசையா தர்றேன் வாங்கிக்கோங்க" என்று நீட்டினாள். 

 

  ராஜ்குமார் கைகள் வாங்கவும் இல்லை அதே நேரம் உணர்ச்சியற்று நிற்கவுமில்லை. அதனால் "தேவா" என்று கூப்பிட, ராஜ்குமார் கையை சஞ்சனா தொட்டு, கையை பிரித்து தந்தாள்.

 

  "வர்றேன் அத்தான்." என்று அழுதபடி சென்றாள். 

 

தேவாவோ "சார் அவங்க போயிட்டாங்க" என்றதும், தேவா... இதை பெட்டியில வை" என்று கொடுக்க, "என்னனு பிரிக்கலையா சார். சொல்லக்கூடாதுனு நினைச்சேன்... ஆனா முடியலை சார். அந்த பொண்ணு பிரையண்ட் பார்க்ல நாம போறப்ப எல்லாம் வந்து உங்களை தூரத்துலயிருந்து ரசிக்கும்." என்றான்‌

 

'ஊருக்கு போனப்பிறகு கிப்ட் பார்த்துக்கலாம். இப்ப சஞ்சனா பற்றி பேசி நல்ல மனநிலையை இழக்க தயாராயில்லை." என்றான்.

 

  தேவாவும் அப்படியே பெட்டியில் பூட்டிக்கொண்டான்.‌

 

சென்னை புறப்பட்டு விட்டான். வரும் போது வந்தது போலவே ஏசி பஸ், தாய்மாமாவிடம் வழியனுப்ப வந்தவர் என்னென்னவோ லாட்ஜ் விரகவாக்கம் செய்வதை பற்றி பேசினார். அதெல்லாம் தலையாட்டுதலில் கேட்டுக்கொண்டான். "எதுனாலும் செய்யுங்க மாமா. எனக்கு இனி தனியா பிசினஸ் பார்க்க முடியாது. இது ஒன்னு தான் வாழ்வாதாரம்." என்று தோளைக்குலுக்கி கொண்டான். 

 

   ராஜ்குமார் பயணம் முழுவதும் நேத்ரா ஆக்கிரமித்து இருந்தாள். 

 

  நேத்ராவுக்கு என்னை நினைவுயிருக்குமா? மறந்திருப்பாளா? நான் காதலை சொன்னா ஏற்பாளா? முதல் முறை சோனாலியை காதலித்த போது இது போன்ற பயமில்லை. எப்படியும் சோனாலி ஏற்பாளென்று வைர மோதிரம் பூ எல்லாம் எடுத்து வந்தான். 

 

இன்று நேத்ராவிடம் காதலை சொல்லவும், எப்படி சொல்லலாமென்ற தயக்கம் மட்டுமே. மற்றபடி நேத்ரா தன்னை ஏற்கலாம் என்று முடிவெடுத்திருந்தான். 

 

    சென்னை வந்ததும் முதலில் பெரிய தூக்கம்‌. தேவா மட்டும் அவன் வீட்டுக்கு சென்றிருந்தான். 

  பரிசுடன் வந்ததால் ஏக கவனிப்பு. அத்துடன் தேவா உடுத்திய உடைகளே அவன் தற்போது நல்ல வேலையில் இருப்பதாக காட்டியது. பெற்றவர்களிடம் கொடைக்கானல் சென்று வந்ததாக தெரிவித்தான். 

 

  தம்பிக்கு தாழ்வுபான்மை தலைதூக்கியது. ஆமா பெரிய கிப்ட் என்று உதாசினம் செய்தான். 

   தம்பி மனைவியோ 'என்ன சொல்லுங்க... அவர் பார்க்க சுமாரா தழும்பு வந்து கிடக்கறார்னு கேலி செய்தாலும் எந்த விதமான கமிட்மெண்ட் இல்லாம ஹாயா இருக்கார். நீங்க தான் அப்பா அம்மானு பூனைகளை மடில கட்டிட்டு இருக்கிங்க. எனக்கென்னவோ உங்க அண்ணன் புத்திசாலி" என்று பெற்றவர்களை உங்க தலையில் கட்டியதாக தேவாவை பற்றி போட்டு வைத்தாள்.

  உண்மையில் தேவாவை ஒதுக்கியது இந்த குடும்பம். 

 

   கூடவே மாமியார் மாமனார் வைத்துக் கொண்டு அல்லல்பட பிடிக்காமல் பெரியவரிடம் போங்களேன் என்று துரத்தாக குறை. 

 

   தக்கச்சிக்கு இந்த கிப்ட் எல்லாம் தந்துடும்மா. நான் கிளம்பறேன்" என்று ஒரு டீயை மட்டும் குடித்து விட்டு கிளம்பினான். 

 

     ஒரு பக்கம் கன்னத்தை தொட்டு பார்த்தான். டீ கொடுக்கும் போது தம்பி மனைவி அவன் கன்னத்தை கண்டு அருவருப்பு அடைந்தவளாக சென்றது உறுத்தியது. 

 

    சிவாஜி நடித்த தெய்வமகன் போல தன் கன்னம் தழும்பில் காட்சியளிப்பதற்கு தேவா என்ன செய்வான்? 

 

  ராஜ்குமார் வீட்டுக்கு தேவா திரும்பி வந்ததும், பழைய சுறுசுறுப்பு வந்தவனாக, "சார் வீட்டுக்கு எல்லாம் போயிட்டு வந்துட்டேன்." என்று உற்சாகமாக வந்தான்.‌

 

"வெரிகுட் தேவா." என்று அழைத்தவன், "நேத்ராவை சந்திக்கணும்... அவளை மீட் பண்ண கேட்டேன். முதல் முதல்ல சந்திச்ச இடமா, மெரீனா தான் மீட் பண்ணி என் காதலை சொல்ல நினைச்சேன். ஆனா பெசண்ட் நகர் தான் நேத்ரா கைகோர்த்த இடம். அப்ப தான் நேத்ரா எனக்குரியவளா இருந்தா எப்படியிருக்கும்னு நினைப்பை விதைச்ச இடம்." என்று கூற, தேவாவோ தயக்கமாய் "சார்... அப்ப நேத்ராவை காதலிக்கறிங்களா?" என்று கேட்க, "ஆமா தேவா. அவளிடம் பேசறதால தான் அவ நினைப்புனு அவளை விட்டு தள்ளி கொடைக்கானல் போனேன். அவளிடமும் கொஞ்ச நாள் பேசாம இருக்க நினைச்சேன். ஆனா இந்த இடைப்பட்ட மாசத்துல நேத்ராவை மிஸ் பண்ணாதனு தான் மனசு சொல்லுது. ராங் சாய்ஸ் இல்லைன்னு தெளிவா இருக்கேன்." என்றான். 

 

  அதனால் தேவா நேத்ராவிடம் ''ராஜ்குமார் சார் உங்களை சந்திக்க வேண்டும்னு சொல்லறார்." என்று கூறி அனுமதி வாங்கியிருக்க, சந்திப்பும் அமைந்தது. 

 

ஒருபுறம் சங்கவி நேத்ரா மறுபுறம் ராஜ்குமார் தேவா வந்திருந்தனர்.‌

 

"தேவா.. நான் நேத்ராவிடம் பேசிட்டு கூப்பிடறேன்" என்று கூற சங்கவியை 'சிஸ்டர் நாம இங்க இருப்போம்.' என்று அழைத்து சென்றான்.‌

 

   நேத்ராவோ "என்ன சார்... என்னிடம் தனியா என்ன பேச போறிங்க? ஓ சோனாலி பத்தியா?" என்று கேட்டாள். 

 

   ராஜ்குமாரோ ''காதலை பத்தி கேட்க போறேன். முன்னாள் காதலியை பற்றி இல்லைங்க. முன்னாள் காதலி எங்கிருந்தாலும் வாழ்கனு என்னைக்கோ என்னை மாத்திக்கிட்டேன்" என்றான்.‌

 

"ஓ.. ரியலி... முன்னாள் காதலியை மறந்துட்டதா சொல்லறிங்க. ஆனா காதலை பத்தி கேட்க போறதா சொல்லறிங்க? ஆச்சரியமா இருக்கே?" என்றாள் நேத்ரா. 

 

"ஆமாங்க.. காதல் தோல்வியடைந்து அடைந்தப்பிறகு காதலிக்கவே கூடாதுனு எல்லா பசங்களும் நினைக்கறது தான். அதுவும் கண் போனப்பிறகு நான் எல்லாம் காதலிக்கவே மாட்டேன், ஏன் வாழவே மாட்டேன்னு நினைச்சேன். 

 

ஆனா எனக்கு வாழணும்னு ஆசையை விதைச்சது உன்னோட மோட்டிவேஷன் நேத்ரா. உன்னை சந்திச்சப்பிறகு... உன்னோட பேசி பழகியப்பிறகு உன் நினைப்பு மட்டும் தான். 

   இங்க இருப்பதால, உன்னோட பேசறதால இந்த தாட்ஸ் வருதோனு, தனியா கொடைக்கானல் போயிட்டேன். உன்னோட சில நாள்கள் பேசாம தவிர்த்தேன். ஆனா இது காதல்னு உன்னை தேடி வந்துட்டேன்.‌

  எஸ்... நான்... நான் உன்னை விரும்புறேன் நேத்ரா." என்று தன் காதலை வெளிப்படுத்தினான். ராஜ்குமார்.

 

  நேத்ராவோ வார்த்தைகளை உள்வாங்கியவள் சத்தமாய் சிரித்தாள். 

 

  ராஜ்குமார் இவளது முகத்தை பார்த்தாளாவது என்ன உணர்வில் இருக்கின்றாளென கவனிப்பான். இன்று அப்படியும் காண இயலாது பார்வையற்றவனாக நின்றான். 

"காதலுக்கு கண் இல்லைனு சொல்வாங்க ராஜ். உங்க காதலுக்கு நிஜமாவே கண் இல்லை. ஆமா... என்ன தாட்ஸ்ல என்ன காதலிச்சிங்க... உங்களுக்கும் எனக்கும் இப்ப தான் அறிமுகம். சொல்லப்போனா சங்கவிக்கு எழுத உதவியதுக்கு பிறகு. ஒரு ஆறேழு மாசம் இருக்குமா? என்ன சார் உங்களை காதலிக்க வைக்கிறது ரொம்ப சுலபம் போலயே. கண்ணு தெரியாத நானே உங்களை காதல் வலையில் வீழ்த்திருக்கேன். சோனாலி எல்லாம் கஷ்டப்படாம காதலிக்கலாம் போலயே. அவ்ளோ முட்டாளா?" என்று கேலி பேசினாள். 

 

"நேத்ரா... கிண்டல் செய்யாத. காதல் ஒரு முறை தான் வரணும்னு சட்டமில்லையே. அதோட, ஒரு காதல் தோல்வியுற்றதும் அடுத்த காதலை தேடுறதில் தவறில்லையே.   என்னோட லைப்புக்கு, என்னோட தாட்ஸுக்கு உன்னோட பேச்சு சிரிப்பு, உன் குரல் இதெல்லாம் மனசுக்கு இதமா இருக்கு. 

  உன்னோட அப்பா அம்மா உன் சின்ன வயசுலயே உனக்கு பார்வையில்லைனு விட்டுட்டு போனதா சொன்ன. அப்ப இருந்து இப்ப வரை தனியா வளர்ந்திருக்க. இனி வர்ற வாழ்க்கை என்னோட வாழலாமே? ஏன் இந்த நக்கல் கிண்டல்? 

 

உன்னோட தேவைகளை பூர்த்தி செய்ய நான் இருக்கேன். 

   என் காதலில் என்ன குறை கண்ட?" என்று கேட்டான்.‌

 

நேத்ராவோ "தப்பில்லை ராஜ்குமார் சார். சோனாலி போனதும் இன்னொரு காதல் வருவதில் தப்பேயில்லை. ஆனா என்னை காதலிப்பதா சொல்லறிங்க பாருங்க  அப்ப நான் என் தரப்பில் மறுப்பை சொல்லணுமே. உங்களுக்கு என் மேல வந்த காதலை நினைச்சி எனக்கு சிரிப்பு தான் வருது. 

 

  உங்களுக்கு என்னை பத்தி என்ன தெரியும்? 

 

  தினமும் வானவில் எஃப்.எஃம்-ல என்னோட போன்ல பேசற பல ஆண்களுக்கு என் குரல் மேல ஈர்ப்பு இருக்கு. நிறைய பேருக்கு நான் பேசற மோட்டிவேஷன் பேச்சுல என் மேல அட்ராக்ஷன் இருக்கு. 

 

அதுக்காக காதலிக்கறேன்னு வந்து நின்றா ஏத்துக்கவா முடியும்? பீ பிராக்டிக்கல் சார். 

   கண்ணு தெரியாதவளை காதலிச்சு இந்த சமூகத்துக்கு என்ன சொல்ல வர்றிங்க. 

   தியாகின்னா... அப்படின்னா... உங்களுக்கு கண் பறிப்போகறதுக்கு முன்ன என்னை மாதிரி ஒருத்தியை நீங்க காதலியா மனைவியா யோசித்திருப்பிங்களா? 

 

நெவர்... அப்ப உங்க கண்ணு முன்ன ஒரு குருடி வந்தாலும் காசை எடுத்து நீட்டுவிங்களே தவிர, காதலிக்கற ஆசை பிறந்திருக்காது.  இப்ப உங்களுக்கும் பார்வை பறிப்போனதினால மட்டுமே.., பழகுற மனிதரில் குணத்தை தேடறிங்க. அதுல என் குரல், என் பேச்சு ஈர்ப்புல காதல்னு சாயம் பூசறிங்க. 

    இப்ப இந்த காதலை நான் 'வாவ்.. என்னை பணக்காரர் ஒருவர் நேசிக்கறார்'னு பெருமைப்பட்டுக்கிட்டு, ஏற்க முடியுமா? 

 

  சப்போஸ் கண்ணு தெரிந்த முதல்ல தூக்கி போடுவதே நம்ம இத்தனை நாளா யூஸ் பண்ணின ஸ்டிக்கை தான். அப்படியிருக்க... இடையில் வந்த இந்த அட்ராக்ஷனை எப்படி காதல்னு சொல்லறிங்க. அதோட என்னிடம் காதலை தெரிவித்து பதிலை வேற எதிர்பார்க்கறிங்க? உங்களிடமிருந்து இப்படியான பிஹேவ்னஸை எதிர்பார்க்கலை. காதல் கீதல்னு பிதற்றிக்கிட்டு இனியொரு முறை என்னிடம் வந்து பேசாதிங்க மிஸ்டர் ராஜ்குமார். நம்ம சந்திப்பு இந்த நாளோட முடியட்டும்." என்றவள் சங்கவி.. ஏ..சங்கவி. வா.. ஹாஸ்டல் போகலாம்" என்று கூப்பிட்டாள். 

 

  ராஜ்குமார் போல நல்லவனை நேத்ரா மறுத்திடவும் தேவாவோ, "ஹலோ என்ன பேசறிங்க. அவர் விருப்பத்தை சொன்னா எஸ் சொல்லணும். இல்லை நோ சொல்லணும். இதென்ன... அவர் காதலை கேலி பேசறிங்க." என்று விசுவாசத்தில் எகிறினான். 

 

"ஓ.. தேவா சாரா.. ஏன் சார்.. கண்ணு தெரிந்தவரா இருக்கும் போது... உங்க ராஜ்குமார் சார் என்னை காதலிப்பாரா? சொல்லுங்க... அவர் வேண்டாம்... அவர் பணக்காரர். உங்களை மாதிரி ஒருத்தர் என்னை மாதிரி ஒருத்தியை விரும்புவிங்களா? சொல்லுங்க தேவா" என்றதும் தேவா ஒருநிமிடம் அதிர்ந்தான்.‌

 

பிறகு நேத்ராவே "சான்ஸேயில்லைல அப்படியிருக்க இவருக்கும் கண்ணு தெரியலை, எனக்கும் கண்ணு தெரியலை என்ற ஒரே ஒற்றுமையில் காதலிப்பேன்னு அவரா முடிவு செய்தா எப்படி?" என்று கேட்டாள்‌.

 

  சங்கவியோ "நேத்ரா... கத்தாதே.. வா போகலாம்" என்று இழுத்து சென்றாள். தேவா நேத்ரா செல்வதை வேடிக்கை பார்த்தான். 

 

  "என்னடி ராஜ்குமார் சார் பிரப்போஸ் பண்ணவும் ரிஜெக்ட் பண்ணிட்ட?" என்று சங்கவி கேட்க, "நட்பா பழக தான் நம்பரை

தந்தது. காதலிக்கறது எல்லாம் நமக்கு செட்டாகாது சங்கவி." என்று செல்வதை நேத்ரா குரல் கொஞ்சம் கொஞ்சமாய் தூரமாக அறிந்தான் ராஜ்குமார்.

 

-தொடரும். 

 


 
Posted : November 6, 2026 7:14 am
(@crvs2797)
Posts: 245
Reputable Member
 

நயனமே நான் தானடி..!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 9)

ம்க்கூம்.. கொக்குக்கு மீன் மேல ஆசை, மீனுக்கு புழு பூச்சி மேல இசை, புது பூச்சிக்கு அதோட இரை மேல ஆசைன்னு இப்படியே தொடர்கதையாத்தான் லைஃப் செயின் இருக்கும் போல. சந்திராவுக்கு ராஜ்குமார் மேல ஆசை, ராஜ்குமாருக்கு நேத்ரா மேல ஆசை, நேத்ராவுக்கு யார் மேல ஆசையோ, அது அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

எனக்கென்னவோ, நேத்ரா சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்குன்னுத்தான் தோணுது.
இதே ராஜ்குமாருக்கு கண் தெரிஞ்சிருந்தால் நேத்ராவை காதலிக்கிறேன்னு சொல்லியிருப்பானா ? இல்லைத்தானே...? அப்ப ராஜ்குமார் ஒரு சந்தர்ப்பவாதி தானே ?

😴😴😴
CRVS (or) CRVS2797


 
Posted : November 6, 2026 3:43 pm

Scroll to Top