நயனமே நான் தானடி-8
அத்தியாயம்-8
"என்ன தேவா... கவனமா காரை ஓட்டிடுவியா?" என்று கேட்க, "கொஞ்சம் கை உதறும் சார். சென்னைக்குள்ள ஓகே. பட் கொடைக்கானல் வளைவான பாதை சார். அதனால ரிஸ்க் எடுக்க வேண்டாம் சார்" என்று தேவா தெளிவாக எடுத்துரைக்க இதோ ஏசி கோச்சில் ஸீலிப்பர் கோச்சில் புக் செய்து படுத்திருந்தனர்.
"பஸ்ல போறது முதல் அனுபவம் தேவா. இதுக்கு முன்ன காரை எடுத்துட்டு நானே வருவேன். இப்ப பார்வை போனதில..." என்று மெதுவாக சுரத்தை குறைந்து பேசினான்.
"சார்..." என்று தேவா தீண்டவும், "ஐ அம் ஆல்ரைட் தேவா." என்று படுத்துக் கொண்டான்.
கண்கள் மூடியபடி, 'இங்க வந்ததே உன்னை நினைக்கிற இதயத்தை தட்டி வைக்க தான்.' என்று மனதோடு பேசினான் ராஜ்குமார்.
இரவில் பயணமென்பதாலும், வண்டி ஏறும் முன்னரே வயிற்றுக்கு உணவை தள்ளிய காரணத்தால் படுத்ததும் இமை மூடிக் கொண்டார்கள்.
அடுத்த நாள் உடலை ஊசிக்குத்தும் விதமாக குளிர் உடலை ஆக்கிரமிக்க, தேவா நடுங்கியபடி பற்களை தந்தியடித்தான்.
கொடைக்கானல் வளைவுகளை வெகு சாதாரணமாக வளைந்து நெளிந்து கடந்தது அந்த பேருந்து.
தேவாவுக்கு நாவறண்டது. இன்னமும் ராஜ்குமார் சார் உறங்குவதால் போனில் நேரத்தை பார்த்தான்.
ஐந்து இருபது என்று மணி காட்டவும் திரைச்சீலையை தள்ளி மீண்டும் எட்டி பார்த்தான்.
மலை பாதையில் மனதை தொலைத்தவனாக அய்யோ ராஜ்குமார் சார் தூங்கறார். இல்லைன்னா அவரிடம் ரசிப்பதை பகிரலாம்' என்றது மனம்.
உடலை முறுக்கி ராஜ்குமார் எழுந்த போது, "சார் டைம் ஆறு பத்து. கொடைக்கானல் கொண்டை ஊசி பாதை எல்லாம் தாண்டிட்டோம். இன்னும் அரைமணி நேரம் மட்டும் போக சரியா இருக்கும்" என்று கேட்கும் முன் கூறினான்.
"ம்ம்ம்.. தேவா... மலையும் செடியும் கொடியும் தெரியுதா. ஓவியம் போல இருக்குமே" என்று கேட்க, "ஆமா சார். சார்... இந்த ஊருக்கு எல்லாம் உங்க புண்ணியத்தில் தான் வந்திருக்கேன். இதுக்கு முன்ன சென்னை தாண்டியது இல்லை சார்" என்று தன்னடக்கமாய் கூறினான்.
"ம்ம்ம... நாம சம்பாதிக்கற காசுல வருஷத்துக்கு ஒரு டூர் போகணும் தேவா. அப்ப தான் மனசும் உடலும் ஜம்முனு இருக்கும்." என்று கூறினான் ராஜ்குமார்.
"ஆமா சார்... எங்க இந்த இயந்திர உலகத்துல ஓடிட்டு இருக்கோம். நல்லா ரிலாக்ஸா டூர் போகணும் சார்." என்றான்.
தேவாவிடம் ராஜ்குமார் "தேவா உனக்குன்னு அப்பா அப்மா தம்பி தங்கை இருப்பதா சொல்வியே. அவங்களை பார்க்க ஆசையில்லையா" என்று கேட்டதும் தேவா மௌனமானான்.
"உறவு நல்லபடியா மலரனும்னா இரண்டு பக்கமும் நேசம் இருக்கணும் சார். அவங்களுக்கு என் மேல அக்கறை பாசம் எதுவும் இருக்காது சார்." என்று முடித்திட, "ஏன் என்னாச்சு?" என்று கேட்க, "சொன்னா புரியாது சார். உங்களுக்கு கண் பார்வை வந்தா புரியலாம்" என்று கூறியவன், தனது முகத்தில் இடது கன்னத்தில் வருடினான். தன் முகம் பொலிவிழந்து இருப்பதை அவனே கூறமுடியுமா?
பிறவியிலேயே இளநரை அதிகமானது. அதுக்கூட டை அடித்து சமாளித்திருக்க, கன்னத்தில் ஒருபக்கம் தழும்பு இருந்தது.
ராஜ்குமார் இறங்கும் போது மாமா சசிகுமார் வந்து விட்டார். காரில் அழைத்து செல்ல, அப்பொழுது தேவாவும் இருக்க, இருவரையும் வரவேற்றார். தேவாவுடன் அடிக்கடி போனில் பேசியிருக்க மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.
"என்ன மாமா எப்பவும் ஏதாவது பேசிட்டே வருவிங்க. இப்ப அமைதியா வர்றிங்க. இந்த குருடன் கூட என்ன பேசறதுன்னா?" என்று கேட்டுவைக்கவும், "சேசே இல்லை மாப்பிள்ளை. சென்னை மாதிரி பாதை நேரா இருக்காது. இடம் குறுகலா இருக்கும். ஏற்கனவே உனக்கு விபத்து நடந்ததால கார்ல போறப்ப கவனமா ஓட்டலாம்னு தான் அமைதியா வந்தேன்." என்றார்.
"அத்தை சஞ்சனா எப்படியிருக்காங்க மாமா?" என்றான்.
என்னவென்று உரைப்பார். எந்த நேரம் ராஜ்குமார் கொடைக்கானல் வருவதாக சொன்னானோ அந்த நேரம் முதல் சந்திரா புலம்பிவிட்டாரே. ஏதோ சமாளிக்க வேண்டும் என்று 'உங்கத்தைக்கு என்ன? இந்த குளிர்ல ஜுரம் வந்து கிடக்கா." என்று முடித்துக் கொண்டார்.
தேவா வேடிக்கை பார்த்தானே தவிர எவ்விதமான பேச்சிலும் குறுக்கே வரவில்லை.
கொடைக்கானலின் மையப்பகுதியில் தான் ராஜ்குமாரின் தங்கும் விடுதியும் இருந்தது.
அதனால் உடனடியாக அங்கே வந்து சேர்ந்தனர்.
அங்கே தனியாக இருக்கும் வீட்டில் தான் அத்தை மாமா சஞ்சனா என்று குடும்பமாக இருக்கின்றனர்.
சசிகுமார் நேராக வீட்டுக்கு அழைத்து வந்திருக்க, "வா ராஜ்குமார். எப்படியிருக்க? விபத்து நிகழவும் உங்க மாமா துடிச்சிட்டார். கால்ல வெந்நீரை கொட்டியது போல அங்க வந்துட்டார். என்னால தான் உன்னை வந்து பார்க்க முடியலை. அது சஞ்சனாவுக்கு அப்ப மேலுக்கு முடியலை." என்று பொய்யுரைத்தார் சந்திரா.
"பரவாயில்லை அத்தை. மாமா வந்தாரே அதுவே ரொம்ப சந்தோஷம்" என்று முடித்து கொண்டான்.
நேரில் வராத அத்தை போனிலாவது விசாரித்து இருக்கலாம். சஞ்சனாவும் விசாரித்ததில்லை.
"மாமா லாட்ஜில் தங்கிக்க ரூம் அரேஜ் பண்ணலையா. வீட்ல வேண்டாம் மாமா. நானும் தேவாவும் நம்ம லாட்ஜ்ல தங்கிக்கறோம்." என்று அவர்களாக கூறும் முன் தானாக இவ்விடத்தில் தங்குவதை தவிர்த்தான் ராஜ்குமார்.
ஏற்கனவே சந்திரா எப்படி பழகுவாரென இதுவரை போன் பேசாமல் தவிர்த்திலேயே புரிந்திருந்தான் ராஜ்குமார்.
சந்திராவுக்கு ராஜ்குமார் லாட்ஜில் தங்குவதாக கூறவும் குளுகுளுவென இருந்தது. சசிகுமாருக்கு தான் லேசான சங்கடம்.
ஏன் ராஜ் எப்பவும் வீட்ல தங்குவ" என்று கேட்டார். சந்திராவும் ஆமா தம்பி உங்களுக்காக அந்த ரூம் ஒதுக்கியிருக்கு" என்று சந்திராவும் ஒப்புக்கு கூறினார்.
"இல்லை மாமா... கொஞ்சம் பிரைவேசி தேவைப்படுது" என்று முடித்துவிட்டான்.
சசிகுமாரோ "மாமா வீட்ல ஒரு வாய் சாப்பிட்டு அப்பறம் வேண்டுமின்னா பார்க்கலாம் ராஜ்" என்றார்.
"அப்படியா... சரிங்க மாமா" என்று ஏற்றுவிட்டான்.
வந்ததும் அலுப்பு தீர குளிக்க வேண்டுமென்று அறையில் செல்ல, "தேவா கதவை லாக் பண்ணிடு" என்று ஆணையிட்டான்
"பண்ணிட்டேன் சார்.'' என்று கூறியதும், மெத்தையில் அமர்ந்தான்.
"ஏன் சார் உங்க அத்தை மாமா இரண்டு பேருமே இங்க தங்க சொல்லறாங்க. அதை விட்டு லாட்ஜ் ரூமுக்கு போகணுமா? உறவுக்ள் பாசமா பழகினா நல்லது தானே சார்" என்றான் தைவா.
"உனக்கு புரியலையா தேவா. என்னை அவங்க இங்க தங்குனு சொன்னது தாங்கற மாதிரி இருக்கா
இதுக்கு முன்ன என்னை தாங்கியதை நீ பார்த்ததில்லை. முன்ன எப்படி பழகினாங்க என்று சொல்லறேன்... கேட்டுக்கோ...
நான் மாமாவுக்கு போன் பண்ணினா, எப்படியாவது என்னிடம் அத்தை பேசுவாங்க. என்ன சாப்பிட்டப்பா... நல்லாயிருக்கிங்களா.. அடிக்கடி இங்க வாங்க. உறவுகள் எல்லாம் வந்துட்டு போனாதானேனு நல்லதுனு சொல்வாங்க.
வாரத்துக்கு இரண்டு முறையாவது அத்தை பேசிடுவாங்க. அதுல எப்படியாவது சஞ்சனாவை என்னோட பேச வைப்பாங்க. நான் இங்க வரலைன்னா சஞ்சனாவை கூட்டிட்டு அத்தை மாமா சென்னை வருவாங்க.
வரவு செலவு லாட்ஜ் விரிவாக்கம் இப்படி ஏதாவது செய்து அதை பத்தி கேட்பாங்க. வருஷத்துக்கு ஒரு முறை பூக்கும் பூ இது எங்கயும் பூக்காது அப்படியிப்படினு சஞ்சனா நம்பர்ல இருந்து பூ பழம்னு அனுப்புவாங்க.
இங்க வீட்டுக்கு வந்தா, ஹீட்டர் போட சஞ்சனா, நான்வெஜ் போட்டு தடபுடலா சமையல், கிட்டதட்ட மாப்பிள்ளை விருந்தோம்பல் நடக்கும். என்ன தம்பி வேண்டும் ஏது வேண்டும்னு கேட்டு கேட்டு நான் சொல்லாம சூப் ஜூஸ்னு சஞ்சனாவிடம் கொடுத்து விடுவாங்க.
இப்ப பாருங்க.. சஞ்சனா ஆளேயில்லை. அவ இருந்தாலும் நான் அவளை எப்பவும் போல கண்டுக்க போறதில்லை அது வேற விஷயம்.
விபத்து நிகழ்ந்து கண்ணு போயிடுச்சு தேவா. செத்து பிழைச்சிருக்கேன். மாமா கூட குடும்பமா வரலையே. சரி அதுக்கு பிறகு எத்தனை மாசம்... ஒரு நாள் வந்துட்டு போகலாமே.
முன்ன வசதியானவன் பார்க்க லட்சணமா இருக்கான். சொந்தத்துல கட்டிக் கொடுத்துடலாம்னு சுத்தி சுத்தி வந்தாங்க. இப்ப கண்ணு தெரியாதவன் மகளோட வாழ்க்கையை காப்பாற்ற என்னை தள்ளி வைக்க பார்த்தாங்க.
சோனாலியிடம் பட்ட அனுபவம் எனக்கிருக்கு தேவா. அப்படியிருக்க, இவங்க யாரு என்னை ஒதுக்கறது? நான் முன்ன போலவே ஒதுங்கிடறது பெஸ்ட் இல்லையா. எனக்கொன்னும் சஞ்சனா மேல காதல் இல்லையே.
என் காதல் வேறொருத்தி மீது இருக்கும் போது... நான் ஏன் கவலைப்படணும்? கோமாளித்தனம் செய்யணும்?
அதோட லாட்ஜ்ல தங்கறது தான் எனக்கு பெஸ்ட் தேவா." என்று கூற தேவாவுக்கு ஓரளவு எல்லாம் விளங்கியது.
ஆனால் ராஜ்குமார் பேசியதில் 'என் காதல் வேறொருத்தி மீது' என்ற வார்த்தை தான் விளங்கவில்லை. தற்போது கேட்கவும் தயக்கம்.
சோனாலி மீது இன்னும் காதலா என்று தோன்றினாலும், அந்த பொண்ணு விட்டுட்டு போயிடுச்சு. இவர் காதல் இன்னும் ஒட்டிட்டு இருக்குமென்று நினைத்தான்.
இந்த நொடி நேத்ரா நினைவு தேவாவுக்கு வரவில்லை. காரணம் கடற்கரையில் கையை பிடித்த பொழுத ராஜ்குமாரின் முகபாவனை வித்தியாசமாக இருந்தாலும், காதலிக்கற பொண்ணிடம் தினமும் பேசறதில்லையே! அதோட அந்த பொண்ணு அங்கிருக்க, இவர் கொடைக்கானல் வந்திருக்க மாட்டார். ஆக சோனாலி மீது தான் நேசம் என்று எண்ணினான் தேவா.
ராஜ்குமார் தன் உடலை குளிர்வித்த குளிர் காற்றோடு, காதில் வானவில் எஃப்.எஃம்மை கேட்டபடி புன்னகைத்தான். ஒருவேளை நேத்ராவின் புரோகிராம் ப்ளூடூத்தில் கேட்காமல் ஒலிக்க விட்டிருந்தால், ராஜ்குமார் நேத்ரா குரலுக்கு தான், இசைஞானி பாட்டை கேட்பவன் போல மயங்கி கிறங்கி இருப்பது புரிந்திருக்கும்.
தேவாவை பொறுத்தவரை வானவில் எஃப்.எஃம் எந்த நேரம் ஒலிக்கின்றதென்று மறந்திருந்தான். ராஜ்குமார் பாடலை கேட்டு ரசிப்பதாக தான் தெரிந்தது. அதுவும் நடுவில் தேவா வரும் பொழுது பாட்டு தான் ஒலிக்கும்.
"சார்... சார்" என்று தேவா ராஜ்குமாரை தீண்ட, "தண்ணி சரியான அளவுல பில் பண்ணிட்டேன். குளிச்சிட்டு வந்திங்கன்னா சாப்பிடலாம். நீங்க மாத்திரை போடணும்" என்று கூறவும், "நீ குளிச்சிடு தேவா. நான் பத்து நிமிடம் கழிச்சு குளிக்கறேன்." என்று நேத்ரா நிகழ்ச்சி முடிய காத்திருந்தான்.
தேவாவும் வந்ததும் குளிக்க பிடிக்கவில்லை என்று முடிவெடுத்துக் கொண்டான்.
நேத்ராவின் நிகழ்ச்சி முடிவடையவும், தேவா மீண்டும் குளிக்க ஆயத்தப்படுத்தியதை தெரிவிக்க குளித்து முடித்து சாப்பிட வெளியே வந்தான். அங்கே சஞ்சனா இருந்தாள்.
''அத்தான்.. எப்ப வந்திங்க? எப்படியிருக்கிங்க அத்தான்" என்று அருகே வந்து தொட்டு பார்த்தாள்.
"நல்லாயிருக்கேன் சஞ்சனா. எங்க வந்தப்ப உன்னை காணோம்" என்று விசாரிக்க, "கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் வந்தேன் மச்சான். தாத்தா வீட்டுக்கு லீவுக்கு போனேன். அங்க போரடிச்சது இங்க என் பிரெண்ட் கூட மூவிக்கு போகலாம்னு வந்துட்டேன்." என்றாள்.
சந்திரா சாப்பிட எடுத்துவைக்க, ராஜ்குமாருக்கு தேவாவே இட்லியில் குழம்பை ஊற்றி பௌலில் ஸ்பூன் வைத்து கொடுத்தான்.
"சாருக்கு இதான் கம்பர்டபிள்" என்று முடித்திட ராஜ்குமார் சுவைத்தான்.
சஞ்சனாவோ ராஜ்குமாரையே பார்வையிட்டாள்.
முன்பு அவளுக்கு ராஜ்குமாரை கண்டால் அவன் மீது தன் கவனத்தை செலுத்துவாள். அழகானவன், அறிவானவன், தந்தையும் தாயும் கூட சொந்தத்தில் கல்யாணம் செய்ய போவதாக பேசியதால் எப்பொழுதும் ராஜ்குமார் என்றால் அவளுக்கு இஷ்டம். இந்த பார்வை பறிப்போனதில் தாய் தந்தை ராஜ்குமாருக்கு சஞ்சனா வேண்டாமென வரன் பார்ப்பதையும் அவள் அறிவாள்.
ஏதோ அம்மா குருடனை கட்டிட்டு காலம் முழுக்க அவனுக்கு சேவகம் செய்ய போவதாக ராஜ்குமாரோடு இணைத்து பேசுவதையோ திருமணத்தை கூட தவிர்க்க, இன்று ராஜ்குமாரின் நிலையில் எந்த வித்தியாசமும் அவளுக்கு தெரியவில்லை.
அவனையே பார்வையிட, சந்திரா சஞ்சனாவை முறைத்து 'சாப்பிடு' என்று கண்ணாலேயே அதட்டினார்.
சாப்பிட்டு முடித்து ராஜ்குமார் கூடத்து சாய்விருக்கையில் அமர, "தேவா நீ வேண்டுமின்னா இடத்தை சுத்தி பாரு. நான் உன்னை கூப்பிடணும்னா கால் பண்றேன்" என்றதும் தேவாவும், இந்த வீட்டை மட்டும் சுத்தி பார்க்கறேன் சார். உங்க கண் எதிர்ல தான் இங்க இருப்பேன். நீங்க கால் பண்ணணும்னு கூட அவசியமில்லை.
தேவானு கூப்பிட்டாலே வந்துடுவேன்" என்று கூறி வெளியே கார்டனை காண சென்றான்.
சந்திரா வீட்டு வேலையில் மூழ்கியிருக்க, சசிகுமார் குளிக்க சென்றியிருந்தார்.
ராஜ்குமார் தனியாக அமர்ந்திருக்க சஞ்சனாவோ, ''அத்தான்." என்றாள் மெல்லிய குரலில்.
"சொல்லு சஞ்சனா" என்றான். எப்படியும் சந்திரா அத்தை பக்கத்தில் இருப்பாரென எண்ணி.
சஞ்சனாவோ யாருமில்லை என்றதும் "அத்தான் சென்னையில் நீங்க சோனாலினு யாரையோ காதலிப்பதா அப்பா சொன்னார். அவங்க உங்களை இக்னோர் பண்ணிட்டு பிரேக்கப் பண்ணியதா கேள்விப்பட்டேன்." என்றாள்.
"ஆமா மா... கண் இருக்கும் பொழுது இருந்த காதல். கண் இல்லாதப்ப போயிடுச்சு. அதனால பெருசா வருத்தமில்லை. இந்த இன்சிடெண்ட்ல மனிதரோட மனதை தெரிந்துக்கிட்டேன்னு நிம்மதி தான்" என்றான் பொதுபடையாக.
"அத்தான்... என் மனசுல இப்பவும் உங்களை பிடிச்சிருக்கு. அப்ப என் காதல் பரிசுத்தமானது தானே!" என்று கூறினாள்.
ராஜ்குமார் அதிர்ச்சி அடைந்தவனாக, "தேவா.. தேவா..." என்று கத்தினான்.
தேவாவும் அருகே வர, "லாட்ஜிக்கு கிளம்பலாம்" என்று கூற, "அதுக்குள்ளயா?" என்று கேட்க "ஆமா.. கிளம்பு" என்று கத்த, சஞ்சனாவை பார்த்து ராஜ்குமாரையும் கண்டு விழித்தான்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.
நயனமே நான் தானடி..!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 8)
ம்... ராஜ்குமாரோட நிழல்லயே இருந்துக்கிட்டு, அவனையே விலக்கி வைக்கப் பார்க்குறாங்க இந்த தாய்மாமன் குடும்பம். அவனுக்கு பொண்ணு குடுக்காட்டி கூட பரவாயில்லை, அவனோட சொத்துல கை வைக்காமல் இருந்தால் சரி தான்.
இப்பத்தான் ராஜ்குமாருக்கு ரியலிசம் புரிஞ்சிருக்குன்னுத் தோணுது.
😴😴😴
CRVS (or) CRVS2797
-
நயனமே நான் தானடி-7
3 days ago
-
நயனமே நான் தானடி-6
5 days ago
-
நயனமே நான் தானடி-5
6 days ago
-
நயனமே நான் தானடி-4
1 week ago
-
நயனமே நான் தானடி-3
1 week ago
- 26 Forums
- 384 Topics
- 1,950 Posts
- 1 Online
- 443 Members
