வால்கனோ பூக்கள் அத்தியாயம் - 6
அத்தியாயம் - 6
அறிவியல் உலகில் நம் கண்ணுக்கு புலப்படாமல் எத்தனையோ ஆராய்ச்சிகள் நடைப்பெற்று வருகின்றது.
அதில் பாதி தான் முறைப்படி அரசு அங்கீகாரம் பெற்று நடத்தப்படும் மீதியெல்லாம் அரசுக்கு புறம்பான ஆராய்ச்சியாகவே இருக்கும் இதற்கு பலியாவது பெரும்பாலும் ஏழ்மையானவர்களும் குழந்தைகளும் தான்.
பிறக்கவிருக்கும் குழந்தையின் பனிக்குடம் உடையாமல் ஆபரேஷன் செய்து எடுத்து அந்த தோலில் இருந்து எடுக்கப்படும் இரத்தத்தில் இருந்து அழகு சாதன பொருட்கள் தயாரிப்பது போன்றவை சிறு உதாரணமே.
இது போன்ற ஆயிரம் ஆயிரம் ஆராய்ச்சிகள் நடைப்பெற்று வருகின்றது.
இவைகளையெல்லாம் பார்த்து தான் உலகம் அழிவை நோக்கி செல்கிறது என்று நாம் கூறிக்கொண்டு இருக்கின்றோம்.
இதையெல்லாம் அழிக்கும் அதிகாரமும் நமக்கில்லை.
இதையெல்லாம் தடுக்கும் அதிகாரமும் நமக்கு இல்லை.
இதற்கு முக்கியமான காரணமாக அந்த அந்த துறையை சேர்ந்தவர்களே இருப்பர். அவர்களிடம் அந்த பொறுப்பை கொடுத்தது தவறு நடக்காமல் காக்கத்தான் ஆனால் இந்த பணப்பேய்கள் தங்களது சுயநலத்திற்காக மற்றவர்கள் வாழ்க்கையோடும் இயற்கையோடும் விளையாடுகிறார்கள்.
அது போன்ற ஒரு பயங்கர ஆராய்ச்சி தான் டிமிட்ரி கோரேநோவ் செய்வது.
இந்திய பெண் குழந்தைகளை குறிவைத்து நடத்தப்படும் இந்த ஆராய்ச்சியில் இதுவரை ஏழு பேர் இறந்து உள்ளனர் ஹனிஷா மட்டும் இதில் உயிரோடு இருப்பது.
ஆனால் அவளது ஆன்மாவும் உடலை பிறிந்து சேரமுடியாமல் உள்ளது
“டாக்டர் எப்படி இருக்கார்? அவரோட உடம்புல ஏதாவது மாற்றம் இருக்கா?” என்று டிமிட்ரி கேட்க
“இல்ல சர் அவரும் கோமாவில தான் இருக்கார். அவர் ஹெல்த்ல ஏதாவது மாற்றம் வந்தா உங்களுக்கு உடனே தகவல் சொல்லுவேன் சர்” என்று அந்த தமிழ் மருத்துவர் கூற
“ம்ம் உங்களைலாம் ஏற்கனவே இறந்தவர்களா காமிச்சு இந்த ஆராய்ச்சில ஈடுபட வெச்சு இருக்கேன்னா இது எனக்கு எவ்ளோ இம்பார்டண்ட் தெரியும்ல? எனக்கு கரெக்ட் ரிசல்ட் வேணும் அந்த கிட்ட எழ வைக்க பாருங்க இல்லனா பாடி பார்ட்ஸ்ஸ பிளாக் மார்கெட்ல வித்துட்டு போகலாம் கிளீயர் தட் கிளாரா பாடி” என்றுவிட்டு திரும்பி செல்ல
“அந்த பொண்ணை விட்டா நமக்கு வேற ஆஃப்ஷன் இல்ல சர் அதனால இந்த ஃபார்முலாவை அந்த பொண்ண வெச்சுதான் செக் செய்ய முடியும் சர் அதனால இப்போதைக்கு அந்த பொண்ணு உடம்பை எதுவும் செய்யாமல் இருப்பது தான் நமக்கு நல்லது சர்” என்று அந்த ஆராய்ச்சியாளர் கூற
“ம்ம் ஓகே எதுவா இருந்தாலும் எனக்கு ரிசல்ட் உடனே தெரிஞ்சாகணும் திஸ் ஈஸ் யுவர் ஃபைனல் வார்னிங்” என்று சொல்லிவிட்டு தான் வந்த ஹெலிகாப்டரில் ஏறி சென்றார்.
ஹெலிகாப்டரில் ஏறியதும் கென்ரி தனது சந்தேகத்தை கேட்டார்.
“இது அவ்ளோ முக்கியமான ப்ராஜெக்ட்டா சர்? இதுல என்ன ஸ்பெஷல்?” என்று கேட்க
“முக்கியமானு கேட்கறியே கென்ரி இந்த ஆராய்ச்சில ஏதாவது ஒரு சக்ஸஸ் காட்டிட மாட்டோமானு அவன் அவன் உயிரையே விடுறான். அந்த கியூரியாசிட்டில தான் நானும் இதை பத்தி ஆராய்ச்சி செய்ய துவங்கினேன்.
அதுல நான் கண்டுபிடிச்சது இண்டியன் கிட் கேர்ள்ஸ் வெச்சு இந்த எக்ப்ரிமெண்ட் செய்யலாம்னு” என்று கூற
“ஏன் சர் பர்ட்டிகுலரா இண்டியன் கிட்ஸ் அதும் கேர்ள்ஸ்?” என்று கென்ரி கேட்க.
“தட்ஸ் ஏ சீக்ரெட் கென்ரி உனக்கு டைம் வரும்போது சொல்றேன்.
இப்போதைக்கு சக்ஸஸ்ஃபுல்லா சோல் பிரிச்சு காட்டி இருக்கோம் பட் ஃபுல் ரிசல்ட் வரல அதையும் செஞ்சுடுவோம் அதை நம்பிதான் மத்த கண்ட்ரீஸ் இந்த ப்ராஜெக்ட்ல பிளாக் மணியை இன்வெஸ்ட் செஞ்சு இருக்காங்க இதுல எந்த தப்பும் நடந்துடக்கூடாதுனு தான் நானே டைரக்ட்டா இதை ஹாண்டில் பன்றேன் புரியுதா? இதுல கொஞ்சம் பிசிறினாலும் ஹோல் சுவிஸ்ஸே அழிச்சுடுவாங்க அதுக்குத்தான் இவ்ளோ ரிஸ்க்கும்” என்று சொன்னார் டிமிட்ரி.
“ஐ அண்டர்ஸ்டான்ட் சர்” என்றவர் இருவரும் இறங்கியதும் அவரது பின்னே நடந்தார்.
சற்று தூரம் நடந்த டிமிட்ரி
“அந்த கிளாரா பொண்ணோட பாடிய பாதி எரிஞ்ச நிலையில அடுத்த ஸ்டேட் பார்டர்ல போட சொல்லுங்க கென்ரி” என்று சொல்ல அதிர்ந்த கென்ரி
“ஏன் சார் நாமளே அந்த ஆபீசர்க்கு க்ளூ கொடுக்கிறப்போல ஆகாதா? அதும் நெக்ஸ்ட் ஸ்டேட் பார்டர்ல?” என்று கேட்க
சிரித்தவர்
“யா அதுக்குத்தான் சொல்றேன் இந்த பிளாக் மார்கெட் மாஃபியா கிட்ட பாடியை கொடுத்து ஏதாவது பார்ட்ஸ் எடுத்துட்டு பாதி எரிஞ்ச நிலையில போட சொல்லுங்க அப்போதான் அந்த பக்கம் அவன் டைவர்ட் ஆவான் அதுக்குத்தான் இது உடனே செய்” என்றவர் உள்ளே செல்ல உடனே தன் இன்னொரு மொபைலை எடுத்து உடனே தகவலை பகிர்ந்தார் கென்ரி.
அடுத்தநாள் காலை இரண்டாவது முறையாக மொபைல் அலற எழுந்தான் ஆட்ரியன்.
இரவு முழுவதும் விழித்து இருந்து அவன் பார்த்த விஷயங்களை பற்றி ஆராய்ந்தவன் விடியற்காலை தான் கண் அயர்ந்தான்.
தூக்கத்திலேயே மொபைலை எடுத்தவன்
“சொல்லு ஜார்ஜ்” என்று கூற
“சர் ஸ்டேட்டே பத்திக்கிட்டு எரியுது நீங்க சொல்லுனு சொல்றீங்க? உடனே கிளம்பி ஜெனிவா லேக் கிட்ட வாங்க சர். கிளாராவோட பாடி கிடைச்சு இருக்கு அங்க” என்று கூற
“வாட்” என்று அதிர்ந்து எழுந்தான் ஆட்ரியன்.
“ஆமா சர் பாடி பாதி எரிஞ்ச நிலையில கிடைச்சு இருக்கு லேக் பார்டர் ஏரியா அதனால நாம போகணும் சர் நான் ஆல்ரெடி பாதி தூரம் வந்துட்டேன் சர் சீக்கிரம் வாங்க சர்” என்று ஜார்ஜ் கூற
“நீ நேரா ஸ்பாட்டுக்கு போ ஜார்ஜ் நான் வர்றேன்” என்றவன் எழுந்து இரவு உடையான பைஜாமாவை மாற்றி டீஷர்ட் போட்டவன் தனது பைக்கை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.
நேரே ஜெனிவா லேக் அருகில் சென்றவன் ஆல்ரெடி அங்கு ஜார்ஜ்ஜூம் ஒரு சில ஆட்களும் இருக்க ஜார்ஜ் அவர்களிடம் விசாரணை செய்து கொண்டு இருந்தான்.
இவனது பைக் சத்தம் கேட்டு திரும்பிய ஜார்ஜ்
“ப்ளீஸ் வெயிட் ஹையர் ஆபீசர் வந்து இருக்கார்” என்றுவிட்டு அவனிடம் ஓடிவந்தவன் ஆட்ரியனுக்கு சல்யூட் செய்தான்
“மார்னிங் ஜார்ஜ். யார் பாடியை முதல்ல பார்த்தது? நெருப்பு வெச்சு கொளுத்தி இருக்காங்களா? யார் நெருப்பை அணைச்சது?” என்று வரிசையாக கேட்க
“சர் இங்க ஆடு மேய்க்க வர்றவர் தான் முதல்ல பார்த்து இருக்கார் அவர் பார்க்கும்போதே நெருப்பு இல்லாம வெறும் பாடிதான் இருந்ததாம் சர் யாரும் எந்த தடயமும் இல்ல சர்” என்று ஜார்ஜ் சொல்லி அவன் அருகே வந்து தாழ்ந்த குரலில்
“சர் இங்க எப்பவாச்சும் பிளாக் மார்கெட் மாஃபியாவோட ஆளுங்க வந்து போவாங்கனு கேள்வி பட்டு இருக்கேன் சர்” என்று இரகசியம் போல சொல்ல ஆட்ரியனோ எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல்
“சரி கிரவுட கிளீயர் செய் ஜார்ஜ் ஃபாரன்சிக்கை வர சொல்லு நான் பாடியை பார்க்கணும்” என்றபடி நகர்ந்தான்.
‘இங்க இருக்குறதே மூணு பேரு
இவங்க கிரவுடா இவருக்கு?’ என்ற யோசனையோடு அவர்கள் அருகில் சென்றவன் அவர்களது தகவல்களை மட்டும் வாங்கி கொண்டு போக சொன்னான்.
டெட்பாடி அருகே வந்த ஆட்ரியன் பாதி எரிந்த நிலையில் உடல் கருகியபடி முகம் ஓரளவுக்கு தெரியும்வகையில் இருந்த அந்த குட்டி பெண்ணின் முகத்தை பார்த்தான்.
‘எவ்ளோ வன்மம் இவனுக்கு ச்சை’ என்றுவிட்டு பாடியை வேறு வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்தவன் சுற்றும் முற்றும் பார்த்தான்.
வண்டித்தடம் எதுவும் இல்லை, இது கிளீயர் மர்டர் ஆனா அதே சமயம் செத்து ரொம்ப நேரம் ஆன பிள்ளையை திரும்ப என்னமோ செஞ்சு இங்க போட்டு இருக்காங்க’ என்று எண்ணியவன்.
“உஷாரா கிளீன் செஞ்சுட்டு போய் இருக்காங்க பாரேன்” என்று தனக்குத்தானே பேசியவன் ஜார்ஜை அழைத்தான்.
“சர் க்ளூ எதுவுமே கிடைக்கல சர் ஃபாரன்சிக் ஆளுங்க இன்னும் ஃபைவ் மினிட்ஸ்ல இங்க இருப்பாங்க.
அவங்க பேரண்ட்ஸ்க்கு இன்ஃபார்ம் செஞ்சுடலாமா சர்?” என்று ஜார்ஜ் கேட்க
“ம்ம் ப்ரொசீட் ஜார்ஜ்” என்றுவிட்டு தனக்கு வந்த ஃபோனை பார்த்தான் அவனது உயர் அதிகாரி என்றதும் கட் செய்தவன்
சுற்றி தன் பார்வையை ஓடவிட்டான்.
தூரத்தில் ஒருவன் புதரில் மறைந்து யாருக்கோ இவனது புகைபடங்களை பகிர்வது பார்த்து சிரித்தவன் செல்ஃபி எடுப்பது போல தன் மொபைலை வைத்து போஸ் கொடுத்தவன். மீண்டும் மொபைல் ஒலிக்க
“ச்சை நம்ம அழகா போஸ் கொடுத்தா இவருக்கு மூக்குல வேர்த்துடுமே” என்றபடி எடுத்து அட்டென்ட் செய்தவன் காதில் வைக்கும்முன் அவர் கத்தினார்.
“யூ இடியட் ஃபோன் பண்ணா கட் பண்ற நீ எவ்ளோ கொழுப்புடா உனக்கு? சின்ன பையன்னு உன்ன விட்டா வாலுத்தனம் பண்ணிட்டு இருக்க நீ? நான் ஃபோன் பண்ணா எடுக்காம என்னடா செஞ்சுட்டு இருந்த நீ?” என்று கேட்க அவர் கத்தும்போதே காதிலிருந்து மொபைலை தூரமாக வைத்தவன்.
“இன்ட்ரஸ்டிங்கா போட்டோக்கு போஸ் கொடுக்கும்போது தான் டிஸ்டர்ப் செய்வீங்களா? உங்க போலீஸ் டிரெயினிங்ல என்னதான் சொல்லி கொடுத்தாங்க?” என்று அவன் கேட்க.
ஒரு கணம் அவன் பேசுவது புரியாமல் திகைத்தவர்
“எதே போட்டோக்கு போஸ் கொடுத்துட்டு இருந்தியா? டேய் உன்னை அந்த கிளாரா பாடியை செக் செய்யதானே அனுப்பினது? நீ நியூஸ் சேனல்க்கு போஸ் கொடுக்குறியா?” என்று அவர் மேலும் கோவமாய் கேட்க.
“நியூஸ் சேனலா? அவங்க இன்னும் வரலையே இது இந்த கேஸோட ஹெட் என்னை அழகா ஃபோட்டோ எடுக்க சொன்னான் போல அதனால ஒருத்தன் புதர்ல ஒளிஞ்சு எடுக்குறான் சரி கஷ்டப்பட்டு என்னை அசிங்கமா எடுத்துட்டான்னா அதனாலதான் போஸ் கொடுத்தேன்” என்று அசால்ட்டாக ஆட்ரியன் சொல்ல
அதிர்ந்தவர்
“கிம் நீ என்ன செய்யுறனு தெரியுதா உனக்கு? அவங்க மாஃபியா போல யாராவது இருக்கப்போறாங்கடா” என்று அவர் சொல்ல
“போலலாம் இல்ல சர்ர் மாஃபியாவே தான் அதும் பிளாக் மார்கெட் மாஃபியா” என்று சொல்ல அவருக்கு திக்கென்று ஆனது.
“என்னடா சொல்ற? ஆபத்தை விலைகுடுத்து வாங்காதே கிம்”
என்று அவர் சொல்ல
“ஆபத்துக்குள்ள நம்மள இறக்கிவிட்டவர்தான் என்னை ஃபோட்டோ கேட்டு இருக்கார். யூ டோண்ட் வொர்ரி அங்கிள் நான் பார்த்துக்கிறேன் நீங்க இன்வால்வ் ஆகாம இருந்தா மட்டும் போதும் போங்க போய் ஒழுங்கா ஆபீஸ்ல ரெஸ்ட் எடுங்க நான் மீடியாக்கு வேற பேட்டி கொடுக்கணும்” என்றவன்
அதற்குள் ஜார்ஜ்ம் ஃபாரன்சிக் ஆபீசர்ஸ் வர ஃபோனை கட் செய்துவிட்டு சென்றான்.
“பேச்சை பாரு எவ்ளோ கொழுப்பா வருது கொஞ்சமாவது பயப்படுறானா பாரு இவனைலாம் அடக்க ஒருத்தி வந்தா தான் சரியாகுவான் அதுவரை இப்படிதான் துள்ளிக்கிட்டு இருப்பான்.
ஆனா அதுக்கு அவன் மனசு வைக்க மாட்டேங்குறானே…
ஜீசஸ் கொஞ்சம் அவனை கருணை செய்யுங்கள்” என்று அவனுக்காக வேண்டியபடி ஆபீசுக்கு கிளம்பினார் அவனது ஹையர் ஆபீசர்
ஃபாரன்சிக் சோதனை முடிந்ததும் அவர்களிடம் அவன் சில இடத்தையும் காட்ட அவர்கள் அங்கும் சேம்பிள் எடுத்துக்கொண்டு சென்றனர்.
செல்வதற்கு முன் அந்த டீமில் இருந்தவர்களிடம்
“இந்த ரிசல்ட் எல்லாம் எனக்கு மட்டும் தான் சொல்லணும் என்னை தவிர யார் கேட்டாலும் ரிசல்ட் சொல்ல கூடாது” என்று கூறி அனுப்பினான்.
- 25 Forums
- 330 Topics
- 1,588 Posts
- 1 Online
- 420 Members
