வால்கனோ பூக்கள் அத்தியாயம் - 7
அத்தியாயம் - 7
ஆட்ரியன் அப்படி சொல்லி அனுப்ப அவனை ஒருமாதிரி பார்த்தான் ஜார்ஜ்.
அவனை பார்த்து
“என்ன ஜார்ஜ் நான் அவ்ளோ அழகா இருக்கேனா? இப்படி சைட் அடிக்கிற? நான் பையன் ஜார்ஜ்” என்று சொல்ல.
தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக ஜார்ஜ் “சர் அதெல்லாம் எதுவும் இல்ல சர் எதுக்கு அப்படி சொன்னீங்கனு யோசிச்சேன் சர்” என்று ஜார்ஜ் சொல்ல
“அதுவா நீ ஒரு ஒலறுவாயா அதான் நீ பாட்டுக்கு டீடெயில்ஸ்ஸ வெளியே சொல்லிட்டா அதான் ஜார்ஜ் எனக்கு மட்டும் சொல்ல சொல்லி இருக்கேன்” என்றான் கிண்டலாக
“எதே?” என்று ஜார்ஜ் அதிர்ந்து கேட்க சிரிக்காமல் முகத்தை வைத்துக்கொள்ள மிகவும் சிரமப்பட்டான் ஆட்ரியன்.
“சும்மா சொன்னேன் ஜார்ஜ்.
ஆனாலும் கொஞ்சம் உண்மையை தான் சொன்னேன்” என்று சொல்ல அதற்குள் மீடியாவும் கிளாராவின் பெற்றோர்களும் போலீஸ் ஃபோர்ஸ்ஸும் வந்துவிட
“சரி சரி வா வா மீடியாக்கு அழகா பேட்டி கொடுக்கணும்” என்று அவனை இழுத்து செல்ல
“ஒரு டெட்பாடியை வெச்சுட்டு எப்படித்தான் உங்களுக்கு இப்படிலாம் நடந்துக்க முடியுதோ?” என்று கேட்டே விட்டான் ஜார்ஜ்.
நடந்து கொண்டு இருந்தவன் சட்டென நின்று திரும்பி அவனை பார்த்தவன்
“இதுதான் நடக்கும்னு தெரியும் ஜார்ஜ் அதுக்குத்தான் நான் காம் ஆ இருக்க ட்ரை பண்றேன்.
பதட்டத்துலேயும் அவசரத்திலேயும் நம்ம மைண்ட் நம்ம கமெண்ட்ட கேட்குற நிலையில கூட இருக்காது” என்று அவன் விளக்க அதிர்ந்த ஜார்ஜ்
“என்ன சர் சொல்றீங்க? இப்படித்தான் நடக்கும்னு உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?” என்று கேட்க.
“ம்ம் எல்லாம் உனக்கு அப்புறம் சொல்றேன் வா” என்றுவிட்டு திரும்ப அதற்குள் மீடியா அவனை கேள்வி கேட்க முன்வர பாதுகாவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்திக்கொண்டு இருந்தனர்.
“போய் கிளாரா ஃபேரண்ட்ஸ்ஸ கூட்டிட்டு வா” என்று இப்போது விளையாட்டையெல்லாம் விட்டு கறாரான ஆபீசராக சொல்ல மண்டையை ஆட்டிய ஜார்ஜ்
“எஸ் சர்” என்றபடி அவர்களை அழைத்து சென்றான் அழுதபடி சென்ற பெற்றோர்கள் தங்களது மகளது உடலை பார்த்த கதற உடனே ஃபோஸ்ட்மர்டம்க்கு உத்தரவிட்டவன் மீடியாவின் அருகில் வந்தான்.
அனைவரும் அவனை கேள்விகளால் துளைக்க
“சர் எப்படி சர் இப்படி செஞ்சு இருக்காங்க? இதுக்கு அரசியல் பின்னனி ஏதாவது இருக்கா? இல்ல ஏதாவது ப்ரூட்டல் கேங் ரேப்பா?” என்று கேட்க அந்த கேள்வியை கேட்டவனை முறைத்த ஆட்ரியன் முறைப்பில் அவன் சாரி என்று சொல்ல
“இது ஏதோ சைக்கோ கில்லர்போல தெரியுது இன்னும் எதுவும் கன்பார்ம் ஆகலை பட் இது ரேப் கேஸ் இல்லை.
அதனால ரிசல்ட் வந்ததும் உங்களுக்கு நியூஸ் வரும் இப்போ நீங்க கிளம்பலாம்” என்றான்.
அவனது பார்வையே அவர்களை அங்கிருந்து ஓடிவிடு என்பது போல் மிரட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.
கிளாராவின் பெற்றோர் அருகில் சென்றவன்
“சாரி ட்டூ ஆஸ்க் அகெய்ன் உங்களுக்கு யாராவது ஃபோன் ஏதும் செஞ்சு மிரட்டினாங்களா? இல்லனா பிஸினஸ் த்ரட்ஸ் ஏதாவது?” என்று கேட்க
“அப்படி எதுவுமே இல்ல சர் நாங்க நார்மல் பேக்கிரவுண்ட் கிரீன் கார்ட் இண்டியன் ஃபேமிலி சர் கிளாரா எங்களுக்கு ஒரே பொண்ணு சர் எங்களுக்கு எங்கேயுமே எதிரிங்கனு யாருமே இல்ல சர்” என்று கிளாராவின் தந்தை அழுதபடி சொல்ல
“ம்ம் ஐயம் சாரி உங்களுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் சரியாகாது. பட் கிளாராவோட டெத்க்கு நான் நியாயம் செய்வேன்.
நீங்க ஹாஸ்பிடல் போய் ஃபார்மாலிட்டீஸ் முடிச்சுட்டு பாடியை வாங்கிக்கோங்க ஐ வில் ஹெல்ப் யூ ஃபார் திஸ் ஜார்ஜ் ஹெல்ப் தெம்” என்றவன் திரும்பி சென்று தன் பைக்கை ஸ்டார்ட் செய்தவன் கிளம்பிவிட ஜார்ஜ் போஸ்ட்மர்டம் முதல் பாடியை கொடுக்கும்வரை எல்லாம் முடித்து பெற்றவர்களிடம் பாடியை ஒப்படைத்துவிட்டு ரிப்போர்ட் வாங்கிகொண்டு உடனடியாக ஆட்ரியனை பார்க்க சென்றான்.
அவன் வீட்டுக்கு சென்று கதவை தட்ட திறந்த ஆட்ரியன் அவனை பார்க்க
“சர் ரிப்போர்ட் வந்துடுச்சு சர் இது பிளாக் மார்கெட் மாஃபியா வேலை தான் சர்” என்று ரிப்போர்ட்டை நீட்ட
“எது எரிச்சதா?” என்றான் ஆட்ரியன்.
“இல்ல சர் அதுக்கு முன்ன அந்த கிட் டோட பாடி பார்ட்ஸ் எடுத்து இருக்காங்க” என்று பதட்டமாய் ஜார்ஜ் சொல்ல
“ஏற்கனவே செத்துபோன குழந்தையை திரும்ப திரும்ப சாகடிச்சு இருக்காங்களா?” என்று ஆட்ரியன் கேட்க குழப்பமாய் பார்த்தான் ஜார்ஜ்.
“உலகம் தெரியாத பிள்ளையா இருக்கியே ஜார்ஜ்” என்று அவன் கேட்க
“நீ பேசுறது எனக்கே புரியல அவனுக்கு எப்படிடா புரியும்?” என்று சொல்லியபடி ரூமிலிருந்து வெளியே வந்தார் அவர்களது ஹையர் ஆபீசர் டேவிட்.
“சர்” என்று சல்யூட் அடித்த ஜார்ஜ் அவரை கூட்டி வந்து ஃசோபாவில் அமரவைத்தான்.
“ம்ம் நீயும் உட்காரு ஜார்ஜ்” என்ற ஆட்ரியன் அவனுக்கும் காபியை கலக்கி கொடுத்தான்.
“அவனோட ஆக்டிவிட்டீஸ் உனக்கு புரியவே இல்லல? எனக்கும்தான் ஜார்ஜ்” என்றார் டேவிட்.
லேசாக சிரித்த ஆட்ரியன்
“உங்களுக்கு எக்ஸ்ப்ளைன் செஞ்சா நீங்க ரெண்டு பேரும் நல்லா சொதப்பி காட்டி கொடுத்துடுவீங்களே? அதான் சொல்லாம இருக்கேன்” என்றான் ஆட்ரியன் கிம்.
“டேய் உனக்கு ஹையர் ஆபீசர் நான்டா என்னை என்ன சொல்ற நீ?” என்று அவர் கேட்க இருவரையும் புரியாமல் பார்த்தான் ஜார்ஜ்.
“என்ன ஜார்ஜ் ரொம்ப குழப்பமாவே இருக்கா? என்னை நீ நம்புறல?” என்று ஆட்ரியன் கேட்க அதிர்ந்த ஜார்ஜ்
“சர் என்ன சர் நீங்க இப்படிலாம் பேசுறீங்க? நீங்க செய்யுறது குழப்பம் இருந்தாலும் ஏதாவது காரணம் இருக்கும்னு நம்புறவன் சர் நானு.
ஆனா உங்க ஆக்டிவிட்டீஸ்ல யாரும் ஹர்ட் ஆகிடகூடாதுனு மட்டும் தான் நான் யோசிப்பேன் சர்” என்று ஜார்ஜ் சொல்ல ம்ம் என்பது போல மண்டையை ஆட்டியவன்
இருவரையும் அமைதியாக தன்னை கவனிக்கும்படி சைகை மொழியில் பேச ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
டேவிட் ஏதோ கேட்க வர ஷ்ஷ் என்று சைகை செய்தவன் சைலண்ட் அண்ட் வாட்ச் என்று தான் வைத்திருந்த போர்ட் அருகே சென்றவன் மார்க்கர் எடுத்து எழுதிக்கொண்டே பேசலானான்.
“நம்புறீங்களா? அப்போ விடுங்க” என்று பேசியவனது கையோ போர்டில்
‘நம்ம பேசுறதுல இருந்து செயல்வரை எல்லாம் ரெக்கார்ட் ஆகுது. சோ எதையும் பேசாதீங்க’ என்று எழுதி இருந்தார்.
“பட் ஹவ் ஈஸ் திஸ் பாஸிபிள்” என்று டேவிட் சட்டென பேசிவிட தலையில் அடித்துக்கொண்டவனை சமாதானம் படுத்தும் வகையில்
“நம்புறதுக்காக அப்படியே எப்படி சர் விடமுடியும்? அதைதான் சர் கேட்டார்” என்று ஜார்ஜ் கூற தன் ஆட்காட்டி விரலையும் கட்டை விரலையும் சூப்பர் என்பது போல காட்டியவன்
“சரி இப்போ உங்களுக்கு என்ன தெரியணும்? இந்த கேஸ் விஷயமாவா? நான் சொல்லுவேன் ஆனா ரெண்டு பேரும் உளறாம இருக்கணும் ஓகே?” என்றபடி போர்டில் வேறு எழுதினான்.
“ம்ம் ஓகே ஓகே சொல்லுடா” என்று டேவிட் கேட்க.
“இது என்னோட கெஸ்தான்.
இந்த கேஸ் ஏதோ சைக்கோ திரில்லர் கொலை போல தெரியுது” என்றான் ஆட்ரியன்
போர்டில்
‘இது நம்ம ஸ்டேட்டோட முக்கியமான ஆள் சம்பந்தப்பட்ட கேஸ் அதை நான் கண்டுபிடிக்க கூடாதுனு தான் என்னை திசை திருப்ப இந்த கொலை நாடகம்’ என்று எழுதி இருக்க.
அவன் பேசுவதை வைத்து “எப்படி சர் இதை தொடர்பு படுத்தி சொல்றீங்க? ஐ மீன் சைக்கோ கொலைனு? ஒரே போல பேட்டர்ன் இல்ல, பாடி இந்த குழந்தையோடது தான் கிடைச்சது அதுக்கு முன்ன ஹைனா ஏதாவது இழுத்துட்டு போய் இருக்கும்னு கேஸ் குளோஸ்” என்று ஜார்ஜ் அவனது பேச்சை சரியாக பிடித்துக்கொள்ள பேச்சு இப்படி இருந்தாலும் சைகை மொழியில் அந்த பெரிய ஆள் டிமிட்ரியா என்று இருந்தது.
“யூ ஆர் பிர்ரிலியண்ட் ஜார்ஜ்” என்று சொல்லி தன் கட்டைவிரலை உயர்த்திய ஆட்ரியன்
“முதல் கேஸும் அவன் எரிக்கத்தான் ட்ரை செஞ்சு இருப்பான் அதுக்குள்ள ஹைனா ஏதாவது வந்து இருக்கும் அவன் விட்டுட்டு ஓடி இருப்பான்.
பிகாஸ் ரெண்டு பேரும் ஒரே ஏஜ் குழந்தைங்க அது ஒரு க்ளூ, அண்ட் ரெண்டு பேரும் கேர்ள்ஸ் அது ஒரு க்ளூ, இதுல புதுசா கிடைச்ச தகவல் அவன் அந்த பொண்ணை ரேப் செய்யல.
வெறும் கொடுமை படுத்தி கொன்னு எரிச்சு இருக்கான் அவ்ளோதான் அவனோட தாட் அதனால நான் அந்த வழியில தான் இந்த கேஸை மூவ் செய்ய போறேன் இப்போ உங்களுக்கு புரிஞ்சுதா?” என்று கேட்க.
“ஓஓ புரிஞ்சது அப்போ அந்த சைக்கோ கில்லர் வேற குழந்தைகள கடத்துறதுக்கு முன்ன தடுக்கணும் சர்” என்று ஜார்ஜ் சொல்ல
“எஸ் ஐ வில் டூ மை லெவெல் பெஸ்ட் டிமிட்ரி சர் எனக்கு இந்த கேஸ்ல எல்லா ரைட்ஸ்ஸும் கொடுத்து இருக்கார் சோ சீக்கிரமே அந்த சைக்கோ கில்லர கண்டுபிடிப்பேன் ஒகே பை” என்றவன் தலையை மட்டும் ஆட்டிவிட்டு நகர்ந்தான்.
அவர்களது உரையாடலை கேட்டுக்கொண்டு இருந்த டிமிட்ரிக்கு அவனை வேறு வழியில் திசைதிருப்பியது திருப்தியே.
“கென்ரி எதுக்கும் அவன்மேல ஒரு கண்ணு வை” என்றவர் கிளம்பி சென்றுவிட்டார்.
அவன் நகரவும் அவர்கள் பேசுவது போல பேசினர்.
“என்ன ஜார்ஜ் இவன் இப்படி சொல்லிட்டு போறான்.
சைக்கோ கொலைகாரன்னு வேற சொல்றான் இவனுக்கு ஏதாவது ஆகிடுச்சுனா? என்ன செய்யுறது?” என்று டேவிட் கேட்க
“அதான் டிமிட்ரி சர் ஃபுல் சப்போர்ட் கொடுத்து இருக்காருனு சொன்னாரே சர் அப்போ அவரே இவருக்கு புரொடக்ஷன் கொடுக்காமலா இருப்பாரு? அவருக்கு எதுவும் ஆகாது சர் கவலைபடாதீங்க நான் கிளம்புறேன்” என்று ஜார்ஜ் சொல்ல
“ம்ம் நானும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன்” என்றவர் அவனுக்கு பாய் சொல்ல போகும்முன் ஆட்ரியன் மொபைலை வீட்டிலேயெ வைத்துவிட்டு ஷூ போடாமல் வீட்டில் இருப்பது போல் கிளம்பி ஒரு இடத்துக்கு வர சொல்லி எழுதி அதை அழித்துவிட்டு சென்று இருந்ததால் மற்றவர்கள் சாதாரணம் போல கிளம்பி சென்றனர்.
ஆட்ரியன் சொன்ன இடத்திற்கு வந்ததும் டேவிட்
“ஏன்டா இதுக்கு எதுக்கு இவ்ளோ ரிஸ்க்? பேசாம அந்த டிவைஸ்லாம் ஜாமர் வெச்சு அவங்க ஒட்டு கேட்கமுடியாதபடி செய்யலாம்ல? யாருக்கு அவ்ளோ தைரியம் என் வீட்டுக்குள்ளேயே வந்து ஆடியோ டிவைஸ் செட் பண்ணது?” என்று அவர் வரிசையாய் கேட்க.
“கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க உங்க கேள்வி எல்லாத்துக்கும் பதில் சொல்றேன்.
முதல்ல உங்க வீட்ல மட்டும் இல்ல நம்ம மூணு பேர் வீட்டுலேயும் ஆடியோ டிவைஸ் வெச்சு இருக்கு. அண்ட் நம்ம எல்லாரோட ஃபோன் கால்ஸ்ஸூம் ஹேக் ஆகி இருக்கு.
டிமிட்ரியோட ஆளுங்க எல்லா இடத்துலேயும் இருக்காங்க.
அதுல யாராவது இந்த வேலையை ஈஸியா செய்யலாம் நம்ம லொகேஷனை டிராக் செஞ்சு இருக்காங்க சோ நாம மொபைலோட எங்கே போனாலும் நம்மள ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிடுவாங்க” என்று ஆட்ரியன் கூற
“இவ்வளவும் உனக்கு எப்போ தெரிஞ்சது யார் சொன்னது?” என்று டேவிட் கேட்க
“எல்லாம் நம்ம வொயிட் ஹார்ஸ்தான்” என்று சொல்ல அதிர்ந்து பார்த்தார் டேவிட்.
குழப்பமாய் பார்த்தான் ஜார்ஜ்.
“டோண்ட் வொர்ரி ஜார்ஜ் இதனால உங்களுக்கோ உங்க ஃபேமிலிக்கோ எந்த ஆபத்தும் வரவிடமாட்டேன்.
அவங்க மொபைல்ல பேரண்டல் ஆக்செஸ் இருக்குறனால அவங்களால ஹேக் செய்ய முடியாது” என்று சொல்ல
“அது பிரச்சனை இல்லை சர் வொயிட் ஹார்ஸ்னு சொன்னீங்களே அந்த ஹேக்கர் யாருனு யோசிச்சேன் அவர் சொல்றதை அப்படியே நம்புறீங்களே அவரும் அந்த டிமிட்ரியோட ஆளா இருந்தா?” என்று ஜார்ஜ் கேட்க.
லேசாக சிரித்த ஆட்ரியன்
“நான் பார்த்து பழகிட்டு இருக்குற வொயிட் ஹார்ஸ் என்னோட சைட்ல்வுட் ப்ரண்ட் ஷின் அலைஸ் ஷிவன் தான்.
அவன் இதுவரைக்கும் எந்தவித ஆளுக்கும் தப்புக்கு துணை போக மாட்டான்.
அதுவும் இல்லாம இந்த கேஸ்க்கு எனக்கு க்ளூ கொடுத்ததே அவன்தான்.
அவன் நம்ம டேவிட் சாரோட பையன் அவன் தலைமறைவா தான் இருப்பான்” என்று சொல்ல அதிர்ந்து போன
ஜார்ஜ்
“ஐயோ சார் மன்னிச்சிடுங்க சர் நான் நான் யாரோ எனன்வோனு பேசிட்டேன் சர்” என்று இருவரிடமும் மன்னிப்பு கேட்க.
“டோண்ட் வொர்ரி ஜார்ஜ் உனக்கு அவனை பத்தி தெரியாதுல விடு” என்று டேவிட்
“இப்பவாச்சும் குழப்பாம தெளிவா சொல்லுடா என்னானு?” என்று டேவிட் ஆட்ரியனிடம் கேட்க.
- 25 Forums
- 330 Topics
- 1,588 Posts
- 0 Online
- 420 Members
