தகிக்கும் நிலவொன்று-36
அத்தியாயம்-36
கீர்த்தனா இயல்பாகவே திரும்பிப் பார்த்தார். மாடிப்படிகளில் மெதுவாக இறங்கி வந்தாள் ஷ்ரத்தா.
வெளிர் நீல நிற காட்டன் சுடிதார். எந்த ஆடம்பர நகைகளும் இல்லை. கழுத்தில் மெல்லிய சங்கிலி மட்டும்.
ஆனால் அவளை சுற்றி தீபா, நந்திதா, லட்சுமி மூவரும் ஒரே மாதிரியான கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை, கருப்பு ஓவர்கோட் அணிந்து பாதுகாப்பாக வந்த விதம், ஒரு சாதாரண பெண்ணாக அல்ல.
முக்கியமான ஒருவராக ஷ்ரத்தாவை காட்டியது. அதை பார்த்த கீர்த்தனாவிற்கு, சில மாதங்களுக்கு முன் சிறைச்சாலையில் பார்த்த ஷ்ரத்தா நினைவுக்கு வந்தாள்.
அப்போது ஷ்ரத்தா முகமோ பயம், அழுகை, சோர்வு, தனிமை போன்ற வடிவத்தை தாங்கியிருந்தாள்.
இப்போது அதே பெண் ஆனால் கண்களில் ஒரு நிமிர்வு. நடையில் ஒரு கம்பீரம். அது சந்தோஷத்தால் வந்த தைரியம் இல்லை. வலியை கடந்து வந்த உறுதி.
"சாரி ஆன்ட்டி. கொஞ்சம் தலைவலி. அதான் படுத்திருந்தேன். நீங்க வந்திருக்கீங்கன்னு சொன்னதும் முகம் கழுவிட்டு வந்தேன். வெயிட் பண்ண வச்சிட்டேனா?" என்று மன்னிப்பு கேட்டு நின்றாள்.
"இல்லம்மா..." என்றார் கீர்த்தனா.
"உட்காருங்க ஆன்ட்டி. நீங்க எப்படி இருக்கிங்க" என்றவாறு ஷ்ரத்தா எதிரே அமர்ந்தாள். தீபா, நந்திதா, லட்சுமி மூவரும் சற்று தள்ளி நின்றனர்.
அவர்களை ஒரு பார்வை பார்த்த கீர்த்தனா, "நல்லாயிருக்கேன் மா. ருத்ரன் சொன்னான்... நீ ரொம்ப உடைஞ்சு போயிட்டதா.
அதான் உன்னை பார்த்துட்டு வரச்சொன்னான்." ஷ்ரத்தா அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
கீர்த்தனாவோ "அவன் ஆரம்பத்துல இருந்து பேசினதுக்கு... உன்னை காயப்படுத்தியதுக்கு வருத்தம் தெரிவிச்சான். இனிமே அப்படி நடந்துக்க மாட்டேன்னும் சொல்ல சொன்னான்." என்று கீர்த்தனா நாலாபுறமும் யாரையோ தேடுவதை கண்டாள்.
ஷ்ரத்தா எதுவும் பேசவில்லை. அவளது பார்வை மட்டும் கீர்த்தனாவின் முகத்தில் நிலைத்திருந்தது.
சில நொடிகள் கழித்து... "யாரை தேடுறீங்க ஆன்ட்டி?" என்று நேரடியாக கேட்டாள்.
கீர்த்தனா சற்றே திகைத்தார்.
"அது..." என்று தயங்கியவர், ''ரா... ராயனை பார்க்கணும்னு..." என்று சொல்லிவிட்டார்.
ஷ்ரத்தாவின் இதழில் மெல்லிய புன்னகை தோன்றியது.
அவள் அருகில் நின்றிருந்த பெண்ணை பார்த்தாள் "லில்லி... ராயனை கூட்டிட்டு வாங்க." என்று ஏவினாள்.
"யெஸ் மேம்." என்று சொல்லிவிட்டு அவள் உள்ளே சென்றாள்.
கீர்த்தனா அந்த ஒரு காட்சியையே கவனித்துக் கொண்டிருந்தார்.
ஷ்ரத்தா எதையும் சத்தமாக சொல்லவில்லை. ஆனால் அவள் சொன்ன ஒரு வார்த்தைக்கு எல்லோரும் உடனே செயல்பட்டனர்.
அந்த மரியாதை,அந்த கட்டுப்பாடு, இந்த வீட்டில் அவளுக்கான இடத்தை தெளிவாக காட்டியது.
"உங்க பையன் பேசினது. முதல்ல ரொம்ப கஷ்டமா இருந்தது ஆன்ட்டி." என்று மெதுவாக ஆரம்பித்தாள் ஷ்ரத்தா.
"இப்போ அதையெல்லாம் ஜீரணிக்க பழகிட்டேன். அதனால அவருக்காக நீங்க மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை. இட்ஸ் ஓகே." ஒரு நொடி அமைதியாக இருந்தவள், "அவரோட அப்பாவை கொன்றவன்னு அவர் நினைக்கிற ஒருத்தனோட கூட நான் வாழ்ந்தேன். அவர் கோபப்பட்டதும், என்னை வெறுத்ததும் இயல்புதானே ஆன்ட்டி." என்று அமைதியாக சொன்னாள்.
அந்த முதிர்ச்சியான பதில் கீர்த்தனாவையே சில நொடிகள் பேச முடியாமல் செய்தது.
அந்த நேரத்தில் "அம்மா..." என்று ராயன் ஓடிவந்தான். அவன் நேராக ஷ்ரத்தாவின் அருகில் வந்து நின்றான்.
"ராயன் குட்டி..." என்று கீர்த்தனா புன்னகையுடன் இனிப்பு பெட்டியை நீட்டினார்.
ராயன் வாங்கப் போய் திடீரென்று ஷ்ரத்தாவை திரும்பிப் பார்த்தான்.
அவள் மெதுவாக இமை மூடி சம்மதம் தெரிவித்ததும் தான் "தேங்க்யூ..." என்று வாங்கிக் கொண்டான்.
அதை பார்த்த கீர்த்தனாவின் மனதில் ஒரு சிறிய வியப்பு.
முன்பு பார்த்த ராயன்... 'யார் என்ன கொடுத்தாலும் வாங்கிக் கொள்வான். இப்போது அம்மாவிடம் அனுமதி வாங்காமல் எதையும் வாங்கவில்லை.
அதே நேரத்தில் சின்ன காலடி சத்தத்துடன் தியாவும் ஓடி வந்தாள். "அம்மா..." என்று ஷ்ரத்தாவின் மடியில் ஏறிக் கொண்டாள்.
அந்த காட்சியை பார்த்த கீர்த்தனா இயல்பாகவே கேட்டார்.
இந்த குழந்தை.?" ஷ்ரத்தா தியாவின் தலைமுடியை வருடினாள். "சத்ரியனோட பொண்ணு ஆன்ட்டி ஹரிணிக்கும்... அவருக்கும் பிறந்த குழந்தை." என்ற பொழுது லேசாக குரல் அடைத்தது.
அதை சமாளித்து "ஹரிணி இறந்ததுக்கப்புறம் இவளை நான் இங்கே கூட்டிட்டு வந்துட்டேன். இனிமே... இவளுக்கும் நான் தான் அம்மா." என்றாள் உறுதியாக.
கீர்த்தனா அமைதியாக தியாவை பார்த்தார். பிறகு ஷ்ரத்தாவை பார்த்தார்.
அவருக்குள் இங்கு வந்த எண்ணம் ஒன்றே. அதை கூறிட துறுதுறுத்தது. 'ருத்ரன் சொன்ன மாதிரி இவ உடைஞ்சு போயிருக்கிற பொண்ணு இல்லையே... இவ... தன்னையே நிமிர்த்திக்கிட்டு... இன்னும் இரண்டு குழந்தைகளையும் தாங்கிட்டு நிற்கிறாளே.' என்று ஆச்சரியமாக பார்த்தார்.
அந்த எண்ணத்தோடு ஆழமாக மூச்சை இழுத்தார்.
இப்போது தான் தான் வந்த உண்மையான காரணத்தை பேச வேண்டும் என்று முடிவு செய்தார்.
கீர்த்தனா தயக்கத்துடன் "உன்கிட்ட ஒரு விஷயம் பேச வந்தேன் மா..." ஷ்ரத்தா அமைதியாக அவரைப் பார்த்தாள்.
"சொல்லுங்க ஆன்ட்டி." என்றாள்.
"ருத்ரனுக்கு எவ்வளவோ பொண்ணு பார்த்தேன். ஒவ்வொரு தடவையும் மறுத்துட்டே இருக்கான்."
சிறிது நேரம் அமைதியாக இருந்தவர், மெதுவாக தொடர்ந்தார்.
"ஏன்னு கேட்டா... உன்னைத்தான் விரும்புறேன்னு நேராவே சொல்லிட்டான். அதுல பிடிவாதமாகவும் இருக்கான். உனக்கே அது தெரியும்.."
ஷ்ரத்தாவின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.
கீர்த்தனா அவளது முகத்தையே பார்த்துக்கொண்டே பேசினார்.
"அவன் மனசு எனக்கு புரியுது. ஆனா... ஒரு அம்மாவா எனக்கு இதுல உடன்பாடே இல்லை" அவரது குரல் மெதுவாக உடைந்தது.
"ராயனை நான் ஏற்கனவே பிடிச்ச குழந்தையா, பார்த்தேன்.
அவன் மேல எனக்கு எந்த வருத்தமும் இல்லை." ராயனை பார்த்து புன்னகைத்தார்.
"ஆனா பேரனா பார்க்கற அளவுக்கு நான் தியாகியில்லை. இதுல இப்போ இன்னொரு குழந்தை... அதுவும் சத்ரியனோட குழந்தைன்னு சொல்ற." தியாவை பார்த்தபடி சில நொடிகள் அமைதியாக இருந்தார்.
"அந்த குழந்தை மேலயும் எனக்கு கோபம் கிடையாது.
குழந்தை எந்த தப்பும் செய்யல. ஆனா... அந்த குழந்தைகளோட சேர்ந்து நீ எங்க வீட்டுக்கு மருமகளா வர்றதை.. என்னால ஏத்துக்க முடியாது இல்லையா?." என்றதும் அறை முழுவதும் அமைதி நிலவியது.
"இந்த விஷயத்தை ருத்ரன்கிட்ட எத்தனையோ தடவை சொன்னேன். அவன் கேட்கவே மாட்டேங்கறான். 'அம்மா... ஷ்ரத்தாவும் ராயனும் இல்லாத வாழ்க்கை வேண்டாம்'ன்னு மட்டும் சொல்லிக்கிட்டே இருக்கான்." கீர்த்தனா கண்களை துடைத்தார்.
"அதனாலதான்... உன்கிட்டயே சொல்ல வந்தேன். தயவு செய்து... என் பையன் வாழ்க்கைக்குள்ள வந்துடாத." என்று கோரிக்கையாக கூறினார்.
ஷ்ரத்தா மெதுவாக சிரித்தாள்.
அது கேலி சிரிப்பு இல்லை. வலியை மறைக்க முயன்ற சிரிப்பு. "ஆன்ட்டி...
நீங்க தேவையில்லாம பயப்படுறீங்க."கீர்த்தனா குழப்பமாக பார்த்தார்.
"நான்... இன்னொருத்தரோட வாழ்க்கையில போய் வாழணும்னு நினைக்கிற நிலையிலயே இல்லை." அவளது பார்வை சத்ரியனின் புகைப்படம் இருந்த சுவரை நோக்கி நகர்ந்தது.
"என் வாழ்க்கை... சத்ரியனோட மட்டும் தான். அவரு உயிரோட இருந்தாலும்... இல்லன்னாலும்...
நான் அவரோட மனைவி. அதை யாராலும் மாற்ற முடியாது. மாற்றவும் விரும்பலை.
ருத்ரன் சாரை நான் எப்பவும் அந்த மாதிரி நினைச்சதே இல்லை. இனிமேலும் நினைக்க மாட்டேன். நீங்க தேவையில்லாம பயப்படறிங்க. சத்ரியனோட பசங்க உங்களுக்கு பேரனோ பேத்தியாவோ இருக்கவே முடியாது." கீர்த்தனாவின் முகத்தில் சிறிய நிம்மதி தோன்றியது.
அதே நேரம் வாசல் அருகே ருத்ரன் குரல் கேட்டது.
"அம்மா!" இருவரும் திரும்பிப் பார்த்தனர்.
வாசலில் நின்றிருந்த அவனது முகத்தில் ஏமாற்றமும், கோபமும், வருத்தமும்..ஒன்றாக கலந்திருந்தது.
"உங்களை அவளுக்கு ஆறுதலா இருக்க சொல்லி இங்க அனுப்பினா... நீங்க அகைன் என்னை போலவே அவளை காயப்படுத்தறிங்களே.
அவ என்னை ஏத்துக்கறதா உங்களிடம் சொன்னாளா?
அவளே என்னை வெறுத்து ஒதுக்கி தள்ளறா.
இதுல என்கிட்ட சொல்ல வேண்டியதை... இவகிட்ட வந்து ஏன் சொல்றீங்க?" என்று மெதுவாக கேட்டபடி உள்ளே நடந்து வந்தான்.
"நீ தான் எந்த பொண்ணை பார்த்தாலும் மறுக்கற. எனக்கு வேற என்ன செய்ய தெரியலை. அதான்.. ஷ்ரத்தாவிடம் பேச வந்தேன்" என்றார்.
ருத்ரன் சோர்ந்தவனாக அவ்விடத்தில் மடிந்து அமர்ந்தான்.
ஷ்ரத்தாவோ "இவரை யார் உள்ள விட்டது. காட்ஸ்.. என்னிடம் அனுமதியில்லாம இவரை எப்படி விட்டிங்க. இதான் நீங்க காவல் காக்குற லட்சனமா?" என்று கேட்க, ருத்ரனோ அவளை மார்க்கமாய் பார்வையிட்டான்.
''என் ஆழ்மனசு உன்னை காயப்படுத்த கூடாதுனு சொல்லுது. ஆனா நீ இப்ப கொடுக்கற பாரு ஒரு ஆட்டிடியூட்... பணத்திமிரும்.. அதை பார்த்தப்பிறகு வெறி ஏறுது.
பட் யதுநந்தன் சொன்னதுல ஒரு உண்மை இருந்தது. நாம காதலிக்கற பெர்ஸன் நம்மளை காதலிக்கலைன்னா கூட தொந்தரவு பண்ணாம காதலிக்கணும்னு. லேசா.. அதை மைண்ட்ல ஏத்தியிருக்கேன். அதனால உன்னை ஹர்ட் பண்ணாம போறேன். அம்மா.. வாங்க" என்று அழைத்து சென்றான்.
ராயனோ "ருத்ரா." என்று அழைக்க, ருத்ரன் கால்கள் வேரூன்றியது.
ஷ்ரத்தாவோ "ராயன்.. உன் அக்கா தியாவோட விளையாடு போ. லில்லி.. ஸ்விம்மிங் பூலுக்கு கூட்டிட்டு போய் டைம்பாஸ் பண்ணுங்க." என்று உத்தரவிட, ராயன் ருத்ரனை பார்த்தவாறு லில்லியோடு நடந்தான்.
ருத்ரனோ ஷ்ரத்தாவை கண்டு ராயனை கண்டும் வெளியேறினான்.
கீர்த்தனாவோ உம்மென்று வர ருத்ரனும் அமைதியாக வந்தான். அமைதி என்றதை காட்டிலும், புயல் வரும் தோணி அவனிடம் இருந்தது.
ஷ்ரத்தாவோ நிம்மதியாக மூச்சு விட்டு, "அளவுக்கு அதிகமா வெறுக்கற மாதிரி பேசிட்டேனே தீபா?" என்று கேட்க, "நோ மேம்.. இது தான் சரி. நீங்க யாரையும் காயப்படுத்தலை. காயப்படுத்தவும் மாட்டிங்க." என்று கூற, நந்திதாவை பார்த்தாள்.
இன்று ஷ்ரத்தா உடைந்து வந்தபோது, இம்மூவரும் தான், 'சத்ரியன் சார் எங்களிடம் உங்களை பார்த்துக்கற பொறுப்பை கொடுத்தப்ப ரொம்ப சேலன்ஜிங்கா இருந்தது. இதுக்கு முன்ன அவரோட அம்மாவுக்கு தான் நாங்க பாடிகார்ட்ஸா இருந்தோம். பட் அவங்க இறந்ததும் அப்படியே இருந்துட்டோம் வீட்ல சர்வெண்ட்ஸா.. சொல்லப்போனா எங்க உடல்வலிமை, நாங்க எதுக்காக தயாரானோமோ அது மிஸ்ஸான பீல். உங்களை மீண்டும் சந்திச்சு பாதுகாக்கும் பொறாப்பாளா தான் நாங்க மீண்டும் சுறுசுறுப்பா இயங்கினோம். ஆனா சத்ரியன் பாஸோட அம்மா ரொம்ப போல்ட். நீங்க ரொம்ப சாப்ட். சத்ரியன் பாஸுக்கு இணையா.. போல்டா நடமாடுங்க மேம். தானா ஒரு ஸ்பிர்ட் உண்டாகும். இது உங்களுக்கு ஆறுதலா சொல்லலை. ரியலி உணர்ந்து பாருங்க. பாஸோட வாழ்ந்தா உங்களுக்கு அவரை பத்தி தெரியாதா?" என்று கூறவும், தன் அழுகையை கண்ணீரை மறைத்தாள். அதற்கேற்றது போல கீர்த்தனா வரவும், பேசிய தோரணை காட்டிய சுபாவத்தை கண்டு ருத்ரனே ஆட்டிடியூட் என்று கூறிவிட்டானே!
"உங்க சத்ரியன் பாஸோட அம்மா அளவுல சிறுதுளியாவது நடந்துக்கிட்டேனா?" என்று கேட்டாள்.
லட்சுமியோ "மேம்.. அவங்களையே தூக்கி சாப்பிட்டுட்டிங்க. ரியலி.. பாஸோட பீமேல் வெர்சன் வந்துட்டா. இன்னும் செமையா இருக்கும்" என்று பேச, புன்னகை பூத்தாள் ஷ்ரத்தா.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 36)
அப்பாடா...! இன்னைக்குத்தான் ஷ்ரத்தா கரெக்ட்டா, பர்ஃபெக்ட்டா
நடந்துக்கிட்டா. சத்ரியன் அளவுக்கு கிடையாதுன்னாலும், ஓரளவுக்கு போல்டாவே பேசியிருக்காள்..
தட்ஸ் வெரி நைஸ். இப்படி நேரிடையா சொன்னால் தான் ஆஃப் மைண்டட் ருத்ராவுக்கு கொஞ்சமாவது புரியும்.
எப்படியோ ருத்ரனை சமாளிச்சிட்டாள்.
😢😢😢
CRVS (or) CRVS 2797
-
தகிக்கும் நிலவொன்று-50 (முடிவுற்றது)
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-49
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-48
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-47
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-46
2 weeks ago
- 25 Forums
- 330 Topics
- 1,588 Posts
- 6 Online
- 420 Members
