தகிக்கும் நிலவொன்று-33
அத்தியாயம்-33
ஆசிரமத்திலிருந்து வெளியே வருவதற்கு முன், தேவையான ஆவணங்கள் அனைத்திலும் கையெழுத்திட்டு முடித்தாள் ஷ்ரத்தா.
அவற்றை சரிபார்த்த நிர்வாகி டேனியல், "எல்லா பார்மாலிட்டியும் முடிஞ்சிடுச்சு மேம். இனிமே தியா சட்டப்படி உங்க பாதுகாப்புல இருக்கலாம்." என்றார்.
"தேங்க்ஸ் சார்..." என்று மனப்பூர்வமாக நன்றி கூறியவள், தியாவை தன்னருகே அழைத்தாள்.
"தியா... டேனியல் சார்கிட்ட சொல்லிட்டு வா."
சிறுமி ஓடி வந்து, டேனியல் சார்... நான் அம்மா கூட போறேன்..." என்றாள்.
அந்த ஒரு வார்த்தையில் டேனியலின் முகமே மலர்ந்தது.
நேற்று வரை "ஆன்ட்டி" என்று கூட தயக்கத்தோடு அழைத்த குழந்தை. இன்று "அம்மா" என்று சொல்லும் அளவுக்கு ஷ்ரத்தாவுடன் ஒன்றிவிட்டிருந்தாள்.
"சந்தோஷமா போம்மா..." என்று தலையை வருடி வழியனுப்பினார்.
காரில் திரும்பி வரும் வழியில், ராயனும் தியாவும் ஒன்றாக அமர்ந்து ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இருவரும் சேர்ந்து ஏதோ கிசுகிசுத்து சிரிப்பதைப் பார்த்த ஷ்ரத்தாவின் உதட்டிலும் தானாக புன்னகை பிறந்தது.
குழந்தைகள் இருவரும் இவ்வளவு சீக்கிரம் ஒன்றிப்போவார்கள் என்று அவளும் எதிர்பார்க்கவே இல்லை.
ஸ்டியரிங்கைப் பிடித்தபடி ஓட்டிக் கொண்டிருந்த யதுநந்தனோ...
அவர்களை விட வேறொன்றைத்தான் யோசித்துக் கொண்டிருந்தான்.
ஆசிரமத்திற்கு வரும் முன் ஒருவன் தங்களை நோக்கி வேகமாக வ்நதான். ஆனால் நெருங்கும் சமயம் மயங்கி விழுந்தான்.
அந்த மனிதன் சாதாரணமாக வந்து மயங்கி விழுந்தானா? அல்லது வேறு ஏதாவது தங்களை நெருங்குவதற்காக போட்ட நாடகமா...? ஷ்ரத்தாவையும் குழந்தைகளையும் அழைத்து யதுநந்தன் அந்த கூட்டத்தில் செல்லவில்லை.
அந்த சந்தேகம் மட்டும் அவன் மனதை விட்டு அகலவில்லை. அது ஒருபக்கம் இருக்க, வீட்டிற்கு வந்த பிறகு. அந்த வீடு முழுவதும் மாறிப்போனது.
ராயனின் சிரிப்புடன், இப்போது தியாவின் சிரிப்பும் முழுமையாக கலந்திருந்தது.
இரண்டு குழந்தைகளும் வீட்டையே சுற்றி ஓடிக்கொண்டிருந்தனர்.
சில நேரங்களில் ராயன் தியாவுக்கு பொம்மைகளை காட்டுவான். சில நேரங்களில் தியா ராயனைத் துரத்துவாள்.
அவர்களின் சிரிப்புச் சத்தம்... பல நாட்களாக சோகமாக இருந்த அந்த வீட்டிற்கு உயிர் கொடுத்தது. என்ன அதெல்லாம் காண அந்த வீட்டின் உரிமையாளர் ஹரிணிக்கு கொடுப்பினை இல்லாமல் போனது.
"யது சார்..." என்று தியா அழைத்தாள். யதுநந்தன் திரும்பிப் பார்த்தான்.
"என்னம்மா?" என்றவனிடம் "தண்ணி..." அவளிடம் பாட்டிலை நீட்டியவன் சிரித்தான்.
"ஒரு விஷயம் கேட்கலாமா?" என்றதும் தியா தலையாட்டினாள்.
"நீ என்னை யது சார்-ன்னு தான் கூப்பிடணுமா?" அவள் உடனே ஷ்ரத்தாவைப் பார்த்தாள்.
"அம்மாவும் அப்படித்தானே கூப்பிடுறாங்க..." என்று அப்பாவியாகச் சொன்னாள். அதைக் கேட்ட ஷ்ரத்தா சிரித்துவிட்டாள்.
"பார்த்தீங்களா... எல்லாத்தையும் காப்பி அடிக்கிறா. ஷ்ரத்தா.. நீயும் யதுனு கூப்பிடு" என்று கூறி யதுநந்தன் போகிற போக்கில் கூறினான். ஷ்ரத்தா தயங்கி, நிற்க "சரி... அம்மா அப்பறம் கூப்பிடுவாங்க நீ யதுன்னு மட்டும் கூப்பிடு." தியா சில நொடிகள் யோசித்தாள். "ஓகே..." என்று தலையாட்டியவள்,
"யது... சார்..." என்றதும் இருவரும் ஒரே நேரத்தில் சிரித்துவிட்டனர்.
அடுத்த இரண்டு நாட்களும் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. தேவையில்லாமல் ஆபத்தை வரவழைக்க விரும்பவில்லை.
யதுநந்தன் எல்லா கதவுகளையும், ஜன்னல்களையும், பாதுகாப்பையும் தினமும் சரிபார்த்தான்.
ஷ்ரத்தாவும் குழந்தைகளோடு நேரத்தை செலவழித்தாள். அங்கிருந்த அந்த இரண்டு நாட்களில், தியா, ஷ்ரத்தாவை விட்டு ஒரு நொடி கூட விலகவில்லை.
அவள் எங்கு சென்றாலும் அவளது விரலைப் பிடித்தபடியே நடந்தாள். ஒருநாள் ஷ்ரத்தா சமையலறையில் யதுநந்தனுக்கு உதவிக் கொண்டிருந்தாள்.
அருகில் நின்று அதை கவனித்துக் கொண்டிருந்த தியா. ஷ்ரத்தா காய்கறியை எடுத்து கொடுக்க, தானும் அதையே எடுத்து யதுநந்தனிடம் நீட்டினாள்.
அதைப் பார்த்த யதுநந்தன் சிரித்தான். "ஷ்ரத்தா.. பார்த்தியா... நீ என்ன பண்ணுறியோ... அதையே காப்பி அடிக்கிறா.
கிட்டத்தட்ட... நீ தான் அவளுக்கு ரோல் மாடல்." என்றதும் அந்த வார்த்தை ஷ்ரத்தாவை நெகிழ வைத்தது.
உடனே தியாவைத் தூக்கி கன்னத்தில் முத்தமிட்டாள். அதைப் பார்த்த ராயன் முகத்தைச் சுளித்தான்.
"எங்க அம்மா..." என்று வந்து ஷ்ரத்தாவை கட்டிக் கொண்டான்.
"அடடா... பொறாமையா?" என்று சிரித்தாள்.
"ராயன்... அக்காவை தள்ளக்கூடாது. அவளுக்கும் நான் தான் அம்மா." என்றதும்...
ராயன் அமைதியாக தியாவைப் பார்த்தான். பிறகு மெதுவாக அவளது கையைப் பிடித்துக் கொண்டான். அதைப் பார்த்த மூவரும் சிரித்தனர்.
சென்னைக்கு திரும்ப வேண்டிய அந்த நாளும் வந்தது.
விமானத்தில் ராயனும் தியாவும் ஜன்னல் இருக்கைக்காக சண்டை போட்டுக் கொண்டே கடைசியில் ஒன்றாக அமர்ந்தனர்.
ஷ்ரத்தா தான் கடைசியில் யதுநந்தன் அருகில் அமர்ந்தாள்.
இரண்டு நாட்களாக சரியாகத் தூங்காததால் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அவளது கண்கள் சொருகின.
தன்னையறியாமல் மெதுவாக யதுநந்தனின் தோளில் சாய்ந்தாள். ஒரு நொடி யதுநந்தனின் இதயம் வேகமாகத் துடித்தது.
ஆனால்... அவளை எழுப்பவில்லை. அவள் நிம்மதியாக உறங்கட்டும் என்ற எண்ணத்தோடு அப்படியே அமைதியாக அமர்ந்திருந்தான்.
அந்த சில நிமிடங்கள். அவனுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அமைதியான நினைவாக மாறியது.
சென்னை விமான நிலையத்தில், தீபா காருடன் காத்திருந்தாள். யதுநந்தன், ஷ்ரத்தா, ராயன் என்று மூவரை மட்டுமே எதிர்பார்த்தவள். தியாவைப் பார்த்ததும் ஆச்சரியமடைந்தாள்.
ஆனால் யார் இந்த பெண் என்று எதுவும் கேட்கவில்லை.
"வீட்டுக்குப் போயி பேசிக்கலாம்." என்று மட்டும் கூறினாள் ஷ்ரத்தா.
வீட்டிற்கு வந்ததும் யதுநந்தன் அவசரமாக கிளம்ப முற்பட, "யது... குளிச்சிட்டு வாங்க.. சாப்பாடு ரெடியாகிடும். சாப்பிட்டு போகலாம்" என்று ஷ்ரத்தா சொல்லவும், யதுநந்தன் நேராக திவாகரின் அறைக்குள் சென்றான்.
அங்கிருந்த புகைப்படங்களை அமைதியாகப் பார்த்தான்.
தந்தையுடன் சிரித்தபடி நின்ற சிறுமி ஷ்ரத்தா, பள்ளி நாட்களின் புகைப்படங்களில் நிறைய செல்ஃபி எடாத்திருந்தாள்.
ஒவ்வொரு புகைப்படமும் தந்தை–மகள் பாசத்தை சொல்லிக் கொண்டிருந்தது.
அவற்றைப் பார்த்தவன் அமைதியாக ஒரு பெருமூச்சு விட்டான்.
அதே நேரத்தில் ஷ்ரத்தா ராயனையும், தியாவையும் குளிப்பாட்டி புதிய உடை அணிவித்தாள்.
"தியா... இப்ப உனக்கு மூணு பேரை அறிமுகப்படுத்துறேன். நான் காலேஜ் போன நேரம்... இவங்க தான் உன்னை பார்த்துப்பாங்க. அவங்க சொல்வதை தான் நீ கேட்கணும்." என்று கூற, "சரிம்மா..." என்று தலையாட்டினாள்.
சாப்பாட்டு மேசையில். அனைவரும் ஒன்றாக அமர்ந்தனர்.
"தீபா... நந்திதா.. லட்சுமி... என்று கூப்பிட மூவரும் வந்து நின்றனர்.
"இது தியா. இவ... என் மக, சத்ரியனோட மக." என்று அமைதியாக அறிமுகப்படுத்தினாள். மூவரும் சில நொடிகள் அதிர்ச்சியாகப் பார்த்தனர்.
பிறகு... தயக்கத்துடன் தலையசைத்தனர்.
"தியாம்மா... இவங்க தீபா ஆன்ட்டி... இவங்க நந்திதா... இவங்க லட்சுமி. நான் இல்லாதப்ப... இவங்க சொல்றத கேட்கணும்." என்றாள்.
"எனக்கு எதுவானாலும்... உங்களிடமே கேப்பேன் மா..." என்று அப்பாவியாகச் சொன்னாள் தியா.
அவளைப் பார்த்து ஷ்ரத்தா சிரித்தாள்.
"மேம்..." என்று தீபா ஆரம்பித்தாள்.
"நீங்க இல்லாதப்ப... ருத்ரன் சார் வந்திருந்தார். எங்க போனீங்கன்னு கேட்டார். ஹரிணி மேம் இறந்ததையும் சொல்லிட்டோம்." என்று தெரிவித்தனர்.
"இட்ஸ் ஓகே..." என்று சலிப்பாகச் சொன்னாள் ஷ்ரத்தா.
"எப்படியும்... இங்க வந்து தான் நிற்பார்." அவள் சொல்லி முடிப்பதற்குள் வெளியே ஒரு பைக்கின் சத்தம் கேட்டது.
அந்த சத்தம்... அவள் எதிர்பார்த்ததுதான்.
யதுநந்தனும் மெதுவாக வாசலை நோக்கித் திரும்பினான்.
அடுத்த நொடி வாசல் திறந்தது. ருத்ரன் உள்ளே நுழைந்தான். ஏதோ தன் வீடு போல நுழைந்தான். இத்தனைக்கும் ஷ்ரத்தா கழுவி ஊற்றாத குறையாக திட்டியும் அடித்தும் விட்டாள். அப்பொழுதும் வந்து நிற்கின்றான்.
அவன் பார்வை... நேராக எதிரே நின்ற யதுநந்தனைச் முதலில் சந்தித்தது.
கடைசியாக சத்ரியனை பற்றி விசாரிக்க நேரில் சந்தித்து பேசியது என்பதால், "என்ன லாயர் சார்.. இங்க இருக்கிங்க?" என்றான்.
"போலீஸ்மேனுக்கு தெரியாததா... ஹரிணி இறந்ததும், நான் ஷ்ரத்தா கூட போனதை கேட்டு விசாரித்து வச்சியிருப்பிங்க. இன்னிக்கு இங்க வந்ததை தான் பக்கத்து வீட்டு ஆன்ட்டி தகவல் சொல்லவுமா ஆளா பறந்து வந்துட்டிங்களே" என்றான்.
யதுநந்தன் வாசலை பார்வையிடும் போது, பக்கத்து வீட்டு ஆன்ட்டி எட்டியெட்டு பார்த்து ருத்ரனிடம் உள்ள இருப்பதாக தெரிவித்ததை கவனித்து அவ்வாறு சொன்னான்.
"ப்ப்பா.. வரவர லாயர் சார் என் வேலையை சேர்த்து பார்ப்பிங்க போல" என்று ராயனை தேடினான்.
எப்பொழுதும் வந்ததும் காலை கட்டிக்கொள்வான். அவனை தூக்கி முத்தமிடுவதால் தேடினான்.
ஆனால் ராயனோ தியா ருத்ரனை கண்டு புது மனிதன் என ஷ்ரத்தாவை அணைத்திருக்க, ராயனும் தன் அன்னையை கட்டிப்பிடித்திருந்தான்.
"ஏய்.. ராயன்.. இங்க வா..ங்..க" என்றவன் பார்வை தியாவை கண்டது.
ஷ்ரத்தா தியாவை கண்டு ஏளிட்டாள். இருவரின் கண்களும் ஒரு நொடி மோதின. எந்த வார்த்தையும் இல்லை.
யாரிந்த குழந்தை? என்ற கேள்வி தாங்கி ருத்ரன் பார்வையிட, ஷ்ரத்தா வாய் திறக்கவில்லை. ஆனால் ருத்ரனின் போலீஸ் மூளையோ ராயனை விட பெரிய பெண், அதிலும் ஹரிணியின் இறப்பிற்கு சென்று திரும்பி வந்த ஷ்ரத்தாவோடு குழந்தை என்றதும், ஹரிணி குழந்தையா இருக்குமோ?' என்று கூர்ந்தான்.
"அம்மா... இவர் யாரு?" என்று மழலைக் குரலிலா தியா கேட்க, "ருத்ரன்.. போலீஸ் ஆபிசர்" என்று மட்டும் கூறினாள்.
குழந்தை போலீஸ் என்றதும் ஷ்ரத்தாவை இன்னும் இறுக பற்றினாள்.
ருத்ரனோ 'அம்மாவா?' என்று அதிவேகமாக சிந்தித்தான். வினோத்தோட குழந்தைன்னா இவளை ஏன் அம்மானு சொல்லணும்? எங்கயோ இடிக்குதே.' என்று யோசித்ததும் ஹரிணி குழந்தை.. இவளை அம்மா என்றதும் சட்டென சத்ரியனின் புகைப்படத்தை பார்வையிட்டான்.
சத்ரியன் ஹரிணி விவகாரம் தெரிந்தவன் என்பதால், "ஓ.. ஓ மை காட்." என்று எகத்தாளமாய் சிரிக்க முயன்றான்.
ஆனால் ஷ்ரத்தா கேவலமாக பார்வையிடவும், "சாரி.. ரியலி சாரி.. சிரிச்சதுக்கு சாரி ஷ்ரத்தா. பட் இந்த குழந்தை உன் சத்ரியனோட பொண்ணு ரைட்?" என்று கேட்க, ஷ்ரத்தா மௌனமாய் இருந்தாள்.
"ராமன் மாதிரி ஒருத்தியோட வாழ்ந்தவன் உன் சத்ரியன் இல்லைனு தெரியும். சோ.. ஈஸியா தெரியுது." என்று நகைத்தான்.
சத்ரியனை எகத்தாளமாய் பேசவும், ஷ்ரத்தாவோ கோபம் கொப்பளிக்க, "என் சத்ரியன் என்னை தொடறதுக்கு முன்ன எத்தனையோ பொண்ணை தொட்டிருக்கலாம். ஆனா என்னை தொட்டப்பிறகு எவளையும் தொடலைனு எனக்கு தெரியும்.
உனக்கென்னடா வந்தது. அவரைப் பற்றி பேசுற தகுதி உனக்கு இல்லை ருத்ரன்" என்று கத்தினாள்.
சத்ரியனை பத்தி தரக்குறைவாக பேசினால் ஷ்ரத்தா பொறுத்துக் கொள்ளமாட்டாளென புரிந்தும் பேசி நக்கலாய் மன்னிப்பு கேட்டு நின்ற ருத்ரனை மேலும் அதிரும் வகையில் தியாவோ ''யது." என்று கட்டிக்கொள்ள, ருத்ரனோ யதுந்நதனை பெயரிட்டு அவனை கட்டிக்கொண்ட தியாவை அளவிட்டான்.
இம்முறை ராயனும் யதுந்நதன் காலை கட்டிக்கொள்ள, இருவரையும் பார்த்து யதுந்நதன் மண்டியிட்டு அணைத்து கொண்டவாறு, "நீங்க சாப்பிட்டாச்சுன்னா தம்பிக்கூட விளையாடுங்க. ராயன் அக்கா கூட விளையாடு. அம்மாவும் நானும் ருத்ரனிடம் பேசிக்கறோம்" என்று அனுப்ப, தலையாட்டி இருக்குழந்தைகளும் திரும்பி திரும்பி பார்த்து நடந்தனர்.
ருத்ரனுக்கோ அந்த பெண் குழந்தை யதுந்நதனிடம் நன்றாக ஒட்டிக் கொண்டதை ஜீரணிக்க முடியாமல், ராயனும் வராமல் விளையாட போனதில் துவண்டான்.
''எதுக்கு வந்த?" என்று ஷ்ரத்தா கேட்க, ''உன்னை பார்க்க வந்தேன்னு சொன்னா முறைப்ப. நான் ராயனை பார்க்கவும் வந்தேன். இங்க மூன்று லேடி பாடிக்கார்ட் இருந்தாங்க. அங்க தனியா போயிட்டு வந்தியேனு இந்த இடம் திக் திக்குனு இருந்தது. அதனால வந்ததும் வராததும் உன்னை பார்க்க வந்தேன் போதுமா... உன்னை பார்த்துட்டேன்." என்று யதுநந்தனை கண்டு வந்த வேகத்திலேயே திரும்பி சென்றான்.
ஷ்ரத்தாவுக்கு அப்பாடி' என்ற திருப்தி. அடுத்து யதுநந்தனையும் நன்றி கூறி வழியனுப்பி வைத்தாள்.
யதுந்நதனோ "ஜாக்கிரதையா இரு ஷ்ரத்தா. அங்க பிராப்ளம் வந்த மாதிரி இங்கயும் வருமோனு ஒரு மாதிரி இருக்கு." என்று கூறினான்.
"கவலைப்பட வேண்டாம் யது. நான் சத்ரியனோட பங்களாவுக்கே போகலாம்னு இருக்கேன்.
மேபீ.. இங்க காட்டிலும் அங்கயும் நிறைய பாடிகார்ட் இருக்காங்க. அதோட ருத்ரனை விரட்டணும். முதல்ல போக வேண்டாம்னு இருந்தேன். நினைவுகள் துரத்துமேனு. நான் எங்கயிருந்தாலும் சத்ரியனை மறக்க முடியாது. அதனால அங்க போய் நினைவுகளோட பழகிடுவேன். அதோட குழந்தைகள் பாதுகாப்பு கூடும்" என்ற கூறினாள்.
"குட் ஐடியா." என்றவனின் போன் அடிக்க, நேரா கோர்டுக்கு தான் போகணும். இன்னிக்கு ஆஜராகலை.. அப்பறம் கேஸ் வராது." என்று கூறிவிட்டு புறப்பட்டான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 33)
நினைச்சேன், 'பேயை நினைச்சால் உடனே பிரசன்னமாகிடுமாம்'
அது மாதிரி ருத்ரன்னு பேரு சொன்னதுமே, பைக் அதிர வந்து நின்னுட்டான் இல்ல, ஆனா என்ன பிரயோஜனம், நல்லா வாங்கி கட்டிக்கிட்டுத்தான் போனான்.
ஷ்ரத்தா மட்டுமென்ன, சத்ரியனை அக்மார்க் நல்லவன்னா சொன்னால், அவளை கட்டிக்கிட்டப் பிறகு தான் ஷ்ரத்தாவுக்கு மட்டும் சொந்தமானவனா மாறினான்.
தியா என்கிற பேருல தனக்கொரு பெண் குழந்தை இருக்கு என்கிற விஷயம் அவனுக்கேத் தெரியாது, இதுல அவளை வேற பெருசா நக்கல் பண்ண வந்துட்டான் ?
போடா போடா,..!
ஷ்ரத்தா சொன்ன மாதிரி பேசாமல் சத்ரியனோட வீட்டுக்கு போறதே பெட்டர் சாய்ஸ். அங்கேன்னா சேப்டியும் அதிகம், சத்ரியனோட நினைவுகளும் இருக்கும். இங்க
மாதிரி பயப்படத் தேவையில்லை..
குட் டிசிசன்.
😊😊😊
CRVS (or) CRVS 2797
-
தகிக்கும் நிலவொன்று-50 (முடிவுற்றது)
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-49
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-48
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-47
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-46
2 weeks ago
- 25 Forums
- 330 Topics
- 1,589 Posts
- 2 Online
- 420 Members
