தகிக்கும் நிலவொன்று-30
அத்தியாயம்-30
தியா விழித்ததும், புதிதான இடத்தைப் பார்த்து ஒரு நொடி மிரண்டாள்.
அதை கவனித்த ஷ்ரத்தா, கண்களை அழுத்தமாகத் துடைத்துக் கொண்டு அவளருகில் அமர்ந்தாள்.
"பயப்படாத தியா... வீட்ல தான் இருக்கோம்." என்று மெதுவாகச் சொன்னாள்.
"பசிக்கு..." என்று தியா சிணுங்கியதும், ஷ்ரத்தா உடனே எழுந்தாள்.
"வா... கிச்சன்ல என்ன இருக்குன்னு பார்க்கலாம்." என்று கையை நீட்டினாள்.
ஆனால் தியா, அவள் தன்னைத் தூக்க வருகிறாள் என்று நினைத்துக் கொண்டு, இரு கைகளையும் நீட்டி ஷ்ரத்தாவை அணைத்துக் கொண்டாள்.
அந்த அணைப்பில் ஷ்ரத்தாவின் கண்கள் மீண்டும் கலங்கின. அவளைத் தூக்கிக் கொண்டே சமையலறைக்குள் சென்றாள்.
அங்கே யதுநந்தன் ஏற்கனவே எல்லாவற்றையும் தயார் செய்து வைத்திருந்தான். அவர்களைப் பார்த்ததும் மெதுவாகப் புன்னகைத்தவன், "எந்திரிச்சதும் பசிக்குமோன்னு தோணுச்சு... இருந்த ஐட்டம்ல பாஸ்தாவும், பிரெட் டோஸ்டும் செஞ்சேன்." என்று தட்டுகளை எடுத்துக் கொடுத்தான்.
ஷ்ரத்தா தியாவை நாற்காலியில் அமர வைத்து சாப்பிட வைத்தாள். தியா அவசரமாய் எடுத்து வைத்திட ஆ.."' என்று அலறினாள். சூடாக இருந்ததால் வாய் லேசாக சுட்டுவிட்டது. "சுடுது." என்று தியா உதட்டை சுளிக்க, "அச்சச்சோ... நான் ஊட்டுறேன்..." என்று மெதுவாக ஊதி ஊட்டி விட்டாள்.
தியாவும் சிரித்தபடி வாயைத் திறந்து வாங்கினாள்.
அந்த சிரிப்பைப் பார்த்த நொடியில், ஷ்ரத்தாவின் உள்ளத்தில் பூகம்பமே வெடித்தது.
அதே நேரம், "மம்மி..." என்று ராயனும் தூக்கக் கலக்கத்தில் வந்தான். உடனே யதுநந்தன் அவனைத் தூக்கிக் கொண்டு, "நீ அந்த பாப்பாவை பாரு ஷ்ரத்தா... ராயனை நான் ஹாண்டில் பண்றேன்." என்று அருகில் அமர வைத்து அவனுக்கும் ஊட்டி விட்டான்.
ஷ்ரத்தா தியாவிடம் ஏதோ ஒரு உணர்வோடு தவிப்பதை அவன் கவனித்தான்.
ஆனால் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. சில நிமிடங்களில் இரண்டு குழந்தைகளும் வயிறு நிறைய சாப்பிட்டு, "விளையாட போறோம்..." என்று அனுமதி கேட்டபடி ஹாலுக்குள் ஓடிவிட்டனர்.
"நீயும் சாப்பிடு ஷ்ரத்தா." என்று யதுநந்தன் கூறியதும், அவளும் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள்.
ஆனால் அவளது பார்வை ராயனை விட தியாவையே அதிகமாகத் தேடிக் கொண்டிருந்தது. அச்சு அசலாக சத்ரியனை உரித்து வைத்தது போல இருந்த அந்த முகம்.
அவளது இதயத்தை ஒவ்வொரு நொடியும் துடிக்க வைத்தது. ராயனிடமும் சத்ரியனின் சாயல் இருந்தது. ஆனால் தியாவைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் அது சாயலாக மட்டும் இல்லை.
சத்ரியனே சிறுமியாக அவள் முன்னால் ஓடுவது போல இருந்தது. அதை மறைக்க முடியாமல் தடுமாறியவள், "சாரி யதுசார் உங்களையும் கூட கூட்டிட்டு வந்து, எதுவும் சொல்லாம இருக்கேன்னு தப்பா நினைக்காதீங்க. என்னால பேசக் கூடிய நிலையில இருக்கேனான்னு எனக்கே தெரியலை." என்றாள்.
யதுநந்தன் அமைதியாக அவளைப் பார்த்தான். "நீ எதுவும் சொல்ல வேண்டாம் ஷ்ரத்தா. ஆசிரமத்துல சில பத்திரத்தை வாங்கி வாசித்தேன் இல்லையா.. அதுல குழந்தையோட அப்பா பெயர்ல 'S'ன்னு இனிஷியல் இருந்துச்சு.
ஹரிணி கல்யாணம் பண்ணது வினோத்தை. அப்போ... இந்த குழந்தை யாரோடதுன்னு என்னால யூகிக்க முடிஞ்சது. இது ஹரிணியிடம் சத்ரியன் தவறாக நடந்த அந்த சம்பவத்துல உருவான குழந்தை ரைட்?" என்று மெதுவாகக் கேட்டான்.
ஷ்ரத்தா பதில் சொல்ல முடியவில்லை. மெதுவாக தலையாட்டியவள், அழுதபடி முகத்தை மூடிக் கொண்டாள்.
யதுநந்தன் பெருமூச்சு விட்டான்.
"இந்த கேஸ்ல நான் நிறைய விஷயங்களை பார்த்திருக்கேன் ஷ்ரத்தா. நீ... சத்ரியனை உயிருக்கு உயிரா காதலிக்கற.
ஆனா... சட்டப்படி நீதான் அவனை கொன்றவள்னு பதிவு.
ஹரிணியை... சத்ரியன் தான் சீரழிச்சிருக்கான். ஆனா அவளும் வினோத்தும், உனக்கும் சத்ரியனுக்கும் உதவி செஞ்சிருக்காங்க.
இப்ப ஹரிணி தன்னோட குழந்தையையே உன்கிட்ட ஒப்படைச்சிட்டு போயிருக்கா. நீயும் எந்த தயக்கமும் இல்லாம அவளை கூட்டிட்டு வந்திருக்க.
இதெல்லாம்... என்னால இன்னைக்கும் புரிஞ்சுக்க முடியலை. ஒரு கிங்பின்னுக்காக... இவ்வளவு பேரு... இவ்வளவு தியாகம் பண்ற அளவுக்கு... அவன் என்ன செஞ்சான் ஷ்ரத்தா?" அந்த கேள்விக்காகவே காத்திருந்தவள் போல ஷ்ரத்தா மெதுவாக நிமிர்ந்தாள்.
"நீங்க சொல்லுற மாதிரி சத்ரியனை பார்த்த உடனே நான் காதலிக்கலை யதுசார்.
என் அப்பா மெடிக்கல் சீட்டுக்காகவும், செட்டில்மென்ட்டுக்காகவும், அவர் கேஸை எடுத்தது உண்மை. ஆனா அப்பாவோட இறப்புக்கு காரணம் தேடி நான் போனது. என்னை ஆதிகேசவோட ஆளுங்க துரத்தினதால.
அந்த நேரம் என்னை பாதுகாத்தது சத்ரியன் மட்டும் தான்." என்று ஆரம்பித்தவள்
முதல் சந்திப்பிலிருந்து அவனைப் பற்றி தவறாக நினைத்த நாட்கள், அவன் தன் மீது கை கூட வைக்காமல் காப்பாற்றிய தருணங்கள், தனக்காக குண்டு வாங்கியது, அப்பாவின் மரணத்தில் அவனுக்கு சம்பந்தமில்லை என்று தெரிந்த நிமிடம். தனக்குள் காதல் பிறந்தது, கப்பலில் கழித்த நாட்கள்.
அவன் காதலனாகவும், நண்பனாகவும், கணவனாகவும், தாயாகவும், குழந்தையாகவும் மாறிய விதம்.
ஸ்டெல்லாவின் குழந்தை ஐரீனை காப்பாற்ற. தான் கூறியதும், தனக்காக அவன் உயிரையே பணயம் வைத்தது.
ஐரீனோடு சேர்த்து நூற்றிருபத்தாறு குழந்தைகளையும் காப்பாற்றியதை ஒன்றும் விடாமல் சொல்லி முடித்தாள்.
இறுதியில் "சத்ரியன் உயிரோட இருக்காரான்னு எனக்கு தெரியாது. அவரே...
தான் இறந்துட்டதா உலகம் நம்பணும்... நான் ஜெயில்ல பாதுகாப்பா இருக்கணும்னு பிளான் போட்டார். அது நடந்துச்சு, எஸ்... நான் சத்ரியனை சுடலை. சுடற மாதிரி நடிச்சேன். அவர் அங்கிருந்து போயிட்டார்.
ஆனா... உலகத்துக்கு அவர் இறந்துட்டார். அதனால தான் நான் பூவையும் பொட்டையும் தவிர்க்கலை.
ஆனாலும் கடைசியா... அவர் போன கப்பல் வெடிச்சு சிதறினதுன்னு தான் ஹரிணி சொன்னா." என்றதும் அழுகையுற்றாள்.
அதுக்கப்புறம் வினோத் அண்ணாவும் காணாம போயிட்டார். இன்னைக்கு வரைக்கும் அவர் என்ன ஆனார்னு எனக்கு தெரியலை." என்றவள் கதறி அழுதாள்.
"உண்மையிலேயே... சத்ரியன் இறந்துட்டாரோனு பயமா இருக்கு யதுசார். ஏன்னா அவரை துரத்தின அந்த கேங் ரொம்ப பெருசுனு சொன்னார்.
இப்ப உயிரோட இருந்திருந்தா, ஹரிணியை இப்படி சித்ரவதை செய்ய விட்டிருப்பாரா? வினோத் அண்ணா இவ்வளவு நாளா காணாம போயிருப்பாரா? ராயன் பிறந்த நாளுக்குக் கூட சத்ரியன் வராம இருந்திருப்பாரா?
என்னால... எதையும் புரிஞ்சுக்க முடியலை. என் கூட... இப்ப யாருமே இல்ல..." என்று உடைந்து அழுதாள்.
யதுநந்தன் சில நொடிகள் எதுவும் பேசவில்லை.
பிறகு மெதுவாக சொன்னான். "ருத்ரனிடம் சத்ரியன் உயிரோட இருக்காரா இல்லையானு சந்திச்சு பேசினேன் ஷ்ரத்தா.
சத்ரியன் கேஸ் பற்றி... கடைசியா கப்பல் வெடிச்சது வரை எல்லாத்தையும் சொல்லியிருந்தான். அவன் சொன்ன தகவல்படி... சத்ரியன் உயிரோட இருக்க வாய்ப்பே இல்லன்னு சொன்னான்.
அதனால தான், உன்கிட்ட அவன் காதலை சொல்லி தொந்தரவு தர்றான். ஏன் நானுமே உன்னிடம் என் விருப்பத்தை சொல்ல தைரியம் வந்தது.
ஒரு கிங்பின்... இப்படி இருக்க முடியுமா? நான் இதுவரை கேட்ட கதைகளில் சத்ரியன் கொலைக்கு அஞ்சாதவன், யாராவது அவனுக்கு அழிவை தரணும்னு நினைச்சாலே அவங்களை அழிக்க அவன் ஸ்கெட்ச் போட்டுடுவான்.
யாரு, எந்த இடம், எத்தனை பேர் இருக்காங்கனு பார்க்காம துப்பாக்கியில சுட்டு பொசுக்குவான், இல்லையா கத்தியில சதக்குனு குத்தி ரத்தத்தை பார்த்து ரசிப்பான்.
அதுக்கு சாட்சியே.. கோர்ட்ல ருத்ரன் அப்பாவோட துப்பாக்கி எடுத்து ஆறு பேரை போட்டு தள்ளியது.
அவனுக்கு கீழே வேலை செய்த ஆட்கள் எல்லாம் கொன்றது கூட கதை கதையா சொல்லியிருக்காங்க." என்றவன் ராயனை அளவிட்டான்.
ருத்ரன் சொன்ன தகவல்களும், சட்டப் பதிவுகளும், எல்லாமே ஒரு பக்கம் இருக்கு.
ஷ்ரத்தாவின் கண்ணீரோடு வந்த ஒவ்வொரு நினைவு சத்ரியனின் மற்றொரு பக்கம்.
சில நொடிகள் அமைதியாக அமர்ந்திருந்தவன், ஆழமாக மூச்சை இழுத்தான்.
"உண்மையை சொல்லணும்னா அவன் இல்லன்னு நினைச்சதால தான்... உன்கிட்ட என் மனசுல இருந்ததை சொன்னேன். உங்கப்பாவோட சாதாரண வார்த்தை, என் மனசுல ஆசையா உருவாகி ஒரு தலை காதலாவே மடிந்த காதல், இப்ப சத்ரியன் இல்லை என்றதால தான் நான் அன்னிக்கு ராயன் பிறந்தநாளில் மனசை திறந்தேன்.
சத்ரியன் உயிரோட இருக்கும்போது... அவன் நேசிச்ச பெண்ணை நான் நினைக்க கூட மாட்டேன் ஷ்ரத்தா. அது என் மனசாட்சிக்கு சரியா இருக்காது." அவன் பார்வை தரையில் பதிந்தது.
ஷ்ரத்தாவின் கண்களில் மீண்டும் கண்ணீர் பெருகியது.
"சாரி யதுசார்.. ஒரு விதவைக்கு வாழ்க்கை தர்ற உங்க எண்ணத்தை தப்புனு சொல்லமாட்டேன். ஆனா உங்க தேர்வு நானா இருக்கற பட்சத்தில என் பதில் மறுக்கற முடிவில் தான் இருக்கும்.
இதை உங்களை கஷ்டப்படுத்தணும்னு நான் ஒருநாளும் நினைச்சு சொல்லலை. தேவையில்லாத ஆசை வளரவிடக்கூடாது இல்லையா? என்னை பொருத்தவரை சத்ரியன் உயிரோட இருக்கார்னு நினைக்கறேன்" என்று கூற, யதுநந்தன் மெதுவாக புன்னகைத்தான்.
"எனக்கு தெரியுது... அதனால தான்... இன்னைக்கும்...
உன்னை எந்த விஷயத்துக்கும் கட்டாயப்படுத்தலை." என்றவன் எழுந்து ஜன்னல் அருகே சென்று நின்றான்.
வெளியே இருள் பரவியிருந்தது. சத்ரியன் இறந்திருந்தால் ஷ்ரத்தா தன்னை ஏற்பாளா என்று ஆசை யாரை விட்டது என்பது போல பார்வையிட்டான். அங்கே ராயன் தியா இருவரும் ஷ்ரத்தா அருகே வந்து சுற்றி சுற்றி விளையாட, ஷ்ரத்தா இருவரையும் அனைத்து பெருமூச்சை வெளியிட்டாள்.
அதில் இரு குழந்தையின் அணைப்பே அவளை உயிர்ப்புடன் வைத்திருப்பது போல தோன்றியது.
யதுந்நதனோ இரு குழந்தைகள் முன் மண்டியிட்டு "ராயன்.. உனக்கு தியாவை பிடிச்சிருக்கா? என்று கேட்க, எஸ்.. எனக்கு இந்த அக்காவை பிடிச்சிருக்கு" என்றான்.
"தியா... உனக்கு இங்க எங்களோட இருக்க, சந்தோஷமா இருக்கா? என்று கேட்க, தனித்து வாழ்ந்த பிஞ்சிற்கு இங்கே தாய், தந்தை, தம்பி, என்ற ரீதியில் தோன்ற மூவரையும் பார்வையிட்டு தலையாட்டினாள்.
''நான் உங்களை என்னனு கூப்பிடணும்" என்று கேட்டாள்.
ஷ்ரத்தாவோ ''ஹரிணியை என்னனு கூப்பிட்ட?" என்று கேட்டாள்.
"ஹரிணி ஆன்ட்டினு அவங்களை கூப்பிட சொல்வாங்க." என்று சோர்வாக குழந்தை கூறினாள்.
ஷ்ரத்தாவுக்கு ஹரிணி தியாவிடம் தன்னை ஒரு மூன்றாம் மனுஷியாகவே காட்டி நின்றதை எண்ணி, அவள் நிலை யாருக்கும் வரக்கூடாதென, மறுகினாள்.
"உங்களையும் ஆன்ட்டினு தான் கூப்பிடணுமா? இல்லை ராயன் உங்களை கூப்பிடற மாதிரி அம்மானு கூப்பிட முடியாதா?" என்று மழலை குரலில் கேட்டாள்.
ஷ்ரத்தா உடனே "நீ.. நீ ராயன் கூப்பிடற மாதிரி அம்மானு கூப்பிடு.' என்று முத்தம் வைத்து கட்டிக்கொள்ள ராயன் தியாவை பார்த்து நின்றான்.
யதுநந்தனோ மண்டியிட, "அப்ப இவர் அப்பா.. நீங்க அம்மாவா?" என்று கேட்க, அவசரமாய் "இல்லை.. அவர் அப்பா இல்லை. அவர்.. அவர்.. யதுசார்." என்று அறிமுகப்படுத்தினாள்.
தியாவோ தனக்கு அம்மா என்ற உறவு கிடைத்த சந்தோஷத்தில் தலையாட்டி கொண்டாள். அழகாக பொம்மை போல இருந்தவளின் தலையாட்டளில் ஷ்ரத்தா மனம் குளிர்த்தது. தியாவை மார்போடு இறுக அணைத்துக் கொண்டாள் ஷ்ரத்தா.
அந்த சிறிய உடலின் வெப்பத்தில், பல வருடங்களாக தொலைந்து போன ஏதோ ஒன்றை மீண்டும் கண்டடைந்த உணர்வு.
அவளுக்கே தெரியாமல்... தியா என்ற அந்தச் சிறுமியின் உருவத்தில், சத்ரியனின் ஒரு துண்டை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டிருந்தாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Shradha ella unmaium sollita apo chathriyan sagala irukan kandipa oru naal varuvan unakaga ivlo erpadu panitu pona an nee ivlo kastapatta varama iruka matan yathu ellam ketu therinjitu avala tholla panama irukiye athuve santhosam intha unmaiya veliya sollama sollavum mudiyama evlo kasta pattuta shradha
தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 30)
ஆனா, எனக்கு நிச்சயமா நம்பிக்கை இருக்கு, சத்ரியன் எங்கோ ஒரு மூலையில அந்த நூற்றியிருபத்தாறு குழந்தைங்களோடயும், ஸ்டெல்லா ஐரீனோடவும் உயிரோடத்தான்
இருக்கிறான். அவன் இப்படி தலைமறைவா இருக்கிறதுக்கு காரணம், திரும்ப வந்தால் போலீஸூம் அவனை சும்மா விடாது, அந்த கண்ணுக்குத் தெரியாத எதிரியும் சும்மா விடமாட்டாங்க. எப்படியும் ஒருநாள் தன்னோட ஷ்ரத்தாக்காகவும், குழந்தைங்களுக்காகவும் வெளியே வந்து அவங்களையும்
அவனோடவே கூட்டிட்டு போகலாம்.
அப்ப இந்த ருத்ராவும் யதுநந்தனும் கையை கட்டி வேடிக்கைப் பார்த்துட்டு இருக்கப் போறது கன்ஃபார்ம்ட்.
😊😊😊
CRVS (or) CRVS 2797
Chathriyan uyir oda iruku ah vaipu iruku than aana Shardha sollurathu ra karanam um aval oda bayam.seri na ra mathiri than iruku avan uyir oda irundu irundha Vinoth ku aabathu vandhu irukathu harini yum ipadi chithravathai anubavachi iruku ah mata nu aana avan andha 126 kuzhandhai kaga amaithi ah irukavum vaipu iruku yae apadi avan engayo uyir oda irukum pothu definte ah avan family ah thedi avan vara than seiyuvan.
Yadhu ava unarvu ku kudukira mathipu than Shardha ah va la ikkatu ah na nerathula avan kita uthavi nu ketaka mudiyuthu avan ah friend ah va chum accept panni ka mudiyuthu .
-
தகிக்கும் நிலவொன்று-50 (முடிவுற்றது)
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-49
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-48
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-47
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-46
2 weeks ago
- 25 Forums
- 330 Topics
- 1,589 Posts
- 2 Online
- 420 Members
