Forum

தகிக்கும் நிலவொன்று...
 
Notifications
Clear all

தகிக்கும் நிலவொன்று-27

8 Posts
8 Users
2 Reactions
222 Views
(@praveena-thangaraj)
Posts: 265
Member Admin
Topic starter
 
[#270]

அத்தியாயம்-27

ருத்ரன் அவன் சொன்ன வார்த்தையிலிருந்து மெதுவாக தன் இடது கையை தடவினான். 

அங்கே லேசான தழும்பு வேறு அவனுக்கு எதையோ உணர்த்தியது. 

"எனக்கு தெரிந்து சத்ரியன் உயிரோட இருக்கானா இல்லையானு தெரியாம தான் ஷ்ரத்தா ஒரு குருட்டு நம்பிக்கையில நடமாடறா. அதர்வைஸ்... அவளுக்கும் சத்ரியனை பத்தி ஒன்னும் தெரியாதுனு தான் நினைக்கறேன்" என்றான் ருத்ரன்.‌

யதுநந்தனோ ''அப்ப என்ன தான் வழி? சத்ரியன் இறந்திருந்தா ஷ்ரத்தாவை விரும்பி அவளை மறுமணத்துக்கு ஓகே சொல்ல வைக்கறதுல நியாயம் இருக்கு. ஒரு வேளை சத்ரியன் உயிரோட இருந்தா, நான் அவளிடம் காதலை சொன்னது தப்பாச்சே. நான்னு இல்ல.. நீ இப்படி அவளை காதலிக்கறேன்னு தொந்தரவு பண்ணறது அதைவிட பெரிய தப்பு" என்றான். 

ருத்ரனோ அங்கிருந்த உணவை ருசித்து பருகி, ஸ்ட்ராவால் கலக்கி, "தப்பு தான்... ஆனா நான் என் வழில பின்வாங்க மாட்டேன். தொந்தரவு தொடர்ந்து கொடுத்துட்டு தான் இருப்பேன். 

சத்ரியன் உயிரோட இல்லைன்னா நான் ராயனுக்கு அப்பாவா, ஷ்ரத்தாவுக்கு கணவனா மாற எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை. 

சப்போஸ்....

   சத்ரியன் உயிரோட வந்தா... இந்த தடவை அவன் தப்பிக்க மாட்டான். சட்டமும்... என் துப்பாக்கியும்... இரண்டுல ஏதாவது ஒண்ணு அவனை முடிக்கும்." என்று பெருமை பேச முயன்றான்.‌

யதுநந்தனோ "அவ சத்ரியன் உயிரோட இல்லைன்னா அவ யாரை வேண்டுமென்றாலும்‌ மறுமணம் செய்வா. அது நீ தான்னு இல்லை. நானா கூட இருக்கலாம். ஏன்னா.. அவ அப்பா அவளுக்கு தோதானவனா பார்த்து வைத்தது என்னை‌.

சப்போஸ்... சத்ரியன் உயிரோட இருந்து நீ போட்டு தள்ளுவனு பிதற்றி ஏதாவது செய்தா அவ உன்னை கொல்ல தயங்க மாட்டா. லூசு மாதிரி உன்னை கல்யாணம் செய்வானு சொல்லற. அதெப்படி போலீஸா இருந்து முட்டாளா யோசிக்கற" என்றான்.‌ முதலில் சத்ரியன் இருந்தாலும் இல்லையென்றால் அவள் யாரையும் கிட்டவே நெருங்க விடுவாளா என்ற கேள்வியை இருவரும் சிந்திகாமல் பேசினார்கள். 

ருத்ரனோ "ஏன் இதுல என்ன தப்பு? எங்கப்பாவை கொன்றது சத்ரியன் அதுல எந்த சந்தேகமும் இல்லை. அப்படியிருக்க சத்ரியனோட பையனை நான் மகனா ஏற்க தயங்கலையே. அது போல ஷ்ரத்தா ஒரு‌நாள் என் அப்பா இறப்புக்கு தான் சத்ரியன் இறப்புனு தெரிந்தா, என்னோட ட்ரூ லவ்வை அக்சப்ட் பண்ணுவா. அவ பண்ணாட்டியும் ராயனை வச்சி காய் நகர்த்துவேன்." என்றான் இறுமாப்புடன். 

யதுநந்தனோ "நீ ராயன் மேல உண்மையான பாசத்துல அன்பு செலுத்தலை. நீ ஜெயிக்க அவனை ட்ரம் கார்டா யூஸ் பண்ண பார்க்கற‌" என்றதும் யதுநந்தன் சட்டையை கொத்தாக பிடித்தான் ருத்ரன். 

"நான் ராயன் மேல வச்சியிருக்கறது உண்மையான பாசம் தான். என் பாசத்தை தராசு தட்டுல வச்சி எடைப்போடறியா? பெரிய நீதிமான்.. வக்கில்னு இஷ்டத்துக்கு பேசாத. ஏற்கனவே நீ என்னை அறைஞ்சதுக்கு என்னைக்காவது அடிவாங்குவ. ஆனா அது உடனே அமையணும்னா என்னை என் அன்பை குறை சொல்லி வாங்கிக்காத." என்று சட்டையை விடுவிக்க, யதுநந்தன் சுற்றிமுற்றி பார்த்து, 'இப்பவும் சொல்லறேன். உன் பாசத்துல அக்கறையை விட அகங்காரம் இருக்கு. 

நான் ஷ்ரத்தாவை தொந்தரவு செய்ய மாட்டேன். ஆனா அவளை நேசிக்கறேன். சில குழப்பம் தீர்க்க வேற வழி வேண்டுமின்னா யூஸ் பண்ணுவேன்." என்றவன் "எனிவே.. உன்னோட பேசினா குழப்பம் குறையும்னு நினைச்சேன். ஆனா குழப்பம் அப்படியே தான் இருக்கு.. என்னோட நட்பு தேவைப்பட்டா சொல்லு.. உன் பிசி ஷட்யூல்ல நேரத்தை விரையம் செய்திருந்தா சாரி." என்றவன் கிளம்பும் தோரணையில் எழுந்திருக்க, "சாரி அக்சப்டட்... இதே போல என்னை அன்னிக்கு சட்டையை பிடிச்சதுக்கும் ஒரு சாரி வந்தா பெட்டர்." என்றான் ருத்ரன்.

  யதுநந்தன் மறுப்பாக "அன்னிக்கு நீ தப்பு செய்த ருத்ரன். ஷ்ரத்தாவை டிஸ்டர்ப் பண்ணியது எனக்கு பிடிக்கலை. ஷ்ரத்தா மட்டும் என்னை விரும்பின பிறகு நீ டிஸ்டர்ப் பண்ணி பாரு. அகைன் அடிச்சி துவைப்பேன். 

   உனக்கு டிரைனிங் பீரியட்ல சில தற்காப்பை சொல்லி தந்திருக்கலாம். பட் வக்கீல் ஆல்வேஸ் ஸ்டூடண்டா இருக்கறப்பவே அடி உதையை தெரிந்து வச்சிட்டு தான் படிக்க வருவாங்க. அமைதியா இருப்பதால அதெல்லாம் வராதுனு அர்த்தமில்லை‌. இப்ப கொஞ்சம் மெச்சூர்டா இருக்கணுமேனு அமைதியா அணுகறேன்" என்று கூற ருத்ரனோ "இஸிட்" என்று நக்கலாய் உரைத்தான். 

"பை" என்று பல்லை கடித்து யதுந்நதன் புறப்பட, ஆற அமர ருத்ரன் ஆர்டர் செய்தவையை நிதானமாக பருகி முடித்து, எழுந்தவன் மனசாட்சியோ 'ஷ்ரத்தா கர்ப்பமா இருந்தப்ப அவளை நான் எதச்சயமா தள்ளி விட்ட அன்னிக்கு, எனக்கு ஒரு விபத்து நேர்ந்தது. அதுல என் இடது கையை கட்டுப்போட்டு சில நாட்கள் ரெஸ்ட்ல இருக்கற நிலைமை வந்துடுச்சு. 

  சத்ரியன் உயிரோட இருந்தா... நான் ஷ்ரத்தாவை தள்ளி விட்டதுக்கு என்னை தண்டிச்சதா அந்த விபத்து அமைந்திருக்குமோ?. சப்போஸ்..‌ சத்ரியன் உயிரோட இருந்தா... இப்பவும்... நான் காதலிக்கறேன் ஷ்ரத்தாவை பண்ணற தொந்தரவுல அந்த சத்ரியனே வெளிவருவான். 

       கண்டிப்பா வெளிவருவான்.' என்று எண்ணம் கொண்டவனாக ருத்ரன் இருந்தான். 

  அப்படி சத்ரியன் வரலைன்னா... வரலைன்னா.. ஷ்ரத்தா... எனக்குரியவளா நான் ஏத்துப்பேன்.' என்று முடிவெடுத்தவனாக எழுந்து சென்றான். யதுநந்தன் ஏற்கனவே ஆர்டர் செய்தவைக்கு பணத்தை தந்துவிட்டு சென்றியிருக்க மெதுவாக யோசித்தபடியே நடந்தான். 

  அன்னிக்கு விபத்து நடத்தியவன் ஐடீயில வேலை செய்ததா ஐடி காட்டினான். நான் இருந்த நிலையில அதை ஒழுங்கா பார்த்து தொலையலை. சப்போஸ் அந்த ஐடீல வேலை பார்க்கறவன் யாருனு தெரிந்தாலாவது இந்த சந்தேகத்தை நிவர்த்தி பண்ணிருப்பேன்' என்றபடி பைக்கில் வீட்டிற்கு சென்றான். 

  இங்கு ஷ்ரத்தாவோ ஹரிணி வராத நிலையில் அவளை சந்திக்க நினைத்து அவளை அணுக நினைக்க, அதற்கு சாதகமாக, சிங்கப்பூரிலிருந்து ஹரிணியை பற்றி கால் வந்து சேர்ந்தது. 

      கல்லூரியிலிருந்து வந்தவள் அந்த போன் காலில் ஆடிப்போனாள். 

  ஏனெனில் ஹரிணி அவள் வீட்டில் பாத்டப்பில் இறந்து கிடப்பதாக அந்தவூர் போலீஸ் அழைத்து தகவல் தெரிவித்திருந்தனர். ஹரிணியின் உறவு நண்பர்கள் பட்டியலில் உறவென  ஷ்ரத்தா இருக்க இந்த தகவல் அவளை வந்தடைந்தது. 

ஷ்ரத்தாவுக்கு உலகம் தலைகீழாக இயங்கியது போல தோன்றியது. 

   சிங்கப்பூர் போலீஸ் கூறிய செய்தியை கேட்டு இடிந்துப் போனவள், செய்வதறியாது தடுமாறினாள்.

தீபாவிடம் சிங்கப்பூர் போகணும் ஹரிணி இறந்துட்டா.' என்று கூற, அதற்கான ஏற்பாடு கவனிக்க சென்றாள். 

  அந்த நேரம் யதுநந்தன் அவசரமாக வந்து "ஷ்ரத்தாவை பார்க்கணும். ஹரிணி விஷயமா" என்றதும், நந்திதா விஷயத்தை கூற, ஷ்ரத்தாவே வரக்கூறினாள். 

  யதுநந்தன் வந்தவுடன் அமர வைக்க, "ஹரிணி இறந்துட்டதா நியூஸ் வந்துச்சு. உன்னிடம் நேர்ல சொல்ல வந்தேன். நீ ஜெயில்ல இருந்தப்ப, அடிக்கடி நான் கால் பண்ணியதால் அந்தவூர் போலீஸ் என்னிடமும் தகவல் சொல்லியிருந்தாங்க. இப்ப என்ன ஐடியால இருக்க ஷ்ரத்தா" என்றான்.‌

  ஷ்ரத்தாவோ "நான் சிங்கப்பூர் போகணும் யதுசார்" என்றாள். அதே மரியாதை கொடுத்து தான் பேசினாள். என்னயிருந்தாலும் அவளை விட பெரியவன், பொறுப்பான துறை, பொறுப்பான பேச்சு என்று தான் இப்பொழுது வரை இருக்கின்றான்.

யதுநந்தன் தயக்கத்துடன், "உனக்கு அப்ஜெக்ஷன் இல்லைன்னா நானும் உன்கூட வரலாமா? ஒரு சப்போர்டுக்கு" என்று கேட்டான். 

  ஷ்ரத்தாவும் தனக்கு இந்த நேரம் துணையாக யதுநந்தன் சாரையே அழைத்து செல்ல தோன்றியது. அதனால் ஆமோதிப்பதாக தலையாட்டினாள். 

    "தேங்க்ஸ்" என்றவன் அதற்கான ஆயத்தங்களை செய்ய சென்றான். 

  ஷ்ரத்தா தான் துவண்டவளாக உடைந்தாள். 

     இத்தனை நாள் சத்ரியன் கூடயிருந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களாக சிலரை வைத்திருக்க, வினோத் அண்ணா தன் வளைகாப்பு முதல் இல்லை. ஹரிணி இதோ இன்று அவளும் உலகத்தில் உயிரோடு இல்லை. இனி தனக்காக யார் உண்டு? தன் அக்கறையில் யார் இருக்கின்றார்? ஏன் இப்படி வினோத் அண்ணாவும் ஹரிணியும் இல்லாமல் போனார்கள் என்று கவலையில் ஆழ்ந்தாள். 

  அந்த கவலையில் விமான நிலையத்தில் ஷ்ரத்தா யதுநந்நதன் ராயன் மூவர் மட்டும் புறப்படுவதாக கூறினார்கள். அவளுக்கும் ராயனுக்கு கூட சிறையிலிருந்து வெளிவந்ததும் பாஸ்போர்ட் விசா என்று அந்த வேலையை முடித்திருந்தாள். 

  தீபா நந்திதா லட்சுமி மூவரும் தயக்கத்துடன் தான் வழியனுப்பி வைத்திருந்தனர். 

யதுநந்தனுக்கு அந்த மூவர் வராததே நிம்மதியானது. இதில் ராயனை மடியில் வைத்து, பக்கத்தில் வைத்து கையை பிடித்துக் கொண்டு யதுநந்தன் சந்தோஷம் அடைந்தான் எனலாம். 

    பின்னே... ருத்ரன் எல்லாம் ராயனுடன் பழகியிருக்க, தான் எல்லாம் ராயனிடம் தெரிந்தவர் என்ற ரீதியில் அல்லவா அறிமுகமாகி இருப்பதே கஷ்டமாக நினைத்தான்‌ இன்று ராயன் கூடவே வரவும் ஆறுதலாக இருந்தது. 

     யதுநந்தனுக்கு தான் ஷ்ரத்தாவுக்கு எந்தவிதமான ஆறுதல் தேறுதல் எதை சொல்லி தேற்ற என்று புரியாமல் அடிக்கடி அவளையே பார்வையிட்டான். 

   ஷ்ரத்தாவுக்கு மனதில் பாரம் ஏறிய உணர்வுடன் யதுநந்தன் அருகே தான் அமர்ந்திருந்தாள். 

இதே வேறொரு சாதாரணமான பயணமாக இருந்தால் ஷ்ரத்தா அனுமதியோடு ஒரு செல்ஃபி புகைப்படம் ராயனுடன் எடுத்து சந்தோஷப்பட்டிருப்பான். 

  ஆனால் ஒரு மரணத்தை காண செல்வதால் அடக்கி கொண்டான். 

   ஷ்ரத்தா சிங்கப்பூரை அடைந்து ஹரிணி இருக்கும் இடத்திற்கு சென்றாள். அங்கே பலவிதமான பெயிண்டிங் தான் எங்கும் திரும்பினாலும் வீட்டை அடைத்திருந்தது.

   வீட்டில் சில இடத்தில் கைரேகை தேடி, ஆங்காங்கே போலீஸ் தேடுதலில் இருந்தனர். 

பாத்டப்பில் இருந்து,  போஸ்ட்மார்ட்டம் செய்ய பாடியும் சென்றிருக்க, கால் தடுக்கி விழுந்து பாத்டப்பில் நீரில் விழுந்து மரணம் நிகழ்ந்ததாக எழுதப்பட்டது. 

   ஷ்ரத்தா அங்கு சேரவும், அப்படி தான் அவளிடம் சொல்லப்பட்டது. 

   இறுதி காரியம் ஷ்ரத்தா முன்னிலையில் நிகழ்த்திட சிங்கப்பூர் காவலதிகாரி கேட்க சம்மதித்து விட்டாள்.  அதனால் மின்சார தகனமேடையில் கடைசியாக ஹரிணி முகம் பார்த்தாள். 

   லேசாக கண்ணீர் வழிய தள்ளாடினாள். யதுநந்தன் உடனடியாக ராயனை தூக்கி வைத்திருக்க, அவளையும் தாங்கினான்‌. 

யதுநந்தன் நெஞ்சில் சாய்ந்தவளோ கொஞ்சம் கொஞ்சமாய் மயங்கி சரிய ஆரம்பித்திட, "ஷ்ரத்தா... ஷ்ர்ததா.." என்று அவளை காத்திட, ராயனை இறக்கிவிட்டு ஷ்ரத்தாவல முழுமையாக தாங்கிடவும் ஷ்ரத்தா சரியாக தரையில் சரியவும் சரியாக இருந்தது. 

அங்கிருந்த காவலதிகாரி சிலரும், உடனடியாக ஹாஸ்பிடலுக்கு கால் செய்தனர்.‌

  யதுநந்தன் தான் அவளை அள்ளி ஸ்டக்சரில் படுக்க வைத்தான். 

  அவளோடு செல்லும் நேரம் ராயன் வேறு பயத்தில் அழவும், "ராயன் அம்மாவுக்கு ஒன்னுமில்லை. ஜஸ்ட் சாப்பிடாம மயங்கிட்டாங்க. ராயன் அழாம இருக்கணும். ஹாஸ்பிடல் போனதும் அம்மா கண் திறந்துடுவாங்க" என்று அரவணைத்து கூற ராயனும் சற்று அமைதியானான் எனலாம். 

   யதுநந்தனோ ஷ்ரத்தா கண் திறக்க அவளருகே காத்திருந்தான்.‌ 

-தொடரும். 

-பிரவீணா தங்கராஜ்.‌

 

 

 

 


 
Posted : August 6, 2026 7:04 am
(@kalidevi)
Posts: 140
Estimable Member
 

Intha ruthranukunarive illa yen tha ippadi irukano , yathu sonna mari police moolaiya vachi yosichalum muttala tha yosikiran innoru pakam chathriyan irukanantherinjika shradha va tholla panni veliya vara vaika poranam apo ithula enga love Iruku 


 
Posted : August 6, 2026 8:08 am
(@kothaihari)
Posts: 125
Estimable Member
 

ருத்ரன் பண்ணறது தவறு ... அதற்கான தண்டனை கண்டிப்பாக கிடைக்கனும்


 
Posted : August 6, 2026 8:56 am
(@guna-sundari)
Posts: 138
Estimable Member
 

Ruthran u calculations never be correct. What happened to sharadha? Very intresting sis.


 
Posted : August 6, 2026 9:41 am
(@crvs2797)
Posts: 188
Estimable Member
 

தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 26)

அடேய்.....  கூறுகெட்ட கூமுட்டைங்களா.....! ஷ்ரத்தா மனசுல என்ன இருக்கு, யார் இருக்காங்கன்னு தெரிஞ்சும்
இந்த சண்டை உங்களுக்குள்ள தேவையா ?

அது சரி, இந்த ஹரிணியை யார் போட்டுத் தள்ளியிருப்பாங்க..?
இதுல பாத்டப்ல கால் தடுக்கி விழுந்து செத்துட்டான்னு நம்பவே முடியாத காரணம் வேற...? வினோத் வேற உயிரோட இருக்கிறானா, இல்லையான்னே தெரியலை ? இந்த தொடர் கொலைக்கெல்லாம் யார் காரணம்ன்னும் தெரியலை, எந்த கேங் பின்னாடி இருக்குன்னும்
தெரியலை.

😊😊😊
CRVS (or) CRVS 2797


 
Posted : August 6, 2026 9:52 am
(@subhakumar85)
Posts: 112
Estimable Member
 

Police Karan tomba over ah poraan


 
Posted : August 6, 2026 11:34 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 126
Estimable Member
 

Yadhu Rudhran rendu perumae Shardha manasu ah purinchikama pesunalum alteast yadhu oda love ah respect panna va chum thonuthu aana indha rudhran oda pechu ah ketta namakae kollanum.nu than thonuthu Chathriyan uyir oda irundhalum sattam thupaki yum avan kita iruku nu over ah pesuran adei ne sollura rendumae avan ah control pannathu da and ivan Shardha ah va enna nu nenacha ava nenaika ma nega ava life la enter aaga mudiyathu da .

Enna da ithu Harini erandhu poita first vinoth ah kidnapp pannaga avanuku enna aachi nu ippo varaikum ippo Harini oda death accident mathiri than iruku unmai ah vae accident ah illa yarachum plan panni murder panni irukaga la 


 
Posted : August 6, 2026 1:37 pm
(@karthi1206)
Posts: 69
Trusted Member
 

Sema sema interesting epi 


 
Posted : August 24, 2026 8:20 am

Scroll to Top