Forum

குலாப் ஜாமூன்
 
Notifications
Clear all

குலாப் ஜாமூன்

1 Posts
1 Users
0 Reactions
34 Views
(@praveena-thangaraj)
Posts: 178
Member Admin
Topic starter
 
[#184]

குலாப் ஜாமுன் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

ஜாமுன் ரெடிமேட் மிக்ஸ்ட் பேக்கெட்-1

நெய் – 2 டேபிள்ஸ்பூன்

பால் – ¼ முதல் ⅓ கப் (தேவைக்கேற்ப)

எண்ணெய் அல்லது நெய் – பொரிக்க

 தேவையான அளவு

சர்க்கரை பாகுக்கு

சர்க்கரை – 2 கப்

தண்ணீர் – 2 கப்

ஏலக்காய் – 4 (பொடித்தது)

எலுமிச்சைச் சாறு – ½ டீஸ்பூன்

ரோஸ் எசன்ஸ் – 2–3 துளிகள் (விருப்பமிருந்தால் ம்டடுமே)

செய்முறை

சர்க்கரை பாகு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

சர்க்கரை கரைந்ததும் ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ளவும். 

அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து 5–7 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். 

அடுப்பை அணைத்து ரோஸ் எசன்ஸ் சேர்த்து சூடாக வைத்துக் கொள்ளவும்.

குலாப் ஜாமுன் பேக்கெட்டை பிரித்து, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு பால், நெய் சேர்த்து கைகளால் நன்றாக பிசறவும்.

சிறிது சிறிதாக பால் சேர்த்து மென்மையான மாவாக பிசையவும்.

மாவை 10 நிமிடங்கள் மூடி ஓய்வெடுக்க விடவும். பிறகு சிறிய உருண்டைகளாக விரிசல் இல்லாமல் உருட்டி வைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெயை மிதமான சூட்டில் காயவைத்து, உருண்டைகளை பொன்னிறமாகும் வரை மெதுவாக பொரித்து எடுக்கவும்.

பொரித்த ஜாமுன்களை உடனே சூடான சர்க்கரை பாகில் போட்டு 2–3 மணி நேரம் ஊறவிட்டால் குலோப்ஜாமூன் ரெடி. 

குலாப் ஜாமுனை சூடாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறலாம். மேலே பாதாம், பிஸ்தா துருவல் தூவி அலங்கரித்தால் மேலும் சுவையாக இருக்கும்


 
Posted : July 17, 2026 1:51 pm

Scroll to Top