உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன்-20
உதயம் 💏 20 💏
ஆதித்யாவின் 'தி' என்ற அலறல் மட்டும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. நான் கண்களை திறக்க முயற்சி செய்தேன்.
மங்கலான நிழல் உருவம் மட்டும் என் கண்களுக்குத் தெரிய என்னால் கண்களை முழுவதுமாக திறக்க முடியவில்லை.
முயற்சி செய்து களைத்துவிட மீண்டும் கண்களை மூடிக் கொண்டேன்.
"மிஸஸ். ஆதித்யா.... மிஸஸ் ஆதித்யா..." என யாரோ என் கன்னங்களை தட்டுவதை என்னால் உணர முடிந்தது. ஆனால் அவர்களுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை. எனக்கு மயக்கம் வந்தது.
கதவு திறக்கும் சத்தம் கேட்க,
" மிஸ்டர் ஆதித்ய குமார், நீங்க இங்கயே வெயிட் பண்ணுங்க. "என கூறும் குரல் கேட்டது.
அனேகமாக என்னை ஐசியு அறைக்குள் எடுத்துச் சென்றிருக்க வேண்டும்.
மருத்துவர்கள் செவிலியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துக் கொண்டே என் காயங்களை ஆராய்ந்தார்.
அனேகமாக தையல் இட்டுக்கொண்டு இருக்க வேண்டும் ஏனென்றால் அந்த வலியை என்னால் உணர முடிந்தது.
ஏதேதோ வயர்கள் என்னை சுற்றி இருக்க, மூக்கிலோ வென்டிலேட்டர் பொருத்தப்பட்டிருந்தது.
வென்டிலேட்டர் மூலம் நான் சீரான மூச்சை சுவாசித்தாலும் என் இதயத்தின் துடிப்பு குறைந்து கொண்டே சென்றதை மருத்துவரும் உணர்ந்தாரோ என்னவோ என்னை விட்டு நகர்ந்து வெளியேறினார்.
அனேகமாக கதவு திறந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில் மருத்துவரின் சத்தம் என் காதுகளில் விழுந்தது.
"சாரி மிஸ்டர் ஆதித்யா காயம் அவ்ளோ ஆழம் இல்ல. இதயத்துக்கு ரொம்ப பக்கமா இருந்தாலும் இதயத்துக்கு எதுவும் ஆகல. ட்ரெஸ்ஸிங் பண்ணியாச்சு.
ஆனா அவங்களோட ஹார்ட் பீட் குறைஞ்சிக்கிட்டே போகுது.
அவங்களும் நம்பிக்கை இல்லாத மாதிரி தெரியுது. அவங்க நம்பிக்கையோட இருந்தால்தான் எங்களால காப்பாற்ற முடியும். அவங்க நம்பிக்கை இல்லாட்டி எங்களால எதுவும் பண்ண முடியாது.
அவங்க பேரண்ட்ஸ் கிட்ட சொல்லிருங்க."
" என் தி என்னை விட்டுட்டு எல்லாம் போக மாட்டா டாக்டர். சி லவ்ஸ் மீ லாட்."
"ஆனா அவங்கலுக்கு வாழனும்னு ஆசை இருக்கிற மாதிரி தெரியல மிஸ்டர் ஆதித்யா."
"ஒரு தடவ அவ கூட பேசலாமா?"
"தாராளமா பேசுங்க. அவங்க உங்களுக்கு எவ்வளவு முக்கியம்னு புரிய வையுங்க. அவங்க எல்லாத்தையும் கேட்டுட்டு தான் இருப்பாங்க."
" அவளுக்கு தெரியும் அவ இல்லாம நான் இருக்க மாட்டேன்னு. நான் பேசுறேன்."
"சரி முயற்சி பண்ணி பாருங்க."
அதற்குப் பிறகு எந்த சத்தமும் இல்லை.
ஆதி என் கையை தொட்டான். அவன் ஸ்பரிசத்தை என்னால் உணர முடிந்தது. என் கையை அவன் உள்ளங்கையில் வைத்து என் பக்கத்தில் அமர்ந்தான்.
" தி ப்ளீஸ்டி என்கிட்ட வந்ததுரு. நான் அவ கிட்ட சொன்னது எல்லாம் சும்மாதான்.
நான் நிஜமாவே உன்னை தான் லவ் பண்றேன்.உன்னை மட்டும் தான் லவ் பண்றேன்.
உன்னை காப்பாற்ற மட்டும்தான் நான் அப்படி சொன்னேன்.
ப்ளீஸ்டி வந்துரு." என அவன் என்னிடம் கூற எனக்கு குழப்பங்கள் கூடியது.
என்னை காப்பாற்ற ஆதித்யா கூறுகிறான் என்றால் என் கையில் விழுந்த அவனுடைய கண்ணீர் எப்படி பொய்யாகும்.
"உனக்கு ஒன்னு தெரியுமா? உன்னை நான் எப்போ மீட் பண்ணுனேன் தெரியுமா?
உன்னோட காலேஜ்ல தான் பர்ஸ்ட் பார்த்தேன். உனக்கு கண்டிப்பா இது தெரிஞ்சுருக்காது தானே."
"சார் ஹார்ட் பீட் இன்கீரீஸ் ஆகுது. அப்படியே பேசிட்டே இருங்க. நான் போய் டாக்டரை கூட்டிட்டு வர்றேன்."
"தி நான் பேசுறது நீ கேக்குற தானே ப்ளீஸ் தி ஓபன் யுவர் ஐஸ்."
நாங்க செய்தும் என்னால் கண்களையே திறக்க முடியவில்லை.
"ஓகே பைன். இப்படியெல்லாம் நீ கண்ணை திறக்க மாட்டேல. சரி உன்கிட்ட நான் எல்லாத்தையும் சொல்றேன்.
அன்னக்கி நீ என்னை இடிச்சுட்டு சாரி ன்னு சொல்லிட்டு என் மூஞ்சிய கூட பார்க்காம போயிட்ட.
ஆனா நான் உன்னையே தான் பார்த்தேன். நான் உன்னை பார்த்ததை ஸ்வேதா கூட பார்த்துட்டு என் கிட்ட சண்டை போட்டா.
ஆமா அப்போ நான் ஸ்வேதாவ பார்க்க தான் காலேஜ் வந்தேன். உன்ன பார்த்தேன்.
அந்த டைம் ஸ்வேதாவை லவ் பண்ணிக்கிட்டு இருந்தேன். ஆனா ஏன்னு தெரியல அந்த டைம் உன்னைய பார்க்கணும்னு தோணுச்சு.
அந்த ஒரு நாள்தான். அதுக்கப்புறம் நான் உன்னை மறந்துட்டேன்.
அதுக்கப்புறம் லைஃப்ல என்னென்மோ நடந்து போச்சு.
ஸ்வேதா இறந்துட்டான்னு சொன்னாங்க. நான் ரொம்ப உடைச்சிட்டேன். ரொம்ப இறுகி போயிட்டேன். யாரயுமே பார்க்க பிடிக்கல.
அப்பதான் எனக்கு ஒரு கனவு வந்தது. நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். நமக்கு குழந்தைங்க இருக்குற மாதிரியும் அவங்ககூட ரொம்ப ஹாப்பியா இருக்க மாதிரியும் கனவு கண்டேன். " என்றவன் அழும் குரல் கேட்டது. அவனுக்கு ஆறுதல் கூற கூட என்னால் முடியவில்லை. என் கைகளை அசைக்க முயற்சித்தேன் ஆனால் பலனில்லை. அவனை சமாளித்து மீண்டும் பேச ஆரம்பித்தான்.
ஸ்வேதா எடத்துல நீ எப்படி வரலாமான்னு நான் ரொம்ப குழம்பிட்டேன். நான் ஸ்வேதாவை காதலித்தது உண்மை. கனவுல கூட அவளுக்கு துரோகம் பண்ண கூடாதுன்னு என்னோட கனவை கூட நிராகரிச்சேன்.
கொஞ்ச நாள் முயற்சி பண்ணி கனவு வராமல் பார்த்துக்குட்டேன்.
நீ என்ன மால்ல மீட் பண்றதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே நான் உன்னை திரும்ப மீட் பண்ணினேன். கிட்டத்தட்ட 5 வருஷம் கழிச்சு உன்னை நேர்ல பார்த்தேன்.
நீ என்னை பாக்கல. உன்னை பார்த்ததுக்கு அப்புறம் உன்கிட்ட இருந்து கண்ணை எடுக்கவே முடியல.
நீ போனதுக்கு அப்புறம் தான் என்னையே உணர்ந்தேன். நான் எப்படி உன்னை இப்படி பார்க்கலாம்.என் காதல் ஸ்வேதாவுக்கு மட்டும் தான். அப்படின்னு என்று நினைச்சுகுட்டு வீட்டுக்கு போயிட்டேன்.
ஆனால் ஸ்வேதாவோட ஞாபகத்தை விட உன்னோட ஞாபகம் மட்டும்தான் அந்த மூணு வருஷமா என்னை சுத்திட்டு இருந்தது.
உன்னை பார்த்ததுக்கு அப்புறம் அது ரொம்ப அதிகமா ஆயிடுச்சு.
என் கனவுல வரக்கூடாது நான் உன்னை நினைக்க கூடாதுன்னு எல்லா முயற்சியும் பண்ணுனேன்.ஆனா என்னால முடியல.
அதுக்கப்புறம் ஒரு நாள் உன்னை நான் மால்க்கு வெளிய நிக்குறத பார்த்தேன். உன்ன பாத்ததும் மீட்டிங்க மால்க்கு மாத்திட்டேன்.
அங்கே உட்கார்ந்து யோசிக்கும் போதுதான் தெரிந்தது. நான் எப்படி உன்னை பாக்கறதுக்காக மீட்டிங்க கூட ஒரு பப்ளிக் ப்ளேஸ்ல மாத்தலாம்ன்னு நினைச்சுட்டு அங்கிருந்து எழுந்து போகும்போதுதான் நீ என்னை மறுபடியும் வந்து இடிச்ச.
அப்போ கூட நான் உன்னை சைட் அடிச்சிட்டு தான் இருந்தேன். நீ சாரி சொன்னதுக்கு அப்புறம் தான் நான் என்னோட உணர்வுக்கு வந்தேன். நீ எப்படி என் மனசுல ஸ்வேதா இடத்த எடுத்துக்கலாம்ன்னு. என்னோட கையாலாகாத தனத்தை தான் உன்கிட்ட கோவமா நான் காட்டுனேன்.
அப்போ நீ புலம்பிகிட்டு போனத கூட அங்க நின்னு நான் ரசிச்சேன்.
அப்பா அம்மா என்ன ரொம்ப கல்யாணம் பண்ணிக்கோன்னு வற்புறுத்தினாங்க.
எனக்கு ஸ்வேதாவை தவிர வேறு யாரையும் கல்யாணம் பண்றது இஷ்டமா இல்லாம இருந்தது.
இதுல நீ வேற கனவுல வந்து வந்து போனியா. சரி உன்ன கல்யாணம் பண்ணா தான் பிராப்ளம் மனசு தடுமாறும். அதுக்கு முன்னாடி மேரேஜ் பண்ணிக்கிட்டா கூட எப்படியாவது வாழ்க்கையே ஓட்டிடலாம்ன்னு தான் நினைச்சேன்.
என்னோட வாழ்க்கைல என்னைக்கும் காதல் அப்படின்னு ஒன்னு இனிமே கிடையாது அப்படின்னு நினைச்சேன்.
ஆனால் திரும்ப உன் முன்னாடி கொண்டு வந்து விதி நிப்பாட்டும்னு நினைக்க கூட இல்லை.
அன்னக்கி பொண்ணு பார்க்கும் போது வெட்கப்பட்டு பேசினியா. முடியல. அன்னக்கியே நான் காலி.
நீ பேசுற அழக ரசிக்கும் போது என்ன பிடிக்கலன்னு நீ சொன்னியா அது மைண்ட்ல ஏறிடுச்சு.
உனக்கு என்ன புடிக்கல அப்படின்னு சொன்னத என்னால தாங்கிக்க முடியல.
அதனால தான் உன் மேல கோவப்பட்டேன்.
அதுக்கு அப்புறம் தான் நான் ஏன் இப்படி கோவப்படுறேன்னு புரிஞ்சுகிட்டேன். உனக்கு என்ன பிடிக்கனாம்னு நினைச்சேன்.
நமக்கு கல்யாணம் ஆயிட்டா,நீ எனக்குள்ள உரிமையா வந்துவன்னு பயந்தேன்.
அதனால் தான் உன்ன கல்யாணத்தை நிப்பாட்ட சொன்னேன்.
அடுத்து நான் உன்ன கடைல பார்த்தேன்.
நான் உள்ளே நுழையும் போதே பிளாக் சாரிய உன் தோள் மேல வச்சு நீ அழகு பார்க்க அங்கேயே நின்னுட்டேன்.
உண்மைய சொல்லனும்னா நீ அந்த சாரியை போட்டதுக்கு அப்புறம் தான் அந்த சாரிக்கே அழகு வந்தது.
அந்த பாட்டி கோபமா உன்கிட்ட பேசுனதும் உன் முகம் வாடுச்சு. எனக்கு ஒரு மாதிரி இருந்தது கஷ்டமா போயிருச்சு.
அதுக்கு அப்புறம் நான் அந்த சாரிக்கு பில் பே பண்ணிட்டு தான் உன்கிட்டேயே வந்தேன்.
அன்னைக்கு என்னால கண்ட்ரோல் பண்ண முடியலை. அன்னைக்கு நான் உன்னை கிஸ் பண்ண தான் உன்கிட்ட வந்தேன்.
அதுக்கப்புறம் நீ உன் முட்ட கண்ண வச்சு முழிச்சு யா அதுல சுதாரிச்சு அதுக்கப்புறம் தான் நான் என்ன பண்ண பார்ததேன்னு உணர்ந்தேன்.
மெதுவா பழிய ஃபுல்லா உன் மேல போட்டு சீன் கிரியேட் பண்ணேன்.
உன்னை வம்புக்கு இழுத்தேன்.
அதுக்கப்புறம் நான் உன்ன பாக்கணும்னு எவ்ளவோ ட்ரை பண்ணேன். ஆனா என்னால முடியல.
அதுக்கு அப்புறம் நம்ம என்கேஜ்மென்ட்ல மீட் பண்ணனுனோம்.
ஏன்னு தெரியல என்கேஜ்மென்ட் பத்திரிக்கையை வாசிக்கும்போது எனக்குள்ள ஒரு பயம் ஸ்வேதா அப்போ என்னோட மனசுல இருந்தா.
எப்படி அவளை மறந்துட்டு உனக்கான வாழ்க்கையை என்னால் கொடுக்க முடியும்னு எனக்கு தெரியல.
ஸ்வேதாவை மறக்க முடியுமா தெரியல.
எப்படி ஒருத்தரால ரெண்டு பேர காதலிக்க முடியும்ன்னு.அதனாலதான் என்கேஷ்மெண்ட் அப்பவும் மேரேஜ நிறுத்த நான் கேட்டேன். ஆனா மனசுக்குள்ள நீ நிறுத்த கூடாது அப்படின்னு தான் எனக்கு தோணுச்சு.
நம்ம மேரேஜ் அப்போ நீ அழுததை என்னால தாங்கிக்க முடியல. உன்ன ஹக் பண்ணி உனக்கு ஆறுதல் சொல்லனும்னு தோணுச்சு. ஆனா எங்க நீ தப்பா எடுத்துப்பயோன்னு பயம்.
உன் அழுகையை நிப்பாட்டதான் காரிலிருந்து இறக்கி நடுரோட்டில் நிற்க வெச்சேன். அதுக்கப்புறம் நீ வண்டில அழல.
வீட்டுக்கு வந்துகுட்டு இருக்கும் பொழுது நான் சுவேதாவோட அண்ணன பார்த்தேன்.
அவன் என்னை பார்த்துக்கிட்டே போனான். கார் வேற பூவால அலங்காரம் பண்ணி இருந்தாங்க.
அவன் என்னை பத்தி என்ன நினைச்சுருப்பான்னு எனக்கு தெரியல. அது வேற மனசை போட்டு உறுத்திக்கிட்டே இருந்தது. அதனால தான் தலைவலின்னு நான் போயிட்டேன்.
அன்னைக்கு புல்லா என் மைண்ட்ல ஸ்வேதாவோட அண்ணா என்னை பத்தி என்ன நினைப்பாங்க வந்திட்டே இருந்தது.
அதை யோசிட்டு இருக்கும் போதுதான் நீ ரூமுக்குள்ளே இருப்பான்னு நினைக்காமலே நான் உள்ள வந்துட்டேன்.
பூக்களோட அலங்காரத்துக்கு நடுல தேவதையா நீ இருந்த.
அந்த மாதிரி நீ முன்னாடி உக்காந்திருக்க என்னை மீறி நான் ஏதாவது பண்ணு உன்கிட்ட தப்பா நடந்துகிட்டேன்னா என்ன பண்றது. பார்க்கும் போதெல்லாம் மேரேஜ நிப்பாட்டுன்னு சொல்லிட்டு ஃபர்ஸ்ட் நைட்ல உன்னை நெருங்குவதால் நீ என்னை எவ்ளோ கேவலமா பார்ப்பன்னு யோசிச்சேன்.
அப்புறம் தான் எனக்கே புரிஞ்சுது நான் உன் கூட சேரணும்னு நினைச்சது. என்னைய நானே காரில் துப்பிட்டு என்னை சலனப்படுத்துன உன்கிட்டயே மொத்த கோபத்தையும் காட்டிடேன்.
ஆனா நீ சரியான பிராடு தி. உனக்கு கை கால்லாம் நடுங்குதுன்னு என்னமோ ஏசியை ஆன்லைன் பண்ண சொல்லிட்டு படுக்குற." என சிரித்தான்.
அவன் சிரிப்பு அந்த நேரத்திலும் எனக்கு இதம் அளித்தது.
"நான் எப்படி கண்டுபிடிச்சேன்னு தெரியுமா...
நீ வீரவசனம் பேசும் போது உன் பில்டிங் என்னமோ ஸ்ட்ராங்கா தான் இருந்தது.
ஆனா பேஸ்மென்ட் தான் ரொம்ப வீக்..
முகமெல்லாம் வியர்த்து கொட்டுது. கை கால்லாம் உதறுது. உதடு என்னமா துடிச்சது தெரியுமா... அப்பயே ஒரு லிப் லாக் நடந்துருக்கும். ஏதோ மிஸ் ஆய்ட்டு...
இதுல மேடம் மைண்ட் வாய்ஸ்னு சத்தமா வேற இதே டெக்னிக்க ஃபாலோ பண்ண போறேன்னு வேற டயலாக் அடிக்குற.
அப்படியே ஃபாலோ பண்ணுனா பின்விளைவுக்கு நான் பொறுப்பு இல்லன்னு சிரிச்சுட்டே தூங்கிட்டேன்.
இதுல அடுத்த நாளே என்னை சோதிக்க வந்துட்ட, நான் கண்ணை திறக்கும் போது அவ்ளோ கியூட்டா என் முன்னாடி நீ இருந்த. உன்னுடைய ஈரமான கூந்தல் அந்த சோப்பு வாசம் உன்னோட நெருக்கம் எல்லாமே என்னை ஏதோ பண்ணுச்சு. என்னை நானே டைவர்ட் பண்ண தான் உன்னுடைய டீயை வாஷ்பேஷன்ல கொட்டிட்டேன்.
ஆனா நீ செஞ்ச அந்த அல்வாவை நிஜமாவே தெரியாம தான் தட்டிவிட்டேன். உனக்கு ஒன்னு தெரியுமா அன்னைக்கு யாரும் இல்லாதப்போ மெதுவா அந்த பவுல்ல ஒட்டியிருந்த அல்வாவை டேஸ்ட் பண்ணிட்டு தான் நம்ம ரூமுக்கே வந்தேன். என் நிலைமைய நினைச்சா எனக்கே கொஞ்சம் கேவலமா தான் இருந்துச்சு. பட் அல்வா செம டேஸ்ட் தி.என் அம்மாவையே மிஞ்சிட்ட. "
அப்புறம் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்ன தெரியுமா? அன்னைக்கு நான் உன்கிட்ட எவ்ளோ ரூடா உன் கூட பேசி இருந்தாலும், நீ அம்மா கிட்ட நான் உன்ன நல்லா பாத்துக்குறதா சொன்ன பாத்தியா அப்பவே எனக்குள்ள ஆழமா புதைஞ்சுட்ட தி நீ.
அப்புறம் அந்த கொடைக்கானல் . ஜெயராமன் மீட்டிங்க கொடைக்கானலை தான் வச்சுருந்தாரு. அம்மா எங்க வேணாம்னு சொல்லிவாங்களோன்னு பயந்துகிட்டு இருந்தேன்
பார்த்தா அம்மாவே டிக்கெட் போட்டு கொடுத்துட்டாங்க. எங்க நீ வேணான்னு சொல்லிடுவியோன்னு பயந்துதான் நான் உன்கிட்ட வேணாம்னு சொல்ல சொன்னேன்.
என்னை வெறுப்பேத்துவது நீ ஆமா சொல்லுவன்னு நெனச்சேன். நான் நினைச்ச மாதிரி நீ சொல்லிட்ட.
அப்புறம் நான் கொடைக்கானல் உன்னை போனா அடிச்சது என்னால மறக்கவே முடியாது தி.
உண்மையிலேயே அன்னைக்கு செம்ம கிளைமேட், குளுருக்கு இதமான நீ போர்வையை இழுத்து போர்த்தி தூங்கிட்டு இருந்தத பார்க்க குட்டி பேபி மாதிரி இருந்த.
என்னை அறியாமலேயே நான் உன்னை கிஸ் பண்ணுனேன். இந்த நெத்தில இந்த கண்ணத்துல இந்த கண்ணுல.
ஆனா நீ என்ன கண்டுக்கவே இல்ல.
அதுக்கு அப்புறம் மெதுவா உன் உதட்ட பக்கம் வந்தால் அப்பதான் என் புத்தியில் உரைத்தது நான் என்ன பண்றேன்னு.
ஒரு பொண்ணு தூங்கிட்டு இருக்கும்போது நான் பண்ணினத நினைச்சு எனக்கே அசிங்கமா இருந்தது.
ஸ்வேதாவ காதலிச்சுட்டு உன்கிட்ட இந்த மாதிரி எப்படி பண்ணலாம்னு உறுத்திக்கொண்டே இருந்தது.
அப்போ தான் எனக்கு போன் வந்தது. ஸ்வேதா அண்ணன் கால் பண்ணி இருந்தான். மேரேஜ்க்கு விஸ் பண்ணி ஸ்வேதாவ பத்தின எல்லா உண்மையும் என்கிட்ட சொன்னான்.
ஸ்வேதா என்னை பணத்திற்காக தான் காதலிச்சதையும் பணம் என்கிட்ட இல்லன்னதும் விட்டுட்டு போய்ட்டான்னும் சொன்னான். இன்னும் நிறைய சொன்னான்.
இப்படி பட்ட பொண்ணு தேவ இல்லன்னு அவங்க அப்பா அம்மா அவள தல மூழ்கிட்டதா சொன்னான். அதனாலதான் உங்க வீட்ல மாலை எல்லாம் போட்டு உயிரோட இருக்குறவளுக்கு காரியமும் பண்ணிட்டாங்களாம்.
நான் என்னவள்னு நினைச்ச ஸ்வேதா இப்டிபட்டவன்னு தெரியாம அவள உருகி உருகி காதலிச்சது எனக்கே அருவருப்பா இருந்தது.
இதை கூட தெரியாத முட்டாள இருந்திருக்கேன்னு நினைக்கும் போது எனக்கே கஷ்டமா இருந்தது.
இதுல பைல் வேற ஓபன் ஆகல. நான் இருந்த டென்சன்ல பைல் என்ன பார்மேட்ல இருக்குன்னு கூட கவனிக்காம என் மேனேஜர கேட்டா அவன் ஆபிஸ் சிஸ்டம் லயே டெலிட் ஆய்டுச்சுன்னு சொல்றான்.
அந்த டைம் தான் நீ ஜூஸ கொட்டிட்ட. அதுல கோபம் வந்து உன்ன அடிச்சுட்டேன்.
அடிச்சதுக்கு ரொம்ப சாரிடி. உன் கன்னம் பண் மாதிரி வீங்கி போய் உன் கண்ணு கலங்கி இருக்கும் போது எனக்கே கஷ்டமாக இருந்தது.
அப்பதான் நீ நான் ஏன் உன்னை வெறுக்கிறேன்னு கேட்டு கேட்டு அழுதுட்டே என் நெஞ்சுலயே சாஞ்சுகிட்டா.
எப்படி ஸ்வேதாவை காதலிச்சுட்டு உன்னையும் என்னால காதலிக்க முடியும் எப்படி என் மனசு உன் காதலுக்கு ஏங்குது. இன்னும் என்னை நினைத்து எனக்கே கஷ்டமாக இருந்தது. ஒருவேளை காமத்துக்காக உன்னை பார்க்குறேன்னோன்னு வெறுப்பா இருந்தது.
இதுல நீ வேற என்னை வெறுப்பேத்துறேன்னு கியூட் கியூட்டா எக்ஸ்பிரசன் குடுத்து என் பின்னாடியே சுத்தி இம்சை பண்ணுனா நானும் எவ்ளோ நாள் தான் என்னை கன்ட்ரோல் பண்ண முடியும்.
அதான் அன்னைக்கு சஞ்சய் கிட்ட சொல்லிகிட்டு இருந்தேன். நீ தான் இப்படி புரிஞ்சுக்கிட்டு அழுதுக்கிட்டே இருந்தா.
நீ அழுகும்போது என்னால பார்த்துட்டு இருக்க முடியல தி. உன்னை அடிச்சுட்டு நான் தான் ரொம்ப கஷ்டப்பட்டேன்.
இனிமே உன்ன கண்களில் இருந்து கண்ணீர் வர விடக்கூடாதுன்னு தான் பிரண்ட்ஸ் ஆ இருக்கலாம்னு கேட்டேன்.
நான் ஸ்வேதாவை காதலிச்சது உண்மை.ஆனா அந்த காதலுக்கு அவர் கொஞ்சம் கூட தகுதியே இல்லாதவன் நான் புரிஞ்சுகிட்டேன்.
அப்பவே என் மனசுல இருந்த குற்றவுணர்ச்சி போயிடுச்சு. அதனாலதான் போனோட சகஜமா என்னால பேச முடியல முடிஞ்சது.
அப்புறமா கேரளா போனோம்.
கேரளால ஜூல என்னால சத்தியமா முடியல.
எங்க நான் உன்ன இழந்துருவேனோன்னு பயமாயிருந்தது.
அங்க இருந்தவர் ஏதோ ஒரு பொண்ணு செல்ஃபி எடுக்குறேன்னு சிங்கம் இருக்குற பக்கம் விழுந்துருச்சு. மூணு சிங்கம் அந்த பொண்ண சுத்தி நின்னுருச்சுபா. அதுல அந்த பொண்ணு மயங்கிருச்சு. அதுல சிங்கம் பொண்ணு செத்துருச்சுன்னு போய்டதாவும் ரெஸ்கியூ டீம் அந்த பொண்ண ஹாஸ்பிடல் சேர்த்ததாவும் சொன்னாங்க. இதுல பொண்ணு தமிழ்நாடு ன்னு வேற சொன்னாங்களா. நீ வேற என்கிட்ட சிங்கம் பக்கத்துல நின்னு செல்ஃபி எடுத்தா எப்படி இருக்கும்னு சொன்னது நியாபகம் வர்ற உயிரே போய்டுச்சு.
நீ என் கண்ணுல பட்டுற மாட்டியான்னு உன்னை தேடிட்டு இருந்தேன்.
திரும்ப உன்னை பாக்கும் போதுதான் எனக்கு உயிரே வந்தது. அவன் ஹக் பண்ணி எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கிட்டேன்.
அந்த நிமிஷம் தான் நான் நீ இல்லாம என்னால ஒரு நிமிஷம்கூட இருக்க முடியாதுன்னு புரிஞ்சுகிட்டேன்.
உன்மேல எனக்கு இருக்குறது காமம் இல்ல ஆழமா புதைஞ்சு இருக்குற காதல்ன்னு."
அவன் என் காதலை அந்த நிமிடம் உணர்ந்திருக்கிறான் என்பது என் கண்ணில் அன்றைய நினைவில் நீர் கோர்த்தது.
"பொய்... அப்புறம் ஏன் ஸ்வே குட்டி லவ் யூ ன்னு சொன்ன" என என் மனம் முரண்டுக்கு நின்றது.
எனக்கு அவன் குரல் சிறிது நேரம் கேட்கவில்லை.
"தி..."
"தி...."
"தி... இப்ப நீ பேசுன தானே..."
நான் கேட்டது அவன் செவிகளை எட்டியது. என் குரலை அவனால் கேட்க முடிந்தது.
ஆனால் என்னால் என் கண்களை திறக்க முடியவில்லை.
" தி... நான் பேசுறத நீ கேட்ட தானே... தி கம் ஆன் தி. நீ பேசு. நான் இப்போ உன் குரல்ல கேட்டேன். பேசு தி." எனஅவன் கூறினான்.
" ஒரு தடவை பேசு தி. எனக்கு உன் குரல கேட்கனும். பேசு தி. கண்ணை திறந்து என்னை பாரு தி... ஐ லவ் யூ தி.. லவ் யூ சோ மச் தி.. ப்ளீஸ் கண்ணைத் திறந்து பேசு" என அவன் முகம் என் இடது தோளில் ஓய்வெடுக்க அவனின் அழுகுரலும் அழுகையினால் மூக்கு அடைத்து அவன் மூச்சு விட சிரமப்படுவதும் காதில் ரிங்காரமிட்டது.
அவனின் கண்ணீர் என் தோளை நனைக்க என் கைகள் என்னை கேளாமலே எழுந்து அவன் கண்ணீரை துடைத்தது.
என் ஸ்பரீசத்தை உணர்ந்தவன் என் கையை பற்றிக்கொண்டு,"தி... தி... என்னைப் பாரு தி.... "
"கமான் மிஸஸ்.ஆதித்யா... இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க. யூ கேன்." என மருத்துவர் என்னை உற்சாகமூட்ட ஓய்ந்து போன என் கணவன் குரலை கேட்க மெதுவாக கண் திறந்தேன்.
நான் கண் திறந்ததும் என் பார்வையில் பட்டது கண்களை அழுந்த துடைத்த வண்ணம் இருந்த ஆதி தான்.
நான் கண்களை முழுதாக திறந்ததும் "ஏன் தி என்னை இப்படி பயமுறுத்திட்ட... இனி இப்படி பண்ணாத... என்னால முடியல." என்றவன் என் நெற்றியில் முத்தமிட்டு உதடுகளை நெற்றியில் இருந்து எடுக்காமலே நெற்றியில் அவன் நெற்றியை வைத்தான்.
அவன் கண்ணீர் நெற்றி வழியாக என் கண்களில் வந்து தஞ்சமடைந்தது.
நொடிகள் நிமிடங்களாக கடந்தன.
"மிஸ்டர் ஆதித்யா... நான் கொஞ்சம் உங்க வைஃப்ப பார்க்கட்டா..." என மருத்துவரின் கேள்வியில் என்னிடம் இருந்து நகர்ந்தவன் மீண்டும் கண்களை துடைத்துக் கொண்டான்.
மருத்துவர் என்னை பரிசோதித்து விட்டு "சீ இஸ் அவுட் டேஞ்சர் மிஸ்டர் ஆதித்யா... பட் சீ நீட்ஸ் ரெஸ்ட்."
நான் மருத்துவரை பார்த்து "டாக்டர் ஐஞ்சு நிமிசம்" என கெஞ்சலாய் கேட்க, தோளை குலுக்கி " ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்..." என எச்சரித்து விட்டு நகர்ந்தார்.
ஆதி என்னருகே வந்து என் கையை பிடிக்க , நான் என் கையை உள்ளே இழுத்துக் கொண்டேன்.
" நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் இன்னும் சொல்லல ஆதி"
" என்ன கேள்வி ?" என ஆதித்யா என்னை கேள்வியாக பார்த்தான்.
" ஸ்வே குட்டி ஐ லவ் யூ ன்னு ஏன் சொன்ன?"
நமட்டு சிரிப்பு சிரித்தவன் "உனக்கு ஜெலஸா இருக்கா தி..."
அவன் கேள்வியின் முகத்தை திருப்பிக் கொண்டேன்.
அவன் கைகளால் என் நாடியை பற்றி திருப்ப நான் தட்டி விட்டேன்.
"என்னை லவ் பண்ணுவாராம். ஆனா ஐ லவ் யூ ஸ்வே குட்டின்னு சொல்லுவாராம்... குட்டியாம் குட்டி... "என நான் முணுமுணுத்தேன்.
" சாரி தி... நீ காணோம்னு சொன்னதும், அன்னைக்கு ஸ்வேதாவை கடைசியா இரத்த வெள்ளத்துல பார்த்தது தான் என் கண் முன்னாடி வந்துட்டு போச்சு. எங்க நீயும் என்னை அந்த மாதிரி விட்டுட்டு போயிருவயோன்னு தான் நான் பயந்தேன்.
அது மைண்ட்ல ஓடுனதால அது கனவா வந்து ஏதாவது உளறிறுப்பேன் தி... என் மனசுல நீ மட்டும் தான் தி இருக்க. வேற யாருக்கும் என் மனசுல இடம் இல்ல தி...
ஆனா திடீர்னு நீ என்னை விட்டு விலகியதுதான் என்னால புரிஞ்சுக்க முடியல. என் காதல நான் உணர்ந்ததுக்கு அப்புறம் நீ என்னை விட்டு விலகி போனது என்ன ரொம்ப பாதிச்சுச்சு.
நான் உன்கிட்ட எவ்வளவு பேச முயற்சி பண்ணேன். ஆனா நீ என்கிட்ட பிடி கொடுக்கவே இல்லை.
அப்புறம் சரண்யா தான் பிளைட்ல இருக்கும்போது கால் பண்ணி நான் ஸ்வேதா பத்தி தூக்கத்துல உணர்ந்ததையும் நீ என்னை காதலிக்கிறதையும் சொன்னாள். நான் ரொம்ப ஹாப்பியா ஆயிட்டேன்.
என்னுடையது தி என்னை காதலிக்குறா. இதை விட இந்த உலகத்தில் வேற என்ன வேணும். எனக்கு அவ்ளோ ஹாப்பியா இருந்தது..
என் கிட்ட நீ காதலை சொல்ற வர்ற நான் எதுக்கு வெயிட் பண்ணனும். உன் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சு போச்சுல. அதான் உனக்கு புரப்போஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணினேன்.
அந்த மொமண்ட்ட செலிப்ரேட் பண்ண தான் உனக்கு புடிச்ச பிளாக் லேரிய ப்ரசென்ட் பண்ணுனேன். எப்படியும் பார்ட்டி முடிஞ்சு வரும்போது ப்ரபோஸ் பண்ணலாம்னு நெனச்சேன்.
அதுக்குள்ள என்ன என்னமோ நடந்து போச்சு. ஸ்வேதா ஜெயராமனோட வைஃபா இருப்பான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. அவளைப் பார்த்ததும் எனக்கு கோபம் வந்ததுருச்சு."
"எனக்கு அப்படி தோணலை. ரொமான்ஸ் பண்ண மாதிரில தோணிச்சு."
"ஏய் என்ன தி இப்படி சொல்ற. போயும் போய் அவளோடயா ரொமான்ஸ் பண்ணுவேன். நீ இருக்கும் போது அவள்லா ஒரு ஆளா. நீ பர்மிஷன் கொடுத்தா போதாது ரொமான்ஸ் பண்ண" என என் உதடுகளை நோக்கி வந்தான்.
அவனை கைகளால் தடுத்தேன்.
" நீயும் அவளும் கண்ணுலயே ரொமான்ஸ் படம் ஓட்டுனீங்களே."
"அச்சோ தி... உண்மை தெரியாம பேசாதே.
அன்னைக்கு அவளை பார்த்ததும் இவகிட்ட என் மனச பறிகொடுத்தேன்னு பத்திக் கிட்டு வந்தது. அந்த கடுப்புல தான் ட்ரிங்க்ஸ் பண்ணவே போனேன்.
குடித்ததும் அவளை நான் திட்ட தான் அவளை தேடினேன்.
அவள தேடிப் போனேன். அவ கண்ணுல கொஞ்சமாவது குற்றவுணர்ச்சி இருக்கான்னு பார்த்தேன்.
ஆனா அதுல அவ தொடுதல்லயும் காமம் தான் இருந்தது. அதை பார்த்ததும் எனக்கு உடம்பெல்லாம் எரிச்சலும். அவளை கீழே தள்ளிவிட்டு உன்னை தேடுனா காணோம்.
வெளிய வந்து தேடிட்டு இருந்தேன்.
அப்போ அவளும் என் பின்னாடியே வந்தா.
ஆதி ஏன் இப்படி தள்ளிவிட்டு வந்தன்னு கேட்டா.
உன்னை கொல்லாம விட்டதே பெரிய விஷயம். இப்பக்கூட உன்னை சொல்லனும்னு தோணுது.
ஆனா என்னோட தி எதுவும் தப்பா யோசிச்சு இருக்க கூடாதுன்னு தான் உன்ன விட்டுட்டு போறேன்.
போடின்னு சொல்லிட்டு வந்துட்டேன்.
எப்படியும் நீ ரூமுக்குதான் போகனும்னு ரூமுக்கு வந்து பார்த்தேன்.
அங்கே இருந்த எல்லாமே கலைந்து இருந்தது. சரி நீ கோவமா இருக்க நினைச்சேன். நீ சாரிய கூட தூக்கி எறிஞ்சுட்டு போய்ருக்கானா நீ ரொம்ப நொந்து இருக்கனும்னு புரிஞ்சுகிட்டேன்.
உன்னை தேடிட்டு இருக்கும் போதுதான் ஒரு ரூம் பாய் உன்ன பக்கத்துல பார்த்ததாகவும் யாரோ உன்ன வண்டியில தூக்கிட்டு போனதாகவும் சொன்னான்.
அவன்ட்ட இருந்து வண்டி நம்பர் வாங்கிட்டு போய் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பைல் பண்ணி உன்னை ட்ராப் பண்ண எப்படியோ நீ இருக்குற இடத்தை கண்டுபிடிச்சு வந்தா உன் கழுத்துல கத்தியை புடிச்சுக்கிட்டே ஸ்வேதா நிக்கிறா. உன்னை காப்பாத்த மட்டும் தான் அப்படி சொன்னேன். இருந்தாலும் பார்டில நீ என்ன விட்டு போய்ருக்க கூடாது. அப்படி போகாம இருந்துருந்தா இவ்வளோ பிரச்சினை நடந்து இருக்காது."
"நான் என்ன பண்ண. நீயும் ஸ்வேதாவும் அவ்ளோ க்ளோசா இருக்கும்போது உனக்கு என்னை புடிக்கல. அவள தான் புடிச்சிருக்குன்னு நான் உன்னை விட்டு போட்டாச்சு தான் அங்கிருந்து வந்திட்டேன். "
"போயும் போயும் அவ பின்னாடி போவேன்னு என்னை எப்படி நினைச்ச. ஓகே அட்லீஸ்ட் உனக்காக ரூம்ல இருக்கிற டெக்கரேஷன் பார்த்துட்டு கூட தோனலையா எல்லாத்தையும் கலைச்சு போட்டு போயிட்ட."
"எனது ரூமை நீ டெக்கரேட் பண்ணியா?"
"பின்ன யாரு பண்ணுவா? அந்த ரூம் பாயா?"
"ஆமாம் . நான் அப்படித்தான் நினைச்சேன்."
"என்னது ரூம் பாயா? அவன் எதுக்கு நம்ம ரூமை டெகரெக்ட் பண்ணணும்?"
"நான் தான் உனக்கு ப்ரொபோஸ் பண்ணலாம்னு டெரஸ டெகரேட் பண்ண சொன்னேன்.
அவன் தான் ரூம் டெகரேஷன் நல்லா இருக்கும்னு சொன்னான். நான் தான் டெரஸயே டெகரேட் பண்ண சொன்னேன். ஒரு வேல மாத்தி ரூமை டெகரேட் பண்ணிட்டான்னு நினைச்சு தான் நான் வந்தேன். எனக்கு என்ன தெரியும் நீ என்ன ப்ரொபோஸ் பண்ணுவன்னு"
"ஃப்ராடு. நான் உன்கிட்ட சொல்லிடு தானே போனேன். இன்னைக்கு ப்ரபோஸ் பண்ண போறேன்னு."
"எப்ப சொன்னா?" நான் திருதிருவென முழித்தேன்.
" நீ தூங்குற மாதிரி நடிச்சுட்டு இருந்தீயே அப்போ. இன்னைக்கு என்னோட காதல உன்கிட்ட சொல்ல போறேன்னு சொன்னேன்ல."
"அப்போ நான் தூங்கிட்டு இருந்திருப்பேன்."
"நானும் தூங்குறேன்னு நினைச்சு தான் உன்கிட்ட தான் வந்தேன். ஆனா நீ அந்த ஏசிலயும் வேர்த்து விறுவிறுத்து உனக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு எடுக்கவுமே புரிஞ்சுகிட்டேன். மேடம் தூங்காம நடிச்சுட்டு இருக்கீங்கன்னு. அதான் உனக்கு ப்ரபோஸ் பண்ண போறேன்னு உன்கிட்ட சொல்லிட்டு வந்தேன்."
"நா நீ சுவேதாவை லவ் பண்ணத பற்றி சொல்லப் போறன்னு நெனச்சேன்."
"நான் சொல்லும்போது அதுதான் நினைச்சியா?" என கேட்க தலையை இல்லை என ஆட்டினேன்.
"உங்க சண்டைல முடிஞ்சிட்டுனா. நான் சிஸ்டர் கிட்ட ரெண்டு வார்த்த பேசிகிட்டா?" என்றே உள்ளே வந்தார் சஞ்சய் அண்ணா.
"வாங்க அண்ணா"
"இப்போ எப்படிம்மா இருக்கு."
"செஸ்ட் ரொம்ப பெய்னா இருக்கு."
"தி, உனக்கு பெயினா இருக்கா, நீ ஏன் என்கிட்ட சொல்லவே இல்ல?" செல்லமாக கடிந்து கொண்டான்.
"நீ எங்க கேட்டா?"
"என்னை எங்க நீ கேட்க விட்ட. கேள்வி கேள்வியா கேட்டு என்ன நோண்டி எடுத்திட்டியே?'
"போதும் போதும் உங்க சண்டையை அப்புறம் வச்சிக்கோங்க. நீ ரெஸ்ட் எடுமா."
"அதி நீ வா. தியா ரெஸ்ட் எடுக்கட்டும்."
" நீ போடா. நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டு வர்றேன்."
"அதான் நான் சொல்லிட்டேன்ல . நீ வா."
"நீ போடா. நான் வர்றேன்." என வெளியே அவரை அனுப்பிவிட்டு என் அருகே வந்ததான் ஆதி.
என் கன்னத்தை வருடி நெற்றியில் முத்தமிட்டு நகர்ந்தான் மீண்டும் திரும்பி நான் என்னவென்று பார்ப்பதற்குள் என் உதட்டில் அழுந்த இதழ் பதித்து,
" ரெஸ்ட் எடு." என ஓடிவிட்டான். நான் சிரித்துக்கொண்டே தன் நிம்மதியை அசைபோட்டு வலியையும் மறந்து நித்திரையில் லயித்தேன்.
நானும் அத்தையும் கூடத்தில் அமர்ந்து இருப்பதே எனக்கு பழச்சாறு பிளந்து கொண்டிருந்தான்.
"டேய் எப்படா நீ ஆபிஸ் வருவ. உன்னால நான் திரும்ப ஆபீஸ் போக வேண்டியதா இருக்கு."
"அப்பா என்னப்பா இப்பதான் எனக்கு புதுசா கல்யாணம் இருக்கு. என் வைப்க்கு வேற உடம்புக்கு முடியல. அதுக்குள்ள என்ன ஆபீஸ் போக சொல்ற."
"ஏங்க இப்பதான் கொஞ்ச கொஞ்சமா தியா சரியாகுறா.கொஞ்ச நாள் ஆகும். ஒரு மாசம் கழிச்சு தான் வருவான்.. அதுவரை நீங்க பாருங்க."
"என்ன ஒரு மாசமா... அதெல்லாம் பத்தாதுமா... அட்லீஸ்ட் ஒரு ஆறு....
"டேய் ஆறு மாசம்லா என்னால போக முடியாது..."
"ப்பா உங்க கிட்ட இப்ப யாரு ஆறு மாசம்னு சொன்னது. உங்க பிஸ்னஸையும் சேர்த்து நான் தானே மூணு வருஷமா பார்த்தேன். இப்போ என்னோட பிஸ்னஸையும் சேர்த்து ஆறு வருஷத்துக்கு நீங்க பாருங்க."
" என்ன ஆறு வருஷமாமாஆஆஆஆ?"
"என்ன ஆறு வருசமாமாஆஆஆ அவ்வளவு ஷாக். ஜஸ்ட் ஆறு வருஷம் தான்."
"ஆறு வருஷம் நீ என்ன பண்ண போற."
"என்னப்பா இப்படி கேட்டுட்ட. எப்படியும் தி யோட உடம்பு சரியாக ஒரு மாசமாவது ஆகும்.
அதுக்கப்புறம் ஒரு மாசம் நாங்க ஹனிமூன்க்கு சுவிஸ் போயிருவோம்.
எப்படியாவது வரும்போது என்னோட தி பிரக்னண்டா இருப்பா.
பிரக்னன்ட் வைஃபை வீட்டில விட்டுட்டு எப்படிப்பா என்னால நிம்மதியா ஆபீஸ்ல வொர்க் பண்ண முடியும். அதான் பக்கத்தில இருந்து என் பேபி வெளிவரவிருக்கும் தி ய பாத்துக்கணும்."
"அதான் பேபி 10 மாசத்துல பெ வந்திருமேடா."
"பேபி வெளிய வந்துரும் பா.
உனக்கு ஞாபகம் இருக்கா நீ ஒரு தடவை சொன்னா நான் ஆபீஸ் ஆபிஸ்ன்னு போயிட்டு நீ நடக்கிறத பேசுறத தவழ்றத பார்க்கவே முடியலன்னு பீல் பண்ணுன தானே.
நானும் அப்படி பீல் பண்ணனும் நினைக்கிறீங்களா. அதான் ஒரு அஞ்சு வருஷத்துக்கு என் பேபியோட ஒவ்வொரு வளர்ச்சியையும் அதோட அழகையும் இரசிக்கப்போறேன்.
அப்புறம் என் பேபிய ஸ்கூல்ல சேர்த்துவிட்டுருவேன்."
"குழந்தை ஸ்கூலுக்கு போனதுக்கப்புறம் ஆகுது ஆபீஸ் வருவியா?"
"சின்ன குழந்தை ப்பா ஸ்கூல்ல சேர்த்து விட்டா அழுவா. அதனால என்னோட பேபி ஸ்கூல்ல கம்ஃபர்டபிளா ப ஃபீல் பண்ணும்போது நானும் ஆபிஸ் வேலை பத்தி யோசிக்கிறேன்.
என் பேபி ஸ்கூலுக்கு போகும் போது நான் பேபிய ஸ்கூல்ல விட்டுட்டு ஆபீஸ் வந்திருவேன்.
ஸ்கூல் விடும் போது ஆபீஸ்ல இருந்து ஸ்கூல்ல போய் பிக்கப் பண்ணிட்டு நானும் வீட்டுக்கு வந்து விடுவேன். அது வரைக்கும் நீங்க தான் கொஞ்சம் கொஞ்ச நாள் பார்த்துக்கணும்."
"டேய் இந்த பிளான் கொஞ்சம் ஓவரா இருக்குடா. நீ சொல்றத பாத்தா ஆறு வருஷத்துக்கு அப்புறமும் நீ ஆபிஸ்க்கு வருவங்குற நம்பிக்கை எனக்கு இல்லை."
"தெரிஞ்சா சரி..." என ஆதியின் முணுமுணுப்பு என் காதில் தெளிவாக விழுந்தது.
அத்தையும் மாமாவும் ஆதித்யாவை முறைக்க அவன் என்னை பார்த்து கண்ணடித்துவிட்டு அவன் கைகளில் ஏந்திக் கொண்டான்.
"ஆதி என்ன பண்ற. அத்தை மாமா எல்லாம் இருக்காங்க."
"அவங்க எல்லாம் நீ கண்டுக்காத. அப்பாவுக்கு அம்மா கூட ரொமான்ஸ் பண்ண முடியலன்னு பொறாமை. வா நாம போகலாம்." எனக் கூற நானோ சங்கடமாக அவர்களை பார்த்தேன்.
அத்தையும் மாமாவும் அங்கு எதுவும் நடவாதது போல் எழுந்து எங்களுக்கு தனிமையே கொடுத்து அவர்கள் அறையை நோக்கி செல்ல, என் முகம் குங்குமமாய் சிவந்தது.
என் கைகள் தானாக ஆதியின் கழுத்தில் மாலை கோர்க்க, அவன் நெஞ்சில் சாய்ந்து அவன் இதயத்துடிப்பை கேட்டேன்.
"என்னை இறக்கி விட்டா நானே வந்துடுவேன். அத்தை மாமா ஏதாவது நினைச்சுருப்பாங்க."
"அவங்க எதுவும் நினைக்க மாட்டாங்க. நீ நடந்தாலே நெஞ்சு வலிக்குது ன்னு சொல்ற. அப்ப எப்படி மாடி ஏறுவ.
நான் தானே உன்னைக் கீழே தூக்கிட்டு வந்தேன். நானே உன்ன மேல தூக்கிட்டு போறேன். அப்பத்தான் சீக்கிரம் ரெக்கவர் ஆவ. நம்ம பேமிலி பிளானிங்கும் ஸ்டார்ட் ஆகும்."
"ஆதி நீ இவ்வளவு நேரம் சொன்னதெல்லாம் சும்மா தானே?"
"தி, என்ன சொல்ற நீ. நான் சீரியஸா சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ சும்மாவா ன்னு கேக்குற. உன்னை நம்பி நான் எவ்வளவு பிளான் போட்டு வச்சுருக்கேன்."
"நிஜமாவே ஆபீஸ் போக மாட்டியா?"
"இப்போதைக்கு போற ஐடியா இல்ல. நீ இப்படியே இருந்தா சரியா வராது . சீக்கிரம் லைஃப்ப ஸ்டார்ட் பண்ணனும். இல்லாட்டி அப்பா என்னை ஆபீஸ்ல தள்ளி கதவைப் பூட்டிடுவார்."
" ஏன் இவ்வளவு ..." என நான் பேச ஆரம்பிக்கும் போதே என் இதழை முற்றுகையிட்டான்.
திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்த என்னை அவன் மீது காதல் கொள்ள வைத்து, திகட்ட திகட்ட காதலையும் கொடுக்கின்றான்.
எத்தனையோ பிரச்சினைகள் எங்களுக்கு இடையே வந்திருந்தாலும் இனி என்னுடைய வாழ்வில் வரும் எல்லா பிரச்சினைகளும் ஆதியை தாண்டித்தான் என்னை தீண்டும் என்பதையும் உணர்த்திவிட்டான், என் ஆதி.
விருப்பம் இல்லாத ஒரு உறவில் உதயமாகி இப்பொழுது அவன் உயிரில் உருகிக் கொண்டிருக்கிறேன்.
இனி எல்லாம் ஆதி பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். நன்றி. இப்படிக்கு ஆதியின் தியா... ஆதித்யா...
💏💏💏💏💏💏💏
வணக்கம் நட்பூக்களே🌷🌷🌷
இந்தக்கதையை கடைசிவரை படித்ததற்கு நன்றி. இந்த கதையில் முழுக்க முழுக்க ஒரு பெண்ணின் திருமணத்தைப் பற்றிய எண்ணங்களையும் அவளின் மன நிலையையும் அவளுக்கும் உண்டாகும் குழப்பங்களையும் எப்படி புதிய சூழ்நிலைகளை கையாளுகிறாள் என்பதை பற்றி எழுதுவதையே நோக்கமாக கொண்டிருந்தேன். அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றேன் என நினைக்கிறேன்.
முழுக்க முழுக்க தியாவின் மனநிலையிலிருந்து அவளின் திருமணத்தின் மீதான வெறுப்பில் இருந்து அவளுக்கு காதல் மலர்ந்தது வரை உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் என்ற கதையை முடித்து இருக்கிறேன். உங்கள் விமர்சனங்கள் என் எழுத்துக்களை நீங்களும் மெருகூட்ட உதவும். எனவே படித்து பார்த்து உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் என் எழுத்துலக பயணத்திற்கு உதவியாக இருக்கும்.
சரண்யாவிற்கு கதை இருக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு பதில் ஆம்.இருக்கிறது . ஆனால் தியாவின் எண்ண ஓட்டத்தில் இல்லை. தனி கதையாக வரும்.
குணா சுந்தரி சிஸ்டருக்கு மிக்க மிக்க நன்றி... எல்லா பதிவிலும் கமெண்ட் செய்து இருந்தார். எப்படி ரிப்ளை செய்வது என தெரியாத காரணத்தினால் செய்யவில்லை. கதையின் கடைசி வரை பயணித்த அனைவருக்கும் நன்றி.
என்றும் அன்புடன்,
சல்மா அம்ஜத் கான்
- 25 Forums
- 229 Topics
- 822 Posts
- 2 Online
- 329 Members
