அத்தியாயம்-2
மிதிலா வந்ததும் வராததும் அண்ணனை பற்றி போட்டுக் கொடுத்து வீட்டில் அன்னையிடம் திட்டு வாங்க வைத்துவிட்டே, நிம்மதியாக பொங்கலை விழுங்கினாள்.
“ஏன்டி.. இரண்டு நாள் முன்ன வரக்கூடாது?” என்று தீபா கேட்க, “போம்மா… நானே வரக்கூடாதுன்னு தான் இருந்தேன்.” என்றாள்.
கிச்சனில் இருந்த சாப்பாட்டை எல்லாம் டைனிங் டேபிளில் வைக்க தீபா அங்கும் இங்கும் நடக்க, “ஏன்டி?” என்று கேட்க, ‘ம்கூம்… இங்க வர்றதே அவனை பார்க்க தான். அவன் என்னடான்னா.. என்னை மனுஷியாவே மதிக்க மாட்டேங்கறான்.’ என்று ஹ்ருதேஷை நினைத்து கூறினாள்.
“யாரு மனுஷியாவே மதிக்கலை. நான் உன்னை இந்த வீட்டு இளவரசியா இல்ல நினைக்கேன்” என்று செல்வராகவன் மகள் பேசிய பேச்சின் கடைசி வார்த்தையை மட்டும் கேட்டு வந்தார்.
“அது.. கௌசிக்கை சென்னேன்ப்பா. பேஷன் டிசைனிங் படிக்க தங்கச்சி பெங்களூருக்கு போனாளே. பொங்கல் அதுவுமா வந்திருக்கா, குயிக்கா வந்து கூப்பிடணுமேனு இல்லாம மனுஷியாவே மதிக்கலைனு பேசினேன்.” என்று மழுப்ப, “உங்கண்ணனுக்கு தானே. அந்த ஹ்ருதேஷ் கூடயிருந்தா எதுவும் கண்ணுக்கு தெரியாது.” என்று தீபா திட்டவும், ‘எனக்குமே ஹ்ருதேஷ் கூடயிருந்தா எதுவுமே கண்ணுக்கு தெரியாது.’ என்று மனதோடு புலம்பினாள்.
வீட்டுக்கு வந்ததும் முகம் கை கால் அலம்பி சாப்பிட்டவள், அம்மா அப்பாவோடு அண்ணனை மாட்டி விட்டு இரண்டு வம்பிழுத்துவிட்டு உறங்குவதற்காக வந்தாள்.
அறைக்கதவை தாழிட்டவள், போனில் ஹ்ருதேஷிற்கு அனுப்பிய மெஸேஜை கவனித்தாள். வாட்சப்பில் இவள் அனுப்பியதை எதையும் பார்க்கவில்லை என்றதாகவே காட்டியது.
ஹ்ருதேஷிற்கு போனில் அழைத்து விட்டு காத்திருந்தாள்.
அவனுமே அவன் வீட்டில், சாப்பிட்டு டிவியை பார்த்துக் கெண்டிருந்தான்.
சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்தை செல்வராணி-ராஜலிங்கம் பார்வையிட, அன்னை மடியில் தலை வைத்து, தந்தை மடியில் கால் நீட்டி சொகுசாக பார்த்தான்.
ஹ்ருதேஷ் வீட்டில் அப்பா அம்மாவை தவிர்த்து அவன் ஒரே பிள்ளை.
அதனால் அவனிடம் சண்டையிடவோ, வம்பிழுக்கவோ, பாசம் காட்டி கொஞ்சவோ யாருமில்லை.
அன்னை மடியில் ஓய்வெடுத்தவனின் போனில் நம்பர் அழைப்பு.
நம்பரை பார்த்ததும், அது மிதிலா எண் என்று அறிந்ததால், அன்னை தந்தையிடம் டி.வி போரடிக்கு என்று கூறிவிட்டு அறைக்கு சென்று நண்பனிடம் கதைப்பதாக கூறிவிட்டு தனிமையாக வந்தான்.
அறையில் தனித்து வந்தப்பின், போனை ஏற்றவாறு, “உனக்கு ஒரு முறை சொன்னா அறிவில்லை. எதுக்குடி எனக்கு ஆறு முறை கால் பண்ணியிருக்க. உங்கண்ணாவுக்கே இரண்டு முறை தானே கால் பண்ணின?” என்று எரிந்து விழுந்தான்.
”கௌசிக் அண்ணாவுக்கு இரண்டு முறை கால் பண்ணிருந்தேன். என்னை அழைக்க வரச்சொல்லி. ஆனா உனக்கு ஆறு முறை கால் பண்ணிருக்கேன்.. ஏன் பண்ணேன்னு தெரியாதா? உன்னை பார்க்க தான் ஆசையா வந்தது. நீயா வந்து என்னை பார்ப்பனு ஆசையாயிருந்தேன். நீயும் ப்ரனித்-விருஷா நடிச்ச படத்தை பார்க்க ஆன்னு போயிட்ட.
ஏன் என் கால் அட்டன் பண்ண என்னவாம். என் மெஸேஜை பார்க்கவும் மாட்டேங்கற. இனி வாட்சப்ல அனுப்பறதை பார்க்கலை. நார்மலானா மெஸேஜா அனுப்பிடுவேன்.” என்று பயம் காட்டினாள்.
ஹ்ருதேஷோ ”அந்த மெஸேஜையும் வாசித்தா தானே?” என்று அவளை காயப்படுத்தினான்.
“இங்க பாரு… முன்ன ஸ்கூல் படிக்கறப்ப நானா உன்னிடம் வந்து லவ் பண்ணறதா சென்னேன். நீ அதுக்கு பேப்பரை கிழிச்சி மூஞ்சிலயே திட்டி அனுப்பிட்ட. ஆனாலும் இப்பவரை என் மனசுல நீ தான் இருக்க. முன்ன தான் ஸ்கூல் படிச்சப்ப ரிஜெக்ட் பண்ணின. இப்ப நான் பேஷன் டிசைனிங் படிக்க பெங்களூர் வரை தனியா போறேன் வர்றேன். நான் ஒன்னும் குட்டி பொண்ணு இல்லை. லவ் யூ ஹ்ருத்” என்றாள் செல்லமாக.
“நீ எல்லாம் குட்டி பொண்ணு இல்லை எனக்கு தெரியும். நீ குட்டி பிசாசு. உன்னை யாரு காதலிப்பா? அதோட நீ என் பிரெண்டோட தங்கச்சி. உன்னை எல்லாம் காதலிக்க முடியாது. அப்பவும் இப்பவும் எப்பவும் இதான் என்பதில். சும்மா என்னை டார்ச்சர் பண்ணாத போனை வைடி” என்றான்.
“ஹ்ருத் கண்ணா… காதலிக்க முடியாதுன்னு சொல்லிட்டு ‘டி’ போட்டு எல்லாம் உரிமையா திட்டறியேடா. ஐ லைக் இட்.” என்றாள்.
“உன்னால என் பிரெண்டிடம் பேசறப்ப குற்றவுணர்வு வருது.” என்றான்.
“எனக்கு உன்னை பார்த்தா… உன் கன்னத்தை கடிக்கணும் என்ற உணர்வு தான் வருது ஹ்ருத். குற்றவுணர்வு எல்லாம் இல்லை. அதுவும் இன்னிக்கு பாலபிஷேகம் எல்லாம் முகத்துல வழிய பாலிஷ் போட்ட மாதிரி இருந்தது உன் கன்னம்” என்றாள். அவளது பேச்சில் அதிர்ந்தவன், “பொண்ணு தானே நீ. வெட்கங்கெட்டு பேசற?” என்றான்.
“இங்க பாரு… நான் வந்ததும் வராததும் உனக்கு தான் ஆறு முறை கால் பண்ணினேன். இங்க வந்ததும் உன்னை தான் சைட் அடிச்சேன். உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கு ஹ்ருத். நான் பிளஸ் ஒன்ல இருந்து உன்னை லவ் பண்ணறேன் தெரியுமா? பிளஸ் டூல லவ் லெட்டர் எழுதி தந்தா அதை கிழிச்சு முகத்துல விட்டெறிந்துட்ட. உனக்கென்னப்ப.. காலேஜ்ல அழகழகான பொண்ணுங்க உன்னை சுத்தி வந்ததா எங்கண்ணா செல்வான். உனக்கு என்னை கண்டா மட்டும் பாவக்காயா கசக்குதா?” என்றாள்.
“ஆமாடி… உன்னை பார்த்தா பிடிக்கலை. அதுவும் வெட்கமில்லாம என் பின்னால சுத்தறது எனக்கு சுத்தமா பிடிக்கலை. வைடி போனை” என்று துண்டித்தான்.
இந்நேரம் மிதிலா போனை தூரவைத்துவிட்டு அழுது, கரைந்திருக்க வேண்டியது. மிதிலாவோ ‘இருபது நிமிஷமா ஹ்ருத் கூட பேசியிருக்கேன். லாஸ்ட் டைமை விட பத்து நிமிஷம் கூடுதலா.” என்று ஆனந்தப்பட்டாள்.
அதை ஹ்ருத்தேஷிடமும் நார்மல் குறுஞ்செய்தியில் உரைத்தாள்.
ஹ்ருதேஷும் அதை வாசித்துவிட்டு, ‘இவளை எல்லாம்.’ என்று முனங்கி படுத்தான்.
அவனுக்கும் லேசான முறுவல் உதட்டோரத்தில் எட்டி பார்த்தது.
காலையில் அவள் நான் சென்னை வந்துட்டேனே’ என்று அனுப்பியதும், அவசரமாய் பேருந்து நிலையத்திற்கு வந்துவிட்டான். கௌசிக் மிதிலாவை அழைத்து செல்லும் போது எதர்ச்சையமாக வந்தது போல தன்னை காட்டிக்கொள்ள நினைத்தான்.
ஆனால் பேருந்து நிலையம் வந்ததும், “சே.. இந்த பஸ் எடுக்க மாட்டேங்கறான். சேலம் போக இரண்டு மணி ஆகிடும் போல’ என்று அனுப்பியதையும் கண்டு, ‘சே.. அவ இப்ப தான் பெங்களூர்லயிருந்தே கிளம்பறாளா?’ என்று அவசரமாய் வந்த எண்ணத்தில் நொந்தான்.
இதில் கூடுதலாக பேருந்து அருகே, தண்ணீர் பாட்டில் வாங்கி குடிக்கும் நேரம், ஹ்ருதேஷ் இருக்கும் தெருவில் ஒருவன், “என்ன ஹ்ருதேஷே உன்னை பார்க்க உன் பிரெண்ட் உன் வீட்ல வந்து நிற்கான். நீ இங்க நிற்கற?” என்றதும் அப்படியா?’ என்று நின்றான்.
அவன் தான் “இரண்டு டிக்கெட் படத்துக்கு போகலாம்னு எடுத்தேன். ஆனா என்னாலயும் என் ஓய்ப்பும் இப்ப போக முடியாது. என்னோட அக்காக்கு குழந்தை பிறந்திருக்கு. நீயும் அவனும் வேண்டுமின்னா போ” என்றதும் தான், டிக்கெட்டை விலை கொடுத்து வாங்கி வீட்டிற்கு வேகமாக சென்றான்.
அங்கு செல்லும் நேரம் கௌசிக் சென்றதாக கூறவும், புறப்பட்டவனை செல்வராணி சாமிகும்பிட்டு, பொங்கல் வடை பாயாசத்தை கட்டி தந்தார்.
படம் முடியவும் மிதிலாவை கௌசிக் தான் அழைத்து செல்வான் என்றதில் அவனுடனே இருந்தான்.
மிதிலாவை பார்த்துவிட்டாயிற்று. அவன் மூளை இவளை விரும்பாதே, தள்ளி நிறுத்து என்று மிதிலாவிடம் விலகும்படியாக பேசிவிடுகின்றது. ஆனால் இதயமோ ‘பிளஸ் ஒன் படிக்கற வயசுலயிருந்து விரும்பறா. கௌசிக்கோட தங்கச்சி. அவ முன்ன விட இப்ப மெச்சூரிட்டி வந்தப்பிறகும் விரும்பறா. மேபீ உண்மையா காதலிக்கறாளோ?’ என்று அவன் மனமும் காதலிக்க துவங்கியது. ஆனால் அவனே அதை காதல் என்று எண்ணாமல் துரத்திவிட்டு, அவ பின்னால சுத்தறா அவ்ளோ தான். லீவுக்கு வந்துட்டு போறவளோட முகத்தை பார்க்கணுமென்ற ஆசை. ஜஸ்ட் சைட் அடிக்க மனசு ஏங்குது.’ என்று சொல்லிக்கொண்டான்.
ஒரு ஆணாக தன்னை விரும்பிய பெண்ணை பார்க்க ஏங்கியதாக ஹ்ருதேஷ் நினைத்து கொண்டான்.
அவனை பொருத்தவரை கௌசிக் நட்பு கெடாமல் இருக்க முடிந்தளவு போராடுகின்றான். கடந்த முறை ‘என்னை இப்ப பிடிச்சிருக்கா ஹ்ருதேஷ். நான் இப்பவும் உங்களை விரும்பறேன்” என்று பேசியவளை கண்டமேனிக்கு திட்டிவிட்டான். அப்பொழுது அழுதழுது சென்றாள். அதனாலும் ஹ்ருதேஷ் அவளை காண காலையில் சென்றான். ரொம்ப திட்டிட்டோம் இப்ப எப்படியிருக்காளோ?
ஹ்ருதேஷ் இப்படி நினைக்க, மிதிலாவோ மிக தீவிரமாக ஹ்ருதேஷை விரும்புகின்றாள்.
வீட்டை எதிர்த்து அவனை நாடும் அளவிற்கு அவள் முடிவெடுத்துவிட்டாள். அவள் பக்கம் ஹ்ருதேஷ் காதலிப்பதாக ஒப்புக் கொள்வதற்கு மட்டுமே காத்திருக்கின்றாள்.
கடந்த முறை அளவுக்கு அதிகமாக திட்டியிருந்த பொழுதிலும், அவனுக்கு தான் முதலில் சேலம் வரப்போவதை தெரிவித்தாள். பேருந்து ஏறும் முன்னே ‘சேலம் வந்துட்டேன்’ என்று கூறியதில் அவன் வந்ததாகவே எண்ணிவிட்டான். அவளுக்கு சேலம் வரப்போகின்றேன் ‘வந்துவிடுவேன்’ என்ற எதிர்காலத்தை வைத்து எழுதாமல், இறந்த காலத்தில் ‘வந்துட்டேன்’ என்று சொல்லியிருந்தாள்.
அண்ணனுடன் ஹ்ருதேஷை கண்டதும், கௌசிக்கை முன்னே அனுப்பிவிட்டு, ஹ்ருதேஷை இடித்து பேசி வந்ததில், அவன் பதட்டம் பயத்தை, முகத்தில் காட்டிய பாவனையை கண்டு தனியாக புன்ன்கைத்தாள்.
அதோடு ஹ்ருதேஷ் தன்னை திருட்டுத்தனமாக பார்த்து முடிக்க, அவன் கண்கள் தன்னை நாடுவதில், அவன் மனதில் தான் வேறூன்றுவதை அவள் புரிந்துக் கொண்டாள்.
‘ஏன் தான் லவ்வுக்கு ஓகே சொல்லாம இருக்கானோ’ என்று கௌசிக் போனிலிருந்து ஹ்ருதேஷ் புகைப்படத்தை அவளுக்கு முன்பு அனுப்பியதை எடுத்து பார்வையிட்டாள்.
மிதிலாவுக்கு கௌசிக்கிற்கு இந்த காதல் விவகாரம் தெரிந்தால் பெரிதாக முகம் காட்டாமல் ஏற்பானென்ற நம்பிக்கை. கௌசிக் அந்தளவு ஹ்ருதேஷ் என்றால் பிடிக்கும்.
அந்த ஒரு காரணம் போதும் தன் காதல் திருமணத்தில் முடியுமென மிதிலா தவறாக கணித்தாள்.
-தொடரும்.

ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாதம்மா…
காதல்ன்னு சொன்னாலே… அண்ணன்காரன் தடா போட தயாரா காத்திட்டிருப்பான். இது தெரியாமல், இத்தனை நம்பிக்கையா ???
😀😀😀
CRVS (or) CRVS 2797
Very entrusting super👌👌👌👌👌❤❤❤❤❤
Love ku mothalla kattaiya poduvaan….athu theriyama nee kanavu kandukkittu erukka