meta-google-adsense-platform-account: ca-host-pub-2644536267352236 meta-google-adsense-platform-domain: sitekit.withgoogle.com

நின் பிரேமம் என் சிநேகம்-11

அத்தியாயம்-11

  ஹ்ருதேஷிற்கு கௌசிக்குடன் மிதிலாவை சந்திக்கவே பிடிக்கவில்லை.
  கொஞ்ச மாத பழக்கமென்றாலும், மிதிலா கையை பிடித்து பழகிவிட்டான். அவளுமே நெருக்கமாய் நின்று பழகியது. கௌசிக் இருப்பதை ஏதாவது ஒரு நொடி மறந்து அவள் கையை பற்றினால் கூட பிரச்சனை தான்.

     அதனால் மறுத்துக் கொண்டிருக்க, கௌசிக்கோ கெஞ்சி வரவழைத்துவிட்டான்.

ஹாஸ்டலுக்கு பக்கத்தில் வந்திருந்தாள். பெரும்பாலும் ஹாஸ்டல் எல்லாம் யார் வேண்டுமென்றாலும் வரலாம் போகலாமென்ற ரீதியில் தான் இருந்தது. அதற்கு காரணம் பேஷன் டிசைனிங் கல்லூரியில் இருபாலரும் படிக்கின்றனர்.

ஏதாவது கொடுக்க வாங்க என்று கூடம் வரை சந்திப்பதை வார்டன் அனுமதித்து இருந்தார். அதுவும் வீட்டு ஆட்கள் என்றால் நின்று நிதானமாக பேசவும் தடையில்லை.

   அதனால் கௌசிக் ஹ்ருதேஷ் அங்கு வெயிட்டிங் ஹாலில் வந்து அமர்ந்திருந்தனர்.

மிதிலா இருந்த ஹாஸ்டல் கட்டுப்பாட்டு இல்லாமல் பகட்டாக இருந்தது.
  பெரும்பாலும் ஹாஸ்டல் கல்லூரி பெண்கள் ஷார்ட்ஸில் சுத்துவார்கள் என்று கேள்விப்பட்டவன் ஹ்ருதேஷ். இது பேஷன் டிசைனிங் கல்லூரி மாணவிகள் என்பதால் நன்றாக வித்தியாசமான ஆடையில் இருந்தார்கள். கௌசிக்கோ கண்ணுக்கு விருந்தளிக்கும் விதமாக போவோர் வருவோரை காண, ஹ்ருதேஷோ ‘இந்த மிதிலா எப்படி ரொம்ப வாயாடறா, கேஸுவலா இருக்கானு இப்ப தான் தெரியுது. ஏற்கனவே மிதிலாவுக்கு வாய் ஜாஸ்தி. வீட்டில் கௌசிக்கை விட தனியா படிக்க போறேன் என்று அழுச்சாட்டியம் பிடித்து வரும் அளவுக்கு அவளது ராஜ்ஜியம் தான்.
இங்கே இந்த பேஷன் டிசைனிங் உலகமும் அவளுக்கு ஏற்றதாக அமைந்திருப்பது போல தென்பட்டது. மிதிலாவுக்கு மிதமிஞ்சிய சுதந்திரம்.

  மிதிலா வருவதை ஹ்ருதேஷ் கவனித்து கௌசிக்கிடம் சுட்டிக்காட்ட, அவனும் தங்கை புறம் திரும்பினான்.

  மிதிலா முகம் லேசாக வாடியிருக்க, ஹ்ருதேஷோ ‘நாம கூட வந்ததால ஈஈஈனு இளிச்சிட்டு வருவானு பார்த்தா உம்முனு வர்றா. என்னவா இருக்கும்?’ என்று சிந்தனையில் முழ்க, “ஏ… ஹாய்” என்று அண்ணனை கண்டு சுரத்தையின்றி நின்றாள்.

“ஏன்டி உன்னை பார்க்க மெனக்கெட்டு வந்தா, டல்லா இருக்க?” என்று கௌசிக் கேட்க அவன் கையிலிருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து குடித்தவள், “அண்ணா… எனக்கு நாளைக்கு காலையில ஒரு மேல்-மாடல் தேவைப்படுது. என் சீனியரை தான் மாடலா காட்ட நினைச்சேன். ஆனா அவன் கடைசி நிமிஷத்தில காலை வாறிட்டான். இப்ப எனக்கு அழகா அம்சமா, ஒரு மேல்-மாடல் வேணும். சட்டுனு கிடைக்க ஏதாவது ஐடியா கொடுடா” என்று அண்ணனிடம் கவலையாய் கேட்டாள்.

  அவள் கேட்ட தோரணையே ஹ்ருதேஷிற்கு பாவமாக இருந்தது.
  கௌசிக்கோ, “என்கிட்ட ஐடியா கேட்கற. நீ இந்த பீல்டுல இருக்கறவ. உனக்கே என்ன பண்ணறதுனு தெரியலை. மாடலுக்கு நான் மட்டும் என்ன ஐடியா தர்றது? என் பிசினஸுக்கே மச்சி தான் ஐடியா தந்தான்.
  மச்சி ஏதாவது ஐடியா கொடுடா” என்று ஹ்ருதேஷை இழுத்து விடவும், “ஏதாவது ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்” என்றாள்.

  ஹ்ருதேஷோ “ஏ.. நான் என்ன உதவறது?” என்றவன் அண்ணனையும் தங்கையையும் பார்த்தான்.

   மிதிலாவோ  கௌசிக்கை தனியாத அழைத்து வந்து, “ஏய்… அண்ணா… உன்‌பிரெண்ட் ஹ்ருதேஷ் கூட மாடல் மாதிரி தெரியறார். அவரை ஹெல்ப் பண்ண சொல்லு. நீ சொன்னா… அவர் நிச்சயம் கேட்பார். எனக்கு வேற சாய்ஸ் இல்லை. மார்னிங்குள்ள மாடல் கிடைப்பது எல்லாம் சான்ஸேயில்லை. ப்ளிஸ் அண்ணா ப்ளீஸ் அண்ணா” என்று கெஞ்சி கௌசிக் தலையில் மிதிலா மிளகாய் அரைத்தாள்.

  கௌசிக்கோ தங்கை முகம் வாடி, கெஞ்சி கேட்கவும் ஹ்ருதேஷை கண்டான்.

ஹ்ருதேஷ் கௌசிக்கை விட உயரம். நிறமும் முகமும் கூட வசீகரிக்கும் விதமாக இருப்பான். இதில் ஒற்றைக்கால் மடித்து சுவரில் சாய்ந்திருந்த கோலம் வெகு அழகாக நன்றாக இருக்கவும், தங்கையை கண்டான்.

“மாடலா… அவனை கேட்டுப் பார்க்கறேன். ஆனா அவன் அக்சப்ட் பண்ணணுமே.” என்று கூற, “எப்படியாவது ஓகே வாங்கு நான் டிரஸ் எல்லாம் கொண்டு வந்து ஒரு ட்ரையல் எடுத்துடறேன். நாளைக்கு ஸ்டேஜ்ல நடக்க வைப்போம்” என்று திட்டம் போட, “ஏய்… இருடி… முதல்ல அவனிடம் பர்மிஷன் கேட்கறேன். நீ பாட்டுக்கு திட்டமிடற? இங்க உன்னை பார்க்க வந்ததுக்கு தண்டனையா?” என்று ஹ்ருதேஷ் அருகே வந்தவன் தயங்கினான்.

“கௌசிக் கிளம்பலாமா?” என்று கேட்க, “இருடா.. மிதிலா ஒன்னு சொல்லணுமாம்.” என்று மிதிலாவையே கேட்க உந்தினான் கௌசிக்.

மிதிலாவோ “எனக்கு நாளைக்கு  ஒரு பேஷன்-ஷோல மேல் மாடலுக்கு டிரஸ் மெட்டீரியல் தச்சி போட்டு ஜட்ஜ் முன்ன நிறுத்தணும். மேல் மாடலா இருந்த சீனியர் பாதில ஓடிட்டான்.

  எனக்கு நாளைக்கு காலையில ஸ்டைலிஷ் வாக் பண்ணணும். நீங்க மாடலா பண்ணி தர்றிங்களா?” என்று பாவமான முகத்தில் கேட்டு நின்றாள்.

“ஏ அண்ணா ப்ளீஸ்னு கெஞ்சுடி” என்று கௌசிக் கூற, “ஹே… அண்ணாவா..‌ என்‌ சீனியரையே அவன்னு தான் சொல்வேன். அண்ணாலாம் கூப்பிட வராது கௌசிக்” என்றாள். ஹ்ருதேஷை காதலித்து அண்ணன் என்று கூப்பிடுவாளா?

“ஹலோ… நான் மாடல் கிடையாது. என்னை ஆளவிடு. உங்கண்ணாவை மாடலா யூஸ் பண்ணு.” என்றான் ஹ்ருதேஷ்.

மிதிலாவோ “அவனும் ஆட்டத்துல இருக்கான். இரண்டு மாடலா நிறுத்துவேன். கௌசிக் எனக்காக செய்வான். நீங்களும் உதவுங்க. ப்ளீஸ்.. நீங்க இப்ப நிற்பதே ஸ்டைலிஷா இருக்கு. இதே வாக் பண்ணி நிற்கணும்.” என்றாள்.

ஹ்ருதேஷ் நேராக நின்றவனாக “நான் ஒன்னும் மாடல் செய்ய இங்க வரலை. ஆளை விடு. கௌசிக் நான் வெளியே வெயிட் பண்ணறேன்.” என்று நடக்க, “ஹலோ… ஆள் இல்லைன்னு தானே உதவி கேட்கறேன். இப்படி ஓடறிங்க. கௌசிக் பிரெண்ட் தானே.” என்று சட்டமாய் பேசினாள்.

“போச்சு… தன்மையா கேட்டாலாவது சம்மதிப்பான். நீ என்ன என்கிட்ட பேசற‌ மாதிரி அவனிடம் கத்தற” என்று கௌசிக் நண்பன் கையை பிடித்து, “மச்சி மச்சி இப்ப தான் இதுக்கு 10000 செலவு பண்ணியதா சொன்னாடா. நீ உதவலை அந்த பணமும் அப்படியே போயிடும். அதோட புலம்பி தள்ளுவா.” என்று கெஞ்சினான்.‌

     ஹ்ருதேஷ் மிதிலாவை பார்க்க, அவளோ நெற்றி சுருங்க நின்றியிருந்தாள்.

  “எனக்கு என்ன பண்ணணும்னு தெரியாதுடா.” என்று நழுவ பார்க்க, “பச்.. அதெல்லாம் நான் டிரையின் பண்ணறேன்.” என்றாள் மிதிலா.

  “நான் இங்க தங்க முடியாது. அன்கம்பர்டபிளா இருக்கு. சுத்தி லேடிஸ்” என்று மறுக்க, “ஓகே.. அண்ணா நீங்க நான் மூன்று பேரும் உங்க வீட்டுக்கு போவோம். நான் என் திங்க்ஸ் எடுத்துட்டு வந்து எப்படி நடக்கணும்னு கத்துத்தர்றேன்.” என்று கூற, ஹ்ருதேஷ் மறுப்பாக தலையாட்டினான்.

  கௌசிக்கோ “ஏன் மச்சி… இங்க மாட்டேன்னு சொல்லிட்ட. உன் வீடு தானே. அங்க பார்த்துக்கலாம். மிதிலா மட்டும் தானே வர்றா. ” என்று மூளை சலவை செய்ய, ஹ்ருதேஷோ மறுக்கும் முன், “ஓகே.. நான் போய் என்னோட திங்க்ஸ் கொண்டு வர்றேன். கேப் புக் பண்ணு. இன்னிக்கு எப்படி ஏதுனு சொல்லி தந்து டியூன் பண்ணறேன். நாளைக்கு இங்க வந்து ஷோல ஜமாய்க்கலாம்” என்று ஓடினாள்.

ஹ்ருதேஷோ ”நான் சம்மதிக்கவேயில்லை. .ஏய் கௌசிக்… உன் தங்கச்சிக்கிட்ட நோ சொல்லுடா.” என்று கத்த, “அவ யார் பேச்சும் கேட்க மாட்டா மச்சி. நினைச்சதை சாதிச்சே பழகிட்டா. நான் ஏதாவது சொன்னா கூட மூடிட்டு இருனு சொல்வா.” என்று புகழ்ந்தான்.
ஹ்ருதேஷ் மனமோ, ‘ஆமாடா இப்படி வளர்த்து வச்சிட்ட, அவ என்னை காதலிப்பதா வந்து நிற்கறா. நானும் தலையாட்டி காதலிச்சிட்டேன். இப்ப எங்க காதல் தெரிந்தா நீயும் உன்‌ குடும்பமும் என்னை துரோகியா நினைச்சா அதுக்கும் பலிகாடு நான் தானா?’ என்று மனதில் வெதும்பினான்.

  அதற்குள் ஒரு சூட்கேஸ் பேக் எடுத்து வந்தவள், “கேப் புக் பண்ணலை. உங்களை எல்லாம்?” என்று கடிந்து அவளே கேப் புக் செய்ய ஆரம்பித்தவள், அட்ரஸ் தெரியாதது போல, “கௌசிக்… உன்‌ பிரெண்ட்டோட அட்ரஸ் எனக்கு தெரியாது. அவரை அட்ரஸ் போட சொல்லு” என்று ஹ்ருதேஷிடம் போனை நீட்டினாள்.

ஹ்ருதேஷோ ‘உலக மகாநடிப்புடா சாமி. எத்தனை‌ முறை அவளா வந்துயிருக்கா. நான் இருக்கற அட்ரஸ் தெரியாதா?’ என்று பார்வையிட்டு அட்ரஸை போட்டு நீட்டினான்.‌

மிதிலாவும் “புக் ஆகிடுச்சு. வாசல்வரை இதை இழுத்துட்டு வா” என்று கௌசிக்கிடம் லக்கேஜை தள்ளிவிட்டு முன்னே நடந்தாள்.

  “ஸ்னாக்ஸ் கொடுக்க வந்த என்னை, லக்கேஜை இழுத்துட்டு வர வச்சிட்டா பாருடா ஹ்ருதேஷ்” என்று புலம்ப, “டேய்… நீயாவது ஓகே. நான் என்னடா பண்ணினேன்.” என்று கேட்க, கௌசிக் சிரித்தபடி, “சாரி மச்சி.” என்று நண்பனோடு நடந்தான். கேப்பில் ஏறியதும், ஹ்ருதேஷ் தங்கியிருக்கும் வீடு வரவும், ஏதோ புதிதாக வருபவள் போல நாலாப்புறம் பார்வையிட்டு நடந்தாள்.

“உன் பிரெண்ட் நல்ல இடத்துல தான் தங்கியிருக்கான்” என்று அண்ணனிடம் ஹ்ருதேஷை பாராட்ட, “ஏய்… நீ என்ன அவன் இவன்னு சொல்லற.” என்று கேட்க, “உன்னையே அப்படி சொல்வி பழகிடுச்சு. கேப்புக்கு பணத்தை நீட்டு” என்று சுட்டிக்காட்டினாள்.

ஹ்ருதேஷ் முன்னே நடக்க கௌசிக் லக்கேஜை சுமந்து வர, மிதிலாவோ ‘நினைத்ததை நடத்தியே முடிப்பவள் நான் நான் நான்’ என்று மெதுவாக பாட்டு பாடி பின் தொடர்ந்தாள்.

   ஹ்ருதேஷ் வீட்டை முதல் முறை பார்ப்பது போல பார்வையிட, கௌசிக் தான் உட்கார கூறினான்.

  “புதுசா ஒருயிடத்துக்கு வந்திருக்கேனே. தண்ணி எடுத்து கொடுக்கணும், டீ காபி போடணும், ஏதாவது சாப்பிட தரணும்னு தோனுதா?” என்று இருவரை பார்த்து பேசவும், ஹ்ருதேஷ் அவளை கூடுமானளவு முறைத்துவிட்டு நீரை நீட்டினான்.‌

தண்ணினா தண்ணி தான் தருவிங்களா?” என்று கேட்க, கௌசிக்கோ “மிதிலா.. உனக்கு மாடலா அவன் வேணுமா வேண்டாமா? வாய் துடுக்கா பேசின. இப்பவே நடையை கட்டு” என்றான் அண்ணன்காரன்.

ஹ்ருதேஷோ ‘இதுக்கு இருக்கற வாயுக்கு, இந்த உலகத்தையே வித்துடும்.’ என்று நினைத்தபடி காபி கலந்தான்.

அதை மூவரும் பருகிவிட்டு சற்று நேரம் மிதிலா அவள் தைய்த்த துணிகளை எடுத்து கடை பரப்பினாள்.

இரண்டு நாட்களுக்கு முன் ‘நான் டிசைன் செய்து, ஸ்டிரிஜ் பண்ணின டிரஸெல்லாம் உன்கிட்ட காட்டணும் இங்க கொண்டு வரட்டா?’ என்று மிதிலா கேட்க, ‘ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். உன் பேஷன் உன்னோட வச்சிக்கோ. நான் பார்க்க கூட தயாராயில்லை என்றான்.

இன்றோ அவனது ஹாலில் கடை பரப்பி இருந்தவளை கண்டு, “இவ எல்லாம் ப்ளூ ப்ரிண்ட் போடாமலே பிளான் போட்டு எக்ஸிகியூட் பண்ணறா. ஹ்ருதேஷ் எப்படி சிக்கற பாரு’ என்று பொறுமினான்.

  “பசிக்குது… சாப்பிட போகலாமா? இங்க ஏதாவது ஹோட்டல் இருக்கா?” என்று கேட்க, “நடிப்பு சாவித்திரி… அவார்டே தரலாம்.’ என்றது போல ஹ்ருதேஷ் கையை கட்டி நின்றான்.
கௌசிக்கோ அதெல்லாம் இரண்டு தெரு தள்ளி போனா இருக்கு வா” என்று அழைத்து சென்றான்.

“அம்மாகிட்ட சொன்னியா?” என்று நடந்தபடி கேட்டாள்.
கௌசிக்கோ “இல்லை… தெரிந்தா கத்துவாங்க. ஹ்ருதேஷ் கூட நான் சுத்தினாலே திட்டு விழும். நீயும் நானும் இங்க இன்னிக்கு தங்கினா அவ்ளோ தான்.” என்று தோளைக்குலுக்கினான்.‌

“ஆனா இது என் புராஜக்ட். நான் டிசைன் செய்த டிரஸ் போட்டு வாக் பண்ணறதை நான் இன்ஸ்டா எஃப்.பில போடுவேன்.
  அதோட எங்க காலேஜ்ல சேனல்ல டெலீகாஸ்ட் ஆகும். அவங்க சேனல்ல லைவ் போகும்.” என்று அடுக்கினாள்.‌

இதெல்லாம் தெரிந்தால் ஹ்ருதேஷ் மறுப்பானென எண்ணி, ”அந்த ஷோ முடிந்தப்பிறகு அம்மாவிடம் சொல்லிப்போம். ஹ்ருதேஷிடமும்… இல்லைன்னா மாட்டேனு சொல்வான். அவனுக்கு பிடிக்காது.” என்று கூற களவானியும் ஒப்புக்கொண்டாள்.

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top