அத்தியாயம்-10
ஹ்ருதேஷ் தந்த பணத்தில் மளமளவென கௌசிக் வேலைகளை பார்க்க, தீபாவோ மகனது செய்கையை எல்லாம் உன்னிப்பாக கவனித்து வந்தார்.
“சும்மாவே இவன் அவன் பின்னாடி ஓடுவான். இதுல பணத்தை வேற தந்துட்டான். இவனை கையில பிடிக்க முடியாது. அந்த ஹ்ருதேஷ் என்னடான்னா, அவங்க அம்மா அப்பாவுக்கு பணம் தந்ததை சொல்லாதிங்கன்னு சொல்லிட்டான்.
எனக்கென்னவோ இது சரியாவேபடலை.” என்று தீபா புலம்பிட, செல்வராகவனோ “ஏன்டி… நம்ம பையனா அவனிடம் பணம் தந்தான். அவன் தான் தந்திருக்கான். ஏதாவது பயப்படணும்னா அவன் தான் பதறணும். நீ என்ன இப்படி பேசற?” என்று கேட்டு நின்றார்.
“ம்கூம்… உச்களுக்கு நான் சொன்னா புரியாது.” என்று வீட்டு வேலையை பார்க்க சென்றுவிட்டார்.
செல்வராகவனுக்கு இத்தனை நாள் மகன் ஏதாவது முன்னேறுவானென்று எண்ணியிருக்க, இன்று அவனாக முயலும் போது கூடவே நின்று வழிநடத்தினார்.
சில விஷயம் ஹ்ருதேஷிடம் கேட்டு கேட்டு மகன் செய்யும் பொழுது, “ஏன்டா… நீயா உனக்கு என்ன செய்யணும்னு தோனுதோ அதை செய்டா. அவனிடம் எப்ப பாரு பர்மிஷன் கேட்கற. நீயா செய்தா அவன் பார்த்து மலைக்க வேண்டாமா?” என்றதும் கௌசிக் சிந்தித்தான்.
எப்படியும் தனது திட்டத்தில் செயல்படுத்தி ஹ்ருதேஷ் அதை பார்த்து வியந்தால் நன்றாக இருக்குமென அவனும் சொல்வதை தவிர்த்தான்.
இம்முறை கௌசிக்கிற்கும் அலைப்பேசியில் தினமும் பேசுவதை குறைத்திருந்தான். குறைத்திருந்தான் என்றதை காட்டிலும், நண்பனை அழைத்து விரைவில் கடை திறப்பு விழா நடத்த வேண்டுமென புயலாய் வேலையில் மூழுகினான்.
ஷ்ருதேஷுக்கும் வேலை கழுத்துவரை இருந்தது. ஃபேஷன் டிசைனிங் படிக்கும் மிதிலாவுமே அவளது துறையில் கவனத்துடன் தான் இருந்தாள்.
அடிக்கடி ஹ்ருதேஷூடன் பொதுயிடத்தில் சந்திப்பதும், ஹோட்டலில் சாப்பிடுவதும், ஏதேனும் பார்க் மால் என்று சுற்றி வருவாள்.
அப்பொழுது எல்லாம், ஹ்ருதேஷ் கைகளை பிணைத்துக் கொள்வாள். அவனுக்குமே அது பழகியது.
அவளுடன் வெளியே செல்ல நேர்கையில், படம் பார்க்கையில், அவளை தன் தோளில் சாய்த்து கொள்வான்.
இப்படியான தருணத்தில் தான், தோழிகள் “லவ்வர்னு சொல்லற ஒரு பிக் கூட தனியா எடுக்கலையா?” என்று ஹ்ருதேஷை காதலிப்பதாக கூறிய பெண் கேட்க, “சேர்ந்து போட்டோ எடுத்தா தான் லவ்வர்னு டிக்ளர் பண்ணுவிங்களா உஷாந்தி” என்றதற்கு, ஆமா.. இல்லைன்னா விடாம துரத்துவேன்” என்று விளையாட்டாய் மொழிய, அதை மிதிலாவிடமும் கூறினான்.
மிதிலாவோ, “எவ அவ… உஷாந்தி.. ஒட்டி உரசி போட்டோ எடுத்தா தான் நம்புவாளா? அடுத்து மீட் பண்ணறப்ப சொல்லு பேசற வாயை தச்சிடுறேன்.” என்று கொதித்தாள்.
ஹ்ருதேஷ் வெறுப்பேற்றும் விதமாக, “ஆமா… என்னோட ஒரு போட்டோ சேர்ந்து எடுத்து உன் போன்ல உங்கண்ணா பார்க்கற விதமா வைப்பியா? இல்லைல.. அப்பறம் என்ன?” என்று சீண்டவும், மிதிலாவோ புஸுபுஸுவென மூச்சு விட்டு, “ஹ்ருத்… எவளோ ஒருத்தி நம்ம சேர்ந்து பிக் வச்சியில்லைனு சொன்னதும் இப்படி என்னையே கேட்கற, எழுதி வச்சிக்கோடா.. போன்ல பிக் மட்டும் இல்லை. என் ரூம்ல ஓட்டி வைக்கலை.. என் பேரு மிதிலா இல்லை.” என்று சபதமெடுத்தாள்.
“ஓ… சவாலா? பார்ப்போம்” என்று அவளை கண்டு சீண்டும் விதமாகவே சிரித்தான்.
மிதிலாவோ சபதம் நிறைவேற்ற நாட்களை எதிர்பார்த்தாள்.
அந்த நன்னாலும் அவளுக்கு வந்தது. ஒரு மாதம் முடியும் நேரம் கௌசிக் சொல்லாமல் கொள்ளாமல் தங்கையை காண வந்தான். தீபா செய்து தந்த பலகாரத்துடன், முதலில் தங்கையை கூட காண வராமல், ஹ்ருதேஷ் இருக்கும் விலாசத்திற்கு வந்து சேர்ந்தான்.
கதவு திறக்கும் நேரம் “ஹ்ருதேஷ்” என்ற கௌசிக் குரலில் தூக்கி வாறி போட, ஹ்ருதேஷ் திரும்பினான்.
“கௌசிக்.. நீ எப்படி இங்க? எப்ப வந்த? ஒரு வார்த்தை நீ வந்ததை சொல்லவேயில்லை” என்று பதறினான். ஏனெனில் மிதிலா இவனை காண இங்கு தான் வந்துக் கொண்டிருந்தாள்.
“மிதிலாவை பார்க்க வந்தேன்டா. அங்க வாடகை பாரத்த இடத்துல எல்லாம் ரெடி பண்ணிட்டேன். அடுத்த வாரம் பிசினஸுக்கு கடைத் திறந்து ஆரம்பிச்சி விடு. அதை சொல்லிட்டு சனி ஞாயிறு கூட இருக்க வந்தேன்.” என்றான் சந்தோஷமாக.
ஹ்ருதேஷோ முகம் பேயறைந்தது போல மாறி, “ஒ…ஒரு நிமிஷம்டா. நான் ஆபிஸ் கால் பேசிட்டு வந்துடறேன். நீ ரூம்ல இரு” என்று கதவை திறந்து உள்ளே அனுப்பினான்.
கௌசிக்கும் அவனாக மகிழ்ச்சியுடன் அறைக்கு வந்துவிட்டான்.
ஹ்ருதேஷ் அவசரமாக மிதிலாவுக்கு அழைத்து, “மிதுலா… கேப் ஏறிட்டியா என்ன?” என்று கேட்க, “இல்லைப்பா… கேப் புக் ஆகலை” என்று வருத்தமாய் உரைத்தாள்.
“தேங்க் காட். நீ கேப் புக் பண்ணாத. இங்க கௌசிக் வந்திருக்கான். நீ பாட்டுக்கு நேர்ல வந்து நிற்க போற” என்றதும், “பக்கி… இங்க வந்ததும் என்னை பார்க்க வராம உன்னை பார்க்க வந்துட்டானா? சரி நேர்ல வருவான்ல அப்ப பார்த்துக்கறேன். நான் தங்கியிருக்கற இடத்துக்கே கிளம்பறேன்.
உன் பிரெண்டை கட்டிக்கிட்டு சுத்து” என்று வைத்திடவும் நெஞ்சில் கைவைத்து கௌசிக்கை தேடி ஓடினான்.
“மச்சி.. சாரிடா சாரிடா. என்னடா சொல்லாம கொள்ளாம வந்துட்ட.” என்று கட்டி ஆரத்தழுவவும், “மச்சான் அடுத்த வாரம் கடைத் திறப்பு இருக்குடா. நீ தான் முக்கியமா வரணும். நேர்ல சொன்னா தானே நல்லது. எங்கப்பா அம்மா கூட நான் ஏதாவது பிசினஸ் பண்ணறேன்னு சொன்னப்ப அதை பத்தி உட்கார்ந்து பேசலை. நீ தான்டா எனக்கு ஐடியா தந்து, பணமும் தந்திருக்க. இதுல ஆன்ட்டி அங்கிளிடம் பணம் தந்ததை கூட சொல்லலை. இதெல்லாம் பெரிய விஷயமில்லையா?” என்று அடுக்கினான்.
ஹ்ருதேஷோ பையை வைத்துவிட்டு, முகம் அலம்பியவாறு, “இதெல்லாம் நட்புக்குள்ள சகஜம் தானடா? இதுல என்ன பெரிய விஷயம். என்ன சாப்பிடற?” என்று அங்கிருந்த கூல் டிரிங்க்ஸை எடுத்திட, “கொஞ்சமா ஊத்துடா. தாகமா இருக்கு. முதல்ல டின்னர் முடிச்சிடுவோம்” என்றதும், மடமடவென உடை மாற்றி கிளம்பினார்கள்.
ஹ்ருதேஷ் எப்பொழுதும் சாப்பிடும் ஹோட்டலில் வந்து அமர்ந்தான்.
வெயிட்டர் உணவை கேட்டுவிட்டு, “அவங்க வரலையா?'” என்று கேட்டான்.
மிதிலா யார் என்ன என்று பாராமல் வெயிட்டரிடம் கூட நட்பு பாராட்டி பேசுவதால் வெயிட்டர் விசாரிக்க, “இ..இல்ல..” என்று மறுத்தான் ஹ்ருதேஷ். கௌசிக் அந்த நேரம் விழி நிமிர்த்தி பார்த்துவிட்டு, அமைதியானான்.
அடிக்கடி சாப்பிடும் போது கௌசிக் ஹ்ருதேஷை ஆராய்ந்தான்.
முதல் முறை ஹ்ருதேஷ் காதலிக்கின்றானோ என்று சிந்தித்தான்.
ஹ்ருதேஷ் கூடயிருக்கும் வரை யாரையும் காதலிக்கவில்லை. ஆனால் குளத்தங்கரையில் ஒரு பொண்ணு இங்கயும் பொண்ணு பற்றி பேச்சு வரவும் யாரையோ விரும்புவதாக லேசான சந்தேகம் முளைத்தது. ஆனால் அது யார் என்ன என்று கேட்டிட தயங்கினான்.
ஹ்ருதேஷ் கேட்காமலேயே பணமும், பிசினஸ் திட்டமும் கொடுத்து தன்னை வழிநடத்துகின்றான். அப்படியிருக்க காதலித்தால் தன்னிடம் சொல்வான். நானாக கேட்டு காதலிக்காமல் இருந்து மனதை புண்படுத்த வேண்டாமென பக்குவமாக இருந்தான்.
“ஆமா.. அதென்ன வீட்ல பெட்டி?” என்று கேட்க, ஸ்வீட் முறுக்கு இது மாதிரி அம்மா செய்தது. மிதிலாவை தான முதல்ல பார்த்து தந்துட சொன்னாங்க. எனக்கு தான் உன்னை பார்க்கணும்னு ஆசையா இருக்க வந்துட்டேன். அவளை நாளைக்கு போய் பார்க்கறேன். அங்க லேடிஸா இருப்பாங்க. நீயும் வர்றியா ஹ்ருதேஷ். நீயும் நானும் ஒன்னா ரவுண்ட் அடிச்சி மாசக்கணக்காகுது.” என்று கேட்டான்.
ஹ்ருதேஷும் “ம்ம்ம் போகலாம்” என்று முடித்துக் கெண்டான். ஹ்ருதேஷ் மனமோ கௌசிக் அவன் தங்கையை கூட பாராமல் நேராக தன்னை தேடி வந்ததில் மீண்டும் லேசாக குற்றவுணர்வு கொண்டான்.
ஆனால் நட்புக்கு செய்யும் துரோகம் என்ற கண்ணோட்டம் எல்லாம் மாறி, மிதிலா தன்னவளென்ற எண்ணமும் ஹ்ருதேஷ் மனதில் முழுதாக பதிந்து விட்டது.
இரவு ஒரே அறையில படுக்க, மிதிலாவோ தனியாக ‘இன்னிக்கு போன் மெஸேஜ் பண்ண மாட்டான். கூடவே என் உடன்பிறப்பு படுத்துக்கிடப்பான்.
இவனுக்கு என்ன தைரியம்? என்னை பார்க்க அம்மா அனுப்பினா. நேரா நண்பனை பார்க்க ஓடியிருக்கான். வரட்டும்… வரட்டும்…’ என்றவளுக்குள், ‘நான் ஹ்ருதேஷை விரும்புவதை அண்ணாவிடம் சொன்னாலும் அண்ணா பெருசா மறுக்காது. இந்தளவு ஹ்ருதேஷ் மேல அன்பு இருக்கறப்ப ஹ்ருதேஷை தண்டிப்பானா? என்று தான் மிதிலா எண்ணியது.
அதிலும் அண்ணன் கௌசிக் முன்னேற பணம் தந்தது ஹ்ருதேஷ் தானே. அதனால் அண்ணனே தங்கள் காதலுக்கு பச்சை கொடி காட்டி, வீட்டில் எடுத்து சொல்வான், அப்பா கொஞ்சம் மறுப்பார், ஆனால் மெத்தமாய் கைவிடமாட்டார் என்று நம்பினாள்.
மிதிலாவுக்கு உறக்கம் வராமல் போகவும், அண்ணன் கௌசிக்கிற்கு போனில் அழைத்தாள்.
மிதிலா’ என்ற பெயரில் போன் ஒளிரவும், ஹ்ருதேஷ் இதயம் பதறி அதிர, கௌசிக்கோ “இவ எதுக்கு கால் பண்ணறானு தெரியலை” என்று சாவதானமாக எடுத்து பேசினான். ஹ்ருதேஷ் ஒரு நொடி உயிர் போய் உயிர் வந்தது.
“சொல்லு லூசு?” என்றான் கௌசிக்.
“ஏது. நானா இவனா? முதல்ல பேச வந்ததை மறந்துடுவேன்.’ என்று “ஏய் கௌசிக்… குறுக்க வராம நில்லு. அம்மா போன் பண்ணினா நீ இங்க வந்ததா சொன்னாங்க. என்னை பார்க்க வராம எங்க போன?” என்று கத்தினாள்.
“நம்ம ஹ்ருதேஷ் வீட்டுக்கு போனேன். ஏன் உன்னை பார்க்க வந்தேன்னு ஐஸ் மழையால நனைந்தியா. இங்க வந்ததிலயிருந்து சொல்லிட்டேன். என் பிரைவேஸி எனக்கு முக்கியம். உன்னை பார்க்க வந்தா அவ அவ என்னை அளவெடுக்கறா. என்னை பார்த்தா எப்படி தெரியுது.” என்று சண்டையிட, “உன்கிட்ட பேச ஆசைப்பட்டேன் பாரு சீ பே” என்று உறங்க போவதாக கூறினான்.
“அந்த உம்முணாகொட்டி உன் கூட தான் இருக்கானா? என்று கேலி செய்ய, “ஏய் என் பிரெண்டை ஏதாவது சொன்ன அப்படியே ஊருக்கு கிளம்பிடுவேன்” என்று அச்சுறுத்தினான்.
“ஏதோ பண்ணி தொலை” என்று மிதிலா கூறிட, “மிதிலா.. நாளைக்கு நானும் ஹ்ருதேஷம் உன்னை பார்க்க வருவோம்’ என்று சொல்விவிட்டு உறங்கினார்களள்.
‘ஓ… ஹ்ருதேஷை அழைச்சிட்டு வர்றியா? வரட்டும் வரட்டும்.. ஹ்ருத் செல்லத்தை எப்படி ஆட்டிப் படைக்கறேன்னு பாரு.’ என்று மானசீகமாக சில பிளானை போட்டு கொண்டிருந்தாள்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

Nice