Forum

குடல் குழம்பு
 
Notifications
Clear all

குடல் குழம்பு

1 Posts
1 Users
0 Reactions
3 Views
(@praveena-thangaraj)
Posts: 265
Member Admin
Topic starter
 
[#356]

நான் எல்லாம் நான்வெஜ் சொய்வேன்னு கனவுலையும் நினைச்சதில்லை. ஆனா பாருங்க... இப்ப எல்லாம் செய்துடறேன். கிரிடிட் டூ குட்டி வாலு. சரி வாங்க செய்முறை பார்ப்போம். 

குடல் குழம்பு செய்ய தேவையானவை:

ஆட்டுக்குடல் – ½ கிலோ 

சின்ன வெங்காயம் – 200 கிராம்

தக்காளி – 2

இஞ்சி பூண்டு விழுது – 1½ டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

கறிவேப்பிலை – 1 கொத்து

மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1½ டீஸ்பூன்

தனியாத்தூள் – 2 டீஸ்பூன்

சீரகத்தூள் – ½ டீஸ்பூன்

கரம் மசாலா – ½ டீஸ்பூன்

உப்பு – தேவைக்கு

எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

அரைக்க:

தேங்காய் – ½ கப்

சோம்பு – 1 டீஸ்பூன்

மிளகு – ½ டீஸ்பூன்

குடலை கடைக்காரர்களே இப்ப எல்லாம் நன்றாக கட் செய்து சின்னதாக வெட்டி தர்றாங்க. நாம அதை நுட்பமாக சுத்தம் செய்யணும். முடிந்தா கொஞ்சம் சுடத்தண்ணீரில் காலிபிளவர் போட்டு வேக விட்டு எடுக்கற மாதிரி பத்து நிமிஷத்துல எடுத்தா, மிக நன்றாக சுத்தமாக கழுவிடலாம். 

அதுல மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கழுவிக் கொண்டு

பிரஷர் குக்கரில் குடலை, சிறிது மஞ்சள் தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து 5அல்லது6 விசில் வேகவைக்கணும். நல்லா வெந்தால் தான் சாப்பிட சாப்டா இருக்கும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கறிவேப்பிலை போடணும். 

சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கணும்.

இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கணும்.

தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கிட்டு

மஞ்சள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் ஒன் பை ஒன்னா சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளணும்.

வேகவைத்த குடலை அதில் சேர்த்து நன்றாகக் கிளறணும்.

அரைத்த தேங்காய் சோம்பு மிளகு விழுது இருக்கும்ல, அதையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி

மூடி வைச்சி, 10–15 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

கடைசியில் கரம் மசாலா தூவி 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கிடணும்

அவ்வளவு தான். 

சிறப்பு டிப்ஸ்: குடல் குழம்புக்கு சின்ன வெங்காயம் கொஞ்சம் அதிகமாகவும், மிளகு-சோம்பு சேர்த்தும் செய்தால் நல்ல வாசனையும் சுவையும் வரும்.

சூடான சாதத்திற்கு குடல் குழம்பு நல்லா இருக்கும்.

அதோட இட்லி சப்பாத்திக்கும் செமையா இருக்கும். 

 


 
Posted : September 10, 2026 9:33 pm

Scroll to Top