சிக்கன் சுக்கானி
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 500 கிராம்
வெங்காயம் -2 பெரிதாக
பட்டர்-5 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – ½ டீஸ்பூன்
மிளகுத்தூள் – ½ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
கஸ்தூரி மெட்டி-சிறிதளவு
தயிர்-ஒரு கப்
பட்டை கிராம்பு அண்ணாச்சிபூ, இதர,
Chukauni (சுகானி/சுக்கானி) என்பது நேபாளி/இமயமலைப் பகுதிகளில் பிரபலமான தயிர் அடிப்படையிலான ஒரு உணவு.இதில் தயிர் முக்கியமானதாக ஆக வரும்.
சிக்கன், வெங்காயம் நன்றாக நறுக்கியது பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி, கஸ்தூரி மெட்டி அனைத்தையும் ஊறவைத்து நன்ளாக கலந்து, பட்டரை ஊற்றி இதெல்லாம் வதக்கவும். கொஞ்சம் சிக்கன் பச்சை வாசம் போய்விட்டு, கொஞ்சம் போல தண்ணி ஊற்றி நன்றாக வேகவைத்து கொள்ளவும். ஓரளவு திக்காக வந்ததும், தனியாக எண்ணெய் கொஞ்சம் போல கடாயில் ஊற்றி பட்டை கிராம்பு அண்ணாச்சி பூ போட்டு அதில் கருவேப்பிலை போட்டு தாளித்து தயிரில் கலக்கி, வேகவைத்த சிக்கனில் சேர்த்து நன்றாக கிளறவும்.
இவ்வாறு கலந்து உடனடியாக கீழேயிறக்கினால், சப்பாத்திக்கும் இட்லிக்கும் தொட்டு சாப்பிட தோதாவாக சிக்கன் சீக்கானி ரெடி. சாதத்தில் பிசைந்து சாப்பிட்டாலும் சுவை தரும். இது ஹோட்டலில் செய்யப்படும் கிரேவி போல சுவை தரும்.
- 25 Forums
- 329 Topics
- 1,582 Posts
- 0 Online
- 420 Members
