Forum

மதுர ஜில்லா... மச்ச...
 
Notifications
Clear all

மதுர ஜில்லா... மச்சானே!-59

8 Posts
8 Users
4 Reactions
218 Views
(@praveena-thangaraj)
Posts: 260
Member Admin
Topic starter
 
[#290]

அத்தியாயம்-59

அனைவரும் சாப்பிட பந்தி விரிக்கப்பட்டது.
பெரிதாக எதுவும் சமைக்க முடியவில்லை
சாம்பார், ரசம், உருளைக்கிழங்கு பொரியல், முட்டை பொரியல், அப்பளம், ஜவ்வரிசி அப்பளம், மோர், தயிர், ஊறுகாய் என்று இருந்தவற்றை இளையமதியும் நிலானியும் சேர்ந்து பரிமாற ஆரம்பித்தனர்.

அருளாளன்-வேல்விழி, அருகே மீனாட்சி-அதியமான் பக்கம், அகிலன் - காவ்யா அமர்ந்திருக்க, இன்னொரு வரிசையில் மதுரா-இனியன், எழிலரசன் கல்யாண சுந்தரமும்  அமர்ந்தனர்.

நிலானி ஒவ்வொருவருக்கும் சோறு பரிமாறிக் கொண்டே வந்தாள். இனியனின் அருகே வந்தவள், முகத்தைத் திருப்பிக் கொண்டே தட்டில் உருளைப்பொரியலை நொங்கொன்று வைத்தாள். அதை இனியன் கவனித்தாலும் எதுவும் சொல்லவில்லை. பிறகு சோறு பரிமாறும் பொழுது இனியனுக்கு சிதறியபடி சோற்றை வைக்கவும் தான் மதுரா நிலானியின் முக திருப்புதலை பார்த்தாள். இனியன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அமைதியாக இருக்கவும் மதுராவுக்கு ஒரு மாதிரி வலித்தது. என்னயிருந்தாலும் இனியன் தற்போது அவளது கணவனாயிற்றே. தன் தங்கை இப்படி மரியாதையின்றி நடந்தால் எப்படி? அதிலும் இனியனை வைத்து பயந்து அவள் வாழ்வில் காதலித்ததாக அல்லவா அவள் பக்கத்து நியாயத்தை தந்திருக்கின்றாள்.
  தன் வாழ்க்கையால் நிலானி பயந்து தவறான முடிவெடுத்து இருக்கவும் புரிந்துக் கொண்டவள். முதலில் இனியன் மச்சானிடம், அவள் மரியாதை குறைவாக நடப்பதை தடுக்க முனைந்தாள்.

நிலானி குழம்பு ஊற்றும் நேரம் மதுராவே "நிலானி... என் புருஷனுக்கு குழம்பை ஊத்தி பரிமாற நான் இருக்கேன். நீ போய் கொஞ்சம் நெய் எடுத்துட்டு வா." என்றாள்.
நிலானி அவளைப் பார்த்தாள். 'என்னது புருஷனா? இந்தக்காவை அம்புட்டு உதாசினம் செய்தும் நெய் எடுத்தாற சொல்லுதே' என்று பார்வையிட்டாள்.

"ஏய்.. அப்புறம்... உளுந்து அப்பளம் வேண்டாம். ஜவ்வரிசி அப்பளம் பொரிச்சது இருந்துச்சுல... அதை கொண்டு வா." என்று அவள் தோளை தட்டி அனுப்பினாள்.
"ம்ஹூம்..." என்று முணுமுணுத்துக் கொண்டே நிலானி உள்ளே சென்றாள்.

மதுரா நிலானியை ஏவியதில், 'என் புருஷன்...' என்ற அந்த ஒரு வார்த்தை மட்டும் இனியனின் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது. அவன் அறியாமலே உதட்டில் புன்னகை மலர்ந்தது.

அதை கவனித்த அகிலனும் மனதிற்குள் சிரித்துக் கொண்டான். 'பரவாயில்ல... மதுராவும் கடந்து வர்றா.' என்று நிம்மதியடைந்தான்.

  அதே நேரம் காவ்யா "அகில் எனக்கும் நெய் வேணும்." என்றாள் கிசுகிசுப்பாக. "காவ்யா... வம்பு பண்ணாத" என்று அகிலன் அதட்டினான்.
ஏதோ போட்டிக்கு கேட்பதாக அகிலன் மெதுவாகத்தான் சொன்னான்.

மற்றவர்களுக்கு கேட்கவில்லை.
ஆனால் மதுராவுக்கு அகிலனின் கிசுகிசுப்பான குரல் கேட்டுவிட உடனே நிலானியிடம்,
"அவங்களுக்கும் கொடு." என்று கண் காட்டினாள்.

நிலானிக்கு வேறு காவ்யாவை பிடித்திட, நெய் ஸ்பூனில் வந்து கொடுத்தாள்.

'தேங்க்யூ' என்று காவ்யா சிரிக்க,
நிலானியும் ஒரு ஸ்பூன் நெய்யை அகிலன் மச்சான் சோற்றிலும் ஊற்றினாள்.

சிறிது நேரத்தில் காவ்யா முட்டை அடையை சாப்பிட்டாள். அடுத்த நொடியே,
"அகில்... ஸ்ஸ்ஸ்.. ஆ அகில்.. காரம்." என்று வாயை மூடிக் கொண்டாள்.

காவ்யா பச்சை மிளகாயை கடித்திருந்தாள்.
"தண்ணி..." என்று கண் கலங்கினாள். அகிலன் உடனே தனக்கு வைத்த தண்ணீர் டம்ளரையும் நீட்ட குடித்தவளோ காரமாயிருக்கு அகில்" என்று கண்ணீரில் நீரை வைத்து கேட்டாள்.

"ஸ்வீட்..‌ ஸ்வீட்.. ஏதாவது இருக்கா அத்தை" என்று இளையமதியிடம் கேட்க,
"இல்லயேப்பா" என்று தடுமாற,
"சர்க்கரை இருக்கும்ல" என்று அகிலன் கேட்டான்.

இனியனோ மதுராவிடம் "கருப்பட்டி இருந்தா கொடு. ஏதோ சாக்லேட் மாதிரி திம்பா" என்று கூறினான்.

முன்பு இனியன் பிசினஸ் என்று கூறி ஆரம்பித்த பொழுது இதெல்லாம் எங்கவூர் ஸ்பெஷல் என்று சாப்பிட தந்திருந்தான். அதிலிருந்து காவ்யாவுக்கு கருப்பட்டி இஷ்டம். அதை தான் இன்று கூறினான்.‌

மதுரா இனியன் கூறியதை கேட்டு, அன்னை இளையமதியிடம் "அம்மா..‌ . கருப்பட்டி எடுத்துட்டு வந்து கொடு" என்றதும் அவரும் ஓடினார்.

   அதே நேரம் எழிலரசன் விக்கிக் கொண்டிருந்தான். டம்ளரை பார்த்தான். அவனது தண்ணீர் டம்ளரிலும் தண்ணீர் காலியாக இருந்தது.

"தண்ணி இருந்தா எடுத்துக் குடிக்கலாம்ல" என்று முனகினாள் நிலானி.

அடுத்த நொடி காலி டம்ளரை நிலானியின் முகத்தருகே நீட்டி காட்டினான் எழிலரசன். ''தண்ணி எங்கடி இருக்கு? கூப்பிட்டு வச்சி அசிங்கப்படுத்தறியா?
இல்ல நானே வந்து அசிங்கப்படுறேனா தெரியல." என்று எரிந்து விழும் அளவிற்கு அதே நேரம் மெதுவாக தான் சொல்ல, நிலானி திகைத்துப் போனாள். மேலும் மற்றவன் கவனம் காவ்யாவிடம் இருந்தது.

   இதுவரை எழிலரசன் நிலானியிடம் இப்படிப் பேசியதே இல்லை. இதில் டி' போட்டு வேறு பேசுகின்றான்.‌ அதனால் தண்ணீர் ஊற்றி அமைதியாக முன்னே வைத்தாள்.

காவ்யாவும் கருப்பட்டியை திண்றதும் தான் 'உப்ஸ்' என்று நிதானமானாள்.
 
  "எப்பவும் பெப்பர் போட்டு ஆம்லேட் சாப்பிடுவா. பச்சை மிளகாய் போட்டு கொடுத்ததில்லை‌. அதான்.‌ பார்க்காம சாப்பிட்டு இருப்பா" என்று மீனாட்சி கூற, தூரிகாவோ ''இல்லைன்னா மட்டும் உங்க மருமகளுக்கு அப்படியே சாப்பாட்ல பச்சை மிளகாய்க்கும் பீன்ஸுக்கும் வித்தியாசம் தெரிந்துடும்" என்று நக்கலாக கூற 'தூரிகா' என்று அதியமான் அதட்ட, "ஒன்னுமில்லைப்பா" என்று சாப்பிட்டாள்.

   காலையில் யார் சாப்பிட்டார்களோ இல்லையோ பிரபு வசந்தால் பிரச்சனை சூழ்ந்ததாக இருந்தது, குடும்பமாய் நிறைவாக மதிய சாப்பாட்டை சாப்பிட்டு முடிக்கும் இனிய நிகழ்வாக மாறியது.

சாப்பிட்டு முடித்ததும் ஒவ்வொருத்தராய் கை அலம்பினார்கள்.
எழிலரசன் கடைசியாக  கை கழுவ எழுந்தான்.

"ஏய்... கை துடைக்க துணி வேணும்." என்றான். நிலானி உடனே திரும்பிப் பார்த்தாள்.

"என்ன அப்ப 'டி' போட்டிங்க. இப்ப 'ஏய்' போடறிங்க?" என்று முறைத்தாள்.

"ஆங்.. இதுவரைக்கும் நல்லவனா தான் பேசினேன்.
நீ ஒரு மதிப்பை வச்சிட்டு, என்னை என்ன மாதிரி  மரியாதை தந்தனு பார்த்துட்டேன். அதான் இப்ப என்ன உரிமையோ, அதை வச்சி பேச ஆரம்பிச்சுட்டேன். எவனெவனோ என்னோட அத்தை பொண்ணுகிட்ட உரிமை எடுத்துக்கறான். நான் உன்ற மாமன் மகன் தானே." என்றான்.

நிலானி முறைத்துக் கொண்டு துண்டை அவன் மேல் வீசினாள். "பே" என்று திரும்பிப் போனாள். துண்டை வாங்கிக் கொண்ட எழிலரசன் 'போடி' என்றவாறு "ஒரு கையெழுத்து போட்டு மொத்த குடும்பத்தையும் பதற வச்ச குட்டச்சிக்கு, இப்ப முறைக்க மட்டும் தெரியுதாக்கும்." என்று மெதுவாக முணுமுணுத்தான்.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தபோது "அவங்க கழுத்துல இப்ப தாலி இருக்கு. ரிசப்ஷன்ல கழட்டி வச்சிருந்தாங்களா?" என்று கேட்டாள் மதுரா.

தூரிகா புரியாமல் முழிக்க, இனியன் கைபேசியில் பார்த்த முகநூல் வீடியோவை குறிப்பிட்டாள். தூரிகா உடனே காவ்யா ராஜாராம் என்று முகநூலில் ஆங்கிலத்தில் தேடினாள்.
  காவ்யாவின் முகநூலில் ரிசப்ஷன் வீடியோவை பப்ளிக்கில் இருக்க பார்த்துக் கொண்டிருந்தாள்.

"உங்க பெரியண்ணன் தான் காட்டினார்." என்றாள் மதுரா.

தூரிகா வீடியோவை பார்த்து ஆவென முழிக்க, "இதெல்லாம் பார்க்காத" என்று வேறு மதுரா போனை மூடினாள்.
"அய்யோ மதுராண்ணி. இது என் போனு. என்னை பார்க்க விடாம பண்ணி நோ யூஸ் முகநூலில் ஊரே பார்க்கும்." என்று கூறி கூர்ந்து கவனித்தாள்.
‌ லேசாக வெள்ளை உடையை தாண்டி மஞ்சள் வண்ணம் கழுத்துக்கு பின்னால் தெரியவும், அதை சுட்டி காட்டி, "தாலி எல்லாம் கழட்டலை. டிரஸ்ல நேக்கா மறைச்சி வச்சிருங்காங்க" என்றதும் தான் மதுரா, "அப்படியா.. நான் தான் கவனிக்கலையா.." என்று தூரிகாவிடம் கூறிவிட்டாள்.
  தூரிகாவோ இதுவரை அண்ணனும் இந்த அமெரிக்ககாரியும் எப்படி தான் இயல்பான தம்பதியராக இருக்க போகின்றனரோ. வாழ்க்கை முழுதும் நாடகமாடி வாழும் பெண்ணாக இருப்பாளென்று கேவலமாக தான் நினைத்தாள்.
  ஆனால் காவ்யா நிலானியோடு பேசியதை கேட்டப்பின்னும், அன்று மருத்துவமனையில் இனியன் அண்ணனிடம் பேசியதையும் வைத்து, காவ்யா அகிலன் அண்ணனிடம் இயல்பாக தம்பதியினராய் வாழ சாத்தியம் உண்டென புரிந்துக் கொண்டாள். மேலும் முத்தக்காட்சி வேறு பெரிய சாட்சியாக கண்ணில் இன்னும் வந்து சென்றது.

வீட்டிற்கு கிளம்பும் நேரம் வந்தது. இனியனும் மதுராவும் பைக்கில் வருவதாக உரைத்திட, இளையமதி ''இரண்டு நாள் இருந்துட்டு போடி" என்றதற்கு, "ம்கூம்... அரக்க பறக்க ஓடிவந்தது. அங்க போட்டது போட்டபடி வந்துட்டேன். இன்னொரு நாள் வர்றேன்" என்றாள் மதுரா.
 
அருளாளன் வேல்விழியை அழைத்து காரை எடுத்து, எழிலரசன் ஓட்ட தயாராக இருந்தான்.

அகிலன், காவ்யா அதியமான் மீனாட்சி தூரிகா இன்னொரு காரில் கிளம்பினார்கள். அகிலன் கிளம்பும் போது, "மாமா அத்தை... எல்லாரும் போயிட்ட பிறகு ஏதாவது திட்டி அதட்டி பேசாதிங்க. நிலானிக்கு எது சரி எது தப்புனு புரிந்துடுச்சு. மறுபடியுமா முட்டாள்தனமா முடிவெடுக்க மாட்டா. படிக்க மட்டும் அனுப்புங்க. பயப்படாதிங்க... காலேஜில தூரிகா இருக்கு, எழிலரசன் இருக்கான். பிடி வாத்தியாரா என் ஸ்கூல் பிரெண்ட் தான் இருக்கான். ஒரு வார்த்தை அவனிடம் சொன்னா கூட சட்டுனு பார்த்துப்பான். பயப்பட வேண்டாம்." என்று ஆறுதலாக கூறினான்.
  கூடுதலாக "எழிலரசா.. அக்காவையும் நிலானியையும் ஒரெட்டு எட்டி பார்த்துக்க" என்றதும் எழிலரசன் தலையாட்டினான்.

"சரிய்யா" என்றார் கல்யாண சுந்தரம்.

இரண்டு பக்கமும் இரு கார்கள் சென்றது. மதுரா இனியனோடா பயணித்தாள்.
மழை விட்டு ஓய்ந்தது போல நிலானி வீடு இருந்தது.

வீட்டிலிருந்து பைக் கிளம்பியப் பின்னும் இனியன் அமைதியாகவே இருந்தான்.
அவனுடைய முகம் மீண்டும் யோசனையில் மூழ்கியிருந்தது.

வீட்டு வாசலைத் தாண்டியதும்,
மதுரா மெதுவாக அவன் தோளைப் பற்றிக் கொண்டாள்.
அந்த ஒரு தீண்டல் போதும்.
இனியனின் முகத்தில் இருந்த இறுக்கம் மெதுவாக கரைந்தது.
சில நொடிகளில் அவன் உதட்டில் மீண்டும் அந்த மெல்லிய புன்னகை மலர்ந்தது.
மதுரா எதுவும் பேசவில்லை.
அவள் இனியன் தோளில் பதித்த கையையும் எடுக்கவில்லை.
அந்த தொடுகையே வீடு வரும் வரை, இனியனுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது.

    வீட்டுக்கு வந்ததும் அறைக்கு வந்து சேர, இனியன் மதுராவை கட்டி பிடித்து கொண்டான்.‌

  "எ...என்ன" என்று பயந்தாள்‌. வீட்டுக்கு வந்ததும் சண்டை போட்டுவிடுவானோ என்று நடுக்கத்துடன் ஏறிட, "இன்னிக்கு நடந்த களோபரத்துல நிலானி என்னை வச்சி, எழி‌.. ல..அவ ப்யூச்சர் ஹஸ்பெண்டை முடிவு கட்டி தப்பானவனை தேர்ந்தெடுத்துட்டா. இந்த இன்சிடெண்டுக்கு நான் ஒரு காரணம். பட்.. நீ என்னை அங்க ஒரு இடத்துலயும் விட்டு தரலை. உனக்கு என்னை பிடிச்சிருக்கா?" என்று நாசூக்காய் எழிலரசனை தவிர்த்து கேட்க, மதுராவோ 'தெரியலை.. நிலானி அந்தயிடத்துல உங்களை ஒரு மாதிரி நடத்தவும், கோபம் வந்துடுச்சு." என்றாள்.

"நான் உன்னை நேசிக்க ஆரம்பிச்சிட்டேன் மதுரா... எஸ்... ஐ லவ் யூ. இதுக்கு முன்ன இந்த வார்த்தை யாரிடமோ சொல்லியிருக்கேன். ஆனா இனி உன்னை தவிர எவளிடமும் சொல்ல மாட்டேன். சாகற வரை நீ தான் என் லவ்லி பொண்டாட்டி. உனக்கு அது தெரியுதா?" என்று கேட்க, மதுரா மௌனமாக தான் நின்றாள்.
  "ஓகே.. இப்ப இல்லை என்றாலும் நீயும் அது போல ஒரு நாள் என்னை நேசிப்ப. நான் காத்திருக்கேன்." என்று கட்டி அணைத்து கொண்டான்.‌

மதுரா அவனது நேசம் கொண்ட அணைப்பில் நெளிந்தபடி, "அ..அது.. இன்னிக்கு உங்க வேலையை நிலானி கெடுத்துட்டா. ஏதோ பிசினஸ் ஆரம்பிக்க  எல்லாம் ரெடி.  லோன் வரப்போகுதுனு சொன்னிங்க. போய் பாருங்க" என்றாள் நழுவும் பொருட்டு.‌

  இனியனோ மெதுவாக அவளை விடுவித்து, "என் பிசினஸ் ஆரம்பிக்கறதுக்கு முன்னவே முடிஞ்சிடுச்சு மதுரா.
  என்னால பிசினஸ்ல கால் பதிக்க முடியாது‌" என்றான் வருத்தமாக.

"ஏன் என்னாச்சு?" என்று புரியாமல் கேட்டாள். நேற்றெல்லாம் அத்தனை ஆனந்தமாக கூறி சந்தோஷப்பட்டு இன்று இப்படி பேசுவது எதனால்? என்று குழப்பத்துடன் கேட்டாள்.

"இன்னிக்கு நிலானி அடுத்து என்ன பண்ணறதா காவ்யாவிடம் கேட்டதும், காவ்யா பிசினஸ் பண்ணறதா சொன்னாளே.. அது நாங்க பேசி முடிவு பண்ணியது. நான் இங்க ஆரம்பிச்சு ரெடியா இருக்கற நேரம், இப்ப அவ ஆரம்பிக்கப் போறதா சொல்லி பேசினா. எனக்கு இன்னும் ஒரு வாரத்துல நான் போய் இதே பிசினஸ் தான் ஸ்டார்ட் பண்ணினா எங்க மறுபடியும் பழிவாங்க ஏடகூடமா பண்ணறேன்னு அகிலன் தப்பா நினைப்பானோனு இருக்கு. அதான்... என்‌ பிசினஸை டிராப் பண்ணிட்டு.. வேற யோசிக்கணும். ஆனா எனக்கு எதுவும் இப்ப தோணலை‌. என்னமோ பண்ணுது‌" என்று அவளிடையை கட்டிக்கொண்டு கூறினான்.

லேசான கண்ணீர் துளிர்த்ததா? பேசும் போது இனியன் மச்சானின் குரல் கரகரப்பாக இருந்ததா? அவனது முகவாட்டம் மனதை அழுத்த, மதுரா இனியனின் தலைகோதினாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.


 
Posted : August 9, 2026 7:23 am
(@kalidevi)
Posts: 140
Estimable Member
 

Alaga Iruku ippadi kudumbama paka madhuravum manasu mari vara akilanum kavya kuda nalla. Irukanu therinjikitta iniyan love panrenu sollitan madhuraku konjam bayam Iruku but sari aeidum . Business rendu perum sernthu pannunga iniyan 


 
Posted : August 9, 2026 7:57 am
(@subhakumar85)
Posts: 111
Estimable Member
 

Epdi sunagrathuku bathila agilan kitta poi pesalaam


 
Posted : August 9, 2026 8:14 am
(@crvs2797)
Posts: 187
Estimable Member
 

மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 59)

அடிப்பாவி மக்கா ! அதுக்கு அவன் தட்டுல சோத்தை வைக்காமலே போயிருக்கலாம், இப்படியா சாப்பிட உட்கார வைச்சிட்டு முகத்தை திருப்புவாங்க. வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்துல எதிரியே ஆனாலும் விருந்துபசாரம் சரியா இருக்கணுமா இல்லையா..?
இந்த நிலானிக்கு எதுலயும் அவசரமும், அலட்சியமும் தான் போல.

எனக்கென்னவோ, நிலானிக்கு எழிலரசன் செட்டாயிடுவான்னுத் தோணுது. ஏன்னா, ரக்கட் பாய்ஸ எல்லாம் பழக, பழகத்தான் புடிக்கும்.

நினைச்சேன் இனியன் பிசினஸ்ஸை ஸ்டாப் பண்ணிடுவான்னு. ஆனால் அகிலன் அப்படி விடமாட்டான், எப்படியும் பேசி பார்ட்னர் ஷிப் கொண்டு வந்திடுவான்னு தோணுது. ஏன், காவ்யாவே கூட இந்த பேச்சை ஆரம்பிக்கலாம்.

😀😀😀
CRVS (or) CRVS 2797


 
Posted : August 9, 2026 9:48 am
Padma reacted
(@guna-sundari)
Posts: 137
Estimable Member
 

Wow fantastic. Nilani understand the truth.  Madura also accept eniyian. Akil super super. Ezihilan u too try understand nilani. Very intresting sis.


 
Posted : August 9, 2026 9:52 am
Padma reacted
(@kavi-bharathi-arunkumar)
Posts: 126
Estimable Member
 

Iniyan ipadi than pannuvan nu nenacha mathiri yae business ah drop Panren nu sollitan ithuku better Kaviya kita pesuna la yae solution kedaichidum .

Nilani ithuku appuram aachum avasarama ethuvum seiyama nithanam ah irundha seri 


 
Posted : August 9, 2026 5:33 pm
(@kothaihari)
Posts: 124
Estimable Member
 

இரண்டு பேரும் சேர்ந்து பண்ணலாமே


 
Posted : August 9, 2026 10:36 pm
(@karthi1206)
Posts: 69
Trusted Member
 

Superb epi interesting 


 
Posted : August 12, 2026 6:29 am

Scroll to Top