தகிக்கும் நிலவொன்று-24
அத்தியாயம்–24
ருத்ரனுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு... இரண்டு நாட்களாக ராயன் அமைதியாக இருந்தான். முன்புபோல் வீட்டை தலைகீழாக மாற்றவில்லை.
அதிகமாக ஓடி விளையாடவில்லை. அம்மா சொல்வதை எதிர்த்து பேசவும் இல்லை. என்ன சொன்னாலும் அமைதியாக தலையாட்டி கேட்டுக் கொண்டான்.
அதை முதலில் கவனித்தது நந்திதாவும் லட்சுமியும் தான்.
"மேம்... குட்டி பாஸ் ரொம்ப அமைதியா ஆயிட்டாரு."
"ஆமா மேம்... முன்ன மாதிரி சேட்டையே இல்ல." ஷ்ரத்தா ஒரு நொடி மகனை பார்த்தாள்.
"விட்டுடுங்க... அவனுக்கு ருத்ரனோட அதிகமா பழகக்கூடாதுன்னு புரியணும்.
இந்த அமைதி... அதை புரிய வைக்கிறதுன்னா... அதுவே பெட்டர்." என்றாலும்... அந்த வார்த்தைகளை சொல்லும் போது கூட ஏனோ அவளது மனம் லேசாக வலித்தது.
---
அதற்கேற்றது போல ராயனின் இரண்டாவது பிறந்தநாளும் வந்தது.
திவாகர் வீடு முழுவதும் வண்ண விளக்குகளாலும், பலூன்களாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
சமையலறையில்... தீபா, நந்திதா, லட்சுமி மூவரும் காலையிலிருந்தே சமைப்பதில் பிஸியாக இருந்தனர்.
வாசல் முழுவதும் இனிப்பு மணம் பரவியிருந்தது.
அனைத்தையும் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த ஷ்ரத்தா. இன்று மட்டும் வழக்கத்தை விட அதிகமாக அலங்கரித்திருந்தாள்.
அழகான டிசைனர் சேலை. அதற்கு ஏற்ற நகைகள். மென்மையான ஒப்பனை. ஆனால்... அவள் கழுத்தில் சத்ரியன் கட்டியதாக எந்த தாலியும் இல்லை. அவன் இருக்கின்றானா இல்லையா என்று ஆராய எந்த தாலியும் இல்லை.
ஆனால் அவளது விரலில்... சத்ரியன் அணிவித்த மோதிரம் மட்டும் வழக்கம்போல் இருந்தது.
அதை மறைக்கவோ... கழற்றவோ... இன்னும் அவளால் முடியவில்லை.
ராயனும் சிறிய கோட்-சூட்டில் ஆண் தேவதூதன் போல தயாராகி ஓடி வந்தான்.
---
முதல் ஆளாக வந்தது என்னவோ யதுநந்தனே.
"ஹேய்... பர்த்டே பாய்..." என்று ராயனை தூக்கிக் கொண்டவன்.
பிறகு கீழே இறக்கவே இல்லை.
மனிஷாவும் கனிமொழியும் வந்தபோதும்... "இருங்க... இன்னும் கொஞ்ச நேரம் என் கையிலயே இருக்கட்டும்." என்று குழந்தையை தர மறுத்து சிரித்தான்.
ஷ்ரத்தாவை பார்த்து, "நீங்க வந்தவங்களை கவனிங்க ஷ்ரத்தா. ராயனை நான் பார்த்துக்கறேன்." என்றான்.
ஷ்ரத்தாவும் வேலையில் மூழ்கினாள். வந்தவர்களை வரவேற்பது. வெல்கம் டிரிங்க்ஸ் கொடுப்பது. ஒவ்வொருவரிடமும் நின்று பேசுவது என்று பரபரப்பாக சுற்றிக் கொண்டிருந்தாள்.
தூரத்தில் நின்ற யதுநந்தன். அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவள் விரலில் இருந்த அந்த மோதிரம் அவன் கண்ணில்பட்டது. ஒரு நொடி அவன் பார்வை அதிலேயே நின்றது.
'சத்ரியன்... உண்மையிலேயே இறந்துட்டானா...? இல்ல... இன்னும் ஏதாவது அவளுக்கு தெரிஞ்ச விஷயம் இருக்கா...?' அந்த குழப்பம். இன்றும் அவனை விட்டு போகவில்லை.
சிறிது நேரத்தில் கீர்த்தனாவும் வந்தார். அவரோடு ருத்ரனும்.
இரண்டு நாட்களுக்கு முன் தன்னை அறைந்த அவளை... இன்றும் பார்க்காமல் இருக்க முடியவில்லை. வாசலில் நின்றிருந்த ஷ்ரத்தாவை பார்த்தவுடன் ஒரு நொடி அவனே மெய்மறந்து நின்றான்.
'இவ... என்னடா இப்படி இருக்கா...? நகையே போடாம... வெறும் வெள்ளை சேலையிலேயே கண்ணை பறிச்சவ... இப்ப... இப்படி அலங்காரமா நின்னு அசத்துறாளே...' என்று அவன் மனசாட்சியே அவனை கிண்டல் செய்தது.
அவளை விட்டு பார்வையை திருப்பவே முடியவில்லை.
ஷ்ரத்தாவும் அவனை கவனித்தாள். ஆனால்... இந்த முறை அவள் பேசவில்லை. அவளது பாடி லாங்குவேஜே பேசிக் கொண்டிருந்தது. "தீபா..." என்று கண்களால் மட்டும் சைகை செய்தாள்.
அடுத்த நொடியே தீபா டிரிங்க்ஸ் ட்ரேயுடன் வந்து, "சார்..." என்று ருத்ரனிடம் நீட்டினாள்.
ஷ்ரத்தாவின் ஒவ்வொரு அசைவிலும் ஒரு பணக்கார வீட்டு பெண்ணின் திமிர் தெரிந்தது.
ஆனால் அது ருத்ரனிடம் மட்டும். மற்றவர்களிடம் அவள் வழக்கம்போல் அன்பாகவே பழகினாள்.
ஷ்ரத்தாவின் பார்வை வாசலை நோக்கியே இருந்தது. ஹரிணி இன்னும் வரவில்லை. 'வர்றேன்னு சொன்னாளே' என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள்.
அனைவரும் வந்து விட்டார்களா என்று உறுதி செய்த பிறகே கேக் வெட்ட ஆரம்பித்தாள்.
"ஹேப்பி பர்த்டே..." என்ற வாழ்த்துச் சத்தம் வீடு முழுக்க ஒலித்தது.
ராயன் சந்தோஷமாக கேக்கை வெட்டினான். முதலில் அம்மாவுக்கு ஊட்டினான்.
பிறகு ஒவ்வொருவராக அங்கிருந்த அனைவருக்கும் கேக் ஊட்ட ஆரம்பித்தான்.
ருத்ரன் அருகே வந்ததும் கூடுதல் ஆராவரத்துடன் "ருத்ரா..." என்று சிரித்தபடி அவனுக்கும் கேக் ஊட்டினான்.
அதோடு அவன் கன்னத்தில் ஒரு முத்தமும் கொடுத்தான். அதை பார்த்த ஷ்ரத்தாவின் முகம் இறுகியது.
ருத்ரனோ சிறிதும் கவலைப்படாமல் "ஹேப்பி பர்த்டே டா குட்டி." என்று பெரிய பரிசுப் பெட்டியை அவனிடம் கொடுத்தான்.
ராயன் அதை சந்தோஷமாக வாங்கிக் கொண்டான். தூரத்தில் நின்ற யதுநந்தனுக்கு அதைப் பார்த்து லேசான எரிச்சல் வந்தது.
ஆனால் அவன் அமைதியாகவே நின்றான்.
"அம்மா..." என்று கீர்த்தனாவை அழைத்த ருத்ரன், தான் கொண்டு வந்த இன்னொரு பரிசை அவரிடம் கொடுத்தான்.
"இதை நீங்க கொடுங்க." கீர்த்தனா திறந்து பார்த்தார்.
அது ஒரு புகைப்பட ஆல்பம். ஷ்ரத்தாவுக்கு வளைகாப்பு நடந்த புகைப்படங்கள். ராயனுக்கு பெயர் வைத்த நாள். அதன்பிறகு சிறைக்கு வரும் பொழுது எல்லாமா ராயனை எடுத்த புகைப்படம் கிடைத்திருந்த ஒவ்வொரு புகைப்படமும் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
அதோடு ராயனுக்கு மட்டும் தனியாக இன்னொரு ஆல்பமும் தயாரித்திருந்தான்.
கீர்த்தனாவின் கண்கள் கலங்கின. ராயனோ "என்னோட போட்டோ..." என்று குதூகலமாக பக்கங்களை புரட்ட ஆரம்பித்தான். இதே சத்ரியன் இருந்திருந்தால் நாளொரு புகைப்படமும் உடையும் அணிந்து அசத்தியிருப்பான். இது எல்லாமே ஜெயிலில் எடுத்தது. அப்படி இருந்தும் குழந்தையை மட்டும் லாவகமாக எடுத்திருந்தான்.
அதே நேரம் யதுநந்தனும் தனது பரிசை கொடுத்தான். ராயனின் பெரிய போட்டோவை ஃப்ரேம் செய்து... அதற்குள் குட்டி காரும், விளக்குகளும் வைத்து அழகாக வடிவமைத்திருந்தான்.
அதை பார்த்த ராயன் இரண்டு பரிசுகளையும் சமமாக ரசித்தான்.
நேரம் செல்ல நந்திதா ராயனுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள். யதுநந்தன் வாங்கிக் கொடுத்த பொம்மை காரை வீட்டிற்குள் தரையில் ஓட்டிக் கொண்டே சிரித்துக் கொண்டிருந்தான் ராயன்.
அப்போது பக்கத்து தெருவை சேர்ந்த பெரியவர் மேலும் அவரும் திவாகரோடு பணியாற்றிய லாயர் ஒருவர் யதுநந்தனை பார்த்து கேட்டார்.
"தம்பி... உன் பேர் யதுநந்தனா? திவாகரோட ஜீனியரா" என்றார்
"ஆமாங்க சார்."
"திவாகர் அடிக்கடி உன்னைப் பற்றி பேசுவாரு." என்றதும் யதுநந்தன் ஆச்சரியமாக பார்த்தான்.
"என்ன சார்.. பேசுவார்" என்று வெகு ஆர்வமாக கேட்டான்.
"உன்னை ரொம்ப புகழ்வார். இந்த மாதிரி ஒரு பையனை தான் ஷ்ரத்தாவுக்கு மாப்பிள்ளையா பார்க்கணும்'ன்னு கூட ஒருநாள் சொல்லியிருக்கார்." என்றார்.
யதுநந்தன் ஒரு நொடி ஷ்ரத்தாவை பார்த்தான். அந்த பார்வையில் உன் தந்தை எனக்கு தந்த இடம் எதுவென்று அறிந்துக் கொண்டாயா என்ற திருப்திகரமான நிலையை அடைந்தான். எத்தனை நாள் அதை தெரியப்படுத்த முனைந்தான்.
பிறகு மெதுவாக புன்னகைத்தான். "என்கிட்டயும் சொல்லியிருக்கார் சார்." என்றான்.
அந்த வார்த்தை ஷ்ரத்தாவின் காதிலும் தெளிவாக விழுந்தது.
'இதென்ன... இன்னொரு தலைவலியா...?' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
அந்த பெரியவர் தொடர்ந்து, "இப்பவும்... திவாகர் இல்லாததுக்கு அப்புறம் நீ வந்து ஷ்ரத்தாவை பார்த்துக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு தம்பி." என்று பாராட்டிவிட்டு சென்றார்.
அவருக்குப் பின்னால் வந்த பக்கத்து வீட்டு ஆன்ட்டி மட்டும்.. மெல்ல சிரித்தபடி,"ம்... திவாகர் லாயர் மாப்பிள்ளையைதான் பார்த்திருக்காரு." என்றவர் ஷ்ரத்தாவிடம், "இப்பவும் தப்பில்லை ஷ்ரத்தா... இந்த லாயர் தம்பியையே மறுமணம் பண்ணிக்கலாம்." என்று சொல்லிவிட்டார்.
அந்த வார்த்தை அங்கே நின்றிருந்த சிலரின் காதிலும் தெளிவாக விழுந்தது.
ஷ்ரத்தாவின் முகம் உடனே இறுகியது.
அதிலும் ருத்ரனின் பார்வை. மெதுவாக யதுநந்தன் மீது போட்டியாக திரும்பியது.
இத்தனை நாட்கள் தந்தை யதுநந்தனுக்கு என்ன செய்வாரென கேட்ட போதிலும் எதுவும் கூறாமல் மழுப்பிய யதுநந்தன் ஷ்ரத்தாவை ஏறிட்டான்.
ஷ்ரத்தா மன்மைதியின்றி அமர்ந்திருக்க, ராயன் நந்திதா பார்வைக்குள் இருந்தான்.
யதுநந்தன் மட்டும் ஷ்ரத்தா முன் வந்து, "சாரி ஷ்ரத்தா... எங்கப்பா உங்களுக்கு என்ன உதவி செய்தார்னு தெரியலை. நீங்க எனக்கு உதவறிங்க ரொம்ப நன்றினு நீ சொல்லறப்ப எல்லாம், திவாகர் சார் அடிக்கடி என் பொண்ணையே உனக்கு கட்டி தருவேன் டா. அந்தளவு நீ ரொம்ப நல்லவன். என் ஜூனியரிலேயே எனக்கு பிடிச்சவன்னு பேசறப்ப எல்லாம் மனசுல ஜிவ்வுனு இருக்கும். யாருமில்லாத அனாதையா இருந்தவனுக்குள்.. அந்த வார்த்தை எந்தளவு ஆழமா பதியும்னும், ஆசையை பேராசையா மாத்தும்னும் விளக்க வேண்டியதில்லை.
அந்த கண்ணோட்டத்தில் ரசனையோட இரண்டு மூன்று முறை உன்னை பார்த்திருக்கேன். நீ என்னை கவனிச்சதில்லை. ஒருமுறை யூனிபார்ம்ல பார்தாதிருக்கேன். இரண்டு முறை கலர் டிரஸ்ல, நீ சாரோட ஹோட்டல்ல கோவிலுகாகு போறப்ப கவனிச்சிருக்கேன்.
அப்ப எல்லாம் எனக்குனு கடவுள் கைகாட்டியிருக்கவ நீ தான்னு முடிவே பண்ணிருந்தேன். நீ காலேஜ் சோர்ந்து கொஞ்ச நாள் கழிச்சு என் விருப்பத்தை சாரிடமே தெரிவித்திட ஆசைப்பட்டேன்.
ஆனா நடுவுல வேற கேஸ் விஷயமா வெளியோ போனதும், இங்க திவாகர் சார் இறந்துட்டார். அவருடலை அடக்கம் பண்ணிட்டாங்க. கொலையா தற்கொலையானு தெரியலை. இதுல அவரோட பொண்ணு சத்ரியனோட கட்டுப்பாட்டில் படிக்கறானு.. சத்ரியனை இரண்டு மூனு முறை சந்திக்க நினைச்சேன். பட் சந்திக்கற வாய்ப்பு அமையலை. ஏன்னா... நீ இங்க இல்லவே இல்லை.
காலேஜ்ல கூட சந்திக்க நினைச்சேன். அப்பவும் முடியலை. இப்ப மாதிரியே அப்பவும் உன்னை சுத்தி பெரிய பாதுகாப்பு இருக்கும். என்ன.. இப்ப யாரு உன்னை நெருங்கலாம்னு இருக்கு. அப்ப அப்படியில்லை
யாரும் உன்னை தெருங்க முடியாது.
ஒரு கட்டத்துல கனி மூலமாக நீ சத்ரியனை விரும்புவதை தெரிந்து மொத்தமா ஓதுங்கிட்டேன். அப்பறம் கேஸ்ல சீரியஸா இருந்துட முடிவெடுந்தேன். சொல்லப் போனா நீயும் கேஸால அறிமுகமாகி தான் நாம சந்திக்க முடிந்தது. அது கூட வினோத் மூலமா சந்திப்பை நிகழ்த்திக்கிட்டார்னு சொல்லலாம். வினோத் யாரை சந்திக்கணும். யாரிடம் நீ பேசணும்னு ஒரு வரையறையில சொல்லிட்டு போயிட்டார்.
அதென்னவோ... திவாகர் சார் மகளை கூடவே இருந்து கவனிக்கற பொறுப்பை திவாகர் சாரே என்னிடம் தந்ததா நினைச்சி தான் உன்னிடம் பழகியது.
உன் கேஸை வாதாடியது. ருத்ரனுக்கு முன்ன... நாம ஏன் ஷ்ரத்தாவை மறுமணம் செய்ய கூடாதுனு எண்ணம் வந்துடுச்சு.
என்னயிருந்தாலும் சத்ரியனை பிரிந்து நீ வாழ்ந்தாலும், ஒரு யுகத்துல அவனை விரும்பிய பெண். அதனால தான் அவன் நினைப்பு போறவரை காத்திருக்க முடிவு செய்தேன்.
இதுல சத்ரியன் உயிரோட இருக்காரா இல்லையானு குழப்பம். சத்ரியன் உயிரோட இருந்து உன்னை ஆசைப்பட்டா என் ஆசை தப்பில்லையா? அதனால நிறைய முறை தயக்கத்தோட இருந்தேன்.
இதுல நீ வேற, சத்ரியன் குழந்தையை அழிக்க சொன்னார். ஆனா நான் அழிக்கலைனு சொல்லி அவரை கொண்ணுட்டதா சொன்ன. நீயே தான், சத்ரியன் முதலால அபார்ஷன் ஆனதால சத்ரியன் பீல் பண்ணினார் என்றதையும் சொன்ன. முன்னுக்கு முரணனா விஷயம்.
எனக்குள்ள சத்ரியன் உயிரோட இருக்கானா இல்லையானு குழப்பத்தை தந்துட்ட.
சரி... விஷயம் தெரியாம உன்னை ருத்ரன் மாதிரி காயப்படுத்த கூடாதுன்னு, அவசரப்பட்டு பேசக்கூடாதுனு ஒதுங்கி இருந்தேன்.
இனியும் மறைக்க முடியுமானு தெரியலை ஷ்ரத்தா. பிகாஸ்...நீ எனக்குரியவள். நான் ருத்ரன் மாதிரி பேசமாட்டேன். பின் தொடர்ந்து வந்து தொந்தரவு தரமாட்டேன். ஆனா நீ என்னோட காதலை யோசி.
இப்ப சொல்லலாம அப்ப சொல்லலாமா..னு நேரத்தை கடத்தினேன். இப்ப ராயனோட செகண்ட் பெர்த்டேல சொல்லிட்டேன் ஷ்ரத்தா. இந்த காதலும், உனக்கு செய்யற உதவியும், வேற வேற தான். அதுல குழப்பிக்காத. எதுனாலும் எப்பனாலும் கால் பண்ணு" என்று அதிர்ச்சியில் இருந்தவளிடம் கைகுலுக்கி ராயனுக்கு முத்தமிட்டு சென்றான்.
ருத்ரனோ ஷ்ரத்தாவை பார்த்து, 'நான் தான் சொன்னேனே. அவன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம உதவலைனு.' என்ற ரீதியில் பார்வையிட்டான்.
ருத்ரன் எங்கிருந்தாலும் அவன் பார்வை ஷ்ரத்தாவை சுற்றியிருக்க, அவனும் யதுநந்தன் பேசியதை அறிந்துக் கொண்டான்.
ஷ்ரத்தாவோ தலையை தாங்கி பிடித்து அமர்ந்தாள்.
-தெடரும். .
-பிரவீணா தங்கராஜ்.
ரொம்ப தான் லவ் டார்ச்சர் பண்ணறாங்களோ. சரி முடிவு கட்டுவோம். விரைவில்...
Yadhu avan pesunathu ah nan thappu solla la yen na divagar avar than Shardha ah va pathi oru ennatha avan manasula kondu vandhu irukaru andha ennam nallu aaga valandhalum iva virupam therinchi othungi than irundhu irukan ippo vum avan virumbunathu ah ava therinchikanum than sonnan yae thavira ava no sonna definte ah iva disturb panna matan num than thonuthu aana Shardha point of view la yosicha avaluku ithu puthu thalai vali ah than thonum .
தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 24)
அட ராமா ! இதுல உங்களுக்கு டவுட் வேறயா ? நோ டவுட், கொஞ்சம் நஞ்சம் இல்லைங்க, ரொம்பவே அதிகமாத்தான் லவ் டார்ச்சர் கொடுக்கிறாங்க ரெண்டுப் பேரும். இவங்க கொடுக்கிற டார்ச்ர்ல எங்களுக்கே கடுப்பாகுதுன்னா, ஷ்ரத்தாவுக்கு சொல்லவே வேணாம். தயவுசெய்து ரெண்டு பேரையும் கொஞ்சம் ஆஃப் பண்ணி சத்ரியனை கொஞ்சம் களத்துல இறக்குறிங்களா..? இவனுங்களுக்கு அவனே மேல்.
போங்கடா டேய்.... கொஞ்சம் காத்து வரட்டும்.
😊😊😊
CRVS (or) CRVS 2797
-
தகிக்கும் நிலவொன்று-50 (முடிவுற்றது)
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-49
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-48
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-47
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-46
2 weeks ago
Currently viewing this topic 1 guest.
- 25 Forums
- 325 Topics
- 1,578 Posts
- 5 Online
- 420 Members
