Forum

மதுர ஜில்லா... மச்ச...
 
Notifications
Clear all

மதுர ஜில்லா... மச்சானே!-55

9 Posts
9 Users
5 Reactions
198 Views
(@praveena-thangaraj)
Posts: 265
Member Admin
Topic starter
 
[#266]

அத்தியாயம்-55

மதுராவை காண வேண்டுமென்ற உத்வேகம் வந்தாலே இனியன் முகம் பூவாக மலர்ந்து வேகம் கூட்டி வந்து சேர்ந்தான். 

வாசலிலிருந்தபடியே, 'எங்குட்டு போனா இவ?' என்று கூடத்தையும் சமையல் அறை தோட்ட வாசல், என்று பார்வையிட்டு தங்கள் அறையில் இருப்பாளென படியை இரண்டு இரண்டாக தாவி வந்தான். ஆனால் அங்கும் அவனை வெற்று அறையே வரவேற்றது. 

'பச்.. இங்கயும் ஆளை காணோம்.' என்று சலிக்க, மாடியில் கொலுசொலி சப்தமும் வளையல் சத்தமும் கேட்டது. 

இனியன் உதட்டில் புன்னகை மீண்டு எழுந்தது. 

மாடிக்கு செல்ல, அங்கே வெறும் காலோடு, வெயிலில் பாய் விரித்து அதில் ஜவ்வரிசி அப்பளம் செய்ய தோதுவாக கரண்டியால் ஊற்றிக் கொண்டிருந்தாள். 

"ஏய் சூ.. போய் தொலை. எப்படா வடகம் காயப் போடுவேன். வந்து கொத்திட்டு போகலாம்னு இருக்க. அதான் சோறு வைக்கறேன்ல. அதை திண்ணேன்'' என்று காகத்திடம் சண்டைக்கு சென்றியிருக்க இனியன் சிரித்தான். 

அவன் நகைக்கும் சப்தம் கேட்கவும், திரும்பியவள், உடனடியாக தன் சேலை முந்தானையை எல்லாம் ஒழுங்குப்படுத்தினாள். 

இனியனுக்கு அந்த செய்கை சங்கடமாக தான் இருந்தது. தன்னை ஏதோ காமத்திற்காக மட்டுமே அவளை அணுகுவதாக அல்லவா அவள் நினைத்திருப்பாள். 

தான் அப்படி தான் நடந்திருக்கின்றோமென புரிய, அவனாகவே "காக்காவோட என்ன பேச்சு. உன்னை கீழே தேடிட்டு இருக்கேன்." என்றவன் திடீரென "ஸ்ஆ... ஏய் கால் சுடலை?" என்றான்.‌

"நான் வத்தல் போடற பாய்ல இல்லை உட்கார்ந்திருக்கேன். அதோட இந்த வெயில் சூடெல்லாம் எனக்கு பழக்கம். நீங்க வெறும் காலோட வந்து பழகியிருக்காது. உங்களுக்கு மாடில வந்ததும் கால் சுடுது" என்றாள். 

"அம்மா... ஸ்ஆ.." என்று தள்ளாட, மதுராவோ "நிழல்ல நில்லுங்க. இல்லை கீழே போங்க" என்றாள் சர்வசாதாரணமாக.‌

"உன்கிட்ட பேசணும்னு வந்தேன்." என்று கால் வெட்பம் தாளாது முகம் சுணங்கினான். 

மதுரா அவன் பாதத்தை கவனித்தாள். அவன் நிறத்திற்கு பாதமும் பளிச்சென தெரிய, ''மதுரா முடியலை சுடுது" என்று உச்சரித்தான். 

அவள் பெயரை உச்சரித்து கூறியதால் சட்டென என்ன செய்வதென்று புரியாது, அங்குமிங்கும் பார்வை செல்ல, காற்றில் சேலை தான் அசைந்து கண்ணை மறைத்தது. 

"மதுரா.. சுடுது" என்று அங்கேயே நின்றவன் கீழே போக கூறியும் மறுத்திட, கண்ணை மறைத்த சேலை முந்தானையை அவன் பாதம் முன் வைத்து, ''இப்ப இது மேல முதல்ல நில்லுங்க" என்றாள். 

கால் சூடு தாளாமல் முதலில் சேலையில் நின்று விட்டான். பின்னரே, "இந்த வெயில்ல இந்த அப்பளம் ரொம்ப முக்கியமா?" என்று கடிந்தான்.‌

"முக்கியம் தான்..‌ நீங்க தான் சப்பு கொட்டி சாப்பிடறிங்களே ஸ்நாக்ஸ் மாதிரி. 

அப்பளம் வத்தல் எல்லாமே வெயில்ல தான் ஊத்துவாங்க. என்ன நேரத்துக்கு ஊத்திட்டு எந்திரிச்சிட நினைச்சேன். கரைச்சது அதிகமா இருக்கவும் நேரம் இழுக்குது." என்றாள்.

இனியன் சட்டென மண்டியிட்டு, "இது எனக்கா?" என்றான் குழந்தைத்தனமாக.

அவள் தாடை பிடித்து, 'ஆங்.?' என்று விழிக்க, தன்னையா கேட்கின்றான் என்று மிரண்டவள் அவன் ஜவ்வரிசி அப்பளத்தை கேட்பது புரிபட, 'ம்ம்." என்றாள். 

இனியனாகவே "தூரிகாவை விட்டுட்டு வந்துட்டேன். அப்படியே உன்னிடம் ஹாப்பியா ஒரு நியூஸ் சொல்ல வந்தேன். பேங்க் லோன் வந்துடும்‌ ஒரு வாரம் தான். அப்ரூவல் வந்துடுச்சு. என்‌ பிசினஸுக்கு பணம் வந்துட்டா... அடுத்தடுத்து எல்லாம் சக்சஸ் தான். இடம் பார்த்து வச்சிட்டேன். மெஷின்ஸ் எல்லாம் பார்த்து வச்சிட்டேன். பணத்தை இப்படி வாங்கி அப்படி கொடுத்து நல்ல நேரம் பார்த்து ஆரம்பிக்கணும்" என்றான். 

மதுராவுக்கு ஒன்றும் புரியாமல் ஜவ்வரிசி ஊத்துவதில் மும்முரமாக "நான் பிசினஸ் ஆரம்பிக்க போறேன்னு சொல்லறேன். கங்கிராட்ஸ் சொல்ல மாட்டியா?" என்றான் ஏக்கமாக. 

"நல்ல மனசோட ஆரம்பிச்சு நல்லபடியா லாபம் பாருங்க" என்றாள். 

"பச்.. வாழ்த்துல எந்த கிக்கும் இல்லையே. மதுரா.." என்று திரும்ப பட்டென அவள் சேலை முந்தானையை குத்தியிருந்த ஊக் வாய் பிளந்து, சேலை முந்தானை சரிந்தது. 

ஏற்கனவே அதில் தான் இனியன் அமர்ந்திருக்க, இப்பொழுது சமயம் பார்த்து அவிழவும், மதுரா முன்பக்கத்தை கையால் மறைத்து 'கங்கிராட்ஸ் போதுமா" என்றாள். 

'இது கிக்கா தான் இருக்கு. பட்." என்று சிரித்தான்.‌

"என் முந்தானை" என்று கையை வைத்து மறைத்து கூற, "மாவு குறைவா இருக்கு. நான் வேண்டுமின்னா ஊத்தறேன்." என்று கரண்டி பிடித்து ஜவ்வரிசி ஊற்ற, மதுராவோ சுற்றிமுற்றி பார்த்தாள்‌.

இவளிருப்பது மூன்றடுக்கு மாடி. இங்கே பக்கத்தில் பலரது வீடும் தளத்தோடு அமைந்தது. அதனால் மாடியை யாரும் நோட்டமிட வாய்ப்பில்லை. 

ஆனாலும் இனியன் முன் இவ்வாறு அமர்ந்திருக்க கூச்சமானது. 

ஏதாவது சொல்லவும் விடாமல் தன்னை ரசிப்பவனை என்னவென கேட்பது. 

இனியன் ஜவ்வரிசி ஊற்றியபடி, மதுராவின் முன்னழகின் சில வனப்பை ஏறிட, அந்த நேரம் பார்த்து காற்று சதி செய்தது. மண் மூலமாக கண்ணில் தூசி விழுந்து உறுத்த ஆரம்பித்தது. 

"அய்யோ மதுரா.. கண்ல தூசி விழுந்துடுச்சு" என்றான்.‌

''விளையாடாதிங்க" என்றாள். 

"அய்யோ சத்தியமா? கண்ணை திறந்தா உறுத்துது." என்று கண்ணை கசக்கினான். 

மதுரா மெதுவாக "இருங்க.. பார்க்கறேன்.. கத்தாதிங்க." என்று பார்வையை சுற்றி யாருமில்லை என்றதும் மெதுவாக அவன் இறுக மூடிய கண்ணை மெதுவாக திறக்க முயல, கருவிழி உருள இனியன் அவளது இடையை பற்றிக் கொண்டான்.‌ அதை மதுரா கவனிக்க தவறினாள். 

"கருப்பா தூசி ஒட்டியிருக்கு" என்று கையால் எடுக்க முனைய, அவனோ 'அவுச்' என்று கத்த, மதுரவாணியோ மீண்டும் ஒருமுறை சுற்றி பார்வையிட்டு, தன் நாவல் அழுக்கை துறுத்தி எடுத்தாள். 

ஜில்லென்ற ஏதோ தன் கண்ணில் படவும், அடுத்த வினாடி உறுத்தல் மறைய, மதுராவை கண்டான். 

அவள் நாவல் எடுத்த தூசியை கையால் எடுத்து 'இதான் கண்ணுல உறுத்தியிருக்கு. இப்ப எடுத்தாச்சு" என்றாள். 

அவள் முந்தானையற்ற நிலையை பார்த்து இனியன் அவள் இடையில் மெல்லிய அழுத்தம் கொடுக்க, அப்பொழுது தான் அவன் கை தன்னிடையை பற்றியதையே கவனித்தாள். மேலும் அவன் பார்வை சென்ற திசையை கண்டு கையை வைத்து மூடிக் கொண்டாள். 

"தயவு செய்து எந்திரிச்சு கீழே போங்க. நான் இருக்கற மாவை ஊத்திட்டு தான் வருவேன்." என்றாள். 

அவனோ அவள் விலகியிருந்த சேலையை எடுத்து அதே ஊக்கில் பின் செய்துவிட்டு, நல்லபிள்ளையாக "இப்ப ஊத்து." என்றான்.‌

எப்பொழுது மீண்டும் அவிழுமோ என்று பயந்தாலும் தன் கவனத்தை ஜவ்வரிசி வத்தல் ஊற்றும் வேலையில் முழ்கினாள்.‌

இனியன் மெதுவாக, ''சாரி மதுரா... ஒரு சின்ன தூசி.. என் கண்ணுல பட்டு உறுத்துச்சு. அன்னிக்கு சுட சுட உன் மேல டீயை ஊத்திட்டேன். அந்த சூட்டை நீ எப்படி பொருத்தியோ? கண்ல வேற டீத்தூள் பட்டதா வேற கண்ணை கசக்கினல நீ. 

அப்ப எல்லாம் என்‌ மூர்க்கத்தனம் அதிகமா இருந்தது. சாரி கூட கேட்காதவனா போயிட்டேன்.‌

ரியலி.. ஐ அம் சாரி." என்று அவளது இடது கையை பிடித்தான். 

ஜவ்வரிசியை மடமடவென பெரிது பெரிதாக ஊற்றியவள், 'எந்திரிங்க.. கீழே போகணும்" என்றாள். 

"மதுரா... என்னை மன்னிக்கவே மாட்டியா? முன்ன உன்னை காயப்படுத்தியதுக்கு எல்லாம் இப்ப வெட்கப்படறேன். ஏன் இப்படி செய்தேன்னு எனக்கே தெரியலை மதுரா. அந்த நேரம் டீயை வச்சியிருந்த, அகிலன் பேச்சு போகவும் தட்டி விட்டேன். அது உன் மேல பட்டு நீ துடிப்பனு நான் நினைக்கலை. ஆனா உடனே நான் பீல் பண்ணிருக்கணும். ஆனா கோபமா இருந்தேன். 

எனக்கு இங்க வர்றப்ப யார் மேலயும் கோபம் பகை இல்லை மதுரா. உண்மை அது தான். 

அப்பா போன் போட்டு வரச்சொன்னப்ப நிஜமாவே காவ்யாவை காதலிப்பதை சொல்லி கல்யாணத்துக்கு ஓகே வாங்கிட்டு, இங்கிருந்து மேரேஜ் முடிச்சிட்டு, அங்கயும் இங்கயும் பிசினஸ் பேசி முடிச்சிட்டு அமெரிக்காவுல செட்டிலாகிட்டு, இங்க அடிக்கடி த்ரி மந்த்ஸ் ஒருக்க வந்து தலையை காட்டிட்டு டீலரிடம் மட்டும் வேலையை தொடர்ந்துட்டு போயிடணும்னு என்றது மட்டும் யோசித்தேன். ஆனா அப்பா தேர்தல்ல நில்லுடானு சொல்லவும், என்னோட பிசினஸுக்கு அதுவும் ஒரு அறிமுகமா அமையும். தேர்தல்ல தோற்றா கூட பெயர் அடிக்கடி அடிப்பட்டு பிசினஸ் டீலர் தெரிந்து வச்சிப்போம்னு தான் நினைச்சேன். 

ஆனா உன்னை பார்த்த பிறகு தான் எனக்கு அகிலன் மேல கோபமே வந்துச்சு. நீ என்னை தாண்டி அவனை ரசித்து பார்த்தப்ப, இந்த கண்ணு என்னை தான் ரசிக்கணும்னு வெறி வந்துச்சு. 

அந்த நேரம் நான் காவ்யாவை விரும்பினேன்னு கூட மறந்துட்டேன். 

நீ என்னை மட்டும் பார்க்கணும். அதுக்கு என்ன பண்ணணும்னு தான் கோபமா யோசித்தேன். 

அகிலனுக்கு முன்ன, உன்னை கட்டிக்க ஆசைப்பட்டேன்.‌ அது மட்டும் தான் வேண்டுமின்னே பண்ணினேன். அதுக்கூட அவன் உன்னை கட்டிக்கறதா அப்பா சொல்லவும், என்னால உன்னை விட்டுக்கொடுக்க முடியலை. 

தேர்தல் அப்ப கல்யாணம்னு வச்சதும், அவன் தேர்தல்ல ஜெயிச்சிட்டான். மதுரா விஷயத்துல நான் தான் ஜெயிக்கணும்னு திமிரா காய் நகர்த்திட்டதா திருப்தி பட்டுக்கிட்டேன். 

காவ்யாவை எல்லாம் யோசிக்கவேயில்லை. அப்பறம் தான் நிதானமா இருக்கறப்ப எல்லாம், காவ்யாவை ஏமாத்தற மாதிரி இருக்கேனு நினைச்சேன். 

நான் அவளை காதலிக்கறேன். உன்னை போட்டிக்கு கட்டிக்கிட்டேன்னு நானா மடத்தனமா முடிவுப் பண்ணிட்டேன். வெத்து பத்திரத்துல கையெழுத்து வாங்கி வச்சிடுவோம். பிறகு ஏதாவது பிரிவு வந்தா டிவோர்ஸ் தந்திடலாம்னு வாங்கினேன்.

ஆனா சத்தியமா பிரியணும்னு இப்ப நினைக்கலைடி. நீயா நினைச்சி நம்ம குழந்தையை அவசரப்பட்டு அழிச்சிட்ட. அதுக்கு உன்னை தப்பு சொல்ல மாட்டேன். எந்தபொண்ணும் அப்படி யோசிக்கலாம்‌.

கல்யாணம் ஆனதும் முதல்ல உன்னை தொட்டப்ப, நீ தான் முரண்டு பண்ணின அதான். கோபத்துல அடக்க ட்ரை பண்ணினேன். ஐ நோ.. நீ மனதளவில பிசிக்கல் ரிலேஷன்ஷிப்புக்கு ப்ரிப்பர் ஆகலைனு தெரிந்தே பண்ணினேன். அதுகிட்டதட்ட மேட்ரியல் ரேப் மாதிரி போயிடுச்சு.

ஆனா நீ கொஞ்ச நாள்ல என் ஆசைக்கு இணங்கவும் கோபமா இருந்தேனா.. இல்லையே.. எல்லா கணவன் மனைவி மாதிரி தானே நடந்தேன்.

என்ன.. நான் உன்னை கட்டிக்கிட்ட முறையும், காவ்யாவையும் வச்சி டபுள் கேம் ஆடற பீல் வரவும் நீயா என்னை தண்டிச்சிட்ட. 

நான் காவ்யா வந்தப் பிறகு அவ பின்னாடி பொய் அகிலன் இருந்தப்ப வயல் வரப்புல பேசினேன் தான்.‌ ஆனா அது அவன் கூட தங்கி இருக்காளேனு தான். மத்தபடி... அவ வேற லாட்ஜ்ல.. ஹோட்டல்ல, இல்லை திரும்ப அமெரிக்கவுக்கு போயிருந்தா, அவளை அப்பவே மறந்துட்டு உன்னோட முழுதா வாழ்ந்திருப்பேன்.‌ 

அவ போகலை.‌.. அகிலனும் அவளையே தாலிகட்டவும், அகிலன் மேல இருந்த கோபம் கூடுச்சு.  ஆனா என்ன மேஜிக்கோ, அவன் கல்யாணம் பண்ணிட்டான் என்றதும், இனி காவ்யா என்னை தொல்ல

பண்ண மாட்டா. என் மனசுலயும் முழுக்க அவ நினைப்பு சுத்தமா போயிடுச்சு. மதுராவோட தான் என் வாழ்க்கைனு முடிவோட நிம்மதியாகி உன்னை தேடினா.. நீ எனக்கு பெரிய தண்டனை தந்துட்ட. 

நிஜமா.. அந்த தண்டனை என்னால இப்பவரை தாங்க முடியலை மதுரா... ஆனா நான் செய்தது எல்லாத்துக்கு அந்த தண்டனை தேவை தான்னு புரிந்தது. 

இப்பலாம் அகிலனை கூட பழிவாங்க மனசு வரமாட்டேங்குது மதுரா. 

உன் மனசுல இடம் பிடிக்கணும். அது மட்டும் தான் என் குறிக்கோளா இருக்கு. நீ என் கூட பேசற, பழகற, ஆனா நீ என்னை மன்னிக்கலைனு உன்னோட ஆக்டிவிட்டிஸ்லயே தெரியுது. 

என்ன செய்தா என்னை மன்னிப்ப? சொல்லு மதுரா செய்யறேன்.‌" என்றான் அவள் காலை சுற்றியவனாக. 

மதுராவோ கையை உருவிக்கொண்டு "நான் கீழே போகணும். தயவு செய்

து எந்திரிங்க" என்றாள். அதை தவிர்த்து பேச மறுத்தவளாக வாயில் பசை தடவியவளாக இருந்தாள். 

-தொடரும். 

-பிரவீணா தங்கராஜ்.

 


 
Posted : August 5, 2026 10:07 am
Karthi1206, muthupriyabalaji, Kalidevi and 2 people reacted
(@kothaihari)
Posts: 125
Estimable Member
 

இவன் பண்றதுக்கு எல்லாம் உடனே மன்னிப்பு தரனுமா


 
Posted : August 5, 2026 10:16 am
(@dharsinipriya)
Posts: 77
Trusted Member
 

Super sis nice epi semmaiya pogudhu story 👍 👌 😍 iniyan ennadhan evlo pesi mannipu ketalum madhura vala udaney ellathaiyum marandhu mannikka mudiyuma 🤔 


 
Posted : August 5, 2026 10:34 am
(@subhakumar85)
Posts: 112
Estimable Member
 

Ennum neraya effort podanum raja


 
Posted : August 5, 2026 12:00 pm
(@kalidevi)
Posts: 140
Estimable Member
 

oru valiya pana thappuku lam mannipu ketutan aana udane mannichitenu solla mudiuma ena porumaiya solva wait pannu un avasarathuku nadakathu iniya


 
Posted : August 5, 2026 12:10 pm
(@crvs2797)
Posts: 188
Estimable Member
 

 

மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 55)

அடேயப்பா ! இனியனுக்கும் ரொமான்ஸ் வருமானம், அதை நமக்கு புளியைப் போட்டு விளக்கி காட்டுற மாதிரி விளக்கி காட்டுறான் டோய்.

அது சரி, தப்பு பண்றச்சவெல்லாம்
நிதானமா, உட்கார்ந்து ஒண்ணொன்னா பண்ணிட வேண்டியது, ஆனால் மன்னிப்பை மட்டும் கேடடடவுடனே தந்துடணும்.
என்னா லாஜிக் டா உன்னோடது.
முதல்ல காலுல விழுடா, அதற்க்கப்புறம் மன்னிக்கிறதைப்
பத்தி யோசிக்கலாம்.

😀😀😀
CRVS (or) CRVS 2797


 
Posted : August 5, 2026 1:23 pm
(@kavi-bharathi-arunkumar)
Posts: 126
Estimable Member
 

Iniya ne nithanama yosikka ma ah unnoda istathuku aval ah hurt panni ta so athu na la ne keta udanae definite ah manipu ellam kedaikathu 


 
Posted : August 5, 2026 3:22 pm
(@guna-sundari)
Posts: 138
Estimable Member
 

Madura need some time. Eniyaian understand her and give time to.her. very intresting sis 


 
Posted : August 5, 2026 10:09 pm
(@karthi1206)
Posts: 69
Trusted Member
 

Superb epi interesting 


 
Posted : August 12, 2026 5:55 am

Scroll to Top