Forum

மதுர ஜில்லா... மச்ச...
 
Notifications
Clear all

மதுர ஜில்லா... மச்சானே!-49

10 Posts
9 Users
4 Reactions
139 Views
(@praveena-thangaraj)
Posts: 265
Member Admin
Topic starter
 
[#249]

அத்தியாயம்-49 

     ரிசப்ஷனுக்காக தைக்கப்பட்டிருந்த உடைகள் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தன.

"மாப்பிள்ளை... உங்க டிரஸ் ஸ்ட்ரச் எல்லாம் கரெக்டா தைச்சிருக்கானான்னு போட்டுப் பார்த்துட்டா நல்லது." என்று ராஜாராம் கீழே இருந்து குரல் கொடுத்தார்.

"சரிங்க மாமா." என்று பதில் சொல்லிவிட்டு அறைக்குள் சென்றான் அகிலன்.

சிறிது நேரத்தில், காவ்யா அவளாகவே கதவோரம் வந்து நின்றாள். இந்த கோர்ட் சரியா இருக்கு போலயே" என்று ஆர்வமாக உள்ளே நுழைந்தாள்.

அகிலன் வெள்ளை சட்டையின் மீது கருநீல நிற கோட்டை அணிந்து கொண்டிருந்தான். கண்ணாடி முன் நின்று பட்டனை போட முயற்சித்துக் கொண்டிருந்தான்.

"இங்க வாங்க." என்று அவள் அவனைத் திருப்பி நிறுத்தினாள். "ஸ்ட்ரெயிட்டா நில்லுங்க." என்று அதட்ட, அவன் அமைதியாக நின்றான்.

அவள் ஒவ்வொரு பட்டனையும் நிதானமாக மாட்டிவிட்டாள்.

பிறகு கோட்டின் காலரைச் சரி செய்தாள். டையை நேராக்கினாள். அவளது விரல்கள் கழுத்தருகே உரசிய ஒவ்வொரு முறையும் அகிலனுக்கு உடம்பே முறுக்கேறியது.

'இவ்வளவு பக்கத்துல நின்னு பேசறாளே' என்று மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

காவ்யாவோ அதையெல்லாம் கவனிக்கவே இல்லை. "ஒரு நிமிஷம்..." என்று சொல்லிவிட்டு தோளில் இருந்த சிறிய தூசியை தட்டிவிட்டாள்.

"இப்ப தான் செமையா இருக்கு." அகிலன் பெருமூச்சு விட்டான்.

"கோர்ட் நல்லா ஃபிட்டா இருக்கு."‌என்று சுற்றி வந்து எல்லாப் பக்கமும் பார்த்தாள்.

"இப்ப நான் ட்ரை பண்ணிட்டு வர்றேன்." என்று தன் உடையை எடுத்துக் கொண்டு டிரெஸ்ஸிங் ரூமுக்குள் சென்றாள்.

சில நிமிடங்கள் கழித்து, "அகில்... அகிலா" என்று உள்ளிருந்து அழைத்தாள்.

"ம் சொல்லுங்க" என்றான்.

"கொஞ்சம் ஹெல்ப் தேவைப்படுது" என்றதும் அவன் தயக்கத்தோடு கதவருகே சென்றான்.

"என்ன ஹெல்ப்?" என்றான்.

"இந்த ஜிப் கொஞ்சம் மாட்டிடுச்சு. அ... அத... உள்ள வாந்து போட்டு விடுங்களேன்" என்றாள்.

அகிலன் ஒரு கணம் தயங்கினான். "காவ்யா நீயே ட்ரை பண்ணலாமே" என்றான்.‌

"அய்யோ... ஜிப் போடத்தான் சொல்றேன். கழட்ட கூப்பிடலை" என்று கேலியாக அவள் சிரிக்கவும், அவன் சங்கடத்தோடு உள்ளே நுழைந்தான்.

முதுகைக் காட்டி நின்றிருந்தாள் காவ்யா. வெள்ளை நிற லாங் கவுன். முதுகுப் பகுதியில் நீண்ட ஜிப். அகிலன் மெதுவாக ஜிப்பை மேலே இழுத்தான். பாதி வரை வந்ததும் நின்றுவிட்டது.

"என்னாச்சு?" என்றாள்.

"மாட்டிக்கிச்சு?" என்றவன் தானும் இவளிடம் மாட்டிக் கொண்டதை புரிந்துக் கொண்டான்.

அவள் சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

"நார்மலா சுடிதார் போடற மாதிரி யாரோட உதவியும் இல்லாம இதெல்லாம் போட முடியாதா?" என்று பெருமூச்சு விட்டான்.

முன்பு இது போல தான் முதலிரவில் சேலைக்கு தோதாக பின் கொக்கி வைத்துவிட்டு அதை அவிழ்க்க திண்டாடினான். அதன் பின் சுடிதார் என்பதால் இந்த அவஸ்தை இல்லை. இன்று மீண்டுமா? என்ற சங்கடம். 

  "வெட்டிங் கவுனுக்கு முன்னால ஜிப் வச்சி யாரும் தைக்க மாட்டாங்க" என்று கூறிட, "கொஞ்சம் மூச்சு விட்டுக்கறேனே." என்று சுவரில் சாய்ந்து நின்றான்.

காவ்யா கண்ணாடியில் தன்னைப் பார்த்தபடி சிரித்தாள்.

அகிலனை ஏக்கமாக பார்த்தபடி ''எவ்வளவு நாள் இன்னும் தூரமா இருக்க போறிங்க" என்று திடீரெனக் கேட்டாள்.

"என்ன?" என்றான்.‌

"இப்படியே என்னைப் பார்த்தாலே டென்ஷன் ஆகறது. நான் பக்கத்துல வந்தா மூச்சு வாங்குது... இதெல்லாம் எவ்வளவு நாள்? நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு அகில்" என்றாள். அகிலன் பதில் சொல்லவில்லை.

அவளைப் பார்க்காமல் ஜன்னல் வழியே வெளியே பார்த்தான்.

"ஹலோ... அகிலன்" என்று அவள் முன்னே வந்து கையை அசைத்தாள்.

"ஏதாவது கேட்டா... எங்கயாவது வேற பக்கம் பார்க்கறிங்களே." அகிலன் மெதுவாக சிரித்தான்.

"நானும் ட்ரை பண்ணிட்டு தானே இருக்கேன்." என்றான்.‌

"எதை?" என்றாள் இடுப்பில் கையை வைத்தபடி, "உன்னைப் பார்த்து பேச." என்றதும், காவ்யாவின் உதட்டில் புன்னகை மலர்ந்தது.

"அப்படியா என்னை ஒரு முறை பாருங்க" என்றதும், அவன் மீண்டும் அவளை ஒருமுறை பார்த்தான்.

காவ்யாவின் உடையில் முழு கவுனின் முன் பகுதி, க்ளிவேஜ் தெரிய தயக்கத்துடன் பார்வையை தாழ்த்தினான். 

"ஹலோ இங்க பாருங்கனு சொன்னேன்" என்றதும், அவளிடம் சொல்ல வார்த்தையைத் தேடினான்..

"கொஞ்சம் லோ நெக்கா இருக்கற மாதிரி இருக்கு." என்றான். காவ்யா கீழே பார்த்தாள்.

"ஓ... இங்க இது காமன் தானே யாரும் நேரா இங்க பார்க்க மாட்டாங்க." என்றாள்.‌ அகிலன் உடனே "டிரஸ் நல்லாத்தான் இருக்கு கொஞ்சம் லோ நெக்.." என்றான். 

அவள் அவனைப் பார்த்து புருவம் உயர்த்தினாள்.

அவன் முழிக்க ஆரம்பித்ததும், காவ்யா சிரிப்பை அடக்க முடியாமல் "டைமண்ட் செட் போட்டா இந்த இடம் மறையும் போதுமா?" என்று சிரித்தாள்.

"ஓ" என்று மேலும் பேச முடியாமல் தடுமாறினான்.‌

  ஏனெனில் காவ்யா அவன் அருகே வந்து நெருக்கமாய் நின்று கண்ணாடியில் தங்கள் ஜோடி பொருத்தத்தை கவனித்தாள். அகிலனால் தான் அவளை காண முடியாமல் 'ஆண்டவா காப்பாத்து' என்று அலறாத குறையுடன் நின்றான்.

அதே நேரம் கீழே இருந்து ராஜாராம் குரல் கேட்டது.

"காவ்யா... மாப்பிள்ளை... ரெடியா?" என்று கேட்க, காவ்யா கதவைத் திறந்தபடி,

"வர்றோம் டாட்..." என்று பதில் சொல்லிவிட்டு அகிலனைப் பார்த்தாள்.

"வாங்க... இப்ப உங்களுக்கு மூச்சு நார்மலா வந்திருக்குமே. ரொம்ப நேரம் என்னோட நின்றாலே எஸ்கேப் ஆக வழி கிடைக்குமானு யோசிப்பிங்களே." என்று கண் சிமிட்டினாள்.

"அப்படில்லாம் இல்ல..." என்று சிரித்தவன், "இனிமே தான் கஷ்டம் ஆரம்பமாகப் போகுதுன்னு தோணுது." என்று முணுமுணுத்தபடி அவளுடன் கீழே இறங்கினான்.

   இல்லையா பின்னே காவ்யா ஒரு மார்க்கமாக தான் நெருங்குகின்றாள். 

  அவள் உடல் தன்னுடலோடு ஒன்றுவது போல நெருங்குவதிலேயே அர்த்தம் புரிந்துக் கொண்டான்.‌

  அவளுக்கு இவனிடம் எந்த தயக்கமும் இல்லை. அவள் புறமிருந்து பச்சை கொடி காட்டிவிட்டாள். 

  மனசாட்சியோ 'காளைய அடக்கறது வீரம் இல்லை அகிலா. இந்த பொண்ணை அடக்கிப்பாரு. அப்பறம் தெரியும்'. என்று கூறி சவாலிட்டது போல தோன்றியது. 

  அடுத்த நாளில் மாலை நேரம் அவ்வீடே விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது. வெள்ளை, தங்கநிற அலங்காரங்களுக்கு இடையே மேடை அமைக்கப்பட்டிருந்தது.

கருநீல நிற கோர்ட் சூட்டில் கம்பீரமாக நின்றிருந்தான் அகிலன். அவனருகே வெந்நிற கவுனில் தேவதை போல நின்றிருந்தாள் காவ்யா.

  ஏற்கனவே மதுரையில் திருமணம் முடித்து கல்யாண சாப்பாடு முடித்திருக்க, இங்கு இந்த ஊருக்கு தகுந்தது போல மோதிரம் மாற்றி ரிஸப்ஷன் ஏற்பாடு செய்திருந்தனர்.

  அதன் வழிகாட்டுதலாக, இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்ள, கூறவும் பிளாட்டின ரிங்கை அகிலன் காவ்யாவுக்கு அணிவித்தான். காவ்யாவும் அகிலனுக்கு மோதிரம் மாற்றி விட்டாள்.‌

  காவ்யா கழுத்தில் மஞ்சள் தாலியை காணவில்லை என்றதுமே, அதை பற்றி கூட அவன் கேட்கவில்லை. இதில் முத்தமிட சொல்லி கோஷங்கள் வரவும், அகிலன் திடுக்கிட்டான்.‌

   இதில் காவ்யா வேறு சிரிப்புடன் வெட்கப்பட்டு, அகிலனை ஏறிட, "நோ... காவ்யா.. ஐ கான்ட்" என்று மெதுவாக கூற, "உங்களால் முடியாது. என்னால முடியும்" என்று கன்னம் பிடித்து பட்டும் படாமலும் முத்தமிட நினைத்து நெருங்கியவள், அகிலன் கீழ் உதட்டை வருடும் விதமாக முத்தமிட்டு நின்றாள். 

   ஆர்ப்பாட்டமான சத்தங்கள் அதிகரித்தகேட்க அகிலன் அதன்பின்னே சுதாரித்து விலகினான். 

    இதுவரை கன்னத்தில் தான் காவ்யா முத்தமிட்டு விளையாடியது. இப்பொழுது முகம் தெரியாத பலபேர் முன்னிலையில் முத்தமிடவும், லேசான அதிர்ச்சி அடைந்திருந்தான். கைத்தட்டல் இன்னும் பலமாக எழுந்தது.

அகிலன் மட்டும் அப்படியே ஸ்தம்பித்து நின்றிருந்தான்.

ஆழ்மனதில் அந்த முத்தம்... ஏனோ... இன்னும் ஒரு நொடி நீண்டிருக்கலாமே என்ற ஏக்கத்தை விதைத்தது. 

அவன் காவ்யாவை இரண்டு மூன்று முறை திரும்பிப் பார்த்தான். அவளது பார்வை மற்றவரிடம் விரியவும் தான் இயல்பானான். 

அமெரிக்காவில் ராஜாராமுடன் தொழில் தொடர்பு வைத்திருந்த பலரும் ஒருவர் பின் ஒருவராக வந்து வாழ்த்து கட்டிபிடித்து தெரிவித்திட லேசான பதட்டம் மறைத்தவனாக நின்றான்.‌

"Congratulations... Kavya"

"Nice to meet you.. Mr.Akilan." என்று கைகுலுக்கிக் கொண்டனர்.

காவ்யாவோ அவர்களுடன் சரளமான ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தாள். அகிலன் சில நேரம் அவனிடம் தானாக வந்து பேசுபவரிடம் ஆங்கிலத்தில் பேசினான்

சிலரிடம் இந்தியாவில் ஆரம்பிக்க நினைக்கும் திட்டத்தைப் பற்றியும் முன்கூட்டியே காவ்யா பேசியிருந்தாள்.

  இன்றும் அதை பற்றி நேரில் ஒரு வார்த்தை ஆப்டர் மேரேஜ் விருப்பத்தை தெரிவித்திருக்க, 

"Once I settle in Madurai... I want to build an export network directly with farmers..." என்று கூறியதும் மற்றவர்கள்

"That's a great idea."

"We can definitely discuss." என்று இருவர் அப்பொழுதே ஆர்வமாக ஆதரவு தருவதாக வாக்கு தந்தார். 

   காவ்யா மகிழ்ச்சியாக, "Sure... We'll connect."என்று புன்னகைத்தாள்.

அதை ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த அகிலனுக்கு,

'இவ என்ன பிசினஸ் பண்ணப் போறா அதுவும் விவசாயம் சம்பந்தப்பட்டு' என்ற ஆவல் இன்னும் அதிகமானது.

அதே நேரத்தில் அவ்விடத்தில் மறுபுறம் வைன், ஜூஸ், சாப்ட் டிரிங்க்ஸ் அனைத்தும் உணவுடன் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது.

  அவரவர் வந்திருந்தவரிடம், பேசி சிரித்திருந்தனர்.‌

   அப்பொழுது பப்ஃபே முறையில் உணவுண்ணும் முன்,  "Red wine, ma'am?" என்று கேட்டபடி காவ்யா முன் நீட்ட, இயல்பாக வாங்கிக் கொண்டாள்.

  அகிலன் மறுத்துவிட்டு அவள் பக்கம் பாராமல் நின்றான்.

ஒரு கிளாஸ்... இரண்டு கிளாஸ்... என்று காவ்யா ரெட் வொயின் பருகினாள். ராஜாராம் தூரத்தில் இருந்து கவனித்தார். "காவ்யா..." என்று அருகே வந்து மெதுவாக அழைத்தார்.

  "வாட் டேடி" என்றாள் குழறலாக. "Enough..." என்று கண்களால் சைகை செய்தார். பழக்கமிருந்தாலும், இன்று மகிழ்ச்சியிலும், நண்பர்களின் வற்புறுத்தலிலும் வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாக பருகிவிட்டாள்.

"டாட்... Relax.." என்று சிரித்தவள் மீண்டும் நண்பர்களோடு பேச ஆரம்பித்தாள்.

அகிலனும் அதை கவனித்தான்.

ஒரு கணம் அவன் பார்வை ராஜாராமைச் சந்தித்தது.

ராஜாராமின் முகத்தில் இருந்த தயக்கமும் கவலையும் அவனுக்குப் புரிந்தது.

'இதை நான் தடுக்கணுமா...? இல்ல... இது இவங்க வழக்கம் தானே' என்ற எண்ணம் வந்தாலும், எதுவும் அந்த நேரம் தன் கருத்தை முன் வைத்து பேசவில்லை.

அன்றைய இரவு தாமதமாகவே நிகழ்ச்சி முடிந்தது. விருந்தினர்கள் ஒவ்வொருவராக கிளம்பினர்.

ராஜாராம் அகிலன் அருகே வந்து மெதுவாக, "மாப்பிள்ளை" என்றார் தயக்கத்துடன்.

"சொல்லுங்க மாமா." என்றவன் பார்வை நொடிக்கொரு முறை காவ்யாவை கண்டது.

"காவ்யாவோட ஆக்டிவிட்டிஸ் அதிருப்தியா எதுவா இருந்தாலும்... காலையில பேசிக்கலாம்." அவர் ஒரு நொடி தயங்கினார்.

"அவளை... தப்பா நினைக்காதீங்க." அகிலன் உடனே, "அப்படி எதுவும் இல்ல மாமா." என்றான். ராஜாராம் நிம்மதியாக மூச்சு விட்டார்.

"Good night... மாப்பிள்ளை" என்று "Good night, மாமா." என்று காவ்யாவின் கையை பற்றி அழைத்து வந்தான். 

அறைக்குள் வந்ததும் காவ்யா கதவை மூடிவிட்டு சிரித்தபடியே சுவரில் சாய்ந்தாள். "அப்பாடா..." என்று காலணியை கழற்றினாள். "ரொம்ப நேரம் நிற்க முடியல அகில்" என்றாள்.

அகிலன் மெதுவாக அவளருகே சென்றான். "உட்காரு..." என்று படுக்கையின் ஓரத்தில் அமர வைத்தான்.

அவளுக்குச் சிரமமாக இருந்ததால், ரிசப்ஷன் கவுனை மாற்றிக் கொள்ள உதவியாக தளர்வான நைட் கவுனை எடுத்துக் கொடுத்தான்.

"இத போட்டுக்கோ..." என்று சொல்லிவிட்டு திரும்பி நின்றான்.

சிறிது நேரத்தில் அவள் மாற்றிக் கொண்டு வந்தாள். அவளைப் பார்த்தவன், "தண்ணி குடிக்கிறியா?" என்று கேட்டான்.

காவ்யா தலையசைத்து பாட்டிலை வாங்கி இரண்டு வாய் குடித்தாள்.

அவன் விளக்கை மங்கலாக மாற்றிவிட்டு படுக்கையில் ஒருபுறம் படுத்தான்.

சில நிமிடங்கள் அமைதியாக இருந்தது. திடீரென்று காவ்யா அவன் அருகே நகர்ந்து வந்தாள். அவனது கையை இரு கைகளாலும் கட்டிக் கொண்டாள்.

"அகில்..." என்றாள்.

"ம்..."

"Do you love me?" என்று கிறக்கமாய் கேட்க, அகிலன் பதில் சொல்லவில்லை என்றதும் காவ்யா குழறலாக,

"சொல்லு அகில்" என்றாள்.

"காவ்யா.. நீ நிதானமா இல்லை.. தூங்கு." என்று கூறினான். "ஒரு தடவை... ஒரே தடவை 'I love you, Kavya'ன்னு சொல்லு." என்று குழந்தை போல முணுமுணுத்தாள்.

அவன் அமைதியாக அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் கேட்டதற்காக கூறமுடியுமா? 

"அகில்..." என்று சிணுங்கினாள். 

"ம்..."

"நான் உன்னை ரொம்ப... ரொம்ப லவ் பண்றேன் தெரியுமா மேன்" என்றவளது குரல் மெதுவாகத் தளர்ந்தது.

"இதுக்கு முன்ன... எந்த பையன்கிட்டயும்... இவ்வளவு நெருக்கமா நான் இருந்ததில்ல.. நீ பக்கத்துல இருந்தா... இன்னும் பக்கத்துல வரணும் போல இருக்கு. 

இனியன் கூட பேசி பழகியது எல்லாம் ஜஸ்ட் அஃபெக்ஷன்னா இருக்குமோனு புரிதுடா. 

  நீ தான்... நீ தான் என்னோட காதல். My true love." என்று கண்களை மூடிக் கொண்டாள்.

அகிலன் அமைதியாக அவளது நெற்றியில் விழுந்திருந்த முடியை ஒதுக்கிவிட்டான்.

"சரி... இப்ப தூங்கு.." என்று மெதுவாகச் சொன்னான்.

காவ்யா மீண்டும் அவன் கையை இறுகப் பற்றிக் கொண்டாள்.

சில நொடிகளில் அவளது புலம்பல்கள் ஓய்ந்து சுவாசம் சீரானது. அவள் தூங்கிவிட்டாள். ஆனால் அகிலனுக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும்

அவனது மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது.

-தொடரும். 

-பிரவீணா தங்கராஜ்.

Kindly register login to read and share ur valuable comments thank u Readers 


 
Posted : July 30, 2026 6:24 am
muthupriyabalaji, Kalidevi, Padma and 1 people reacted
(@kothaihari)
Posts: 125
Estimable Member
 

Nice


 
Posted : July 30, 2026 6:43 am
(@dharsinipriya)
Posts: 77
Trusted Member
 

Super sis nice epi 👌 😍 endha ponnu enga kudikira mathiri anga poi panna enna agum🙄 akila un paadu thindattam dhan da avaley nerungi varaa nee ennum odhungi pona eppudi😐


 
Posted : July 30, 2026 6:51 am
(@crvs2797)
Posts: 188
Estimable Member
 

மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 49)

அடப்பாவி...! இந்த அகிலன் என்ன இம்புட்டு வெட்கப்படறான்...?
கூச்சப்படறான். ம்ஹூம்... இப்படியே இருந்தால் வேலைக்காகது போல.
எப்படியாப்பட்ட காளை மாட்டை கூட அடக்கிப்பூடுறான், ஆனால் இந்த காவ்யா பக்கத்துல போக இப்படி யோசிக்கிறானே..? அநியாயத்திற்கு நல்லவனா
இருக்கிறானே..???!!!

😀😀😀
CRVS (or) CRVS 2797


 
Posted : July 30, 2026 8:28 am
(@crvs2797)
Posts: 188
Estimable Member
 

மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 49)

அடப்பாவி...! இந்த அகிலன் என்ன இம்புட்டு வெட்கப்படறான்...?
கூச்சப்படறான். ம்ஹூம்... இப்படியே இருந்தால் வேலைக்காகது போல.
எப்படியாப்பட்ட காளை மாட்டை கூட அடக்கிப்பூடுறான், ஆனால் இந்த காவ்யா பக்கத்துல போக இப்படி யோசிக்கிறானே..? அநியாயத்திற்கு நல்லவனா
இருக்கிறானே..???!!!

😀😀😀
CRVS (or) CRVS 2797


 
Posted : July 30, 2026 8:28 am
(@guna-sundari)
Posts: 138
Estimable Member
 

Wow reception over. But akilan has still some hesitations. But its not need. Very intresting sis.


 
Posted : July 30, 2026 9:18 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 126
Estimable Member
 

Akilan aniyathuku vekka paduran ya kaviya kum serthu .


 
Posted : July 30, 2026 9:31 am
(@subhakumar85)
Posts: 112
Estimable Member
 

Ava entha oorla thane wine yeduthukura.. dei romba yosikra da nee agila 


 
Posted : July 30, 2026 9:59 am
(@kalidevi)
Posts: 140
Estimable Member
 

yen akila ivlo yosanai unaku innum thayangite iruka oru ponna ava un kitta romba sagajama nadanthukura 


 
Posted : July 30, 2026 11:58 am
(@karthi1206)
Posts: 69
Trusted Member
 

Superb epi lovely 🤩 


 
Posted : August 11, 2026 9:33 pm

Scroll to Top