ராகி பணியாரம்
ராகி வெல்லப் பணியாரம்
தேவையான பொருட்கள்
ராகி மாவு – 1 கப்
கோதுமை மாவு – ¼ கப்
வெல்லம் – ¾ கப்
ஏலக்காய்த் தூள் – ½ டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன்
சிட்டிகை உப்பு
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை
வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்து வடிகட்டி ஆறவிடவும்.
ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, கோதுமை மாவு, ஏலக்காய்த் தூள், சிட்டிகை உப்பு, துருவிய தேங்காய் சேர்த்து கலக்கவும்.
இதில் வெல்லப் பாகு கட்டி இல்லாமல் பஜ்ஜி மாவு பதத்திற்கு கலக்கவும்.
மாவை 20 நிமிடங்கள் ஊறவிடவும்.
கடாயில் எண்ணெயை மிதமான சூட்டில் காயவைக்கவும்.
ஒரு கரண்டியால் மாவை சிறு சிறு அளவாக எண்ணெயில் ஊற்றவும்.
இருபுறமும் பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
அதிகப்படியான எண்ணெய் வடிந்ததும் சூடாக பரிமாறவும்.
வெல்லமும் ராகியும் உடலுக்கு நல்லது என்பதால் இனிப்பை விரும்பும் குழந்தைகளுக்கு தரலாம்.
- 25 Forums
- 330 Topics
- 1,588 Posts
- 0 Online
- 420 Members
