நயனமே நான் தானடி-11
அத்தியாயம்-11
ராஜ்குமார் நாயாகன் அவதாரம் எதையும் பூசாமல் எதார்த்த மனிதனாக தன்னை மணக்க விரும்பிய சஞ்சனாவை மணந்திட சம்மதித்தான்.
அதன் பொருட்டு, சந்திராவுக்கு லேசான கவலை என்றாலும் கொடைக்கானலில் குறிஞ்சி ஆண்டவர் சந்நிதியில் திருமண நடைப்பெற்றது.
பலரும் அங்கிருந்தவர்கள் அக்கா மகனுக்கு முன்பிருந்தே மகளை கட்டி தர சசிகுமார் விருப்பப்பட்டார். இன்று ராஜ்குமாருக்கு விபத்தில் பார்வை பறிப்போனப்பின்னும் அக்கா மகனை தனித்து ஒதுக்காமல் மகளையே கட்டிக்கொடுத்து விட்டார் என்று பேசப்பட்டது.
சொந்தத்தில் குறையை ஏற்றுக்க தயாராக இருக்கும் பொழுது, குறை குறையாக பேசபடவில்லை.
சஞ்சனா-ராஜ்குமார் ரிசப்ஷன் பத்து டூ பன்னிரென்டு கொடைக்கானலில் பார்ட்டி விழாவிற்கென்ற ஹாலில் வரவேற்பு தயாரானது. அதற்கு சென்னையிலிருந்து வந்திருந்தவர்களில் குறிப்பிட்டவர்கள் சங்கவி நேத்ரா இருவரும். அவர்களை பாதுகாத்து வழிநடத்த, ராஜ்குமாரின் ஆணைமால் தேவா ஒரு உதவியாளை வைத்தான்.
நேத்ராவோ மகிழ்ச்சியாக அந்த விழாவில் கலந்துக்கொள்ள வந்திருந்தாள்.
வரவேற்பில் போட்டோவிற்கு நின்ற பொழுது, சங்கவி தான் "ஹாப்பி மேரீட் லைஃப் அண்ணா" என்றாள்.
"தேங்க்யூ சோ மச் சங்கவி." என்றான்.
அடுத்த வாழ்த்தாக "இனிய திருமண நல்வாழ்த்துகள் ராஜ்குமார் சார்" என்ற தேன்குரல். ராஜ்குமாரோ தேவா மூலமாக நேத்ரா சங்கவி வந்ததை அறிந்ததால், வியப்பாகவில்லை. அவள் வாழ்த்து கூறியதும், "நான் போன்ல கூப்பிட்டதும் என் திருமணத்திற்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி நேத்ரா. நேத்ரா.. சஞ்சனா.
சஞ்சனா.. நான் தினமும் ஒரு புரோகினாம் கேட்பேனே அவங்க" என்று அறிமுகப்படுத்தினான்.
"வாவ்... அந்த நேத்ராவா நீங்க. சோ ஸ்வீட்.. அத்தான் அந்த புரோகிராமை மிஸ் பண்ணவே மாட்டார். எங்கேஜ்மெண்ட் ஆனதிலயிருந்து அவரை பார்த்துக்க தேவா அண்ணாவோட நானும் கூடவே இருப்பேனா... அப்ப நானும் அத்தானோட சேர்ந்து அந்த புரோகிராம் கேட்பேன். ஹனி வாய்ஸ்" என்றாள் சஞ்சனா.
"தேங்க்ஸ்ங்க" என்று நேத்ரா பதிலுக்கு கூறினாள். மற்றபடி போட்டோ எடுத்ததும் கீழேயிறங்க ஆரம்பித்தனர். படிக்கட்டில் ஜாக்கிரதையாக தேவா தான் சங்கவி கையை பிடித்து அழைத்துவர, சங்கவி கையை பிடித்த நேத்ராவும் நடந்துவந்தாள்.
அவர்களை சாப்பிட அனுப்பிவிட்டு தேவா மீண்டும் மேடையில் வந்தான்.
சற்று ஓய்வு தரும் நேரம் அமர்ந்திருக்க, "சார் கூல்டிரிங்க்ஸ் ஏதாவது வேண்டுமா?" என்று தேவா கேட்க அவனை பிடித்துக் கொண்டான் ராஜ்குமார். "தேவா... சங்கவி என்னிடம் சொன்னா... நீ நேத்ராவை பத்தி அதிகம் விசாரிச்சியாமே?!" என்று பீடிகை போட்டான்.
"சார்... கண்ணு தெரியாத பொண்ணு... உங்களிடம் மறுத்து பேசிட்டு, தனியா ஏதாவது பீல் பண்ணுதானு விசாரிச்சேன் சார். என்ன இருந்தாலும் காதலை ஏற்கவோ மறுக்கவோ செய்யறப்ப இரண்டு பக்கமும் ஏதாவது வலி இருக்கும் சார்" என்றான்.
"ஓ... அப்படியா? சரி... நான் கேள்விப்பட்டதில் நீ தினமும் சங்கவியிடம் பேசற. அதுல நேத்ராவை பற்றி நிறைய விசாரிக்கறியாம். நேத்ரா வேற அன்னைக்கு என்னை கேள்வி கேட்டுட்டு, அதே கேள்வியை உன் பக்கம் திருப்பியதிலிருந்து சரியில்லையாமே. கண்ணால பார்க்க முடியலைனு பொய் சொல்லாத, என்னிடம் உண்மையை சொல்லு தேவா?" என்றான்.
"சார்... நார்மலா இருந்தம்ப கண்ணு தெரியாத பொண்ணை விரும்புவிங்களானு கேட்டப்ப ஒரு மாதிரி குடைந்தது சார்.
உண்மை தானே சார்... என்னென்னவோ உதவி செய்யறோம். பரீட்சைக்கு எழுத, ரோட்டை கிராஸ் பண்ண, பார்வையற்றவர்கள் ஏதாவது விற்றா அதை காசு கொடுத்து வாங்கறோம், ஏதாவது கைவினைபொருட்கள் என்றால் அவங்களை ஊக்குவிக்க நினைக்கறோம், ஏன் பஸ்ல டிரையின்ல உட்கார இடம் தர்றோம். இதெல்லாம் போதாது சார். அந்த பொண்ணு நேத்ரா கேட்ட மாதிரி, பிடிச்சிருந்தா காதலிக்க கூடாதானு மனசுல அந்த கேள்வி சுத்திட்டே இருந்தது. நீங்க ஒரு உயிர் போகக் கூடாதென்றும், நேத்ராவோட முடிவு தெரிந்தும் விலகினிங்க. தப்பில்லை சார்... சஞ்சனா மேடத்தோட உண்மை காதல் உங்களை அவங்களிடம் சேர்த்ததா தான் நான் நினைக்கறேன்." என்றான்.
ராஜ்குமாரோ ஆமோதிப்பாய் தலையாட்டி, "ஓகே... நேத்ரா கேட்ட கேள்வி மனசுல சுத்திட்டே இருந்தது போதும். இப்ப பதிலை சொல்லு. பார்த்துப்பா... பதிலை கேட்டா கேள்வியை கேட்டு மழுப்பற குணவதி. உனக்காவது காதலை அக்சப்ட் பண்ணி அவளும் நல்லா வாழணும்னு ப்ரியப்படறேன். உன்னை மாதிரி ஒருத்தன் கேர் எடுத்து அவளை கவனிச்சிக்கிட்டா அவ இன்னமும் உலகத்தோட முன்னனியில வருவா. தளர்ந்திடாத விடாம கேளு. ஆல்தி பெஸ்ட் தேவா." என்று கட்டிப்பிடித்தான் ராஜ்குமார்.
இதுநாள்வரை நல்ல முதலாளி, இன்று நல்ல நட்புடனும் வாழ்த்தியதில் தேவா கூடுதலாக பலம்பெற்றவனாக நேத்ராவை தேடினான். யாருக்கும் இடையூறின்றி தனியாக அமர்ந்திருந்தனர்.
நேத்ரா இடத்தை கண்டதும் முறுவல் உதிர்க்க அவர்களை நோக்கி வந்தான்.
சங்கவியோ, "நீ சம்மதிச்சிருந்தா இந்த இடம் உனக்கு வந்திருக்கும் நேத்ரா." என்று குறைப்பட, "அடப்போடி... நானே ஒரு கண் தெரியாதவ. என்னை காதலிப்பதா ராஜ்குமார் சார் சொல்லி நான் அதுக்கு சுயநலமா சம்மதிச்சியிருந்தா அவரும் கஷ்டப்படுவார். இப்ப பாரு.. அவர் மாமன் மகளை கல்யாணம் செய்து சந்தோஷமா வாழ்வார். அந்த பொண்ணு சஞ்சனா கூட ராஜ்குமார் சாரை விரும்பியிருப்பதா உங்க நொண்ணா... போன்ல பெருமையா சொன்னாரே." என்று தேவாவை நொண்ணா என்று கேலி செய்தாள்.
"இங்க பாரு.. தேவா அண்ணாவை கேலி பண்ணாத" என்று அதட்ட, "ஆங்... நான் ஒரு கேள்வி கேட்டேன். உங்க தேவா அண்ணா... ஓடிட்டார். கண்ணு நல்லாயிருக்கறப்ப ஒரு குருடியை கல்யாணம் செய்விங்களானு கேட்டதுக்கு இப்பவரை பதில் சொல்லலை." என்று சிரித்தாள்.
"சங்கவி.. நான் பதில் சொல்லிட்டா உன் பிரெண்ட் என்ன பண்ணுவாங்களாம்" என்று தேவா பேசவும் சங்கவி-நேத்ரா இருவரும் தேவா வந்துவிட்டதை அறிந்து தடுமாறினார்கள்.
"அண்ணா.." என்று சங்கவி அழைக்க, தேவாவோ "எனக்கு கண்ணு தெரியும். நான் மாற்றுதிறனாளி இல்லை. இந்த நேரம் நான் உன் பிரெண்ட் நேத்ராவை கல்யாணம் பண்ணிக்க மனபூர்வமா சம்மதிச்சா, உன் பிரெண்ட் என் காதலை என்னனு கேலி செய்வாங்களாம். ராஜ்குமார் சாரை பேச்சிழக்க வச்ச மாதிரி என்னை கத்தரிக்க முடியாது. ஏன்னா... அவரால அகத்தின் அழகு முகத்துல வழியறதை பார்க்க முடியாது. இந்த தேவாவால நேத்ராவோட முகமாற்றத்தை துல்லியமா கணிக்க முடியும்.
தான் ஒரு பார்வையற்றவ. தன்னை ஒரு பார்வையற்றவன் காதலிப்பதை ஏற்க பயம். ஏன்... ரேகா-சுந்தர் இருவரையும் உதாரணம் காட்டி ராஜ்குமார் சார் வேண்டுமின்னா பேசி ஆர்க்யூ பண்ண மறந்திருக்கலாம். இந்த தேவா மறக்க மாட்டான்.
அவரை அழகா கத்தரிச்சிட்ட, இப்ப எனக்கு பதில் சொல்லு நேத்ரா" என்று நின்றான்.
"இங்க பாருங்க.. உங்க பாஸ் விரும்பிய என்னை நீங்களும் விரும்பறது சரியில்லை." என்றாள்.
"சார் இப்ப சஞ்சனா மேடத்தோட கணவன். நீயுமே யாரையும் காதலிக்கலையே. பிறகு உன்னிடம் காதலை சொல்லறது சரிதான்." என்று பேசினான்.
"சங்கவி.. நாம போகலாம்" என்று எழுந்திட, அவள் கரத்தை பற்றி, "ஏதாவது பதிலுக்கு பேசி வாயடைக்க தெரியலைன்னா இடத்தை காலி பண்ணிடணும். அதானே....
வெயிட் எ மினிட்" என்றவன் அவள் கரத்தை தன் இடது கன்னத்தில் பதியவைத்தான். சொரசொரப்பாக உணரவும், "சின்ன வயசுல ஏற்பட்ட விபத்துல தழும்பா மாறிடுச்சு. இதனால யாரும் கல்யாணம் செய்ய முன்வர்றதில்லை. இதை தவிர, நீ மறுத்தா காதல் தழும்பும் சேர்த்து இதயத்துல நங்கூரமா இறங்கும்.
நான் ஒரு கேர்டேக்கர். மத்தவங்களை எப்படி பார்த்துப்பேனோ அதே அளவு என் மனைவியையும் பார்த்துப்பேன். யோசித்து சொல்லு. ராஜ்குமார் சார் கல்யாண வேலையில் இன்னும் சில பெண்டிங்ல இருக்கு வர்றேன் நேத்ரா. சங்கவி வர்றேன்மா.. பார்த்துக்கோ." என்று என்றாவது ஒருநாள் நேத்ரா தேவாவுக்கு மணக்க சம்மதிப்பாளென்று திடமாய் நம்பி ராஜ்குமாரை கவனிக்க ஓடினான்.
அங்கே இவனுக்கு கஷ்டம் கொடுக்காமல் சஞ்சனாவோ, ராஜ்குமார் கையை பிடித்து படிக்கட்டில் நடந்திட உதவி செய்து, ''தேவா அண்ணா நானும் அவரும் சாப்பிட போறோம். நீங்க வந்த கெஸ்டை பாருங்க" என்று ராஜ்குமாருக்கு துணையாக மனைவி சஞ்சனாவாக நான் பார்த்துக்கொள்வதாக கூறி தேவாவை அனுப்பினாள்.
எத்தனை நாள் தேவாவே கூட வருவான். கடைசி வரை துணையாக வருவது துணைவியே!
பார்வை பறிப்போன ராஜ்குமாரை, சஞ்சனா கவனித்து நேசத்துடன் காதலிப்பது போல, இந்த தேவாவும் பிறந்ததிலிருந்து பார்வையிழந்த நேத்ராவின் பதிலை, உரைத்தப்பின், அவளை அன்புடன் அரவணைத்து கைகோர்க்க காத்திருக்கின்றான்.
~சுபம்~
-பிரவீணா தங்கராஜ்.
Copyright © 2015 by Praveena Thangaraj ® All Rights Reserved.
புத்தகம் வாங்க அணுக வேண்டிய எண்: 9840932361
இதுவரை எழுதிய நாவல்கள் :
1.) முதல் முதலாய் ஒரு மெல்லிய (ஶ்ரீபதிப்பக வெளியீடு)
2.) புன்னகை பூக்கட்டுமே (ஶ்ரீபதிப்பக வெளியீடு)
3.) கனவில் வந்தவளே
4.) விழிகளில் ஒரு வானவில்
5.) உன்னோடு தான் என் பயணம்
6.) உன்னில் தொலைந்தேன்
7.) இதயத்தினுள் எங்கோ
8.) தித்திக்கும் நினைவுகள் (குடும்ப நாவல் வெளியீடு)
9.) காலமும் கடந்து போவோம் வா
10.) ஸ்டாபெர்ரி பெண்ணே (Notionpress வெளியீடு)
11.) வன்மையாய் வந்து சேர்ந்ததென்ன (Notionpress வெளியீடு)
12.) உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
13.) காதலாழி
14.) முதலாம் சந்திப்பில்... (குடும்ப நாவல் வெளியீடு)
15.) தாரமே தாரமே வா (அருணோதயம் வெளியீடு)
16.) அபியும் நானும்
17.) நிலவோடு கதை பேசும் தென்றல்
18.) ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில் (Notionpress வெளியீடு)
19.) நுண்ணோவியமானவளே
20.) மையல் விழியால் கொல்லாதே
21.) பூவே செம்பூவே (குடும்ப நாவல் வெளியீடு)
22.) பனிக்கூழ் பா(ர்)வையன்றோ (புஸ்தகா வெளியீடு)
23.) காதல் மந்திரம் சொல்வாயோ (ஶ்ரீபதிப்பக வெளியீடு)
24.) மடவரல் மனவோலை (Notionpress வெளியீடு)
25.) என்னிரு உள்ளங்கை தாங்கும் (ஶ்ரீபதிப்பக வெளியீடு)
26.) தீவிகை அவள் வரையனல் அவன் (புஸ்தகா வெளியீடு)
27.) சிரமமில்லாமல் சில கொலைகள் (புஸ்தகா வெளியீடு)
28.) ஓ மை பட்டர்பிளை (புஸ்தகா வெளியீடு)
29.) முத்தமிட்டு சுவடுபதி ஆலியே (புஸ்தகா வெளியீடு)
30.) பூட்டி வைத்த காதலிது (ஶ்ரீபதிப்பக வெளியீடு) பிரதிலிபி தளம் நடத்திய 'வித்தியாசமான காதல் சீசன் 2' என்ற போட்டியில் குறிப்பிடத்தகுந்த படைப்பில் இடம் பெற்றவை
31.)உள்ளத்தில் ஒருத்தி(தீ)
32.) காலமறிதல்
33.) இமயனே இதயனே (புஸ்தகா வெளியீடு)
34.) துஷ்யந்தா... ஏ.. துஷ்யந்தா... (ஶ்ரீபதிப்பக வெளியீடு)
35.) நதி தேடும் பெளவம் (Notionpress வெளியீடு)
36.) நன்விழி (Notionpress வெளியீடு)
37.) இணையவலை கட்செவி அஞ்சல் பிரதிலிபி தளம் நடத்திய 'மகாநதி' என்ற போட்டியில் குறிப்பிடத்தகுந்த படைப்பில் இடம் பெற்றவை(Notionpress வெளியீடு)
38.) தழலில் ஒளிரும் மின்மினி (Notionpress வெளியீடு)
39.) மனதோடு மாய மின்சாரம் (Notionpress வெளியீடு)
40.) ஹைக்கூ காதலனே
41.) மீண்டு(ம்) வருவேன் (புஸ்தகா வெளியீடு)
42.) செந்நீரில் உறையும் மதங்கி 'பிரதிலிபி' தளம் நடத்திய 'சங்கமம்' என்ற போட்டியில் நான்காம் இடம் பிடித்து 1000 ரூபாய் பரிசு பெற்றவை. மேலும் எழுத்துவடிவ நேர்காணல் தளத்தில் இடம் பெற்றது.(Notionpress வெளியீடு)
43.) ஏரெடுத்து பாரடா... முகிலனே...
44.) வல்லவா எனை வெல்லவா
45.) உயிர் உருவியது யாரோ(Notionpress வெளியீடு)
46.) பிரம்மனின் கிறுக்கல்கள் (ராணிமுத்து வெளியீடு) 2022 -இல் ஜூன் 16 அன்று வெளியான நாவல்
47.) விலகும் நானே விரும்புகிறேன் (Notionpress வெளியீடு)
48.) 90's பையன் 2k பொண்ணு (ஶ்ரீபதிப்பக வெளியீடு)
49.) அவளைத்தேடி (Notionpress வெளியீடு)
50.) இதயத்திருடா
51.) பூ பூக்கும் ஓசை (Notionpress வெளியீடு) (நந்தவனம் தளத்தில் குறுநாவல் போட்டியில் 3000 ரூபாய் இரண்டாம் பரிசு பெற்றவை)
52.) நேசமெனும் பகடை வீசவா (பிரதிலிபி தளம் நடத்திய 'வித்தியாசமான காதல் சீசன்' என்ற போட்டியில் குறிபிடத்தகுந்த படைப்பில் இடம் பெற்றவை)
53.) மேகராகமே மேளதாளமே
54.) ஜீவித்தேன் உந்தன் கவிதையில்
55.) நில் கவனி காதல் செய் (பிரதிலிபியில் சூப்பர் ரைட்டர் 4 போட்டிக்கு எழுதி 6வது இடத்தில் வெற்றி பெற்று 3000ரூபாய் பரிசு பெற்றது)
56.) ரசவாதி வித்தகன் (அருணோதயம் வெளியீடு)
57.) பஞ்ச தந்திரம் (புஸ்தகா வெளியீடு)
58.) ஸ்மிருதி (ஶ்ரீபதிப்பக வெளியீடு)
59.) நீயின்றி வாழ்வேது (புஸ்தகா வெளியீடு)
60.) நான் கொஞ்சம் அரக்கி
61.) மர்ம நாவல் நானடா (புஸ்தகா வெளியீடு)
62.) என் காதல் கல்வெட்டில்
63.) காதல் பிசாசே (ராணிமுத்து வெளியீடு) 2025 -இல் மார்ச் 16 அன்று வெளியான நாவல்
64.) நீ என் முதல் காதல்
65.) வினோத கணக்கு
66.) மனதில் விழுந்த விதையே (வைகை பதிப்பக வெளியீடு) (வைகை தளத்தில் நடைப்பெற்ற கனா காணும் பேனாக்கள் போட்டியில் மூன்றாம் இடமும் 2000ரூபாய் பரிசுப் பெற்ற நாவல்)
67.) கால் கிலோ காதல் என்ன விலை?
68.) நீயென் காதலாயிரு(குடும்ப நாவல் வெளியீடு)
69.) என் நேச அதிபதியே
70.) காயமொழி
71.) எந்தன் உயிரமுதே (பூமகள் மாதயிதழில் வெளயீடு)
72.) வெண்மேகமாய் கலைந்ததே
73.) மௌனமே வேதமா (பூமகள் மாதயிதழில் வெளியீடு)
74.) கண்ணிலே மதுச்சாரலே (கண்மணி வெளியீடு)
75.) உயிரில் உறைந்தவள் நீயடி (அருணோதயம் வெளியீடு)
76.) மனமெனும் ஊஞ்சல் (பூமகள் மாதயிதழ் வெளியீடு)
77.) நெஞ்சை கொய்த வதுகை (குடும்ப நாவல் வெளியீடு)
78.) ஆலகால விஷம் (சாரல் தளத்தில் வில்லங்க பிரிவுகளில் 2000 பரிசு பெற்ற நாவல்)
79.) என் காதல் இயமானி (குடும்ப நாவல் வெளியீடு)2025 -இல் மே 16 அன்று வெளியான நாவல்.
80.) தென்றல் நீ தானே... (பூமகள் மாதயிதழ் வெளியீடு)
81.) அலப்பறை கல்யாணம்
82.) நயனமே நான் தானடி! (ராணிமுத்து வெளியீடு)
83.) Hello Miss எதிர்கட்சி
84.) தேநீர் மிடறும் இடைவெளியில்...(குடும்ப நாவல் வெளியீடு)
85) ஐயங்காரு வீட்டு அழகே
86.) நின் பார்வை தவமல்லவா! (ராணிமுத்து வெளியீடு)
87.) அன்புடன் வாழ்தலினிது
88.) மேளம் கொட்ட... தாலி கட்ட... (மாலைமதி வெளியீடு)
89.) ராஜாளியின் ராட்சசி
90.) தேனூறும் மலரிதழே!
91.) கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே
92.) விடையில்லா வினாக்கள்
93.) மையலிட்ட சிற்பமே! (கண்மணி வெளியீடு)
94.) கரை தந்த கடலே! (மாலைமதி வெளியீடு)
95.) மட்கும் வாழ்வில் மட்காத காதல்
96.) அயலா.. அயலா....
97.) லாவா மன்னவா
98.) நின் பிரேமம் என் சிநேகம்
99.)தி லீடர் (அடங்காத திமிர் அரசன்)
100.) உந்தன் ரூபமே என்னில் வாழுதே (அருணோதயம் வெளியீடு)
101.) பிரியமானவரே என் தேவதூதனே!
102.) மதுர ஜில்லா.. மச்சானே!
103.) தகிக்கும் நிலவொன்று
104.) இதயத்தின் மொழி (கண்மணி வெளியீடு)
105.) மொஹபத் முதல் நிக்காஹ் வரை
106.) பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்.
107.) உறவென வந்து உயிரென கலந்தாய்!
108.) ஒரு பேரே வரலாறு
109.) பிரபஞ்சம் கடந்த பந்தமா!
110.) வாதாடும் இதழே என் வசப்படுமே!
111.) உன் ஹார்ட்டுக்குள் லவ் ராபிட் நான்
112.) நீயா? நிஜமா? அரக்கனே
வாசிக்கறவங்க சைட் குரூப்ல பாலோவ் பண்ணிக்குங்க. கமெண்ட்ஸ் பண்ணுங்க பிரெண்ட்ஸ். வாசிப்புக்கு நன்றிகள் பல.
நயனமே நான் தானடி..!!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 11 Final)
கரெக்ட், நேத்ராவோட முடிவை நானும் அக்செப்ட் பண்றேன். பிறவியிலயிருந்து கண் தெரியாத நேத்ரா, நடுவில கண்ணுப் போன ராஜ்குமாரை கட்டிக்கிட்டால் ரெண்டு பேருமே வாழ்க்கையை மேனேஜ் பண்றது ரொம்பவும் கஷ்டம், அதை புரிஞ்சிக்கிட்டுத் தான் அவள் ராஜ்குமாரோட காதலை ரிஜக்ட் பண்ணிட்டாள்ன்னுத் தோணுது.
தவிர, நேத்ரா மனசுல தேவா இருக்கிறானோன்னு கூடத் தோணிச்சு. ஏன்னா, ராஜ்குமார் கிட்ட காட்டாத வாய்த் துடுக்கையெல்லாம் தேவா கிட்ட காட்டுறாளே.
ஒருவிதத்துல சஞ்சனா மாதிரி ஒரு பொண்ணு ராஜ்குமாருக்கு சிறந்த வாழ்க்கைத் துணையா கிடைச்சதே பெரும் பாக்கியம் தான். அவளும் சோனாலி மாதிரி இல்லாமல் போனாலே அதுவே பெரிய விஷயம் தான். அவளோட பெத்தவங்க மாதிரி இல்லாமல் இவள் ரொம்பவே வித்தியாசமானவள் தான்.
😊😊😊
CRVS (or) CRVS2797
-
நயனமே நான் தானடி-10
3 weeks ago
-
நயனமே நான் தானடி-9
3 weeks ago
-
நயனமே நான் தானடி-10
3 weeks ago
-
நயனமே நான் தானடி-2
4 weeks ago
-
நயனமே நான் தானடி-8
4 weeks ago
Currently viewing this topic 1 guest.
- 26 Forums
- 388 Topics
- 1,962 Posts
- 4 Online
- 448 Members
