தகிக்கும் நிலவொன்று-49
அத்தியாயம்-49
காலம் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு இருந்த குழப்பங்களும், பயங்களும் மெதுவாக பின்னால் சென்று கொண்டிருந்தன.
சத்ரியனின் உலகமும் மீண்டும் அவன் கட்டுப்பாட்டுக்குள் இயல்பாக நகர ஆரம்பித்திருந்தது.
பணம்... ஆள்பலம்... அதிகார பலம்... என எட்டுத் திக்கிலும் மீண்டும் சத்ரியனின் கொடி பறக்க ஆரம்பித்தது.
அவனது ஒரு வார்த்தைக்காக காத்திருக்கும் ஆட்கள். அவன் உத்தரவுக்காக நகரும் வியாபாரங்கள். அவனது பெயரை கேட்டாலே பாதையை மாற்றிக் கொள்ளும் எதிரிகள்.
சத்ரியன் மீண்டும் சத்ரியனாகவே மாறியிருந்தான்.
ஆனால் ஷ்ரத்தாவைப் பொறுத்தவரை மட்டும் அவனது உலகம் கொஞ்சம் மாறியிருந்தது. அவள் வேலை செய்யும் மருத்துவமனையில் கூட அவனது பாதுகாப்பு நிழல் போல தொடர்ந்து வந்தது. அவளுக்கு தெரியாமல்...
தூரத்தில் பல பாடிகார்ட்ஸ் நின்று கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்.
யார் உள்ளே வருகிறார்கள்? யார் வெளியே செல்கிறார்கள்? ஷ்ரத்தாவிடம் யார் அதிக நேரம் பேசுகிறார்கள்? அவளை சந்திக்க வரும் நோயாளி யார்?
அவருடன் வருபவர்கள் யார்? எல்லாமே கவனிக்கப்படும். ஒரு சாதாரண நோயாளி கூட ஷ்ரத்தாவை சந்திக்க வந்தால்...
அவனைப் பற்றிய அடிப்படை தகவல்கள் கூட முன்கூட்டியே சரிபார்க்கப்படும்.
அதனால் ஷ்ரத்தா மருத்துவமனைக்குச் சென்றாலும் வீட்டிலிருந்து வெளியே சென்றாலும், எங்கு சென்றாலும் அவளது பாதுகாப்பில் மட்டும் எந்த குறையும் இருக்கவில்லை.
இதில் ஷ்ரத்தா கீர்த்தனா ஆன்ட்டியோடு பேசிசென்ற பிறகு தாலியை பற்றி வாயை திறத்து கேட்டதற்கு இணங்க, சத்ரியனும், இரண்டு குழந்தைகள் இருக்க, தாலியை அங்கீகாரமாக அணியாமல் ஷ்ரத்தாவை நடமாட வைப்பது அவனுக்கு அபத்தமாக தோன்றியது. அதனால் தாலி வாங்கி வீட்டில் உள்ள பூஜை அறையில் அவனது அன்னை தந்தையின் புகைப்படத்துடன், ஷ்ரத்தாவின் அன்னை தந்தை புகைபடமும், மேலும் எல்லாவிதமான கடவுள்களின் புகைப்படம் முன் அவளுக்கு தாலி அணிவித்தான். தன் வீட்டில் பூஜை அறையெல்லாம் இடம் பிடித்ததை சத்ரியன் அப்பொழுது தான் கவனித்தான்.
"எதுக்கு இத்தனை சாமி?" என்றவாறு தாலி அணிவித்தவனிடம், "நீ செய்யற வேலைக்கு, ஏதாவது ஒரு சாமியாவது காப்பாத்தட்டுமேனு தான்" என்று மார்பில் தொங்கிய தாலியை கண் வைக்காமல் பார்த்தாள்.
"ஆனந்த கண்ணீர் எல்லாம் வரலையா?" என்றான்.
"ம்கூம்.. இதை உன்னை கட்ட வைக்கறதுக்குள்ள ரத்த கண்ணீரே வந்துடுச்சு. ஆனந்த கண்ணீராம்." என்று நகர பார்த்தவளிடம், "தாலி கட்டியாச்சு.. பஸ்ட் நைட்" என்று கேட்டவனிடம், நெஞ்சில் குத்தி, "போடா... தினமும் இதே வேலையா போச்சு" என்று ஓடாத குறையாக சென்றாள்.
சத்ரியன் விடுபவனா... பின்னாலே சென்று அவளை தன் இஷ்டத்திற்கு ஆட்டி படைத்தான்.
அன்று மாலையே ஷ்ரத்தா தாலி மற்றவர் பார்வைக்கு பளிச்சிட்டது. ஆனால் எதுவும் கேட்காமல் மகிழ்ச்சி அடைந்தனர். ராயனும் தியாவும் 'இதென்னமா... புதுசா செயின் போட்டிருக்க? முன்ன அந்த பெரிய ஹாஸ்டல்ல இருந்தப்ப எதுவுமே போடலை தானே?" என்று கேட்டான்.
அவனிடம் ஜெயிலென்று பதிய வைக்க முடியாது ஹாஸ்டல் என்று பதிய வைத்திருக்க, அங்கே சீருடை போல எந்த அசசரிஸும் போடக்கூடாது என்று கூறியிருந்தாள். இன்று நம் வீட்டில் போட்டுள்ளதாக விளக்கம் வேறு தந்தாள்.
தினம் தினம் விளக்கம் வெவ்வேறு பேச்சுக்கு விளக்கம் தந்தே ஷ்ரத்தாவுக்கு விழி பிதுங்கியது.
நடுவில் மனிஷா திருமணத்திற்கு ஷ்ரத்தா சென்று வந்தாள். அன்று சத்ரியன் கூடவரவில்லை. யோகேஷை தான் கூட அனுப்பியிருந்தான். மிஞ்சி மிஞ்சி பதினைந்து நிமிடம் மனிஷா திருமணத்தில் இருந்துவிட மட்டுமே சத்ரியன் அனுமதி அளித்திருந்தான். அதனால் திருமணத்திற்கு வந்த கனிமொழியிடமும் முன்கூட்டியே, மணப்பெண் மனிஷாவுமே வற்புறுத்தவில்லை. ஏற்கனவே சத்ரியன் இறந்தான் என்றார்கள். இப்பொழுது அது சில ஏய்ப்பாளர்களுக்காக நடத்தப்பட்ட நாடகமென மட்டும் கூறினாள்.
கனிமொழி தான் "ஜெயிலுக்கு எல்லாம் போனியேடி" என்று வாயை பிளக்க, "பச் அது என் பாதுகாப்புக்கு" என்று கூறியிருந்தாள்.
மேலும் விவரம் கேட்டால் கூறமுடியாத வகையில் தான் ஷ்ரத்தா இருந்தாள். ஆனால் அவர்கள் என்னவோ சொல்லற. பட் சத்ரியன் சார் வந்துட்டார். உன் முகத்துல சந்தோஷம் இருக்கு. அது போதும் எங்களுக்கு" என்று கூறினார்கள்.
இப்படியாக அழகாக சென்ற பொழுது, கீர்த்தனா ஆன்ட்டியும், அந்த புகைப்படத்தை ருத்ரனிடம் காட்டி, 'இந்த பொண்ணு பார்க்க லட்சனமா இருக்கா. எனக்கு எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு. பொண்ணோட பெயரும் ஜாதகமும் கேட்டிருந்தேன். அதுக்குள்ள அந்த தரகர் பாலுவோட நெட்கார்ட் போயிடுச்சும்மா. காசு போட்டதும் செண்ட் ஆகும்னு சொன்னார்." ஒன்று போனை நீட்ட, "அம்மா.. சும்மா.. பொண்ணு பொண்ணுனு.." என்று சலித்தவன், முகத்தை பார்த்து போனை வாங்கினான்.
''என்ன விளையாடறிங்க? இந்த பொண்ணு யாருனு தெரியலை'' என்று தாம்தூம் குதித்தான்.
"என்னடா விளையாடியது? இந்த பொண்ணு யாருனு நினைவு வரலை." என்றார்.
ருத்ரனோ கடுப்புடன் செல்ல, யதுநந்தனிடம் கீர்த்தனா புகார் பட்டியலை வாசித்தார்.
"யதுநந்தா கொஞ்சம் அவனுக்கு புத்திமதி சொல்லி இப்ப பார்த்த பொண்ணை கட்டிக்க சொல்லுயா?" என்றார்.
"சரிம்மா.." என்றவன் ருத்ரனை மதியம் தாண்டி சந்திக்க வந்தப்போது, 'யார்டா பொண்ணு.. அம்மா ஏதோ ஏற்கனவே பார்த்த மாதிரி இருக்கு. ஜென்ம பந்தமா இருக்குமோனு பயங்கரமா பில்டப் பண்ணறாங்க" என்று பிரியாணி ஆர்டர் செய்துவிட்டு இருவருமா மதிய விருந்தை சொன்னை கோர்ட் வாசலுக்குள் வெளியே இருக்கும் தலைபாக்கட்டு பிரியாணி கடைக்குள் இருந்தவாறு கேட்டான்.
"எல்லாம் தெரிந்த பொண்ணு தான். அம்மா இரண்டு மூன்று முறை பார்த்திருக்க வாய்ப்பிருக்கு. அதனால அப்படி யோசிக்கறாங்க. பொண்ணோட பயோடெட்டா வந்ததும் அலறிட்டு வேண்டாம்னு சொல்ல வாய்ப்பிருக்கு" என்றான்.
"அலறிட்டா... யாரு பொண்ணு" என்று கேட்க, ருத்ரனோ தன் போனில் ஷ்ரத்தா கூடயிருந்த அவளை சுட்டிக்காட்டினான்.
யதுநந்தனோ இருக்குமிடம் மறந்து பக்கென்று சிரித்துவிட்டான்.
அருகேயிருந்த பக்கத்து டேபிள் பெண்ணோ "இன்டீசெண்ட் பெல்லோ" என்று முனங்கிட, யதுநந்தனோ "ஹலோ... என்ன இன்டீசெண்டா நடந்தேன். ரொம்ப பண்ணாத.. முதல் கேஸே தோல்வி என்பதால மத்தவங்க மகிழ்ச்சியை பார்த்து வயிறு எரியாத" என்றான்.
ருத்ரனோ இதென்ன யதுநந்தன் கோபமாக ஒரு பெண்ணிடம் பேசுகின்றானென பார்வையிட, "ஜெனி... நாம வேற ஹோட்டலுக்கு போலாம்." என்றாள் அந்த பெண்.
"ஏய்.. சாப்பாடு ஆர்டர் தந்துட்டு எழுந்தா எப்படிடி. முதல்ல உட்காரு. சாரி மிஸ்டர் யதுநந்தன்." என்றாள்.
"ஜெனி... வக்கீல்னா முதல் கேஸா ஜெயிச்சே ஆகணும்னு இல்லை. வெற்றியின் முதல் படி தோல்வியா இருக்கலாம். உங்க பிரெண்டுக்கு சொல்லுங்க." என்று கூறிவிட்டு, ருத்ரனிடம் திரும்பினான்.
ருத்ரனோ 'என்னடா இது?' என்ற ரீதியில் பார்க்க, "அவனிடம் எதுக்கு சாரி கேட்ட. பில் பே பண்ணிட்டு கிளம்பலாம்." என்றாள் ஆர்த்தி.
கொஞ்ச நேரம் முன்பு தான் யதுநந்தனும் அவளும் கோர்டில் வாதாடி அவள் தோல்வியை சந்தித்து வாடி வதங்கி தோழி ஜெனியுடன் இங்கு வந்து பிரியாணியுடன் சோகத்தை மறக்க வந்தாள்.
இங்கு எதிர்பாராவிதமாக ருத்ரன் முன்பே வந்து யதுநந்தனுக்காக ஆர்டர் தந்துவிட்டு அமர, இவர்களும் உணவை ஆர்டர் தந்து பக்கத்து டேபிளில் அமர்ந்தார்கள்.
யதுநந்தனோ ருத்ரன் முன் உணவும் அவனிடம் பேசவும் அமர்ந்திட, ஆர்த்தியால் வெளிநடப்பு செய்ய முடியாது தவித்தாள்.
இதில் யதுநந்தன் வேறு பக்கென்று சிரிக்க, தன்னை தான் தோற்றதாக கூறி சுட்டிக்காட்டி சிரிப்பதாக தவறாக நினைத்து கொதித்தாள்.
ஆர்த்தியை எல்லாம் மறந்தவனாக ருத்ரனிடம், "ஏ.. பொண்ணுக்கு ஓகே சொல்லலாமே." என்று யது கேட்க, ருத்ரனோ "பச்.. பயோடொட்டா வந்தா அம்மாவே ரிஜெக்ட் பண்ணிடுவாங்க. நீ வேற.. ஆமா.. நீயென்ன புதுசா கோபப்படற? நான் பார்த்தவரை நீ அமைதியான ஆளு. எதையும் நிதானமா கையாளுவ" என்று சீண்டினான்.
யதுநந்தனோ பின்னால் திரும்பி பார்த்து, "அவளுக்கு முதல் கேஸ். நான் எதிர்த்து வாதடி நான் ஜெயிச்சிட்டேன். வர்றப்பே முகம் அஷ்டகோணலா மாறி சுழிச்சா. நான் சிரிச்சா அதுக்கும் கத்தினா, அதான் கத்தி விட்டேன்.
ஏன் எனக்கெல்லாம் கோபம் வராதா? டேய் ஷ்ரத்தா டெலிவெரி அப்ப உன்னை அடிச்சி அறைஞ்சிருக்கேன்." என்று நினைவுக்கூறினான்.
இவர்களோ பேசியபடி, சாப்பிட்டு கிளம்பியிருந்தனர். போதும்டா.. உன் பெருமை. நீ ஹீரோ தான்.' என்று இரு நண்பர்களும் பேசி சாப்பிட்டனர்.
கீர்த்தனா அந்த பெண்ணின் ஜாதகத்தில் மற்ற விவரம் கண்டதும், ஷ்ரத்தாவுக்கு தான் அழைத்தார்.
"அம்மாடி... ருத்ரனுக்கு ஒரு பொண்ணு அமைஞ்சது. இப்ப தான் கவனிச்சேன். அது உனக்கு தெரிந்தவ தான்.
அவங்க வீட்டு ஆட்களும், அவளை பத்தியும் சொல்லேன். ருத்ரனுக்கு இந்த பொண்ணு அமைந்தா கூட எனக்கு சந்தோஷம்" என்றார்.
ஷ்ரத்தாவோ போட்டோ அனுப்புங்க ஆன்ட்டி. நான் பார்த்து அவனிடம் பேசறேன்." என்று கூறி அணைத்தாள்.
ருத்ரன் யதுநந்தன் ஷ்ரத்தா நட்பு ஆரேஞ்சு வண்ண கோட்டில் தான் பயணிக்கின்றது. போலீஸ்-வக்கில்-டாக்டர் என்று மூவரும் நட்புடன் பேசுவதுண்டு. கிங்பின் நட்புறவு நீட்டுவானென எதிர்பார்க்க கூடாது. அவன் நிச்சயம் இவர்களோடு ஒன்ற மாட்டான்.
ஷ்ரத்தாவுக்கு யது தான் நல்ல நெருக்கமானவன். தந்தையின் ஜூனியர் என்ற முறையில் நல்லது கெட்டது எல்லாமே அவனிடம் பகிர்கின்றாள்.
அப்படி பகிரும் போது ருத்ரன் ஒருமுறை கூடயிருக்க, "ஆன்ட்டி ஆசிரமம் வந்தப்ப இன்னும் தாலி கட்டலையானு கேட்டாங்க. சத்ரியனிடம் தாலி கட்ட கேட்டதும், சிம்பிளா பூஜையறையில் பேரண்ட்ஸ் போட்டோ முன்ன கட்டிட்டான்." என்று கூற ருத்ரனோ "இதை எங்கம்மாவிடம் சொல்லலையா. யதுவிடம் சொல்லற" என்று கூறி, 'ஏன் என்கிட்ட பிரெண்ட்லியா பேசமாட்டியா?' என்று அதற்கும் டார்ச்சர் செய்தே நட்பை வேண்டினான்.
காதலை தான் தர முடியாது. நட்பை யாசிக்க நண்பனாக என்ன தயக்கமென 'சரிடா இனி ஷேர் பண்ணறேன். நம்ம பிரெண்ட்ஸ் போதுமா' என்று கூறியிருந்தாள்.
அதன் பொருட்டு கீர்த்தனா ஷ்ரத்தாவிடமும் ருத்ரனுக்காக அப்பெண்ணை பற்றி கேட்க, "சரி ஆன்ட்டி.. எல்லாம்.. கேட்டு சொல்லறேன்" என்று வாக்கு தந்தாள்.
அதன் பொருட்டு ருத்ரனுக்கு அப்பெண் நிச்சயம் பேசப்பட்டது. முதலில் தயங்கி மறுத்தவனிடம், அந்த பெண்ணே வந்து பேசவும், திருமணத்திற்கு சம்மதித்திருந்தான் ருத்ரன்.
அதற்கு கூட ஷ்ரத்தா தான் 'என்னையே நினைச்சிட்டு இருக்கேன்னு சொன்ன... சத்ரியன் சூட் பண்ணிடுவான். மரியாதையா.. என்னை இழுக்காத. அவளும் உன்னோட பேசணுமாம். ஓகேன்னா அப்பாயின்மென்ட் ஓதுக்கி நீயே பார்த்து பிக்கப் பண்ணு. உனக்கு பிடிச்சிருந்தா லவ் டார்ச்சர் கொடு. உனக்கு அதான் கை வந்த கலையாச்சே." என்று கூறியிருந்தாள்.
அதெல்லாம் பேசி முடித்து தான் அன்று நிச்சயதார்த்தம் என்று ஷ்ரத்தாவை அழைத்திருந்தான்.
ஷ்ரத்தா வலுக்கட்டாயமாக சத்ரியனை அழைத்து சென்றாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
ருத்ரனுக்கு யார் ஜோடினு கெஸ் பண்ணுங்க. அப்பறம் யதுநந்தனுக்கு தனி கதையா போடலாமா இல்லை அடுத்த எபிக்கோட அவனையும் முடிச்சி விடலாமா யோசனையில் இருக்கேன்.
இன்னொரு எபிக் மட்டுமே உண்டு.
தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 49)
அப்பாடா ! ஒரு வழியா எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. யதுநந்தனுக்கு ஆர்த்தி என்கிறதும் நல்லாவே புரியுது. இந்த ருத்ரனுக்குத் தான் யார் ஜோடின்னு புரியலை. கனிமொழியா ? இல்ல ஷ்ரத்தாவோட பாடிகார்ட்ஸ் மூணு பேர்ல யாராவது ஒருத்தியா ?
எது எப்படியா இருந்தாலும் நண்பர்களுக்கும் ஒரு வாழ்க்கையை கொடுக்க நினைச்ச தெய்வமே நீங்க நீடுழி வாழ்க.
😐😐😐
CRVS (or) CRVS 2797
Wow fantastic. Ruthran pair will be sharadha friend? Fantastic narration sis. Kingpin now become full fledged husband material becz of sharadha. Very intresting sis. Chatriyian Diya bonding can be explained in some.scenes sis. Becz we need that happy ending sis. Yadhu also need marriage sis. Very intresting sis
-
தகிக்கும் நிலவொன்று-50 (முடிவுற்றது)
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-48
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-47
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-46
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-45
3 weeks ago
- 25 Forums
- 330 Topics
- 1,588 Posts
- 6 Online
- 420 Members
