தகிக்கும் நிலவொன்று-50 (முடிவுற்றது)
அத்தியாயம்-50
ருத்ரனின் நிச்சயதார்த்தம் பெரிய அளவில் ஆடம்பரமாக இல்லாமல், மிகவும் எளிமையாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நெருங்கிய உறவினர்கள், கீர்த்தனாவுக்கும், இறந்து போன ராகவனுக்கும் நெருக்கமானவர்கள், ருத்ரனின் சில நண்பர்கள், அவ்வளவுதான்.
அந்த சிறிய விழாவின் ஏற்பாடுகள் அனைத்தையும் முன்னின்று கவனித்துக் கொண்டிருந்தவன் யதுநந்தன்.
ருத்ரனுக்கு துணையாக அவன் இல்லாத வேலை எதுவுமே தற்போது இல்லை.
கீர்த்தனா பெண் வீட்டாருக்குக் கொடுக்க வேண்டிய நிச்சயதார்த்த சேலை மற்றும் வளையல் பூக்கள் இத்யாதி பொருட்கள் அனைத்தும் தயாராகிக் கொண்டிருந்தது.
சேலை, நகைகள், இனிப்பு, பழங்கள் எல்லாவற்றையும் மேடையில் சரிபார்த்துக் கொண்டிருந்த கீர்த்தனா, நேரம் கூடவும், தாய்மாமன் முறையில் உள்ளவரை அழைத்து, கார்த்திகாவுக்கான சேலையை எடுத்துக் கொடுக்க மணப்பெண் அறைக்குச் சென்றாள்.
ஆம் ருத்ரனுக்காக கீர்த்தனா பார்த்த பெண் கார்த்திகா.
காக்கி சீருடையில், முடியை கொண்டையாக கட்டி, தொப்பி அணிந்து, காதோரத்தில் சிறிய கம்மலும் நெற்றியில் சின்ன பொட்டுமாக ஐந்து முறை பார்த்திருந்த அதே பெண்.
சிறையில் கைதிக்கு உணவளிக்க சென்ற நாள், ஷ்ரத்தாவுக்கு வளைகாப்பு விழா செய்த நாள், பிரசவம் ஆனதும் ராயனை கையில் ஏந்திய பொழுதும், ராயனின் இரண்டாவது பிறந்தநாளிலும் சந்தித்து இருந்தார். அதனாலேயே முகம் காக்கி உடையில் பதிந்திருக்க, புகைப்படத்தில் முழுக்க வேறொரு தோற்றத்தில் இருந்தாள். தலைவிரித்து, மல்லிப்பூ சூடி, பட்டுச் சேலையில்... மணப்பெண் அலங்காரத்தில் புகைப்படத்தில் கண்டதும் கீர்த்தனாவுக்கு எங்கேயோ பார்த்த நினைவு மட்டுமே.
பிறகு ருத்ரனே "அம்மா.. இது கார்த்திகா ஜெயில்ல ஷ்ரத்தாவை பார்க்க போறப்ப பார்க்கலையா'' என்று கேட்க, "என் போக்கஸ் எல்லாம் ஷ்ரத்தா தானடா இருந்தா. அதுவும் இல்லாம இந்த பிள்ளை இப்ப தானே சேலையில் பார்க்கேன்" என்றார்.
"அவளை பிடிச்சிருக்குனு சொல்லு" என்று அழுத்தம் தர, தன் காதல் படுத்தோல்வி என்று தெரிந்தப்பின் அன்னையிடம் ''நான் ஷ்ரத்தாவை ஒன்சைடா லவ் பண்ணி பின்னாடி சுத்தியது இவளுக்கு தெரியும். முதல்ல அவ நோ சொல்வா.. தேவையில்லாம அசிங்கப்படாதிங்க" என்றான்.
"ஒருவேளை ஓகே சொன்னா" என்று கீர்த்தனா கேட்க, "ஓகே.. சொன்னா.. வேற என்ன பண்ண? ஓகே சொல்லறேன்" என்றான் வேறு வழியின்றி.
அதன்பிறகு கார்த்திகா சம்மதித்தாக கேள்விப்பட்டு மடமடவென நிச்சயதார்த்த வேலை ஆரம்பமானது. ஒருமுறை மட்டும் ருத்ரன் வந்து, "நான் ஷ்ரத்தாவை விரும்பியும் ஏன் என்னை அக்சப்ட் பண்ணின?'' என்று கேட்டான்.
"எங்க அக்கா கல்யாணமாகி தனியா இருக்காங்க. வீட்ல நான் மட்டும் தான். வீட்டுக்குப் போய் ரிலாக்ஸா இருக்கவே பிடிக்காம தான் ஜெயிலுக்குள்ளேயே அதிக நேரம் இருந்தேன்.
ஆனா இப்ப... எனக்குனு ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டு... குடும்பம்.. குழந்தை... இப்படி வாழணும்னு ஆசை வந்திருக்கு.
எங்க அக்கா வீட்டுக்காரர்தான் பொண்ணு மாதிரி லட்சணமா சேலை கட்டி தரகர் போட்டோ கேட்டதா சொன்னார். அதான் போட்டோ அப்படி கொடுத்தேன்.
எப்படியும் ஷ்ர்த்தாவை நீங்க திரும்ப காதலிக்க முடியாது. சீசீ இந்த பழம் புளிக்கும்னு யாரையாவது கட்டிக்க போறிங்க. எனக்கு தெரிந்த முகம் என்றதும், எப்படி சிக்கியிருக்க பார்த்தியானு தோணுச்சு. சோ.. இதெல்லாம் நினைச்சு பார்த்து சிரிக்க, உங்களை ஓட்டறதுக்கு நல்லா இருக்கும்னு தோணுச்சு." என்றாள்.
ருத்ரனோ அதன்பின் இப்பொழுது தான் நிச்சயதார்த்தம் என மணப்பெண்ணை காண போகின்றான்.
கார்த்திகாவை பார்த்த கீர்த்தனாவின் முகத்தில் நிறைவாக மலர்ந்தது.
அதே நேரம் விழா நடைபெறும் இடத்தில் ருத்ரனும் யதுநந்தனும் வாசலை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
"ஷ்ர்த்தா இன்னும் வரலையே..." என்று ருத்ரன் கடிகாரத்தைப் பார்த்தான்.
யதுநந்தன் சிரித்தபடி, தாடை பற்றி மேடை பக்கம் காண வைக்க, அங்கே கார்த்திகா பட்டுயுடுத்தி நடந்து வந்தாள்.
ருத்ரனோ மேலிருந்து கீழ்வரை பார்த்து முடித்து, ஷ்ரத்தாவிற்கு போனை போட்டான்.
ஷ்ரத்தாவின் போன் ஒலித்தது. "சொல்லு ருத்ரா" என்றாள்
"என் ஃபங்ஷனுக்கு வருவியா? மாட்டியா?" அந்தக் குரலைக் கேட்டதும் ஷ்ரத்தா கண்களை மூடினாள்.
"டார்ச்சர் கேரக்டர் டா நீ! வரமாட்டங்க... அதுக்குள்ள என்ன அவசரம்?" என்றாள். அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அருகில் இருந்த தியாவோ "டேடி... நாம எங்க போறோம்?" என்று கேட்டாள்.
அதற்கு ராயன் உடனே, "ருத்ராக்கு எங்கேஜ்மெண்ட்னு அம்மா சொன்னாங்க" என்று சொல்லிவிட்டான்.
அந்த வார்த்தை ருத்ரனின் காதில் தெளிவாக விழுந்தது.
அவன் முகத்தில் உடனே நிம்மதி. "வந்துட்டு இருக்காளா" என்று யதுநந்தன் கேட்க ஆமோதிப்பாய் தலையசைத்து சிரித்தான்.
யதுநந்தன் அவனைப் பார்த்து சிரித்துவிட்டு, மீண்டும் ருத்ரனின் தாடையைப் பிடித்து அவனது முகத்தை கார்த்திகா பக்கம் திருப்பினான்.
"அங்க பாரு." ருத்ரன் புரியாமல் திரும்பிப் பார்த்தான்.
மணப்பெண் அலங்காரத்தில் கார்த்திகா நிற்க, அந்தப் பக்கம் வந்து கொண்டிருந்தாள்.
ருத்ரனின் அம்மா கீர்த்தனா "அவனையும் மேடையில போகசெல்லுப்பா" என்றார்.
அந்த நேரத்தில் விழா நடக்கும் இடத்தின் வாசலில் கார்கள் வந்து நின்றன. சத்ரியனும் ஷ்ரத்தாவும் பாதுகாப்பு படையுடன் இறங்கினர்.
அவர்களுடன் ராயனும் தியாவும். யதுநந்தன் அவர்களைப் பார்த்ததும் சிரித்தான்.
"நீ மாப்பிள்ளை டா இங்கயே இரு." என்று ருத்ரனிடம் சொல்லிவிட்டு, "நான் போறேன்." என்று ஷ்ரத்தாவை நோக்கி நடந்தான்.
சத்ரியன், ஷ்ரத்தா இருவரும் கைகளில் குழந்தைகளை பிடித்துக் கொண்டு உள்ளே வந்தனர்.
தியாவோ யதுநந்தனை பார்த்ததும், "ஹாய் யது!" என்று ஓடினாள்.
ராயன் "ஏய் ருத்ரா!" என்று ஓடினான். அந்த நேரத்தில்தான் ருத்ரனை கார்த்திகாவுக்கு மோதிரம் போட மேடைக்கு அழைத்தனர்.
ராயன் அவனிடம் ஓடிவந்ததும், ருத்ரன் அவனை தூக்கிக் கொண்டே மேடைக்குச் சென்றான்.
மேடையில் நின்றதும், ராயனின் பார்வை கார்த்திகாவிடம் சென்றது.
அவன் ருத்ரனின் சட்டையை பிடித்து வேகமாக இழுத்தான்.
"நீ கார்த்திகாவைத்தான் கல்யாணம் பண்ணப் போறியா?" என்று கேட்டதும் ருத்ரன் சிரித்தான்.
"ஆமா. ஏன்? அவளை பிடிக்கலையா?" என்று ருத்ரன் கேட்க ராயன் உடனே தலையசைத்தான்.
"நோ... நோ பிடிச்சிருக்கு. நான் ஹாஸ்டல்ல இருந்தப்ப கார்த்திகா எனக்கு போலீஸ் கேப் தருவாங்க. நான் மாட்டிப்பேன்."
அவங்க என்னோட பிரெண்ட் தெரியுமா?" என்றதும் ருத்ரன் சிரித்தான்.
"தெரியும்." என்றான் ருத்ரன்
"அப்படின்னா இப்போ போட்டோவுக்கு போஸ் கொடுப்போம்." என்று ராயனை அருகில் நிறுத்தி காதலர் சிம்பளை காட்டினான்.
அந்த காட்சியை பார்த்த ஷ்ரத்தா, "ராயன்... இங்க வா." என்று அழைத்தாள். போட்டோவுக்கு ஒரு போஸ் தந்துவிட்டு, ராயனும் மேடையில் இருப்பதே தெரியாதவன் போல மெதுவாக நழுவி கீழே இறங்கிவிட்டான்.
சுற்றிலும் உறவினர்கள் சிரித்தபடி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சில நிமிடங்களுக்குப் பிறகு யதுநந்தன் தியாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.
சத்ரியன் கடிகாரத்தைப் பார்த்தான். "டென் மினிட்ஸ்ல கிளம்புவேன். போகலாம்" என்றான்.
ஷ்ரத்தா உடனே அவனைப் பார்த்தாள். "ஏன்டா? நானே வீட்டுக்கு வந்து குளிச்சிட்டு அப்படியே ஓடி வர்றேன். உடனே போகணுமா? மரியாதையா கொஞ்ச நேரம் இரு. ப்ளீஸ்." என்றதும் சத்ரியன் அவளை பார்த்தான்.
அவள் கேட்ட விதத்தில் மறுக்க முடியாமல் அமைதியாக நின்றான்.
அதற்குள் மோதிரம் மாற்றும் நிகழ்ச்சி முடிந்தது. உறவினர்கள் அனைவரும் சாப்பிடச் செல்ல ஆரம்பித்தனர்.
ருத்ரனும் கார்த்திகாவும் புகைப்படங்களுக்காக அழைக்கப்பட்டனர். அதையும் கடனேயென நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டான் சத்ரியன்
சத்ரியன் மீண்டும், "ஷ்ரத்தா... கிளம்பலாமா?" என்று கேட்டான்.
"சாப்பிடாம போனா... அந்த டார்ச்சர் இருக்கானே... நீங்க எல்லாம் என் வீட்டுக்கு வந்தா சாப்பிடாம போவிங்கனு பேசுவான் சத்ரியா. அதனால சாப்பிட்டுட்டு போகலாம். எதிரி வீட்ல தான் கை நனைக்க மாட்டாங்க. அவன் உன்னை எதிரியா பார்க்கலை" என்றாள்.
சத்ரியன் பெருமூச்சு விட்டான். ருத்ரனும் கார்த்திகாவும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தனர்.
யதுநந்தன் அருகில் நின்று தியாவுடன் பேசிக் கொண்டிருந்தான்.
ஷ்ரத்தா ராயனை அழைத்துக் கொண்டிருந்தாள்.
அந்தச் சிறிய விழா.. அந்த நேரத்தில்... முழுமையாக இயல்பாகத்தான் இருந்தது.
ஆனால்... சத்ரியனின் கண்கள் மட்டும் அந்த கூட்டத்துக்குள் சில முகங்களை கவனித்துக் கொண்டிருந்தன.
அவன் மெதுவாக ஷ்ரத்தாவிடம் திரும்பினான். "இங்க இருக்கிற சில பேர் என்னை கொலைகாரனா பார்க்கிறாங்க."
ஷ்ரத்தா அவனைப் பார்த்தாள்.
"ஐ ஹேட் திஸ்." அவனது குரல் சற்று தாழ்ந்தது.
"ராகவனை கொன்றது நான். அப்படியிருக்க... இந்த ஃபங்ஷனுக்கு நான் தேவையில்லாதவன். ஏன்டி என்னை இங்க கூட்டிட்டு வந்த?" என்று அந்த வார்த்தைகள் முடிவதற்குள் கூட்டத்துக்குள் இருந்து ஒரு பெண் வேகமாக அவனை நோக்கி வந்தாள்.
அவளது கையில் ஏதோ ஒன்று மின்னியது. ஷ்ரத்தாவுக்கு அது புரியும் முன்பே... அந்தக் கை சத்ரியனின் வயிற்றை நோக்கி பாய்ந்தது. சத்ரியன் ஒரு கணத்தில் சுதாரித்தான். அவன் ஷ்ரத்தாவை தன்னிடமிருந்து தள்ளிவிட்டான். அவனும் ஒரு அடி பின்னால் நகர்ந்தான்.
ஆனால் அந்தப் பெண்ணின் கை மீண்டும் அவனது வயிற்றை நோக்கி வந்தது.
இந்த முறை தப்பிக்க அவனுக்கு நேரமில்லை. சத்ரியன் வயிற்றை கிழித்தது.
சத்ரியனோ தன் ஷர்டை தீண்ட அது கிழிப்பட்டிருந்தது. கையை வைத்து முடிக்க அதில் சிவப்பாக ரத்தம் வெளிப்பட்டது.
யதுந்நதனோ 'ஓ மை காட்" என்று பதற, சத்ரியனோ அவ்விடத்தை கலவரமாக்காமல் பக்கத்து அறையான மணமகன் அறைக்குள் ஷ்ரத்தாவை குழந்தையை தள்ளி உள்ளே சென்றான்.
யோகேஷ் அதற்குள் அந்த பெண்ணை பிடித்து அறைந்து கையை கட்டினான்.
கீர்த்தனா வந்தவரை வரவேற்று உபசரித்து, பிஸியாக இருக்க, ருத்ரனும் கார்த்திகாவும் அப்பொழுது தான் வந்தவர்கள் போட்டோ எடுத்து சென்றதும் தனித்து இருக்க, சரியாக சத்ரியன் பதட்டமாக ஷ்ரத்தாவை அறைக்குள் தள்ளியதை கவனித்து, வேகமாக வர, கார்த்திகாவும் உடன் வந்தாள்.
''அய்யோ... சத்ரியா... ரத்தம்." என்று பதறி அழுதாள் ஷ்ரத்தா.
"உஸ்ஸ்... வாயை மூடறியா?" என்று அதட்டினான்.
யோகேஷ் கை வளைவில் இருந்த பெண்ணோ, "வலிக்குதா... எங்கப்பா பைரவை கொல்லும் போது எனக்கும் இப்படி தான் வலிச்சது" என்று கத்தினாள்.
"யார்டா.. பைரவ்?" என்று யோகேஷை கேட்டு முடிக்க, "தெ..தெரிலை பாஸ்" என்றான்.
ருத்ரனோ "கணக்கு வழக்கில்லாம கொலை செய்து சாகடிச்சா.. இப்படி தான். யாருனே தெரியலை.. எல்லாம் உன்னை கைது பண்ண எங்கப்பாவிடம் அப்ரூவரான டிரைவர் பைரவ்" என்றதும், "உப்ஸ்... அவனா.. அப்ப இந்த ரிவேன்ஜ் உன்னோட திட்டமா?" என்று சத்ரியனின் ருத்ரனிடம் கேட்க, ருத்ரனோ "இந்த நிலையிலும் இப்படி தான் யோசிப்பியா? ஷ்ரத்தாவை மீண்டும் பொட்டு இல்லாம நிற்க வைக்க எனக்கென்ன பைத்தியமா?" என்றான் கோபமாக.
"தீபா நந்திதா.. நீங்க இரண்டு பேரும் ராயனையும் தியாவையும் அழைச்சிட்டு அந்த தடுப்புக்கு பின்னால போங்க. லட்சுமிக்கா.. நீங்க நம்ம கார்ல என்னோட மெடிக்கல் டூல் இருக்கும் எடுத்துட்டு வாங்க" என்று கட்டளையிட்டாள்.
அந்த பொண்ணோ மூச்சு வாங்க, "அந்தண்ணாவை திட்டாத. நான் தான்... நான் தான் நீ உயிரோட இருக்கனு கேள்விப்பட்டதுலயிருந்து உன்னை கொல்ல சந்தர்ப்பம் பார்த்தேன். இந்த அண்ணாவிடம் உதவி கேட்க வந்தேன். ஆனா உன் மனைவியோட நட்பா பேசவும், உதவி கேட்கலை. ஆனா இவங்களை கவனிச்சப்ப ருத்ரன் அண்ணா நிச்சயத்திற்கு இவங்களும் நீயும் வருவேனு தான் இங்க சமையக்காரியா கொல்ல வந்தேன்." என்றாள்.
சத்ரியனோ நிதானமாக கேட்டுவிட்டு, "உங்கப்பாவுக்கு சொந்தமா.. வீடு கொடுத்திருந்தேன். கொடுத்தேனா இல்லையா?" என்றதும் அந்த பெண்ணோ 'கொடுத்திருந்திங்க" என்றாள்.
"சம்பளமே அதிகமா தந்தேனா இல்லையா?'' என்று கேட்க அப்பெண் அமைதியாக இருந்தாள். வீடும் நல்ல சம்பளமும் தந்தப்பின் துரோகி ஆனது அவர் தந்தையின் தவறாயிற்றே என்றதை சுட்டிக்காட்டினான்.
"அப்பறம் என்ன மயிருக்கு உங்கப்பன் எனக்கு விசுவாசமா இல்லாம பணத்துக்கு விலை போனான்.. ஆங்." என்றுதும் பயந்து கத்தியை இன்னும் இறுக்கமாக பிடித்தாள்.
"இந்த நிமிஷம்... நீ ஒரு பையனா இருந்தா இந்த இடத்துலயே நடக்கறதே வேற" என்றவன் அவள் முன் கையை கொண்டு சென்றான். அடுத்த நொடி அவள் கையிலிருந்த கத்தி சத்ரியன் வசமானது எப்படியோ?!. "இதே கத்தியால குத்தி குடலை உருவி இருப்பேன். பட் நீ பொண்ணா போயிட்டா இந்த ரிவேன்ஜ் எல்லாம் எடுக்கறதை மூட்டை கட்டிட்டு உயிர் பிழைச்சேன்னு தப்பிச்சு ஓடு" என்று அதட்ட வேகமாய் கதவை நோக்கி ஓடினாள்.
"ஓய்... இன்னொரு முறை சப்போஸ்.. ரிவேன்ஜ் எடுக்கறேன்னு எங்கயாவது உன்னை பார்த்தேன். அப்ப இதே போல போனு சொல்லிட்டு வேடிக்கை பார்க்க மாட்டேன். யோகேஷ் அடுத்த செகண்ட் என்னை கேட்கணும்னு கூட உனக்கு அவசியமில்லை போட்டு தள்ளிடு" என்று கூற அந்த பெண் மறுப்பாய் தலையசைத்து திருப்பி பாராது ஓடினாள்.
இதற்கிடையே ஷ்ரத்தா சத்ரியனின் சட்டையை அப்புறப்படுத்த, கத்தி கிழித்ததை கவனித்தாள்.
முன்பு புல்லட் தோட்ட இறங்கிய அன்று பதறி அழுதது போல இல்லாமல் காயத்தை கவனித்தாள்.
"புல்லட் ப்ரூப், ஆர்மர் எல்லாம் எனக்கு மட்டும் தானா? நீ ஒன்னும் போடமாட்ட. இடியட் இடியட்.
எனிவே.. தேங்காட் ஆழமா இஞ்சுர் ஆகலை ஆனாலும் தையல் போடணும்" என்று திட்டியபடி லட்சுமி கொண்டு வந்த மெடிக்கல் டூல் பாக்ஸிலிருந்து தேவையானதை எடுத்தாள்.
"மயக்கமருந்து இல்லை.. அப்படியே தையல் போட்டா வலிக்குமே நாம ஹாஸ்பிடல் போகலாம்" என்று யதுநந்தன் கூற, "அதெல்லாம் துப்பாக்கி தோட்டாவையே கத்தி வச்சி எடுத்து போட்டுட்டு சவகாசமா இருந்தவன் இவன். எல்லாத்தையும் தாங்குவான்" என்று சத்ரியனை முறைத்தபடி, அமர கூறினாள் ஷ்ரத்தா.
ஆளாளுக்கு ஷ்ரத்தா சத்ரியனுக்கு தையலிடுவதை காண பயந்தனர்.
ருத்ரன் கூட, "வலிக்கும்னு நினைக்கறேன்." என்று கூற ஷ்ரத்தாவோ முதல் தையலிட சத்ரியனோ "அவுச்.. வலிக்குடி" என்றான்.
அவள் பார்த்த முறைப்பில் கப்சிப் என்றானவன், அவளது சேலையை எடுத்து பல்லால் கடித்து வலியை பொறுத்தான். அவளோ மடமடவென தையலிட்டாள்.
சத்ரியன் வலியால் துவள்வதையும், அதே நேரம் வலியை பொறுத்துக் கொண்டு, புஸுபுஸுவென மூச்சு வாங்குவதையும் அங்கிருந்தவர்கள் கவனித்தனர்.
செதுக்கி வைத்த உடலுடன் வயிற்றில் கட்டு கட்ட, சிற்சில முறைப்போடு, "எப்ப எமனோட வாக்குவாதம் நிகழ்த்தி, எவன் வந்து எந்த பக்கம் போட்டு தள்ளுவான்னு வயிற்றுல நெருப்பை கட்டிட்டு இருக்கேன். நீ ஜாலியா துப்பாக்கி தோட்டா, கத்தி குத்து எல்லாத்தையும் விழுங்கி ஏப்பமிடு" என்று கூற சத்ரியன் லேசாக சிரிக்க முயன்றான்.
"சிரிச்சா உதைப்பேன்டா" என்றதும், என்று தோளைக் குலுக்கினான் உத்தமனான வில்லன்.
இதை கண்ட ருத்ரனோ யதுநந்தனிடம், "வீராப்பு, கெத்து ஆட்டிடியூட், மாஸ் கிங்பின் என்ற பெயர், அடுத்தவங்களை பார்த்து அனலை விழுங்கறான். ஆனா கடைசில ஷ்ரத்தாவோட பார்வைக்கு பம்மறான் டா." என்று சிரித்தான்.
யதுந்தனோ "ஊருக்கே ராஜா ஆனாலும் தாயுக்கு பிள்ளை தானேனு சொல்வாங்க. இவன் ஊருக்கே கிங்பின்னா இருக்கலாம். ஆனா ஷ்ரத்தாவுக்கு அவளோட சத்ரியன். நல்லாவே திட்டு வாங்கட்டும்." என்று கூற, ருத்ரனோ "பார்டா.. உனக்கும் அவன் திட்டு வாங்கறது குளுகுளுனு இருக்கு தானே" என்றான்.
"நீ அங்க திரும்பி பாரு" என்று கூற கார்த்திகாவோ ருத்ரனை கண்டு புன்னகைக்க முயன்றாள்.
அதற்குள் சத்ரியனோ "ஷ்ரத்தா... இதுக்கு முன்ன ஒருமுறை நான் குண்டடி பட்டப்ப நீ அழுது பதறி ஆட்டோவுல தூக்கிட்டு வந்த நினைவிருக்கா. அப்ப காலேஜ் ஜாயின் ஆன புதுசுல. ரத்தம் வெளிய தெறிக்கவும் அப்படி அழுத. அப்ப நான் உங்கப்பாவை கொன்றவன்னு நீ நினைச்சிருந்த. ஆனாலும் எனக்காக துடிச்ச.
இப்ப என்னடி நான் உன் புருஷன். தாலி எல்லாம் கட்டியிருக்கேன். எனக்காக சொட்டு கண்ணீர் கூட வரலை. சட்டையை திறந்ததும் காயத்தை பார்த்ததும் கண்ணீரை நிறுத்திட்ட" என்றான்.
"ம்ம்ம்.. அப்ப நான் ஸ்டூடண்டாக்கும். இப்ப எம்.பி.பி.எஸ் முடிக்க போறேனாக்கும். அதோட மிஸ்ஸஸ் சத்ரியன் நான். கழுதைக்கு வாக்கப்பட்டா உதைக்க கத்துக்கணும்" என்றாள்.
சத்ரியனோ 'பொண்டாட்டி திட்டினா காதுலயே விழாத மாதிரி இருந்துக்கணும். யூனிவெர்சல் பிட்டர் ட்ரூத்' என்று முனங்க, அங்கிருந்தவர்கள் சிரிக்க, அவ்விடம் இயல்பானது. "சாரி ருத்ரா உன் நிச்சயதார்த்தம் அப்ப இப்படி ஒரு மெமரிஸ் வந்துடுச்சு. அவர் அப்பவே கிளம்பலாம்னு சொன்னார். நான் தான் கேட்கலை. எனிவே.. நான் கிளம்பறேன்." என்று கூற, "இப்ப எதுக்கு சாரி கேட்கற. ஆக்சுவலி என்னால இங்க வந்து இப்படி ஆனதுக்கு நான் சாரி கேட்கறேன். ஏன்னா.. தொந்தரவு பண்ணிட்டேன். சில இடத்துக்கு நீ குழந்தைகள் உன் ஆளு வர்றது சேப்டி இல்லை தான்." என்று கூறினான்.
"ஓகே ஓகே.. சாப்பிடுவோம்" என்று சென்றார்கள்.
ஏற்கனவே உணவு எல்லாம் சரிபார்த்து விட்டதாக யதுநந்தன் கூற, நினைவு வைத்து சிரித்தாள்.
"தேங்க்ஸ் யது" என்றாள்.
அடுத்து தீபா நந்திதா இருவரும் ராயனை தியாவை அழைத்து வந்தனர்.
யோகேஷ் பீட்டர் குழுவெல்லாம் விருந்து சாப்பிட அமர்ந்தனர்.
கீர்த்தனா பார்த்து பார்த்து கவனித்தார். அவருக்கு அந்த நேரம் சத்ரியனுக்கு ஏற்பட்ட கொலை முயற்சி பற்றி, எந்த விஷயம் கூறவில்லை. மகன் நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடியவே தாயுள்ளம் பூரித்தது.
கார்த்திகாவுமே ருத்ரனிடம் "எங்கக்கா கல்யாணம் ஆகறப்ப வரதட்சனை எல்லாம் பெருசா கேட்டாங்க. அந்த நேரம் தான் சத்ரியன் சார் ஷ்ரத்தா மேடத்தை பார்த்துக்க கேட்டு வீடும் காரும் தந்து அக்கா கல்யாணத்தை செட்டில் பண்ணினார். அதனால தான் ஷ்ரத்தாவை நான் ஜெயிலில் நல்லபடியா கவனிக்க பேவர் பண்ணினேன். அதோட தீபா நந்திதா லட்சுமி மூன்று பேரும் உள்ள வந்தப்பவும் கண்டுக்காம மேற்பார்வையிட்டேன். யது சார் ரொம்ப ரெக்வஸ்ட் பண்ணி தான் ஷ்ரத்தாவை ரிலிஸ் பண்ண கேட்டார். அப்ப நானும் ரிலீஸுக்கு எழுதிட்டேன்." என்றாள்.
"இதை கெஸ் பண்ணிருந்தேன். யாரோ உள்ள உதவுவதா." என்றவன், புகைப்படக்காரர் ஊட்டி விட கூறும் முன் ஊட்டி விடவும், கார்த்திகா ஆச்சரியப்பட, 'என்ன பார்க்கற நீ கேட்ட அக்கறை..'' லேசாய் புன்னகை மலர்ந்து கூறினான்.
ருத்ரன் அவனது காதலில் ஏற்க ஆரம்பித்தான். எப்படியும் தன்னை போலவே டிபார்ட்மெண்ட் பெண் என்பதால் தங்களுக்கு வசதியாக தான் பேச்சும் செயலும் அமையும். காதலும் அமைவது கடவுள் அருளால் நிகழ்ந்துவிட்டதே.
இங்கு யதுநந்தனுக்கு இரண்டு மூன்று முறை கால் வரவும், எடுத்து பார்த்தான்.
"யாரு யது?" என்று கேட்க, "இவ ஒருத்தி நாளைக்கு வர்ற கேஸ்ல பாயிண்ட்ஸ் எல்லாம் ரெடியாம். நாளைக்கு மண்ணை கவ்வுவனு எனக்கு மெஸேஜ்ல சவால் விடறா?" என்று முனங்கினாள். ருத்ரன் யாரென கேட்டதும் இதை கூறிவிட்டு, "எல்லாம் ஆர்த்தி தான் அன்னிக்கு ஹோட்டல பார்த்தியே அவ தான்." என்றான்.
"பேசாம அவளை மேரேஜ் பண்ணிக்கோ" என்று ருத்ரன் சிரிப்புடன் கூற, யதுநந்தனோ "வேற வேலை இல்லை. கோர்ட்டில ஆர்க்கியூமென்ட் பண்ணினது போதாதா? இதுல வீட்லயும்" என்றான்.
"ஏன்டா.. அங்க ஜாப் என்பதால ஆர்கியூமெண்ட் பண்ணிக்கோ. வீட்டுக்கு வந்து சமாதானம் செய்துடு. நீ தானே முன்ன சொன்ன. கணவன் மனைவின்னா சண்டை வரும். அட்தே சேம் சமாதானம் நடக்கும்னு" என்று கூற, யதுநந்தனோ மறுத்து பேசாமல், பச் வாயை மூடுடா.' என்றான்.
இங்கே மறுபுறம் ஷ்ரத்தா சாதம் எடுத்து இரண்டு வாய் வைத்ததும், ஒவ்வாமை உணர்வு தந்தது.என்னாச்சு? சமையலில் ஏதாவது.." என்று பயந்தார்கள். சத்ரியனை கொல்ல சமையல்காரியாக தானே அந்த பெண் வந்தாள் என்ற பயத்தில் மற்றவர் இருக்க, சத்ரியனோ மெதுவாக தலையை மறுப்பாக ஆட்டி, கையில் சப்புக் கொட்டி "பருப்பு மம்மம் வேலை செய்துடுச்சோ" என்று பதட்டமின்றி ஷ்ரத்தாவின் வயிற்றை கண்டு அவளிடம் கேட்டான்.
ஷ்ரத்தாவோ வெட்கத்துடன் தலைகுனிந்து, நாட்களை எண்ணி பூரிக்க, பதட்டமாய் அவளை கண்டவருக்கு, பதில் சொல்ல தயங்கினாள்.
பிறகு சத்ரியனே "தீபா நீங்க தியாவை பார்த்துக்கோங்க. நந்திதா நீங்க ராயனை பார்த்துக்கோங்க. லட்சுமி நீங்க அடுத்து வளர்ந்துட்டு இருக்கற குழந்தை உங்க பொறுப்பு" என்றான் அதிகாரத்துடன். அதிலேயே ஷ்ரத்தாவின் தாய்மை செய்தி பகிர்ந்தான்.
அந்த இடமே ''ஏ... யாகூ.. சூப்பர்" வாவ். ஷ்ரத்தா கங்கிராஜிலேஷன்." என்ற வார்த்தைகளாலும் வாழ்த்துகளாலும் மகிழ்ச்சியில் பொங்கியது அவ்விடம்.
சத்ரியன் என்ற ஒற்றை பலமுடையவனுக்கு, மகளென தியாவும், மகனென ராயனும் இருக்க, வயிற்றில் மூன்றாவதாக ஒரு உயிரும் வளர்ந்து ஷ்ரத்தா-சத்ரியனின் காதலின் ஆழத்தை உரைத்தது.
அடங்காத திமிர் அரசன் ஷ்ரத்தாவின் காத்திருந்த காதலுக்கும் அன்புக்கும் (தலைவன்)லீடர் ஆனான்.
'தகிக்கும் நிலவொன்று' என இருந்தவளுக்கு அவளது வானமே வசப்பட்டது
~சுபம்~
-பிரவீணா தங்கராஜ்.
சத்ரியன் திலீடர்ல இறந்துட்டு நிஜமாவே இறந்துட்டு, குழந்தைகளை காப்பாத்தி விட்டு அவங்க இருக்கற இடமே தெரியாம முடிவடைந்திடணும் என்றும் இரண்டாம் பாகம் எல்லாம் எழுத எண்ணமில்லாம இருந்தேன்.
ஒரு பெண் கைதியா இருந்து அவளை போலீஸ் வக்கீல் காதலிக்க அவ யாரை தேர்ந்தெடுக்கறா என்று தான் வேற கதை எழுத நினைச்சேன். ஆனா ஷ்ரத்தாவையே வச்சி எழுதினா எத்தனை அத்தியாயம் எழுதலாம்னு யோசிக்கவும் மடமடனு ஒரே நாள்ல நாலு அத்தியாயம் எழுதிட்டேன். அப்பறம் யோசித்து சரி ஷ்ரத்தா வச்சியே சத்ரியன் இருக்கானா இல்லையானு வச்சி போலீஸ் லாயரை போடுவோம்னு யோசித்தேன். எப்படியும் ராகவனை கொன்றதால அவன் பையன் ருத்ரன் வரட்டும் என்றும், ஷ்ரத்தாவை காப்பாற்ற அல்லது தாங்க திவாகரோட ஜூனியர் வரட்டும்னு கதை வேகவேகமா எழுத வந்துச்சு.
இதுல ட்விஸ்ட் என்னன்னா கதை எழுத ஆரம்பிச்சப்ப நான் சத்ரியன் இறந்ததாகவே காட்டிட்டு ருத்ரன் யதுநந்தன் இரண்டில் ஒருவரை தேர்ந்தெடுக்க நினைச்சுன்.
ருத்ரனுக்கு ஆன்ட்டிஹீரோ ரேஞ்சுல நெருக்கமும் கடுப்பும் காட்ட நிறைய சீன் இருந்தது. யதுநந்தன் மென்மையானவனா வந்துட்டு போற மாதிரி இருந்துச்சு
ஆனா எனக்கு ஷ்ரத்தாவுக்கு ஜோடியா, தந்தை தேர்ந்தெடுத்தவனை தான் ஷ்ரத்தா தேர்ந்தெடுக்கற மாதிரி கொண்டு போகணும். ஏன்னா சத்ரியன் குழந்தை ராயன். ருத்ரனின் அப்பாவை அழிச்சது சத்ரியன் இந்த சிங்கில் அப்பாவா ருத்ரன் இருந்தா ஏற்கப்படுமானு யோசனை. என்ன தான் இருந்தாலும் அது சங்கடத்துல இன்னும் சங்கடம். அதனால யதுநந்தனையே ஜோடியா போட நினைச்சேன்.
அதென்னவோ எழுத எழுத சத்ரியன் எப்ப வருவான்னு ஒரு பக்கம். வருவானா மாட்டானானு ஒரு பக்கம்.
சத்ரியனை கொண்டு வந்து ருத்ரனை வச்சி போட்டு தள்ளிடலாமானு ஒருபக்கம் மை மைண்ட் தான். ஹாஹா எப்படியோ யோசித்து, அந்த நேரம் என்ன எழுத மனசு சொல்லுதோ அதை அப்பறம் எழுதிட்டேன்.
இந்த கதையும் முடிச்சிட்டேன்.
சைட்ல படிக்க
ரெஜிஸ்டர் செய்து
லாகின் செய்து
கமெண்ட்ஸ் செய்து எனக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சிஸ்டர். நிஜமா... நான் டவுன் ஆகறப்ப எல்லாம் நீங்க தான் கருத்திட்டு என்னை ஊக்கப்படுத்தறிங்க.
சப்போஸ் புது ரீடராகவோ, அல்லது ரெஜிஸ்டர் பண்ணாம வாசிக்கறிங்களா? ரெஜிஸ்டர் பண்ணுங்க. கமெண்ட்ஸ் பண்ணுங்க.
லிங்க் தொடர்ச்சியா பெற வாட்சப் சேனலில் மற்றும் முகநூல்குழுவில் இணைந்திடுங்கள்.
அடுத்து மொஹபத் கதை ஸ்லோவா தான் வரும். அதுல மதம் சார்ந்து எதுவுமா தவறாக எழுதிடக்கூடாதுனு சிலதை யோசித்து தான் எழுதறேன். காதல் வர்ற வரை கதை ஸ்லோவாக கூட போகலாம்.
அடுத்து பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் கதை வெளியாகலாம். இணைந்திருங்கள். மேபீ நடுவுல ஒரு குறுநாவல் போட்டாலும் போடுவேன்.
அன்பையும் ஆதரவை மட்டும் எதிர்பார்க்கறேன் என்பேன் இப்ப உங்க கமெண்ட்ஸ் ரிவ்யூவும் எதிர்பார்க்கலாமா?
நன்றி.
பிரவீணா தங்கராஜ்
சூப்பர். ...யக்கோவ் கிங்பின் வாரிசுகளின் கதை போடலாமே
Wow wow fantastic ending sis. Kingpin always will have life threat. Sharadha matured life partner as well as doctor. Karthika good choice for ruthran. Pavam yadhu no pair for him. Kingpin for world but innocent husband for sharadha the lady Don. Very very fantastic sis. Each every episode was very thrilled and engaged. Especially chatriyian entry episode. Awesome narration sis. All the characters were narrated in well manner. Another diamond in ur crown sis. Keep rocking sis.
Epovumnpola unga style la kathai ya koduthutinga sisy superb ending . Evlo periya kingfin ah irunthalum alvan vazhkaiya alaga mathi oru kudumbastana kamichitinga good shradha ku adangura mari aana shradha kingfin wife nu thairiyama agita ipo innoru kolanthaiya sumakura life ithe mari poganum ungaluku. Ruthran una otrathukune oruthi vanthu iruka pa athaium un kittaye solra paravala neeum manasa mathi mrg panikiran good . Apram yathu avalukum oru jodi avaluku ethaariye jodi serthum irukinga sisy 👏🏻. Thakikum nilava irunthavala ipo thaniimaiya iruka vidama iruka namma chathriyan love great .
Congratulations sisy 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 💐 💐 🎉 🎁 ithe mari unga kathaigala padika aarvama iruken eluthite irukanum nee good luck
Rudhran ku karthiga than jodi ah ivanga la yosikavae illa paren avanuku.oru.life amanchiduthu .
Kingpin life na la yae eppo vum threaten irundhu kita yae irukum pola aanalum Chathriyan ellam.athuku bayapaduravan ah apadi bayandha Shardha vae ippo dhairiyam ah iruku ah .
Oh ho next pappa oda entry athu seri rayan oda pregnancy la miss pannathu ellam ithu la anubavaika poran
Rudhran ku karthiga than jodi ah ivanga la yosikavae illa paren avanuku.oru.life amanchiduthu .
Kingpin life na la yae eppo vum threaten irundhu kita yae irukum pola aanalum Chathriyan ellam.athuku bayapaduravan ah apadi bayandha Shardha vae ippo dhairiyam ah iruku ah .
Oh ho next pappa oda entry athu seri rayan oda pregnancy la miss pannathu ellam ithu la anubavaika poran
தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 50 Final)
ஓ... அப்ப கனிமொழி கிடையாதா, ஜெயிலர் பொண்ணு கார்த்திகாவா ? நான் அந்த கார்த்திகாவை வயசானவளா நினைச்சதால, சரியா கெஸ் பண்ணலை. அது சரி, அவ எப்படி இந்த ருத்ர மூர்த்தியை கல்யாணம் கட்டிக்க சம்மதிச்சா ? ஏன்னா இவனோட மூர்கத்தனமான கோபம் தான் உலகப் பிரசித்தியாகிற்றே...?
அடிப்பாவி ! அப்ப இவனை வைச்சு செய்யத்தான் அந்த கார்த்திகாவே சம்மதம் சொன்னாளா ?
செய்யட்டும், செய்யட்டும்... நல்லா செய்யட்டும்., சத்ரியனைப் பார்த்து இவன் எப்படி ஷ்ரத்தாவை இம்சை பண்ணலாம்ன்னு கேட்ட வாய் தானே, இப்ப கார்த்திகா இவனை இம்சை பண்ணும் போது அடங்குதா, இல்ல ஆக்ரோஷமா பாயுதான்னு பார்த்துடலாமே..?
அடேய்... ருத்ரா ! டில்லிக்கே ராஜாவானாலும் பொண்டாட்டிக்கு நீ தூக்கணும் கூஜா...! இது உனக்கு மட்டுமில்லை, எல்லாருக்குமே எழுதப்படாத விதி..ஹ..ஹ..ஹ..!
😂😂😂
அடப்பாவி..! ருத்ரனோட எங்கேஜ்மெண்ட்டுக்கு வந்தும் திரும்பவும் சத்ரியனுக்கு வைச்சிட்டாங்களா ஆப்பு...? இந்த சத்ரியன் எங்கப் போனாலும் அவன் உடம்புல ரத்த அடையாளம் கொடுத்து வரவேற்குறதே வேலையாப் போச்சு. அந்த மட்டுக்கு உயிர்போகலை. அதற்கு காரணம் ஷ்ரத்தா தான்ங்க.
அட.. ஆமாங்க, ஷ்ரத்தாவுக்கு தாலி கட்டாத முன்னயே அவளோட லக் தான் ஈச் அண்ட் எவ்ரி டைம் சத்ரியனோட உசிரை காப்பாத்திட்டே வந்தது, இப்ப தாலி வேற கட்டி அவளை உலகறிய மிஸஸ் கிங்பின்னோட ஷ்ரத்தான்னு பிரகடனப் படுத்திட்டான்... அப்படின்னா
சத்ரியனை காப்பாத்தியது ஷ்ரத்தாவோட தாலி பாக்கியம் தானே..? மணாளனே மங்கையின் பாக்கியம், கண்ணாளனே கண் கண்ட தெய்வம், சத்தியவான் ஷ்ரத்தா, தாலி காத்த மங்காத்தான்னு...இப்படி வரிசையா சொல்லிட்டே போகலாம். எழுத்தாளர் வைச்சது தகிக்கும் நிலவொன்று', என்கிற ஒரே பேர் மட்டும் தான், ஆனா நாங்க வைச்சது எத்தனைப் பேர் பார்த்திங்களா...?
அப்புறம், சத்ரியன் கிட்ட சொல்லி வைங்க, இன்னொருத் தடவை
குழந்தைங்க கிட்ட பிடுங்கி பருப்பு மம்மம் சாப்பிட வேண்டாம்ன்னு.
ஏன்னா, தீபாக்கு தியா, நந்திதாவுக்கு ராயன், பிறக்கப் போற குழந்தைக்கு லட்சுமின்னு குழந்தைங்களை கூட பகிர்ந்துக் கொடுத்தாச்சு, இதற்கப்புறம் வேறென்ன வேலை வெட்டியிருக்கு புதுசா வெட்டி முறிக்கிறதுக்குன்னு.... இந்த சத்ரியன் பாட்டுக்கு இதையே ஜாப்பா, அதாவது பருப்பு மம்மம் சாப்பிடறதே வேலையா வைச்சிக்கிட்டார்ன்னா பாடிகார்ட்ஸ் எல்லாரையும் இனி பேபி சிட்டரா ப்ரோமோட் பண்ணி நியூலி அப்பாயிண்ட் ஆக்க வேண்டியது தான். அதனால திரும்பவும் சொல்றேன் இதோட நிறுத்திக்கச் சொல்லுங்க பருப்பு மம்மம் சாப்பிடறதை..!!!
😂😂😂
"கண்ணுமணியே பிரவீணா
தங்கராஜ் அசத்திப்பூட்டிங்க...
சொக்க வைக்கும் கதையை
தந்து கலக்கிப்பூட்டிங்க....
எழுதுங்க, எழுதுங்க...
இன்னும் எழுதுங்க...
எழுதி, எழுதி.. மேலும் வளர்ந்து..
சந்தோஷமா இருங்க...
மத்தவங்களையும்
சந்தோஷப்படுத்துங்க.."
😐😐😐
CRVS (or) CRVS 2797
-
தகிக்கும் நிலவொன்று-49
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-48
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-47
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-46
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-45
3 weeks ago
- 25 Forums
- 330 Topics
- 1,588 Posts
- 6 Online
- 420 Members
