Forum

தகிக்கும் நிலவொன்று...
 
Notifications
Clear all

தகிக்கும் நிலவொன்று-46

10 Posts
10 Users
3 Reactions
175 Views
(@praveena-thangaraj)
Posts: 265
Member Admin
Topic starter
 
[#329]

அத்தியாயம்-46

தியாவின் அந்த ஒரு வார்த்தை 'லவ் யூ டேடி.' அந்த முத்தம் இரண்டுமே சத்ரியனின் காதுகளுக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்தது.

அவனது கழுத்தை சுற்றியிருந்த அந்த சின்னக் கைகள் மட்டும் அசையாமல் இருந்தன. அவளை கீழே இறக்க வேண்டும் என்று நினைத்திருந்தவன். கீழே இறக்கியும், அந்த பிஞ்சு கைகள் அவன் கழுத்தை உடும்பு போல பற்றியிருந்தது. 

அவனது பார்வை மெதுவாக தியாவின் முகத்தில் நிலைத்தது. அவள் கண்களில் எந்த பயமும் இல்லை. அவன் முன்பு கத்தியதையும், அவளை வெறுத்ததையும், அவளை தன்னிடம் இருந்து விலக்க முயன்றதையும், குழந்தை மனதில் எதையும் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை போல இருந்தது.

அவளுக்கு தெரிந்தது ஒன்று அவன் அவளுடைய அப்பா என்றது மட்டுமே. சத்ரியனின் தொண்டைக்குள் ஏதோ அடைத்தது.

தொலைவில் நின்ற ஷ்ரத்தா அதை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது கண்களில் கண்ணீர் தேங்கியது.

  ஷ்ரத்தாவை பார்த்து "வந்து தூக்குடி' என்ற கர்ஜனையும் கோபமும் அவன் கண்ணில் தெரிந்தது. ஆனால் ஷ்ரத்தா வேண்டுமென்றே அவன் கண்களை தவிர்ப்பது போல நாடகமாடினாள். 

இங்கு கமிஷனர் எதிரிலோ அல்லது மற்ற குழந்தைகள் எதிரிலோ தன் அக்னி கோலத்தை காட்டவும் முடியாமல் திண்டாடினான்.

வேறு வழியின்றி ஒரு கட்டத்தில், அம்மாவை தேடி தவித்த, அவன் நிலையே அவனுக்கு நினைவு வந்தது. 

என்ன தான் தந்தையோடா ராஜா போல இருந்தாலும், குழந்தைக்கு இரு உறவு வேண்டுமே. அவனுக்கு அன்னையின் ஆதரவும் ஏங்கினான். அது குழந்தை பருவமோ? பெரியவனோ அம்மா வேண்டுமே. 

அதே போல இந்த குழந்தைக்கு அப்பா வேண்டுமென்று எண்ண வைத்துக் கொண்டிருந்தாள் தியா. 

   அவள் மீது தவறில்லை..‌ தன் ரத்தத்தில் உதித்தவள். தான் மட்டுமே தவறானவன். ஒரு ஊமை பெண்ணை கற்பழித்து, குழந்தையையும் தந்திருக்கின்றான். அவளது உயிர் கேட்பாரற்று போனதற்கும், தன்னை தேடி அவளிடம் 'சத்ரியன் எங்கே?' என்று சீரழித்ததிற்கும், ஏன் கடைசியில் அவள் இறப்புக்குமே தான் ஒரு காரணம் என்பதை யாரும் சொல்லாவிட்டாலும் மனசாட்சி குத்தி கொன்றது.

அவளது சிறிய விரல்கள் இன்னும் அவனது சட்டையை இறுக்கமாக பிடித்திருந்தன. அந்த விரல்களை பார்த்தபோது, ஹரிணியின் ஜாடை கூட இல்லை. அவன் சாயல் தான். 

நல்லவேளை ஹரிணியின் முக சாயலில் தியா வந்து தன்னை இன்னமும் கொல்லவில்லை என்ற நிம்மதி வந்தது. அவன் பார்வை தியாவின் முகத்தில் விழுந்தது.

சத்ரியனின் விரல்கள் மெதுவாக தியாவின் தலைமுடியை வருட நடுங்கியது. அவனுக்கு தான் தயக்கமே தவிர தியாவுக்கு இல்லையே. தந்தை தன்னை கண்டு கத்தி கூச்சலிடாமல், இன்னமும் அணைத்து தூக்கியிருக்க, தியா உடனே அவனது மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.

அவனது மனதில் ஏதோ ஒன்று உடைந்தது.. சிறிதாக இருக்கும் இதயத்தின் பிளவுக்குள்... பாசம் மெதுவாக நுழைய ஆரம்பித்தது.

"சத்ரியா..." ஷ்ரத்தாவின் குரல் கேட்டது. அவன் அவளை பார்த்தான்.

அவள் எதுவும் சொல்லவில்லை. அவளது கண்கள் மட்டும் 'அவளை விடாதே.' என்று கெஞ்சிக் கொண்டிருந்தது.

சத்ரியன் அவளை சில நொடிகள் பார்த்தான். பிறகு தியாவை பார்த்தான்.

அடுத்த நொடி.. யாரும் எதிர்பார்க்காத விதமாக அவளது கையில் ஒப்படைத்து கோர்ட்டை சரிப்படுத்தும் விதமாக பெருமூச்சை வெளியிட்டான்.

ஷ்ரத்தாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

தியாவோ தந்தை அன்னையிடமே தந்துவிட்டதை காட்டிலும், இத்தனை நேரம் தந்தையின் கையில் தவழ்ந்ததை எண்ணி சிரித்தாள்.

"டேடி..." அந்த வார்த்தை மீண்டும் வந்தது. சத்ரியன் முகத்தில் இருந்த கடினம் கொஞ்சம் கரைந்தது.

மற்றவர்களை கவனிப்பது போல அவ்விடம் விட்டு தனித்து போனான். 

"அவன் திருந்த மாட்டான். குழந்தையை இறக்கிட்டான். இவனுக்கெல்லாம் கடவுள் இந்த குழந்தைனு பொசுக்குனு கொடுத்துடறார். 

பெர்டிலிட்டி சென்டர்ல குழந்தைக்காக தலைகீழா குட்டிக்கரணம் அடிக்கறவனுக்கு வெயிட்டிங் லிஸ்ட்ல தர்றார் கடவுள். 

  ம்ம்ம். இதெல்லாம் எதுல சேர்த்தியோ?" என்று ருத்ரன் தான் யதுநந்தனிடம் புலம்பினான். 

யதுநந்தனோ, "நீ அவன் தியாவை கீழே இறக்கிட்டானேனு பார்க்கற. நான் இவ்ளோ நேரம் தூக்கி வச்சிருந்தானேனு ஆச்சரியப்படறேன்." என்றான். வக்கீல் அல்லவா.. பாயிண்டை எடுத்து பேசினான். 

"பச்.. என் கண்ணுல குற்றம் தான் பதியுது" என்றான் ருத்ரன். 

யதுநந்தனோ "நீ போலீஸ்டா. குற்றம் கண்ணுக்கு தெரியுது. நான் வக்கீலாச்சே என்ன பாயிண்ட் இருக்குனு யோசிச்சேன்" என்று தோளைக் குலுக்கினான். 

  "என்ன சொல்லு.. ஷ்ரத்தாவை முறைச்சிட்டே சுத்தறான். கடவுள் ட்ரூ லவ்வை சேர்த்து வைப்பார்னு நினைச்சேன். ம்கூம்.. புஸ்ஸுனு ஆக்கிட்டார்" என்று கவலையாக பேசினான் ருத்ரன். 

"நீ பார்த்தியா.. தியா இல்லாத நோரம் எல்லாம் சத்ரியன் இரண்டு நொடிக்கு ஒருமுறை ஷ்ரத்தாவை தான் பார்க்கறான்.

  அதுவும் இல்லாம நீயும் நானும் அவளை ட்ரூவா தான் லவ் பண்ணினோம். ஆனா ஒன் சைட் லவ். கடவுள் என்ன யோசித்திருப்பார். 

  இந்த பக்கம் இரண்டு தடியனுங்க. இரண்டு பேரும் ட்ரூவா லவ் பண்ணறாங்க. பட் ஒன் சைட். 

   அந்த பக்கம் சத்ரியன் ஷ்ரத்தா இரண்டு பேரும் காதலிக்கறாங்க. இதுவும் ட்ரூ லவ் அப்ப இவனையே கோர்த்து விடுவோம்னு முடிவெடுத்து உயிரோட அனுப்பிட்டார்." என்று எடுத்துக் கூறினான். 

ருத்ரனோ "கடவுளே காதலுக்கு வழிவிட்டாலும் உனக்கு பொறுக்காது போலயே.. சரி நீ எப்ப கல்யாணம் பண்ணப்போற." என்று அக்கறையாக கேட்டான்.

  "உனக்காவது அம்மா இருக்காங்க. கல்யாணத்துக்கு பொண்ணு தேட, எனக்கு யார் இருக்கா.. பட் தேடணும்... ஏய்.. பேசாம உங்க அம்மாவிடம் எனக்கும் பொண்ணு தேட சொல்லு." என்று கூறினான். 

"சொல்லு சொல்லு நாளைக்கே ஒருத்தியை தலையில கட்டுவாங்க. கையில அவ்ளோ வரன். போன்ல பாரு விதவிதமா ரக ரகமா சும்மா தளதளனு பொண்ணுங்க போட்டோ" என்று கூற, "ஐய்யா சாமி உன் வர்ணனையை நிறுத்து. ஆன்ட்டி வர்றாங்க. போலீஸ் மாதிரியாடா பேசற ரகரகமா தளதளனு.." என்றான். 

  கீர்த்தனாவுடன் ஷ்ரத்தாவும் வந்தாள். "நீங்க இரண்டு பேரும் சாப்பிடலையா?" என்று கேட்க, யதுநந்தனோ "சாப்பிடணும்" என்று திணறினான். 

  சத்ரியன் கூர்மையான அம்பு போல் பார்வையை வீச பேச தயங்கி திணறினான்.  ஷ்ரத்தாவோ "ஆசிரமத்துக்கு டொனேஷன் தந்ததா கேள்விப்பட்டேன்" என்று ருத்ரனிடம் கேட்டாள். 

"இன்னிக்கு எங்கப்பாவுக்கு நினைவு நாள். அதனால இன்னிக்கு புட் ஸ்பான்ஸர் பண்ண நினைச்சேன். ஆனா இன்னிக்கு உன் ஆளு இங்க விருந்தே வைக்கவும், டொனேஷனா போட்டுட்டேன்." என்றான் ருத்ரன். 

  அவனுக்கு சத்ரியன் இருப்பது எல்லாம் பெரிய திணறலை தரவில்லை. அவன் குணமே இது தானே. 

   சாப்பிட அழைத்து செல்லவும், ருத்ரன் யதுநந்தனை நன்றாக கவனித்தாள். ஸ்டெல்லாவிடம் மனம் விட்டு பேசினாள். 

  யோகேஷ் பீட்டர் எல்லாம் நீண்ட வருடங்களுக்கு பிறகு சத்ரியன் ஷ்ரத்தா அவர்கள் குழந்தை என்று கண்டதற்கே மகிழ்ந்தனர். அவர்களும் இன்றிலிருந்து சத்ரியனுடன் அல்லவா வந்துவிடுவார்கள். 

  இப்படியாக நேரம் நன்றாக கழிந்தது.

  ருத்ரனிடம் ராயனும், யதுந்நதனிடம் தியாவும் கொஞ்சிக்கொண்டு நிறைய பேசினார்கள். 

   கீர்த்தனாவோ ஷ்ரத்தாவிடம்  'சில நாள் நிறைய திட்டியிருக்கேன். என் குங்குமத்தை அழிச்சவன் உயிரோட இருக்கானேனு. இனி என்னால சபிக்க கூட முடியாது. முன்ன நான் சொன்ன வார்த்தைகள் எல்லாம் காற்றில கரைந்துடணும்னு வேண்டறேன். நல்லபடியா வாழு ஷ்ரத்தா. நான் ஏதாவது காயப்படுத்தியிருந்தாளோ, அல்லது ருத்ரன் காயப்படுத்தியிருந்தாலும், அவன் தான் காயப்படுத்தினானே‌. மன்னிச்சிடும்மா. நீ தீர்க்க சுமங்கலியா..." என்றவர் கழுத்தை அளவிட, ஷ்ரத்தாவோ "தாலி அவர் கட்டலைம்மா. கப்பல்ல இருந்தப்ப மோதிரம் மாத்தியிருந்தோம்" என்றாள். 

  "அட... இதுநாள் தாலி இல்லாம இருக்கலாம். இனியாவது கட்டிக்கோங்க. வீட்டுக்கு போ... தாலி வாங்கி சாமி முன்ன வச்சி கட்டி விட சொல்லு." என்று கூற சத்ரியனை கண்டு சரியென்றாள். 

  வீட்டிற்கு சென்றால் தியாவை தூக்கி தந்ததிற்கு என்ன சொல்லி திட்டுவாரோ. இதில் தாலியை கேட்டு அடம்பிடித்தால் தன்னை வெறுப்பாரா? முன்போ ஆசைநாயகி என்ற அடைமொழியை அல்லவா சுமந்தாள்.

  "சரிம்மா.. நாங்க கிளம்பறோம். சில நேரம் விதி வித்தியாசமான சந்திப்பையும் பகையாளியையும் சொந்தக்காரங்க மாதிரி பேச வச்சி அனுப்பிடும். நம்ம நிலை அப்படி தானோ என்னவோ. உடம்பை பார்த்துக்கோ" என்று கூறிவிட்டு புறப்படவதற்காக ருத்ரனை வேறு கூப்பிட்டார். 

  யதுநந்தனும் புறப்படுவதாக கூற, ருத்ரனையும் யதுவையும் மாறி மாறி பார்த்து "தேங்க்ஸ்" என்று கூறினாள். 

  அவள் கூறும் பொழுதே கண்ணீர் துளிர்க்க, ருத்ரன் யதுவும் கீர்த்தனா ஆன்ட்டியுடன் சென்றார்கள். மறுபுறம் கமிஷனரும் இடையிலேயே ஆசிரமத்தின் பாதுகாப்பையும், குழந்தைகளையும் பார்த்துவிட்டு நலன் விசாரித்து, சிட்டாய் பறந்துவிட்டார். அதனால் தங்கள் கூட்டிற்கு திரும்ப சத்ரியனும் ஆளாய் பறந்தான்.

   ராயனும் தியாவும் தீபா லட்சுமியுடன் நந்திதாவுடன் சென்றியிருக்க, சத்ரியன் ஷ்ரத்தா மட்டும் தனியாக காரில் பயணம் செய்தார்கள்.

  முன்னும் பின்னும் யோகேஷ் பீட்டர் பழைய ஆளுமையுடன் சத்ரியனை பின் தொடர்ந்தார்கள். 

சத்ரியனோ "காதலிக்கறேன்னு டார்ச்சர் செய்தவனுக்கு எல்லாம் ரொம்ப தான் வரவேற்பும் உபசரிப்பும் தர்ற‌" என்றான். 

  யதுநந்தன் ருத்ரன் இருவருமே ஷ்ரத்தாவை விரும்பியவர்கள். ஆனால் சத்ரியன் தற்போது குறிப்பிடுவது ருத்ரனை என்று புரிந்து, "அவர் என்னை பாதுகாக்க கொட்டற மழையில நின்றுயிருக்கார். ராயன் பிறந்தப்ப அவர் தான் உதவியது. நான்.. நான் தேடறப்ப வராதவர் என்னை எவனாவது சாகடிக்கறப்ப தான் நீ வருவியா? யதுநந்தன் அவருமே என்னை பாதுகாத்தவர் " என்று குமைந்தாள். 

"பேசி வச்சது எல்லாம் மறந்துட்டியா? என்னை கொன்றதுக்காக மினிமம் மூன்று வருஷமாகும்னு சொன்னேன். அந்த முட்டாள் யது உன்‌மேல சாப்ட் கார்னார்ல வெளியே எடுத்துட்டான். 

  இந்த ருத்ரன் அவன் நெருங்கினா நான் வெளியே வருவேன்னு டார்ச்சர் பண்ணிருக்கான்.‌

நான் சொல்லிட்டு தானடி போனேன். என்னை கொல்ல வர்றவங்க யாரா இருந்தாலும் நான் மறைந்திருந்து அவங்களை தேடி அழிக்க, எனக்கான நேரம் தேவைப்படும்னு.

அப்ப கூட நீ வெளியே வந்தது தெரியாது. உன்னை யாரு ஹரிணி டெத்துக்கு எல்லாம் போக சொன்னது. அதுலயிருந்து தான் உன்னை தொடவே அந்த கேங்குக்கு ஐடியா வந்திருக்கும். மூடிட்டு நீ பாட்டுக்கு டாக்டர் படிச்சிட்டு இருந்தா இங்க யாரும் நெருங்கியிருக்க மாட்டாங்க" என்று கத்தியவன் "ஆமா.. அதென்ன.. நைஸா.. அந்த குழந்தையை என்னிடம் திணிக்கற. அத்தனை பேர் பார்க்க கையில கொடுத்துட்டு என்ன‌ ரியாக்ஷன் தருவேன்னு வேற பயந்தப்பாரு.. உன்னை எல்லாம் அப்பவே கொன்னுயிருப்பேன். 

  அங்க நான் ஒரு குழந்தையை தூக்கி எறிந்தா அத்தனை குழந்தைகள் மனசுல ஏதாவது பதியவா? என்ன நினைச்சிட்டு இருக்க? அந்த தியா... என்னை கிஸ் பண்ணி அப்பானு கழுத்தை கட்டிக்கிட்டா. ஒரு செகண்ட் நாக பாம்பை கழுத்துல சுத்தின ஃபீல்." என்று நெஞ்சு விம்ப கூறினான். 

"ஹரிணி இருந்திருந்தா ஏன்டா என்னை கெடுத்து குழந்தை தந்தனு உன்னை கேட்டிருக்க மாட்டா சத்ரியா. ஏன்னா அவ என்னை விட க்ளியரா இருந்தா. உன்னை விட்டு போனது, வினோத் அண்ணாவை ஒதுக்கியது. குழந்தைக்கு வினோத் அண்ணாவை இன்ஷியலா போடலை. அவங்க அவங்க பாவம் அவங்க அவங்க தான் சுமக்கணும்னு நினைச்சா.

  தியாவை தண்டனைனு நினைச்சா தண்டனை. இல்லை... அவ உன் குழந்தை.. இல்ல.. நம்ம குழந்தைனு நினைச்சா நம்ம குழந்தை.  

  வினோத் அண்ணாவுக்கும் ஹரிணிக்கும் இறந்தப்பிறகும் நீ உதவனும்னு நினைச்சி, அவங்களிடம் மன்னிப்பு கேட்க தோன்றினா. அவளை வளர்க்கணும்னு முடிவெடு. அவளை பத்தி அவளுக்கு எதுவும் சொல்லாம‌" என்று கூறியவள் வீடு வந்ததும் இறங்கி ராயன் தியாவை தேடி சென்றாள். 

சத்ரியன் சில நொடி கடந்து மெதுவாக அறைக்கு வந்தவன் கையில் மதுவை தான் தேடி எடுத்தான்.‌

    ஷ்ரத்தா அவனது கோலத்தை கண்டு ராயன் தியாவை அந்த பக்கமே அழைத்து வர வேண்டாமென கூறி அவளுக்கான அறையில் இருந்தாள். 

-தொடரும். 

-பிரவீணா தங்கராஜ். 

 


 
Posted : August 25, 2026 6:48 am
(@kothaihari)
Posts: 125
Estimable Member
 

சூப்பர். ... இப்போ எல்லாம்  ஷ்ரத்தா சத்ரியனுக்கு சமமாக பேசறா செம


 
Posted : August 25, 2026 7:09 am
(@padma)
Posts: 26
Eminent Member
 

Super


 
Posted : August 25, 2026 7:32 am
(@crvs2797)
Posts: 188
Estimable Member
 

தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 46)

அப்பா டா...! இப்பவாவது சத்ரியன் சரியா யோசிச்சானே, தப்பு முழுக்க தன் மேல வைச்சுக்கிட்டு அந்த குழந்தையை எப்படி விலக்கி வைக்க முடியும். இனியாவது தியாக்கு தர வேண்டிய அங்கீகாரத்தை கொடுத்தால் சரி தான்.

கரெக்ட், யதுநந்தன் சொன்னது ரொம்ப சரி. ருத்ரன் போலீஸ்காரன் என்கிறதால குற்றம் மட்டுமே கண்ணுக்குத் தெரியுது, யதுநந்தன் வக்கீலாச்சே, அவனோட கண்ணுக்கு சரி எது, தப்பு எதுன்னு ரொம்ப சரியாத் தெரியுது.

அடேய் போடா பொறாமைக்குப் பிறந்தவனே ! நீ இங் இல்லாதப்பா
யது & ருத்ரா என்கிற ஒரிஜினல் பாடிகார்ட்ஸ் தான் உன்னோட ஷ்ரத்தாவையே கண்ணும் கருத்துமா பார்த்துக்கிட்டாங்க,
இதுல இவனுக்கு பொறாமை வேற வருது. சொல்லப்போனால் ஷ்ரத்தா வாழ்க்கை இப்படி சின்னஞ்சிறு வயசுலயே தலை கீழா போனதற்கும், இவ்வளவு கஷ்டங்களுக்கும் இவன் தான் காரணம், இந்த லஷ்ணத்துல அவங்க ரெண்டு பேரைப் பார்த்து
இவன் கடுப்பாகுறான் பாருங்களேன், என்ன கொடுமையடா கோபால் ?

அடப்பாவி ! திரும்பவும் மலையேறிட்டானா, தியா விஷயத்துல இவன் ரியலைஸ் பண்ணவே மாட்டானோ..?

😐😐😐
CRVS (or) CRVS 2797


 
Posted : August 25, 2026 8:32 am
(@subhakumar85)
Posts: 112
Estimable Member
 

Hmm nalla thirupi kodukra.. Yoshida nee


 
Posted : August 25, 2026 9:12 am
(@guna-sundari)
Posts: 138
Estimable Member
 

Fantastic narration sis. Chatriyian when will understand his mistake? Sharadha told very well. Soon chatriryian will accept Diya. One side love story gives possessive to chatriyian. Very intresting sis.


 
Posted : August 25, 2026 9:22 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 126
Estimable Member
 

Chathriya unnoda possessive ah konjam.stop pannu avanga rendu perum evolo uthavi pannaga nu Shardha ku theriyum athu na la ava pesura ah chumma ethachum solla tha .

And indha moonu varusham avaluku neraiya padipinai ah kuduthu iruku athu than nalla point point ah pesi yae unna lock panra ah thappu pannathu ne so athukana palan ah yum ne than face pannanum 


 
Posted : August 25, 2026 11:17 am
(@aishu-selva)
Posts: 31
Eminent Member
 

Super super super 


 
Posted : August 25, 2026 11:58 am
(@kalidevi)
Posts: 140
Estimable Member
 

Ena chthriya oru kolanthai vishayathula nee ippadi panriye nee thappu pani athula vanthathum than illa sollala irunthalum ipo nee pathukama thappu panatha athu tha perusa therium ellarkum ella kolanthai mari ivalaum pathuka pora oru naal realize panuva atha papom ithula nee possessive agura avanunga kitta pesuranu vera ena pana nee vacha body guards illama rendu perum help pani irukangale apo pesa thana seiva sharadha athu oru nandri panra mari thana


 
Posted : August 25, 2026 12:48 pm
(@ambikahashini)
Posts: 47
Eminent Member
 

Nice 👌 sis 


 
Posted : August 25, 2026 4:50 pm

Scroll to Top