Forum

தகிக்கும் நிலவொன்று...
 
Notifications
Clear all

தகிக்கும் நிலவொன்று-45

12 Posts
11 Users
4 Reactions
160 Views
(@praveena-thangaraj)
Posts: 265
Member Admin
Topic starter
 
[#328]

அத்தியாயம்-45

இரண்டு மூன்று நாட்கள் கடந்த நிலையில் இன்று காலை வீட்டில் வழக்கத்தைவிட சற்றே பரபரப்பு அதிகமாக இருந்தது.

  தியாவின் காய்ச்சல் குறைந்திருந்தது. ராயனை கூட கவனிக்காமல் தியாவை தான் அதிகம் கவனித்தாள் ஷ்ரத்தா.

நன்றாக குணமானதும் ராயனோடு விளையாட தியா சென்றாள். குழந்தைகள் மறந்திடுவார்களே.

சத்ரியனும் அதிகாலையிலேயே எழுந்து தயாராகிக் கொண்டிருந்தான்.

கருப்பு சட்டை பேண்ட். அதன் மேல் கோட். கையில் விலையுயன்ந்த வாட்ச்... கழுத்தில் சூரியனை வடிவமைத்திருந்த டாலர் மின்னியது. எப்போதும் போல கம்பீரமான தோற்றத்தில், அவனை பார்த்தபடி நின்ற ஷ்ரத்தா மெதுவாக ஏறிட்டாள்.

   "இன்னைக்கு எங்கப்பாவோட நினைவு நாள்." என்றாள்.

சத்ரியன் அவளை நோக்கிப் பார்த்தான். "தெரியும்." என்றான் மிதப்பாக.

"ராயன் எங்க? டிரஸ் மாத்திட்டானா?" என்று கோர்ட் பட்டனை சரிசெய்து கேட்க, ''அவனை அனுப்பி விடறேன். நீயே ரெடிப்பண்ணு" என்று கோபமாக அவ்விடம் விட்டு செல்ல, "போடி புருஷன் இல்லாதப்ப எப்படா வருவான்னு ஏங்கறது. உயிரோட இருக்கானா செத்தானானு அழுதழுது கடந்த. இப்ப கண் முன்ன நடமாடினா திமிரா மூஞ்சியை தூக்கறது." என்று முனங்கினான்.

   ஷ்ரத்தாவோ தியா இருந்த அறைக்கு வந்ததும் குட்டி குழந்தையை வருடினாள்.

''அம்மா.. நானுமா நீங்களும் ஓரே டிரஸ் போடப்போறோமா?" என்று லட்சுமி கொண்டு வந்ததை காட்டி கேட்க, "ஆமா தியா." என்றவள் தீபாவிடம் தலை மட்டும் வாறி டச் அப் செய்ய கூறிவிட்டு, தன்னை அலங்காரம் செய்யும் பொழுது யதுந்நதன் ஷ்ரத்தாவுக்கு போன் காலில் அழைத்தான்.‌

"யது கால் பண்ணறார்" என்று கூறி எடுத்தாள்.‌

"சொல்லுங்க யது" என்றதும், "அது.. இன்னிக்கு திவாகர் சாரோட நினைவு நாள். அதனால கால் பண்ணினேன்." என்றான்.‌

  "ஆமா யது. அப்பா நினைவு நாள். அதோட இன்னிக்கு ஆசிரமத்துக்கு போறோம்?" என்றாள்.‌

"அப்படியா..? எங்க?" என்று கேட்டதும், சிறிது இடைவெளிக்குப் பிறகு ஷ்ரத்தா தயக்கத்துடன் கூறினாள்.

"யது.. அந்த 126 குழந்தைகள் இருக்கற ஆசிரமம். இப்போ அங்க நூற்று இருபத்தாறு குழந்தைகள் மட்டும் இல்ல. புதுசா காப்பாத்தப்பட்ட குழந்தைகளும் இருக்காங்க..
அதனால... இன்னைக்கு அங்க போகறோம். யது நீங்களும் வர்றிங்களா?" என்று கேட்டாள்.

யதுநந்தன் சில நொடிகள் ருத்ரனை பார்த்தான். ருத்ரன் அங்கு தான் இருந்தான்.
யதுநந்தன் தயங்க, "நானும் வரலாமா?" என்று ருத்ரன் கேட்டான்.

"யாரு.. ருத்ரனா?" என்று துள்ளலாய் கேட்டாள். "என் குரல் கூட அவளுக்கு அடையாளம் தெரியாம நடிக்கறாடா" என்று குறைப்பட,

யதுநந்தனோ "பச் சும்மாயிருடா. எங்க இருக்கு ஷ்ரத்தா அந்த ஆசிரமம். லோகேஷன் அனுப்பு. நானும் ருத்ரனும் வர்றோம்" என்றதும் ஷ்ரத்தா முகவரியை சொன்னாள்.

யதுநந்தன் அதை தனது போனில் குறித்துக் கொண்டான்.
"ஷ்ரத்தா... ருத்ரனையும் கூட்டிட்டு வரலாமா. நீ எதுவும் பதில் சொல்லலையே.
    அவனோட அப்பாவுக்கும் இன்னைக்கு நினைவு நாள்." என்று கூறினான்.

"அவனையும் கூட்டிட்டு வாங்க. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை." என்றாள்.

யதுநந்தன் சிரித்தான். "அப்போ கிளம்பலாமா?" என்று ருத்ரன் குரலில், ஷ்ரத்தா ஏதோ சொல்லப் போக, சத்ரியன் அங்கு வந்தவனாக, "கிளம்பாம என்னடி பண்ணிட்டு இருக்க?" என்று அதட்டினான்.

"கிளம்பிட்டு தான் இருக்கேன்." என்றவள் திரும்பிப் பார்த்தாள்.

"கிளம்பிட்டா வெயிட் பண்ணு... இல்லைன்னா.. தியாவுக்கு நீ ப்ராக் போட்டு விடுறியா? நான் இன்னும் குயிக்கா கிளம்பிடுவேன்." என்றதும், சத்ரியன் எதுவும் சொல்லாமல் அவளை ஒரு அனல் பார்வை பார்த்தான்.

அடுத்த நொடி பளார்!' என்று கதவு சத்தமாக மூடப்பட்டது.

போனில் லைனிலிருந்த அச்சத்தம் கேட்டு யதுநந்தனும் ருத்ரனும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

யதுநந்தன் மெதுவாக சிரித்தான். "இவனுக்கு கோபம் வந்தா கதவுதான் பாவம்." ருத்ரன் புருவத்தை உயர்த்தினான்.

"கதவை அப்படி சாத்துறான். போன்ல அப்படி கேட்குது. பாவம் ஷ்ரத்தா. காலேஜ் கூட முடிக்கலை. அவன்கிட்ட மாட்டிட்டு முழிக்கறா." என்று கவலைக் கொள்ள, யதுநந்தன் ருத்ரனை பார்த்து சிரித்தான்.

"அவளைப் பத்தி கவலைப்படுற அளவுக்கு இன்னும் காதல் இருக்கா?" என்று கேட்க ருத்ரன் அவனை முறைத்தான்.

"அது காதல் இல்ல. அன்புனு மாத்திக்கிட்டு இருக்கேன் போதுமா" என்று கூற "சரி... சரி" யதுநந்தன் சிரித்தபடி விட்டுவிட்டான்.

சில நொடிகள் கழித்து "திவாகர் சார் இறந்தப்போ ஷ்ரத்தாவுக்கு பதினெட்டு வயசு கூட இல்லை. அந்த வயசுல இருந்தே சத்ரியன்கிட்டதான் இருக்கா?" ருத்ரன் திடீரென்று ஏதோ கணக்கு போட்டான்.

சத்ரியனோட டேட் ஆஃப் பர்த் என்று முன்பு அவனது கேஸ் பைலை கண்டு, போனை எடுத்துப் பார்த்தான்.

"இதோ இருக்கு. ஓ மை காட்!" என்று ருத்ரனின் முகம் மாறியது. "அவனை விட பன்னிரெட்டு வயசு சின்ன பொண்ணு..." சிறிது இடைவெளிக்குப் பிறகு, "என்னை விடவும் உன்னை விடவும் வயசுல பெரியவன்." என்று கூறினான்.

"இப்ப அது ரொம்ப முக்கியமா?" என்று யதுநந்தன் சலித்தான்.

"கிளம்பு. கீர்த்தனா ஆன்ட்டியை வேற பிக்கப் பண்ணணும். போலாம் டா" என்று பேசினார்கள். இடைப்பட்ட நாளில் போலீஸும் வக்கீலும் நண்பர்களாக மாறியதை தனியாக கூறவேண்டுமா என்ன?

இங்கு வீட்டுக்குள் ஷ்ரத்தா தியாவை தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.

சின்ன பெண்ணுக்கு அழகான எளிமையான உடையை அணிவித்து விட்டாள்.

அப்பாவும் மகனும் ஒரே மாதிரியான உடையில் வந்து நின்றனர். அதை பார்த்த ஷ்ரத்தாவின் முகத்தில் தானாக ஒரு சிரிப்பு வந்தது.

"ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கீங்க." ராயன் உடனே, "அம்மாவும் அக்காவும் சேம் டிரஸ்!" என்று மழலை குரலில் சொல்லி சிரித்தான்.

ஷ்ரத்தா தியா கையை பிடித்துக் கொண்டாள். சத்ரியனின் பார்வை ஒரு நொடி அவர்கள்மீது விழுந்தது.

எதுவும் சொல்லவில்லை. அவன் நேராக காரை நோக்கி நடந்தான்.

பின்னால் தீபா, நந்திதா, லட்சுமியும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக வந்தனர்.

நாலைந்து உயர்ரக கார்களின் அணிவகுப்பில் சத்ரியன் ஷ்ரத்தாவோடு வந்தான்.

ஆசிரமத்தின் முன் கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து நின்றன.

கதவு திறந்ததும்... யோகேஷ், பீட்டர், ஸ்டெல்லா மூவரும் ஓடி வந்தனர். சத்ரியன் காரிலிருந்து இறங்கியதும் வரவேற்று ராயனை தூக்கிக் கொண்டான்.

"லிட்டில் பிரின்ஸ்..." என்று ஆளாளுக்கு ராயனை பார்த்து  பேசி மகிழ, அவன் தந்தையின் கழுத்தை கட்டிக் கொண்டான்.

அந்த நேரத்தில் ஸ்டெல்லாவின் பார்வை ஷ்ரத்தாவை கண்டது.

அவள் ஓடிவந்து ஷ்ரத்தாவை கட்டிக்கொண்டாள்.

சில நொடிகள்.. அவளால் பேசவே முடியவில்லை. கண்ணீர் மட்டும் வழிந்தது. ஷ்ரத்தாவும் அவரது முதுகை வருடினாள்.
ஸ்டெல்லா அவளது முகத்தை பார்த்தாள். என் மக கிடைத்ததுக்கு நீ தான் மா காரணம்." என்றவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை. ஷ்ரத்தா அவளை அணைத்துக் கொண்டாள்.

யோகேஷ் அருகில் வந்து, "எப்படி இருக்கீங்க மேம்?" என்று கேட்டான்.

ஷ்ரத்தா சிரிக்க முயன்றாள். "நல்லா இருக்கேன் அண்ணா" என்றவளது கண்களில் பெருமை.

"பாருங்க மேம்.. இத்தனை குழந்தைகள். நம்ம பாஸ் இல்லன்னா இவங்க யாருமே இப்ப உயிரோடவும் மானத்தோடவும் இருந்திருக்க மாட்டாங்க." அவன் சுற்றிலும் காட்டினான்.

அங்கே... நூற்றுக்கணக்கான குழந்தைகள். சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். சிலர் வகுப்பறைக்குள் அமர்ந்திருந்தனர். சிலர் ஓடிவந்து சத்ரியனை சுற்றிக் கொண்டனர்.

சத்ரியன் ராயனை யோகேஷிடம் கொடுத்தான். யோகேஷும் பீட்டரும் ராயனை மாறி மாறி தூக்கிக் கொண்டாடினர்.

"லிட்டில் பாஸ் வந்துட்டாரு ஹே.." என்றதும் ராயனுக்கு என்ன புரிந்ததோ சிரித்தான்.

அந்த காட்சியை தியா அமைதியாக ஷ்ரத்தாவின் கைகளில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது கண்களில் ஒரு சிறிய ஏக்கம். ஷ்ரத்தா அதை மட்டும் தவறவிடவில்லை.

மெதுவாக அவளை அணைத்து நின்றாள். அந்த நேரம் யதுநந்தனும் ருத்ரனும் கீர்த்தனாவுடன் வந்து சேர்ந்தனர்.

அவர்களை பார்த்த ஷ்ரத்தா உடனே சென்று வரவேற்றாள்.

"வாங்க. வாங்க" என்றாள்.

"பரவாயில்லையே.. இந்த இடமே அழகா இருக்கு. குழந்தைகளா பார்க்கறப்ப பட்டாம்பூச்சி உலகத்துக்கு வந்தது போல இருக்கு.." கீர்த்தனா கூறினார்.

யதுநந்தன் தியாவை பார்த்ததும் அருகில் சென்றான்.

"வா குட்டி..." என்று அழைக்க தூக்கிக் கொண்டான்.

தியா முதலில் தயங்கினாள். பிறகு அவனது தோளில் தலை வைத்துக் கொண்டாள். சத்ரியன் தூக்காமல் இருக்கவே யதுநந்தனின் அரவணைப்பு அவளுக்கு தேவைப்பட்டது.

கீர்த்தனாவும் அருகில் வந்தார்.

அவர் ஏற்கனவே தியாவைப் பற்றி ருத்ரனிடம் கேட்டுத் தெரிந்திருந்தார்.

குழந்தையை பார்த்ததும் ஒரு நொடி ஷ்ரத்தாவை பார்த்தார். அந்த பார்வையில் கேள்வியும் இல்லை. ஒரு புரிதல் இருந்தது.

யாரோ ஒருத்தரோட குழந்தைன்னு விட்டுடாம... தன் கணவனோட உயிர்நகல்னு பிறந்த குழந்தைன்னு ஏற்றுக்கிட்டு வளர்க்கிறாளே. என்ற பெருமை. ஆனால் சத்ரியனை பார்த்ததும் கீர்த்தனாவின் முகத்தில் சிறிய மாற்றம் அடைந்தது.

அவளது கணவரின் மரணத்தின் பின்னால் நின்ற மனிதனும் இவன் தானே. அவனை நேராக எதிர்கொள்ள மனம் தயாராகவில்லை. அதுவும் இந்த நாளில்... அதனால் அமைதியாக விலகிச் சென்றார். ருத்ரன் அதை கவனித்தான். அதனால் தாயை வற்புறுத்தவில்லை.

ஸ்டெல்லா மட்டும் கீர்த்தனாவை அழைத்துக் கொண்டு ஆசிரமத்தின் குழந்தைகளை காட்ட ஆரம்பித்தாள்.

"இவங்க எல்லாரையும் பாருங்க. எத்தனை பேரோட வாழ்க்கை நாசமாகி இருந்திருக்கும். இவங்கள்ல சில குழந்தைகள் எத்தனை பேரால சீரழிக்கப்பட்டாங்க தெரியுமா? இப்ப தான் குழந்தைகள் குழந்தைகளா உணர்ந்து விளையாடறாங்க. இதுக்கெல்லாமா காரணம் எங்க பாஸ் சத்ரியன்'' என்றதும் கீர்த்தனாவின் கண்கள் கலங்கின.

"இப்பதான் இந்த குழந்தைகள் மனசார வாழ கத்துக்கிட்டு இருக்காங்க. சாப்பாடு... உடை... படிப்பு... பாதுகாப்பு... எல்லாத்தையும் சத்ரியன் பார்த்துக்கறார். எங்க பாஸ் இல்லன்னா... இந்த குழந்தைகளுக்கு வாழ்க்கையே இருந்திருக்காது."

கீர்த்தனா அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்.

அவரது பார்வை மெதுவாக சத்ரியனை நோக்கி திரும்பியது. உண்மையில் இதற்காகவே இவனை மன்னிக்கலாம் என்றது அம்முதிய பெண்மணியின் மனம். ஆனால் தன் கணவனையும் கொன்று விட்டானே!

மறுபுறம்... ருத்ரன் சத்ரியனை பார்த்துக் கொண்டிருந்தான். ஸ்டெல்லாவின் வார்த்தைகள் அவனது காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தன.
ஒருமுறை ஷ்ரத்தா கூட 'ஐரீனையும் ஸ்டெல்லாவையுமா பார்த்தா அவங்க சொல்வாங்க. சத்ரியனை கடவுளா வந்து என் மகளை காப்பாத்தினார்னு.' என்றது நினைவு வந்தது.

அவன் திவாகரின் மரணத்தையும்... தன் தந்தையின் மரணத்தையும் நினைத்தான். பிறகு ராயனை சுற்றி குழந்தைகள் ஆர்ப்பாட்டம் செய்வதை பார்த்தான். அந்த குழந்தைகள் சத்ரியனை எப்படி பார்த்தனர் என்பதையும் கவனித்தான்.

ஒரு கிங்பின்னாக இல்லை. ஒரு பயங்கரமான மனிதனாக கொலைகாரனாக இல்லை. அவர்களுக்கு... அவன் ஒரு பாதுகாப்பு, ஒரு நம்பிக்கை தந்திருப்பதை கண்கூடாக கவனித்தான்.

ருத்ரனின் பார்வை ராயனிடம் நிலைத்தது. 'பிறக்கும்போதே பணத்தில் பிறந்தவன். விரும்பிய வாழ்க்கையை வாழ வேண்டியவன். ஆனா... சிறையில் இருந்தான்.' என்றதே ஆச்சரியமாக பார்த்தான்.

சத்ரியனை தனக்கு பிடிக்காவிட்டாலும் 'தன் வாழ்க்கையை மறைத்து வைத்து இத்தனை குழந்தைகளுக்காக வாழ்ந்திருக்கிறான்.' அவனது மனதில் ஏதோ ஒரு உணர்வு எழுந்தது.

'கெட்டவனோ... நல்லவனோ... இறுதியில் ஒரு தியாகத்தை செய்திருக்கான். அந்த நேரத்தில் சத்ரியன் குழந்தைகள் நடுவே நடந்து வந்தான். அவனைச் சுற்றி நான்கு பேர். அவன் நடந்து வரும் கம்பீரம்... அந்த இடத்திலேயே ஒரு தனி அதிகாரத்தை உருவாக்கியிருந்தான்.

ருத்ரனுக்கு அதை மறுக்க முடியவில்லை.

"யது." என்று அழைத்து வக்கீல் நண்பனிடம் "இத்தனையும் பண்ணிட்டு... கையை கட்டி திமிரா நின்னு கன்னை என் முன்ன நகர்த்தி, என்னை கொன்னுடறதா இருந்தா கொன்னுக்கோனு வேற நின்றான்.." யதுநந்தன் சத்ரியனை பார்த்தான்.

"மனுஷன் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க ருத்ரா. யாருக்காவது நல்லவனா இருந்துட்டு போறான்." என்று யதுநந்தன் கூற ருத்ரன் பதில் சொல்லவில்லை.

அந்த நேரத்தில் ஒரு கார் ஆசிரமத்திற்குள் வந்து நின்றது. அதிலிருந்து கமிஷனர் தர்ஷன் இறங்கினார். சத்ரியன் அவரை பார்த்ததும் உடனே முன்னே சென்றான்.

"நீங்க வந்ததுக்கு நன்றி" என்று இதயத்தில் கை வைத்து கூறினான்.

"நான் ஒன்னும் நல்லவனிடம் இத்தனை குழந்தைகளை அனுப்பலையே. என்‌ திருப்திக்கு சேப்பா இருக்காங்களானு, நானா வந்து எல்லாம் சரியா இருக்கானு பார்க்கறேன்." என்றார். சத்ரியன் தோளைக்குலுக்கி, "ஒரு சிறு திருத்தம். நீங்க அனும்பின குழந்தைகளுக்கும் முன்ன இங்க 126 குழந்தைகள் காப்பாற்றி வச்சிருந்தேன். சோ... நீங்க அனுப்பிய குழந்தைகள் இன்னமும் சேப்பா தான் இருப்பாங்க" என்று கோடிட்டு காட்டினான்.

ருத்ரன் தூரத்திலிருந்து கமிஷனரை பார்த்ததும் ஆச்சரியப்பட்டான்.

ருத்ரன் சல்யூட் அடிக்க தர்ஷன் ருத்ரன் தோளைகத்தட்டி சிரித்தார்.

"அம்மாவும் வந்திருக்காங்க." என்று கீர்த்தனாவை நோக்கி காட்டி அறிமுகப்படுத்தினான்.  மரியாதையுடன் நலம் விசாரித்து தலையசைத்தார்.

மதிய நேரம் ஆசிரமம் முழுவதும் விழா போல இருந்தது.

குழந்தைகளுக்காக சிறப்பு உணவு தயாரிக்கப்பட்டிருந்தது. சத்ரியன் அனைவருடனும் அமர்ந்து பேசினான்.

பிறகு குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. புதிய உடைகள், புத்தகங்கள், பொம்மைகள், பள்ளி பொருட்கள். ஒவ்வொரு பரிசையும் பெற்ற குழந்தைகளும் சத்ரியனை கட்டிக்கொண்டு மகிழ்ந்தனர்.

சில குழந்தைகளை அவனே தூக்கிக் கொண்டு முத்தமிட்டு கீழேயிறக்கி, சிலரது தலையை கலைத்து விட்டு வருடினான்.

அந்த காட்சியை பார்த்த ஷ்ரத்தாவின் மனம் மெதுவாக நிறைந்தது. அவள் தியா பக்கம் திரும்பிப் பார்த்தாள்.

குழந்தை அமைதியாக அந்த காட்சியை எல்லாம் ஏக்கமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். தியாவின் கண்கள் சத்ரியனையே வட்டமிட்டு கொண்டிருந்தன. இத்தனை பெரிய இடத்தில் தன் தந்தை எல்லோரையும் அரவணைக்க, தன்னை மட்டும் தூக்குவதற்கு தயங்கினால் குழந்தைக்கு எப்படியிருக்கும். அதிலும் தந்தையை பலரும் ராஜாவாக பாவிக்க... பெருமையில் திளைத்தாள்.

ஷ்ரத்தா சில நொடிகள் தயங்கினாள்.

பிறகு சத்ரியன் என்ன எதிர்வினை ஆற்றினாலும் பரவாயில்லை என்று, தியாவின் கையை பிடித்துக் கொண்டு சத்ரியன் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள்.

அவள் அருகில் சென்றதும் சத்ரியன் எதிர்பாராத நேரத்தில்  தியாவை அவன் கையில் தூக்கி கொடுத்தாள். 

   இங்கிருக்கும் ஒரு குழந்தை தான் என்று கவனமின்றி, முத்தமிடும் வரை சென்றவன், ஷ்ரத்தா அணிந்த அதே உடை என்றதும் மூளை அலாரமிட்டது.

  சத்ரியன் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் மாறியது. ஷ்ரத்தாவோ சங்கடமாய் அவளையும் ஏற்றுக்கொள் என்ற ரீதியில் கெஞ்ச, முத்தமிட முடியாது தடுமாறி, கீழே இறக்கிவிட முயன்றான்.

தியாவோ அவன் கழுத்தை பிடித்து அவன் தயங்கிய முத்தத்தை கன்னத்தில் தந்து, "லவ் யூ டேடி" என்று கட்டிக்கொண்டாள்.

சத்ரியனுக்கு வெளிப்படுத்த முடியாத உணர்வும், ஒருவிதமான திகைப்பான நிலையுடன் தியாவின் கண்களை சந்தித்தான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.


 
Posted : August 24, 2026 7:07 am
(@kothaihari)
Posts: 125
Estimable Member
 

சூப்பர் செம... வேற லவல் தியா ...


 
Posted : August 24, 2026 7:19 am
(@ambikahashini)
Posts: 47
Eminent Member
 

Nice 👌 sis 


 
Posted : August 24, 2026 8:35 am
(@subhakumar85)
Posts: 112
Estimable Member
 

Evanukellam athirchi vaithiyam than work out aagum


 
Posted : August 24, 2026 9:17 am
(@guna-sundari)
Posts: 138
Estimable Member
 

Wow wonderful narration sis. Very emotional episode sis. Chatriyian did a fantastic job. Also very soon he will accept Diya. Diya will take care of this. Sharadha will be happy. Yadhu and ruthran sail in a same boat. Very intresting sis.


 
Posted : August 24, 2026 9:27 am
Padma reacted
(@priyachelvam)
Posts: 3
New Member
 

Dharshan namma ashwin magan dharshan dhana, kadhalaazhi


 
Posted : August 24, 2026 10:16 am
(@priyachelvam)
Posts: 3
New Member
 

Dharshan namma Ashwin magan Dharshan dhana, Kadhal aazhi


 


 
Posted : August 24, 2026 10:18 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 126
Estimable Member
 

Ivanuku ellam ipadi sudden ah ethachum panna than undu Shardha ku Chathriyan oda mindset ah vida diya oda yekkam than perusu ah therinchuthu athu than pattunu avan kai la aval ah thooki kuduthuta ah 


 
Posted : August 24, 2026 12:03 pm
(@aishu-selva)
Posts: 31
Eminent Member
 

Super super 


 
Posted : August 24, 2026 1:20 pm
(@padma)
Posts: 26
Eminent Member
 

Wav ❤️❤️


 
Posted : August 24, 2026 1:37 pm
(@crvs2797)
Posts: 188
Estimable Member
 

தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 45)

அடேய்.. குழந்தை கிட்ட ஏன்டா இம்புட்டு வெறுப்பை காட்டுற..?
குழந்தையும் தெய்வமும் கொண்டாடுற இடத்துலன்னு பெரியவங்க அர்தத்தோடத்தான்
சொல்லி வைச்சு போயிருக்காங்கன்னு இப்பவாவது உணர்ந்துக்கோடா. உனக்கு வேணுமின்னா தியா மேல வெறுப்பு இருக்கலாம், ஆனால் குழந்தைக்கு அதெல்லாம் கிடையாதுடா இடியட்.

ஷ்ரத்தா, கிங்பின் என்கிற யானைக்கு அங்குசம் மாதிரி, பாருங்க எம்புட்டு தைரியமா
அவனையே அதிரடியா அப்ரோச் பண்றாள்.

😐😐😐
CRVS (or) CRVS 2797


 
Posted : August 24, 2026 2:20 pm
(@kalidevi)
Posts: 140
Estimable Member
 

Ivlo kolanthai gala kapathi safe vachi iruka avanga nalla pesura palagura chathriyan antha kolanthai evlo enguthu paru un pasathuku shradha unkuda irunthu una mariye shock koduthutanipo ethum pana mudiyama nikura aana athu kolanthainu una hug kiss panni kamichiduchi antha ekkatha ethuku avala ethuka ivlo thayakam


 
Posted : August 24, 2026 5:04 pm

Scroll to Top