Forum

தகிக்கும் நிலவொன்று...
 
Notifications
Clear all

தகிக்கும் நிலவொன்று-43

9 Posts
9 Users
1 Reactions
208 Views
(@praveena-thangaraj)
Posts: 265
Member Admin
Topic starter
 
[#324]

அத்தியாயம்–43

சத்ரியன் கிளம்புவதற்காக தயாராகிக் கொண்டிருந்தான்.

கருப்பு சட்டையின் மேல் கோட்டை அணிந்து, கையில் கடிகாரத்தை சரி செய்தவன் கதவை நோக்கி நடந்தான்.

அவனை பார்த்தபடி நின்ற ஷ்ரத்தாவின் மனதிற்குள் மீண்டும் ஒரு பயம் எழுந்தது.

இத்தனை வருடங்கள்... அவன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்று தெரியாமல் தவித்தவள்.

இப்போது மீண்டும் அவன் வெளியே செல்கிறான்.

"எ... எங்க..." என்று கேட்கத் தொடங்கியவள், வார்த்தையை அப்படியே நிறுத்திக் கொண்டாள். சத்ரியன் திரும்பிப் பார்த்தான்.

அவளது கண்களில் இருந்த கேள்வியை அவன் புரிந்து கொண்டான். "புது கமிஷனரோட எனக்கு சில டீலிங் இருக்கு." என்றான் அமைதியாக.

"இத்தனை கேங்லையும் எந்தத் தடயமும் இல்லாம அழிக்க முடிஞ்சதுக்கு அவரோட சப்போர்ட்டும் இருக்கு. என்னோட நோக்கம் வேறொரு மார்க்கமா இருக்கலாம். ஆனா... அவரோட நோக்கம் அவரோட கடமையில பெர்பெக்ட்  "

சிறிது இடைவெளிக்குப் பிறகு அவளை பார்த்தான். "நான் திரும்பி வந்ததை வச்சி, என் மேல எந்த ஒரு சின்ன கேஸ்கூட இருக்கக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன். பழைய கேஸ் ஏதாவது தோண்டி துருவி, செத்தவன் உயிரோட வந்தான்னு யாரும் மூக்கை நீட்டக்கூடாதுல" என்றதும் ஷ்ரத்தா அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

"நாளைக்கு பின்னாடி அவரே கூட பட்டுன்னு ஒரு என்கவுண்டர்ல என்னை போட்டுட்டாங்கன்னா..." அவன் தோளை லேசாக குலுக்கினான்.

"அதுக்கான விலைன்னு... இங்க காப்பாத்தப்பட்ட குழந்தைகளோட எதிர்காலத்தை பாதுகாப்பா வைக்கணும். இத்தனை நாள் அந்த நூற்று இருபத்தாறு குழந்தைகளோட தலைமறைவா இருக்க முடியும். இனிமேல் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால அந்த ஆசிரமம் எல்லாருடைய கண்ணிலும் படணும். 

அங்க ஒரு சின்ன தப்பு நடந்தாலும்... உலகமே திரும்பிப் பார்க்குற மாதிரி அந்த இடத்தை மாற்றணும்." ஷ்ரத்தா அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

"அதனால..." அவன் அவளது கன்னத்தை மெதுவாக தட்டினான். ''ஆசிரமத்தை வெளியே தெரியப்படுத்திட்டா. அதோட அவர் மீட்ட குழந்தைகளையும் பொண்ணுங்களையும் அங்க தங்க வைக்க ஏற்பாடு நடக்குநான் போயிட்டு வந்துடறேன்." அவளது கண்களை நேராக பார்த்தான்.

"நீ பயப்படுற மாதிரி யாராலையும் என்னை ஒண்ணும் பண்ண முடியாது." என்று கூறிவிட்டு ராயன் பக்கம் சென்றான்.

அவனை அள்ளி தூக்கியவன், மீசையும் தாடியும் குத்தும் அளவுக்கு கன்னத்தில் முத்தமிட்டான்.

"மை லிட்டில் பிரின்ஸ்..." என்றதும் ராயன் சிரித்தான். தியா மட்டும் சற்றுத் தள்ளி நின்றபடி அந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது கண்களில் இருந்த ஏக்கத்தை ஷ்ரத்தா மட்டும் கவனித்தாள்.

"அப்புறம்..." சத்ரியன் மீண்டும் ஷ்ரத்தாவை பார்த்தான்.

"நீயும் காலேஜ் கிளம்பு. இன்னும் ஒன் இயர் இருக்கு." அந்த பழைய அதிகாரத்தோடு கூறிவிட்டு வெளியேறினான்.

சத்ரியன் சென்றதும் ஷ்ரத்தாவின் மனதில் ஒரே ஒரு எண்ணம் தோன்றியது அது சரியா தவறா தெரியவில்லை.  ருத்ரனை பார்க்க வேண்டும் என்பது தான்.

அவன் இத்தனை வருடங்கள் தன்னைப் பற்றி என்ன நினைத்திருந்தான். தான் சத்ரியனுக்காக காத்திருந்தது இணைந்தப்பின், அவன் எப்படி எடுத்துக் கொண்டிருப்பான். அவன் தன் உயிருக்கு ஆபத்தென்று கொட்டும் மழையில் நின்று பிடிவாதம் பிடித்து அன்றைய இரவு தனியாக விடமனமில்லை என்று கூறினாரே. அதுவும் அன்பு தானே. காதல் என்று எடுக்காது அன்பை நினைத்தாள். 

அதற்காகவாது அவனை ஒரு முறை பார்த்து பேச வேண்டும் என்று தோன்றியது.

கல்லூரி முடிந்ததும் சந்திக்கலாம் என்று முடிவு செய்தாள். கிளம்புவதற்கு முன் ராயனையும் தியாவையும் முத்தமிட்டாள். "நல்லா படிங்க." பிறகு தியாவை பார்த்து, ராயனுக்கு மட்டும் இல்ல... தியாவுக்கும் பாடம் சொல்லித்தரணும்." என்று கூறிவிட்டு சென்றாள். அடுத்து தியா தானே பள்ளிக்கு செல்ல வேண்டியவள். 

மறுபுறம் அதிகாலையிலேயே யதுநந்தன் போட்டுக் கொடுத்த தேநீரை கையில் வைத்தபடி ருத்ரன் அமர்ந்திருந்தான்.

அவன் முகமே சரியில்லை. யதுநந்தன் அவனை பார்த்தான்.

ருத்ரன் திடீரென்று "சண்டை போட்டு ஷ்ரத்தாவை ஏதாவது செய்தானானு தெரியலை.? மனசெல்லாம அவளுக்கு என்ன ஆச்சோனு பதறுது." என்றான். 

யதுநந்தன் அவனை சில நொடிகள் பார்த்துவிட்டு சலிப்புடன் சிரித்தான்.

"நீ என்ன அவனை மிருகம்னு நினைச்சிட்டியா?" என்றான் யதுநந்தன். "உனக்கும் எனக்கும் வலிக்கற மாதிரி ஒனு சொல்லவா?"

ருத்ரன் அமைதியாக அவனை பார்த்தான்.

"அவங்க கணவன் மனைவி." சிறிது இடைவெளிக்குப் பிறகு, "நீண்ட நாள் பிரிவை ஈடுகட்ட... மஜாவா இருந்திருப்பாங்க." என்று கூற, ருத்ரன் முகத்தை சுளித்தான்.

யதுநந்தன் அவனை பார்த்து சிரித்தான்.

அடுத்த நொடியே... ருத்ரன் எழுந்து அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். பல வருட நண்பர்களைப் போல. இருவருக்கும் இடையில் வார்த்தைகள் இல்லை.

சில வலிகள்... பேசாமல் அணைப்பிலேயே முடிந்து விடும். அப்படி தான் ருத்ரன் புறப்பட, யதுநந்தன் வழியனுப்பினான்.‌

ருத்ரன் நேராக தன் வீட்டிற்கு வந்தான். வீட்டில் கீர்த்தனா காலை உணவை தயாரித்துக் கொண்டிருந்தார்.

"வந்துட்டியா ருத்ரா. நேத்தெல்லாம் பெரிய மழைடா." என்று புலம்பிக் கொண்டிருந்தார். "இடி அப்படி இடிச்சது... ஏதோ தலையில யாரோ போட்டு அழுத்துற மாதிரி." ருத்ரன் மெதுவாக, "ம்ம்." என்றான்.

"என் தலையிலேயே இடியே விழுந்தது." என்று ருத்ரன் சோகமாய் கூற கீர்த்தனா அவனை பார்த்தார்.

"என்னடா சொல்ற?"

"ஒன்னுமில்ல." என்று கூறிவிட்டு குளித்து, காக்கி சீருடையில் வந்தான்.

ஷூ அணிந்து கொண்டிருந்தபோது கீர்த்தனா அவனுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது ருத்ரன் திடீரென்று சொன்னான்.

"அம்மா..."

"ம்ம்?"

"அவன் வந்துட்டான்." என்றான். 

கீர்த்தனா புரியாமல் பார்த்தார்.

"யாருடா வந்துட்டா?"

ருத்ரன் முகத்தை தொங்கவிட்டபடி, "அதான்... அவன் ராயனோட அப்பன். தி கிங்பின். ஷ்ரத்தாவோட காதல் கணவன்." என்றான்.

கீர்த்தனாவின் கை அப்படியே நின்றது. "ருத்ரா..." என்று அவனை நேராக பார்த்தார்.

அவனது கண்கள் கலங்கியிருந்தன. "லவ் பெயிலியர்மா உன் பையன்." பெருமூச்சு விட்டான்.

"இனி நீ பயப்பட வேண்டியதில்லை. எங்க பையன் இரண்டு குழந்தை வச்சிருக்கிற விதவையை கட்டிப்பானோன்னு பயந்துட்டிருந்தியே... இனி தாராளமா சந்தோஷப்படு. உன் பையன் விதவையை கட்டிக்க மாட்டான். அத்தோட அவ விதவையும் இல்லை." என்று கூற கீர்த்தனா அவனை அமைதியாக பார்த்தார்.

"நல்லதுதானேடா. நீ நேசிச்சவளோட வாழ்க்கை சீராகுதுன்னா... நீ சந்தோஷப்படணும். அவ பூவும் பொட்டுமா தானே இருக்கா" என்றார். ருத்ரன் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.

பிறகு தாயை கட்டிக்கொண்டான். "லேசா வலிக்கும்மா..." குரல் உடைந்தது கூறினான்.

"ஏதோ... அவனை கண்டுபிடிச்சு போட்டு தள்ளத்தான் அவளை ரொம்ப டார்ச்சர் பண்ணினேன். அவ எதுவும் சொல்லாதப்ப, காதலிப்பதா நடிச்சேன். ஆனா நிஜமாவே கடைசில நானே அவளை காதலிச்சிட்டேன்மா. அதுவும் ட்ரூவா.. இதயம் வலிக்குது." கீர்த்தனா அவன் முதுகை வருடினார்.

"என் காதல்... மத்தவங்க பார்வைக்கு டார்ச்சரா மட்டும் போயிருக்கும்ல. அது ரொம்ப வலிக்குதும்மா." கீர்த்தனா அவன் முகத்தை பார்த்தார்.

"போலீஸ் டிரஸ் போட்டா நீ அழமாட்டேன்னு ஒரு முறை சொன்னியே ருத்ரா. இதென்ன அழுகை" என்றதும் ருத்ரன் உடனே முகத்தைத் துடைத்தான்.

"நான் அழல. ஆனால்." அந்த வார்த்தையோடு அவனது குரல் உடைந்து போனது.

கீர்த்தனா அவனை அணைத்துக் கொண்டார். "வேலையை கவனி ருத்ரா. காலம் நல்ல மருந்து" என்று தட்டிக் கொடுத்தார்.

ருத்ரன் தலையசைத்துவிட்டு பைக்கை உயிர்ப்பித்தான்.

அதே நேரம் கமிஷனர் தர்ஷனின் மருமகனின் பைவ் ஸ்டார் ஹோட்டலில், அவனுக்கு எதிரே அமர்ந்திருந்தான் சத்ரியன்.

கமிஷனர் தர்ஷன் சுற்றிலும் பார்த்துவிட்டு, "சீ... நீ போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தா மீடியாவுக்கு தெரிந்திடும்னு தான் இங்க வர சொன்னது. பட் இங்க உயிரோட நீ வந்ததும் தெரிஞ்சா மீடியா எங்கயும் படையெடுக்கும். சாதாரணமாவே என்ன நியூஸ் கிடைக்கும்னு நாயா பேயா அலையறாங்க. நீ போன்லேயே சொல்லிட்டல்ல. வேற என்ன?" என்று சலிப்புடன்கூற சத்ரியன் அமைதியாக அவரை பார்த்தான்.

"இல்லை சார். உங்க டிபார்ட்மெண்ட் ஆள் ஒருத்தருக்கு ஒரு சான்ஸ் கொடுக்க வந்திருக்கேன். வரச்சொல்லி இருப்பிங்களே அவன் தான்" அந்த நேரத்தில் கதவு திறந்தது.

ருத்ரன் உள்ளே வந்து சல்யூட் அடித்து நின்றான். கமிஷனர் இங்கே சந்திக்க கூறி ஸ்டேஷனில் தகவல் தந்திருக்க இங்க வந்திருந்தான். ஆனால் இங்கே சத்ரியன் எதிர்பார்க்கவில்லை. 

கமிஷனரோ "இந்த போலீஸ் அதிகாரி ருத்ரனா?" என்றதும் சத்ரியன் தலையசைத்தான். ருத்ரன் சத்ரியனை பார்த்ததும் ஒரு நொடி உறைந்தான். ஆனால் உடனே தன்னை சமன்ப்படுத்திக் கொண்டான்.

சத்ரியன் மெதுவாக பேச ஆரம்பித்தான். "சார்... சுத்தி வளைச்சி பேசிட்டு நேரத்தை எடுக்க மாட்டேன். இவனோட அப்பாவை கொன்றது நான் தான்." ருத்ரனின் முகம் இறுகியது.

"ராகவன் மோதிலாலிடம் பணம் வாங்கி என்னை உள்ள தள்ள முயன்றார். அது உண்மை. அவங்க வீட்டுல இருந்த கட்டுகட்டான பணமே அதுக்கு சாட்சி." சில நொடிகள் அமைதியானது.

"பட்..." சத்ரியன் ருத்ரனை பார்த்தான். "ராகவனை சாகடிச்சதுக்காக இவனுக்கு என் மேல கோபம் இருந்தா... என்னை இப்பவே கொல்ல சொல்லுங்க. மீடியாவுக்கு நீங்க எப்படி நியூஸ் சொல்லணுமோ சொல்லிக்கோங்க. ஐ டோன்ட் மைண்ட். பட்... இவன் அந்த செயலுக்கான பதிலா இன்னிக்கு சொல்லணும்." என்று சத்ரியன் கூறினான். 

   ருத்ரனோ மெதுவாக சிரித்தான். "அதான் எல்லாத்தையும் உனக்கே சொந்தமாக்கிட்டியே. என்னிடம் நியாயத்தை கேட்கிற." என்றதும் சத்ரியன் அமைதியாக பார்த்தான்.

ருத்ரன் தொடர்ந்தான். "எங்கப்பா நல்லவரோ... கெட்டவரோ.. அப்பா இல்லாத வலி மகனுக்கு கஷ்டமானது." என்று கலங்கியவன். "முடிஞ்சா... உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா நீ இரு."சிறிது இடைவெளி. "இரண்டு குழந்தைகளுக்கும்.. ஏன்னா இரண்டும் உன்னோட குழந்தைகள்." என்று ருத்ரன் ஊமைக்குத்தாக குத்த, சத்ரியனின் பற்கள் இறுகின.

அவன் பதில் சொல்லவில்லை. தர்ஷன் இடையில் பேசினார். "மிஸ்டர் ருத்ரன்... முடிஞ்சதை மட்டும் பேசலாம். ஆனா... கடமை தவறாத ஒருத்தரா தான் நான் உங்களை மதிக்கிறேன். சத்ரியன் ஒரு ஆஃபர் தந்திருக்கார்." என்று கூறி மேசையில் இருந்த துப்பாக்கியை ருத்ரன் பக்கம் நகர்த்தினார். "நீங்க நினைக்கலாம் இந்த கமிஷனர் அத்தனை கொலை செய்தவனை விட்டுட்டாரேனு நீங்க நினைச்சா தண்டனை தாங்க. நான் இதை வேற மாதிரி கேங்க் இறந்ததா கூட கணக்கு காட்டிப்பேன்." என்று கூலாக கூறினார்.

ருத்ரன் அதை பார்த்தான். சில நொடிகள். பிறகு தலையசைத்தான். "வேண்டாம் சார். என்னால ஷ்ரத்தாவை விதவை ஆக்க முடியாது. ராயனுக்கு அவன் அப்பாவை கண் முன்ன நிறுத்தறேன்னு சொல்லியிருந்தேன். அப்படியிருக்க‌. நான் அவன் அப்பாவை கொன்னுட்டா அந்த பிஞ்சு நாளைக்கு வளர்ந்த பின்ன என்னை மன்னிக்காது." அந்த ஒரு வார்த்தை சத்ரியனின் கண்களில் ஏதோ மாற்றத்தை ஏற்படுத்தியது.

ருத்ரன் கமிஷனருக்கு சல்யூட் அடித்துவிட்டு வெளியேறினான். சத்ரியன் அவனை பார்த்துக் கொண்டிருந்தான். ருத்ரன் மீது இருந்த கோபத்தின் பின்னால், ஒரு சிறிய மரியாதையும் உருவாகியிருந்தது.

ருத்ரன் வெளியேறியதும் சத்ரியன் கமிஷனர் தர்ஷனை நோக்கி திரும்பினான்

"நீங்க காப்பாத்திய சிறுமிகள் எல்லாரும் ஆசிரமத்துல பாதுகாப்பா சேர்ந்துட்டாங்களானு செக் பண்ணுங்க சார். அப்புறம்... எப்பவும் விசிட் பண்ணி எந்த உயிருக்கும் ஆபத்து இல்லன்னு உறுதி பண்ணிக்கோங்க. நான் அடுத்த வாரம் அங்க போறேன். முடிஞ்சா நீங்களும் வாங்க.. கலந்துக்கோங்க." என்று கூறி எழுந்தான்.

கமிஷனர் தர்ஷனுக்கு வணக்கம் தெரிவித்து வெளியேறினான் வில்லன்.

மதியம்... கல்லூரியில் இருந்த ஷ்ரத்தாவின் மனம் மட்டும் பாடத்தில் இல்லை. வெளி பேஷண்டையும் சரியாக ஏறிடமுடியவில்லை.

சத்ரியன் போனதும், ருத்ரனை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கூடுதலாய் வலுத்தது.

இறுதியில் அவள் வகுப்பை பாதியில் முடித்துக் கொண்டாள். தன் போனை எடுத்து, முதலில் யதுநந்தனை அழைத்தாள்.

"யது... உங்களை சந்திக்கணும்." அவன் இடத்தை கேட்டான். ஷ்ரத்தா ஒரு பொது இடத்தின் முகவரியை சொன்னாள். "சரி. வர்றேன்." என்றான் யதுநந்தன்.

அடுத்த அழைப்பு ருத்ரனுக்கு அழைத்தாள். அவன் சில நொடிகள் போனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஷ்ரத்தாவின் பெயர். அவன் மனம் மீண்டும் ஒரு முறை துடித்தது. அழைப்பை எடுத்தான்.

"ஹலோ..." அவளது குரல் கேட்டதும்... அடக்கி வைத்திருந்த காதல் மீண்டும் நெஞ்சை அழுத்தியது.

"ருத்ரா..." என்றாள் உரிமையாக.

"ம்ம்ம்." என்றான்.

"உன்னை சந்திக்கணும்." என்றாள். அவன் கண்களை மூடினான். எங்கே என்று இடத்தை கேட்டுக் கொண்டான். "நான் வர்றேன்." என்று விட்டு அழைப்பை துண்டித்தான்.

யதுநந்தன் ஷ்ரத்தா சொன்ன இடத்திற்கு, அங்கே வந்து சேர்ந்தான். அதற்குப் பிறகு... ருத்ரனும் வேகமாக பைக்கில் வந்து இறங்கினான்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கொஞ்ச  காலத்திலற்கு முன் ஷ்ரத்தாவை அடைய போட்டியிட்டவர்கள்.

இப்போது அவளைப் பாதுகாப்பாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டியவர்கள். ஆனால்... அவர்களின் காதல் மட்டும் கரைந்து நேசம் மட்டுமே எஞ்சியது. எஞ்ச வேண்டியிருந்தது.

தொலைவில் கார் நின்ற சத்தம் கேட்டது. ஷ்ரத்தா இறங்கி வந்தாள். அவள் இருவரையும் பார்த்தாள். அவள் குரலில் தயக்கம் இருந்தது.

அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறியாமல் இருவரும் அமைதியாக அவளை பார்த்துக் கொண்டிருந்தனர்.

  "நான் உங்க இரண்டு பேரிடமும் மன்னிப்பு கேட்டுக்கறேன். நேத்து சத்ரியன் உங்களை லேட் நைட்ல வெளிய அனுப்பியது‌ ரொம்ப கஷ்டமாயிருந்தது. நீங்க இரண்டு பேருமே என்னோட நலனுக்காக என்னை பாதுகாக்க வந்திங்க. ஒரு நன்றி கூட தெரிவிக்காம, அவர் காயப்படுத்தி பேசி அனுப்பிட்டார். 

  அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்." என்றாள். 

  "நன்றி சொல்லிட்டு மன்னிப்பு கேட்க வந்தியா?" என்றான். "ம்ம்" என்றாள். 

  "சொல்லிட்டியா.. கிளம்பு" என்றான் ருத்ரன். "பாருங்க யது.. எப்படி பேசறார்னு." என்று ஆதரவு கேட்டாள். 

யதுந்நதனோ "நாங்க என்னனு பதில் தர ஷ்ரத்தா. இவன் அப்பாவை சத்ரியன் கொன்னானு தெரிந்தும், இவனுக்கும் ராயனுக்கும் ஒரு அழகான பாண்டிங் உருவாக்கியது கடவுளோட தவறு.  

  இவன் நிலையை விவரிக்கற அளவுக்கு எனக்கு என்ன இருக்கு." என்று யதுந்நதன் பேசினான். 

ருத்ரனோ இடைப்புகுந்து  "இவன் மட்டும் என்னவாம்.. உங்கப்பா திவாகர் சாரோட ஜூனியர். உன்னை பார்த்து உனக்கே தெரியாம காதலிச்சான். நீ படிச்சு முடிச்சதும் காதலை சொல்லலாம்னு காத்திருந்தா, திவாகர் சார் இறந்துட்டார். நீயும் சத்ரியனோட கட்டுப்பாட்டில் இருந்த. வில்லனையே காதலிச்சிட்ட, ராயனும் பிறந்துட்டான், தியாவையும் கூட்டிட்டு வந்த. இவன் உன்னை மெச்சூர்டா பாதுகாத்தப்ப எனக்கே பொறாமை வந்தது. தியாவுக்கும் இவனுக்கும் கூட நல்ல பாண்டிங் தெரியுமா?

விதி... கடைசில எங்களை கோமாளியா மாத்திடுச்சு" என்று வருந்தி பேசினான். 

  ஷ்ரத்தாவோ "நீங்க இரண்டு பேருமே காதலோட என்னை பார்த்திங்க. நான் உங்க இரண்டு பேரிடமும் மதிப்பு மரியாதையுமா பார்க்கறேன். அப்படியிருக்க உங்களை கோமாளியா நினைப்பதா நீங்க நினைச்சா அதுக்கு நான் என்ன செய்ய. என் மனசுல இரண்டு பேரையும் நான் உயர்ந்த இடத்துல வச்சியிருக்கேன் ருத்ரா. 

  காதலை பத்தி பேசி என்னை கஷ்டப்படுத்தாதிங்க. நான் ஆரம்பத்துலயிருந்து சொன்னேன். சத்ரியன் இருந்தாலும் இல்லாட்டியும் நான் மனசுல வேறொருத்தனை நினைக்க மாட்டேன்னு. 

  வாழ்க்கையில சாகற அளவுக்கு விரக்தி வந்துட்டு, இப்ப தான் திரும்ப சத்ரியனோட ரொம்ப நாள் வாழணும்னு ஆசைப்படறேன்." என்றாள். 

    இருவரும் எதர்சயமாக, "நீ சந்தோஷமா இரு. நாங்க காதலிக்கறோம்னு தொல்லை தரலை." என்றார்கள்.  ருத்ரனோ "சத்ரியன் வெயிட்டிங்" என்று சுட்டிக்காட்ட, அந்த திசையில், அங்கே.. சத்ரியன் வந்திருந்தான். 

சத்ரியனோ "போதும் பேசியது. உன்னை படிக்க அனுப்பினா ஊர்சுத்தற ஷ்ரத்தா" என்று கடிந்தபடி கையை பிடித்து அழைத்து நடந்தான் வில்லன். 

-தொடரும்‌

-பிரவீணா தங்கராஜ். 

 

 

 


 
Posted : August 22, 2026 7:01 am
(@kothaihari)
Posts: 125
Estimable Member
 

சூப்பர். ... வில்லன் சொல்லாதிங்க சத்ரியன் என்னோட டார்லிங் 


 
Posted : August 22, 2026 7:14 am
(@guna-sundari)
Posts: 138
Estimable Member
 

Wow super chatriyian possessive raised. Sharadha is always for u man. Very intresting sis.


 
Posted : August 22, 2026 7:15 am
(@ambikahashini)
Posts: 47
Eminent Member
 

Nice 👌 sis 


 
Posted : August 22, 2026 7:24 am
(@padma)
Posts: 26
Eminent Member
 

Villain enna p@nna poran


 
Posted : August 22, 2026 7:32 am
(@crvs2797)
Posts: 188
Estimable Member
 

தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 43)

அய்யய்யோ...! நீங்க என்ன ஒரேயடியா இப்படி அந்தர் பல்டி அடிச்சுட்டிங்க...? இத்தனை நாளா எங்களை ருத்ரனை கழுவி கழுவி ஊத்த வைச்சிட்டு, இன்னைக்கு அவனைப் பார்த்து எங்க கண்ணுல தண்ணி வர அளவுக்கு வைச்சுட்டிங்களே...? நியாயமா பார்த்தால் நாங்க ருத்ரன் தொல்லை ஒழிஞ்சதுன்னு தானே சந்தோஷப்பட்டுக்கணும்...? ஆனால், இப்படி ஒரேயடியா உருக வைச்சிட்டிங்களே...? சத்ரியனை விட இவன் நல்ல காதலன்னு சொல்ல வைச்சிட்டிங்களே..? சத்ரியன் கூட அப்படி இப்படி வாழ்ந்தவன். ஆனால் இந்த ருத்ரன் நேர்மையான காவலன், நல்ல காதலன், கணவனை இழந்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க நினைத்த நல்ல மணவாளன், எந்த பெண்ணையும் இதுவரை மனதால் கூட தொடாத அக்மார்க் சுத்தமானவன்,.. இப்படி அவனோட கான்டாக்ட் லிஸ்ட் ஏறிட்டே போகுதே. அதுவும் எத்தனை மன அழுத்தம் இருந்தால் வக்கிலையே கட்டி புடிச்சு ஆறுதல் தேடுற அளவுக்கு போயிருப்பான். நியாயமா சொல்லப் போனால் வக்கிலும் போலீஸூம் எலியும் பூனையும் மாதிரின்னுத்தானே சொல்லுவாங்க. ஆனால், இப்ப அந்த எலியும் பூனையும் கட்டிப் புடிச்சு நட்பை பகிரங்கப்படுத்துற
அளவுக்கு சோகம் எல்லை மீறிடுச்சு போல. அதுவும் ருத்ரன் அம்மா கிட்ட உருகி பேசறது அல்டிமேட் ஹார்ட் டச்சிங்.

யதுநந்தனும் பாவம் தான்,
பாவம் ரெண்டு பச்ச புள்ளைங்களும். ஏமாந்த கொக்கு எதையோ நக்கும்ன்னு சொல்லுவாங்க.. அது மாதிரியாகிடுச்சு நிலைமை போங்க. இந்த சத்ரியனை பாருங்க
இப்பக் கூட ஷ்ரத்தாவை ருத்ரன் யதுநந்தன் கிட்ட பேச விடறான்னு பாருங்க... சரியான பொறாமைக்கு
பிறந்தவன் இந்த சத்ரியன்.

😐😐😐
CRVS (or) CRVS 2797


 
Posted : August 22, 2026 8:41 am
(@subhakumar85)
Posts: 112
Estimable Member
 

Oh dharshan than Inga commissioner ah.. paapom evanga next move yenna panraanganu


 
Posted : August 22, 2026 10:22 am
(@aishu-selva)
Posts: 31
Eminent Member
 

Super 


 
Posted : August 23, 2026 11:46 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 126
Estimable Member
 

Rudhran pesum pothu kastam ah than irundhuchi aana Shardha oda manasula la yum seri vazhkai la yum ava Chathriyan ah thavira yarukum edam kuduka mata athu therinchum Yadhu vum ivan vum kadhal ah valathutu ippo kastapaduraga ah .

Soppa indha villan oda possessive thangala pa konjam neram ava pesuna than ennavam 


 
Posted : August 24, 2026 11:11 am

Scroll to Top