Forum

தகிக்கும் நிலவொன்று...
 
Notifications
Clear all

தகிக்கும் நிலவொன்று-42

11 Posts
11 Users
3 Reactions
195 Views
(@praveena-thangaraj)
Posts: 265
Member Admin
Topic starter
 
[#323]

அத்தியாயம்-42

  ஷ்ரத்தா அறை வாங்கி சரியவும் ருத்ரனுக்கு சினம் துளிர்த்துவிட்டது. "உனக்காக காத்திருந்தவளை போய் அடிக்கறியே மனுஷனாடா நீ?"

ருத்ரனின் குரல் அறை முழுவதும் அதிர்ந்தது.

சத்ரியன் மெதுவாக அவனை நோக்கித் திரும்பினான்.

அவன் கையில் இன்னும் ராயன் இருந்தான். ஆனால் முகத்தில் இருந்த அமைதி மட்டும் காணாமல் போயிருந்தது.

"நான் உயிரோட இருக்கேனா இல்லையான்னு தெரியாம... கர்ப்பமா இருந்த என் ஷ்ரத்தாவை கீழே தள்ளிவிட்டு, அவளுக்கு மன அழுத்தம் கொடுத்தவன் நீ." அவன் ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாக சொன்னான்.

"நீ என்னை மனுஷன்னானு கேட்கறியா?" சத்ரியன் பற்களை கடித்தான்.
ருத்ரனே "அது வேற விஷயம்." என்று மழுப்ப "இல்ல அன்னிக்கு நீ மனுஷனா இல்லை. அவ கர்ப்பமா இருக்கானு தெரிந்தே அவளிடம் என்னை பத்தி கேட்டு என்னை அழிக்க நோண்டிட்டே இருந்த.
பட் இவ என்னோட ஷ்ரத்தா." அவன் குரலில் உரிமை இருந்தது.

"ஊரறிய தாலி கட்டல. பட்... மோதிரம் மாத்தி, என் வாழ்க்கையில அவளுக்குரிய இடத்தை நான் கொடுத்திருக்கேன்." அவன் பார்வை மீண்டும் ருத்ரனை துளைத்தது.

"நான் அவளை எப்படி நடத்தணும்னு... அது புருஷன் பொண்டாட்டிகுள்ள இருக்கற விஷயம். அதுல தலையிட உனக்கு எந்த உரிமையும் இல்லை." ருத்ரன் ஏதோ சொல்ல வாயைத் திறக்க, "கெட் அவுட்." என்று சத்ரியனின் குரல் கர்ஜனையாக மாறியது.

யதுநந்தன் உடனே ருத்ரனின் கையைப் பிடித்தான். "வா ருத்ரா." என்று கூறினான்.

"யதுநந்தன் அவன் பேசறதை கேட்டும் அமைதியா இருக்க. நீயும் தானே ஷ்ரத்தாவை விரும்பின. அப்படியிருக்க அவளை அடிக்கறான்." என்று கேட்டான்.

"இப்ப எதுவும் பேச வேண்டாம். நாம இதுல இனி தலையிட முடியாது. இல்லை... தலையிட கூடாது." அவன் மெதுவாக இழுத்துச் சென்றான்.

வாசலை நோக்கி நடந்துக் கொண்டிருந்த போதும் ருத்ரனின் பார்வை ஷ்ரத்தாவை விட்டு நகரவில்லை.

அவளது முகத்தில் இருந்த கண்ணீர் அவனுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது.

ஆனால்... இனி அவளுடைய வாழ்க்கையில் தங்களுக்கு இடம் இல்லை என்பதை இருவருமே உணர்ந்திருந்தனர்.

ஷ்ரத்தா மெதுவாக சத்ரியனை நோக்கித் திரும்பினாள்.

"சத்ரியா... ருத்ரனும் யதுவும் நீ இல்லாத நேரத்துல எனக்கு உதவினாங்க." என்று அவன் கொடுமைப்படுத்துவதை மட்டுமே அளிந்து வைத்திருப்பானென நல்லதையும் கூறினாள்.

"தெரியும்." அந்த ஒரு வார்த்தையில் கோபம் இல்லை.

"அதோட... தியா யாருன்னு தெரிந்தும் ஒதுக்கற" என்றாள்.
ஷ்ரத்தாவின் இதயம் ஒரு நொடி துடிப்பை நிறுத்தியது.

சத்ரியன் முகத்தில் வலி தெரிந்தது.

"ஒதுக்காம என்ன டிசெய்ய சொல்லற" அவன் மெதுவாக சொன்னான்.

"நான் செய்த பாவத்தோட மிச்சம் இவ" என்றதும் 'சத்ரியா' என்று ஷ்ரத்தா அதிர்ச்சியுடன் அழைத்தாள்.

"ஐ அம் சாரி, ஷ்ரத்தா. என்னை மீறி நடந்த அந்த தப்புக்காக நான் ஏற்கனவே உன்னிடம் மன்னிப்பு கேட்டாச்சு. அதோட வினோத்தை உயிரோட விட்டுட்டேன். அவங்களுக்காக.. பேவரா அதை பண்ணிட்டேன்.  இப்ப இரண்டு பேரும் உலகத்துல இல்லாததுக்கு நான் என்ன செய்ய?" அவன் பார்வை மீண்டும் தியாவை நோக்கி சென்றது.

"இப்ப முன்ன செய்த தப்பு இவ்வளவு பெரிய உருவத்துல என் முன்னாடி நிக்கும்னு நான் நினைக்கவே இல்லை." ஷ்ரத்தாவின் கண்களில் கண்ணீர் திரண்டது.

"அவளை..." அவன் வார்த்தையை முடிக்க முடியாமல் நின்றான்.

"அவளை அப்போதே... என்ன செய்ய வேண்டுமோ அதை செத்துப்போனவ  செய்திருக்கணும்." ஷ்ரத்தா அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள்.

"அதுக்கு பதிலா பெத்துட்டா. இதுல என் இன்சியலை போட்டு ஆசிரமத்துல சேர்த்து விட்டு, உன்னை நேக்கா கார்டியன் பெயர்ல போட்டுட்டா. இப்ப... அவளையும் என் தலையில கட்டிட்டு நிற்கிற மாதிரி இருக்கு." அவன் கண்களை மூடிக்கொண்டான்.

"எனக்கே என்னை சகிக்க முடியல. என்னை விட்டுடு." என்றான்.  ஷ்ரத்தாவின் கண்ணீர் வழிந்தது.

"சத்ரியா..." என்றாள்.

"நான் சந்தோஷமா வந்தேன் ஷ்ரத்தா. நீயும் ராயனும் இருப்பீங்கன்னு நினைச்சேன். ஆனா இங்க..." அவன் தியாவை பார்த்தான். "எனக்கே ஒரு பெரிய அதிர்ச்சி" என்றவன் சொன்ன வார்த்தைகள் வாசல் வரை சென்று கொண்டிருந்த ருத்ரனுக்கும் யதுநந்தனுக்கும் தெளிவாகக் கேட்டன.

இருவரும் ஒரு நொடி நின்றனர்.
திரும்பிப் பார்க்கவில்லை. எதுவும் பேசவில்லை. ஏனெனில்... இனி ஷ்ரத்தா யாருடைய வாழ்க்கையில் இருக்கிறாள் என்பதற்கான பதில் அவர்களுக்கு தெளிவாகிவிட்டது.

அவர்கள் மெதுவாக வெளியேறினர்.

வாசலுக்கு வெளியே... சில ஆட்கள் இன்னும் தாக்குதலில் இறந்தவர்களின் உடல்களை அகற்றிக் கொண்டிருந்தனர்.

ருத்ரன் அந்தக் காட்சியை பார்த்தான். அவன் முகம் இறுகியது. ஆனால் காவலதிகாரியாக எதுவும் சொல்லவில்லை.

சில நொடிகள் கழித்து தலையை குனிந்தபடி நடந்தான். யதுநந்தன் அவனை பார்த்துக் கொண்டே வந்தான்.

"ருத்ரா..."

"ம்ம்ம்."

"எங்க போற மிட்நைட்ல உங்க அம்மாவுக்கு தொந்தரவு தந்து பேசாம என் வீட்டுக்கு வா." என்றான்.

"இந்த நேரத்துலயா?" என்றாலும் ருத்ரன் பதில் சொல்லவில்லை.

"இன்னைக்கு மட்டும் தனியா இருக்காத." என்று யதுந்நதன் காரில் ஏற, ருத்ரன் மெதுவாக அவனை பார்த்தான்.
 
   அவனுமே மழைவிட்டு வெறிந்த வானத்தை கண்டு பைக்கை எடுத்தான்.

இருவரும் யதுந்நதன் வீட்டுக்கு சென்றனர்.
அங்கே ருத்ரனோ "அவனுக்காகத் தானே அவ சிறையில இருந்தா... அவனுக்காகத்தானே அவள் இவ்வளவு வருஷம் காத்திருந்தா... அவளை இப்படி கஷ்டப்படுத்துறான்." என்று ருத்ரன் புலம்ப, யதுநந்தன் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.

"அந்த குழந்தை தியா." அவன் திடீரென்று திரும்பிப் பார்த்தான்.

"அவளை ஏத்துக்கறதுல அவனுக்கு என்ன கஷ்டம்?" யதுநந்தன் பதில் சொல்லவில்லை.

"அந்த பங்களா முழுக்க எத்தனை ஆட்கள்? எத்தனை லேடி ஸ்டாஃப்? எத்தனை பேருக்கு சத்ரியன் சாப்பாடு போடுறான்?
  126 குழந்தைகளை தனியா வைத்து வளர்க்கிறான்." ருத்ரனின் குரல் மெதுவாக உயர்ந்தது. "அவங்களுக்கு ஷ்ரத்தா சொன்ன மாதிரி கடவுளா இருக்கிறான். குழந்தையை வளர்க்க என்னவாம்?

முகம் தெரியாத பிஞ்சு குழந்தைகளுக்காக உயிரையே பணயம் வைச்சான்.. ஆனா... சொந்தக் குழந்தைன்னு தெரிஞ்சதும் மட்டும் ஏன் இப்படி ஆகுறான்? ருத்ரன் கண்களில் கோபமும் குழப்பமும் கலந்தது.

யதுநந்தன் நீண்ட மூச்சு விட்டான். "அதுதான் அவனோட காயம் ருத்ரா." என்று நிதானமாக கூறினான்.

"என்ன பெரிய காயம்?" என்றான் அலட்சியமாக.

"தியா அவனுக்கு ஒரு குழந்தை மட்டும் இல்ல."‌ யதுநந்தன் மெதுவாக விளக்கமாக சொன்னான்.

"அவன் செய்த ஒரு தப்புக்கு உயிரோட நிற்கற சாட்சி. அதை சத்ரியனால் ஏத்துக்க முடியல." ருத்ரன் அமைதியாகிவிட்டான்.

அடுத்த நொடியே "ஷ்ரத்தா ஏத்துக்கிட்டாளே. அவளுக்கு தியாவை ஏதாதுக்க மனசு இருக்கே" என்று ருத்ரன் கூற யதுநந்தன் சற்று கசப்பாக சிரித்தான்.

"அவனுக்கும் மனசு இருக்கு. ஆனா... அந்த மனசுக்குள்ள அவன் கட்டி வைத்திருக்கிற கோட்டை ரொம்ப பெரியது. இந்த குழந்தையால அவன் தன் வாழ்க்கையில செய்த நல்லதை மாத்த நினைச்சாலும் முடியாம நிற்கறான்." என்று யதுந்நதன் கூறவும் ருத்ரன் புரியாமல் நின்றான்.‌

  "இத்தனை குழந்தைகளை காப்பாத்தி ஆசிரம் கட்டி, காப்பாத்தியது பெருமையா சொல்லப்படலாம். ஆனா நீ செய்த தவறு உன் பக்கத்துல நிற்கறப்ப அந்த பெருமையை எப்படி ஏத்துப்ப? அந்த நிலையில தான் சத்ரியன் தியாவை கண்டு தள்ளி போறான். மேபீ... இது அவங்க பிராப்ளம். ஷ்ரத்தா தியாவை அம்போனு விடமாட்டா. ஐ நோ. அவ இலகிய மனசு கொண்டவ.
   அதுவும் சத்ரியனோட குழந்தையா, அவன் சாயலா இருக்கற பட்சத்தில் அவ தியாவை ராயனை விட கூடுதலா தான் பார்த்துப்பா." என்று ருத்ரன் தோளில் தட்டி, ''நாளைக்கு போலீஸ் அதிகாரியா என்ன செய்யணுமோ அதை யோசி தூங்கு." என்று கூற ருத்ரன் மெதுவாக தலையசைத்தான்.

ருத்ரன் யதுந்நதனின் வீட்டு ஹாலிலேயே படுத்தான். யதுந்நதனும் சோபாவிலேயே சரிந்து இமை மூடினான். இவர்கள் இருவரும் பேசிக்கொள்ளாத வலியும் உள்ளதே. அது ஷ்ரத்தா மீதான காதல் படுத்தோல்வி அடைந்துவிட்டதை பேசிக்கொள்ள முடியாமலேயே உறங்க பாடுபட்டனர்.

அதே நேரத்தில் பங்களாவுக்குள் குழந்தைகளை தீபா, லட்சுமி, நந்திதா வேறு அறைக்கு அழைத்துச் சென்றனர்.

ஷ்ரத்தா மட்டும் மெதுவாக சத்ரியனை பின்தொடர்ந்தாள்.

அவன் அறைக்குள் நுழைந்ததும் கதவு தானாக மூடிக் கொண்டது.

சில நொடிகள் இருவரும் எதுவும் பேசவில்லை.

ஷ்ரத்தா அவனை பார்த்தாள். பல வருடங்களாக கனவில் மட்டும் பார்த்த முகம். இன்று அவள் முன் உயிரோடு இருந்தது. அவள் மெதுவாக அவனருகில் சென்றாள்.

"சத்ரியா..." அவன் திரும்பிப் பார்த்தான்.

அடுத்த நொடி... அவளை தன்னருகில் பேயை போல இழுத்துக் கொண்டான். பல வருடங்களாக அடக்கி வைத்திருந்த ஏக்கம் இருவரையும் மீண்டும் ஒன்றாக்கியது.

வார்த்தைகள் தேவையில்லை. அந்த இரவில் அவர்கள் பேசியதை விட. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்த பார்வைகளே அதிகமாக பேசின. அவனோ அவளை அள்ளி மெத்தையில் போட்டு பேச முடியாத வகையில் முத்தங்களால் வாயடைத்தான்.‌
முதலில் இவனது ஆசைக்கு இணங்கி பிறகு பேசுவோமென காத்திருந்தாள் ஷ்ரத்தா.

இரண்டாம் உலகபோர் போல இருவரும் மெத்தையில் முத்தபோரில் மூழ்கியிருந்தனர்.
சத்ரியனோ அசுரத்தனமாக வன்முறையால் அவளை ஆள்பவனாக, எலும்புகள் உடைந்திடும் அளவிற்கு வேகமும் அழுத்தமும் கூட்டி பெண்ணவளை அள்ளிட முனைந்தான்.‌
இத்தனை நாளின் பிரிந்த இணையின் வேகம் அது.

இப்படியாக இருவரம் நள்ளிரவு தாண்டிய இருளை விரட்டி அதிகாலை வந்தும் மோகத்தை தன்னோடு இறுத்தி கொண்டனர்.

பிரிவின் வலி... காத்திருப்பின் வேதனை. உயிரோடு இருக்கிறானா என்ற பயம். மீண்டும் கிடைத்த சந்தோஷம்.

எல்லாமே அந்த இரவின் அமைதிக்குள் நெடுநேரம் பேசி, இணைந்து, கரைந்து அடுத்த நாள் விடிய, அவன் ரோமத்தில் விரலால் கோலமிட்டபடி, "ரொம்ப நாளாச்சு சத்ரியா. இப்படி நிம்மதியா தூங்கி, இப்படி என் பெண்மையை உணர்ந்து, என் தாபம் மோகம் தீர்ந்து, உன்னை பார்த்ததும் உயிரே திரும்ப வந்துடுச்சு" என்று அவனை கட்டிக்கொண்டு அழுதாள்.‌

"பச்.. அழாத ஷ்ரத்தா. ஒவ்வொரு கண்ணீரும், என்‌மேல வெந்நீரா இறங்குது. உன்னை விட்டு போனதுக்கான மிகப்பெரிய தண்டனையா தெரியுது." என்று கண்ணீரை துடைத்தான்.‌

உதடு வீங்கி, கழுத்தெல்லாம் சிவப்பு தடமாக, சத்ரியனின் புஜத்திலும் மார்பிலும் ஷ்ரத்தாவின் நககீறலை கண்டு, பேசலாமா வேண்டாமா என்று மனதிற்குள் பட்டிமன்றம் வைத்தாள்.

  நேற்று வந்தவனுக்கு இன்னும் என்னென்ன வேலைகள் பாக்கி உள்ளதோ அந்த ஸ்டீபன் வேறு பதுங்கிவிட்டதாக அல்லவா கூறினான்.' என்று திடுக்கிட்டு எழுந்தாள்.

'என்னாச்சு?" என்று கேட்க, ரா..ராயன் எழுந்திருப்பான்
போய் பார்த்துட்டு வர்றேன்." என்றாள்.

"குளிச்சிட்டு கொஞ்சம் பிரெஷா போ" என்று அவளை அள்ளிக்கொண்டு பாத்டப்பில் இறக்கினான்.

அங்குமே பேச்சு இல்லை. எல்லாமே முத்தகவிதையும் மொத்த கவிதையும் வாசித்திருந்தனர்.‌

  இன்டர்காமில், ராயன் அம்மா.." என்று அழைத்திடவும் தான் வேகவேகமாய் உடையை அணிந்தாள்.

  முழங்கை வரை கையும், காலர் வைத்த பிளவுஸ், சேலை என்று அணிந்து அவசரமாக கதவை திறந்தாள்.

அங்கே ராயன் தியாவுக்கு ஹாலில் டைனிங் டேபிளில், இட்லியை ஊட்டினார்கள்.

  சத்ரியன் வரவும், ஷ்ரத்தா தானே பரிமாறுவதாக பரிமாறினாள்.

   தியா இருக்குமிடம் தாண்டி ராயனருகே அமர்ந்தான்.
"மை லிட்டில் பிரின்ஸ் என்ன சாப்பிடறிங்க" என்று கேட்க, "இட்லியை எடுத்து ராயன் சத்ரியனுக்கு ஊட்டினான்.
தியாவும் அதே போல செய்ய எழவும், ஷ்ரத்தாவோ "தியா.. நீங்க அம்மாவுக்கு ஊட்டுங்க" என்று குழந்தையை தடுத்துவிட்டாள்.
 
  சத்ரியன் கழுத்து நரம்பு புடைத்து கர்ஜித்தால் குழந்தை தியா மனநிலை எப்படி மாறுமோ என்று முன்கூட்டியே சங்கடங்களை தவிர்த்தாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
 


 
Posted : August 21, 2026 6:56 am
(@padma)
Posts: 26
Eminent Member
 

Dhiya pavam


 
Posted : August 21, 2026 7:05 am
(@kothaihari)
Posts: 125
Estimable Member
 

யதுநந்தன் சத்ரியன் மனநிலையை சரியா புரிஞ்சுக்கிட்டான்... கொஞ்சம் நாளாகும் சத்ரியன் தியாவை ஏத்துக்க


 
Posted : August 21, 2026 7:05 am
(@narmadha)
Posts: 6
Active Member
 

😍😍


 
Posted : August 21, 2026 7:32 am
(@ambikahashini)
Posts: 47
Eminent Member
 

Nice 👌 sis 


 
Posted : August 21, 2026 7:43 am
(@crvs2797)
Posts: 188
Estimable Member
 

தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 42)

அது சரி, சத்ரியன் பண்ண எல்லா தப்புக்கும் தண்டனை கிடைக்கலைத் தானே..? சோ, ஒரு பெண்ணை தெரிஞ்சு தொட்டாலும், தெரியாமல் தொட்டாலும் பாவம் தானே...? அந்த பாவத்தின் சம்பளம்

தண்டனைத்தானே..? அந்த தண்டனையைத்தான் இப்ப அனுபவிச்சிட்டு இருக்கிறான்.

ருத்ரா & யதுநந்தன் நிலைமைத் தான் ரொம்பவே பாவம்.

😐😐😐
CRVS (or) CRVS 2797


 
Posted : August 21, 2026 7:45 am
(@guna-sundari)
Posts: 138
Estimable Member
 

Yadhu understand the chatriyian feelings. Ruthran always idiot. Chatriyian will accept Divya bit he need some time. Sharadha happy. His force and affection are marvellous..very intresting sis.


 
Posted : August 21, 2026 9:24 am
(@aishu-selva)
Posts: 31
Eminent Member
 

Dhiya paavam ...

 


 
Posted : August 21, 2026 10:16 am
(@kalidevi)
Posts: 140
Estimable Member
 

ruthran inum theve illama nee kova patutu iruka pesitu iruka yathu ellam purinjitu atha kadakuran vali irukum than rendu perkum but ipo chathriyan vanthutan avan pathupan shardhava athu avanga family problem so nee un velaya paru. irukum thana nall illama varusha kanaka chathriyan irukana illayanu yosichi niraya valigala kadanthu vanthu irukale ekkam alavillama thana irukum eppadi iruntha chathriyane atha  mogatha sharadha kitta tha kamichi irukan . papom aduthu diya va ethuka vaikirala illa ena nadakuthunu


 
Posted : August 21, 2026 10:57 am
(@subhakumar85)
Posts: 112
Estimable Member
 

Konja nalla avan vazhiku varuvaan


 
Posted : August 21, 2026 2:46 pm
(@kavi-bharathi-arunkumar)
Posts: 126
Estimable Member
 

Yadhu Chathriyan oda feelings ah yum avan nilamai ah yum perfect ah sollitan avan sonnathu pola than Chathriyan um diya ah va pakkuran .


 
Posted : August 24, 2026 11:00 am

Scroll to Top