Forum

தகிக்கும் நிலவொன்று...
 
Notifications
Clear all

தகிக்கும் நிலவொன்று-41

10 Posts
10 Users
5 Reactions
255 Views
(@praveena-thangaraj)
Posts: 265
Member Admin
Topic starter
 
[#321]

அத்தியாயம்-41

   ஷ்ரத்தா ராயனைப் பார்த்தபடி சந்தோஷத்தில் கண்ணீர் துளிர்த்துக் கொண்டிருந்தாள்.

அவனோ சத்ரியனின் கழுத்தை கட்டிக்கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான். அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த தியா மட்டும் சற்றுத் தள்ளி நின்றபடி, நெருடலுடன் சத்ரியனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஷ்ரத்தாவின் பார்வை அந்த பிஞ்சு மீதும் விழுந்தது.

"தியா..." என்று அழைத்தாள்.

குழந்தை மெதுவாக அம்மாவை பார்த்தது. "வா கண்ணா..."என்று அவளது கையை பிடித்து சத்ரியனுக்கு அருகில் அழைத்து வந்தாள்.

சத்ரியன் ராயனை ஒரு கையில் வைத்தபடியே தியாவை பார்த்தான். அவளது கண்கள் அவனை விட்டு நகரவே இல்லை. ஷ்ரத்தா சிரித்தபடி,

"சத்ரியா... இந்தக் குழந்தை யாரை மாதிரி இருக்குன்னு பார்த்தியா?" சத்ரியனின் பார்வை தியாவின் முகத்தில் நிலைத்தது.

"இந்தக் குழந்தை..." என்று அவள் சொல்ல ஆரம்பித்த அந்த நொடியில், சத்ரியன் ராயனை தூக்கிக்கொண்டே மறுபுறம் திரும்பினான்.

"தீபா.." என்றவனது குரல் திடீரென்று மாறியது.

"லட்சுமி."

"நந்திதா." மூவரும் உடனே அவனை நோக்கினர்.

"இங்க ஒரு துளி ரத்தக்கறையோ... வாசனையோ இருக்கக்கூடாது." அவன் பார்வை அறை முழுவதும் சுற்றியது. "பங்களா முழுக்க க்ளீன் பண்ணுங்க. எல்லா ஆயுதங்களையும் எடுத்துட்டு போங்க." என்றான்.

ஒரு நொடி இடைவெளி. "காய்ஸ்..." அவனது குரல் இன்னும் அழுத்தமானது.

"வெளியே கன்டெய்னர் இருக்கு. அதுல கெமிக்கல் டேங்க் ரெடியா இருக்கு. அதுல இந்த ஆட்களோட தடயமே இல்லாத மாதிரி பார்த்துக்கோங்க." என்றவன் குரலில் எந்த உணர்ச்சியும் இல்லை.

"இங்கிருந்து எதிராளியோட ஒரு துளி சதை... ரத்தம்... எதுவுமே வெளியே போகக்கூடாது. காட் இட்?" என்று கர்ஜிக்க, "எஸ் பாஸ்!" என்று பாடிகார்ட்ஸ் ஒரே குரலில் முழங்கினர்.

அந்த நேரத்தில் ருத்ரனின் கோபம் போலீஸ் அதிகாரியாக வெடித்தது.

"நீ தப்புக்கு மேல தப்பு பண்ணிக்கிட்டே இருக்க!" என்று குரல் தந்தான்.‌

சத்ரியன் மெதுவாக அவனை பார்த்தான். "இத்தனை பேரை கொன்னுட்டு சட்டத்துக்கு முன்னாடி எப்படி தப்பிக்கப் போற?" ருத்ரன் கேட்டதும், சத்ரியன் ராயனை இன்னும் ஒரு கையால் அணைத்துக் கொண்டபடி ருத்ரனை கண்டு சிரித்தான்.

அந்த சிரிப்பில் கேலி இருந்தது.

"முதல்ல உன்னைதான் அந்த டேங்க்ல தூக்கி போடணும்னு நினைச்சேன்." என்று இலகுவாக சத்ரியன் கூற ருத்ரனின் முகம் இறுகியது.

"ஷ்ரத்தாவை ஜெயில்ல பிரகனென்டா இருந்தப்ப கீழே தள்ளினவன் நீதானே? அப்பவே உன்னை தூக்கி எமலோகத்துக்கு அனுப்பியிருப்பேன்." சத்ரியன் பார்வை கூர்மையானது.

"என்னசெய்ய உங்கப்பாவை நான் கொன்னதுக்காக பழிவாங்குறேன்னு நினைச்சு,  உனக்கு ஒரு லேசான விபத்து மட்டும் நடக்கட்டும்னு விட்டேன்." ருத்ரன் பதில் சொல்லவில்லை.

சத்ரியனின் பார்வை ஷ்ரத்தாவை தொட்டது.

"அதோட நீயே ஷ்ரத்தாவை தூக்கிட்டு ஹாஸ்பிடலுக்கு ஓடின. அதையும் சிசிடிவில பார்த்தேன். அந்த ஒரு காரணத்துக்காகத்தான் நீ இன்னும் உயிரோட இங்க இருக்க. இல்லன்னா... அவளை லவ் பண்ணுறேன்னு சொல்லி டார்ச்சர் பண்ணினதுக்கே நீ முதல் ஆளா செத்திருப்ப." என்றான் சத்ரியன்.‌

ருத்ரனின் கைகள் முஷ்டியானது. "எஸ்.. உன்னை கேட்டு அவளை டார்ச்சர் பண்ணி அவளை மன அழுத்தத்துக்கு தள்ளினா. நீ வெளிய வருவனு நினைச்சேன். ஆனா நீ வரலை. அதான்.. காதலிப்பதா டார்ச்சர் செய்தா நேர்ல வருவேன்னு நினைச்சேன்." என்றான் ருத்ரன்.

சத்ரியன் மெதுவாக சிரித்தான். "ஷ்ரத்தாவை காயப்படுத்தினா, அவளை காப்பாத்துறதுக்காக நான் வெளிய வருவேன்னு தெரிஞ்சுதானே அவளை நீ இம்சை செய்தது எனக்கும் தெரியும். ஆனாலும் அவளுகாகு வெளியே சேப்டி இல்லை.. அதுக்கு நீ பண்ணற கூத்தை வேடிக்கை பார்த்தேன்." என்றான் சத்ரியன் அலட்சியமாக.

மேலும் "இப்போ நேர்ல உன் முன்ன நிற்கறேன். இத்தனை பேரை கொன்னு குவிச்சிருக்கேன். என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்கோ. போடா" என்றான் அனலாக. 

"சத்ரியா." ஷ்ரத்தா உடனே இடையில் வந்தாள்.

"ப்ளீஸ்." அவள் அவனது கையை பிடித்தாள்.

"சண்டை போடாத."

சத்ரியனின் பார்வை உடனே அவளிடம் மாறியது.

"நீ இங்க வர்றதுக்கு முன்னாடி... இதே ருத்ரன் எனக்கு ஏதும் ஆகக்கூடாதுன்னு தான் இங்க இருந்தார். இப்பவும் என்னை பாதுகாப்புக்கு தான் இங்க இருக்கார்."  என்று விவரிக்க சத்ரியன் ருத்ரனை பார்த்தான்.

சத்ரியனோ "தெரியும். இத்தனை பேர்ல ஒருத்தன் உன்னை நெருங்கியிருந்தா. இவன் துப்பாக்கி சும்மா இருந்திருக்குமா? இங்க கிடந்த தோட்டாக்களில் பாதியை இவன் வீணாக்கியிருப்பான் தானே.. அதென்னடா.. நான் கொன்னா மட்டும் சட்டத்துக்கு முன்னாடி தப்ப முடியாதா? என்ன பேசறான் இவன். இவன் அப்பனையே தூக்கி முழுங்கி ஏப்பமிட்டவன் நான்.

நான் நினைச்சிருந்தா... இவங்க எல்லாருடைய தடயத்தையும் இங்கிருந்து முழுசா அழிச்சிருக்க முடிந்தது போல இவனையும் அழிக்க முடியும். ஆனா இவனுக்கு சட்டம் முக்கியம். எனக்கு ஷ்ரத்தா உயிரோட இருக்கணும்."

அந்த வார்த்தையில் மட்டும் அவனது குரலில் கோபம் இல்லை. அன்பு இருந்தது.

பிறகு ருத்ரனை பார்த்தபடி,"நான் செத்துட்டேன்னு உலகத்துக்கே நியூஸ் லீக் பண்ணியிருக்காங்க. உங்க டிபார்ட்மெண்ட் அதுக்காக உங்க முன்னாள் கமிஷனர் நெல்சன்... பல கோடி வாங்கியிருக்கான் தெரியுமா?" என்றதும் ருத்ரனின் முகத்தில் லேசான அதிர்ச்சி. அப்பொழுதே சந்தேகம் கூடியது. சத்ரியன் பாடி போஸ்ட் மாட்டம் எதையும் அவர் நெருங்கவிடவில்லை. 

ருத்ரன் தான் அந்த நேரம் அவன் கவனம் ஷ்ரத்தாவிடம் செல்ல கவனிக்க தவறினான்.

"இப்ப சொல்லு ருத்ரா... என் கேஸ் ஃபைல் சுத்தமா இருக்குறப்ப... என்னை சட்டத்துக்கு முன்னாடி என்ன பண்ணுவ?" ருத்ரன் பதில் சொல்லாமல் நின்றான்.

அப்போது யதுநந்தன் மெதுவாக முன்னால் வந்தான்.

"இங்க பாருங்க... நீங்க சரியான நேரத்துல இங்க வந்திருக்கலாம். ஆனா ஷ்ரத்தாவுக்கு நல்லது செய்யணும்னு நினைச்சு நின்ன மனிதர்கள்ல ருத்ரனும் ஒருத்தன். அவனை இப்படி  பேசறது சரியில்லை." என்றான். 

சத்ரியன் சில நொடிகள் யதுநந்தனை பார்த்தான்.

பிறகு அவனது முகத்தில் இருந்த கடுமை சற்றே தளர்ந்தது.

"தேங்க்ஸ்." என்றான் சத்ரியன். யதுநந்தன் புரியாமல் பார்த்தான்.

"சிங்கப்பூர்ல ஷ்ரத்தாவை காப்பாத்தினதுக்கு. ஆக்சுவலி...‌ என் பிளான்ல சிங்கப்பூர் ட்ரிப் எதுவுமே இல்லை. ஹரிணி செத்ததால ஷ்ரத்தா அங்க போக வேண்டிய சூழ்நிலை வந்தது. இல்லன்னா... ஷ்ரத்தாவுக்கு உதவ யாரையாவது நான் அங்கயும் அனுப்பியிருப்பேன்.

ஆனா நீ... அங்க என் உயிரையே காப்பாத்திட்ட. என் ஷ்ரத்தாவையும்.. என் மகனையும். காப்பாத்தின" என்றதற்கு யதுநந்தன் அமைதியாக நின்றான்.

"அதுக்காக..." சத்ரியனின் பார்வை மீண்டும் யதுநந்தனை சந்தித்தது.

"ஷ்ரத்தாவை போட்டி போட்டுக்கிட்டு நீ காதலிச்சதை... இப்ப என்னால ஆக்சப்ட் பண்ண முடியாது. அதுவும் உனக்கே தெரியும்."

யதுநந்தன் தலை குனிந்தான்.

"என் பிளான்படி... ஷ்ரத்தா இன்னும் ஆறு மாசம் ஜெயில்ல இருக்க வேண்டியது."

ருத்ரனும் யதுநந்தனும் அவனை பார்த்தனர்.

"அவள் தண்டனை முடிஞ்சு வெளிய வர்ற நேரத்துக்குள்ள...

இந்த கிட்னாபிங் கூட்டத்துக்கு நான் முடிவு கட்டியிருப்பேன். மொத்தமா... ஆனா... அவளை வெளியே எடுக்க நீ நல்லொழுக்க அடிப்படையில அவசரம் காட்டின. கார்த்திகாவிடம் பிரஷர் கொடுத்து ஷ்ரத்தாவை வெளியே கொண்டு வந்த.

யூ இடியட். அவளை ஜெயில்ல அனுப்பியதே பாதுகாப்புக்காகத் தான்டா.

உன்னை யாரு அந்த பாதுகாப்புக்கு முன்னாடியே அவளை வெளியே கொண்டு வரச் சொன்னது?" என்று கோபமாக கத்தவும்,

யதுநந்தன் தலை கவிழ்ந்தான். 

  ஷ்ரத்தா சிறையில் இருப்பதை காண சகிக்காமல் யதுந்நதன் தான் மேலிடத்திற்கு பிரஷர் தந்து மனுவையும் கார்த்திகாவையும் தொல்லை செய்தது. ஆனால் சத்ரியன் போட்ட திட்டத்தை அவனுக்கு தெரியாதே. 

"இப்ப... இவளை பாதுகாக்கணுமா? இல்ல... ஸ்டீபன் கேங்கை அழிக்கணுமா? என்ன பண்றதுன்னு என்னை அல்லாட வச்சது நீ தான்டா முட்டாள்." என்று கர்ஜித்து கத்தவும் யதுநந்தனின் முகத்தில் குற்ற உணர்வு தெளிவாக தெரிந்தது.

அவசரப்பட்டு தான் செய்த நல்ல காரியம்... இப்போது ஷ்ரத்தாவுக்கு எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அவனுக்குப் புரிந்தது.

சத்ரியன் ருத்ரனை பார்த்தான்.

"ஸ்டீபன் கேங்க்ல தொண்ணூறு சதவீதம்... முடிச்சிட்டேன். தனியா தகவல் திரட்டி, அழிச்சது ஒருபுறம் இருந்தாலும், உங்க புது கமிஷனரிடமும் உதவி நாடினேன். அவர் தான் ஏற்கனவே 126 குழந்தைகளை காப்பாத்திட்டு இப்ப அந்த கேங்கை அழிக்க நான் செய்த விஷயத்துக்கு ஆதரவு தந்தார். 

அதனால தான் சட்டபூர்வமா சில இடத்துக்கு நேக்கா நுழைய முடிந்தது. ஆனாலும் ஸ்டீபன் தப்பிச்சுட்டான். அமெரிக்காவுக்கு ஓடிட்டான். இனி யாரிடம் அங்க உதவி கேட்பான்?

யாருக்குத் தெரியும்?  அங்கிருக்க சிலரிடம் வளர்ந்து நம்பிக்கை பெற்று, திரும்பி வந்து ரிவெஞ்ச் எடுக்கலாம். பட்...  நௌ... எவரிதிங் இஸ் ஓகே அவன் மட்டும் தான் ரேஞ்சை இன்கிரிஸ் பண்ணுவானா? என்னோட ரேஞ்சும் இன்டர்நேஷனலுக்கு வளர்த்திருக்கேன்." என்றான்.

ருத்ரன் அமைதியாக நின்றான்.

சமீபகாலமாக தங்களது டிபார்ட்மெண்டில் பரபரப்பாக நடந்த குழந்தை கடத்தல் வழக்குகள்.. தனிப்படை அமைத்து மீட்கப்பட்ட குழந்தைகள்... பெண்கள்...

அந்த கேஸின் பின்னால் இருந்த பெயர் தெரியாத ஆதரவு...

எல்லாமே அவன் மனதில் ஒன்றோடொன்று இணைந்தது.

அது சத்ரியனா? மறைந்து கொண்டே ஒவ்வொரு ஆளாக போல்ஸ் உதவியுடன் இவன் களையெடுத்தானா?

ருந்ரன் ஆச்சரியம் தாளாமல் சத்ரியனை பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது... "அப்பா..." என்ற ராயனின் சின்ன குரல் கேட்டது.

சத்ரியன் மகனை திரும்பி பார்த்தான்.

ராயன் இத்தனையும் தந்தை கைகளில் ஒய்யாரமாய் இருந்து கேட்டதால் "ருத்ரா அங்கிளை திட்டாதிங்கப்பா" என்றான். அவனுக்கு காரணம் எதுவும் விளங்காவிட்டாலும் தந்தை ருத்ரனை திட்டுவதாக ம்டடுமே ஆதரவளித்தான்.

  அடுத்த நொடி தியா யதுநந்தனின் கையை பிடித்துக்கொண்டு, 

"அப்பா.. யதுவும் குட் பாய் தான் அப்பா" என்று ராயன் போலவே அப்பா என்று சொல்லிவிட்டு சத்ரியனின் காலை கட்டிக்கொண்டு பார்த்தாள் தியா.

அந்த இரண்டு குழந்தைகளின் குரலும்... அறையில் இருந்த பதற்றத்தை ஒரு நொடி உடைத்தது.

சத்ரியன் மெதுவாக கண்களை இறுக மூடினான். அவன் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்த நெருப்புக்கு மேல்... தியாவின் அந்த சின்ன வார்த்தை இன்னொரு வலியை சேர்த்தன.

"ஷ்ரத்தா..." அவளை நோக்கி திரும்பினான். "இவளை தூக்கு." என்று கத்தாத குறையாக கூற, ஷ்ரத்தா குழம்பி அவனை பார்த்தாள்.

"அவளை என்னை டச் பண்ண வேண்டாம்னு சொல்லு." அந்த வார்த்தையை சொல்லும் போது சத்ரியனின் தன்னிலையில் இல்லை.

ஷ்ரத்தாவை தவிர மற்றவர்கள் சங்கடமாக, அவன் ஏன் இப்படி பேசுகிறான் என்பதை புரிந்து கொண்டாள். அதற்காக தியாவை உடனே தூக்கவில்லை. 

  "அவ.. அவ உன்னோட பொண்ணு ரியன்." என்று கூற, ஷ்ரத்தா அறை வாங்கி கீழே சரிந்திருந்தாள். 

"அம்மா" என்று தியா ஓட, ராயனும் சத்ரியனிடமிருந்து நழுவி அன்னையை நோக்கி நகர்ந்தான். தியா தன்னிலிருந்து நகர்ந்ததும் தான் சத்ரியன் நிம்மதியுற்றான். ஒரு பார்வை மற்றவரை ஏறிட, அங்கிருந்த பாடிகார்ட்ஸ் எல்லோரும் இறந்தவர்களை தூக்கிக் கொண்டு எலும்பு கூட எஞ்சாத வகையில் அமிலத்தில் போடுவதற்கான வேலையில் இருந்தனர். தீபா நந்திதா லட்சுமி கூட இவர்கள் பேச்சை கேட்டு வீட்டை சுத்தம் செய்ய மற்றவர்களை ஏவினார்கள். 

  ஷ்ரத்தா கீழே விழவும் அம்மூவரும் வந்தார்கள். 

ருத்ரன் யதுநந்தனும் கூட 'இவன் என்ன மிருகமா? இத்தனை நாள்இவனுக்காக துடித்து தவித்தவளை வந்தவுடன் கை நீட்டி அறைந்துவிட்டானே என்று ஷ்ரத்தாவை நோக்கி சென்றனர்.‌

- தொடரும். 

-பிரவீணா தங்கராஜ்.

யாரெல்லாம் ருத்ரன் யது திட்டு வாங்கறப்ப ஈஈஈஈனு சிரிச்சிட்டு படிச்சிங்க‌😆😆😆


 
Posted : August 20, 2026 6:53 am
(@narmadha)
Posts: 6
Active Member
 

Naaan😁😁😁🥳🥳🙌🏻🙌🏻


 
Posted : August 20, 2026 7:04 am
(@subhakumar85)
Posts: 112
Estimable Member
 

But evan yen accept panna maatraan.. antha ponnu yenna pannum evan senja thappuku


 
Posted : August 20, 2026 7:42 am
(@jacky)
Posts: 2
New Member
 

mass sathriyan


 
Posted : August 20, 2026 7:58 am
(@kalidevi)
Posts: 140
Estimable Member
 

S Nanu nalla thitu vangatum evlo torture pani irukan avana mari yarum seyal pada mudilaye police kaila vachi ivlo periya vishayam pani mudichi irukan but stephen thapuchitane yathu pana velaiyala. Aana yen diya va appa solla vena solran chathriyan ithula shradha va vera adichitan


 
Posted : August 20, 2026 8:22 am
(@crvs2797)
Posts: 188
Estimable Member
 

தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 41)

ச்சே..! இந்த சத்ரியன் ரொம்ப மோசம். இவன் ஹரிணியை தொட்டுட்டு, இப்ப தியா மேல வெறுப்பை காட்டுறது எந்தவிதத்துல நியாயம்ன்னுத் தெரியலை. அதுசரி, அவனை பொருத்தவரையில நியாயமாவது புண்ணாக்காவது ?

அட ராமா..! இந்த ருத்ரன் சத்ரியனை வெளியே வர வைக்கத்தான் லவ் டார்ச்சர் கொடுத்தானா ? அப்படின்னா, உண்மையாவே காதலிக்கலையா ?
அந்தமட்டுக்கு ஷ்ரத்தா தப்பிச்சாள்
போங்க.

அதாவது அந்த பெண் குழந்தையை வெறுத்து, தான் ஷ்ரத்தா மட்டும் ராயனுக்கு மட்டும் தான் உரிமையுடையுவன்னு நிருபிக்கிறானாம் சத்ரியன்...
இது நல்ல கூத்து. ஆடு உறவாயிடுச்சு, குட்டியோட மட்டும் பகையாம்.

நான், நான்,.. ! அதுவும் ஷ்ரத்தாவுக்கு நல்லது பண்றதா நினைச்சு, பாதுகாப்பான இடமா இருந்த ஜெயில்லயிருந்து வெளியே கொண்டு வந்து, ரெண்டு பேரும் போட்டி போட்டுக்கிட்டு ஷ்ரத்தாவுக்கு உதவுற மாதிரி பில்டப் கொடுத்ததோட அதை இப்ப சத்ரியன் வாயால திட்டக் கேட்டு செம்ம மொக்கை வாங்குனாங்க பார்த்திங்களா.. அது தான் ஹைலைட்டே.. போங்கடா டுபுக்ஸ்.

😐😐😐
CRVS (or) CRVS 2797


 
Posted : August 20, 2026 8:32 am
Padma reacted
(@kothaihari)
Posts: 125
Estimable Member
 

சூப்பர். .. ஷ்ரத்தாவுக்கு புரியல அவனோட வலி தங்கையாக பார்க்க வேண்டியவளை தவறாக தொட்டதே அவனுக்கு வலி இன்னும் இந்த குழந்தை பார்த்தால் இன்னும் வலி கூடும் ஆனாலும் குழந்தை பாவம்


 
Posted : August 20, 2026 8:45 am
Padma reacted
(@guna-sundari)
Posts: 138
Estimable Member
 

Wow kingpin always king. Chatriyian well planned and executed well. He protect sharadha anytime under his survivelance. Excellent plan for his soul. Also he protect 126 kids.ruthran and yadhu deserves this scolding from chatriyian. Ruthran too bad. Ur love is not true. But chatriyian y don't accept Diya. Something fishy? Very intresting sis

 


 
Posted : August 20, 2026 9:23 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 127
Estimable Member
 

Nanu nanu sis .Chathriyan plan panni than ellam perfect ah panni irukan but ivanga rendu per ah la sila disturbance vandhathu na la than ipadi thituran athu varaikkum santhosha pada num actually avan pondati pinnadi ivan love nu suthunathu ku ivanga la yum poda ah ma vittan yae nu .

Diya ah pakkum pothu avanuku harini ku panna kutram niyabagam varutho ennavo athu than ipadi react panran polayae 


 
Posted : August 20, 2026 5:22 pm
(@ambikahashini)
Posts: 47
Eminent Member
 

Super sis 


 
Posted : August 21, 2026 5:39 am

Scroll to Top