மதுர ஜில்லா... மச்சானே-70 (முடிவுற்றது)
அத்தியாயம்-70
வீட்டுக்குள் மதுராவும் இனியனும் அணைத்து கொண்டு காதலை வளர்க்க, கீழே இரண்டு குடும்பங்களுக்கும் கொஞ்ச நேரத்தில் வந்தார்கள்.
"மதுராவுக்கு இப்ப எப்படி இருக்கு?"
"வர்ற வழில டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனியா இனாயா?"
"ஏன் முகம் வேர்த்துடுச்சு. சோர்வா வேற இருந்தா" என்று ஒருத்தர் மாற்றி ஒருத்தர் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
மதுராவுக்கே பதில் சொல்ல முடியாமல் சங்கடமாக அமர்ந்திருந்தாள்.
இனியனும் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லிக் கொண்டே,
"அதெல்லாம் சரியாகிடுச்சு சித்தி... மதுரா இப்ப ஓகே தான்." என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்தான்.
"அவ.. அவ" அவன் அங்கேயே நிறுத்திக் கொண்டு, மதுராவை நோக்கி, 'நீயே சொல்லு.' என்று கண்களால் சைகை செய்தான்.
மதுரா உடனே மறுத்து தலையசைத்தாள் 'நீங்களே சொல்லுங்க.' அதைப் பார்த்துக் கொண்டிருந்த குடும்பமோ மற்றோரு இனிய விஷயத்தை வெளிப்படுத்தினார்கள்.
அந்த நேரம் ராஜாராம் கையில் இருந்த இனிப்புப் பெட்டியைத் திறந்தார்.
"இனியா... இந்தா... ஸ்வீட் எடுத்துக்கோ. மதுராவுக்கும் கொடு." என்றார்
இனியன் அருகில் நின்றிருந்தான். அவன் கையை நீட்டி ஒரு ஸ்வீட்டை எடுக்கப் போனவன், அப்படியே தயங்கி நின்றான். அவன் முகத்தில் ஒரு கணம் பல எண்ணங்கள் ஓடின.
இவ்வளவு சீக்கிரமா? மதுரா கன்சீவா இருந்ததை இவங்களுக்கு எப்படி தெரியும். அம்மாவிடம் ஏற்கனவே சொல்லிட்டாளா? இல்லை.. அத்தையிடம் சொல்லி இவங்களுக்குத் தெரிஞ்சுடுச்சா? ஆனா காவ்யா அப்பா ஏன் ஸ்வீட் தர்றார்' என்று அவனுக்குள் குழப்பம்.
மதுராவோ 'தூரிகாவை பெண் பார்க்க வருவதாக சொன்னார்களே அது நல்லபடியாக முடிந்திருக்குமோ?' என்று எண்ணினாள்.
இனிப்பையே பார்த்த இனியனுக்கும் ஒரு நொடி புரியவில்லை.
காவ்யாவும் அகிலனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என்னடா இனியா ஸ்வீட் எடு." என்று அருளாளன் சொல்ல, அகிலன் இன்னும் தயங்கினான்.
அப்போது காவ்யா மெதுவாக, "அகி... நீங்களே சொல்லி கொடுங்க." என்றாள்.
அவளது குரலில் இருந்த வெட்கத்தைப் பார்த்த ராஜாராம் உடனே சிரித்தார்.
"அடடா... எம்பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் வெட்கம் எல்லாம் வருதே!" என்று சொல்லிவிட்டு,
"நானே கொடுக்கிறேன்." என்று இனிப்பை நீட்டி, கூடுதலாக அகிலனின் தோளில் கை வைத்தபடி, "இனியா... நான் தாத்தா ஆகிட்டேன் பா.." என்றார். அந்த ஒரு வார்த்தையில் வீடு முழுவதும் அமைதியானது.
"அகிலனும் காவ்யாவும் அப்பா அம்மா ஆகப் போறாங்க!" என்று இனிப்பை தரவும்,
அகிலன் தலை குனிந்தபடி நின்றான்.
மதுராவின் முந்தைய கர்ப்பம். அந்த மகிழ்ச்சி எப்படி திடீரென்று வலியாக மாறியது.
அதற்குப் பிறகு வீட்டில் நடந்த ஒவ்வொரு நிகழ்வும். எல்லாமே அவனுக்கு நினைவுக்கு வந்தது.இனியன் என்ன நினைப்பானோ? அவனை விட முன்னாடியே எனக்கு குழந்தை வரப்போகுதுனு இனியன் மனசுக்குள்ள என்மேல திரும்ப ஏதாவது கசப்பு இருக்குமோ?' என்று ஒரு நொடி பயந்தான்.
ஆனால் கடவுள் தந்த இந்த மகிழ்ச்சியை மறுக்கவும் அவனுக்கு மனம் வரவில்லை.
அதியமானும் மீனாட்சியும் கூட ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அவர்களுடைய முகத்திலும் அதே தயக்கம். அப்போது இனியன் சிரித்தபடி மதுராவை நோக்கினான்.
"மது..." என்ற அழைக்க, அவள் அவனைப் பார்த்தாள்.
"நீயும் வீட்டுல செய்த ஸ்வீட்டை கொண்டு வா." என்றான் இனியன். அவளுக்குப் புரிந்ததும் முகம் சிவந்தது.
அவள் மெதுவாக எழுந்து, ஹாலில் இருந்த குளிர்சாதனப் பெட்டியிலிருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தாள்.
அதைப் பார்த்த இனியன் தயக்கத்தை உடைத்தவனாக, "அகிலா" என்றவன் குரலில் இருந்த சந்தோஷம் அகிலனை நிமிர்ந்து பார்க்க வைத்தது "காவ்யா... இரண்டு பேருக்கும் ஹார்ட்டி காங்கிராஜுலேஷன்ஸ்." என்று கூறியவன், "அப்படியே எனக்கும் மதுராவுக்கும் சேம் டூ யூ சொல்லிடுங்க." என்றான் ஆனந்தமாய்.
அகிலன் குழப்பமாக இனியனை பார்த்தான்.
இனியன் அவனை அழைத்துக் கொண்டு கட்டிலருகே வைத்திருந்த அந்த டிரேவை எல்லோருக்கும் காட்டினான்.
நெல் தானியங்களுக்குள் பச்சைப் பசேல் என்று முளைத்திருந்த நாற்றுகள். அதன் நடுவே இரண்டு பறவைகள். அவற்றுக்கிடையில் சிறிய குட்டிப் பறவை. அதைப் பார்த்ததும் அகிலனின் கண்கள் விரிந்தன.
காவ்யாவோ 'சபாஷ்' என்று ஆச்சரியப்பட்டாள்.
இனியன் புன்னகைத்து. "நாங்களும் அப்பா அம்மாவாகப் போறோம்." என்றான்.
ஒரு நொடி யாராலும் பேச முடியவில்லை. மதுரா மருத்துவமனையில் இருந்து வீம்புடன் முக வாட்டத்துடன் இருந்ததை எல்லாம் யாரும் மறக்கவில்லை. தற்போது அதே மதுரா மீண்டும் கர்ப்பம் என்றதும் மகிழ்ந்தார்கள்.
விஷயம் பகிர்ந்த அடுத்த நொடியே காவ்யா மதுராவை கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
"ஏய் கள்ளி!" என்று கொஞ்சிட மதுரா சிரித்தாள். "என்கிட்ட இனியன் மச்சானை லவ் பண்றேன்னு மட்டும் சொல்லப் போறேன்னு சொன்னியே! இப்படி ஒரு விஷயத்தை மறைச்சுட்டியே!" என்றதும் மதுரா வெட்கத்துடன் முகத்தைத் தாழ்த்தினாள்.
அதற்குள் தூரிகாவும் ஓடிவந்து, "காவ்யா அண்ணி! உங்ககிட்டாவது இனியன் அண்ணாவை லவ் பண்றேன்னு சொல்லியிருக்கா இந்த மதுரா அண்ணி. என்கிட்ட அதைக்கூட சொல்லலையே!" என்று போலியான வருத்தத்துடன் முகத்தைச் சுளித்தாள்.
"போடி, இதெல்லாம் உன்கிட்ட சொல்லணுமா? உனக்கு கல்யாணம் ஆனப்புறம் இதெல்லாம் பேசலாம்." மதுரா காவ்யாவைப் பார்த்து,
"இப்ப காவ்யாகிட்ட தான் சொன்னேன்." என்று கூறிவிட்டு,
"ஆமா காவ்யா... நீங்க மட்டும் என்ன? நீங்க கர்ப்பமா இருக்கறதையும் என்கிட்ட சொல்லலையே?" என்று திருப்பிக் கேட்டாள் மதுரவாணி. காவ்யா கைகளை விரித்தாள். "அட... எனக்கே தெரியாதுப்பா!" என்றதும் எல்லோரும் சிரித்தனர்.
"அங்க கோவில்ல கால் வலிக்க நின்னுட்டு இருந்தேன். திடீர்னு ஏதோ வாசனை... அப்படியே குடலைப் புரட்டுச்சு. ஓடிப்போய் வாந்தி எடுத்துட்டேன்.
அப்புறம் என்ன? என்னை ஒரு இடத்துல உட்கார வச்சுட்டாங்க. நம்ம குடும்பமே பயந்துட்டாங்க. அந்த நேரத்துல தான் தூரிகாவைப் பொண்ணு பார்க்க வந்தவர் டாக்டர்னு தெரிஞ்சது.
அவர் என் கையைப் பிடிச்சு பார்த்துட்டு... 'நீங்க கர்ப்பமா இருக்கீங்க'ன்னு சொல்லிட்டாரு." என்று நடந்ததை விவரித்தாள் காவ்யா.
"இதுல தூரிகாவைப் பொண்ணு பார்க்க வந்தவங்க இருந்தாங்க இல்லையா? அவர்களோட பேசி, தூரிகாவுக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கான்னு தெரிஞ்சிக்கணும். அந்த சந்தோஷத்துல நேரமே போயிடுச்சு." அவள் சிரித்தாள்.
"அப்ப பெரிய மாமாதான் ஸ்வீட் வாங்கிட்டு வரச் சொன்னார். இங்க வந்தா இரண்டு ஸ்வீட் பாக்ஸ் வாங்கியிருக்கலாம் போல!" என்று மதுராவைப் பார்த்து கண் சிமிட்டினாள்.
அருளாளன் இரு பெண்களையும் பார்த்தபடி நெகிழ்ந்தார். "நீ கர்ப்பமா இருக்கேன்னு சொல்லும்போது கூட எனக்கு பொறாமை வரலம்மா. பொறாமை போட்டி இருந்தது எல்லாம் முன்னம்மா. அதெல்லாம் எப்ப முதல் வாரிசு போச்சோ அப்பவே திருந்திக்கிட்டேன்." என்றவரது குரல் சற்று தழுதழுத்தது.
"மனசுல இருந்த அழுக்கை அகற்றியதாலயோ என்னவோ, அந்த ஆண்டவன் என் குடும்பத்துக்கும் வாரிசை நிறுத்திட்டான்." என்று நெஞ்சுருகினார்.
அதியமான் உடனே அவருடைய அண்ணன் தோளைத் தட்டினார்.
"அண்ணா... அப்படி சொல்லாதீங்க. நம்ம குடும்பத்துக்கு வாரிசு இல்லாம போயிடும்னு யார் சொன்னது? ஆண்டவன் நேரம் பார்த்து கொடுக்கிறான். இப்ப இரண்டு வீட்லயும் சந்தோஷம் வந்திருக்கு. அதுவே பெரிய விஷயம்." என்றார்.
அருளாளன் கண்களைத் துடைத்துக் கொண்டு தம்பி பேச்சுக்கு தலையசைத்தார்.
அந்த நேரம் பேச்சு தூரிகாவின் பக்கம் திரும்பியது.
"சரி... தூரிகாவுக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கா?" என்று மதுரா கேட்டாள்.
தூரிகா தலையைக் குனிந்தாள். "வீட்ல எல்லாருக்கும் இஷ்டம்னா... எனக்கும் இஷ்டம்."
அவள் சொன்னதும் பெண்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்தனர்.
"அடடா... கல்யாணத்துக்கும் நாள் குறிக்கணும்!" என்று காவ்யா கிண்டலடித்தாள்.
அந்த நேரத்தில் இளையமதி வேகமாக வந்து மதுராவை அணைத்துக் கொண்டார். அவர்கள் வருவதற்கு தாமதமாகிவிட்டது. தூரிகா மூலமாக தற்போது தான் நிலானிக்கு விஷயத்தை பகிர்ந்தனர். ஏற்கனவே பாதி வழியில் வந்தவர்கள் மகள் உண்டானதும் மகிழ்ச்சியுடன் மகளை தேடி வந்து தழுலிக்கொண்டார்கள்.
"அட எம்பொண்ணுக்கு.. குழந்தை வரப்போகுதா?"
அவரது கண்களில் கண்ணீர். என்னங்க... கடவுள் கண்ணைத் திறந்துட்டாரு."
கல்யாணசுந்தரமும் அருகில் வந்து மதுராவின் தலையைத் தடவினார்.
"நல்லபடியா எல்லாம் நடக்கணும்மா." அந்த ஆசீர்வாதத்தைக் கேட்ட மதுராவின் கண்களும் கலங்கின.
நிலானி மெதுவாக மதுராவின் அருகில் வந்து அமர்ந்தாள்.
"அக்கா... நம்ம வீட்டுக்கு குட்டி பாப்பா வரப்போகுதா?" என்றவள் முகத்தில் குழந்தைத்தனமான சந்தோஷம்.
பிறகு மதுரா கொண்டு வந்திருந்த நெல் முளைகளைப் பார்த்தாள்.
"அக்கா... இந்த நெல்லை எல்லாம் எப்ப முளைக்க விட்ட? அழகா வளர்ந்திருக்கே! கர்ப்பத்தை அழகா மாமாவுக்கு சொல்ல யோசிச்சியா? இதுக்கெல்லாம் நல்லா மூளை வேலை செய்யும்" என்றாள் நிலானி.
மதுரா "சில நாளாச்சு.. பின்ன கல்யாண நாள்.. கர்ப்பமா வேற இருக்கேன். என்னனு சொல்லறதாம். என் புத்திக்கு இப்படி தான் செய்ய தோணுச்சு" என்றாள்.
"அட இந்த காலத்துல ரீல்ஸ் எடுத்து போட்டு இந்த விஷயத்தை ஊருக்கே சொல்லி அசிங்கப்படுத்திக்கிட்டு சுத்தறாங்க. நீ எவ்ளோ அழகா யோசிச்சிருக்க. ரியலி ப்யூட்டிஃபுல் ஐடியா அக்கா.
அதுவும் அந்த குட்டிப் பறவை ரொம்ப அழகா இருக்கு." என்று அவள் விரலால் காட்டினாள். அந்தக் கூட்டத்திலிருந்து சற்று விலகி நின்றிருந்த எழிலரசன் மட்டும் முகத்தைச் சுளித்துக் கொண்டிருந்தான்.
"என்னடா பெருமூச்சு விடற?" என்று இனியன் கேட்டான்.
"ரெண்டு அண்ணனுக்கும் குழந்தை பிறக்குறப்பவும் நான் ஊர்ல இருக்க மாட்டேன். நான் இங்கயே மேற்படிப்பு படிக்கறேனே. அமெரிக்காவுல போய் படிக்கச் சொல்வாதிங்க!" என்று புலம்பினான்.
இனியன் அவன் தலையில் தட்டினான். "அதனால என்ன? அமெரிக்காவுல படிச்சு முடிச்சிட்டு வா. குழந்தை எல்லாம் பிறக்கறப்ப நீ என்ன வேலை பார்க்க போற. உன் எதிர்காலத்துக்கு எந்த படிப்பு எங்க போய் படிச்சா உசத்தினு பாரு. படிக்க வாய்ப்பு இருக்கறப்ப படிடா.
நாளைப்பின்ன என்னை மட்டும் படிக்க அனுப்பினாங்க. உன்னை அனுப்பலைனு யாருக்கும் தோணக்கூடாது" என்று நிதர்சனத்தையும் தெரிவித்தான்.
"அப்படி படிச்சா அப்படியே என் பேச்சை நீங்க எல்லாம் கேட்பிங்களாக்கும்" என்றான் எழிலரசன்.
"போய் படி. படிச்சு முடிச்சு, நீ எந்தப் பெண்ணைக் கட்டிக்கணும்னு கேட்டாலும், உனக்காக... நான் தான் முதல்ல பேசுவேன்." என்றதும் எழிலரசன் கண்களை விரித்தான். இனியனோ உனக்கு யார் மீது காதல் பிறந்தாலும் உனக்கு நல்ல நண்பனாக அதை வெற்றியடைய வைப்பேன் என்று இமை மூடி வாக்கு தந்தான் இனியன்.
"உண்மையாவா அண்ணா?" என்றான் எழிலரசன்.
"ஆமா. ஆனா இப்ப படிப்பு மட்டுமே முக்கியம்" என்றான் இனியன்.
"சரி." என்று அவன் தலையசைத்தாலும், அவன் பார்வை தூரத்தில் நின்றிருந்த நிலானியைத் தேடிக் கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் அகிலன் மட்டும் அமைதியாக காவ்யாவைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஓரளவு இனியன் பொறாமை போட்டியின்றி தன்னை கடந்து வந்து, அவனும் உறவுமுறை உன்னதத்துடன் வாழ பழகியது அகிலனுக்கு பிடித்தது.
என்ன இத்தனை கூட்டத்தில் காவ்யா கருவுற்றிருக்க, அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும், கொஞ்ச வேண்டுமென்ற அவசரம் அவன் முகத்திலேயே தெரிந்தது.
காவ்யாவோ ஒருவரிடமிருந்து இன்னொருவரிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
அடுத்து தூரிகாவை திருவிழாவில் பெண் பார்த்து சென்ற டாக்டர் வசந்த் முறையாக வீடு தேடி வந்து குடும்பமாக பேசுவதாக கூறினார்கள். அதனால் தூரிகா கல்யாணம் அடுத்து நடைப்பெறும்.
அதே போல எழிலரசன் இனியனை போலவே மேற்படிப்புக்கு வெளிநாடு செல்வதாக பேச்சு போனது.
நிலானியோ மதுரையில் கல்லூரி முதலாமாண்டு என்பதால், இளங்கலை முடியும் வரை அதே ஊர் தான்.
இனியன் மதுரா இருவரும், கூட்டத்தை கண்டு அவஸ்தையுடன் தனிமைக்கு தாவ நினைத்தனர். தனக்கே இந்த நிலை என்றால் கோவிலிருந்து அகிலன் காவ்யாவிடம் தனித்து பேசாமல் தவித்திருப்பானே என்று இனியன் எண்ணி, "ஏய் அகிலா... இவங்க பேசிட்டே தான் இருப்பாங்க. அண்ணன் தம்பி தங்கச்சினு சோர்ந்தாச்சு. நீ நைஸா பை சொல்லிட்டு, வீட்டுக்கு போ. இல்லை.. பிரைவேஸி இப்ப இருக்காது." என்று கிசுகிசுத்தான்.
அகிலனோ இனியன் சொல்வதும் புரிய, அன்னை மீனாட்சியிடம் "அம்மா.. நானும் காவ்யாவும் வீட்டுக்கு போகட்டுமா?" என்று உத்தரவு கேட்டான்.
மீனாட்சியோ "போப்பா.. பத்திரமா காவ்யாவை கூட்டிட்டு போ. நானும் அப்பாவும், தூரிகா கல்யாண விஷயமா உங்க பெரியப்பா, பெரிம்மா, அத்தை, மாமா, கூட கலந்து பேசிட்டு வர்றோம். தூரிகாவோட" என்றார்கள்.
அதியமானும் கிளம்ப கூற, காவ்யா அகிலன் இருவரும் வீட்டில் உள்ளவர்களிடம் கிளம்புவதாக கூறிவிட்டு 'விடு ஜூட்' என்பது போல, அகிலன் காவ்யா புல்லட்டில் பறக்க வாசலுக்கு வந்தார்கள்.
இதில் ராஜாராம் வீடும் இங்கே பக்கத்தில் நிலத்தை வாங்கி கட்டுவதால் இங்கே தான் இருப்பார்.
மதுரா காவ்யா இருவருமே யார் குழந்தை முன்ன பிறக்க போகின்றது என்ற போட்டியின்றி, எந்த குழந்தை பிறந்தாலும் நல்லபடியா பிறந்தா போதுமென்ற கொள்கையில் உறுதியாக இருந்தனர்.
இனியனோ அகிலனிடம் 'ஆல்திபெஸ்ட்' என்றது போல 'தம்ஸ் அப்' செய்தான்.
காவ்யாவோ "வாழ்த்துகள் இனியா-மதுரா. மதுரா.. நல்லா சாப்பிடணும்." என்றாள்.
இருவருமே இனி நன்றாக சாப்பிட வேண்டுமென மாறி மாறி சொல்லிக் கொண்டார்கள்.
இம்முறை அகிலனோ "மதுரா.. ஜாக்கிரதைம்மா" என்று கூறினான்.
"அகிலன் மச்சான்.. காவ்யாவை இந்த நிலையில வச்சிட்டு வண்டியை வேகமா ஓட்டாதிங்க. வீட்டுக்கு போகணும்னு அவசரம் இருக்கும். ஆனா மெதுவா." என்றாள் மதுரவாணி.
அகிலனும் "சரி மதுரா" என்றான்.
வண்டியில் செல்லும் பொழுது "காவ்யா.. நான் எவ்ளோ ஹாப்பியா இருக்கேன் தெரியுமா?" என்றான் அகிலன்.
"தெரியுதா தெரியுது.. அத்த மக அகிலன் மச்சான்னு கூப்பிடவும் உன் முகத்துல ஒரு பல்பு பிரகாசமா எறிந்ததை பார்த்தேன்." என்றாள் கேலியாக.
"ஓய்.. கேலி பண்ணறியே... பின்ன அது சந்தோஷமில்லையா? புருஷன் பொண்டாட்டிக்கு ஒரு குழந்தை வருவதும், அதனால வீட்ல இருக்கற பெரியவங்க கொண்டாடுறது சந்தோஷமான விஷயம் காவ்யா.
ஆனா உடைந்து போன கண்ணாடி இனி ஒட்டினாலும் நல்லாயிருக்காதுனு கவலைப்பட்டுக்கிட்டு இருக்கறப்ப, ஓட்ட வச்சதே தெரிந்தாலும் அழகா அதுக்கு அலங்கரிச்சு, ஒன்னுக்கு பத்து கண்ணாடியா மாத்தி உறவை பலப்படுத்தறது இருக்கே, அது சந்தோஷமான விஷயம்.
மதுரா இனியன் சந்தோஷமா இருப்பதை பார்த்து நாம சந்தோஷமா சுவாசிக்கறது எல்லாம் வேற லெவல் பீல். உறவுமுறையோட கூட்டு குடும்பமா அனுசரித்து சண்டை போட்டாலும், ஒற்றுமையா வாழறவங்களிடம் கேட்டுப்பாரு.. அந்த பீல் அனுபவிச்சா தான் புரியும்." என்றான்.
"போரடிக்காத மேன். வீடே வந்துடுச்சு." என்றாள்.
காவ்யா கதவை திறந்து உள்ளே நுழைய, அகிலன் காவ்யாவை தூக்கி தட்டாமாலை சுற்றினான்.
"எவ்ளோ சந்தோஷம் தெரியுமா? அச்சோ... நீ கர்ப்பமா இருக்கனு சொன்னதுலயிருந்து உன்னை தூக்கி சுத்த ஆசைப்பட்டேன்." என்று சுற்றி முடித்து இறக்கினான்.
''அகி.. நிறுத்து நிறுத்து. தலை சுத்துது" என்றதும் சோபாவில் அமர வைத்தான்.
அகிலனோ காவ்யா மடியில் முகம் வைத்து படுத்தவன், சட்டென வயிற்று பக்கமாக திரும்பி, "நான் துவண்டு போனப்ப எங்கிருந்தோ வந்த, என்னை பிடிச்சிருக்குன்னு சொன்ன. கண்ணை மூடி தறக்கறதுக்குள்ள கல்யாணம் ஆச்சு. இது நமக்கு செட்டாகுமானு யோசிக்கும் முன்ன மனசுல வலியை துரத்திட்டு, சந்தோஷத்தை தந்துட்ட. நான் லவ் பெயிலியர் என்றாலும் கொடுத்து வச்சவன் தான். மனைவியை காதலிக்க கத்துக்கிட்டேன். இப்ப குட்டி பையனா பொண்ணா? எதுனாலும் அப்பாவுக்கு உன் வருகை தான் இம்பார்டன்." என்று வயிற்றில் முத்தமிட, அவனது மீசையோ காவ்யா வயிற்றை குத்தியது.
"டேய்.. அகி.. நான் பேசணும். ஆனா நீ பேசற. அவுச்..மீசை குத்தி கூசுது அகி. இப்ப பேசினா குழந்தைக்கு கேட்காது. முதல்ல குழந்தையா கூட இன்னும் முழுமையா இருக்காது. எனக்கு எத்தனை நாள் டேட் தள்ளி போயிருக்குனு கூட தெரியாது.
சோ.. நீ இப்ப பேசறது வேஸ்ட். பேபி போர் மந்த் முடியவும் பேசு.. அப்ப பேபி கேட்கும்" என்றாள்.
"என் குழந்தை இப்பயிருந்தே என் குரலை கேட்டு வளரும்." என்று காவ்யாவின் வயிற்றில் முத்தமும் கூச்சமும் தந்தவனாக குழந்தையிடம் இப்போழுதே பேசிக் கொண்டிருந்தான்.
எப்படியும் 'நிறுத்துங்கடா உங்க அக்கப்போரை' என்று கூறினாலும் இனியன் அகிலன் இருவரும் தங்கள் துணையை தாங்குவதை நிறுத்த போவதில்லை.
*வாழ்க்கையில் யார் யாருக்கென்று மனிதன் முடிவு செய்வதில்லை... ஆண்டவன் வகுத்த கணக்கில், சேர வேண்டியவர்கள் எத்தனை திருப்பங்கள் வந்தாலும் ஒருநாள் சேர்ந்தே தீர்வார்கள்.*
'இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே இறைவன் அன்றே....'
-சுபம்.-
-பிரவீணா தங்கராஜ்.
கதைகள் பிடிச்சிருக்கா? உங்கள் கருத்து மழை வரவேற்கப்படுகின்றன.
விமர்சனங்கள் வந்தாலும் வரவேற்கப்படுகின்றன. சைட்ல தினமும் வாசித்து சிலர் கமெண்ட்ஸ் பண்ணுவிங்க அவங்களுக்கு எல்லாம் மிக்க நன்றி. உங்க கமெண்ட்ஸ் படிக்கவே அடிக்கடி வருவேன். உங்க ஆதரவு எப்பவும் வேண்டும். வணக்கமும் அன்பையும் உரித்தாக்குகின்றேன்.
லீடர் முடியவும் மௌஹபத் நிக்காஹ் வரும். அது மதம் சார்ந்து எழுதுவதால் ஏதாவது மிஸ்டேக் பண்ணக் கூடாதுனு யோசிக்கவே நேரம் போகுது. ஆனா முடிப்பேன்.
தளத்தில் சின்ன குறுநாவல் 14 முதல் 30 அத்தியாயம் வரை கதைகள் இருக்கு. படிக்காதவங்க படிங்க. Facebook la ஞைம் கேட்டு வாசிக்க வந்தவர்கள் விமர்சனம் உண்டா? அடப்போங்கப்பா... நீங்க ஆள் பார்த்து விமர்சிப்பிங்க.
Very very happy ending sis. So happy while read. Both pairs were so happy. On the whole entire stroy was so good. Fantastic family based story. Action, comedy ,sentiment, romance, ego etc etc. All the emotions were narrated in a fantastic manner. Especially narration of chitra festival and goddess meenakshi blessings were awesome. Another diamond in ur crown sis. Keep rocking sis.
Super super double santhosam ellarkum itha ethirpakala ippadi rendu perum ore time la solluvanganu oruthar oruthar pagaiya iruntha kudumbam Innaiku onnu sernthu irukurathu romba alaga Iruku ithula oruthara kadalichi oruthara kalyanam panitu avanga vazhkai eppadi irukumo ninacha atha alaga mathi virumbura mari kamichi understanding oda irukurathu super .
Unga thought epovume different ah alaga tha Iruku athuvum family kathaigaluku thani alagu kodupinga ipovum athe mari tha . Congratulations sisy👏🏻👏🏻👏🏻👏🏻💐💐🎉
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 70 Final)
அட.. இந்த டுவீஸ்டை எதிர்பார்க்கலையே... காவ்யா அகிலன் கூட கன்சீவ்வா...?
குட், சந்தோஷமான விஷயம் தான்,
இதுல தூரிகாவிற்கு டாக்டர் மாப்பிள்ளை வேற. ம்.. கலக்குறாங்க. வந்தா ஒரேயடியா சந்தோஷத்தை வாரி, வாரி கொடுக்க வேண்டியது.. இல்லைன்னா அழுக்காச்சி ஆக்கிட வேண்டியது. எப்படியோ ஒரே நேரத்துல ஒன் பை டூன்னு மூணு சந்தோஷத்தை கொடுத்திட்டிங்க, அவங்களும் ஹேப்பி, நாங்களும் ஹேப்பி.
இந்த எழிலரசனுக்கு கண்ணு நிலானி மேல போனாலும், ஃபாரின் போயிட்டு வந்த பிறகும் இதே எண்ணத்துல இருந்தால் சரிதான். எல்லாரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்கிறது ரொம்ப, ரொம்ப சந்தோஷமான விஷயம் தான்.
எல்லாரும் ஒரே குடும்பமா, பெரிய குடும்பமா இருக்கிறது அதை விட பெரிய சந்தோஷம் தான்.
எழுத்தாளர் பிரவீணா தங்கராஜ் அவர்கள் ஒரு நல்ல, அழகான ஃபேமிலி கதையை கொடுத்து வழக்கம் போல அசத்திட்டாங்க.
வாழ்த்துக்கள் சிஸ்.
"கண்ணுமணியே பிரவீணா தங்கராஜ் அசத்திப்பூட்டிங்க..
சொக்க வைக்கும் கதையை கொடுத்து கலக்கிப்பூட்டிங்க..
எழுதுங்க, எழுதுங்க..
இன்னும் எழுதுங்க...
எழுதுங்க எழுதுங்க..
நிறைய எழுதுங்க....
எழுதி, எழுதி... மேலும் வளர்ந்து
சந்தோஷமா இருங்க..
எங்களையும் சந்தோஷப்படுத்துங்க.."
😀😀😀
CRVS (or) CRVS 2797
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 70 Final)
அட.. இந்த டுவீஸ்டை எதிர்பார்க்கலையே... காவ்யா அகிலன் கூட கன்சீவ்வா...?
குட், சந்தோஷமான விஷயம் தான்,
இதுல தூரிகாவிற்கு டாக்டர் மாப்பிள்ளை வேற. ம்.. கலக்குறாங்க. வந்தா ஒரேயடியா சந்தோஷத்தை வாரி, வாரி கொடுக்க வேண்டியது.. இல்லைன்னா அழுக்காச்சி ஆக்கிட வேண்டியது. எப்படியோ ஒரே நேரத்துல ஒன் பை டூன்னு மூணு சந்தோஷத்தை கொடுத்திட்டிங்க, அவங்களும் ஹேப்பி, நாங்களும் ஹேப்பி.
இந்த எழிலரசனுக்கு கண்ணு நிலானி மேல போனாலும், ஃபாரின் போயிட்டு வந்த பிறகும் இதே எண்ணத்துல இருந்தால் சரிதான். எல்லாரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்கிறது ரொம்ப, ரொம்ப சந்தோஷமான விஷயம் தான்.
எல்லாரும் ஒரே குடும்பமா, பெரிய குடும்பமா இருக்கிறது அதை விட பெரிய சந்தோஷம் தான்.
எழுத்தாளர் பிரவீணா தங்கராஜ் அவர்கள் ஒரு நல்ல, அழகான ஃபேமிலி கதையை கொடுத்து வழக்கம் போல அசத்திட்டாங்க.
வாழ்த்துக்கள் சிஸ்.
"கண்ணுமணியே பிரவீணா தங்கராஜ் அசத்திப்பூட்டிங்க..
சொக்க வைக்கும் கதையை கொடுத்து கலக்கிப்பூட்டிங்க..
எழுதுங்க, எழுதுங்க..
இன்னும் எழுதுங்க...
எழுதுங்க எழுதுங்க..
நிறைய எழுதுங்க....
எழுதி, எழுதி... மேலும் வளர்ந்து
சந்தோஷமா இருங்க..
எங்களையும் சந்தோஷப்படுத்துங்க.."
😀😀😀
CRVS (or) CRVS 2797
@subhakumar85 After company start panina puraku enaku nee venum nu ketpan. Ava yosipa. Suppose venam na naan wait pandren nu solirupan. But again company strat agi few days la happy ya iruku nu ketkum pothun mathura ok solva. Episode write panirunthe ninaivu iruku. 🫣😆
-
மதுர ஜில்லா... மச்சானே!-28
7 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-67
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-39
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-69
3 weeks ago
- 25 Forums
- 330 Topics
- 1,589 Posts
- 1 Online
- 420 Members
