Forum

தகிக்கும் நிலவொன்று...
 
Notifications
Clear all

தகிக்கும் நிலவொன்று-40

11 Posts
11 Users
4 Reactions
242 Views
(@praveena-thangaraj)
Posts: 265
Member Admin
Topic starter
 
[#318]

அத்தியாயம்-40

 
ருத்ரனோ இறந்தானா இல்லையா என்று ஷ்ரத்தாவை உலுக்கி விட்டு, சமீபகாலமாக இறந்து விட்டதாக அவளிடமே கூறியவன், மீண்டும் உயிரோடு வந்தவனை, முதல் முறையாக சத்ரியனை நேரில் கண்டதும், லேசாக அதிர்ந்தான்.‌
 
யதுநந்தனோ ஏற்கனவே சத்ரியனை தூரத்திலிருந்து பார்த்திருக்க, எச்சி விழுங்கி நின்றான்.‌
 
இருவரின் பின்னகர்வுக்கு காரணம் சத்ரியனின் ரௌத்திர அவதாரம் காரணமாக இருக்கலாம். 
 
அங்கிருந்த பாடிகார்ட்ஸிற்கு எல்லாம் தற்போது புதுபலம் கிடைத்து, உற்சாகம் வந்தது போல மகிழ்ச்சி பொங்க நின்றனர்.‌
 
சத்ரியனோ இதுவரை ரௌத்திரம் பொங்க வாசலிலிருந்து இங்கு வரை எதிர்பட்ட எதிராளியை துவசம் செய்து வந்தவன், தன்னவளை தீண்டியவனை வாள் வீசி கையை வெட்டி எறிந்தவன், தன்னவளை காணும் பொழுது, அந்தக் கண்களில் இருந்த கடுமை மட்டும் மொத்தமாய் மாறியது.
 
மற்றவர்கள் யாராக இருந்தாலும், அவன் பார்வையில் பயப்பட வேண்டிய காரணம் இருந்தது.
ஆனால் அவளை பார்த்தபோது மட்டும், அந்த பார்வைக்குள் பல வருடங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த காதல் வலி தெரிந்தது.
 
அவன் மெதுவாக அவளை நோக்கி ஒவ்வொரு அடியாக அடியெடுத்து நடந்தான்.
 
அவனை சுற்றி இருந்தவர்கள் யாரும் நகரவில்லை.
 
ஷ்ரத்தாவின் உதடுகள் மெதுவாக நடுங்கின. இது கனவா, கானல் நீரா என்ற குழப்பத்தில் இருந்தவளுக்கு
"ச..ச... சத்ரியா.." என்று உச்சரிக்க
அவன் மறைந்து போகாமல் நின்றான்.
 
ஷ்ர்த்தாவை தீண்டி ஒரு கையை இழந்தவனோ, அவளிடமிருந்து நான்கடி பின்னால் நகர்ந்திருக்க, ருத்ரன் யதுநந்தன் இருவரும் அனிச்சையாக ஷ்ரத்தாவை ஆளுக்கொரு கைப்பிடித்து அரணாக நின்றியிருந்தனர். சத்ரியன் அவர்கள் தீண்டிய கையை தலைசாய்த்து பார்வையிடவும், இருவருமே கையை நொடியில் விடுவித்தனர். 
ஷ்த்தாவை பார்த்து இமை மூடி தன்னருகே வரும்படி அழைத்திட, அவளோ நீண்டநாள் காத்திருந்த வலியை மறைத்து ஓடிவந்தாள். 
இதில் நடைப்பழக தெரியாத குழந்தை போல டீப்பாயின் மீது இடித்து தள்ளாடி கீழே விழ போனவளை தாங்கினான் சத்ரியன். 
 
அவன் தொட்டு ஏந்தியதும், ஷ்ரத்தா அவன் வதனத்தை தாங்கி கண்களால் பரபரப்பாய் கருவிழிகளால் உருட்டி பார்வையிட்டு, தன்னவனின் முழுஉருவத்தினை மனதில் நிரப்பினாள். சத்ரியன் முன் பேச்சும் வராது நின்றாள்‌ 
 
 நம் வில்லனுக்கோ வாய் வார்த்தை தவிர்த்து, அவள் இடையில் கையை பதித்து, எலும்புகள் உடையும் அளவிற்கு தூரத்தை தவிர்த்து, இறுக அணைத்து, இதழில் இதழ் கொய்ய துவங்கினான். 
 
இருவரது தவிப்பும் பிரிவும், முத்தங்களால் நிரப்ப துவங்கினான். அங்கே ருத்ரன் யதுந்நதன் இருவருமே ஆளுக்கொரு திசைக்கு முகத்தை திருப்பினார்கள். 
அதிலும் ருத்ரனோ பல்லை கடித்து கை முஷ்டியை முறுக்கி கட்டுப்படுத்திக் கொண்டான்.
 
ஷ்ரத்தா இத்தனை வருடங்களாக மனதுக்குள் புதைத்து வைத்திருந்த காத்திருப்புக்கும் எல்லா கேள்விகளுக்கும்,
அந்த முகமே பதிலாக நின்றது.
 
சத்ரியன் முத்தங்களை பேயை போல ருசித்தவன், மெதுவாக கையில் இருந்த மற்றொரு கத்தியை ஷூகாலாடி ஓடும் திசையை பார்த்து வீசினான்
எல்லாம் ஒரு கையை இழந்தவன் தான் உயிரை காப்பாற்ற ஓடியிருக்க, தன் நாயகியை தீண்டியவனை உயிரோடு விடுவானா அந்த வில்லன். 
'டங்!' என்ற அந்த சத்தம் முதுகில் கழுத்தை வெட்டி தரையில் விழுந்து சத்தமிட்டு எதிரொலித்தது.
 
ஷ்ரத்தாவை முத்தமிட்டு, இங்கு இவனையும் வெட்டி சாய்த்ததை கண்டு எஞ்சிய எதிராளிகள் எச்சி விழுங்க முடியாத அளவிற்கு பயந்தனர்.
 
தன்னவளை விடுவித்து, "ப்யூ மினிட்ஸ் டி. மொத்தமா முடிச்சிட்டு வந்துடறேன்." என்று கோட்டின் கையை மெதுவாக சரி செய்துகொண்டான்.
சத்ரியன் முகத்தில் எந்த பதற்றமும் இல்லை. அங்கே ரத்த ஆறு ஓடுவதை எல்லாம் அவன் கண்ணில் படவில்லை. எதுவுமே நடந்தது போலவும், நடக்காதது போலவும்
அமைதியாக இருந்தான். 
 
"டார்கெட் பூம்" என்று உச்சரித்து கையை வெடிப்பதா போல செய்ய, தூரத்தில் எதிராளியை குறிவைத்த தோட்டாக்கள் சப்தம் எழுப்பியது. ஆங்காங்கே இருந்த விரோதிகள் 'தடக்தடக்' என்று தானாக சரிந்து விழுந்தார்கள். 
 
அவனை பார்த்த தீபாவின் கண்கள் கலங்கின.
"வெல்கம் பேக் பாஸ்" என்றும், லட்சுமியோ "நைஸ் டூ சீ யூ பாஸ்" என்றும் உற்சாகமாய் கூற அவர்களை சத்ரியன் இதயமிருக்கும் பக்கம் கைவைத்து சிறிய தலையசைப்பை தருவித்தான். 
 
அது 'அன்பை ஏற்றுக் கெண்டேன்' என்றும் அல்லது 'ஷ்ரத்தாவை பாதுகாப்பாக பர்த்துக் கொண்டதற்கு நன்றி'யாகவும் கூறினான். 
 
பிறகு அவனது பார்வை மீண்டும் ஷ்ரத்தாவிடம் திரும்பியது. அவள் மட்டும் இன்னும் அசையாமல் நின்றாள். அவளை சுற்றி எதையும் அலசவில்லை. இனி எமனே வந்தாலும் எனக்கென்ன? என்ற ரீதியில் அங்கு சத்ரியனை தவிர யாருமில்லை என்ற ரீதியில் தான் அவனை விழியகற்றாமல் 
கண்களில் கண்ணீர் வழிய பார்வையிட்டாள். 
 
முகத்தில் நம்ப முடியாத அதிர்ச்சி. சிலவருடங்களாக இறந்துவிட்டானா, என்று அவளுமே பயந்து நம்பிய மனிதன். அவள் கண்முன்னே நின்று கொண்டிருந்தான். அதுவும் அவன் திமிர், கொஞ்சமும் குறையாத அதே முகபாவனையுடன் இருந்ததில் மகிழ்ந்தாள். 
 
அவளை நோக்கி இன்னும் ஒரு அடி முன்னே வந்தான். 
"மொத்தமா வந்துட்டேன் பேபி." என்றான். பல வருடங்களுக்கு முன்பு அவள் கேட்ட அதே குரல்.
அதே ஆழமான காதல் தோணிக்கும் கொஞ்சும் குரல்‌. அதே அதிகாரம் குறையாமல்.. 
 
"ஷ்ரத்தா பையன் எங்கடி?." என்றதும் அந்த ஒரு அழைப்பில் அவளது கண்களில் இருந்த கண்ணீர் உடைந்து வழிந்தது.
அவள் உதடுகள் நடுங்கின.
 
"இனி உன்னை யாரும் தொட முடியாது. தொடவும் விடமாட்டேன்." என்றவன் துப்பாக்கி எடுத்து திரும்பி, தங்களை நோக்கி குறிபார்த்தவனை சுட்டான். சற்று முன் நடந்த சூட்டில் தப்பித்து எங்கோ ஒளிந்து ஒளிந்து, சத்ரியனை குறிவைத்தான் இத்தனை களோபரம் நடந்து, யாரும் தன்னை கவனிக்கவில்லை என்று தான் எண்ணினான். ஆனால் சத்ரியன் நெற்றி பொட்டில் ஒருவனை சுட்டதும் தான் மற்றவர்களுமே கவனித்தனர். ஷ்ரத்தாவோ எந்த சத்தமும், யார் மரண ஓலமும் கூட கேளாதவள் போல சத்ரியனின் கை வளைவில் தொற்றிக்கொண்ட கிளி போல தோளில் சாய்ந்து அவனது முதுகோடு இறுகப் பற்றிக்கொண்டாள். 
 
அந்த பழைய சத்ரியனை மற்றவர்கள் மீண்டும் பார்த்தனர். 
 
சுற்றிலும் சிதறிக் கிடந்த ஆயுதங்கள். தரையில் விழுந்திருந்த எதிரிகள். அவர்களுக்கிடையே... சத்ரியன் மட்டும் அசையாமல் நின்றிருந்தான்.
 
மெதுவாக சத்ரியன் பார்வை சுற்றிலும் திரும்பியது.
 
தீபா லட்சுமி இருவரை பார்த்தபடி மற்ற பாடிகார்ட்ஸை பார்த்தும், சத்ரியன் மெதுவாக சிரித்தான். பிறகு அவர்களை நோக்கி ஒரு அடி முன்னால் வந்தான்.
 
"ஒரு ராஜா இல்லாத தலைமை அழிஞ்சிடும்னு சொல்வாங்க." அவனது குரலில் பெருமை இல்லை. அதற்கு பதிலாக பல வருடங்களாக மனதுக்குள் வைத்திருந்த நன்றியின் கனமிருந்தது.
"ஆனா... இங்க நான் இத்தனை நாட்கள் இல்லாம போனாலும்..." அவனது பார்வை ஒவ்வொருவரையும் தொட்டது.
"எனக்காக விசுவாசமா இருந்த நீங்க.. இந்த ராஜாங்கத்தை துளிகூட அழியாம வச்சிருக்கீங்க." அவன் உதட்டில் அந்த பழைய சிரிப்பு மீண்டும் வந்தது. "லவ் யூ, காய்ஸ்." என்று அவ்விடம் அதிர கர்ஜித்தான்.
 
தீபாவின் கண்கள் கலங்கின. லட்சுமி தலையை குனிந்து கண்ணீரை துடைத்துக் கொண்டாள். அந்த ஒரு வார்த்தைக்காகவே...
 
அவர்கள் இத்தனை வருடங்களாக காத்திருந்தது போல இருந்தது. சத்ரியன் உடனே அவர்களை கடந்து ஷ்ரத்தாவை நோக்கி பார்த்தான்.
 
ஷ்ரத்தாவின் உப்பசமான வயிற்றிலிருந்து பிறந்து வளர்ந்த தன் குழந்தையை தேடினான். எங்கும் குழந்தை இல்லாத சுவடு தெரிய, தீபாவை நோக்கி திரும்பினான்.
 
"தீபா.. என் குழந்தை எங்க?" என்றான்
"பாஸ்.. நந்திதா குழந்தைகளை பாதுகாக்க அறைக்குள்ள இருக்காங்க பாஸ். துப்பாக்கி சத்தம் கேட்டதும் மேடம் சொன்ன பால்கனி வழியா சவுண்ட் இல்லாத ரூம்ல மறைவாக குழந்தைகளோட இருக்காங்க." என்று தீபா உடனே பதில் சொன்னாள்.
 
"கூட்டிட்டு வாங்க" என்றான். 
ஷ்ரத்தா புறம் திரும்பி, "பையன்னு வினோத் சொன்னான். அதுக்கு பிறகு.. வினோத்.. இறந்துட்டான். சாரி.. பையன் பெயர் என்ன?" என்றான். 
 
"ராயன்" என்றாள் ஷ்ரத்தா.
 
சத்ரியன் புருவத்தை சுருக்கினான். "ராயனா? அது எங்க தாத்தா பேரு அதபோய்யா வச்ச" என்று சலித்தான். 
 
"ஆமாம் தலைமுறையோட பெயரையாவது வைக்கணும்னு தோனுச்சு." என்று ஷ்ரத்தா கூற, அவன் முகத்தில் ஒரு விசித்திரமான சிரிப்பு தோன்றியது.
 
"ஒரு மார்க்கமான பழைய பேரு. பச்.. ஓகே" என்று கூற ஷ்ரத்தா சிரிப்பை அடக்க முடியாமல் நின்றாள்.
 
ஷ்ர்ததாவின் நெற்றியில் முத்தமிட, "லவ் யூ கிங்பின்" என்றாள். 
 
இத்தனை நேரம் மரணத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த அறையில், மீண்டும் உயிர் வந்தது போல இருந்தது சத்ரியனுக்கு.
 
அதற்குள் தீபா... போய் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வர, சென்றாள். 
 
அதன் பிறகே, அறையின் மறுபுறம் நின்றிருந்த இருவரை கவனித்தான்.
 
ருத்ரன் மற்றும் யதுநந்தன், இருவரும் இன்னும் அசையாமல் நின்றிருந்தனர்.
 
அவர்களின் முகத்தில் இருந்த அதிர்ச்சி... சத்ரியனின் பார்வையை கூர்மையாக்கியது.
 
சத்ரியன் முதலில் யதுநந்தனை பார்த்தான்.
 
அவன் உடையை. அவனது முகத்தை ஆரய்ந்தவன், முன்பு திவாகர் இறந்த பொழுது தன்னை காண வந்த வக்கீல் முகம் நினைவு வரவும், "லாயர் யதுநந்தன். ஷ்ரத்தாவோட அப்பா லாயர் திவாகரோட ஜூனியர் ரைட்?" என்றதும், யதுநந்தனின் தொண்டை வறண்டு போனது.
 
யதுநந்தன் மெதுவாக தலையசைத்தான். மனதிற்குள், ஷ்ரத்தாவை நேசிக்கும் ஜீவனாக தெரிந்தால் எப்படி எடுத்துக் கொள்வானோ இந்த கொலை செய்யும் சத்ரியன் என்ற குழப்பமும் இருந்தது.
 
சத்ரியன் சில நொடிகள் அவனை பார்த்துக் கொண்டிருந்தான்.
 
பிறகு... சத்ரியனின் பார்வை யதுநந்தனின் அருகில் நின்றிருந்த ருத்ரனை நோக்கி திரும்பியது.
 
அந்த பார்வை அப்படியே மாறியது. சிரிப்பு மறைந்தது. விளையாட்டை ஏறக்கட்டி, புருவங்கள் சுருங்கின.
 
"நீ... என்னை கைது செய்ய முனைந்த ராகவனோட சன் ருத்ரன் இல்லை? என்னை பிடிக்க ட்ரை பண்ணி, ஷ்ரத்தாவை கூட ஜெயில்ல தள்ளி விட்டதா வினோத் சொன்னான். அன்னிக்கே விபத்துல செத்துருப்ப.. பட் கை மட்டும் கட்டு கட்டி கொஞ்ச நாள் நடமாட விட்டேன்" என்றதும் ருத்ரனின் முகம் உறைந்தது. ருத்ரனுக்கு அந்த சந்தேகம் இருந்தது. இது சத்ரியன் ஏற்படுத்திய விபத்தாக இருக்குமோ? என்று இன்று சந்தேகமின்றி அவனே விபத்தை நிகழ்த்தியிருப்பதை வாய் வார்த்தையால் கூறிவிட்டான். 
 
ருத்ரன் கண்கள் சத்ரியனின் முகத்திலிருந்து நகரவே இல்லை. சத்ரியனின் பார்வையும் ருத்ரனை விட்டு நகரவில்லை. 
 
யதுநந்தன்‌ ருத்ரன் இருவரும் பேயறைந்தது போல நின்றிருந்தனர்.
 
அதுவும் அவர்களை அடையாளம் கண்டுகொண்டவனாக பேசுகின்றான் என்றதும், அறைக்குள் மீண்டும் ஒரு கனமான அமைதி இறங்கியது. எல்லாம் தெரிந்தால் கனதாங்கள் காதலிப்பது தெரியாமலா இருக்கும்?
 
சத்ரியன் மட்டும் அந்த அமைதிக்குள் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்.
 
இதில் ராயனோ சத்ரியன் நிற்க, ஏற்கனவே போட்டோவில் தந்தை என்று அறிமுகமாகி இருக்க, சத்ரியனை கண்டதும், "அப்பா." என்று ஓடிவந்தான்.
 
இங்கு மீன் குஞ்சிக்கு நீந்த தெரியாமல் இருக்க முடியுமா? தன் தந்தையை கண்டதும் குழந்தைகள் கண்டறிந்தது போல ராயன் ஓடினான். 
 
ராயனை அள்ளி அணைத்து தூக்கி சுற்றி முத்தமழை கொட்டி தீர்க்க, தியாவோ "அம்மா" என்று அழைத்து ஷ்ரத்தாவை ஏறிட்டாள். 
 
சத்ரியனோ மெதுவாக புன்னகை மறந்து, அந்த குழந்தையை கவனித்தான். 
 
-தொடரும். 
-பிரவீணா தங்கராஜ்.
 
 

 
Posted : August 19, 2026 6:57 am
(@padma)
Posts: 26
Eminent Member
 

Wav wav hero arrived 🥰🥰


 
Posted : August 19, 2026 7:30 am
(@kothaihari)
Posts: 125
Estimable Member
 

சூப்பர். ..செம 


 
Posted : August 19, 2026 7:53 am
(@guna-sundari)
Posts: 138
Estimable Member
 

Wow fantastic narration sis. 2 times I read sis.  Wonderful.  Kingpin come back. Awesome narration sis. Ruthran and yadhu chitriyan will give nice gift both of u. Sharadha hereafter u will happy only. No more tears. Becz ur chatriyian will take care of everything.  Excellent sis.


 
Posted : August 19, 2026 9:30 am
(@crvs2797)
Posts: 188
Estimable Member
 

தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 40)

வாவ்...! எதிர்பாராததை எதிர்பார்த்திருங்கள்ன்னு இதைத் தான் சொல்றாங்களோ..?
ஷ்ரத்தாவோட காத்திருப்புக்கு, தவத்திற்கு பலன் கிடைச்சிடுச்சுன்னுத் தோணுது.
அப்படியே அந்த கேமராவை கொஞ்சம் திசை திருப்பி
அப்படியாக்கா நிக்குற அந்த ரெண்டு தீ வட்டி தடியனுங்க மேல கொஞ்சம் ஜூம் பண்ணி காட்டுங்க பார்க்கலாம்... அதுங்க ரெண்டு மூஞ்சியும் இஞ்சித் தின்ன குரங்கு மாதிரியிருக்கான்னு பார்க்கணும்.
ஆங்..இருக்கு, இருக்கு. போங்கடா இனியாவது இடத்தை காலி பண்ணுங்க, இங்க உங்க ஜோலி முடிஞ்சுப்போச்சு. முடியலைன்னு சொல்லிப் பாருங்க, சத்ரியனே முடிச்சுப் போட்டுட்டுத்தான் மறுவேலையே பார்ப்பான்

😐😐😐
CRVS (or) CRVS 2797


 
Posted : August 19, 2026 9:42 am
(@sabarimanju5gmail-com)
Posts: 9
Active Member
 

Mass entry 💕 that's the love 😘😘😘


 
Posted : August 19, 2026 10:21 am
(@aishu-selva)
Posts: 31
Eminent Member
 

Super super inni sama maasah irrukum


 
Posted : August 19, 2026 10:26 am
(@kalidevi)
Posts: 140
Estimable Member
 

Super chathriyan entry aeitan avan geth koraiyave illa apadiye athe thimir oda vanthavanungala tak taknu vetti shoot pani thallitan . shradha eni nee kanavu kana venam kaanala poida matan un chathriyan un kudave irupan . pongada renu perum ipo theritha ruthran un accident ku karanam yaru nu


 
Posted : August 19, 2026 11:02 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 127
Estimable Member
 

Rudhra annaiku avolo saval ah sonna ah Chathriyan yae nerula vandhalum ennoda thupaki yum sattam pesu num.nu sonna ippo enna da ipadi oranchi poi nikkura ah oru vela pei nu nenachi than pakkurano ithuku appuram um ne love nu sonna unna unmai ah vae pei ah aakiduvan becoz Shardha 's hero is back .


 
Posted : August 19, 2026 1:19 pm
(@narmadha)
Posts: 6
Active Member
 

Wowww😍 super 🤗🤗


 
Posted : August 19, 2026 1:47 pm
(@subhakumar85)
Posts: 112
Estimable Member
 

Woe. Ini rendu perum yedatha gaali pannalam.. diyava evan yepadi yerthupano..


 
Posted : August 19, 2026 10:32 pm

Scroll to Top