தகிக்கும் நிலவொன்று-39
அத்தியாயம்-39
அடுத்த சில நிமிடங்களில் ருத்ரன் வீட்டுக்குள் செல்ல அனுமதி அளித்ததும் லேசாக ஈரத்தோடு வந்தான்.
ராயன் உள்ளே ஓடி வந்து, கையில் ஒரு டிரஸ்ஸை எடுத்துக் கொண்டு ருத்ரனிடம் நீட்டினான். நந்திதா தான் உள்ளிருந்து புது உடையை எடுத்து வந்து ராயனிடம் நீட்டி தரக்கூறினாள்.
"ருத்ரா... இதை போட்டுக்கோ." ருத்ரன் அந்த டிரஸ்ஸை பார்த்தான். புதிதாக இருந்தது. விலை பட்டியல் கூட பிரிக்காமல் புத்தம் புதிதாக இருந்ததை கவனித்தான்.
ஒரு நொடி அவன் எதுவும் பேசவில்லை. "தேங்க்ஸ்..." என்று மெதுவாக வாங்கிக் கொண்டான். நந்திதா கைகாட்ட, அங்கிருந்த அறைக்கு சென்று மாற்றிக் கொண்டான்.
ருத்ரன் வெளிவரும் பொழுது அதற்குள் லட்சுமி சூடான சூப் கொண்டு வந்து அவன் முன் வைத்தாள்.
"சார்... இதை குடிங்க. மழையில முழுசா நனைஞ்சிருக்கீங்க." என்று தரவும், ருத்ரன் அமைதியாக அமர்ந்தான். அவனை சுற்றிலும் பாதுகாப்பு ஆட்கள் நடமாடிக் கொண்டிருந்தனர்.
ஒருவர் வாசலில், இருவர் ஹாலின் மறுபுறம். மற்றவர்கள் வெளியே பத்தடிக்கு ஒருவரென, அந்த வீட்டில் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
அதைப் பார்த்தபடியே ருத்ரன் சூப்பை மெதுவாக பருகினான்.
ஆனால் அவன் கண்கள் மட்டும் அமைதியாக இல்லை. அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டே இருந்தன.
அவன் போலீஸ் உள்ளுணர்வு இன்னும் எச்சரிக்கையிலேயே இருந்தது. அந்த நேரத்தில் ராயன் வராததால் தியா வந்தாள். அங்கே ருத்ரன் இருக்கவும், தியா ஷ்ரத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
தியா அன்னையை பிடித்திட, "அம்மா..." என்று ராயனும் அருகில் வந்து நின்றான்.
ஷ்ரத்தா இருவரையும் பார்த்தாள். இவர்களை வைத்துக் கொண்டு ருத்ரனிடம் நிதானமாக கத்தவும் இயலாதென, "சரி... நீங்க ரெண்டு பேரும் பக்கத்து ரூம்ல போய் விளையாடுங்க. நான் வந்துடறேன்."
"அம்மா.. கொஞ்ச நேரத்துல நீங்களும் வரணும்." என்றாள் குழந்தை.
"வர்றேன். போங்க" என்றதும் இருவரும் ஓடிச் சென்றதும், ஷ்ரத்தா ருத்ரனை பார்த்தாள்.
அவன் இன்னும் அங்கேயே அமர்ந்திருந்தான். அவளது பொறுமை எல்லை மீறியது.
"அப்படியென்ன வீம்பு?" என்று ஷ்ரத்தா கத்தவும், ருத்ரன் தலை தூக்கிப் பார்த்தான்.
"பேய் மழை கொட்டுது. நானும் இங்க சேஃப்பா வந்துட்டேன். உங்க வீட்டுக்கு போக வேண்டியது தானே?" என்றாள். அவன் கையில் இருந்த சூப்பை இன்னொரு முறை பருகினான்.
"உன் உயிருக்கு யாரோ ஒருத்தர், குறிவச்சதை பார்த்துட்டு, உன்னை விட்டுட்டு போக முடியலை." என்றான்.
"என் உயிரை பத்தி நீ கவலைப்பட தேவையில்லை." என்றாள் காட்டமாக.
அவன் அவளை நேராக நிதானமாக பார்த்தான். "முன்ன நீ எந்த நிலையில இருந்தியோ... இப்ப அதே நிலையில நான் இருக்கேன் ஷ்ரத்தா" என்றான்
ஷ்ரத்தாவின் புருவம் சுருங்கியது. "என்ன சொல்ற?" என்றாள்.
"சத்ரியனை முதல் முதல்ல உனக்கு பிடிக்காது. உன் அப்பா இறந்ததுக்கு அவன் தான் காரணமா இல்லையான்னு தெரிஞ்சிக்கிறதுக்காக அவனை நீ வெறுத்துட்டே இருந்த.
நானும்... சில காலம் உன்னை சத்ரியன் உயிரோட இருக்கானா இல்லையான்னு கேட்டு கேட்டு உயிரை வாங்கிட்டேன்."
ஷ்ரத்தா அமைதியாக அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
"உங்கப்பா இறப்புக்கு சத்ரியன் காரணம் இல்லைன்னு தெரிஞ்சதும்..." அவன் குரல் சற்று தாழ்ந்தது. "சத்ரியன் உங்கப்பாவை கொன்றவன் இல்லன்னு புரிஞ்சதும்... ஒரு கட்டத்துல நீ அவனை காதலிக்க ஆரம்பிச்ச." ஷ்ரத்தாவின் கண்கள் சத்ரியனின் புகைப்படத்தை நோக்கி நகர்ந்தன.
"இப்ப..." ருத்ரன் ஒரு ஆழ்ந்த மூச்சை விட்டான். "அதே நிலைமைல நான் இப்ப உன்னை காதலிக்கிறேன்." அவள் எதுவும் பேசவில்லை. ஆனால் நக்கலாய் சிரித்தாள்.
"இங்க பாரு என் காதல் அனுதாபத்துல வரல. உன்னைப் பார்த்து பரிதாபப்பட்டு வரல. எதார்த்தமா வந்தது ஷ்ரத்தா." அவன் பார்வை அவளை விட்டு நகரவில்லை.
"இப்ப அந்த காதலை என்னால மறக்க முடியல." ஷ்ரத்தா மெதுவாக மூச்சை இழுத்தாள்.
"சத்ரியன் உன் உயிருக்கு ஆபத்து இருக்குன்னு நினைச்சுதான் உன்னை பாதுகாப்புக்காக சிறைக்கு அனுப்பினான். பாதுகாத்தான்.
இப்பவும் உன் உயிருக்கு ஆபத்து இருக்கு. ஆனா அவன் உயிரோட இல்லையே. அவன் வந்தா நான் ஒதுங்கிடறேன்.
உன் உயிருக்கு ஆபத்துனு தெரிஞ்சுக்கிட்டும், என்னால உன்னை தனியா விட்டுட்டு போக முடியல டி." என்றான்.
"இந்த 'டி' போட்டு பேசின பல்லை தட்டிடுவேன்." என்று கர்ஜித்திட, இருவருக்கும் இடையில் அமைதி நிலவியது.
"என்னை காதலிக்கறேன்னு சொல்லு. என்னோட என் வீட்டுக்கு வந்துடு. இதெல்லாம் எதுவும் வேண்டாம்." என்று மெதுவாக கேட்டான்.
ஷ்ரத்தா பதில் சொல்லாமல் நின்றாள். அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு படித்த கிறுக்கனிடம் மாட்டிக்கொண்ட நிலையில் நின்றாள்.
அந்த நேரம் பேச்சை திசைமாற்ற எண்ண, வாசல் பக்கம் யதுநந்தனும் வரவும், "வாங்க யது..." ஷ்ரத்தா திடீரென்று முகம் மலர்ந்து அந்த திசையை நோக்கி நடந்தாள்.
ருத்ரனின் முகம் உடனே இறுகியது. வாசலில் யதுநந்தன் நின்றிருந்தான்.
அவன் ஏற்கனவே ரெயின்கோட் அணிந்திருந்தான். அதை கழற்றி ஓரமாக வைத்துவிட்டு உள்ளே வந்தான்.
"சாரி... ருத்ரன் இங்கதான் இருக்காரா?" என்றான் யதுநந்தன்.
"அவர் கிளம்பிட்டாரேன்னு நினைச்சு வந்தேன்." ஷ்ரத்தாவை பார்த்து, "நான் இங்க வந்ததுல உங்களுக்கு ஏதாவது சங்கடமில்லையே ஷ்ரத்தா" என்று வேறு கேட்டான்
"நோ யது." என்றவள் இயல்பாகச் சொன்னாள்.
ருத்ரனின் கோபம் ஜிவ்வென்று ஏறியது. 'என்னை மட்டும் பார்த்தாலே முகம் சுருங்குது... இவன் வந்ததும் நோ யதுவாம்.' அவன் சூடான சூப்பை வேகமாக பருகினான்.
அதற்குள் தியா ஓடி வந்து, "யது!" என்று யதுநந்தனின் கால்களை கட்டிக் கொண்டாள்.
ருத்ரனின் முகம் இன்னும் இறுகியது. ராயனும் அவனிடம் வந்து, "யது... இன்னிக்கு நான் ஒரு கலரிங் புக்கை கிழிச்சிட்டேன்." என்று கவலையாகச் சொன்னான்.
"அது நீங்க வாங்கித் தந்தது." என்றாள் தியா.
யதுநந்தன் சிரித்தான். "அதனால என்ன? வேற வாங்கித் தர்றேன்." என்று ராயனின் தலைமுடியை வருடினான்.
ருத்ரன் அந்த காட்சியைப் பார்த்தபடி அமைதியாக இருந்தான். அவனது பார்வை யதுநந்தனிடமிருந்து ஷ்ரத்தாவிடம் நகர்ந்தது.
யதுநந்தன் மட்டும் குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்தாள். நேக்காக குழந்தையை நந்திதாவிடம் அனுப்பிவிட்டு, "என்னாச்சு ஷ்ரத்தா.. ஈவினிங் கன் ஷாட் மேல பட்டதாகவும், புல்லட் ப்ரூப் போட்டிருந்ததால தப்பிச்சிங்கனும் கேள்விப்பட்டேன். போலீஸிடம் எஃப்.ஐ.ஆர் பண்ணலையா? எக்ஸ்ட்ரா பாதுகாப்பு கேட்கலாமே. ஏன் இப்படி வீட்டுக்கு வந்து தனியா இருக்கணும்?" என்றான். இந்த அமைதியான அக்கறை தான் ருத்ரனுக்கு வரவில்லை.
ஷ்ரத்தாவோ "போலீஸிடம் பாதுகாப்பா இருக்கணும்னு தான் கைதாகி உள்ள வந்தேன். இப்ப வெளிய வந்தப்பிறகும் அவங்களிடமே பாதுகாப்பை கேட்கணுமா?
இந்த கோட்டை சத்ரியனோடது. அவனோட பாடிகார்ட் இருக்காங்க. வாழ்ந்தாலும் செத்தாலும் முடிந்தவரை நானே பார்த்துக்கறேன்." என்றாள்.
"குழந்தைகளை நீ யோசிக்கலையா ஷ்ரத்தா" என்றான்.
"ஏன் சார்... என் குழந்தைகளை நீங்க ஆசிரமத்துல சேர்க்க மாட்டிங்களா என்ன?" என்றாள் வலியுடன்.
ருத்ரனோ இவ்வார்த்தையை கேட்டு, "பைத்தியக்காரி.. உன்னை சாகடிக்கறவங்க உன் குழந்தைகளை மட்டும் உயிரோட விட்டுட்டு போவாங்களா?" என்று கத்தினான்.
யதுந்தனோ "ருத்ரன் ப்ளீஸ்... ஷ்ரத்தா.. ருத்ரன் பேசறது வரவர எனக்கு தப்பா தோணலை. நீ ஏன் இப்படி பண்ணற" என்றான்.
"வாழ்க்கையே வெறுத்து போயிடுச்சு யது. அவன் இல்லாத வாழ்க்கையை என்னால வாழ முடியுமானு தெரியலை. இரண்டு குழந்தைகள் என்னை நம்பி இருக்குனு என்னால அவங்களை யோசிக்க முடியல.
இந்த வீடு... நான் என் குழந்தைகள் இல்லாவிட்டாலும் இயங்கிட்டு இருந்தது.
இந்த மூன்று பேர்... அவன் இல்லாவிட்டாலும் என்னை பாதுகாக்க சிறைச்சாலைக்குள் இருந்தாங்க. அப்படியிருக்க.. நான் இல்லாவிட்டாலும் என் குழந்தைகளை பார்த்துக்க ஆளிருக்கும். நான் இல்லையென்ற சூழல் வந்தா கூட, சத்ரியன் உருவாக்கின ஆசிரமத்துல என் பிள்ளைங்களை, யோகேஷ் அண்ணா தேடி வந்து அழைச்சிட்டு போயிடுவார். 126 குழந்தைகளை வளர்த்துக்கிட்டு வர்ற அந்த விசுவாசிகளுக்கு, அவரோட பாஸ் குழந்தைகளை வளர்க்காமலா போவாங்க" என்றாள்.
ருத்ரனும் யதுநந்தனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
இரவு மெதுவாக இறங்கியது. வெளியில் மழை தொடர்ந்து பெய்துக் கொண்டிருந்தது.
மழை நின்றதும் இருவரையும் அனுப்ப நினைத்தாள் ஷ்ரத்தா.
மழை நிற்காததால் அங்கேயே இருவரும் இப்படிப்பட்ட பேச்சை கேட்டு தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
ருத்ரனுக்கு கீர்த்தனா அம்மா அழைத்தார்கள். அவனோ எடுத்ததும் ''அம்மா... இன்னைக்கு நான் வரலம்மா. சாப்பிட்டா நீ தூங்கு" என்றான்.
"ஏன்டா என்னாச்சு?" என்றார்.
"ம்ம்ம்.. உயிர் போற அளவுக்கு வேலை கழுத்தை நெறிக்கு. போதுமா. வையுங்கம்மா" என்றவன் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. அழைப்பை துண்டித்து முடித்தான்.
"ஏன் இப்படி பண்ணற" என்றாள். "என்னால உன்னை விட்டு போக முடியாது. இங்க எத்தனை ஜென்ஸ் பாடிகார்டா இருக்காங்க. நானும் கூடயிருக்கேனே. இன்னிக்கு மட்டுமாவது இருக்க விடு" என்றான்.
யதுநந்தனும் அதே முடிவில்தான் இருந்தான். "நானும் இங்கதான் இருப்பேன் ஷ்ரத்தா. அன்னிக்கு சிங்கப்பூர்ல கொலை பண்ண வந்தவங்களை பார்த்தும் இன்னிக்கு இப்படியொரு விஷயம் கேள்விப்பட்டு போகமாட்டேன். " என்று தெளிவாகச் சொன்னான்.
ஷ்ரத்தா இருவரையும் பார்த்து தலையை பிடித்துக் கொண்டாள்.
"ரெண்டு பேரும் சேர்ந்து எனக்கு தலைவலி இழுத்து வைக்கிறிங்க." என்று தலையை தாங்கினாள்.
சிறிது நேரத்தில் "லட்சுமி வந்து காதில் கிசுகிசுக்க "இன்னைக்கு எல்லாருக்கும் டின்னர் இங்கேயே ரெடி பண்ணவா மேம்?" என்று கேட்க ஷ்ரத்தாவும் ஆமோதிப்பாக தலையாட்டினாள்.
ராயனும் தியாவும் தூக்கத்தில் கண்களை தேய்த்துக் கொண்டிருந்தனர். அதனால் அவர்களுக்கு தனி உணவை எளிதாக செய்து கொண்டு வர, நந்திதா ஊட்டி விட சென்றாள்.
"நந்திதா... என் குழந்தைக்கு நான் ஊட்டி விடறேன்." என்று வாங்கிக்கொண்டாள் ஷ்ரத்தா. மனதிற்குள் குழந்தையை ஊட்டி விடும் பாக்கியம் தனக்கு எத்தனை நாளோ? அதை நினைத்து லேசாக கண்ணீர் துளிர்த்து ஊட்டி விட்டாள்.
குழந்தைகளுக்கு வாயெல்லாம் துடைத்து விட்டு, அழுத்தமாய் முத்தங்களை கன்னத்தில் விதைத்து, "போதும். போய் தூங்குங்க." என்று ஷ்ரத்தா இருவரையும் அழைத்துச் சென்று உறங்க வைத்துவிட்டு வருவதாக சத்ரியன் அறையின் கதவுக்கு திறந்து சென்றாள். அதுவரை யதுநந்தன் ருத்ரன் ஹாலில் அமர்ந்தவாறு ஷ்ரத்தா செல்லுமிடமெல்லாம் அமர்ந்த இடத்திலிருந்து விழியை பதித்தனர்.
ஷ்ரத்தா அந்த அறைக்குள் நுழையும் ஒவ்வொரு முறையும்... ஷ்ரத்தாவின் மனதில் ஒரு சிறிய பயம் எழும்.
அவன் இல்லாத இடம். அவன் நினைவுகள் மட்டும் நிறைந்து துரத்தும் இடம்.
ராயனை ஒரு பக்கம் படுக்க வைத்து... தியாவை மறுபக்கம் படுக்க வைத்தாள். குழந்தைகள் இருவரும் உடனோ தூங்கிட, போர்வையை போர்த்திவிட்டு குழந்தைகள் நெற்றியில் முத்தம் வைத்து எழுந்தாள்.
ஹாலுக்கு வந்தப்பொழுது ருத்ரன் அங்கிருந்த துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதத்தை கவனித்தான். எல்லாமே வெவ்வேறு நாட்டில் உள்ள கலெக்ஷன். கண்ணாடி தடுப்புக்கு உள்ளே அழகுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
"இதெல்லாம் அவன் கலெக்ஷா?" என்றான்.
"ஏன்... என்னுடையது மாதிரியா இருக்கு. நானா கிங்பின் உலகத்தை ஆண்டவளா?" என்றாள்.
"உம்மனாங்கொண்டான் மாதிரி இருந்த. இப்ப நீயே ஒரு லேடி டான் மாதிரி தான் இருக்க" என்றான்.
யதுநந்தனோ லேசாக புன்னகைத்திட, "யது அவன் தான் சொல்லறான். நீங்க சிரிக்கறிங்களே" என்று குறைப்பட்டாள்.
"சாரி... சிரிக்காம இருக்க முடியலை" என்றதும் தீபாவும் லட்சுமியும் கூட சிரிப்பதை கவனித்தாள் ஷ்ரத்தா.
மூன்று பேரும் சாப்பிட அமர, லட்சுமி பரிமாறினார்.
தீபாவும் அங்கும் இங்கும் பார்த்திருந்தாள்.
"புட்.. பைவ் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு இருக்கு... உன்னால எப்படி ஜெயில்ல இருந்த உணவை சாப்பிட முடிந்தது?" என்று ருத்ரன் கேட்க, யதுநந்தனும் அப்பொழுது தான் அதை யோசித்தான். தான் கேட்க நினைத்ததை சட்டென ருத்ரன் கேட்டுவிட்டான்.
ஷ்ரத்தாவோ "அப்ப எல்லாம் என் மனசு மரத்து போயிருந்ததே" என்றாள்.
ருத்ரன் வாயில் வைத்த உணவு விழுங்க முடியாது நின்றான். "சாப்பிடு.. முடிந்தா சாப்பிட்டு கிளம்பு" என்றாள்.
ருத்ரன் பேச்சற்று எரிச்சலோடு தண்ணீரை பருகினான்.
அந்த நேரம் வெளியில் ஏதோ சிறிய சத்தம். தீபாவின் புருவம் சுருங்கியது.
அவள் கதவை நோக்கி நடந்தாள். வீட்டின் மற்றொரு பகுதியில் இருந்த பாதுகாப்பு வீரர்களில் ஒருவன் மெதுவாக தனது இடத்தை விட்டு நகர்ந்தான்.
அடுத்த சில நொடிகளில் ஏதோ தடதடவென சத்தம் கேட்டது. ருத்ரன் யதுந்நதன் இருவருமே கையை கழுவிவிட்டு, ஷ்ரத்தாவை ஆளுக்கொரு கையை பிடித்து, நீ அந்த ரூம்ல இரு" என்று உள்ளே செல்ல கூறினார்கள்
ஷ்ரத்தா பயத்தில் உறைந்து முடிக்க, எங்கிருந்தோ சிலர் மின்னல் வேகத்தில் உள்ளே புகுந்தனர்.
பாடிகார்ட்ஸ்ஸோ "இங்கிருக்கற கம்யூனிக்கேஷனை யாரோ ஜாமர் பண்ணிருக்காங்க" என்றான் ஒருவன்.
கதவு திடீரென்று திறந்தது. ஷ்ரத்தா திரும்புவதற்குள் ஒரு கை மூர்க்கதனமாக பிடித்தது.
ருத்ரனும் யதுநந்தனும் புற்றீசல் போல வந்தவர்களை அடிக்க ஆரம்பித்தார்கள். ஷ்ரத்தா அதிர்ச்சியில் போராடினாள்.
"அம்மாமா..." என்றவளது கண்கள் விரிந்தன. அந்த மனிதன் அவளை தலைமுடியை பிடித்து பின்னால் இழுத்தான்.
அவன் கையில் இருந்த ஆயுதம் அவளது கழுத்தை நோக்கி உயர்ந்தது. எவனாவது துப்பாக்கியை வச்சி காப்பாத்தலாம்னு முயற்சி செய்திங்க. உங்க பாஸோட பொண்டாட்டியை கொன்னுடுவேன்" என்று கர்ஜிக்க, தீபா சுடுவதற்கு துப்பாக்கியை எடுத்தவள், ட்ரிக்கரை அழுத்த முடியாது நின்றாள்.
"ஷ்ரத்தா!" என்று ருத்ரனும், "உனக்கென்ன வேண்டும் அவளை விடு. ஷீ இஸ் இன்னோசென்ட்" என்று யதுநந்தனும் அவளை விடுவிக்க மன்றாடினார்கள்.
"இன்னோசென்டா.. இவளா?" என்று மற்றொரு கைகளால் ஷ்ரத்தாவின் கையில் கோலமிட்டபடி முன்னேறினான்.
ருத்ரன் அவனை தாக்க முயன்றான். அவனை அடிக்க முனைய மற்ற சிலர் ருத்ரனை அடித்தனர். ருத்ரன் பதிலுக்கு ஈடுக்கொடுத்தான்.
யதுநந்தன் ஒருபுறம் "அவளை விடு" என்று திமிர, அவனையும் இருவர் பிடித்து அடிக்க, அவர்களிடம் யதுநந்தன் அடித்து நிமிர்த்தினான்.
இரண்டு குரூப்பிற்கும் அவரவர் ஆட்களுக்கும் கடுமையான கைகலகலப்பு உண்டானது.
யதுநந்தனும் உடனே மற்றொருவனை எதிர்கொண்டான். அறைக்குள் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன.
யதுநந்தனும் ஒருவனை தரையில் தள்ளிவிட்டு அவள் பக்கம் திரும்பினான்.
"அவளை விடு!" அந்த மனிதன் ஷ்ரத்தாவின் கழுத்து பகுதியை தீண்டு முயன்றான்.
அடுத்த நொடி வெளியில் இருந்து துப்பாக்கிச் சத்தம். டப் டப்!' என்று அதிகரித்தது. மற்றொரு சத்தமாக காற்றை கிழித்துக் கொண்டு ஒரு பெரிய வாள் போன்ற கத்தி அதிவேகமாக சுழன்று வந்தது.
அவனை சுற்றி இருந்தவர்கள் திடுக்கிட்டு விலகினர்.
"மேம்!" என்ற தீபாவின் குரல் அலறியது. ஷ்ரத்தாவின் தலைமுடியை பிடித்திருந்தவன் இன்னும் அவளை விடவில்லை.
ஆனால் அவன் கையில் ஊர்ந்து கழுத்தை தீண்ட சென்ற கை வெட்டப்பட்டு துண்டானது.
அதில் அலறியபடி, அவன் பின்னால் தடுமாறினான். அவ்வறையில் இருந்த அனைவரும் ஒரு நொடி உறைந்தனர்.
ஷ்ரத்தா தலையை தூக்கிப் பார்த்தாள்.
தீபா, லட்சுமி இருவரும் ஆயுதங்களுடன் நின்றிருந்தனர். ருத்ரன் மூச்சை இழுத்தபடி ஷ்ரத்தாவை நோக்கி ஓடினான். யதுநந்தனும் அவளருகே வந்தான்.
"ஷ்ரத்தா.. ஆர் யூ ஓகே" "உனக்கொன்னும் ஆகலையே'' என்றார்கள். அவள் பதில் சொல்ல முடியாமல் பேச்சற்று நிற்க, அறையில் இருந்தவர்கள் அனைவரும் இன்னும் நடந்ததை புரிந்துகொள்ள முடியாமல் நின்றனர்.
இந்த தாக்குதல்... இவ்வளவு எளிதாக முடிந்திருக்கக் கூடாது.
அவன் ஒருவன் தாக்குதலாளிகளின் ஒவ்வொரு நகர்வையும் முன்கூட்டியே கணித்து கொண்டு, சமயம் பார்த்து உள்ளே நுழைந்த நொடியிலிருந்து, இங்கு வந்த எதிரிகளின் முடிவு இறப்பிற்கு சமர்ப்பிக்க எழுதப்பட்டிருந்தது.
அந்த அறையில் இருந்தவர்களின் மூச்சும் ஒரு நொடி நின்றது. ஷ்ரத்தாவுக்கு எதுவும் ஆகவில்லை என்ற நிம்மதி அது.
அப்பொழுது கூட எதிராளியின் கை துண்டித்து விழுந்த அதிர்ச்சியிலிருந்து யாரும் பேசவில்லை ஏன் நகரவுமில்லை.
இதில் அந்த கத்தி வந்த திசையில் இருந்து மெதுவாக ஒரு உருவம் உள்ளே நடந்து வந்து கொண்டிருந்தது. அது பெரிய நிழல் உருவமாக காட்சியளித்தது.
அந்த எகத்தாளமான திமிர் நடை, அசாதாரண செயலை செய்துவிட்ட அமைதி, அந்த உருவத்தின் தோரணையை ஷ்ரத்தா மறக்கவே இல்லை.
அவளது கண்கள் பார்த்து பார்த்து பரீட்சையமான சாயல் என்றதும், உதடுகள் நடுங்கின.
"சத்ரியா" என்று உச்சரித்து, எப்பொழுதும் போல் கானலாக கனவாக மறைந்து போவானோ என்று இமை சிமிட்டாமல் பார்வையிட்டாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 39)
வாவ்...! இதை, இதை, இதைத்தான் நான் எதிர்பார்ததேன். இந்த எதிர்பாராத என்ட்ரீயைத் தான் எதிர் பார்த்தேன். போங்கடா, இனி உங்களோட காவல், பாதுகாப்பு, லவ் எதுவும் வேணாம். இனி ஷ்ரத்தாவை உரிமையுள்ளவன் காப்பாத்துவான்டா. நீங்க எல்லாம் அவனுக்கு முன்னாடி வெறும் காலடி தூசு டா. போங்கடா, போங்கடா போக்கத்தவன்களா..!
போய் வேற வேலையிருந்தால் பாருங்க. அதை விட்டு சத்ரியனை கைது பண்றேன், கைமா பண்றேன்னு உளறிட்டிருக்காமல்
இடத்தை காலி பண்ணுங்கடா..
காத்து வரட்டும்.
😐😐😐
CRVS (or) CRVS 2797
Wow Excellent narration sis. This is chatriyian. We need this entry of chatriyian. Kingpin always a king. Sharadha will be happy now. Ruthran ur chapter close. Yadhu u too maintain distance with her. Chatriyian entry super super. Eagerly waiting for next reaction of love and affection fo chatriyian. Very intresting sis.
wow super eni yar vanthalum avangala kapatha mudiyathu chathriyan vanthutan eni yathu, ruhthran neengale onum pana mudiyathu unga lov vachitu avaloda urimaiyanavan vathutan kapatha kuda iruka avala pathuka ponga da super entry chathriyanuku avanoda geth koraiyave illa.
story padika seiren but chathriyan entry goosepump apadi iruku etho unmaiya vantha mari
-
தகிக்கும் நிலவொன்று-50 (முடிவுற்றது)
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-49
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-48
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-47
2 weeks ago
-
தகிக்கும் நிலவொன்று-46
2 weeks ago
- 25 Forums
- 330 Topics
- 1,589 Posts
- 2 Online
- 420 Members
