Forum

மதுர ஜில்லா... மச்ச...
 
Notifications
Clear all

மதுர ஜில்லா... மச்சானே!-67

10 Posts
10 Users
11 Reactions
241 Views
(@praveena-thangaraj)
Posts: 265
Member Admin
Topic starter
 
[#314]

அத்தியாயம்-67

மதுரையே சித்திரைத் திருவிழாவுக்காக மெல்ல மெல்ல விழாக்கோலம் பூண்டு கொண்டிருந்தது.

     ஊரின் முக்கிய வீதிகளில் எல்லாம் புதிதாக தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. கடைகளின் முன்புறம் வண்ண விளக்குகள் தொங்கின. மாலை நேரம் வந்தாலே வீதியெங்கும் மக்கள் கூட்டம் அதிகரித்தது.

  கோவிலைச் சுற்றிய தெருக்கள் மட்டும் அல்ல. சின்னச் சின்ன தெருக்களிலும் கூட அலங்காரம் ஆர்ப்பாட்டம் என்று ஜோலித்தது. 

'இந்த வருஷம் திருவிழா எப்படி இருக்குமோ?'

'தேர் எப்ப கிளம்பும்?'

'கள்ளழகர் எப்ப வைகையில இறங்குறாரு?' 

'போன முறை கூட்டம் அதிகம்பா. வெளியூர் ஆட்கள் கூட வந்தாங்க. போலீஸாலையே கூட்டத்தை கட்டுப்படுத்த முடியலை.' 

'அன்னதானம் எல்லாம் அப்படி இருந்தது.'

  கடவுள் அலங்காரம் கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்தது.' 

'எங்கப்பா இந்த முறை நான் கேட்கறது எல்லாம் வாங்கி தர்றதா சொல்லியிருக்காரே' என்று பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை சித்திரையைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.

மதுரையின் அடையாளமாகவே மாறியிருந்த அந்த சித்திரைத் திருவிழா, மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக் விஜயம், திருக்கல்யாணம், திருத்தேர் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்புடன் நகரத்தை விழாக்கோலமாக்கும்.

அதிலும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நாளன்று. மதுரை முழுவதுமே ஒரு பெரிய திருமண வீடு போல மாறிவிடும்.

அம்மனுக்கு திருமணம் நடக்கிறது என்ற பக்தி உணர்வோடு, தங்கள் வீட்டுத் திருமணம் போலவே மக்கள் தங்களையும் அலங்கரித்து, புத்தாடை அணிந்து, குடும்பத்தோடு கோவிலுக்குச் செல்வார்கள்.

அதற்குப் பிறகு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நாளோ இன்னொரு விதமான கொண்டாட்டம்.

மதுரையின் வீதிகள் முழுவதும் மனிதக் கடலாகிவிடும்.

அந்த வருடமும் அதற்கான எதிர்பார்ப்பு ஊரெங்கும் பரவியிருந்தது.

ஆனால்.. அந்த ஆரவாரத்திற்கு நடுவிலும் சில குடும்பங்களின் மனதில் மட்டும் வேறு விதமான நினைவுகள் இருந்தன.

மீனாட்சியின் வீட்டிலும் சித்திரைத் திருவிழாவுக்கான பரபரப்பு தொடங்கியிருந்தது.

புத்தாடைகள் எடுத்துக் கொண்டிருந்தபோது, மீனாட்சி தூரிகாவிடம்,

''போன வருஷம் சித்திரைத் திருவிழா வந்ததும் தெரியல... போனதும் தெரியல. மதுரா கல்யாணம்னு, அந்த நிலைமையில நம்ம வீடே என்னமோ மாதிரி இருந்துச்சு."  என்றார் மீனாட்சி.

தூரிகாவின் முகமும் சோகமானது. "அம்மா... அது மட்டுமா? தீபாவளிக்கே மதுரா ஹாஸ்பிடல்ல உட்கார்ந்திருந்தா. இந்த பொங்கலுக்குக் கூட அகிலன் அண்ணா நம்ம காளையை ஜல்லிக்கட்டுல கலந்துக்காம விட்டுட்டாரு. இப்படி ஒவ்வொரு பண்டிகையும் எதுவுமே தெரியாம போயிடுச்சு. காலம் எவ்வளவு வேகமா ஓடுது பாருங்க." என்று குறைப்பட்டாள். 

மீனாட்சி பெருமூச்சு விட்டார். இந்த இடைப்பட்ட காலத்தில் வாழ்க்கை என்னென்ன மாற்றத்தை தந்துவிட்டது. 

ஜனவரி மாதம் அகிலன் ஜல்லிக்கட்டு திருவிழாவில் மாட்டை இறக்க சென்றான். அவனேயே மாடு பிடிக்க வைத்தார் பெரியவர் அருளாளன். அவரது கோபம் அங்கு அதிகரித்தித்திருக்கும். அப்பொழுது ஆரம்பித்தது.

பிப்ரவரி மாத்ததின் முதலிலேயே இனியன் ஊருக்கு வந்துவிட்டான்.‌

  அவன் வந்ததும், தேர்தலில்  பிரச்சினைகள் உண்டானது. ஆனால் மார்ச் மாதமே பெண் பார்க்கும் நிகழ்வு, நிச்சயம், கல்யாண ஏற்பாடுகள் என்று வெகு வேகமாய் முன்னேறிவிட்டார்கள். 

ஏப்ரல் மாத்ததில் இனியன்–மதுரா திருமணம் நடைப்பெற்றது. அகிலனும் தேர்தலில் வெற்றி கண்டான். ஆனால் அப்பொழுது சித்திரை திருவிழா வந்து ஊரே ஆனந்தப்பட்ட போது தங்கள் வீடு சோகத்திலும், வருத்தத்திலும் அல்லவா இருந்தார்கள்.

மே, ஜூன் ஜீலை எல்லாம்  திருமணத்திற்குப் பிறகான மோதல்கள், அகிலனின் வாடிய வதங்கிய தோற்றம், காவ்யா வருகை, என்று சற்று மனம் அலைகழிந்தே போனது. ஏனோ காவ்யா வந்தப்பிறகு அகிலனின் அவளை கட்டி வைக்க பேசியது என்று நேரங்கள் நகர்ந்தது. 

  ஆகஸ்டில் பிற்பாதி தான் காவ்யா அகிலன் திருமணம் பேசி முடித்து, குடும்ப உறவு வலுப்படுவே ஆரம்பித்தது. இதில் செப்டம்பர் மதுரா அபார்ஷன் ஆனதும் ஹாஸ்பிடலில் நாட்கள் கழிந்தது. 

அந்த நேரமும் தீபாவளி மின்னல் போல சென்றது.  

அகிலன்–காவ்யா இருவரும் அமெரிக்கா சென்று வந்தப்பிறகு, நவம்பர் மாதம் வந்ததும் தூரிகா, நிலா பிரச்சனை என்று வரிசைக்கட்டி வந்துவிட்டது.

   ஏதோ வருடம் முடிந்தும் நம் வலிகள் வேதனைகளும் முடியும் பொருட்டு, டிசம்பர் மாதர் இரு குடும்பத்து உறவும் சுமூகமாக சென்றது. 

   மகா அக்ரோ பிரைவேட் லிமிடெட் தொடங்கும் வேலைகள், ஏற்றுமதி தயாரிப்புகள் என்று மீண்டும் ஜனவரி துவங்கி பிப்ரவரி மார்ச் தொழில் வளர்ச்சி, அமெரிக்கா முதல் ஆர்டர் என்று அகிலன் காவ்யா மற்றும் இனியன் அதில் தங்களை நுழைத்துக் கொண்டார்கள். அகிலன் கூட பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு விழாவுக்கு செல்லவில்லை. எல்லாமே வீட்டோடு கும்பிட்டு முடித்தார்கள். 

  தற்போது இந்த மூன்று மாதமும் ஏற்றுமதி தொழிலில் தான் கவனம் செலுத்திய படி காவ்யா இனியன் இருக்க, அகிலன், தன் பங்கிற்கு ஊர் வளர்ச்சிக்கு தேவையானதை செய்து கொடுத்துக் கொண்டிருந்தான்

இதெல்லாம் நினைத்து பார்த்து மலைத்தார் மீனாட்சி. 

தூரிகா சொன்னது போல எந்த விழாவும் கொண்டாடியதாக நினைவில்லை. பொங்கல் உட்பட, அதை எண்ணியவாறு, "ஆமாடி... இந்த வருஷ சித்திரை மட்டும் நம்ம மனசுக்கு எந்த சங்கடமும் தராம சந்தோஷமாவும் நிம்மதியாவும் போனா போதும்." என்று வேண்டிக்கொண்டு சித்திரை திருவிழாவுக்கு புத்தாடை வாங்க ஜவுளிக்கடைக்கு வந்திருந்தனர். 

   "இந்த கலர் எடு. நல்லா இருக்கு." என்றார்கள். அம்மாவும் பொண்ணும் ஒருபக்கமிருந்தனர்.

அகிலன் ஒரு சேலையை காவ்யாவிடம் நீட்டினான். "இதெல்லாம் வேண்டாம். எனக்கு ஒரு நல்ல சுடிதார் எடுத்துக்கிறேன்." என்றாள். 

"குர்தி, சுடிதார் எதுவும் வேண்டாம். காவ்யா" என்றான்.

"ஏன்? டிரஸ் போட்டுக்க போறது நான். உங்களுக்கு என்ன ஈஸியா சேலை நீட்டறிங்க." என்றாள். 

"ஊரே திருவிழா கோலத்துல இருக்கும். பஞ்சாயத்து தலைவரோட பொண்டாட்டி சுடிதார்ல சுத்திட்டு இருந்தா நல்லாவா இருக்கும்?" என்றான்.  

காவ்யா அவனை முறைத்தாள். "அதென்ன பஞ்சாயத்து தலைவர் பொண்டாட்டி? நான் எதுவும் பதவிக்கு போட்டி போட்டு கல்யாணம் பண்ணிக்கலையே! அதுவுமில்லாம நான் அமெரிக்காவுல வளர்ந்த பெண்ணுனு ஊருக்கே தெரியும். அதோட கட்டிட்டு நிற்கற பாடி லாங்வேஜ்லயே எனக்கு சேலை கட்ட வராதுனு தெரிந்துயிருப்பாங்க" என்றாள்.

அந்த நேரம் தூரிகா அருகில் வந்து, "அண்ணி... நீங்க சேலை எடுத்துக்கோங்க. நான் வேண்டுமின்னா கட்டிவிடுறேன்." என்றாள் பெருந்தன்மையாக.

"பாரு தங்கச்சி... கட்டி விடுறேன்னு சொல்லுறா.” அகிலன் உடனே காவ்யாவை சம்மதிக்க முனைந்தான். காவ்யா திருதிருவென முழிக்கவும், "தூரிகா.. உங்க அண்ணன் அண்ணி என்னத்தையோ வாங்கட்டும். நீ உனக்கொரு பட்டு புடவையை பாரு" என்று இழுத்து சென்றார்.

மகன் மருமகளிடம் கெஞ்சுவதை மகள் பார்த்து கேலி செய்யாமலும், மகளை வேறு புறம் இழுத்து சென்றார் எனலாம்.

காவ்யா அதற்கேற்றது போல அகிலனுடைய சட்டையைப் பிடித்து இழுத்தாள். "உன் தங்கச்சி ஒன்னும் கட்டிவிட வேண்டாம். எனக்கு அது அன்கம்பர்டபிளா இருக்கும்" என்றாள்.

"அப்போ அம்மாவை கட்டிவிட சொல்லவா. அவங்க பாட்டி மாதிரி கட்டிவிட்டுட்டாங்கனு சொல்வ." என்று சிசிடிவி இருக்கு என்று நைஸாக கையை விடுவித்திட கூறினான்.

"தங்கச்சி.. இப்ப அம்மாவா.. டேய் அகில்.. நீ கட்டிவிடறேன்னு சொல்லு. சேலை வாங்கறேன்" என்றாள். 

அகிலன் மார்க்கமாய் அவளை பார்த்து "சரி... நான் கட்டிவிடுறேன். இப்ப சேலை வாங்கலாமா?" என்று கேட்க, காவ்யா குஷியாக "இப்ப வாங்கலாம்." என்று கூறினாள். 

அவர்கள் இருவரையும் தூரத்திலிருந்து பார்த்த தூரிகா சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள்.

அகிலனோ 'டேய் அகிலா? ம்ம்ம் சேலை கட்டி விடவா சொல்லற. நான் பண்ணற அலப்பறையில் நீயே சேலை கட்டி கத்துக்குவடி பாரு' என்று முடிவெடுத்தான். 

---

அதே நேரத்தில் மறுபுறம் வேல்விழி இனியனிடம், "ஏன்யா.. இன்னிக்கு காவ்யா வேலைக்கு வரலையா?" என்று கேட்டார்.

"ஆமாம்மா. ஏதோ சித்திரை திருவிழாவுக்கு பர்ஸேஸ் வாங்கணும்னு சித்தி சொன்னாங்களாம்‌ அதனால கடைக்கு போயிருப்பா." என்றான் இனியன்.

  "இனியா... நம்ம வீட்லயும் சித்திரை திருவிழாவுக்கு சேலை எடுக்கணும்யா. உனக்கு வேண்டியது எடுத்துக்கோ. மதுராவுக்கும் ஒரு நல்ல சேலை எடுத்து வை." என்றார்.

"ம்மா..."  இனியன் சற்றுத் தயங்கினான்.

"என்னப்பா?" என்றார்.

"எங்க கல்யாண நாளும் வருதுல்ல." மீனாட்சி அவனைப் பார்த்தார்.

அவனுடைய குரலில் இருந்த தயக்கம் அவருக்குப் புரிந்தது.

"மறக்க முடியுமா? மதுராவுக்கு அந்தக் கல்யாணமே விருப்பமில்லாம நடந்தது. இப்ப அவ மனசுல என்ன ஓடுதோ தெரியாது. அதனால நீயும் அதிகமா எதிர்பார்க்காத. ஆனா... அவளுக்காக ஒரு நல்ல சேலை கல்யாண நாளுக்கும் எடுத்து வை. அவள் அணியணும்னு நினைச்சா அணியட்டும்." இனியன் அமைதியாகத் தலையசைத்தான்.

எப்படியும் மதுரா அந்த நாளை மறந்திருக்கலாம். இல்லையென்றால் அந்த நாளை நினைக்கவே விரும்பாமல் இருக்கலாம்.

ஆனால் தனக்கோ அந்த நாள் மறக்க முடியாத நாள். அதனால் யாரிடமும் சொல்லாமல், மதுராவுக்காக ஒரு அழகான சேலையும், சில சிறிய பரிசுகளையும் தனியாகத் தேர்ந்தெடுத்து வாங்கிட நினைத்தான்.

  இவர்கள் எண்ணியது போல மதுரவாணி அவளது திருமண நாளை மறக்க வில்லையே. 

அன்றிரவு படுக்கையில் படுத்திருந்தவள், கண்களை மூட முயன்றும் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள்.

'இனியன் மச்சானுக்கு என்ன பரிசு வாங்கலாம்?' என்றதே நிமிடத்திற்கு ஒருமுறை யோசித்தாள்.

'வாட்ச் வாங்கலாமா? அவர்கிட்ட ஏற்கனவே எத்தனையோ வாட்ச் இருக்கு! ஷர்ட் வாங்கலாமா? அதுவும் வேண்டாம்... அமெரிக்கால படிச்சவரு. என்ன கலர் பிடிக்கும், என்ன பிராண்ட் பிடிக்கும்... எதுவுமே எனக்கு தெரியாது.

பர்ஃப்யூம்?' அடுத்த நொடியே முகம் சுளித்தாள். 'அதையும் அவரே வாங்கிக்குவாரு.' மீண்டும் தலையணையில் முகத்தைப் புதைத்தாள்.

'சை... எனக்கென்ன பரிசு வாங்கணும்னே தெரியலையே!'

சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.

பிறகு திடீரென்று எழுந்து உட்கார்ந்தாள்.

'அவருக்கு என்ன பிடிக்கும்?' அவளுக்கே பதில் தெரிந்தது.

'அவருக்கு என்னத்தான் பிடிச்சிருக்கு.' அந்த நினைப்பு வந்தவுடனே அவளுடைய கன்னங்கள் சிவந்தன. 'சீ... வரவர கண்டதும் நினைச்சிட்டு இருக்கேன்!' மீண்டும் தலையணையை எடுத்துத் தலையில் போட்டுக் கொண்டாள்.

'அவருக்கு நான் கொடுக்குற பரிசை விட... நான் அவரை காதலிக்கிறேன்னு சொல்லுறதுதான் அவருக்கு பெரிய விஷயமா இருக்கும். ஆனா பரிசும் அவருக்கு பிடிச்சதா இருந்தா நல்லாயிருக்கும். முதல்ல அவரிடம் தன் காதலை சொல்ல முடியுமா? எப்படி சொல்வேன். அவர் முகத்தை எப்படி ஏறிட்டு பார்ப்பேன்..' என்று  எண்ணம் வந்ததும் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.

  காதலை சொல்வது கடினம் தான். ஆனால் கணவனிடம் காதலை பகிர்வது இத்தனை கடினமாக இருக்குமென மதுரா நினைத்ததில்லை. கண்ணை சுற்றி சுற்றி முழிக்க இந்த தூக்கம் வேறு அடிக்கடி வந்து இம்சித்தது. 

  'சே.. வரவர நல்லா திண்ணுட்டு திண்ணுட்டு தூக்கமா வருது.' என்று முனங்கி படுத்து உறங்கிவிட்டாள். 

இனியன் வந்து பார்க்கும் பொழுது 'இவளுக்கு மட்டும் நல்லா தூக்கம் வருது. மதியமும் பேக்ட்ரிக்கு வரச்சொல்லி இவளை கூடவே வச்சிக்கலாம்னா அம்மா இவ தூங்கிட்டானு சொன்னாங்க‌. சரி மதியம் தூங்கிட்டா நைட்டு வந்து தூங்காம அவளை சீண்டுவோம்னு  வந்தா இப்பவும் தூங்கறா. நாம நெருங்குவோம்னு இப்படி நைஸா தூங்கி நடிக்கறாளா?' என்று மதுரவாணியை கவனித்தான். 

  மதுரவாணியோ குழந்தை போல நன்றாக உறங்குவதாக தான் அவனுக்கு தெரிந்தது. .நன்றாக கால்களை குறுக்கி கன்னத்தில் கைவைத்து உறங்குபவளின் காலை நீட்டி படுக்க வைத்து, அவளை நெருக்கிக்கொண்டு படுத்தவனுக்கு, அவளது தாமரை முகத்தை தன் நெஞ்சில் போட்டுக் கொண்டு அவளது கையை தன்னோடு கட்டிக்கொள்வதாக மாற்றி, அவனும் கட்டிக் கொண்டு படுத்துக் கொள்ளவும் தான் நிம்மதியான உறக்கம் வருவதாக இமை மூடினான்.  

-தொடரும்.

-பிரவீணா தங்கராஜ்

 


 
Posted : August 17, 2026 6:41 am
(@padma)
Posts: 26
Eminent Member
 

Madurai thiruvizha description super 🥰🥰


 
Posted : August 17, 2026 7:11 am
(@karthi1206)
Posts: 69
Trusted Member
 

Superb epi 


 
Posted : August 17, 2026 8:42 am
(@crvs2797)
Posts: 188
Estimable Member
 

மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 67)

ஓ... எல்லாரும் சித்திரை திருவிழாவிற்கு ரெடியாகிட்டு இருக்குறாறாங்களோ....
ஆகட்டும், ஆகட்டும் நிதானமாவே ரெடியாகட்டும், நாமளும் போய் தயாராகிட்டு வரலாம்.

சோ,.. மதுரா இனியன் கிட்ட தன் காதலை சொல்ல துணிஞ்சிட்டாப் போலயிருக்கு... நாங்களும் அவ அதை சரியா எப்படி சொதப்ப போறான்னு பார்க்க காத்திட்டிருக்கிறோம்.

😀😀😀
CRVS (or) CRVS 2797


 
Posted : August 17, 2026 8:44 am
(@guna-sundari)
Posts: 138
Estimable Member
 

Wow madurai festival narration awesome sis. My native is madurai sis. Really 3 days will enjoy the joy of festival. Akil kavya cute romance. Madura u should open ur heart to eniyian. Very intresting sis.


 
Posted : August 17, 2026 9:23 am
(@subhakumar85)
Posts: 112
Estimable Member
 

Nee yenna than panna porenu paapom


 
Posted : August 17, 2026 11:34 am
(@kalidevi)
Posts: 140
Estimable Member
 

ethuku thayangura madhura crt aana naal tha varuthu apove sollidu ethum vanga la venam . madungala adakinavenala intha kavyava adaka konjam kasta paduran but ituvum konajm jolly ah tha iruku


 
Posted : August 17, 2026 12:22 pm
(@kothaihari)
Posts: 125
Estimable Member
 

சூப்பர் 


 
Posted : August 17, 2026 12:26 pm
(@kavi-bharathi-arunkumar)
Posts: 126
Estimable Member
 

Chithrai thiruvizha la ivangalukku neraiya santhosham kedaikum polayae 


 
Posted : August 17, 2026 12:33 pm
(@ishana)
Posts: 3
New Member
 

Oruvela thottil kattaporalo


 
Posted : August 22, 2026 1:41 pm

Scroll to Top