Forum

தகிக்கும் நிலவொன்று...
 
Notifications
Clear all

தகிக்கும் நிலவொன்று-37

10 Posts
10 Users
3 Reactions
194 Views
(@praveena-thangaraj)
Posts: 265
Member Admin
Topic starter
 
[#312]

அத்தியாயம்-37

மறுநாள் காலை ருத்ரன் நேராக கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்றான். முன்கூட்டியே நேரம் வாங்கியிருந்ததால், சில நிமிடக் காத்திருப்புக்குப் பிறகு உள்ளே அழைக்கப்பட்டான்.

"மே ஐ கம் இன் சார்?"

"கம் இன்." புதிய கமிஷனர் கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

"உட்காருங்க ருத்ரன்." என்ற குரல் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக தான் இருந்தது. 

"தேங்க்யூ சார்." என்று அமரவும்,

பிறகு கமிஷனர் கோப்பை மூடி அவனை நேராகப் பார்த்தார்.

"சொல்லுங்க. என்ன விஷயம்?" என்றவரிடம், ருத்ரன் சற்றுத் தயங்கினான்.

"சார்... என் அப்பா இன்ஸ்பெக்டர் ராகவன் இறந்த கேஸை விசாரிச்சப்ப..." என்று இழுத்தான்.‌

"ம்.. சொல்ல வந்ததை சொல்லுங்க" என்று கறாராக கேட்டார்.

"அதுல சத்ரியன்னு.." என்றதும், 

"ஸ்டாப். ஸ்டாப்.. பழைய கேஸ் இன்னும் அதையே பிடிச்சிட்டு தொங்காதிங்க. ராகவன் இறந்ததுக்கு காரணம், சத்ரியன் என்ற ரூமர் போச்சு. பட்..‌. உங்கப்பா கோர்ட் வாசல்ல ஆறு பேரை கொன்றதுக்கு காரணம் சொல்லாம, அதோட சத்ரியனுக்கு எதிராக ஆதாரத்தை பொய்யா திரட்ட பணம் வாங்கியதா உங்க வீட்ல லாக்ஸ் கணக்குல பணத்தை எடுத்து சப்மிட் பண்ணிருக்காங்க. அதை தாங்க இயலாம உங்கப்பா எங்கயோ மிஸ்ஸாகிட்டார். பட் சத்ரியன் கொன்றுட்டதா பழி சொன்னிங்க. பட்.. நடுரோட்ல ராகவன் இறந்த சடலம் தான் மீட்டெடுத்தா ரெக்கார்ட்ஸ் இருக்கு. சத்ரியன் சாகடிச்சதா எதுவும் இல்லையே. அப்படியிருக்க..‌ இந்த கேஸை பிடிச்சிட்டு சுத்தாதிங்க" என்று கமிஷனரின் குரல் காட்டமாக சற்று உயர்ந்தது.

ருத்ரன் உடனே பேச்சை நிறுத்தினான். பழைய கேஸை எல்லாம் தெரிந்து வைத்திருக்க, அதிலும் தந்தை பணம் வாங்கியதை அறிந்திருக்க மேற்கொண்டு பேச முடியாத வகையில் நின்றான்.

"இன்னொரு தடவை அந்த பெயரை இந்த ரூம்ல உச்சரிக்காதீங்க." என்று எச்சரிக்க, ருத்ரன் திகைத்தான்.

"சார்... நான்..." என்று பேசவே விடாமல், "எனக்கு எல்லாம் தெரியும். நீங்க போகலாம்" என்று கமிஷனர் நாற்காலியில் சாய்ந்தார்.

"அப்பறம்... நீங்க அடிக்கடி எந்தெந்த பைல்ஸ் பார்க்கறீங்க... யார்கிட்ட என்ன கேட்கிறீங்க... எங்கெங்க போறீங்க... இதெல்லாம் இந்த டிபார்ட்மெண்ட்க்கு தெரியாதுன்னு நினைக்கிறீங்களா?" ருத்ரன் அமைதியாக நின்றான். ஏதோ தவறான இடத்தில் உதவிக்கேட்க வந்துவிட்டோமோ என்று நொந்துவிட்டான்.

"உங்களுக்கு உங்க உயிரும் வேலையும் வேணும்னா... உங்க ஏரியாவுல நடக்குற கொலை...

கொள்ளை... திருட்டு... போதைப்பொருள்... அதை கவனிங்க." ஒரு நொடி இடைவெளி விட்டவர்,

"அதை விட்டுட்டு... அந்த தீவு... அந்த பழைய விஷயம்...அதுல மூக்கை நுழைக்காதீங்க."என்றார்.

ருத்ரன் மெதுவாக, "சார்... ஒரு குழந்தை மிஸ்ஸிங் கேஸுக்கும் அந்த சத்ரியன் மரணத்துக்கும் சம்பந்தம் இருக்கலாம்..." என்று ஆரம்பிக்க, கமிஷனர் மேசையை லேசாகத் தட்டினார்.

"ருத்ரன்! ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட். இந்த மீட்டிங் இத்தோட முடிஞ்சது. யூ கேன் லீவ்." என்றார். 

வேறு வழியில்லாமல் "எஸ் சார்." என்று சல்யூட் அடித்துவிட்டு வெளியே வந்தான்.

வெளியே வந்ததும், வழித்தடத்தில் நின்று ஆழமாக மூச்சை விட்டான்.

"ஏன் எல்லாரும் இந்த கேஸை பத்தி பேசினாலே துண்டிக்கறாங்க?" என்று தனக்குத்தானே முணுமுணுத்தான். 

அப்போது... "ருத்ரன் சார்..." என்று பின்னால் ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தான். கிரைம் பிராஞ்சில் பணிபுரியும் எஸ்.ஐ. முரளி ஓடிவந்தான். 

"என்ன சார்?" அவன் அருகே வந்து மெதுவாகப் பேசினான்.

"இப்ப டிபார்ட்மெண்ட் முழுக்க வேறொரு கேஸ்ல பிஸியாக இருக்காங்க. நீங்க பழைய கேஸ்லயே இருக்கிங்க" என்றார். 

"என்ன கேஸ்?" என்று அசட்டையாக கேட்க, "குழந்தை கடத்தல்." என்றதும் ருத்ரன் புருவம் சுருக்கினான்.

"நேத்து 'துரை'ன்னு ஒருத்தன் கொஞ்ச நாளுக்கு முன்ன குழந்தையை கடத்த முயற்சி பண்ணியிருக்கான். ஆனா அந்த குழந்தை அவன் கையிலிருந்து தப்பிச்சிடுச்சு. அந்த நேரம் டிராபிக் டியூட்டில இருந்த ஒரு போலீஸ் பார்த்துட்டாரு. சாதாரணமா சந்தேகப்பட்டு விசாரிக்க ஆரம்பிச்சவர்... பெரிய கேங்க் சம்பந்தப்பட்டிருக்கு என்பதைக் கண்டுபிடிச்சிருக்காரு. இப்பவும் குழந்தையையும் பாதுகாப்பா வச்சிருக்காரு.

   நம்ம தற்போதைய கமிஷனர் பத்து பேர் ஸ்பெஷல் டீம் அமைச்சு... ஒரே நாள்ல எல்லாரையும் தூக்க ஆரம்பிச்சிட்டாரு. இப்ப டிபார்ட்மெண்ட் முழுக்க அந்த கேஸ்தான் ஓடுது. விரைவில் டிவில எல்லாம் வரலாம்‌. அதனால சார்... நீங்க சொல்ற பழைய கேஸ்... அந்த." சுற்றிலும் பார்த்தவன், "அந்த பேர் சம்பந்தப்பட்ட கேஸ்... அதை இப்ப யாரும் காதுல கூட வாங்க மாட்டாங்க. குழந்தை கடத்தலை செய்யறவங்களை துவசம் பண்ணறாங்க" என்று முரளி அங்கிருந்து சென்றுவிட்டான்.

ஆனால் ருத்ரன் அங்கேயே நின்றிருந்தான். குழந்தை கடத்தல்... அந்த வார்த்தை அவன் மனதில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது. ஏனோ சம்பந்தமேயில்லாமல், 'ஷ்ரத்தாவை பார்க்கணும் போல தேன்றியது. 

அடுத்த அரை மணி நேரத்தில் அவனது பைக் மருத்துவக் கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்தது. போலீஸ் உடையோடு வந்தால் அவளுக்கு பிடிக்கவில்லை என்றதால் மப்டியில் வந்தான். 

  அன்று ஷ்ரத்தாவுக்கு வெளிநோயாளிகள் பிரிவில் கிளினிக்கல் போஸ்டிங் இருந்தது. ருத்ரன் கையைப் பிடித்தபடி நின்றான். ஷ்ரத்தாவை பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தில் கையை சிறு கத்தியால் கீறிக்கொண்டு ரத்தம் சொட்ட வந்து காத்திருந்தான்.‌ 

இவன் வரவும் ஒரு நோயாளியை கவனிக்கும் பொருட்டு டாக்டராக பார்க்கும் தோரணையிலேயே நடந்துக் கொள்ளும் முடிவில், "என்னாச்சு? எப்படி இப்படி அடிபட்டது?" என்று ஷ்ரத்தா காயத்தை ஆராய்ந்தாள்

காயத்தின் ஓரங்களை விரலால் பிரித்துப் பார்த்தவள், புருவத்தை சுருக்கினாள்.

"ஒரு சின்ன ஆக்சிடெண்ட்." என்று பொய் கூறினான். 

"இது ஆக்சிடென்ட் கட் மாதிரி தெரியல்ல." என்று கூறவும் ருத்ரன் அமைதியாக அவளை பார்த்தான்.

"நீங்களே கிழிச்சிருக்கீங்க தானே?" என்று கண்டறிந்தவளாக கேட்டதும்

ருத்ரன் உதட்டோரம் சிரித்தான்.

"டாக்டர்கிட்ட பொய் சொல்ல முடியல." என்று சிரிப்புடன் பதில் தந்தான்.‌

ஷ்ரத்தா எரிச்சலோடு மருந்தை எடுத்தாள். "எதுக்காக இப்படி பண்ணற?" என்று சிடுசிடுத்தாள். 

"உன்னை பார்க்கணும்னு தோணிச்சு. அடுத்த நொடி எதுவும் யோசிக்கலை வந்துட்டேன். அப்படியே வாந்த நீ தான் சந்திக்க மாட்டியே. இப்படி எனக்கு நானே காயம் தந்து உன்னை சந்திக்க வந்துட்டேன்." என்றவன் அவளை தான் கூர்ந்து ஆராய்ந்தான்.‌

அவள் எதுவும் பேசவில்லை. தன்னை உறுத்தி ரசிப்பான், அல்லது, குறுகுறுவென பார்ப்பானென அவன் கண்களை தவிர்த்தாள். 

"இன்னிக்கு குழந்தை கடத்தல் கேஸ் ஒன்னு கேள்விப்பட்டதும். ஐரீன் நேம் ஞாபகம் வந்துச்சு. அப்புறம்? உன்ன பார்த்தா தான் மனசு அமைதியா இருக்கும் போல தோணிச்சு." ஷ்ரத்தா கட்டு போட்டுக்கொண்டே இருந்தாள்.

"போலீஸ் யூனிஃபார்ம்ல வந்தா உனக்கு பிடிக்காதுன்னு தெரியும். அதான் சாதாரண டிரஸ்ல வந்தேன்." என்று சிறுகுழந்தை போல விளக்கினான்.‌

அதே நேரம்... டங்! ஒரு கனமான இரும்பு தகடு தாக்கிய சத்தம் போல ஒலி கேட்டது.

அடுத்த நொடி... ஷ்ரத்தாவின் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போல திடீரென அதிர்ந்தது.

அவள் கையில் இருந்த காஸ் கீழே விழுந்தது. மூச்சு திணறியது. "ஷ்ரத்தா..." என்று ருத்ரன் அவளை தாங்கி பிடிக்க ஓடினான்.

அவளது கண்கள் மேலே செருகின. உடல் ஒரு நொடி முழுக்க நடுங்கியது.

பிறகு... அப்படியே சரிந்து விழுந்தாள். "ஷ்ரத்தா!" ருத்ரனின் இதயம் ஒரு நொடி நின்றது. "மேம்!" என்று அழைத்த தீபா மட்டும் பதற்றப்படவில்லை.

அவள் ஜன்னலை நோக்கி ஒரு பார்வை பார்த்தாள்.அது குண்டு துளைத்த சுவடு இருந்தது.

"சார்... மேடத்தை தூக்குங்க." என்று கூறினாள். 

"என்னாச்சு? ஏன் மயங்குறா?" என்று பதறினான்.

"ப்ளீஸ் சார்... டைம் வேஸ்ட் பண்ணாதீங்க." என்றதும்,  ருத்ரன் உடனே ஷ்ரத்தாவை கைகளில் தூக்கிக் கொண்டான்.

தீபா அருகிலிருந்த சிறிய சிகிச்சை அறையை திறந்தாள்.

"இங்க மேடத்தை படுக்க வையுங்க." என்று கூற, ருத்ரன் உள்ளே வந்ததும், தீபா கதவை பூட்டினாள்.

ருத்ரன் அதிர்ச்சியுடன் பார்த்தான். "டாக்டரைக் கூப்பிட வேண்டாமா?" என்று குழம்பி கேட்க, "வேண்டாம் சார்." என்றாள்.‌

"என்ன வேண்டாமா?" என்று தவிக்க,  "இன்னும் ஐந்து நிமிஷத்துல மேடம் கண்ணை திறந்துடுவாங்க." என்றாள்.‌

"தீபா!" என்று குழம்பியவனை "ப்ளீஸ் சார் சில்" அவள் அமைதியாக பேசினாலும் குரலில் அவசரம் இருந்தது.

"நீங்க அந்தப் பக்கம் திரும்பி நில்லுங்க." என்றாள்.

"எதுக்கு? என்று கேள்விக்கேட்க "மேடத்தோட பாதுகாப்பு உடையை கழட்டணும்." என்றதும் ருத்ரன் புரியாமல் நின்றான்.

"சார்... திரும்புங்க." என்றதும் அவனும் வேறு வழியில்லாமல் திரும்பி நின்றான்.

பின்னால் உடை அவிழ்க்கும் சத்தம். சில விநாடிகளில்...

டிங்... என்று ஒரு உலோகத் துண்டு தரையில் விழுந்தது.

தீபா அதை எடுத்தாள்.

அது... ஒரு துப்பாக்கி குண்டு.

ருத்ரன் அதிர்ச்சியில் திரும்பினான்.

"என்னது இது?" தீபா அவன் கையில் அந்த தோட்டாவை வைத்தாள். "இப்போதான் மேடம் மேல கன் ஷூட் நடந்துச்சு." என்றதும் ருத்ரனால் பேச முடியவில்லை.

தீபா மேசையின் மீது கிடந்த கருப்பு நிற மெட்டல் ஜாக்கெட்டை காட்டினாள்.

அதன் நடுவில் குண்டு பதிந்திருந்தது. "இது சாதாரண ஜாக்கெட் இல்ல சார். சத்ரியன் பாஸ் தயாரிக்க சொன்ன பாதுகாப்பு ஆர்மர். உடலோட ஒட்டியிருக்கிற மாதிரி இருக்கும். வெளியில இருந்து பார்க்க முடியாது. குண்டு நேரா பட்டாலும் உடம்புக்குள்ள போகாது. ஆனா தாக்குற வேகம் முழுசும் உடம்புல இறங்கும். அதனால மின்சாரம் பாய்ந்த மாதிரி பாடி லேசா ஷாக்கடிக்கும். சில நிமிஷம் மயக்கம் வரும். அதுக்குள்ள இந்த ஆர்மர்ல சிக்கியிருக்குற புல்லட்டை எடுத்துடணும்." என்று  ருத்ரன் கையில் இருந்த தோட்டாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு இன்னும் நம்ப முடியவில்லை.அந்த நேரம்... ஷ்ரத்தா மெதுவாக மூச்சை இழுத்தாள். கண்களை திறந்தாள். நெஞ்சை பிடித்தபடி அமர முயன்றாள்.

"தேங்க்ஸ் தீபா..." என்றாள் சோர்வாக. ருத்ரன் வேகமாக அவள் அருகே வந்தான்.

"ஷ்ரத்தா... உனக்கு எதுவும் ஆகலையே" அவள் மெதுவாக தலையசைத்தாள்.

"நான் ஓகே." ருத்ரன் இன்னும் அதிர்ச்சியில் இருந்தான்.

"சிங்கப்பூர்ல முதல் கொலை முயற்சி நடந்த அன்னைக்கே.. மேம் இங்க வந்ததும் சொல்லி துவண்டாங்க. இரண்டு குழந்தைகளை வச்சிட்டு இருக்கணும். படிக்கவும் போகணும். இல்லை ஏதாவது மறுக்கணுமா? துவண்டுட்டாங்க. 

எதிரிகள் நேருக்கு நேர் தாக்கறது இருக்கட்டும்.. தூரத்துல இருந்துதான் ஷூட் பண்ணுவாங்க'ன்னு அதுக்காக ஸ்பெஷலா இந்த ஆர்மரை யூஸ் பண்ண சொன்னேன். ஆக்சுவலி இந்த ஆர்மர் மாதிரி சத்ரியன் பாஸோட அம்மா யூஸ் பண்ணுவாங்க. நாங்க எல்லாம் சத்ரியன் பாஸோட அம்மாவுக்கு தான் பாடிகார்ட்ஸ். அதை சொல்லி இதை தயாரிச்சு கொண்டு வந்துட்டோம்.  

  மேடம் வீட்டை விட்டு வெளியே வர்ற ஒவ்வொரு நாளும் இதை அணிவாங்க." ருத்ரன் மெதுவாக ஷ்ரத்தாவை பார்த்தான்.

ஷ்ரத்தா இன்னும் அமைதியாக இருந்தாள். இந்த கதை இவனுக்கு எதற்கு என்ற ரீதியில்... 'ருத்ரன் மட்டும் மனதுக்குள் சத்ரியன் இருந்தா இவளை பாதுகாத்திருப்பான். இப்ப இல்லை.. இப்ப நான் காதலிக்கறேன். நான் பாதுகாக்க வேண்டாமா? இவளை தனியா விட்டுட்டு

நான் தனியா வீட்ல போய்.. இவளுக்கு என்னாச்சுனு நான் எப்படி சும்மா விடறது?' என்று மனசாட்சி அவனைக் கொன்றது. 

-தொடரும். 

-பிரவீணா தங்கராஜ். 

 


 
Posted : August 16, 2026 7:10 am
(@kothaihari)
Posts: 125
Estimable Member
 

இவன் திருந்த மாட்டான் காதல் தினிக்க பாக்கறதனால வெறுப்பு தான் வரும் என்று புரியல 


 
Posted : August 16, 2026 7:20 am
(@guna-sundari)
Posts: 138
Estimable Member
 

Wow super.  Ruthran u are too late. Always chatriyian will protect her in any form. Very intresting sis 


 
Posted : August 16, 2026 7:37 am
(@padma)
Posts: 26
Eminent Member
 

🥰🥰🥰


 
Posted : August 16, 2026 7:46 am
(@ambikahashini)
Posts: 47
Eminent Member
 

Interesting sis 


 
Posted : August 16, 2026 8:09 am
(@kalidevi)
Posts: 140
Estimable Member
 

Ingeum vanthutangla avala kola panrathuku ithula intha ruthran vera romba torture paniten orukane


 
Posted : August 16, 2026 8:12 am
(@subhakumar85)
Posts: 112
Estimable Member
 

Dei nee yellam chathriyan kitta kooda vara mudiyathu.. poda summa 


 
Posted : August 16, 2026 9:14 am
(@muthupriyabalaji)
Posts: 11
Active Member
 

அச்சச்சோ நம்ம கமிஷனர் வந்துட்டாரா அந்த கர்ஜனை குரலில் தெரிஞ்சுக்க வேண்டாமா நமது தர்ஷூ செல்லம்னு, போங்க சகி இவ்வளவு சொல்லிட்டு நம்ம தர்ஷவ பேச விட மாட்டேன்டிங்க


 
Posted : August 16, 2026 10:30 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 127
Estimable Member
 

Rudhran ne yosikira pathukapu ellam already Chathriyan avaluku ready panni vachitu than poi irukan 


 
Posted : August 16, 2026 12:02 pm
(@crvs2797)
Posts: 188
Estimable Member
 

தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 37)

அடப்பாவமே..! ஷ்ரத்தா கிட்ட பழைய கேஸை கொண்டு போனால் தான் துரத்தி, துரத்தி அடிக்கிறாள்ன்னா, இந்த கமிஷ்னரும் இல்ல சத்ரியன் கேஸ்ன்னாலே மூஞ்சை திருப்புறாரு.

அது சரி, கமிஷ்னர் துரத்தி விட்டவுடனே இந்த ருத்ரன் எதுக்கு இப்ப திரும்பவும் ஷ்ரத்தா முன்னாடி வந்து நிக்குறான்..?
ஷ்ரத்தாவுக்கு கோபம் வந்து சந்திரமுகி ரேஞ்சுக்குப் போய்
'வதலவா நன்னி'ன்னு எரிஞ்சு விழறவரைக்கும் இவன் சும்மா இருக்க மாட்டான் போலவே.

நல்ல வேளை, ஷ்ரத்தா அந்த சேப்டி ஆர்மரை போட்டிருந்ததால உயிர் பிழைச்சாள், இல்லைன்னா அவ்வளவு தான். போச்சு போ, இப்ப இவனும் இவளுக்கு பாடி கார்டா மாறி அவ வீட்லயே வந்து உட்காரப் போறானோ...?
ஹேய் பகவான்... பச்சாஹூ மீ.

😢😢😢
CRVS (or) CRVS 2797


 
Posted : August 16, 2026 2:34 pm

Scroll to Top