மதுர ஜில்லா... மச்சானே!-64
அத்தியாயம்-64
அதிகாலை நல்ல நேரத்தில் 'மகா அக்ரோ பிரைவேட் லிமிடெட்' என்ற பெயர் பலகை புதிய கட்டிடத்தின் முன்பு மின்னிக் கொண்டிருந்தது.
வாசலில் மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. வண்ணக் கோலங்கள், வாழைமரங்கள், மலர்த் தோரணங்கள் என தொழிற்சாலை முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.
அகிலன் குடும்பம், இனியன் குடும்பம், மதுராவின் பெற்றோர், உறவினர்கள் என அனைவரும் ஒன்றாகக் கூடியிருந்தனர்.
பூஜைக்கான ஏற்பாடுகளை ஐயர் செய்து கொண்டிருக்க, மீனாட்சி சுற்றிப் பார்த்தார்.
"காவ்யாம்மா... வா. விளக்கு ஏத்தி பூஜையை ஆரம்பிச்சு வை." என்றதற்கு காவ்யா உடனே இரண்டு கைகளையும் தூக்கினாள்.
"அய்யோ அத்தை... சாமி விஷயம்னா எனக்கு ஒண்ணும் தெரியாது. நான் ஏதாவது ஏடாகூடமா பண்ணிடுவேன்." அவளது பதிலில் எல்லோரும் சிரித்தனர்.
மீனாட்சி சிரித்தபடி, "அப்போ மதுரா... நீ செய்யும்மா."என்று அழைத்தார்.
மதுரா பதறி, "நா... நானா? இல்ல அத்தை... பெரியவங்க நீங்க அத்தை இருக்கிங்க நீங்களே செய்யுங்க." என்று பின் வாங்கினாள்.
வேல்விழி அருகே வந்து அவள் தோளைத் தட்டினார்.
"உன் புருஷனும்... உன் மச்சானும் சேர்ந்து தொழில் ஆரம்பிக்கிறாங்க. வீட்டோட மூத்த மருமக நீதான். நீதான் முன்னாடி நின்னு செய்யணும்." என்று மெதுவாக முன்னே தள்ளினார். வேறு வழியில்லாமல் மதுரா விளக்கேற்றி, கற்பூர ஆரத்தி காட்டி, பூஜையை நிறைவு செய்தாள். ஐயர் தீபாராதனையை அவள் கையில் கொடுக்க, ஒவ்வொருவரிடமும் எடுத்துச் சென்றாள்.
முதலில் இனியன் முன் நின்றாள். அவன் புன்னகையுடன் தீயின் வெப்பத்தை ஒற்றிக்கொண்டு கண்களில் ஒத்திக்கொண்டு கும்பிட்டான்.
அடுத்ததாக வேல்விழி, அருளாளன், மீனாட்சி, அதியமான் என அனைவரும் பக்தியுடன் கும்பிட்டனர். அவரவர் இந்த வியாபாரத்தை ஓரளவு அறிந்து, வியாபாரம் பெருக வேண்டினர்.
மதுரா அகிலன் முன் வந்தபோது தீபத்தின் வெப்பத்தைத் தொட்டு கும்பிட்டவன், மதுராவைப் பார்க்காமல் சட்டென்று காவ்யாவை நோக்கித் திரும்பிவிட்டான்.
அதை கவனித்த மதுரா அமைதியாக அடுத்தவரிடம் நகர்ந்தாள். தன்னை போலவே மச்சானும் தயங்கி பழகுவதை புரிந்தாள்.
பூஜை முடிந்ததும் அனைவரும் தொழிற்சாலைக்குள் சென்றனர்.
ஒவ்வொரு இயந்திரத்தையும் காட்டியபடி இனியன் விளக்கிக் கொண்டே வந்தான்.
"இந்த கிரேடிங் மெஷின் மட்டும் பன்னிரண்டு லட்சம். இது கிளீனிங் லைன். அந்த பேக்கிங் யூனிட் முழுக்க ஆட்டோமேட்டிக்''. என்று விளக்க காவ்யாவும் ஆர்வமாக அனைத்தையும் பார்த்தாள்.
"கிளையன்ட்ஸ்கிட்ட பேசிட்டியா?" என்று இனியன் காவ்யாவிடம் கேட்டான். "ம்ம்ம்... எல்லாரும் நம்ம முதல் ஷிப்மென்ட்டுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க." என்றாள் அவளும்.
அகிலனிடம் உடனே "ஏற்றுமதிக்கான அப்ரூவல், ஃபுட் டிபார்ட்மெண்ட் சர்டிபிகேட்... எல்லாம் வந்துடுச்சுல?" என்று கேட்க, "பக்காவா வந்துடுச்சு. இனிமே வேலை ஆரம்பிச்சுடு." என்று அகிலன் திருப்தியாகச் சொன்னான்.
அந்த நேரம் அருகில் நின்றிருந்த இளையமதி, மதுராவை தனியாக அழைத்து சென்று மெதுவாகக் கேட்டார்.
"ஏன்டி... அவளோடதான் தொழில் ஆரம்பிக்கணுமா? இனியன் பிரெண்ட்னா எப்படி அகிலனை கட்டிக்கிட்டா எனக்கு புரியலை.
இதுல அவளும் உன் புருஷனும் இப்போ ரெண்டு பேரும் சேர்ந்து பிசினஸ் வேற." மதுரா அமைதியாக அன்னையை பார்த்தாள்.
"அவங்க என் வீட்டுக்காரரோட சிநேகிதி அம்மா. இங்க வந்த பிறகு அகிலன் மச்சானை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. இப்ப நண்பர்களா சேர்ந்து தொழில் ஆரம்பிக்கிறாங்க. அதுல என்ன இருக்கு?" என்ற போதும் இளையமதி இன்னும் முணுமுணுத்தாள்.
"முன்னாடி ஆகாதவங்க... இப்போ எப்படி இந்தளவு நெருக்கமா இருக்க முடியும்னு கேட்கறேன்." என்று சந்தேகத்துடன் கேட்டார். மதுராவோ "ஏன்ம்மா... பெரியமாமா சின்ன மாமா நல்லபடியா பேசி சிரிச்சா உனக்கு பிடிக்கலையா? இரண்டும் உன் அண்ணன்கள் தானே. சொந்தம் ஒன்னு சேர்ந்ததுனு சந்தோஷப்படு. பிள்ளைய வாழ விடாம ஆத்தாக்காரியே கெடுத்தானு பெயர் வாங்காத" என்று படபட பட்டாசு போல பேசி முன்னே சென்றாள்.
கல்யாண சுந்தரமும் மகள் ஏதோ முகமலர்ந்து நடமாடுவதில் நிம்மதி கொண்டார். அதிலும், நிலானி விஷயத்தில் இனியன்-அகிலன் என்று இருவரும் வந்து நின்றதும், எதுவானாலும் மாப்பிள்ளைகள் தேவை என்ற ரீதியில் புரிந்துக் கொண்டார். அதனால் அடக்கியே வாசித்தார்.
நிலானியிடம் இளையமதியோ "என்னடி இவ உங்கக்கா இப்படி பேசிட்டு போறா" என்று அங்கலாய்க்க, நிலானியோ "அகிலன் மச்சானுக்கு நல்ல அக்கா கிடைச்சிருக்குன்னு சந்தோஷப்படு. தேவையில்லாம ஏழரை இழுக்காத. காவ்யா அக்கா இனியன் மச்சான் பிரெண்ட்ஸ்னு சொன்னாங்களே அந்த விளக்கம் போதாதா?" என்று அதட்டினாள்.
"ம்கூம்..." என்று இளையமதி முகம் சுளித்துக் கொண்டார்.
பூஜை முடிந்ததும் மதுரா வீட்டில் செய்து கொண்டு வந்த கேசரியை வாழை இலையில் வைத்து அனைவருக்கும் வழங்கினாள்.
வேல்விழி பார்த்துக்கொண்டே அனைவருக்கும் தந்து முடித்தவள் அகிலனுக்கு வழங்க தயங்கினாள்.
"மதுரா.. இது யாருக்கும்மா? இலையில வச்சிட்டு கொடுக்காம இருக்கு"
என்று கேட்டார். அப்போது எழிலரசனுடன் நின்றிருந்த அகிலனைச் சுட்டிக் காட்டி,
"அகிலன் மச்சானுக்கும்... எழிலரசனுக்கும் அத்தை... அத்தை.. நீங்க கொடுங்க." என்றாள்.
"ஏன்மா தயக்கம்... மச்சான்னு சொல்லிக் கொடும்மா." என்று வேல்விழி சொல்ல, மதுரா உடனே திரும்பி திரும்பி பார்த்து கேசரியை அகிலனிடம் நீட்டினாள்.
"அகிலன் மச்சான்..." என்றதும் அவன் திரும்ப கேசரியை நீட்டியபடி தலைகுனிந்தவளை கண்டு புரிந்தபடி வாங்கிக்கொண்டான்.
ஒரு நொடி தயங்கியவன், ம..மதுரா.. உ..உனக்கு... காவ்யாவும் இனியனும் சேர்ந்து தொழில் ஆரம்பிக்கிறதுல எந்தத் தயக்கமும் இல்லையே?" என்று மெதுவாகக் கேட்டான்.
மதுரா அவனை ஒரு நொடி நேராகப் பார்த்தாள். பிறகு சிறிய புன்னகையுடன்,
"இல்ல மச்சான்" என்று மட்டும் தலையசைத்துவிட்டு அடுத்தவர்களுக்கு கேசரி கொடுக்கச் சென்றாள்.
அந்த ஒரு பதிலே அகிலனின் மனதிற்கு ஒரு நிம்மதியைத் தந்தது. அவன் முகத்திலும் மெதுவாக ஒரு புன்னகை மலர்ந்தது.
இல்லையா பின்னே... நீண்ட நாட்களுக்கு பிறகு மதுராவிடம் நேரிடையாக பேசியிருக்கின்றான். அதுவும் இயல்பாக பேச முனைந்து. இது கூட வீட்டில் மதுராவிடம் கேட்க வேண்டும் என்று உள்ளுக்குள் உறுத்தியதால் கேட்டான்.
அதன்பின் காவ்யாவிடம் வந்தவன், கேசரியை விழுங்க, "உங்க அத்தை பொண்ணிடம் கேட்டாச்சா..? இனியனோட நான் வொர்க் பண்ணப்போறதுல அவங்களுக்கு தயக்கமில்லையே. எல்லாம் ஓகே தானே" என்றதும் அகிலன் புன்னகையுடன் தலையாட்டினான்.
"சோ ஸ்வீட் பாய். கையை கன்னத்தில் தீண்ட சென்றவளிடம், "காவ்யா.. நம்ம ரூம் இல்லை. டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணறியா. பெரிப்பா பெரிம்மா நம்மளையே பார்க்கறாங்க." என்றான்.
"ம்கூம்.. உங்க பெரிப்பா பெரிம்மா மட்டுமா? உங்க அத்தையும் மாமாவும் தான். " என்று கிசுகிசுக்க, "தெரியுதுல்ல தள்ளி போடி" என்றான்.
"பார்டா... அகில் மச்சான் 'டி' போட்டு எல்லாம் விரட்டுறதை. ம்ம்ம். இந்த ஜல்லிக்கட்டு காளை ரூம்ல அடங்கி தானே போகும். அப்ப கவனிச்சிக்கறேன்" என்று மலர்ந்தபடி பேசி செல்லவும் அகிலன் போனை எடுத்து மாமனார் ராஜாராமுக்கு வீடியோ காலில் அழைத்தான்.
எப்படியும் தொழற்சாலையை வளைத்து வளைத்து காட்டி எல்லாம் நல்லபடியாக முடிந்ததை தெரிவித்தான்.
அவருமே வாழ்த்தி முடித்து, முதல் ப்ராஜெக்ட் இங்கு வந்து சேர்ந்து அதை வினியோகம் நடந்ததை கண் குளிர பார்த்துவிட்டு தான் இந்தியா வருவதாக தெரிவித்தார்.
விரைவில் அதற்கான பணி தான் நடைப்பெறும் என்று அகிலன் கூறி அணைத்தான்.
இனியனோ கேசரி கொடுக்க வந்த மதுராவை பிடித்து நிறுத்தி, "மதுரா இடமெல்லாம் எப்படியிருக்கு?" என்று கேட்க, "நான் படிச்சவ கிடையாது. ஏதேதோ மெஷின் லட்சகணக்கில வாங்கி வச்சியிருக்கிங்கனு மட்டும் தெரியுது. நீங்களும் அவங்களும் தொழில்ல நல்லபடியா முன்னேறி நல்லா சம்பாதிக்கணும்." என்றாள். கேசரியை சுவைத்துவிட்டு இலையை ஓரமாய் வைத்தவன், அங்கிருந்த அறையில் குழாயிருக்க கை கழுவி, மதுராவின் சேலை முந்தானையில் ஈரக்கையையும் வாயையும் துடைத்தான்.
அவனிடம் கைக்குட்டை இருந்தும் அவளது சேலை முந்தானையை தான் உபயோகித்தவன் மெதுவாக அவளது வெற்றிடையில் கையை நுழைத்து கட்டிக் கொண்டான்.
"என்னடி வசிய பொடி வச்சியிருக்க? சேலையும்... நீண்ட ஜடையும்.. பூவும்... பொட்டும், ம்ம்ம் காலையில இருந்து இங்கயும் அங்கயும் என் கண் முன்ன அழகா சுத்திட்டு இருக்க. உன்னை தவிர கண்ணு எங்கயும் போக மாட்டேங்குது.
அதுவும் கையில தீபாராதனை தட்டு வச்சிட்டு முன்ன நின்ன பாரு... அப்படியே தெய்வீக அழகு. இந்த கோவில்ல எல்லாம் ஹீரோயின் விளக்கேத்திட்டு நடந்து வர்ற மாதிரி நடமாடின. அப்படியே அள்ளிக்கணும்னு இருக்கு." என்று கழுத்தில் முத்தமிட முயன்றான்.
இனியனின் வழுவழுப்பான தாடை அவள் மேனியில் படவும் நெளிந்தவள், "எல்லாரும் இங்க தான் பக்கத்துல இருக்காங்க. நீங்க பாட்டு தனியா அழைச்சிட்டு வந்து இப்படி பேசாதிங்க. தயவு செய்து கையை எடுங்களேன்.
எழிலரசனும் நிலானியும் சின்ன பிள்ளைங்க. ஏதாவது பார்த்து ஏடாகூடமா நினைக்க போறாங்க. கட்டி பிடிக்காம தள்ளி நில்லுங்களேன்" என்று வேண்டாத குறையாக கூறினாள்.
"சரி... இப்ப விடறேன். நைட்... உன்னை இப்படி கட்டிக்கலாமா?" என்று அனுமதி வேண்டி நின்றான்.
"இதென்ன புதுசா அனுமதி கேட்கறிங்க" என்றாள்.
"இடுப்பை கட்டிக்கிட்டு மடில முகத்தை வச்சி தூங்க கேட்கலை. உன்னை முத்தம் வச்சி தூங்கவிடாம செய்ய.. 'அதுக்கு' அனுமதி கேட்கறேனாக்கும். எத்தனை நாள் கோபமா இருப்ப. மன்னிக்க தோணலையா?'' என்றான்.
"அதெல்லாம் மன்னிச்சாச்சு. விடுங்க ப்ளிஸ்" என்றாள்.
"நிஜமா... மன்னிச்சிட்டியா" என்று கேட்க "ஆங்" என்றதும் அவளை நெஞ்சில் அணைத்துக் கொண்டான். லேசாக கண்ணீர் துளிர்க்க, அகிலன் காவ்யா வரும் அரவம் கேட்டது.
சொல்லப் போனால் இனியன் மதுரா நெருங்கி நிற்பதை கண்டு அகிலன், "வா போகலாம்" என்று காவ்யாவை இழுக்க, இனியனோ "ஆங்..அகிலா.. இங்க வாட்டர் பெசிலிட்டி லிமிட்டா தான் இருக்குமா?'' என்று கண்ணை துடைத்து கேட்டான்.
"இப்ப மோட்டார் கனெக்ட் பண்ணியது அரசாங்கத்துடையது. நாம இங்க போர் இறக்கிடலாம். தண்ணி பிரச்சனை வராது." என்று கூறினான்.
இனியன் மதுரா கையை விடாமல் பற்றியதில் அவளோ செல்ல துடித்தாள்.
"மன்னிச்சிட்டனு சொல்லிட்டு ஓடறதுலயே இருக்க, கூடவேயிருடி. இது என்னோட கனவு. கனவு நிறைவேறும் போது நீ என் கையை பிடிச்சிரு" என்றான்.
மதுரா தயங்கியபடி காவ்யாவை கண்டு நெளிய, காவ்யாவோ "கையை பிடிச்சிக்கிட்டு இருங்க. ஏன் பயப்படறிங்க யாரும் எதுவும் தப்பா பேசமாட்டாங்க. உங்கத்தை தானே பேபி கேட்டாங்க.. இல்லை நிஜமாவே அவங்களுக்கா?" என்று காவ்யா கேட்க, "அய்யோ காவ்யா.. அத்தை அது எங்களுக்கு புள்ளய பிறக்க கட்டியது. உங்களால அவங்க தான் பயந்து போறாங்க. செத்த இப்படி பேசாதிங்க. பாவம் அவங்க" என்று மதுரா சிரிக்க, அங்கே நால்வருமே புன்னகை அரும்ப நின்றனர்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 64)
அட.. நல்ல நாளும் அதுவுமா ஆடிவெள்ளியிலயே ஃபேக்டரியை திறந்தாச்சா... குட் சூப்பர்.
அப்பாடா....! ஒருவழியா மதுராவும் அகிலனும் பேசியாச்சு, மதுராவும் இனியனை மன்னிச்சாச்சு.
அடிப்பாவி..! இந்த காவ்யா சும்மாவே இருக்க மாட்டாளோ, விட்டால் வேல்விழியையும் அருளாளனையும் பேசி, பேசியே வெறும் வாயாலயே பொண்ணு பெத்துக்க வைச்சிடுவா போலயே..!
😀😀😀
CRVS (or) CRVS 2797
-
மதுர ஜில்லா... மச்சானே!-28
7 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-67
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே-70 (முடிவுற்றது)
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-39
3 weeks ago
- 25 Forums
- 330 Topics
- 1,588 Posts
- 6 Online
- 420 Members
