Forum

மதுர ஜில்லா... மச்ச...
 
Notifications
Clear all

மதுர ஜில்லா... மச்சானே!-63

9 Posts
9 Users
2 Reactions
164 Views
(@praveena-thangaraj)
Posts: 265
Member Admin
Topic starter
 
[#306]

அத்தியாயம்-63

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்... காலை நேரம் என்பதால் கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தனர். மணியோசை... நாதஸ்வர இசை... கற்பூர வாசனை... "மீனாட்சி தாயே..." என்று பக்தர்கள் உச்சரிக்கும் நாமம்... எங்கும் பக்தி நிறைந்த சூழலாக காட்சியளித்தது. 

மீனாட்சி அம்மன் சன்னதியில் காவ்யாவோ வாயை பிளந்து நின்றாள். 

  பொங்கல் வைக்குமிடத்தில், மீனாட்சி குடும்பமும், வேல்விழி குடும்பமும் எதிர்பாராவிதமாக சந்தித்துக் கொண்டனர்.

"அட மீனாட்சி... எங்க இந்தப்பக்கம்" என்று வேல்விழி அழைக்க, "வாங்க அக்கா.. நம்ம அகிலனுக்கு நல்ல பொண்ணு அமைந்து திருமணம் நல்லபடியா முடிந்தா, வர்ற மருமகளோட எடைக்கு எடை நவதான்யம் கொடுக்கறதா வேண்டுதல் வச்சேன். அதான் பொங்கல் வச்சிட்டு நிறைவேத்திடலாம்னு வந்தேன். நீங்க அக்கா" என்று மீனாட்சியும் புன்னகையுடன் கூறி கேட்டார்.

  "அதுவா... மதுரா நல்லபடியா ஹாஸ்பிடலில் இருந்து வந்ததும் பொங்கல் வைப்பதா வேண்டினேன்மா. நானும் மருமவளுக்காக தான் வந்தது." என்றார் வேல்விழி. 

காவ்யா சுற்றி சுற்றி கோவிலை ரசித்துக் கொண்டிருந்தாள்.

"வாவ்... இவ்வளவு அழகா இருக்கும் என்று நான் நினைக்கவே இல்ல." என்றாள். 

"இது எங்க மதுரை பெருமைம்மா. மதுரை என்றாலே முதல்ல நினைவு வர்றது இந்த மீனாட்சி கோவில் தான்" என்று மீனாட்சி பெருமையுடன் கூறினார்.

அப்போது அர்ச்சகர், "துலாபாரத்துக்கு வாங்க..." என்று அழைத்தார்.

"பொங்கல் வச்சிட்டாச்சு. தூரிகாவும் மதுராவும் கதை பேசியபடி பொங்கல் பானையுடன் பின்தொடர "காவ்யா... வாம்மா." என்று மீனாட்சி அழைத்துச் சென்றார்.

"என்ன அத்தை இது?" என்று கேட்டவளை, "சொன்னேனே.. கல்யாணமானா மருமகளை.. அதாவது உன்னோட எடைக்கு எடை தானியம் சாமிக்கு தர்றதா நான் வேண்டிக்கிட்டிருந்தேன். அது நிறைவேற்ற தான் உட்காரு." என்றார்.

  "அகிலா வாப்பா" என்றதும் தூரத்தில் இருந்தவன் தானியத்தை எல்லாம் மூட்டையோடு கொண்டு வந்தான்.   

    மதுரா வேல்விழி வேடிக்கை பார்க்க, தூரிகாவும் காவ்யாவுக்கு உதவும் பொருட்டு, எடைத்தராசில் ஏறவும், சேலையை ஓதுக்கி நிறுத்தினாள். 

  "சுடிதாரே போட்டிருப்பேன். எங்கங்க சேலையை பிடிக்கணும்னு கூட தெரியலை" என்று மெதுவாக அமர்ந்தாள்.

மறுபுறம் அரிசி, துவரம் பருப்பு, பச்சைப் பயறு, கோதுமை என்று தானியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அகிலன் வைத்தான்.‌

  "அகில்... இதெல்லாம் என்ன பண்ணுவாங்க?" என்று காவ்யா தான்யத்தை எடுத்து வைத்தவனிடம் கிசுகிசு, "உஸ்.. பேசாத..." என்றான்.

"சொல்லுப்பா.. இதை வச்சி என்ன பண்ணுவாங்க?' என்றதும், "அன்னதானத்துக்கு போகும்." என்று மதுரா பக்கமிருந்து பதில் கூற, "ஓ... நாட் பேட்." என்று காவ்யா மனதார மகிழ்ந்தாள்.

  அகிலன் "பச்.. காவ்யா.. இது ஒன்னும் வீட்டு ஊஞ்சல் இல்லை. அமைதியா உட்காரு." என்று அதட்டவும் செய்ய, மதுரா வேடிக்கை பார்த்தவளாக லேசான கண்ணீர் துளிர்த்திட, அவ்விடம் விட்டு அகன்றாள். 

  இனியனுக்கோ அமைதியாக மதுராவை பின் தொடரும் வேலையை செய்தான். 

  மதுரா மனதில் என்ன‌ உள்ளது அவள் மனம் விட்டு பேசினால் தனக்கு நன்றாக இருக்குமென அவளையே வட்டமிட்டு வந்தான்.

காவ்யாவின் எடைக்கு எடை போட்டிருந்த அகிலனிடம், மீனாட்சியோ, "இன்னமும் தானியம் தேவைப்படுமோ நீ என்னப்பா கொண்டு வரலையா?" என்று கேட்டார்.‌

"அம்மா... இதுவே எழுபது கிலோ இருக்கும். உம் மருமவ அறுபத்தி அஞ்சு தான் இருப்பா" என்றான் கணிப்புடன். அவன் கூறியது போல சரியாக இருக்க மகனை மெச்சிக் கொண்டார். 

வேல்விழி மீனாட்சியை அழைத்துக் கொண்டு கோவிலின் மற்றொரு பகுதியில் சென்றார். அங்கு மரத்தில் ஏராளமான சிறிய மரத்தொட்டில்கள் கட்டப்பட்டிருந்தன.

வேல்விழியும் பூஜை செய்து, ஒரு சிறிய தொட்டிலை எடுத்துக் கட்ட ஆரம்பித்தார்.

அதைப் பார்த்த மதுராவின் முகம் மாறியது. அவளது மனதில் ஒரு குற்ற உணர்வு எழுந்தது. அது அவளுக்கு தேவையற்ற குற்றவுணர்வே. ஆனால் தவிர்க்க முடியவில்லை. அப்போதுதான் அங்கு வந்த காவ்யா ஆச்சரியமாக கேட்டாள்.

"இதென்ன... மதுரா?" என்று காவ்யா கேட்கவும் மதுரா மெதுவாகச் சொன்னாள்.

"தொட்டில் கட்டினா... குழந்தை பிறக்கும்னு சொல்வாங்க." என்றாள் வருத்தத்துடன்.‌

காவ்யா உடனே வேல்விழியைப் பார்த்தாள். "ஓ... அத்தைக்கு டூ பாய் பேபியா இருக்காங்கனு,  கேர்ள் பேபி வேணும்னு வேண்டிக் கட்டறாங்களா?" என்று சாதரணமாக கூற, வேல்விழி 'ஆத்தி" என்று நெஞ்சை பிடிக்க, அடுத்த நொடியே மதுரா பதறினாள்.

"அய்யோ... இல்ல... இல்லங்க..." அவள் தடுமாறுவதைப் பார்த்த தூரிகா சிரித்தாள். மதுரா சோகத்தை பதட்டமாக மாற்றிய பெருமை காவ்யாவை சேருமே.

"காவ்யா... அது அவங்களுக்காக இல்லம்மா." என்றார் மீனாட்சி எப்பவும் போல மருமகளின் சந்தேகம் தீர்க்க வந்து விட்டார்.‌

"அப்போ யாருக்கு?" என்றாள். 

"மதுராவுக்காக." அந்த ஒரு வார்த்தை மதுராவை அமைதியாக்கியது.

"இவ சீக்கிரம் நல்ல செய்தி சொல்லணும்னு வேண்டிக்கிட்டுதான் தொட்டில் கட்டுறாங்க. கடவுள் அருள் இருந்தா மதுரா-இனியனுக்கு நல்லபடியா அடுத்த குழந்தை தங்கணும்னு ஆசைப்படறாங்க" என்றதும் மதுரா சங்கடமாய் பார்த்து புன்னகைத்தாள்.

  "ஓ... அப்ப அத்தை.. நீங்களும் கட்டுவிங்களா?" என்று மீனாட்சியை கேட்க, மீனாட்சியோ மகனை கண்டார்.‌

  மகனுக்கும் காவ்யாவுக்கும் நடந்த திருமணத்தில் அவன் எந்தளவு காவ்யாவிடம் பழகுகின்றானென தெரியாமல் அவசரம் காட்டிட முடியாதே. ஆனால் மருமகளின் எடையை எல்லாம் நன்றாக தான் அறிந்து வைத்திருக்கின்றான் என்றதும் தொட்டில் கட்டும் ஆசை உண்டானது. 

   "அத்தை.. எனக்கும் அதோ அந்த பாப்பா இருக்கற தொட்டிலை கட்டுங்க. காட் கிரேஸ் இருக்கானு பார்க்கலாம்" என்றாள். 

  காவ்யாவை பார்த்து, "நிஜமா.. கட்டவா? உனக்கு சங்கடமா இருக்காதே?" என்று கேட்டுவிட, "நோ பிராப்ளம்... கட்டுங்க. அகில் மச்சான்..‌ என்ன ஓகேவா" என்று கட்டைவிரலை காட்டி கேட்க, அவனோ இனியன், அம்மா, தூரிகா, மதுரா, பெரிம்மா இருக்க, வெட்கத்துடன் தலைகோதி நெளிந்தான்.‌

  'என்னவோ பண்ணு' என்று நழுவ முற்பட்டான்.‌

  மீனாட்சியோ மகனை பிடித்து நிறுத்தி, "நீயும் மருமகளும் சேர்ந்து கட்டுங்க." என்று தொட்டிலை வாங்கி கையில் தர, சங்கடம் பெற்றவனோ 'இனியனுக்கு முன்ன நான் குழந்தை பெத்துட்டா... அதுவும் சரியா இருக்காது. அதனால இனியன் மதுராவுக்கு குழந்தை பிறந்தப்பிறகு எனக்கு நல்லது நடந்தா சரி' என்றவாறு அகிலன் நினைத்து கட்டினான்.

காவ்யாவோ ஏதோ வித்தியாசமான சடங்கு போல செய்து நின்றாள். 

   பொங்கலை சாமிக்கு வைத்துவிட்டு கும்பிட்டுவிட்டு வெளியே வந்ததும் "பொசுக்குனு எனக்கு பொம்பள பிள்ளை வேண்டும்னு நான் ஆசைப்பட்டதா கட்டினேன்னு கேட்குறா. என்ன‌ மீனாட்சி எப்படி சமாளிக்கற?" 

என்று சிரிக்க, மீனாட்சியோ "அதொன்னவோ சில நேரம் வெடிக்குண்டு பேச்சுக்கா.  முதல்லயிருந்தே இப்படி  மகிழ்ச்சியா எசக்கு பிசகா மாத்தி பேசிடறதுல நாங்களும் பழகிட்டு இருக்கோம்" என்று கூற, மதுரா கண்கள் காவ்யாவையே கண்டாள்.

   "நானும் மதுராவிடம் ஒன்னும் மண்ணுமா பழக முயற்சி பண்ணறேன்.‌ ஒன்னும் வேலைக்கு ஆகலை. மாமியாரா நிறைய முறை வாய் பேசாம இனியன் இஷ்டத்துக்கும், இனியன் அப்பா இஷ்டத்துக்கும் விட்டு வேடிக்கை பார்த்துட்டேன். இப்ப ஏதாவது பேசலாம்னா கூட முடியலை‌. இந்த தொட்டில் கூட நானா என் ஆசைக்காக கட்டறேன். அவ மனசுல என்ன ஓடுதோ. முன்ன மாதிரி கூட இனியன் நடந்துக்கறதில்லை." என்றார்.‌

  தூரிகாவுமே மதுராவிடம், "பெரிம்மாவுக்கு பெண் குழந்தை  பிறக்கும்னு கேட்டா பாரு மதுரா. இந்த லூசு அண்ணியை என்ன செய்ய?" என்று சிரிக்க, 'பச் லூசு அண்ணினு சொல்லாதடி. தெரியாம தானே கேட்கறாங்க" என்றாள். 

காவ்யாவையே உற்றுஉற்று பார்த்தவள், "அகிலன் மச்சானுக்கு நல்ல ஜோடி தான். நல்லா அழகாயிருக்காங்க. நல்லா பேசறாங்க. சிரிச்ச முகமா, பெரிய படிப்பெல்லாம் படிச்சி. உங்க குடும்பத்துலயும் ஒன்னுமண்ணுமா ஆகிட்டாயில்ல?" என்று விசாரிக்க தூரிகாவோ "என்ன‌ சொல்லு. எங்க இனியன் அண்ணனோட பொண்டாட்டி கூட நல்ல ஜோடி தான் நல்ல அழகு. சிரிச்ச முகம், நல்லா பேசும், படிப்பு கொஞ்சம் தான். ஆனா ஒன்னும் மண்ணுமா பழகும்." என்று உன்னையும் நீ குறை கூறிக்கொள்ளாதே என்றது போல தூரிகா பேசினாள். 

மதுரா தூரிகாவுடனும் காவ்யாவுடனும் நழுவ,  கோவிலின் பிரகாரத்தை சுற்றி நடந்து கொண்டிருந்தனர் இனியனும் அகிலனும்.

இருவரின் பேச்சும் மீண்டும் பிசினஸைச் சுற்றியே இருந்தது.

"கம்பெனி ரெஜிஸ்ட்ரேஷன் முடிஞ்சதும் அடுத்த ஸ்டெப் ஈசியா போயிடும்." என்றான் இனியன்.

அகிலன் "எனக்கு ஏற்றுமதியெல்லாம் பெருசா ஆர்வமில்லை. எல்லாம் அவளா ஆரம்பிக்கறா.

  அங்க அமெரிக்கால ஸ்கூல் படிக்கிற பசங்க கூட சம்பாதிக்க ஆரம்பிச்சிடுவாங்க... நான் அதனால என் தேவைக்கு உன்  பின்னாடி வர மாட்டேன்னு கிளாஸ் எடுத்துட்டா." என்றதும் இனியன் சிரித்தான்.

சில அடிகள் நடந்த பிறகு இனியன் குறும்பாகக் கேட்டான்.

"உனக்கு காவ்யாவோட குடும்பம் நடத்துறது கஷ்டமா இல்லையா?" என்றான்.

"ஏன்?" என்று அகிலன் முழித்தான். 

"ரொம்ப பெமினிசம் பேசுவாளே" என்றதும் அகிலன் சிரித்துவிட்டான்.

"உன்னை கூட 'டா' போட்டுத்தான் பேசுறா. அதை மாத்திக்கோனு சொல்லிட்டேன்

ஆனா திரும்ப சம்டைம் பெயரிட்டு சொல்லறா. 'டா' போடறா அதெல்லாம் தான் பக்குனு இருக்கு. ஊருல நாலு பேர் நோட் பண்ணறதுக்குள்ள பேச்சை மாத்தணும்." என்று காவ்யாவின் பேச்சுக்கும் தனக்கும் கூட சம்பந்தமில்லை என்று தெரிவித்தான். 

''அதெல்லாம் மாத்தற கேரக்டர் இல்லை. வாய்க்கு வந்ததை தான் பேசுவா." என்றவன் தயங்கி தயங்கி, "மோஸ்டா லிமிட்டோட தான் பழகியிருக்கேன் அகிலன். அதுல பிசினஸ் தான் அதிகம்."  என்று இனியன் இலைமறைவாய் நாங்கள் எல்லை மீறி பழகியது கிடையாதென தெரிவிக்க முனைந்தான்.

  அகிலன் அமைதியாக கேட்டு நின்றான். இனியன் இருக்கும் நேரமல்லவா மதுரா வீட்டில் அவளது இடையை பிடித்தோம். அதை இனியன் தவறாக நினைப்பானா? என்று அகிலன் பயந்தான். இங்கு அகிலனுமே மதுராவிடம் எல்லை மீறி பழகவில்லை என்றாலும் அதை கூறினால் அந்த சம்பவத்தை வைத்து தவறாக எண்ணினால்? அகிலனின் தவிப்பை கண்டு, இனியன் கண்ணை மூடி 'என்னடா பேசற, எவ்விதமாகவும் இந்த பேச்சே வேண்டாம்' என்ற நிலைக்கு சென்று "லைசன்ஸ் குயிக்கா வாங்கியதுக்கு தேங்க்ஸ்." என்றான் இனியன்.

"அட இங்க எல்லாரும் தெரிந்தவங்க. நாம போய் முன்ன நின்னா மடமடனு வேலை ஆகும். நமக்கான பத்திரம் சரியா இருக்க.‌‌.. உடனே வேலை முடிந்தது." என்றான்.‌

"எனக்கு இது பாஸ்ட் தான். தனியா இடம் பார்த்து எல்லா விஷயமும் பேசறப்ப ரொம்ப டிலே ஆச்சு. நீ சட்டுனு போற முடிச்சிட்டனு சொல்லற. ஒருவிதத்ததில குயிக்க முடிக்க நீ ஒரு காரணம். ஊர்ல நிறைய பேரை தெரிந்து வச்சியிருக்க." என்று பாராட்டினான். 

  "அதெல்லாம் இங்க படிச்சி சுத்தறதால தெரியும். நீ அமெரிக்கா போனதால தெரியாம இருக்கலாம். இது பெரிய விஷயமா?" என்றான் அகிலன்.‌

இவர்கள் இவ்வாறு பேசி செல்ல, மதுரா இருவரையும் பின் தொடர்ந்தவளாக நடந்தாள். 

  'தூரிகா.. இந்த பானையை பிடிடி" என்றதும் "ஆங்.. வர்றேன்மா." என்று நழுவ, காவ்யாவோ மதுராவிடம், "பெரிய அத்தை தொட்டில் எல்லாம் கட்டினாங்க. நானும் எனக்கு ஒன்னு கட்டினேன். 

ஆக்சுவலி இது... ஹஸ்பெண்ட் அண்ட் வொய்ப் சேர்ந்து கட்டுவாங்களா.. இல்லை யாருனாலும் கட்டலாமா? எனக்கு இப்பவும் டவுட் இருக்கு. வேல்விழி அத்தைக்கு கேர்ள் பேபி ஆசையா இருக்குமோனு." என்று கேலியுடன் கேட்டாள்.‌

மதுரா சிரித்தபடி, "அச்சோ.. அத்தைக்கு இந்த வயசுல ஏன்ங்க இந்த ஆசை. அவங்க எனக்கு ஒரு குழந்தை வேண்டும்னு தான் கட்டினாங்க. நீங்க வேற கிண்டலடிச்சிட்டு... அவங்க பையனுக்கு ஒரு பையனோ பொண்ணோ.. வர ஆசைப்படறாங்க." என்றாள்.

"இனியனுக்கா? என்றதும் மதுரா அமைதியாகவும், "நான் ஒன்னு கேட்கவா?" என்றாள் காவ்யா.‌

மதுரா மெதுவாக காவ்யாவை ஏறிட, ''உனக்கு தாலி கட்டியது விருப்பமில்லாம நடந்தது‌னு எனக்கு தெரியும். 

குழந்தையை அபார்ஷன் செய்ததும் உன்னோட பாயிண்ட் ஆஃப்யூல ரைட், இப்ப மறுபடியும் அத்தை தொட்டில் கட்டறாங்களே.. உனக்கு ஏதாவது அகைன்ஸ்டா இருந்தா... அஸ் எ பிரெண்டா நீயே அவங்களிடம் ஷேர் பண்ணி நோ சொல்லலாமே." என்றதும் மதுரா, தான் செய்த காரியத்தின் வீரியத்தை யாரிடமாவது கேட்க எண்ணி, காவ்யாவிடம் "நான் குழந்தையை அழிச்சது தப்பில்லையா? ரைட்டுனு சொல்லறிங்க" என்று கேட்டாள். 

  காவ்யா புரியாது மதுராவை நோக்கவும், மதுராவே, "இல்லை... ஒரு உயிரை கொன்றது எனக்குள்ள குற்றவுணர்வை ஏற்படுத்துது. என்னால இயல்பா இருக்க முடியலை. ஏதோ செய்யக் கூடாததை செய்தது போல கஷ்டமாயிருக்கு" என்றவள் கண்ணீரை உகுத்தினாள்.‌

காவ்யாவோ, "இதுல குற்றவுணர்வுல நீ துடிக்க அவசியம் என்ன? குழந்தை பிற்காலத்தில பிறந்து வளர்ந்து என்ன செய்யனு நீ பேசியது ரொம்ப கரெக்ட். பெத்துட்டு அப்பா ஒரு பக்கம், அம்மா ஒரு பக்கம்னு அலையவிடாம, இப்பவே தெளிவா முடிவெடுத்து குழந்தையை தடுத்திருக்க. எனக்கு இது தப்பா தோணலை மதுரா. குழந்தை எப்ப பெத்துக்கணும்னு நீ ஆசைப்படறியோ அப்ப பெத்துக்கறது தான் ரைட். ஏன்னா... குழந்தையை வளரும் போது அன்போட வளர்க்கணும். அம்மாவோட மைண்ட் செட் ரொம்ப முக்கியம். ஆனா திரும்ப எல்லாம் கலைச்சி கலைச்சி விளையாடாத. உன்னோட ஹெல்த் பாதிக்கும். இதை மட்டும் நினைவு வச்சிக்கோ. உனக்கு பிடிக்காம எதுவும் பண்ணாத. உனக்கு ஓகேன்னா.. குழந்தைக்கு எஸ் சொல்லலாம். பட் உனக்கு வேண்டாம்னா... எத்தனை காலம்னாலும் நீ தவிர்க்கலாம்‌. இது உன்னோட சாய்ஸ். கேர்ஸ் எப்பவும் நோ சொல்லலாம். அது ஹஸ்பெண்டா இருந்தாலுமே... இதுல குற்றவுணர்வுக்கு இடமேயில்லை." என்றாள் ஆதுரமாக. 

மதுராவோ "அவுக ஆசைப்பட்டா.." என்று கேட்டுவிட்டு இனியனை பார்த்தாள். 

  "அவனா சுமக்க போறான். டென் மந்த் மதுரா... டென் மந்த் ஈஸியில்ல.. நீ தானே சுமக்கணும். சோ நீ இதுல முக்கியமா டிசைட் பண்ணணும். அவன் புஷ் பண்ணினா.. நோ சொல்லு. ஏய்.. அவன் இப்பவும் புஷ் பண்ணறானா?" என்று கேட்க மதுரா இல்லை என்று வேகமாய்  தலையாட்டினாள்.‌

   "ம்ம்ம். சாரி கேட்டானா?" என்று துளையிட்டபடி காவ்யா கேட்க, மதுரா ஆமென்று தலையாட்டி, "ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு வந்ததும் நிறைய பேசினார்... திட்டினார்... அழுதார்.. சாரி கேட்டார். இப்பவரை என்னை தீண்டாம, எட்டியிருந்து ரசிக்கறார். கா... காதலிப்பதா.. சொல்லறார். என்னால தான் நம்ப முடியலை.

   படிச்ச நீங்க எங்க.. உங்களை அவ்ளோ சீக்கிரம் மறந்து என்னை ஏத்துக்க முடிந்ததா?'' என்று பேசிவிட்டு உதட்டை பல்லால் அழுத்தினாள்.

  "அழகா பொம்ம மாதிரி தலையாட்டற. இதுக்கே இனியன் சொக்கி விழுந்திருப்பான்." என்று பேச, மதுரா ஆச்சரியமாய் பார்த்தாள். 

"என்ன அப்படி பார்க்கற? உன் புருஷனை அவன் இவன்னு சொல்லறேன்னா?" என்றதும், இல்லையென தலையாட்டினாள். 

  "மதுரா.. வாயை திறந்து பேசு. என் நாத்தனார் கூட மட்டும் தான் வாயாடுவியா? ஆனா அவளிடம் இந்த டாபிக் பேச முடியாதே" என்றதும், மதுரா, "தூரிகா என்னயிருந்தாலும் நாத்தனாராச்சே. அண்ணனை பத்தி தங்கச்சியிடம் என்னத்த பேச?" என்றாள்.‌

"தென்... யாரிடம் தான் பேசுவ?" காவ்யா கேட்டதும் மதுரா திருதிருவென முழிக்க, "அழகா முழிக்கறிங்க" என்று தாடை பிடித்து கொஞ்சாத குறையாக தீண்டினாள்.‌

"அச்சோ" என்று பின்னகரும் நேரம், ''இங்க பாரு... எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாம வர்றது லவ். எங்களுக்குள்ள முன்ன வந்தது எதிர்பார்ப்பு இருந்த காதலா கூட இருக்கலிம். இல்லை.... அதாவது நீயும் நானும் லவ் பண்ணி நான் அங்க எக்ஸ்போர்ட் பண்ணி, நீ இங்க இருக்கற செல்வாக்கில் அதை வினியோகம் செய்னு பிளான் செய்து, பிசினஸ் மூலமா வந்த காதல். அப்படின்னாலும் அது உண்மையா தான் நேசித்தோம். பட்... இப்ப அந்த காதல்... சுத்தமா இல்லை. நீ நம்பலைன்னாலும் அதான் நிஜம். 

  என் சீனியரோட நான் பார்ட்னர்ஷிப்பா வொர்க் பண்ண போறேன். போனஸா அவர் என் அகிலோட பிரதர் அவ்ளோ தான். இதை தான் அகிலிடமும் சொல்லியிருக்கேன். 

  அகில் என்னை புரிந்துக்கிட்டார்னு நினைக்கறேன். அதனால தான் இனியனோட பிசினஸ் பண்ண தடுக்கலை. 

  இனியனுக்கும் என்னை நல்லா தெரியும். இதுல உன்னை வேற காதலிக்க ஆரம்பிச்சிட்டான்னு அவன் கண்ணுல உனக்கான காதல் தெரியுது. அப்படியிருக்க லைப் நமக்குள் ஸ்மூத்தா கொண்டு போகணும். 

  அகில் உன்னை கண்டா தடுமாறி பேச மாட்டேங்கறார். 

நீ அவரை பார்த்தாலே முகம் திருப்பிக்கற, நார்மலா பேசு... அகிலன் உன்னோட மச்சான் தானே. இந்த உலகத்துல மாமன் மகனையே கட்டிக்காத அத்தை பொண்ணும் இருக்கா. நீங்க அந்த பேட்டர்ன்ல போயாச்சு. மச்சான் என்ற உரிமை எப்பவும் இருக்கும் மதுரா. அந்த உரிமையை விட்டுடாத." என்று கூறினாள்.‌

மதுராவோ "அகிலன் மச்சானை நிமிர்ந்து பார்க்க முடியலைங்க. அவரை நானும் ஏசிவிட்டுட்டேன். இப்ப எந்த முகத்துல பேசறது. இயல்பா பார்க்கற நாளுக்கு நானும் ஏங்கறேன்.. ஏன்... நானே இயல்பாகணும்னு தான் நினைக்கேன் முடியலை‌. அதுக்காக மனசுல இருக்காரானு கேட்காதிங்க. என்னோடதும் உண்மையான காதல் தான். ஆனா இப்ப அந்த காதல் சுத்தமா இல்லை." என்றாள். 

காவ்யாவோ கட்டி பிடித்து "ஓ புவர் கேர்ள். எல்லாமே சரியாகிடும் பீ ஸ்ட்ராங்" என்று தட்டி கொடுத்தாள்.‌

-தொடரும். 

-பிரவீணா தங்கராஜ். 

 

 

 

 


 
Posted : August 13, 2026 8:50 am
(@padma)
Posts: 26
Eminent Member
 

Wav kavya very cute straight forward 


 
Posted : August 13, 2026 9:20 am
(@guna-sundari)
Posts: 138
Estimable Member
 

Super super. Kavya u cleared madura confusions in easy manner. Eniyian also cleared his mind to akil. Happy family. Excellent narration sis. Very intresting sis.


 
Posted : August 13, 2026 9:32 am
(@kothaihari)
Posts: 125
Estimable Member
 

நைஸ் ... காவ்யா செம அல்டிமேட். ...


 
Posted : August 13, 2026 9:41 am
(@subhakumar85)
Posts: 112
Estimable Member
 

Kavyavin thelivana pechu madhuravai ennum maatrum


 
Posted : August 13, 2026 10:59 am
(@kalidevi)
Posts: 140
Estimable Member
 

Kavya romba easy going ah irunthalum ipo itha time la crt madhura kitta pesi puriya vaikra madhura romba guilty ah feel panitu iruka atha oruthar kitta sonna thana therium avanga side la irunthu oru advice varum apadi than kavya peis iruka good kavya madhura vum akilanum veliya sollikama love pani irukanga so konjam kastam avlo sikram veliya varathu


 
Posted : August 13, 2026 11:00 am
(@karthi1206)
Posts: 69
Trusted Member
 

Sema sema interesting epi 


 
Posted : August 13, 2026 11:14 am
(@crvs2797)
Posts: 188
Estimable Member
 

மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 63)

இங்கே ஜோடி மாறிப்போனதால..
உறவுகளுக்குள் கண்ணுக்குத் தெரியாத ஒரு சிக்கல், டிஸ்டன்ஸ் கடைசி வரை இருந்துக்கிட்டேத் தான் இருக்கும். அதை தப்புன்னோ சரின்னோ சொல்லவே முடியாது, சரிப்படுத்தவும் முடியாது. அதனால
இனியன் மதுரா அண்ட் அகிலன் காவ்யா... அதைப் புரிஞ்சுக்கிட்டு
விலகியும் விலகாமலும், பட்டும் படாமலும் போயிட்டே இருக்கணும்.
வேற வழி கிடையாது. காலம் தான் இதை நேர்ப்படுத்தும் என்று நம்புவோமாக. அது வரை காத்திருக்க வேண்டியது தான்.

😀😀😀
CRVS (or) CRVS 2797


 
Posted : August 13, 2026 11:20 am
(@kavi-bharathi-arunkumar)
Posts: 127
Estimable Member
 

Kaviya konja nerathula soga mood la jolly mood ah mathita ah ore kelvi la athuvum velvizhi sema shock aagitan ga and ippo ava madhura kita pesunathu rombhavae seri madhura  thanoda manasula irukirathu ah solla oru vaipu ah amanchi iruku atleast ava manasu la irukirathu ah share pannathu ah la than avaluku ippo oru thelivu kedaichi iruku 


 
Posted : August 13, 2026 4:45 pm

Scroll to Top