Forum

கொரியன் சீஸ் பன்
 
Notifications
Clear all

கொரியன் சீஸ் பன்

1 Posts
1 Users
0 Reactions
37 Views
(@praveena-thangaraj)
Posts: 265
Member Admin
Topic starter
 
[#288]

கொரியன் சீஸ் பன் 

தேவையான பொருட்கள்:

பன் மாவுக்கு

மைதா 2 கப்

சர்க்கரை 2 டேபிள்ஸ்பூன்

ஈஸ்ட் 1 டீஸ்பூன்

உப்பு ½ டீஸ்பூன்

வெதுவெதுப்பான பால் ¾ கப் அளவு

வெண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்

முட்டை 1 (விருப்பமிருந்தா)

பன்னுக்குள்ளே வைக்க Mozzarella cheese – தேவையான அளவு

Cheddar cheese – சிறிதளவு (விருப்பமிருந்தால்

இப்ப செய்வது எப்படினு பார்ப்போமா?

வெதுவெதுப்பான பாலில்+ ஈஸ்ட் + சர்க்கரை சேர்த்து 5–10 நிமிடம் வைக்க வேண்டும். 

மைதா, உப்பு சேர்த்து கலந்து, ஈஸ்ட் பால் மற்றும் வெண்ணெய் சேர்த்து மென்மையான மாவாக பிசையவும்.

மாவை பரோட்டாவிற்கு ஊற வைப்பது போல மூடி 1 மணி நேரம் வைக்கவும். 

மாவு நன்றாக உப்ப வேண்டும் என்பதால் அப்படி. 

மாவை சம அளவு உருண்டைகளாகப் பிரித்து, ஒவ்வொன்றையும் தட்டி நடுவில் நிறைய cheese வைத்து நன்றாக மூடவேண்டும். 

மீண்டும் 20–30 நிமிடம் கொடுக்கவும். மேலே சிறிது பால் அல்லது முட்டைகலக்கியதை தடவி, 180°C ஓவனில் 15–20 நிமிடம் பேக் செய்யவும்.

மேலே லேசாக கோல்டன் ப்ரவுன் ஆனதும் வெளியே எடுத்து, சிறிது வெண்ணெய் தடவினால் சூப்பரான சாப்ட் பட்டரி சீஸ் பன் ரெடி. 

சீஸ் உள்ளே உருகி இழைய வேண்டும் என்றால் மோசலிராMozzarella சீஸ் அதிகமாக போடுவது நல்லது.

பெரும்பாலானவருக்கு கொரியன் உணவு பிடித்து வருவதால் இந்த உணவை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். 


 
Posted : August 8, 2026 6:17 pm

Scroll to Top