Forum

முன்னேற்றம் (One Pa...
 
Notifications
Clear all

முன்னேற்றம் (One Page Story)

3 Posts
3 Users
1 Reactions
112 Views
(@praveena-thangaraj)
Posts: 265
Member Admin
Topic starter
 
[#279]

😲முன்னேற்றம்

"ஹோட்டல்ல எச்சி இலை எடுத்தப்ப என்னடா இவன் எல்லாம் இதுக்கு தான் லாயிக்குனு என்னை பார்த்து பேசியவங்களால தான், என்‌ மனசுல தழும்பு உண்டாச்சு. அந்த தழும்பு மறையவேயில்லை. அதனால தான் என்னவோ எச்சியிலை எடுத்த நான் பெரிய இடத்துல வந்து நிற்கணும்னு முடிவு கட்டினேன். தூங்காம கொள்ளாம, அந்த பேச்சோட தழும்பு, என்னை ஒரு நல்ல உழைப்பாளியா மாத்துச்சு. இப்ப என் பெயர்ல நாலைந்து ஹோட்டல் கிளைகள் உருவாக்கி, நான் அதுல முதலாளியா இருக்கேன்.

இந்த வியப்பு நீங்க தந்த காயத்தோட வெற்றிக்கு கிடைத்த பரிசு.' என்று பேசி வைத்து அவார்டை வாங்கிய சந்திரனை வியப்பு அகலாமல் பார்வையிட்டார், ஒரு காலத்தில் தன் தூரத்து உறவான சந்திரனை 'நீயா.. நீயெல்லாம் எச்சியிலை எடுக்க தான் லாயிக்கு' என்று உதாசினம் செய்த மனிதர் ராமமூர்த்தி.

-பிரவீணா தங்கராஜ்.


 
Posted : August 7, 2026 12:22 pm
Kalidevi reacted
(@crvs2797)
Posts: 188
Estimable Member
 

இங்கே எதுவுமே இலவசமாக கிடைப்பதில்லை. அதேப்போல்

அவமானங்கள் இல்லாமல் வெகுமானங்களும் கிடைப்பதில்லை போல.

 

😊😊😊

CRVS (or) CRVS 2797


 
Posted : August 7, 2026 3:35 pm
(@guna-sundari)
Posts: 138
Estimable Member
 

Yes many times hard words will push us to move forward. Super sis


 
Posted : August 7, 2026 10:01 pm

Scroll to Top