Forum

உறவில் உதயமாகி உயிர...
 
Notifications
Clear all

உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் -2

1 Posts
1 Users
0 Reactions
88 Views
(@salmaamjathkhan)
Posts: 20
Trusted Member
Topic starter
 
[#82]

உதயம் 💏2💏

 

 

வரிசையாக ஊர்ந்து செல்லும் வாகனங்களை பார்க்க கொஞ்சம் சலிப்பாக இருந்தது. பிரம்மாண்டமான நான்கு மாடி கட்டடத்திற்கு வெளியே அமைதியாக காத்திருந்தேன்.

 

வருபவர்கள் போகிறவர்கள் என எல்லோரும் கொஞ்சம் வெறித்து பார்த்துக் கொண்டே இருந்தனர். உள்ளே செல்பவர்களை சோதித்துப் பார்ப்பவர்கள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது எனக்கு உறுத்தலாகவே இருந்தது.

 

இருப்பினும் சரண்யாவிற்காக காத்துக் கொண்டு இருப்பதால் சிறிது ஆறுதலாகவே இருந்தது.

 

காரை நிறுத்திவிட்டு வந்து இங்கு நின்று 15 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் அவள் வரவில்லை.

 

அவள் வீட்டில் இருந்து கிளம்பிய பின் தான் நான் கிளம்பினேன். ஆனால் அவள் இன்னும் வந்து சேரவில்லை. எனக்கு சற்று கவலையாகவே இருந்தது.

 

இதனிடையே என் அலைபேசி ஒலித்தது சரண்யாவாக இருக்க வேண்டும் என நினைத்து அலைபேசியின் திரையைப் பார்த்தேன்.  திரையும் அவள் பெயரையே பிரதிபலித்தது.

 

" ஹலோ...."

 

" ஹலோ தியா, வேர் ஆர் யூ?"

 

" நான் உனக்காகத்தான் மால்க்கு வெளிய வெயிட் பண்றேன்."

 

" வெளிய வா...! "

 

"சாரி...  சாரி... நான் வந்துட்டே இருக்கேன். மாயா உள்ளதான் இருக்கா. அவளோட ஜாயின் பண்ணிக்கோ.   I will be there in  10 மினிட்ஸ். ஓகே பாய்."

 

சரண்யாவின் தொடர்பை துண்டித்து விட்டு உள்ளே செல்ல ஆயத்தப்படுத்திக் கொண்டேன்.

 

என்னை பார்த்ததும் காவலில் நின்ற பெண்  சிறிது புன்னகையைச் சிதறிவிட்டு உள்ளே பெண்களை மட்டும் பரிசோதிக்கும் அந்த பிரத்யோகமான அறையை திறந்து விட்டு உள்ளே இருந்த பெண்ணிடம் ஜாடை காட்டினாள்.

 

அவள் ஜடையை புரிந்துகொண்டு எனக்கென தனி கவனம் கொண்டு சோதித்தாள். சாதாரணமாக அவள் செய்யும் சோதனையை விட சிறிது அதிக நேரம் எடுத்துக் கொண்டாள்.

 

என்னிடம் தவறாக எந்த பொருளும் இல்லை. இவர்கள் இப்படி இருப்பதிலும் வியப்படைய எதுவுமில்லை.

 

எல்லோரும் சந்தேகிக்கும்படி வெளியே நின்று கொண்டிருந்தது என் தவறு.

 

சோதனை முடித்து விட்டு உள்ளே செல்ல எனக்கு அனுமதி அளித்தாள்.

 

அந்த பிரம்மாண்டமான மாலில் நுழைந்ததும் ஏசி காற்று கொஞ்சம் இதமாக தழுவியது. இவ்வளவு நேரமாக இருந்த புழுக்கம் ஒரு நொடியில் மாயமானது.

 

இன்று புதன்கிழமை இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை போல் கூட்டமாகவே இருந்தது. மக்கள் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்தார்கள்.

 

எனது கால்களை லிஃப்டை நோக்கி நடந்தது.  லிஃப்டுக்காக காத்திருந்தபோது பின்னாலிருந்து ஒரு ஆசாமி 

 

"Excuse me. Lift is out of order." என சொல்லிவிட்டு அதைக் கூறும் விதமாக ஒரு அட்டையை லிப்டின் முன் தொங்கவிட்டான். அதில் " லிஃப்ட் இஸ் அவுட் ஆஃப் ஆர்டர்" என பெரியதாக அச்சிடப்பட்டிருந்தது.

 

எனது கால்கள் லிப்டை அடுத்து உள்ள மாடிப்படியை தாண்டி எலவேட்டரை நோக்கி நகர்ந்தன.

 

திடீரென்று தோன்றிய ஞாபகம் கால்கள் அசைய மறுத்தது. என் சிறுவயதில் காரணம் இன்றி மாடிப்படியில் பல முறை ஏறி ஏறி இறங்கி இருக்கிறேன்.

 

இன்று காரணம் இருந்தும் லிப்ட் எலவேட்டுவரின் சொகுசு நம்மை மாடிப்படியை ஏற விடுவதில்லை.

 

இன்று ஏனோ மாடி படியில் ஏற வேண்டும் என தோன்றியது. அதுவும் சிறுவயதில் வேகமாக ஏறியதைப்போல். நாம் அனைவரும் குழந்தைப் பருவத்தைக் கடந்து வந்திருந்தாலும் எல்லோருக்கும் இன்னும் அந்த குழந்தைத்தனம் ஏதோ ஒரு மூலையில் இருந்துக்கொண்டே இருக்கும்.

 

நாகரீகம் காரணமாகவோ யாராவது ஏதாவது நினைப்பார்கள் என நினைத்து அந்தக் குழந்தை தனத்தை தனக்குள்ளே அடக்கிக் வைத்துள்ளனர் பலர்.

 

ஆனால் நான் இன்று என் குழந்தை தனத்தை அடக்குவதாக இல்லை. என்னால் இயன்ற வேகத்தில் மாடிப்படிகளில் ஏறினேன்.

 

ஒன்று.... இரண்டு... இரண்டு மாடிகளை வேகமாகவும் ஏறினேன்.

 

மூன்றாவது மாடியை நோக்கி வளையும் போது இடித்துக் கொண்டேன். என் கையிலிருந்த அலைபேசி நழுவி தரையில் விழுந்து பல துண்டுகளாக சிதறியது.

 

அவனுடைய தோளில் இடித்த இடி என்னுடைய தலையை கனக்க வைத்தது. மிக வலிமையான தோள்களை அவன் கொண்டிருக்கவேண்டும்.

தலையை தேய்த்துக் கொண்டே,

 

"ஐ அம் சாரி" என நான் என்னுடைய மன்னிப்பைக் கேட்டுக் கொண்டே கீழே விழுந்த என் அலைபேசியின் துண்டுகளை பொறுக்கினேன். அலைபேசி இந்த நிலையில் மீண்டும் அது செயல்படும் என எனக்குத் தோன்றவில்லை.

 

அப்பொழுது தான் அவனை நான் கவனிக்கத் தொடங்கினேன். பிராண்டட் சூ, ப்ளாக் அண்ட் வைட் கோட் சூட் , பரந்த தோள்கள், இருக்கமான சிவந்த உதடுகள், கூர்மையான நாசி, கருவிழியை உடைய ரௌத்திரமானா கண்கள் என இருந்தான். 

 

கண்களை பார்த்த பின்பு என்னால் அவனை பார்க்க முடியவில்லை. ஏனெனில் அவன் கண்ணில் அவ்வளவு கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

 

" நீயா...! " என கண்களை விரித்தான். 

 

" நீ திரும்பவும் இடிக்க வந்துட்டியா...?"

 

" என்ன...  திரும்பயா?'

 

அவன் ஏன் திரும்ப என்ற வார்த்தையை பயன்படுத்தினான், என்று தெரியவில்லை.

 

நான் இதற்கு முன் அவனை  பார்த்தது கூட இல்லை. எதுவாக இருந்தாலும் நான் அவனை இடித்துவிட்டேன்.

 

மன்னிப்பு கேட்பது என் கடமையாகும்.

 

" என்னை மன்னிச்சிடுங்க. நான் உங்கள பாக்கல. அதான்."

 

"அப்போ வேற எங்கடி பார்த்துட்டு வந்த."  அவன் என்னை இடைமறித்தான்.

 

"' டி 'யா???? எஸ் கியூஸ் மீ. கொஞ்சம் மரியாதையா பேசுங்க."

 

"உனக்கெல்லாம் என்னடி மரியாதை." அவனுடைய வார்த்தைகள் என்னுடைய கோபத்தை அதிகப்படுத்தின.

 

தெரியாமல் இடித்துக் கொண்டதற்கு யாரும் இதுவரை என்னிடம் இவ்வாறு நடந்துகொண்டதில்லை. அவனுடைய வார்த்தைகள் பிரச்சனையை பெரிதாகிக் கொண்டே சென்றன.

 

நானும் சளைக்கவில்லை.

 

"பாக்க டீசண்டா இருக்கீங்க. ஒரு ரவுடி மாதிரி நடந்துககுறீங்க."

 

"யாரைப் பார்த்து ரவுடி ன்னு சொன்ன...." என அவன் என்னை நெருங்கி ஆக்ரோஷமாக எனது முழங்கையை  அழுத்தமாக பிடித்தான்.

 

அவன் கைகளை அழுத்தியதில் என் கைகள் சிவந்தன. கண்கள் வலியால் கலங்கின.

 

கூட்டம் கூடத் தொடங்கியது. நான் அவனது பிடியில் இருந்து தப்பிக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். என்னால் இயலவில்லை.

 

" ஆர் யூ மேட். என்னை விடு." நான் கத்தினேன்.

 

அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் எனக்காக குரல் கொடுத்தது.

 

அவன் கூட்டத்தையும் என்னையும் மாறி மாறி முறைத்துக் கொண்டான்‌

 

அப்போது அவனது அருகில் இருந்த ஆசாமி,

 

"சார், சீன் கிரியேட் பண்ண வேண்டாம். பப்ளிக் எல்லாரும் நம்மள தான்  பார்க்குறாங்க. மீட்டிங்க்கு வேற லேட் ஆச்சு." என அவன் காதில் முணுமுணுத்தான்.

 

" கெட் லாஸ்ட்... " என அவன் என்னை பின்தள்ளிவிட்டு நகர்ந்தான்.

 

அவன் தள்ளி விட்டு வேகத்தில் மாடிப்படியின் கம்பியில் இடித்து கொண்டேன்.

 

இதுவரை நடந்தது எல்லாம் ஒரு கனவு போல் தெரிந்தது.

 

என்ன நடந்து கொண்டிருந்தது என யூகிக்கும் முன் அவனை காணவில்லை. கூட்டம் மட்டும் என்னையே வெறித்து கொண்டிருந்தது. 

 

இனம்புரியாத அவமானம் என்னை சூழ நான் அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தேன். நான் நகர ஆரம்பித்தாலும் அவனது முரட்டுக் குணம் என் கண்களுக்குள்ளே மீண்டும் மீண்டும் திரையிட்டது.

 

அவனைக் திட்டிக்கொண்டே மூன்றாவது மாடியை அடைந்தேன்.

 

சாவி கொடுத்த பொம்மை போல் என் கால்கள் எங்கோ செல்ல,

 

" ஹேய் தியா. என்னாச்சு ?" மாயாவின் குரல் என்னை சுயநினைவுக்கு கொண்டுவந்தது.

 

புத்தி பேதலித்து போல் மாயாவின் அருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தேன்.

 

" என்னாச்சு உனக்கு? ஏன் தனியா புலம்பிக்கிட்டே வந்த?" குழப்பத்துடன் மாயா கேட்க,

 

" புலம்ப வைத்து விட்டான்." என்ற என்னுடைய பதில் அவளை மேலும் குழப்பியதை என்னால் உணர முடிந்தது‌.

 

அவளுடைய குழப்பத்தை தீர்க்க நடந்ததை விவரித்தேன்.

 

" இந்த பசங்களையே இப்படித்தான். நீ ஏன் சாரி கேக்குற. அவன் 'டி' சொன்னா சரிதான் போடா ன்னு சொல்லிட்டு வர வேண்டியதுதானே." என மாயா முடிக்க,

 

" யாரை போடா ன்னு சொல்லணும்..." சரண்யாவின் குரல் பின்னாலிருந்து கேட்க, திரும்பினேன்.

 

சரண் "ஹாய் டியர்." என அணைத்துக்கொண்டாள். மனதிற்கு இதமாக இருந்தது.

 

உண்மையில் கட்டிப்பிடி வைத்தியம் சிறந்தது என உணர்ந்தேன். என் எதிரில் இருந்த நாற்காலியில் அவள் அமர்ந்தாள்.

 

" சொல்லுங்க யாரை பத்தி பேசிட்டு இருந்திங்க." சரண்யா கேட்க மாயா நடந்ததை விவரித்தாள்.

 

அவள் விவரித்த பிறகு சரண்யா என்னை பார்க்க நான் ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினேன்.

 

" எவ்வளவு தைரியம் இருக்கணும். சரி விடு அவனுக்கு என்ன பிரச்சினை யோர்க். இதெல்லாம் பாஸிங் க்ளெவ்ட்ஸ் ஷா நினைச்சு போயிருந்தால்."

 

"நீ வீட்ல ஏதோ பிரச்சனைன்னு சொன்னா . அது என்ன? "

 

அவள் கூறிய பின்பு தான் எனக்கு இருக்கும் பிரச்சனை நினைவுக்கு வந்தது.

 

எல்லோருக்கும் சந்தோஷத்தை தரும் திருமணம் எனக்கு மட்டும் ஏன் பிரச்சனையாக தெரிகிறது, என்று நானே குழப்பி கொள்கிறேன்.

 

வீட்டில் நடந்ததை விவரித்தேன்.

 

" இந்த கல்யாணத்துல இருந்து தப்பிக்க ஒரு வழி சொல்லு'"

 

"உனக்கு ஏன் கல்யாணத்துல இஷ்டம் இல்ல." சரண்யா கேட்டாள்.

 

"  அதானே. எனக்கு மட்டும் ஒரு சான்ஸ் கிடைத்திருந்தா இன்னேரம்  ரிகர்சலே பார்த்து இருப்பேன்."

 

"என்ன ரிகர்சலா..."என கேட்க,

 

"ஆமாம் . பர்ஸ்ட் நைட்க்கு " என அவள் சிரித்து கொண்டே கண்ணடிக்க,  தீவிரமாய்  பேசிக்கொண்டிருந்த விஷயத்தை மறந்து சிரித்துக் கொண்டிருந்தோம்.

 

"உன் அப்பா ரொம்ப நல்லவர். அதான் சட்டுபுட்டுன்னு கல்யாணம் பண்ணி வைக்கணும் னு நினைக்கிறார்.

 

எங்கப்பாவும் இருக்காரே பொண்ணு வளர்ந்துடாலே நேரா நேரத்துக்கு கல்யாணம் பண்ணி வைப்போம்ன்ற எண்ணம் துளி கூட இல்லை.

 

பேசாம நான் கூட அப்பாவுக்கு பிறந்திருக்கலாம்." சோகமாய் கூறினாள், மாயா.

 

" பேசாமல் நீ எங்க அப்பா பார்க்கிற பையன்ன கல்யாணம் பண்ணிக்கோ." என நான் ஆறுதலாக கூற.

 

" போதும் இப்போ நம்ம சீரியஸா பேசுவோமா?" சரண்யா கேட்க,

 

" ஆஸ்பத்திரில இருக்கோமா...?" என்று மாயா கேட்டதற்கு சரண்யா,

 

" எனக்கு சிரிப்பே வரல.  பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

 

நீ சொல்லு உனக்கு ஏன் கல்யாணம் பண்ணிக்க பிடிக்கல."

 

" ஏன்னு தெரியல. எனக்கு இந்த ரிலேஷன்ஷிப்ல இன்ட்ரஸ்ட் இல்ல."

 

"  இன்ட்ரஸ்ட் இல்லன்னு சொன்னா என்ன அர்த்தம். ஏதாவது காரணம் இருக்கணும்ல."

 

" காரணம் னு கேட்டா என்ன சொல்றது. ஓகே நீ சொல்லு. இப்ப நடக்குற கல்யாணத்துல எத்தனை பேரு சந்தோஷமா இருக்காங்க. கல்யாணம் ஆனவுடனே அவங்க கேட்கிற விஷயம் டைவர்ஸ் தான்.  கல்யாணம் பண்ணி டைவர்ஸ் கொடுக்கிறது எதுக்கு கல்யாணம் பண்ணனும்."

 

"ஹலோ மேடம் இப்போ உங்கள கல்யாணம் தான் பண்ண சொல்றாங்க. டைவோர்ஸ் இல்ல."

 

"அது தெரியும் சரண். கல்யாணத்துக்கு அப்புறம் டைவர்ஸ் தானே நடக்குது."

 

"கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் எல்லாரும் டைவர்ஸ் பண்றதில்ல..."

 

"பட் மோஸ்ட்லி டைவர்ஸ்  தானே"

 

"நீ என்ன கல்யாணத்தைப் பத்தி பேசினா, டைவர்ஸ் பத்தி பேசுற. ஒத்துக்குறேன். முன்னை விட இப்போ டைவர்ஸ் அதிகமா இருக்கு தான்.

 

அதற்கான காரணத்தை கேட்டால் அவ என்னை முறைக்கிறா. டீ போட்டு கொடுக்கல.  குறட்டை விடறான், அவன் என்னை பார்த்து சிரிக்கலன்னு உப்பு சப்பு இல்லாத காரணம் தான் அதிகம்.

 

ஹஸ்பன்ட் அன்டு லைஃப் குள்ள அஞ்சு நிமிஷம் உக்கார்ந்து பேசி தீர்க்க வேண்டிய சின்ன  விஷயத்துக்காக டைவர்ஸ் கேக்குறவங்கள பத்தி பேசுற. தியா உனக்கே நல்லா தெரியுது. நீ சும்மா இதை ஒரு சாக்காக வைத்து மளுப்புறன்னு.

 

ஏன் உங்க அம்மா அப்பா இவ அப்பா அம்மா என் அப்பா அம்மா எல்லாம்  சந்தோஷமா இல்லையா. அவங்க எல்லாரும் சந்தோஷமா இல்லாம அவங்க என்ன டைவர்ஸா கேக்குறாங்க."

 

"அவங்க எல்லாம்  அந்த காலத்துல ஆளுங்க.ஆனா இந்த ஜெனரேஷன் அப்படி இல்லையே."

 

"அது என்ன அந்த ஜெனரேசன் இந்த ஜெனரேசன். எல்லாரும் மனுசங்க தான். அப்ப இருந்த மாதிரி தான் இப்பவும் நமக்கு ஆறறிவு இருக்கு. இந்த ஜெனரேசன்னு நமக்கு என்ன அஞ்சு அறிவா இருக்கு. இல்லேல. கல்யாணம் கிறது மனசு சம்பந்தப்பட்ட விஷயம்.அதை மொதல புரிஞ்சுக்க."

 

" எக்ஸாக்ட்லி கல்யாணம் மனசு சம்பந்தப்பட்ட விஷயம். அதுல புரிதல் ரொம்ப முக்கியம் இல்லையா."

 

"ஆமாம்."

 

" எனக்கு 24 வயசாகுது.இது வரைக்கும் எனக்கு என்ன கலர் பிடிக்கும்ன்னு கூட என் அம்மாவுக்கு தெரியாது. எங்க அப்பாக்கு நான் இருக்கேன்னு  கூட அவருக்குத் தெரியாது. ஏன் இப்ப கூட என் மனசு அவங்களுக்கு தெரியலை. புரியலை.

 

இருபத்தி நாலு வருஷமா என் கூட இருந்தும் நான் வளர்ந்த விதத்தை பார்த்த அவங்களாலேயே என்னை புரிஞ்சுக்க முடியலனா . புதுசா வர்ற ஒருத்தனால எப்படி என்னை புரிஞ்சுக்க முடியும்.

 

அப்படி அவனுக்கு என்ன தெரியும் என்னை பத்தி. எனக்கு என்ன தெரியும் அவனை பத்தி.

 

யாருனே தெரியாத ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கோ நா எப்படி முடியும்."

 

" அப்ப நீ அந்த பையனை பார்க்கணும்ன்னு நினைக்கிறாயா."

 

"நீ இன்னும் என்னை புரிஞ்சுக்கல. நீ சொல்ற மாதிரி அந்த பையன பார்த்து எதுவும் ஆகாது."

 

நான் பேசி முடித்ததும் அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது நான் என் வாதத்தை தொடர்வதற்கு அளிக்கும் சந்தர்பமாக கருதினேன்.

 

" அப்படியே பார்த்தாலும் என்ன ஆகும். ஒரு அஞ்சு நிமிஷம் பார்ப்பேனா.அந்த அஞ்சு நிமிஷத்துல அவன பத்தி என்ன தெரிஞ்சுக்க முடியும்."

 

" அப்போ பார்த்து பழகி காதலிச்சு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்றியா."

 

" ஐயோ இல்ல சரண். எனக்கு கல்யாணமே வேணாம். எனக்கு பயமா இருக்கு."

 

"என்ன பயம்."

 

" எல்லாமே பயம் தான்."

 

" மேலோட்டமா பேசாத. என்ன பயம்னு சொன்னாதானே தெரியும்." நான் அவள் கைகளை பற்றிக் கொண்டேன்.

 

"நம்ம வளர்ந்த ஒரு சூழ்நிலையை விட்டுட்டு இன்னொரு சூழ்நிலையை பத்தி நினைச்சு பாக்க முடியல. யாருன்னே  தெரியாதவங்க கூட தான் இனி உன் வாழ்க்கைய ஷேர் பண்ணிக்கன்னும்னு சொல்றது எந்த விதத்தில் நியாயம்.

 

கல்யாணங்குற ஒரு விஷயத்தை என்னால ஏத்துக்க முடியல. ஒரு புது சூழ்நிலைக்கு போக பயமா இருக்கு."

 

"நீ சொல்றதை பார்த்தா எனக்கு சிரிப்பு தான் வருது. நீ எப்ப இருந்து இப்படி  பெசிமிஸ்ட்டா பேச ஆரம்பிச்ச.

 

புது சூழ்நிலை உனக்கு பயமா இருக்கா. இந்த உலகத்துல எல்லாமே புதுசுதான். நீ உங்க அம்மாவோட கருவிலிருக்கும் போது கருவறை புதிசு.

 

  பிறக்கும் போது இந்த உலகம் புதுசு. நீ ஸ்கூலுக்கு போகும் போது ஸ்கூல் உனக்கு புதுசு. காலேஜ் போகும்போது காலேஜ் புதுசு. புதுசா இருக்குன்னு நீ பிறக்காமல் இருந்தியா இல்ல படிக்காம தான் இருந்தியா ?

 

ஒரு உண்மையை சொல்லட்டுமா. இதெல்லாம் ஒரு காரணமே இல்ல. உனக்கு கல்யாணம் வேணாம்னு சொல்ற நொண்டி சாக்கு இதெல்லாம். 

 

கல்யாணங்குறது நீ பயப்பட வேண்டிய விஷயம் இல்லை. அது புதுமையான விஷயம். உணர்வு பூர்வமான விஷயம். நம்ம வாழ்க்கையை மாற்றி விடப் போகிற  விஷயம். நமக்காக பிறந்த ஒருத்தன் கூட சேர்ந்து பயணிக்குற ஒரு அழகான பயணம் இது. நம்ம பயணிக்கும் பாதை எப்படி வேணாம் இருக்கலாம். 

 

நம்பிக்கை க்ஷயையும் காதலையும் துணையா வச்சுக்குட்டு ஒருத்தர் தளரும் போது இன்னொருத்தர் ஆறுதலாவும் தைரியமாவும் வழிநடத்தக்கூடிய உன்னதமான உறவு.

 

எல்லா பெண்களுக்கும் இது தொடர்பாக ஒரு கனவு இருக்கும். ஆனா நீ தான் இப்படி பயப்படற.

 

சொல்ல போனா எல்லாருக்கும் இந்த பயம் இருக்கும்.  ஆனா உன் அளவுக்கு இல்ல.புதிய சூழ்நிலை யாருன்னே தெரியாத ஒருவத்தரோட நம்ம பெட்டை ஷேர் பண்ணிக்கனும்.நம்ம வாழ்க்கையே ஷேர் பண்ணிக்கனும். ஆனால் இந்த ஒரு நெகடிவ் வா பார்க்காம  ஒரு பாசிட்டிவ் வா பார்த்தேனா இந்த பயம் உனக்கு வராது. 

 

உனக்கு அரேஞ்ச் மேரேஜ் பண்ணிக்க இஷ்டம் இல்லயா. ஒரு நல்ல பையனா பாத்து லவ் பண்ணி அவன முழுசா புரிஞ்சுக்குட்டு கல்யாணம் பண்ணு.

 

காதலுக்கு சிவப்பு கொடி காட்டுறவரு உங்க அப்பா இல்லை."

 

"இனிமே  ஒருத்தன பார்த்து லவ் பண்ணி கல்யாணமா... ஐயோ... லவ் மேரேஜ் எனக்கெல்லாம் செட்டாகாது."

 

" அப்போ உங்க அப்பா பார்க்குறவர்ற கல்யாணம் பண்ணிக்கோ. உனக்கு ஒரு உண்மை தெரியுமா... லவ் பண்ணும் போது வர்ற காதல் கூட தோத்து போயிரும். ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம கணவர் மேல வர்ற காதல் என்னக்கியும் தோற்காது."

 

" கல்யாணத்துக்கு அப்புறம் காதல் வருங்குறியா..."

 

" கண்டிப்பா வரும்."

 

" ஒருவேளை வரலேன்னா..."

 

" வரும் தியா. சில பேருக்கு அது கல்யாணத்துக்கு முன்னாடி வரும். சில பேருக்கு அது கல்யாணத்துக்கு பின்னாடி வரும். ஆனா எல்லா மனிதர்களுக்கும்  காதல் உணர்வு  கண்டிப்பாக வரும். "

 

"அந்த காதல் எனக்கு வராமலே போய்டா."

 

" நல்லா டைம் எடுத்துக்கோ தியா.  உனக்குள்ளே இருக்கிற இந்த பெசிமிஸ்ட் பார்வையைத் தூக்கி போட்டுட்டு நல்லா யோசிச்சு பாரு. உன்னோட முடிவு நிச்சயம் தப்பா இருக்காது.

 

இது உன்னோட வாழ்க்கை அதை நீதான் முடிவு பண்ணனும். அப்பா சொன்னாரு ஆட்டுக்குட்டி சொன்னாருன்னு எந்த முடிவும் எடுக்காத.

 

அதுக்கு முத உன் மனசுல இருக்குற எல்லா குப்பையான விஷயங்களையும் தூக்கி வீசிட்டு பாசிட்டிவா ஒரு தடவை யோசி.

 

உனக்கு சரினு பட்டா இப்பவே கல்யாணம் பண்ணிக்கோ. அப்படி இல்லேன்னா உனக்கு எப்போ சரின்னு படுதோ அப்ப கல்யாணம் பண்ணிக்கோ.

 

ஆனால் நிச்சயம் கல்யாணம் பண்ணிக்க. கல்யாணம்  கடவுள் போடு போடுற முடிச்சு. அதை யாராலும் கழட்ட முடியாது. வாழப் போறது நீ தான்.

 

நீ யோசி நல்ல முடிவா எடு."

 

" எனக்

கு என்ன சொல்றதுன்னே புரியல."

 

"  காம் டவுன் தியா.எதுவும் அவசரமில்லை பொறுமையா யோசி."

 

"ஹலோ உங்க பிலாஸபி கிளாஸ் முடிஞ்சதுன்னா சாப்பிடலாமா. நாம ஆர்டர் பண்ணுனது எல்லாம் ஆறி போகுது பா. எனக்கும் பசிக்குது." என பாவமாக முகத்தை வைத்து கொண்டு இருந்த மாயாவை பார்த்து முறுவளுடன் சாப்பிட ஆரம்பித்தோம்.

 


 
Posted : June 18, 2026 8:01 am

Scroll to Top