Forum

தகிக்கும் நிலவொன்று...
 
Notifications
Clear all

தகிக்கும் நிலவொன்று-28

14 Posts
12 Users
3 Reactions
211 Views
(@praveena-thangaraj)
Posts: 265
Member Admin
Topic starter
 
[#275]

அத்தியாயம்–28

மருத்துவமனையின் வெண்மையான அறை முழுவதும் அமைதியாக இருந்தது.

ஷ்ரத்தாவின் இமைகள் மெதுவாக அசைந்தன.

சில நொடிகளில் கண்களைத் திறந்தாள். பார்வை இன்னும் தெளிவாகவில்லை. மங்கலாக தெரிந்த உருவங்களில்... ராயனை கைகளில் தூக்கிக் கொண்டு, ஜன்னல் பக்கம் திரும்பி நின்றிருந்த ஒரு ஆண் உருவம் அவள் கண்ணில் பட்டது.

அந்த உயரம்... அந்த தோள்கள்... அந்த நிற்கும் தோரணை... ஒரே நொடி... "சத்ரியா...!" என்று அழைத்தபடியே படுக்கையிலிருந்து வேகமாக எழுந்து ஓடினாள்.

பின்னால் நின்றிருந்த நர்ஸுக்குக் கூட என்ன நடந்ததென்று புரியவில்லை.

ஓடிச் சென்று அந்த உருவத்தை பின்னால் இருந்து இறுக அணைத்துக் கொண்டாள்.

அந்த ஒரு நொடியில் அவளுக்குள் இருந்த எல்லா வலியும் உடைந்து வெளியேறியது.

"ஏன்டா... என்னை விட்டுட்டு போன...?" என்று தேம்பித் தேம்பி அழுதாள்.

ஷ்ரத்தாவின் குரலைக் கேட்டவன் மெதுவாக திரும்பினான். திரும்பிய முகத்தைப் பார்த்ததும், ஷ்ரத்தாவின் உடல் அப்படியே உறைந்தது.

ஏனெனில் அங்கிருந்தவன் யதுநந்தன். அவளது கைகள் மெதுவாக தளர்ந்து விலகின.

அதே நேரத்தில் "அம்மா..." என்று ராயன் இரு கைகளையும் நீட்டினான்.

உடனே அவனை மட்டும் தூக்கிக் கொண்டாள். கண்களில் வழிந்த கண்ணீரை அவசரமாக துடைத்துக் கொண்டு, "சாரி... யதுசார்..." என்று தலைகுனிந்து நின்றாள். 

சத்ரியனை காணாத ஏக்கம், அவனை கண்டதும் ஆவேசமாய் அல்லவா வேகமாய் வந்து கட்டிப்பிடித்து கொண்டாள். அதில் இருந்த இறுக்கம் ஷ்ரத்தாவை தலைகுனிய தானே வைத்திருக்கும்.

யதுநந்தன் மெதுவாக புன்னகைத்தான். "இட்ஸ் ஓகே, ஷ்ரத்தா." என்று கூறிய போதும் அவள் நிமிரவில்லை. அவளது தலைகுனிவிற்கு அர்த்தம் தெரிந்தவனோ, அமைதியாக தொடர்ந்தான். "என்னால புரிஞ்சுக்க முடியுது ஷ்ரத்தா நான் திரும்பி நின்னதால... கண் முழிச்ச உங்களுக்கு... ராயனை தூக்கிட்டு நிக்கற சத்ரியன்னு தோணியிருக்கும். 

  சத்ரியன் இறந்துட்டார்னு எல்லாரும் சொன்னாலும்... உங்க மனசு இன்னும் அதை முழுசா ஏத்துக்கலை. அதுல எந்த தப்பும் இல்ல." என்றான். 

அந்த வார்த்தைகள் ஷ்ரத்தாவின் அழுகையை இன்னும் அதிகப்படுத்தியது.

அவள் பேசாமல் ராயனின் தலையை வருடிக் கொண்டே நின்றாள். யதுநந்தன் வேறு எதையும் கேட்கவில்லை.

சில உணர்வுகளுக்கு ஆறுதல் சொல்லாமல் அமைதியாக இருப்பதே பெரிய ஆறுதல் என்பதை அவன் அறிந்திருந்தான்.

சில நிமிடங்கள் கழித்து அவள் அழுது கரைய விட்டபடியே ''இப்ப எப்படி இருக்கீங்க?" என்று மெதுவாக கேட்டான்.

ஷ்ரத்தா கண்களை துடைத்துக் கொண்டு, "ஓகே..." என்று தலையசைத்தாள்.

அந்த நேரம் கதவு தட்டப்பட்டது.

சிங்கப்பூர் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உள்ளே வந்தார்.

"மிஸ் ஷ்ரத்தா..." என்று மரியாதையாக அழைத்தார். அவள் தான் ஊரறிய தாலி கட்டாமல் பிள்ளை பெற்ற புண்ணியவதியாயிற்றே. 

ஒரு ஆண் குரல் கேட்கவும், அவள் திரும்பிப் பார்த்தாள்.

நாற்பது வயதிற்கு அருகில் இருந்த சிங்கப்பூர் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், மரியாதையாக அருகில் வந்தார்.

"ஐ ஆம் டேனியல் லிம். 'லிட்டில் ஏஞ்சல்ஸ் சில்ட்ரன்ஸ் ஹோம்' அட்மினிஸ்ட்ரேட்டர்." தன்னை என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

ஷ்ரத்தா புரியாமல் பார்த்தாள்.

"ஹரிணியைப் பற்றி பேசணும்." என்றதும் அவள் முழு கவனமும் அவரிடம் திரும்பியது.

"மிஸ்ஸஸ் ஹரிணி வினோத், கடந்த ஐந்து வருடங்களாக எங்க ஆசிரமத்தோட தொடர்புல இருந்தாங்க. அவங்க... ஒரு குழந்தைக்கு கார்டியனா இருந்தாங்க." என்றதும் ஷ்ரத்தாவின் புருவம் சுருங்கியது.

"குழந்தையா.?" என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.

"எஸ்" என்றதும், "யார் குழந்தை.?" என்று கேட்க, டேனியல் லிம் மெதுவாக மூச்சை இழுத்தார்.

"அதை இங்க சொல்லுறதை விட... நீங்க எங்களோட ஆசிரமத்துக்கு வந்தா நல்லா இருக்கும்." என்று கூறவும் மருத்துவமனையை பார்வையிட்டு முடித்தாள். 

"நான் இங்க இருப்பது உங்களுக்கு எப்படி தெரியும்" என்று கேட்க, அவரோ, "ஹரிணி இறப்புக்கு யார் வர்றாங்களோ அவங்களை சந்திக்கணும்னு காவல் அதிகாரியிடம் சொல்லியிருந்தேன். அவங்க தான் இன்பார்ம் பண்ணினாங்க" என்றதும் யதுநந்தனோடு ஷ்ரத்தா அவரோடு ஆசிரம் சென்றாள். 

  நொடிக்கு ஒருமுறை யதுநந்தன் வேறு 'ஏதும் ஒரு மாதிரி இருந்தா ரெஸ்ட் எடுத்துக்கோ ஷ்ரத்தா" என்று கூற, 'இப்ப பரவாயில்லை யது சார்" என்றாள். 

டேனியல் லிம். 'லிட்டில் ஏஞ்சல்ஸ் சில்ட்ரன்ஸ் ஹோம்' இடத்திற்கு வந்ததும், யதுநந்தன் அமைதியாக அருகில் நின்றிருந்தான்.

ஷ்ரத்தா அவனை ஒரு நொடி பார்த்தாள். அவனை வெளியே போகச் சொல்லவும் முடியவில்லை. அதே நேரத்தில் இதையெல்லாம் அவன் முன் நடக்கவும் ஏனோ தயக்கமாக இருந்தது. அவளது தயக்கத்தை புரிந்து கொண்ட யதுநந்தன்,

"நான் வேண்டும்னா வெளியே வெயிட் பண்ணவா ஷ்ரத்தா...?" என்று மெதுவாகக் கேட்டான்.

ஷ்ரத்தா உடனே மறுப்பாக தலையசைத்தாள்.

"என்னால... தனியா எதையும் பேஸ் பண்ண முடியலை யதுசார்." அவளது குரல் உடைந்து போனது.

"எதுவானாலும் கூடவே இருங்க." என்று மட்டும் கூறினாள். யதுநந்தன் எதுவும் பேசவில்லை. அமைதியாக அவளுடன் நடந்தான். ஷ்ரத்தா அதிகபட்சமாக உடைந்திருப்பது அவனால் கவனிக்க முடிந்தது. 

சில நிமிடங்களில் டேனியல் லிம் அவர்களை 'லிட்டில் ஏஞ்சல்ஸ் சில்ட்ரன்ஸ் ஹோமில்

அமைதியான சூழல். சிறிய தோட்டம். அதில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள்.

அவர்களை பார்த்ததும் சிலர் சிரித்தபடி கையசைத்தனர்.

அந்த நேரம் இளஞ்சிவப்பு நிற ஃப்ராக் அணிந்திருந்த ஐந்து வயது சிறுமி ஒருத்தி ஓடி வந்தாள்.

"அங்கிள்." என்று டேனியல் லிம்மை கட்டிக்கொண்டாள்.

அவர் புன்னகைத்தபடி அவளது தலையை வருடினார். பிறகு... ஷ்ரத்தாவை பார்த்தார்.

"இவ தான் ஹரிணியோட குழந்தைம்மா" என்றார்.

'என்ன.' என்று அதிர்ச்சியில் முழித்தாள். அவளது பார்வை அந்த சிறுமியிடமே நிலைத்தது.

அதே நேரத்தில் ராயன் மெதுவாக அந்த குழந்தையிடம் சென்று நின்றான். ஆசிரமத்தில் நிறைய குழந்தைகள் இருக்க ஆர்வமாக தான் கண்டு களித்தான். இதில் தங்களருகே ஒரு பெண் குழந்தை  ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

பிறகு ராயன் கையில் இருந்த சிறிய காரை அவளிடம் நீட்டினான். அந்த சிறுமியும் சிரித்தபடி வாங்கிக் கொண்டாள். இரண்டு குழந்தைகளும் சில நொடிகளில் ஒன்றாக விளையாட ஆரம்பித்துவிட்டனர்.

அதை பார்த்த ஷ்ரத்தாவின் கண்கள் மீண்டும் கலங்கின.

டேனியல் லிம் உள்ளே சென்று பழைய பழுப்பு நிற கவரொன்றை கொண்டு வந்தார்.

"மிஸ்ஸஸ் ஹரிணி வினோத் கடைசியா இங்க வந்தப்ப... ஒரு விஷயம் சொன்னாங்க." என்றார். ஷ்ரத்தாவோ குழந்தையை கண்டு டேனியலை கவனித்தாள். 

''எனக்கு ஏதாவது ஆபத்து வந்து... நான் இறந்துட்டா...

என் இறுதிச் சடங்குக்கு யார் வர்றாங்களோ... அவங்ககிட்ட இதை கொடுத்துடுங்க.'ன்னு சொல்லிட்டு இந்த கவரை எங்ககிட்ட ஒப்படைச்சுட்டு போனாங்க." என்று கூறி அந்த கவரை ஷ்ரத்தாவிடம் கொடுத்தார்.

கைகள் நடுங்க... அதை மெதுவாக திறந்தாள்.

உள்ளே மூன்று தனித்தனி கவர்கள். முதல் கவரின் மீது...

'My Husband' என்று எழுதப்பட்டிருந்தது.

இரண்டாவது லெட்டரில் 'Precious Shratha' என்று ஷ்ரத்தாவுக்கு இருந்தது.

மூன்றாவது கவரை பார்த்தவுடன்... ஷ்ரத்தாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. ஏனெனில் அதில் Diya's Daddy என்று இருந்தது‌. 

யதுநந்தன் பார்க்கும் முன்பாக அந்த கவர்களை வேகமாக மடித்து தன் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்.

அதை கவனித்த யதுநந்தன் அவள் தனிப்பட்ட விஷயமாக நினைக்கிறாள் என எண்ணி எதுவும் கேட்கவில்லை.

  ஷ்ரத்தாவும் இங்கே பிரித்து வாசிக்கவில்லை. 

டேனியல் லிம் மீண்டும் பேச ஆரம்பித்தார். "இந்த குழந்தை தியா இனிமேலும் இங்கதான் இருக்கணுமா...? இல்ல...

மிஸ்ஸஸ் ஹரிணியோட விருப்பப்படி, நீங்க அழைச்சிட்டு போறீங்களா...?" என்று கேட்டார்.

ஷ்ரத்தா பதில் சொல்லாமல் ராயனுடன் சிரித்தபடி விளையாடிக் கொண்டிருந்த அந்த ஐந்து வயது சிறுமியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது முகத்தில் ஹரிணியின் சாயலை விட அதிகமாக வேறு ஒருவரின் கண்களும் சாயலும், அந்த குழந்தைக்குள் மறைந்திருந்தது.

சில நொடிகள் அமைதியாக நின்றவள், மெதுவாக திரும்பி,

"நா..நான்... அவளை அழைச்சிட்டு போறேன்." என்று உறுதியாக சொன்னாள்.

அந்த வார்த்தையை கேட்ட டேனியல் லிம் மெதுவாக புன்னகைத்தார்.

"அப்படின்னா கார்டியன்ஷிப் டிரான்ஸ்ஃபருக்கான பார்மாலிட்டீஸை ஆரம்பிக்கலாம்." என்று கூறியபடி, தேவையான ஆவணங்களை மேசையின் மீது எடுத்து வைத்தார்.

ஹரிணி முன்கூட்டியே எழுதி வைத்திருந்த பாதுகாவலர் பரிந்துரை, ஆசிரமத்தின் பதிவுகள், சிங்கப்பூர் சமூக நலத்துறையின் அனுமதி விண்ணப்பம் என்று ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து காட்டி கையெழுத்து கேட்க, அதையெல்லாம் யதுநந்தன் வாங்கி படித்து கூறி ஷ்ரத்தாவுக்கு உதவி செய்து வேலையை எளிதாக்கினான். 

  ஷ்ரத்தாவோ அடிக்கடி ராயனையும் அவனோடு விளையாடும் தியாவையும் பார்வையிட்டு  அடிக்கடி பார்த்தாள். 

ஷ்ரத்தா முகமே சோர்வின் உச்சக்கட்டத்தில் இருந்தது என்று கூட கூறலாம். 

மெது மெதுவாக எல்லாம் முடித்து தந்தாலும் ''இன்னும் ஐந்து நாள்ல நீங்க தியாவை அழைச்சிட்டு போக எல்லாவிதமா சம்மதம் தந்து பத்திரம் ஏற்பாடு செய்து தந்திடுவோம். ஹரிணி முன்கூட்டியே தியாவின் பாஸ்போர்ட், தேவையான ஆவணங்கள், ஷ்ரத்தாவை பாதுகாவலராக குறிப்பிடும் கையெழுத்திட்ட கடிதம் ஆகியவற்றை ஆசிரமத்தில் ஒப்படைத்திருந்ததால சட்ட நடைமுறைகள் மட்டும் முடிந்ததும் சொல்லறேன். அதுவரை ஹரிணி வீட்ல தான் இருப்பிங்களா?" என்று கேட்க, ஷ்ரத்தா ஆமோதிப்பாக தலையாட்டினாள். 

யதுநந்தன் "அதுவரை குழந்தை இங்க ஆசிரமத்துல இருப்பாளா என்ன?" என்று ஷ்ரத்தா நிர்வாகியை பார்த்தாள். 

"அப்படியெல்லாம் இல்லை சார். நீங்க தியாவை அழைச்சிட்டு போகணும்னா போகலாம். ஏன்னா ஹரிணி ஷ்ரத்தாவிடம் ஒப்படைக்க நினைச்சாங்க. ஷ்ரத்தா மறுத்தா மட்டும் தியா இங்க இருப்பா" என்று கூற, ஷ்ரத்தாவோ "அப்ப தியாவையும் அழைச்சிட்டு போகலாம் யதுசார்" என்றதும் யதுநந்தன் ஆமோதித்துக் கொண்டான்.

ஷ்ரத்தாவை கைகாட்டி டேனியல் லிம் இனி அவங்க தான் உன்னோட கார்டியன். ஹரிணி மேடம் மாதிரி" என்று சுட்டிக்காட்ட, குழந்தைக்கு என்ன புரிந்ததோ தலையாட்டிக் கொண்டாள். 

ராயனோடு விளையாடிக் கொண்டே வரவும், தியாவுக்கு தன் தோழிகள் தான் இருந்த இடத்தை விட்டு வருவது அவ்வளவு கடினமாக தெரியவில்லை. அதுவும் குழந்தைக்கு விளையாட ஒரு ஆளும் கேட்டதை வாங்கி தரவும் ஒருவர் அன்போடு நின்றாளே போதும் என்ற ரீதியில் தான் தியா அந்த ஆசிரமத்தில் வளர்ந்ததால் எதிர்பார்த்தாள் எனலாம். 

  யதுநந்தனோடு காரில் ஹரிடி வீட்டிற்கு வந்துக் கொண்டிருக்கும் போது, முன்னிருக்கையில் யதுநந்தன் அமர்ந்திருக்க, பின்னிருக்கையில் ஷ்ரத்தா ராயன், தியா என்று மூவரும் அமர்ந்திருந்தனர்.   

  ராயன் ஷ்ரத்தா மீது சாய்ந்து தியாவோடு பொம்மை வைத்து பேசி சிரித்து வந்திட, ஷ்ரத்தாவோ அந்த லெட்டரை கைப்பையிலிருந்து எடுத்தாள். 

  அவள் தனக்கென Precious Shratha என்ற லெட்டரை காட்டிலும் முதலாக எடுத்தது Diya's Daddy என்ற லெட்டரை தான். அதை படித்தவளின் கண்கள் அப்பட்டமா அதிர்ச்சியை தாண்டி, கண்ணீரை உகுத்தியது. 

அதில் 'என் வாழ்க்கையை புரட்டி போட்ட அந்த நேரத்திலும், என்னால உன்னிடம் பேச முடியாத நான். உன்னோட பேச வேண்டுமென இன்றும் எனக்கு உன்னிடம் பேச ஆசையில்லை.

  அப்படியிருக்க இந்த லெட்டர் எதுக்கென்றால், லெட்டரோட அனுப்புநர் இடம் தான் உனக்கான செய்தி.' என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. 

அப்படியென்றால்...? அப்படியென்றால்... தியாவின் தந்தை அவளுக்கு நன்றாக தெரிந்த ஒருவனுடையது என்ற பெரிய உண்மை அவளை அலைக்கழித்தது. 

  தனக்கும் வினோத் அண்ணாவுக்கும் என்ன எழுதினால் என்று கூட ஷ்ரத்தா பாராமல் கார் ஜன்னல் வழியாக சிங்கப்பூர் சாலையை வெறித்து திக்கற்ற பார்வையுடன் கண்ணீரில் கரைந்தாள் ஷ்ரத்தா. 

-தொடரும். 

-பிரவீணா தங்கராஜ்.

தியாஸ் டேடி யாரென்று தெரிதா?  ட்விஸ்ட் ட்விஸ்ட் ட்விஸ்ட். 🫣


 
Posted : August 7, 2026 7:25 am
(@kothaihari)
Posts: 125
Estimable Member
 

சூப்பர் டிவிஸ்ட் வேற லவல் ... தியா டாடி வேற யாரு நம்ம சத்ரியன் தான்


 
Posted : August 7, 2026 8:16 am
(@ambikahashini)
Posts: 47
Eminent Member
 

Interesting sis 


 
Posted : August 7, 2026 9:13 am
(@guna-sundari)
Posts: 138
Estimable Member
 

The great Chatriyian's Daughter. Sema twist. Very very intresting sis.


 
Posted : August 7, 2026 9:34 am
(@muthupriyabalaji)
Posts: 11
Active Member
 

Namaa leaderkku rendu kulanthaigal, interesting


 
Posted : August 7, 2026 9:46 am
(@subhakumar85)
Posts: 112
Estimable Member
 

Hmm namma hero sir than..


 
Posted : August 7, 2026 11:20 am
(@sabarimanju5gmail-com)
Posts: 9
Active Member
 

சான்சே இல்ல sis,👑👑👑♥️♥️♥️♥️🎉🎉🎉


 
Posted : August 7, 2026 11:32 am
(@crvs2797)
Posts: 188
Estimable Member
 

தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 28)

எனக்கு தெரிஞ்சிடுச்சு, தியாஸ் டேடி.... சத்ரியன் தானே...?
அதெப்படித்தான் இந்த கதைகள்லயும், சினிமாக்கள்ல மட்டும் ஒரே நாள்ல கன்சீவாகி டேடி மம்மி ஆகிடுறாங்களோ தெரியலை...? அதுவும் கை கழுவி விடறவங்களாலயே ஆகிடுறாங்க.
இந்த ஃபெர்ட்டிலிட்டி ஆஸ்பிட்டல், வருசக் கணக்கா காத்திருக்கிறவங்க மட்டும் என்ன பாவம் பண்ணாங்களோ தெரியலை. தலை கீழ நின்னு தண்ணியே குடிச்சாலும் வேலைக்காகறதில்லை..ம்...!

😊😊😊
CRVS (or) CRVS 2797


 
Posted : August 7, 2026 11:32 am
(@crvs2797)
Posts: 188
Estimable Member
 

தகிக்கும் நிலவொன்று.. !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 28)

எனக்கு தெரிஞ்சிடுச்சு, தியாஸ் டேடி.... சத்ரியன் தானே...?
அதெப்படித்தான் இந்த கதைகள்லயும், சினிமாக்கள்ல மட்டும் ஒரே நாள்ல கன்சீவாகி டேடி மம்மி ஆகிடுறாங்களோ தெரியலை...? அதுவும் கை கழுவி விடறவங்களாலயே ஆகிடுறாங்க.
இந்த ஃபெர்ட்டிலிட்டி ஆஸ்பிட்டல், வருசக் கணக்கா காத்திருக்கிறவங்க மட்டும் என்ன பாவம் பண்ணாங்களோ தெரியலை. தலை கீழ நின்னு தண்ணியே குடிச்சாலும் வேலைக்காகறதில்லை..ம்...!

😊😊😊
CRVS (or) CRVS 2797


 
Posted : August 7, 2026 11:37 am
(@kalidevi)
Posts: 140
Estimable Member
 

Ithu ena periya twist chathriyanuku harini kitta irunthum oru kolanthai athan sharadha kuptu vanthuta itha ethirpakala nichayama but chathriyan apo uyiroda illa thana


 
Posted : August 7, 2026 11:59 am
(@kalidevi)
Posts: 140
Estimable Member
 

Ithu periya twist itha ethirpakala harini kitta irunthum oru kolanthaiya chathriyanuku sharadha atha pathathum kuptu poren sollita . Apo chathriyan uyiroda illaya


 
Posted : August 7, 2026 12:06 pm
(@kavi-bharathi-arunkumar)
Posts: 126
Estimable Member
 

Chathriyan than diya oda appa na ra twist than sis aana definte ah ipadi oru twist ah nan expect pannavae illa athu than Shardha diya ah pakkum pothu yae kandupidichita la yae appovae therinchiduthu diya Chathriyan oda ponnu nu .


 
Posted : August 7, 2026 12:56 pm
(@priyarajan)
Posts: 20
Eminent Member
 

OMG unexpected 


 
Posted : August 8, 2026 9:04 am
(@karthi1206)
Posts: 69
Trusted Member
 

unexpected twist .. sema sema interesting epi 


 
Posted : August 24, 2026 8:26 am

Scroll to Top