மதுர ஜில்லா... மச்சானே!-57
அத்தியாயம்-57
அதியமானோ "இதென்னப்பா நம்ம வீட்டுக்கு வர்ற அடுக்கடுக்கான சோதனை. தூரிகாவை அந்த வசந்த் பையன் அசிங்கப்படுத்த நினைச்சான். நீ வந்ததும் அடிச்சி அனுப்பியாச்சு. இந்த சின்ன பிள்ளை இதுவும் சேர்ந்து காதலிக்கறதா இல்ல மதி சொல்லறா. இதுல ஏதோ ரெஜிஸ்டர் மேரேஜ் வேற பண்ணிட்டதா அழறாளே." என்று புலம்பினார்.
"சித்தப்பா... பதறாதீங்க. முதல்ல என்ன விஷயம்னு பார்க்கலாம். அன்னிக்கு மாதிரி போலீஸுக்கும் போன் பண்ணிருக்கு. அவர் ஊர்ல இல்லை... வர்ற வரை பாத்து கையாள சொல்லியிருக்கார்." என்று கூறியபடி இனியன் பைக்கை வேகமாக நிலானி வீட்டை நோக்கி செலுத்தினான்.
அதியமானும் பின்னால் அமர்ந்திருந்தார். வழி முழுக்க இளையமதியின் அழுகை மட்டும் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது அவருக்கு.
இளையமதி வீடு தனித்து இருப்பதால் ஊருக்குள் இன்னமும் விவகாரம் சரியாக கசியாமல் இருந்தது. வீட்டு வாசலுக்கு முன்பு கூட்டம் இல்லாவிட்டாலும், உள்ளே இருந்து சத்தங்கள் தெளிவாக கேட்டன.
பைக்கை நிறுத்திய இனியன் வேகமாக உள்ளே சென்றான்.
வாசலில் பிரபு தடுமாறியபடி நின்றிருந்தான். காலையில் ஒரு குவெட்டர் வேறு உள்ளிறக்கியிருந்தான்.
"நிலானி... வா... நீ என் பொண்டாட்டி... நம்ம ரெஜிஸ்டர் மேரேஜ் ஆயிடுச்சு... என் கூடத்தான் வரணும்.. உனக்கு, நம்ம கல்யாணம் ஆனது நினைவிருக்குல்ல.. உங்க அப்பா அம்மாவிடம் சொல்லு.." என்றான்.
கல்யாணசுந்தரம் கோபத்தில் ஆவேசமாக இருந்தார்.
"டேய்... நேத்தே அடிச்சேன் உன்னை யாரு திரும்ப வரச்சொன்னது. வெளியே போடா..." என்று தள்ள முயன்றும், பிரபு தற்போது போதை குறைவாக இருக்க அவரையே தள்ளி விட்டு, மீண்டும் முன்னே வந்தான்.
இளையமதி கதறிக் கொண்டிருந்தார். அந்த நேரம் இனியன் உள்ளே நுழைந்தான்.
ஒரு பார்வையிலேயே பிரபுவின் நிலையும்... அவனுக்கு சற்றுத் தள்ளி மரத்தடியில் நின்று எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வசந்தையும் கவனித்தான்.
'தூரிகாவை விட்டுட்டு... இப்போ நிலானியா.?' ஒரே நொடியில் எல்லாம் புரிந்தது.
அவன் கண்கள் சுருங்கின. வசந்த் மட்டும் ஒன்றும் தெரியாதது போல நின்று கொண்டிருந்தான்.
"என்ன பிரச்சனை மாப்பிள்ளை" என்று அதியமான் உள்ளே வர... இளையமதி ஓடிவந்து, "அண்ணா... இந்த பையன் என் பொண்ணை கல்யாணம் பண்ணிட்டேன்னு சொல்லி கூட்டிட்டு போக வந்திருக்கான். அண்ணா." என்று கதறினார்.
அதியமான் பிரபுவைப் பார்த்தார். "என்னடா உளறுற .?" என்று அதட்ட, "நான் ஒன்னும் உளறலை." என்று சட்டைக்குள் மடித்து வைத்திருந்த ஒரு காகிதத்தை எடுத்தான்.
"இதோ... ரெஜிஸ்டர் மேரேஜ் சர்டிபிகேட்..." கல்யாணசுந்தரம் அதைப் பறித்துப் பார்த்தார்.
அதில் அரசாங்க முத்திரை சீல்கள். மகளின் கையெழுத்து இருக்க, அவர் கைகள் நடுங்கின.
வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து அருளாளன், வேல்விழி, மதுரா மூவரும் அவசரமாக இறங்கினர்.
தூரிகா கல்லூரிக்கு போகாமல் மதுராவுக்கு அழைத்து பேச, மதுராவுக்கு பகீரென்றது. "அய்யோ அம்மா அதுக்கு தான் கால் பண்ணிச்சா.. நான் தான் எடுக்கலை தூரிகா நான்.. அங்க போய் பார்க்கறேன்" என்று வைத்தாள்.
"என்னாச்சு...?" என்று வேல்விழி கேட்க, நிலானியால் ஏதோ பிரச்சனை என்றும், அம்மா வீட்டுக்கு போகணும். அவரும் அங்க தான் இருக்கார். தூரிகா காலேஜ் போகலையாம் அத்தை. நான் போறேன்" என்று முயன்றவளை நிறுத்தி, அருளாளன் "கார் எடுக்கேன் அதுல ஏறு." என்று வேல்விழியையும் அழைத்து வந்திருந்தார்.
மதுரா நேராக தங்கையிடம் ஓடினாள். "நிலானி... என்னடி இது...? என்னென்னவோ கேள்விப்படறேன்." அவளது தோளைப் பிடித்து உலுக்கினாள்.
"படிக்க தானே அப்பா அனுப்பியது. போயும் போயும் இவனையா விரும்பறா?" அந்த ஒரு கேள்விதான். இதுவரை அழுதுக் கொண்டிருந்த நிலானியின் மனதை வெடிக்க வைத்தது.
அவள் மதுராவின் கையைத் தட்டிவிட்டாள். "என்னை கேள்விக் கேட்கற. ஏன் பிரபுக்கு என்ன குறைச்சல்?" என்று கத்தினாள்.
அனைவரும் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தனர்.
"உன் வாழ்க்கை மாதிரியே என் வாழ்க்கை அமைய விடமாட்டேன். சொந்தம் பந்தம்னு சொல்லி சொல்லி, நல்ல இடம் அதுயிதுனு அப்பாவும் அம்மாவும் சேர்ந்து உன்னை என்ன பண்ணி வச்சாங்கனு பார்த்தேனே. இப்ப எனக்கும் அதே போல ஏதாவது பண்ண போறீங்கன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சீங்களா...?"
இளையமதி அதிர்ந்து, "நிலானி...!" என்று அழைத்தார்.
"அம்மா நீங்க பேசாதீங்க." அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. "என் வாழ்க்கையை நானே பார்த்துக்கணும்னு நினைச்சேன்... அதுல என்ன தப்பு...?" என்றாள்.
கல்யாணசுந்தரம் கோபமாக, "நாங்க உன்னை கஷ்டப்படுத்துவோம்னு நினைச்சியா...?" என்று அதட்ட,
"ஆமா..." என்று சத்தமாகக் கத்தினாள்.
"நீங்க அதைத்தான் பண்ணுவீங்க. உங்களுக்கு மக மனசுல என்ன இருக்குனு தெரிந்தும் அதை நெருப்புல பொசுக்கிட்டு வாழ சொல்விங்க" அவள் பார்வை நேராக மதுராவின் மீது விழுந்தது.
"அக்கா சம்மதம் கேட்டா கல்யாணம் பண்ணினிங்க. அதனால நான் என் வாழ்க்கையை டிசைட் பண்ணிட்டேன். என்னை விரும்பற பிரபுவை நானும் காதலிச்சேன். இதுல என்ன தப்பு. அவன் நம்மளை பிரிச்சிடுவாங்கனு கல்யாணம் பண்ணிக்கலாம்னு பேப்பர்ல சைன் கேட்டான். போட்டேன். நாளைப்பின்ன மாமன்மகன்னு யார் தலையிலும் என்னை கட்ட முடியாதே.
அதோட நான் அக்கா இல்லை. மனசுல ஒருத்தனை வச்சிட்டு, கல்யாணம் பண்ணிட்டு எல்லா கொடுமையையும் தாங்கிட்டு எவன் கூடவும் வாழ முடியாது." என்று கூற அந்த வார்த்தைகள் மதுராவின் இதயத்தில் நேராக பாய்ந்தது.
அவள் அப்படியே உறைந்து நின்றாள். அகிலனை விரும்பி இனியனை மணந்து இன்று நிலானி கூட கேலியாக விமர்சிப்பதை அவளால் தாளயியலவில்லை.
இனியனும் தலை குனிந்தான்.
ஒவ்வொரு வார்த்தையும், தன்னை நோக்கிதான் வீசப்படுவது போல இருந்தது.
அருளாளன் கூட பேச முடியாமல் நின்றார்.
அந்த நேரம் சற்றுத் தள்ளி நின்ற வசந்த் மெதுவாக பிரபுவின் தோளைத் தட்டினான்.
"டேய்..." பிரபு திரும்பிப் பார்த்தான். "இப்ப விட்டுட்டா... அவளை உள்ளே கூட்டிட்டு போயிடுவாங்க. அங்க பாரு எழிலரசன் வேற வந்துட்டான்" என்று பஸ் ஸ்டாப்பில் பஸ் ஏற வந்து நிலானி வரவில்லை, தூரிகா அக்காவும் கடந்து செல்லவில்லை என்று தூரிகா அக்காவுக்கு போனில் அழைத்து பேசியவன் நிலானி வீட்ல பிரச்சனைனு அண்ணா என்னை வீட்ல இருக்க சொல்லிடுச்சு.' என்றதும் எழிலரசன் நிலானி வீட்டிற்கு இதோ வந்துவிட்டான்.
பிரபுவிற்கு எழிலரசனை கண்டதும், வசந்து முருகன் பேச்சு வேறு ''நீ அவ புருஷன்னு சொல்லி... கையைப் பிடிச்சு இழுத்துட்டு வாடா..." அந்த வார்த்தைகள் இடையில் வந்து மீண்டும் குவெட்டர் அருந்திய போதையில் இருந்த பிரபுவின் மூளையை முழுவதுமாக மூடின. தான் முதல் வருடம் படிக்கும் மாணவன் என்றோ, முருகன் வசந்த் ஏன் தன்னை இது போன்ற சூழ்நிலையை உருவாக்கி தள்ள முனைந்தனர் என்றோ எல்லாம் யோசிக்கவில்லை. மதுவின் பிடியில் ஒருவன் சென்றால், அவன் மூளை ஒரு கட்டத்திற்கு மேல் அவன் பேச்சையே கேட்காது. அப்படி மூளையற்ற ஒருவனாக தான் பிரபு அங்கே நின்றியிருந்தான்.
இனியனோ தன்னை வைத்து நிலானி காதல் என்ற பெயரில் படுக்குழியில் விழுந்து விட்டதை புரிந்துக்கொண்டான்.
அப்படியிருந்தும் எடுத்து சொல்ல வேண்டுமே என்று "இங்க பாரு நிலானி... அங்க நிற்கற வசந்த் தூரிகாவை விரும்பறேன்னு இரண்டு நாளுக்கு முன்ன அகிலன் வீட்ல ஆர்ப்பாட்டம் பண்ணினான். ரகுவை அடிச்சிருக்கான். தூரிகா உடனே மதுராவுக்கு போன் போட்டு சொல்லவும் நான் அதனால அங்க போய் வசந்தை அடிச்சி போலீஸ் ஸ்டேஷன்ல விட்டு வார்ன் பண்ணினேன். அவன் அதை மனசுல வச்சிட்டு, உன்னை வச்சி அடுத்த திட்டத்தை போட்டிருக்கான். நம்ம குடும்பமானத்தை சந்தி சிரிக்க ட்ரை பண்ணறான்.
இந்த பையனும் நீயும் காதலிச்சதை வச்சி பிளே பண்ணறான். லவ் எல்லாம் இந்த வயசுல வேண்டாம் நிலானி." என்று மென்மையாக எடுத்து சொன்னான்.
"சாத்தான் வேதம் ஓதுதோ" என்று இகழ்ச்சியாக பேச, மதுராவோ "நிலானி.. அவர் உன்னோட அக்கா புருஷன். என்ன எதிர்த்தா பேசற? படிக்க அனுப்பிச்சா படிக்க போடி." என்று அதட்டினாள்.
"உன் வாழ்க்கைக்கு சரியான முடிவு எடுக்கறப்ப ஊமையா இருந்துட்டு இப்ப என் வாழ்க்கைக்கு நாட்டாமை பண்ணறியா. ஒன்னும் தேவையில்லை." என்றாள்.
அருளாளன் வேறு, "என்னடா இனியா பேசிட்டு இருக்க. மண்டையில நாளு தட்டு தட்டி போக சொல்லு. இளையமதி அவளை வீட்ல பூட்டி வை" என்றார்.
"ஆங்.. அடிச்சி பாருங்க இப்பவே ஊரை கூட்டுவேன்" என்று கத்தினாள் நிலானி.
வேல்விழியோ "அம்மாடி.. இதெல்லாம் சரியில்லை. எதிர்த்து பேசறது தப்பு" என்றார்.
நிலானியோ உதடு கோணித்து திரும்பிக் கொண்டாள். கல்யாண சுந்தரமோ அதியமானிடம், 'மச்சான் நீங்க புத்திமதி சொல்லுங்க கேட்பா" என்றார்.
அதியமானோ ''போலீஸுக்கு சொல்லியிருக்குயா. வரட்டும். நாம பேசினா புரியாதவங்களுக்கு புரியறவங்க வந்து நாலு மிதி மிதிச்சு சொல்வாங்க." என்றார்.
நிலானியோ 'வரட்டும் மேரேஜ் ஆன சர்டிபிகேட் காட்டுவேன்" என்று கூற, அவள் சொல்லி அடங்கிய சில நிமிடமே போலீஸும் வந்தது. வசந்த் தான் "சார் எங்களை அடிச்சி மிதிச்ச மாதிரி பண்ண முடியாது. பையன் க்ளியரா கல்யாணம் பண்ணிருக்கான். அதோட பொண்ணும் வர ரெடியா இருக்கு" என்று சிரித்தான்.
"நீங்க எங்க டா இங்க" என்று அந்த ரெஜிஸ்டர் மேரேஜ் பத்திரத்தை வேறு வாங்கி பார்த்தார் போலீஸ்.
இளையமதி வேறு போலீஸ் வந்ததும் எதிர்பார்ப்புடன் நிற்க, "இனியன்.. கல்யாணம் பண்ணி பத்திரம் வச்சியிருக்கான். உங்க வீட்டு பொண்ணும் போக ரெடியா இருக்கு. இதுல நாம சட்டபூர்வமா எதுவும் பண்ண முடியாது.
உங்க தங்கை தூரிகா விஷயத்துல அந்த பொண்ணுக்கு பிடிக்கலை. அதனால வசந்தை நாங்க வார்ன் பண்ணி அனுப்பினோம். இதுல எங்களால உதவ முடியாது. இந்த பொண்ணிடம் பேசி பாருங்க." என்று கைவிரித்ததாக கூறினார்.
சச்சரவு ஆகாமல் தடுக்க மட்டும் தாங்கள் இருப்பதாக கூறினார்.
போலீஸ் வந்ததும் பயந்து நின்ற பிரபு தற்போது போலீஸ் பேச்சில், தடுமாறியபடி பலம் வந்தவனாக முன்னே வந்தான். அவனை பார்த்து நிலானியிடம் "ஏம்மா.. காதலிக்க வேற பையனே இல்லையா?" என்று நொந்தவராக தலையில் அடித்தார்.
"நிலானி... வா..." என்று அவளது கையைப் பிடித்து இழுத்தான் பிரபு. நிலானியும் வீட்டில் உள்ளவர்களை தாண்டி பிரபுவுடன் நடக்க முன்னெடுத்து வைத்தாள்.
பிரபு வசந்த் இளக்காரமாக சிரிக்க, பிரபுவை பின்னாலிருந்து ஒரு மிதி மிதித்தது ஒரு கால்.
"நிலானி உள்ள போ' என்ற இடியென ஒரு குரல் அந்த வீட்டையே அதிர வைத்தது.
நிலானி திடுக்கிட்டு குரல் வந்த திசையில் பார்க்க, அங்கே அகிலன் பிரபுவை மிதித்து, வசந்தை கண்டும் ஒரறை விட்டான்.
காரிலிருந்து காவ்யா, தூரிகா, மீனாட்சியும் இறங்கினார்கள்.
"என்னல... கல்யாணம் பண்ணிக்கிட்டியா? எந்த ரெஜிஸ்டர் ஆபிஸ்ல கல்யாணம் பண்ணின?" என்று அதட்டினான்.
போலீஸோ "அகிலன் பத்திரம் வச்சியிருக்கான்பா" என்று கூற, "அட... எங்க நிலானிக்கு பதினெட்டு வயசாக இன்னும் மூனு மாசமிருக்க, இவன் எப்படி கல்யாணம் பண்ணினான்.
ஆங்.. ஏலேய்... என்ன கதை விடற. நிலானிக்கு பெர்த் சர்டிபிகேட், ஆதார் கார்டு வாங்கி தந்தது நான். எனக்கு தெரியாத என்ற அத்தை மகளுக்கு பதினெட்டு வயசு ஆச்சா இல்லையானு.
பதினெட்டு வயசு ஆக இன்னும் மூனு மாசமிருக்கறப்ப எந்த பதிவுதிருணம் அலுவலகத்துல உங்க கல்யாணம் நடந்துச்சு?" என்று பத்திரத்தை பார்த்தான்.
ஓ... இந்த போலி பத்திரமா. ஏன்டா.. எப்படிடா.. போலி பத்திரத்துல கையெழுத்து வாங்கிட்டு ஜம்பமா போலீஸ் எதிர நிற்கற. அதுப்பு தான்." என்றவன் "கொஞ்சம் இரு.. எங்கூட்டு பொண்ணுகிட்ட பேசிட்டு வர்றேன்." என்று நிலானியை நெருங்கி வந்தான்.
நிலானியோ இதுவரை கத்தி ஆர்ப்பாட்டம் செய்தவளோ அகிலன் வரவும் அமைதியானாள்.
அகிலனோ "என்ன பண்ணற நிலானி? ஆங்.. உனக்கு இப்ப கல்யாணம் எல்லாம் வேண்டாம். படிப்பு முக்கியம்னு சொல்லி தானே.. காலேஜில சேர்க்க சொன்னேன். நீ என்ன கோட்டி தனம் பண்ணிருக்க. இந்த வயசுல காதலா? பதினெட்டு வயசு உனக்கு முடிஞ்சுதா இல்லையானு கூட உனக்கு யோசிக்க தெரியலை. அவன் கையெழுத்து போட சொன்னான்னு போட்டுட்டு நிற்கற. இந்தா.. குடிச்சிட்டு அந்த மாதிரி நாலு ஊதாறிங்க பேசறதை கேட்டு இங்க வந்திருக்கான். இவனெல்லாம் உனக்கு ஜோடி. அப்படியே மண்டையில போட்டேன்னா.
அதென்னா எல்லாரையும் எதிர்த்து பேசறியாம். என்ன பழக்கமிது. பெரியவங்க சில நேரம் தப்பு செய்தா அதை சுட்டி காட்டு. வேண்டாம்னு சொல்லலை. ஆனா அதுக்காக பெரியவங்களை ஏசறது மதிக்காம போறது தப்பு நிலானி.
முதல்ல அத்தை மாமாவிடம் மன்னிப்பு கேளு." என்றதும் தலைகுனிந்திருந்தாள்.
ஒரு பக்கம் போலீஸிடம் "சார் அவன் அப்பா போலி பத்திரம் செய்யறவர். அதனால இதை போலியா உருவாக்கி வந்திருக்கான். அசலும் போலியும் லேசுல தெரியாது. ஆனா இது போலி தான். அதோட எங்க வீட்டு பொண்ணுக்கு பதினெட்டு ஆகலை. நீங்க சட்டபடி இப்ப ஆக்ஷன் எடுங்க." என்றான் அகிலன்.
''படவா.. நானே ஒரு நிமிஷம் நிஜமான பத்திரம்னு நினைச்சிட்டேன். அடிங்க... வாடி.. உனக்கு தனி ட்ரீட்மெண்ட் தர்றேன்.' ஏலேய்.. நீயும் தான். தூரிக் இல்லைன்னா நிலானினு குடும்பத்தை குறிவைக்கறிங்களோ? அதுவும் பொம்பள பிள்ளைங்களா? அகிலா இதெப்படிப்பா போலினு தெரியும்." என்று போலீஸ் திட்டி இழுத்து மற்றவர்களிடம் ஜீப்பில் ஏற்றிவிட்டு கேட்டார்.
"சொல்லறேன் சார்" என்றவன் நிலானியை தான் பார்த்தான்.
தற்போது அருளாளன் அதியமான் இளையமதி மூன்று குடும்பத்தின் ஆட்கள் மட்டும் இருக்க, நிலானி அழுதபடி விசும்பினாள்.
நிலானி திட்டையில் அமர வைத்து, "தூரிகா மாதிரி தங்கச்சியா இருந்தா வந்த வேகத்துக்கு அறைஞ்சிருப்பேன். அத்தை மகளா போயிட்ட. அடிக்கவும் முடியலை. அழற வரை அழு. எல்லாம் அழுதுட்டு வீட்ல நல்ல புள்ளையா மாறி படிக்கற வழியை பாரு. மூனு மாசம் ஆகட்டும் பதினெட்டு வயசு வந்துடும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு அவனை நம்பி திரும்ப போகாத. அவன் காலேஜ் படிக்க வந்ததே போலி சர்டிபிகேட் மூலமா தான். என்ன பார்க்கற... இங்க வந்ததும் தூரிகா அவனை பத்தி சொல்லவும், காலேஜிக்கு போன் போட்டு விசாரிச்சேன். பையன் எப்படினு. அவங்க தான் சர்டிபிகேட் எடுத்து பார்த்து அப்பா அம்மா யாரு எப்படினு சொல்லறப்ப, மார்க் ஷீட்டே போலினு கவனிச்சிருக்காங்க.
அது கூட உன்ற பிறந்த நாள் வருஷம் மாசம் எல்லாம் எனக்கு அத்துபடியால சட்டுனு அதை சொன்னேன். அவளுக்கு பதினெட்டே ஆகலை எப்படி கல்யாணம் பண்ணினான்னு. அப்ப தான் அவங்களும், பிரபுவை விச்ரிக்க, அவன் கூட்டாளில ஒருத்தன் பிரபுவோட அப்பா போலி பத்திரம் செய்யறவர்னு சொல்லியிருக்கான். அதனால தான் பையன் போலியா ரெஜிஸ்டர் மேரேஜ் சர்டிபிகேட் கூட சட்டுனு அசலை போலவே செய்து வச்சியிருக்கான். இது வர்றப்ப தான் அவசரவசரமா கேட்டு தெரிந்தது.
பெத்தவங்க சில நேரம் பிள்ளைங்களுக்கு தப்பா ஏதாவது முடிவெடுத்து இருக்கலாம் நிலானி. அதுக்குனு அதை தப்பாவே கொண்டு போக மாட்டாங்க. அதை சரிப்படுத்த முயலுவாங்க. உன்ற வாழ்க்கையில சரிப்படுத்த தான் படிப்பை தர்றாங்க. புரிஞ்சு நட சரியா?" என்று குரலுக்கு "சரிங்க மச்சான்" என்று கண்ணீரை துடைத்து வீட்டுக்குள் நடந்தாள்.
அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியம், இத்தனை பேர் அத்தனை சொல்லியும் எதிர்த்து பேசியவள் அகிலன்
பேசவும் அடங்கிவிட்டாள் என்றதும் மனம் நிம்மதியடைந்தனரே தவிர, இவன் வந்ததும் கேட்டுக் கொண்டாளென கோபிக்கவில்லை.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்
அகிலனும் என்ட்ரி தரணும்ல. இனியன் மட்டும் ஸ்கோர் பண்ணினா எப்படி.? நிலானி பேரண்ட்ஸ்குக்கு வயசு ஸ்டக் அனாகலை என்றதாக தான் எழுதியிருக்கேன்.
மதுர ஜில்லா மச்சானே !!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 57)
பொண்ணுங்க திடிர் திடிர்ன்னு குண்டைத் தூக்கிப் போட்டால், எந்த பேரண்ட்ஸ்க்குத்தான் வயசு, தேதி, வருசம் எல்லாம் ஞாபகத்திற்கு வரும்...?
அடேயப்பா..! இந்த காலத்து ஜென்ஜீ பசங்க எந்த நேரத்துல என்ன செய்வாங்கன்னு யோசிக்கவே முடியறதில்லை,
திடீர் கல்யாணம், திடீர் டிவோர்ஸ்தான். இதுல குழந்தைங்க இருந்துட்டா...
அதுங்க வேற அப்பா அம்மா நடுவில அலைகழிக்கப்படுது.
இல்லையா, அந்த குழந்தைக்கு வேற அப்பா அம்மாவை கொண்டு வந்து அவங்க வாழ்க்கையையே
வேற குழப்பி விட்டுடறது.
நல்லவேளை, அகிலன் வந்ததால பிரச்சினையை தீர்க்க முடிஞ்சது.
இந்த நிலானிக்கு பதினெட்டு வயசு ஆனவுடனே திரும்பவும் பிரபு பின்னாடி ஓடாமல் இருந்தால் சரி தான்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Super akila ninachen enada Akilan illathapo ippadi nadakuthe vantha nalla irukumenu yarukume thonala age crt ah vanthu age solli oru ethu vitan paru super silravamga sonna ketu thana aganum but nilani panathu pesinathu thappu athu ena ellaraium ethirthu pesurathu oruthana pathu periya anga solrangana therila
-
மதுர ஜில்லா... மச்சானே!-28
7 days ago
-
மதுர ஜில்லா... மச்சானே-43
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-67
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே-70 (முடிவுற்றது)
3 weeks ago
-
மதுர ஜில்லா... மச்சானே!-39
3 weeks ago
- 25 Forums
- 330 Topics
- 1,589 Posts
- 1 Online
- 420 Members
