அத்தியாயம்-34
மிதிலா குழந்தைக்கு பாலை தந்துவிட்டு, உறக்கம் வர போராடினாள். தீபாவோ நாளெல்லாம் வீட்டையும் குழந்தையும் மகளையும் பார்த்து சோர்ந்திருந்தனர்.
குழந்தை பாலை குடித்துவிட்டு விழித்திருக்க, மிதிலா கண்கள் சொக்கியது.
சற்று நேரம் பொறுத்து பார்த்து, கௌசிக் அறைக்கு வந்தாள். “இரண்டு பேரும் கதை பேசறிங்கள்ல? அப்படியே இவனையும் தூங்க வையுங்க. எனக்கு தூக்கமா வருது” என்று ஹ்ருதேஷ் கையில் குழந்தையை தந்துவிட்டு சென்றாள்.
“ஏய் மிது நான் என்னடி பண்ணறது” என்றான் நாயகன்.
“ஆஹ்.. டயப்பரை மாத்தி தூங்கவை” என்று செல்ல, “என்னடா இவ இப்படியிருக்கா? ஆப்டர் பிரகனென்சி இப்படி தான் இருப்பாங்கனு கேள்விப்பட்டேன் அதுக்குன்னு குழந்தையை என் தலையிலேயே கட்டறா” என்றதும், கௌசிக் குழந்தையை நெஞ்சில் படுக்க வைத்து விளையாட்டு காட்ட நண்பன் அருகே ஹ்ருதேஷும் கொட்டாவி விட்டான்.
“ஆமா… இன்னிக்கு உன்னை பொண்ணு வீட்ல இருந்து நாலைந்து பேர் பார்க்க வந்தாங்களாமே. எப்படி போச்சு?” என்றான் ஹ்ருதேஷ்.
“நீ வேற.. கடைக்கு அந்த பொண்ணையும் கூட்டிட்டு வந்துட்டாங்க. அவ பேரு என்னவோ ஊர்மிளா. பப்ஸ் கேட்டுச்சு… கொண்டு போய் தந்தேன். என்னையே பார்த்துட்டு இருந்துச்சு.
“என்ன லுக்கு… தட்டை பார்த்து சாப்பிடு. கடைக்கு வந்தம்மா சாப்பிட்டமானு இல்லைனு ஏசிட்டேன். அந்த பொண்ணு ‘ஙே’ன்னு முழிச்சிடுச்சு.
அப்பறம் அப்பா வந்து பொண்ணு வீட்டுக்காரங்களை இன்ட்ரோ பண்ணினதும் அசிங்கமா போச்சு. அவங்க சைட்ல என்னை பிடிக்குதுனு தெரியவும் என்னோட பேச வச்சாங்க.
அந்த பொண்ணுகிட்ட வந்ததும் ‘சாரி சில பெண்ணுங்க சாப்பிட வந்து லுக்கு விட்டு பார்க்கறதுஅ நடக்கும். அது மாதிரினு நினைச்சிட்டேன்’னு சொல்லவும், ‘புரியுது… நீங்க பேசறது சரிதான். நாளையப்பின்ன எவளாவது காதல் கத்திரிக்கானு ரூட் விட்டாலும் இப்படியே பதில் சொல்லுங்க. கூடுதலா, எனக்கு ஊர்மிளானு பொண்ணுக்கூட கல்யாணமாக போகுதுனு தகவலையும் சொல்லிடுங்க’னு பட்டாசா பேசினா.
அப்ப பல்பு எரியவும், போன் நம்பர் வாங்கினேன்.” என்றான் கௌசிக்.
“டேய்… நீ நம்பர் தந்தியா? இல்லை.. அந்த பொண்ணு நம்பர் தந்துச்சா?” என்று கேட்க, வெட்கத்துடன், “அந்த பொண்ணு தான் நம்பர் தந்தா. கொஞ்சம் ஷாக்கா இருந்துச்சு. ஆனா அந்த பீலிங் நல்லாயிருந்துச்சு.” என்று இளித்தான்.
“தேங்க்ஸ் சொல்லு.. அந்த பொண்ணுக்கு இல்லை.. எனக்கு. பிகாஸ்.. அந்த பொண்ணிடம் பேசினேன். ஏம்மா நீயும் வந்தா ஒரே வேலையா முடியும். அதோட பேச டைமிருந்தா இரண்டு வார்த்தை பேசி போன் நம்பரை தந்துடு. எப்படியும் அந்த பக்கி அவனா போன் பண்ணி லவ்ஸ் விட ரொம்ப லேட் பண்ணுவான். நீ நம்பர் தந்துட்டா அதுக்கு ஏத்த மாதிரி பிக்கப் பண்ணிடுவான். பெரியவங்களுக்கு தெரிய வேண்டாம். நமக்குள்ள வச்சிக்கோனு ரெகமெண்ட் பண்ணினது நான்டா” என்றான் ஹ்ருதேஷ்.
கௌசிக்கோ அதானே பார்த்தேன். ஒரு பொண்ணா வந்து நம்பர் தந்துட்டு எனக்கு உங்களை பிடிச்சிருக்குங்கனு சொன்னப்பவே சந்தேகப்பட்டேன்.” என்றான்.
“சரி பொண்ணு பிடிச்சிருக்கா?” என்றான் ஹ்ருதேஷ்.
”நல்லா தான் இருந்துச்சு.” என்றதும், “குட்டி பையனுக்கு பெயர் வச்சப்பிறகு வீட்ல வரை பூ வச்சி நிச்சயம் பண்ணப்போறாங்க. அதுக்கு அடுத்து ஐந்தாவது மாசத்துல கல்யாணம் செய்யலாமானு மாமா என்னிடம் கேட்டார். அதுக்குள்ள இவனுக்கு தலை நின்னுடும், நல்லா கையில உட்கார ஆரம்பிச்சிடுவான். ஓகேன்னு சொல்லிட்டேன். அதுவரை லவ் பண்ணு” என்று கண் சிமிட்டினான் ஹ்ருதேஷ்.
கௌசிக் மருமகனை நெஞ்சில் போட்டு தாளமிட்டபடி, “நீ சொல்லிட்டல்ல பண்ணிடுவோம்” என்றான்.
இப்படியாக சில நாட்கள் செல்லவும், மிதிலாவுக்கு, தன்னை காண வந்து கணவன் அண்ணனிடம் கதையளக்க செல்வதும், கூடவே மகனையும் அழைத்துக் கொண்டு போவதில் பொறாமை உருவானது.
ஹ்ருதேஷுக்கு இரவு சாப்பாடு பரிமாறியபடி “ஹ்ருத்… ரூம்ல வந்து தூங்கு. எப்ப பாரு இங்கயே தூங்கற” என்றாள்.
“மச்சி கூட பேசிட்டு வர்றேன்டி. இன்னும் மூன்று நாளு தான். நான் பெங்களூர் பறந்துடுவேன்.” என்றான்.
“அப்ப என் கூட நேரம் செலவழிக்க தோணலையா உனக்கு?” என்று கேட்க, ”அப்படியில்லடி இங்க வர்றப்ப அம்மா சொல்லியே விட்டாங்க. நீயும் நானும் கொஞ்சம் தள்ளியிருக்க சொல்லி. அங்க வந்தா நெருக்கமா இருக்க தோணும்” என்றான்.
”டேய் நீயும் அவனும் பேசிட்டு கதையளந்தா எனக்கு வயிறு எரியுது. நீ என்னை விட அவனிடம் அதிகம் நேரம் செலவழிக்கற. ஐ மிஸ் யூ” என்றாள்
“ஏ லூசு… நின் பிரேமம் என் சிநேகம் இரண்டுமே எனக்கு வேண்டும்டி. இரண்டுமே எனக்கு ஈகுவள் தான்.
சும்மா பொறாமையில பொசுங்காத. மூன்று நாளில் பெங்களூர்ல போயிட்டு தனியா ஆர்டர் போட்டு சாப்பிடணும். இந்த ஒன் இயர் உன் அண்ணனிடம் பேசாம விட்ட கதையெல்லாம் பேசணும். மனசு ரிலாக்ஸ் ஆகணும். அவனுக்கும் லவ் டிராக் அடுத்து போகும். நீ குழந்தையை கவனிக்க கத்துக்கோ. அடுத்து பெங்களூர் வந்துட்டா அம்மாவும் கூட வருவாங்க. ஒரு வருஷம் நம்ம குட்டி வளர்ற வரை, உன்படிப்பு முடியற வரை நாம பெங்களூர் வாசி. பிறகு சேலம் பிராண்ச் கேட்டு வந்துடலாம் நீயும் இங்க பொட்டிக் வை. அதுக்குள்ள பையனும் வளருவான் இங்க ஸ்கூல் சேர்ப்போம். எங்கப்பா அம்மா பார்த்துப்பாங்க. உங்கம்மா அப்பா வீட்டுக்கு வருவோம் போவோம். இதுக்கு நடுவுல கௌசிக் கல்யாணம் வேற இருக்கு. தெளிவான நீரோடையா வாழ்க்கை போகும். அந்த நீரோடையில அடிக்கடி கல்லு விழுந்து அதுல வர்ற அழகான அலை கோலம் போல நம்ம சண்டை வரும். வராமல்லாம் இருக்காது. பட் பார்த்துப்போம்.” என்று நீண்ட உரையாற்றினான்.
“ஸப்பா.. எனக்கு உன்னை மாதிரி பிளான் எதுவும் இல்லை மேன். இப்ப என் கூட வந்து படு. என்னை கட்டிப்பிடிச்சிக்கோ. நம்ம பையனை மட்டும் கௌசிக் வச்சிக்கட்டும்.” என்று அவன் சட்டை பட்டனை நோண்டினாள்.
“ம்கூம்.. விவரம் தான். பாருடா.. குழந்தையை என்கிட்ட தள்ளி விடுவாளாம். உன்னை மட்டும் கட்டிபிடிச்சி படுனு கட்டளையிடறா. என் பிரெண்ட் ஹ்ருதேஷ் அடிக்கடி சொன்னான். டேய் நான் ஒதுங்கி ஒதுங்கிதான் போனேன். இவ தான்டா என்னை விலக விடாம பண்ணிட்டானு. மச்சி… இப்ப நம்பறேன்டா” என்று நண்பனை பார்த்து அறையில் மிதிலா பேசியதை கேட்டவனாக வந்தான் கௌசிக்.
”ஹே.. பின்ன என்ன இவருக்கு நான் பொண்டாட்டியா நீ பொண்டாட்டியா? உன் ரூம்லயே இருக்கான் ஹ்ருத். மரியாதையா என் புருஷனை என் கூட அனுப்பு. உனக்கு தான் ஊர்மிளா இருக்காளே. அவளிடம் ஜோள்ளு விடு போ” என்று பேச, தீபாவோ “தொடப்பகட்ட பின்னி எடுக்க போறேன். என்னனென் பேச்சு பேசற. உன்னை செல்வராணிக்கா சொல்லறதுல குத்தமேயில்லை.” என்றார்.
‘இரண்டு ஒல்டுக்கும் என்னை பத்தி காஸப் பேசவே நேரம் சரியா இருக்கும்’ என்று மிதிலா யாரையோ சொல்வதாக கடந்தாள்.
இங்கு நாளை குழந்தையை பார்க்க வருவதாக ராஜலிங்கம் செல்வராகவனிடம் போனில் பேச, செல்வராணியும் அதை கேட்டவராக, “அண்ணனும் தங்கைக்கும் என் புள்ள என்னடி பாவம் பண்ணினான். எப்படி தான் இரண்டு பேரையும் பேலன்ஸ் பண்ணிட்டு சமாளிக்கறானோ.” என்றார் அவர்.
போன் ஸ்பீக்கரில் போட்டுவிட்டு தீபா குழந்தையை தூக்க, “ஆங்… உங்களுக்கும் எனக்கும் எப்படி உங்க பிள்ளை பேலன்ஸ் பண்ணினாரோ அப்படியே மெயின்டெயின் பண்ணட்டும்” என்று அவளும் போனிலேயே மாமியாரிடம் வம்புக்கு சென்றார்.
”குழந்தை பெத்தவனு பார்க்கறேன். இல்லைனு வை… அங்க வந்து ஆஞ்சிடுவேன்.” என்றார் செல்வராணி.
“அம்மா அம்மா.. நாளைக்கு ஏதோ பிரசவ லேகியம் செய்யணும் அதுயிதுனு சொன்ன. செய்துட்டியா இல்லையா. இங்க இவளிடம் பேசிட்டு இருக்கிங்க.” என்று நினைவுப்படுத்தி தாயும் தாரமும் சண்டையை முடித்து விட்டான்.
பிரசவ லேகியம் யாருக்கென்று தனித்து சொல்ல தேவையில்லை. மாமியாரிடம் மல்லுக்கு செல்லும் மருமகளுக்காக தான் செல்வராணி தயாரிக்க போகின்றார்.
கௌசிக்கோ மிதிலா ஹ்ருதேஷ் மணவாழ்க்கையை பார்த்து கையில் தன் மருமகனை கொஞ்சியபடி, ‘நாம ஊர்மிளா அத்தை கூட நைட்டு பேசுவோம்’ என்று ரகசியம் பேசினான்.
ஹ்ருதேஷ் குழந்தையோ பொக்கவாய் சிரிப்பில் மாமனிடம் மகிழ்ச்சியை பகிர்ந்தான்.
மிதிலா கௌசிக்கோடு மல்லுக்கு சென்றாலும் ‘என் பிரெண்ட டி’ என்று செல்லம் கொஞ்சும் ஹ்ருத். செல்வராணியிடம் மாமியார் என்று இடிப்பட்டு சண்டை கூட்டினாலும், ‘எங்க அம்மா டி வயசானவங்க.’ என்று அதற்கும் தடையிட்டு கொஞ்சி குழைந்து, தன்னை முத்தம் கித்தம் வைத்து, கட்டிப்பிடித்து காரியம் சாதித்துக் கொள்கின்றான் கணவனாக அவளது ஹ்ருத்.
-சுபம்.
-பிரவீணா தங்கராஜ்.
Readers உங்க கருத்தைNovel Discussion (விமர்சனம் பகுதி) Novel Discussion பகுதியில் விமர்சனமாக கருத்திடலாம். Register செய்யாத ரீடர்ஸ் மறக்காம ரிஜிஸ்டர் செய்து comments செய்து ஆதரவு தரவும். நன்றி

Wow wonderful.story sis. Awesome narration sis. Love and friendship narrated in extraordinary way. Mithu very bold girl. Hiruth genuine guy. Kowshik very innocent and lovable guy. Selvarani very sportive mother in law. Each and every episode is very twist and intresting sis. Can’t stop while.reading it sis. Another diamond in ur crown sis. Keep rocking sis.
Wonderful and interesting story sis. 0
Super super feel good story 🫰
மிதிலா… எனக்கு இவளை ஆரம்பம் முதலே பிடிக்கலை..அவ கேரக்டர் அதுதான்னாலும் எனக்கு ஒப்பலை.
ஹ்ருத்&கௌசிக்…நல்ல நண்பர்கள் ❤️❤️❤️❤️❤️
மற்றபடி இரண்டு பேர் பேரண்ட்ஸும் அவங்கவங்க பாய்ன்ட்ல கரைக்ட்டா இருந்தாங்க…மொத்தத்துல நல்ல யதார்த்தமான கதை தந்ததற்கு நன்றி. வாழ்த்துக்கள் டா 💞💞💞💞