அத்தியாயம்-5
தவமலர் அவளது சித்தி வீட்டுக்கு வந்தப்போது, ஆவுடையப்பன் நன்றாகவே வரவேற்றார். சிவநேசன் காயத்ரி எல்லாம் மாப்பிள்ளை வீட்களுக்காக, மதிய உணவை சமைத்து முடித்து சாமுண்டிஸ்வரியிடம் பேச அமர்ந்தனர்.
லதாவும் சுரேஷையும், வேண்டுமென்றே பள்ளிக்கூடத்திற்கு அனுப்பியிருக்க, தவமலர் வந்ததும் அவர்களை பள்ளி சித்தியிடம் விசாரித்தாள்.
“நேத்து லீவு போட்டாச்சு. இன்னிக்கும் எதுக்குனு அனுப்பிட்டேன். இந்த வயசுல புள்ளைங்களுக்கு படிப்பு தான் முக்கியம். உனக்கென்ன… பதினொன்னாவது கூட தாண்டாம கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லிட்ட. எம்புள்ளைங்க படிச்சி பெரிய வேலைக்கு போக வேண்டாம்.” என்று பேசினார்.
ஏன் தான் கேட்டோமோ என்ற நிலையில் தவமலர் முகம் வாடினாள். அவளுக்கென்ன இந்த வயதில் படிக்க பிடிக்காமல, திருமணத்தை கேட்டாள். சொல்லப்போனால் படிப்பில் நடுத்தரத்தில் மதிப்பெண்ணை பெற்று விடுவாள். எந்த பாடத்திலும் அதிக மதிப்பெண்ணும் எடுத்ததில்லை ஆனால் அதே நேரம் பெயில் மார்க் என்று எடுத்ததும் இல்லை.
சற்று ஊக்கப்படுத்தி, படிக்க வைத்தால் அதிக மதகப்பெண் எடுத்திருக்க வாய்ப்புண்டு.
ராசாத்தியின் பார்வை தவமலர் மேனியில் ஊர்ந்தது. புதிதாக மணமான பெண்ணிற்குண்டான காயங்கள் அதிலிருந்தது.
காயத்ரி தான் தவமலரை இழுத்துக்கொண்டு தனியாக பேச சென்றார்.
அவருமே காயத்தை கண்டு நேற்றைய நாளில் நடந்ததை யூகித்து கொண்டார்.
“அந்த தம்பி நல்லா பேசுதா? உங்க அத்தை நகையை ப்ததியோ வீட்டை பத்தியோ பேசினாங்களா? காலையில சாப்பிட்டியா?” என்று விசாரிக்க, “அவர் என்னிடம் பேசலை அத்தை. அத்தை பேசுச்சு. நகை கூட போடாம கை வீசகட்டு வந்ததா. ஆனா காலையில சாப்பிடறப்ப தட்டு நிறைய கறியை வச்சி நல்லா சாப்பிடுனு சொன்னாங்க. அவருமே, அன்பா சாப்பிட சொன்னார்.
நீங்க சொன்ன மாதிரி அவர் தொட்டப்ப தடுக்கலை. காலையில நீங்க சொன்ன மாதிரி குளிச்சிட்டேன். அத்தை சுடத்தண்ணி வச்சி தந்தாங்க. பாத்திரம் கிடந்தது கழுவினேன், துணியும் துவைச்சேன்.
இங்க வர்றதுக்கு கிளம்ப சொன்னாங்க கிளம்பிட்டேன்.
ஏன் அத்தை… தினமும் இதே போல வேலை பார்த்தா போதுமா? இப்படி தான் இருக்குமா?” என்று கேட்க, காயத்ரி தலையாட்டினாள்.
“என்னை ராசியில்லாதவனும், சிறுக்கி மக, சோறுண்ணா கொட்டிக்க வந்துட்டா, வேலையை சொல்லிட்டு அப்படியே தலையில நங்குனு கொட்ட மாட்டாங்களே? சூடு துடப்பத்தால அடிக்க மாட்டாங்க தானே? வெளிப்பார்வைக்கு படினு சொல்லிட்டு புத்தகத்தை எரிச்சாங்க சித்தி. இப்ப படிப்பு தான் போச்சு. பச்… படிச்சாலும் பன்னிரெண்டாவது முடிச்சிருப்பேன். நான் என்ன காலேஜிக்கா போவேன். அதுக்கு படிக்க வைக்க தான் அப்பாவிடம் காசு இருக்கா. அப்படியே இருந்தாலும் இவங்க படிக்க விட்டிருக்க மாட்டாங்க.
வீட்டு வேலை பார்த்தும் அடிக்கடி திட்டி அடிச்சு, தலைவலியே வந்துடுச்சு அத்தை. நேரத்துக்கு சாப்பிடாம வயிற்று வலி வந்துச்சு அத்தை. இனியாவது ஏச்சும் பேச்சும் இல்லாம இருக்கணும்.” என்றவளிடம் காயத்ரி தலைகோதிவிட்டாள்.
“அத்தையும் மாமாவும் இன்னிக்கு ஊருக்கு கிளம்பிடுவோம். இத்தோட இங்க வர்றது எப்பனு தெரியாது.
ஊருக்கு வந்தா… உன்னை பார்க்க உங்க மாமா வருவார். வீட்டு வேலை அங்க எப்படியிருக்குமோ? ஆனா இது கிராமம் மலரு. இங்க வீட்டு வேலைக்கு பஞ்சமிருக்காது. ஆடுமாடு தோப்பு துறவுனு பார்க்கவே சரியா இருக்கும்.
உனக்கு இங்க சித்திக்காரி மாதிரி உங்கத்தைகாரி இருந்தாலும் ஆச்சரியப்படுவதுக்கு இல்லை. இல்லை… நல்லாவும் பார்த்துக்கலாம் ஆனா பிறந்த வீட்ல இருந்த வாழ்க்கையில் இருந்து, இந்த வாழ்க்கைக்கு கடந்த மாதிரி, இன்னொரு வாழ்க்கைக்கு ஓடி தப்பிக்க முடியாது. எந்த வாழ்க்கையா இருந்தாலும் நீ தான் போராடணும்.” என்று கூற, தவமலருக்கு புரிந்தது.
“சரி.. நேத்து எப்படி? சந்தோஷமா இருந்தியா?” என்று பேச்சை மாற்றினார். முதல் நாளே ஏன் புகுந்த வீட்டை பற்றி பயமுறுத்தி பேச வேண்டுமென.
ஆனால் தவமலருக்கு இந்த பேச்சு தான் பயத்தை தந்தது.
சந்தோஷமா.. பயமாக இருந்தது என்று கூறினால் தவறாகுமோ?! என்று மௌனமானாள்.
அதை வெட்கமென்று பட்டியலில் சேர்த்து கொண்டார்.
“சரி சரி.. உன்ற துணிமணி, உனக்கு வாங்கின பாத்திர பண்டம் எல்லாம் இருக்கு. அதையெல்லாம் ஏறக்கட்டணும். மதியம் சாப்பிட்டு நீ கிளம்பறப்பவே நாங்களும் கிளம்பணும். நைட்டு டிரெயின் பிடிக்கணும். உனக்கு ஏதாவது வேண்டுமின்னா கேளு. மாமா உடனே வாங்கிட்டு வந்துட முடியுமானுபார்க்கறோம்.” என்று எழுப்பினார்.
ஏதோ சக்திக்கு முடிந்தளவு சில பாத்திரங்கள் வாங்கி பெட்டி கட்டினார்கள்.
சாமுண்டிஸ்வரி எட்டிபார்த்துக் கொண்டார். மகனுக்கு இன்னும் கூட நல்ல இடம் பார்த்திருக்கலாம். இப்படி புகுந்த வீட்டில் மாமியார்காரி பட்டும் படாமலும் தான் விருந்துக்கு வரவேற்று நிற்பாளென ஆருடம் பார்த்ததில்லையே.
ஏனோ ராசாத்தியை சாமுண்டிஸ்வரிக்கு துளியும் பிடிக்கவில்லை.
மதியம் போல ஆவுடையப்பன் தான் பரிமாறினார். மாப்பிள்ளை மாப்பிள்ளை என்று வாய் நிறைய அழைத்து பேசினார்.
சபை நடுவே தீபாவளிக்கு நகை போடுவதாக உரைத்தார். அதை கேட்டு சாமுண்டிஸ்வரி அமைதியாக வந்தார்.
ஆட்டுக்கறி நாட்டுக்கோழி என்று பரிமாறி சாப்பிட்டனர். அவ்வளவு தான். மற்றபடி இயல்பாக உரையாட அங்கே வார்த்தைகளுக்கு பஞ்சமிருந்தது.
லதா சுரேஷ் இருவரும் பள்ளியிலிருந்து வந்ததும் பார்த்துவிட்டு செல்லலாமென தவமலர் காத்திருக்க, சாமுண்டிஸ்வரி தான் “ஆஹ்.. உன் அம்மா வயித்துல பிறந்தவங்க பாரு. தங்கச்சி தம்பினு. நேரத்துக்கு வீட்டுக்கு புறப்படு” என்று அதட்டவும் தவமலர் சரியென்று கேட்டுக் கொண்டாள்.
அவள் இனி அப்படி தான் கேட்க வேண்டும்.
அரசு பேருந்தில் கதிரவனுடன் அமர்ந்து தவமலர் வரவும், பேருந்து பயணம் அவனுக்கு சுவாரசியமாக இருந்தது.
புதுமனைவியை உரசியபடி கையை தீண்ட முயல, அவளோ நகர்ந்தபடி இருந்தாள்.
சாமுண்டிஸ்வரி பின்னிருக்கையில் அமர்ந்து கவனித்தார்.
வீட்டுக்கு வரும் பொழுதே பொழுதுசாய்ந்தது. கோழிகள் அதனது இடத்தில் நின்று கொண்டே உறங்கியது. ஆடுளும் மாடும் ஏற்கனவே கட்டி போட்டு தீவனம் போட்டு வைத்தே சென்றிருந்தனர்.
நாய் மட்டும் குரைத்தது. அதுவும் உரிமையானர்கள் தான் வருகின்றார்கள் என்று அறிந்ததும் கதிரவன் மீது பாய்ந்து நெஞ்சில் கால் வைத்து நன்றியை காட்டியது.
பக்கத்தில் வந்த தவமலர் நாய் ஓடிவந்த தினுசில், கதிரவன் கையை பிடித்து முதுகு பின்னால் ஒட்டி நிற்க, கதிரவனுக்கு ஜிவ்வென்று இருந்தது.
வீட்டுக்கதவை திறந்து உள்ளே நுழைய, மின்விளக்கை போடவும், “ஏன்டா… அங்க என்ன கண்ணை மூடி நிற்கற. உள்ள வா” என்று கண்ணன் கூறவும் தான் தவமலர் அருகே இல்லை என்பதை தாமதமாக உணர்ந்து தலையை சொரிந்து உள்ளாற வந்தான்.
வரும் வழியில் பரோட்டாவை வாங்கி வந்திருக்க அதை சாப்பிட்டு ஆளாளுக்கு படுக்க சென்றனர்.
தவமலர் பாத்திரம் விளக்க, கண்ணன் உள்வராண்டாவில் இருந்த கயிற்று கட்டிலில் படுக்க, அதற்கு கீழே சற்று தள்ளி, பாயை விரித்து சாமுண்டிஸ்வரி படுக்க தயாரானார்.
கதிரவன் அறைக்குள் இருந்து எட்டியெட்டி பார்வையிட, தவமலர் கையை கழுவி, சேலையில் துடைத்து, “அத்தை பாத்திரம் கழுவி கவுத்திட்டேன்” என்று கூற, “நல்லது போய் தூங்கு” என்று கூறிட அறையை கவனித்தாள்.
மெதுவாக நடந்து உள்ளே வரவும் கதிரவன் அணைத்திட, தவமலர் பதற, “ஏய்… என்ன பார்த்து பார்த்து மிரளற.” என்று கேட்க, ஒன்னுமில்லை என்று தலையாட்டினாள்.
“எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு தெரியுமா. நீ பக்கத்துல வந்தா ஜிவ்வுனு இருக்கு. உன்னை கட்டிக்கிட்டே இருக்கணும்னு தோணுது. உனக்கு என்னை பிடிச்சிருக்கு தானே?” என்று கேட்க, தலையை ஆட்டினாள்.
அதற்கு பிறகு பேச்சுக்கு வேலை இல்லை.
அடுத்த நாள் எழுந்ததும் தினசரி வேலைகளை இழுத்து போட்டு செய்தாள்.
காலையில் கீளித்து முடித்து சாமுண்டிஸ்வரியிடம் டீயை வாங்கி குடித்து பாத்திரம் விளக்கி துணியை துவைத்தாள்.
சாமுண்டிஸ்வரி ஆடு மாடு கட்டி வைத்த இடத்தில் சுத்தம் செய்வதை கண்டாள்.
அடுத்து அதையும் செய்தாள். கொஞ்சம் சமையல் செய்யும் போது காய்கறி நறுக்கி தந்தாள்.
கதிரவன் துரத்திலிருந்து பார்த்து தவமலரை ரசிக்க, அடிக்கடி பார்வை அவள் மீது பதிந்தது.
விவாசாயம் என்பதால் அதுவும் வீட்டுக்கு பக்கத்தில் தான் நெல்லும் சோளக்கதிரும் போட்டிருந்தான்.
இதில் அடிக்கடி டவுனுக்கு மட்டும் ஏதேனும் வாங்க விற்க சந்தைக்கு ஓடுவான்.
மாட்டுக்கு தீவனம், பயிருக்கு பூச்சிகொல்லி மருந்து என்று சென்று வருவான். நடுநடுவே தவமலருக்கு ஏதாவது வளையல், பூ, திண்பண்டம் என்று கொடுக்க, வெட்கத்துடன் வாங்கி கொண்டாள்.
இந்த இடைப்பட்ட காலத்தில் அவனது மோகத்தை மட்டும் பார்த்தவளுக்கு, இப்த சிறுசிறு அன்பளிப்பும் காதலாக நேசமாக உணர்ந்தாள்.
தவமலருக்கு கதிரவனை பிடித்திருந்தது. ஒரு பெண்ணின் மனதை வெல்வதற்கு, சினிமா பாணியில் காதல் வசனங்களை பேச வேண்டியதில்லை. அவளுக்காக பராகரங்கள் எதுவும் நிகழ்த்த வேண்டாம். ஏன் தவமலரின் மனதில் அவளுக்குள்ள பாரத்தை கூட இறக்கி வைக்க தோள் தரவில்லை அவன்.
ஆனாலும் தவமலரை எதற்கும் கட்டாயப்படுத்தவில்லை, அதட்டவில்லை, இதை செய்யாத அதை செய்யாத என்று ஆண்மகனென்று ஆரம்பிக்கவில்லை.
ஒரு பெண்ணை காதலும் காமத்துடனும் உண்மையாக நேசிக்க பின்னால் சுற்றினான். அவ்வளவே. அந்த உண்மை இருந்தாலே பெண் மனதை ஜெயிக்கலாம்.
சாமுண்டிஸ்வரிக்கு தவமலர் மாஞ்சி மாஞ்சி வேலை செய்வதில் மனதிற்கு பிடித்திருந்தது. ஆனால் அதற்காக தலையில் தூக்கி வைக்கவில்லை. மாமனார் கூட அவருண்டு வேலையுண்டு என்று இருந்தார்.
தவமலருக்கு அங்கிருக்கும் ஆடுமாடு, கோழியை கொஞ்சிக்கொண்டு பால் கறந்து அவ்விடத்தை சுத்தம் செய்வதிலும் நேரம் சரியாக இருந்தது. முதலில் பார்த்து பயந்த நாய் கூட அவளுக்கு செல்லப்பிள்ளையாக மாறியது.
வாழ்க்கை சுபமாக சென்று கொண்டிருந்த சமயம் தீபாவளி வந்தது. ஆவுடையப்பன் மகளை காண வந்து மாப்பிள்ளையை தீபாவளிக்கு அழைக்க வந்தார். ஸ்வீட்டும் பழமும் வாங்கி கொண்டு வந்து நின்றவருக்கு, தவமலர் டீ வடை போட்டு உபசரித்து தம்பி தங்கையை விசாரித்தாள். ராசத்தியையும் கூட…
சாமுண்டிஸ்வரி கண்ணன் சற்று சம்பந்தி என்று பேசிவிட்டு நகர்ந்தப்பின், தவமலரை பார்வையிட்டார்.
மகள் முன்பை விட முகத்தில் தெளிவாக இருப்பதை கவனித்தார்.
ராசாத்தி தினமும் வீட்டில் வேலை செய்யும் பொழுது எல்லாம், ‘சிறுக்கி வேலைக்கு பயந்து கல்யாணம் கட்டிட்டு ஓடிட்டா. இப்ப எல்லா வேலையும் பார்க்கவே இடுப்பு எலும்பு உடையுது” என்று புலம்ப, இத்தனை நாட்கள் தன் மகள் எத்தனை வேலை செய்தாளோ என்று எண்ணாமல் இல்லை. ராசாத்தியை முன்பு கடிந்து பேசி பழகாததால் அப்படியே காது கேளாதவர் போல இருந்துக் கொள்வார்.
“நீ எப்படிம்மா… இருக்க?” என்று கேட்க, “நல்லாயிருக்கேன் அப்பா.” என்றாள்.
“இரண்டு மாசமா நீ இல்லாம வீடே வெறிச்சோடி கிடக்கு” என்றார்.
தவமலர் மெதுவாக நிமிர்ந்து, “எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்கனு சிவநேசன் மாமாவிடம் நானா போய் நின்னேன். ஆனா அது சித்தி ஏவுற வேலை செய்ய பயந்துட்டோ இல்லை அது அசிங்கமா திட்டுதுன்னோ இல்லைப்பா. என் அம்மாவை நீயே கொன்னுட்டதை எப்ப எனக்கு தெரியுமோ அப்பவே அந்த வீட்ல இருந்து எங்கயாவது போயிடணும்னு யோசித்து தான் கல்யாணம் பண்ணிக்க வாய்விட்டு கேட்டேன்.” என்று கூற ஆவுடையப்பன் திகிலாக மகளை பார்வையிட்டார்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.

இவன் எல்லாம் என்ன மனிதனோ
Omg ithu veraya
தவமலர் சரியாத்தான் சொல்லியிருக்காள். அப்படித்தான் நாக்கை புடுங்கிக்கிற மாதிரி பேசணும்.
😌😌😌
CRVS (or) CRVS 2797
Super sis nice epi 👍👌 ennadhu avanga appa dhan kola pannaraa🧐 paavam endha pilla romba manasu nondhu poyirukum😒🫢