நின் பிரேமம் என் சிநேகம்-5

அத்தியாயம்-5

   சேலத்தில் பஸ் ஸ்டாண்டில் மிதுல நின்றுயிருந்தாள். இந்த முறையும் ஹ்ருதேஷ் மனதிலிருந்து காதலிக்கின்றேன் என்ற வார்த்தையை வாங்காமல் திரும்புகின்றாள். மனதில் அத்தனை கலக்கம். ஓரே ஊர்லயிருந்தாலாவது அவனை அடிக்கடி சந்தித்து தன் காதலை மெய்ப்பிக்கலாம். பெங்களூரில் இருந்துக்கொண்டு போனில் ஏதாவது பேசினாலும் அமைதியாக இருப்பவனிடம் காதல் தோற்ற வலியோடு நின்றாள்.

    வீட்டில் தீபா செல்வராகவனிடம் கிளம்புவதாக கூறிவிட்டாள்.
   செல்வராகவன் கூட என்னம்மா ஆச்சு. டல்லா இருக்க?” என்று கேட்டதற்கு, தீபாவே “அவளுக்கு வயித்து வலி சும்மாயிருங்க” என்று அதட்டிவிட்டார்.
 
  அதனால் முகம் வாடி நின்ற தங்கையை பற்றி கௌசிக்கிற்கு சந்தேகம் வரவில்லை.

“ஏய்.. அங்க போனதும் கால் பண்ணு. தண்ணி எடுத்து வச்சியா?” என்று கேட்க, பையை தொட்டு “இல்லை மறந்துட்டேன்” என்றாள்.

“கௌசிக்… நான் போய் வாங்கிட்டு வர்றேன். நீ பேசிட்டு இரு” என்று ஹ்ருதேஷ் நகரவும், ‘அண்ணனை அனுப்பிட்டு அவர் தனியா இருந்தா நான் ஏதாவது பேசுவேன்னு நழுவறார்’ என்று மனம் வெதும்பினாள்.

    “ஒரு வாட்டர் பாட்டில்” என்று ஹ்ருதேஷ் வாங்கியவன், மிதிலா முகம் வாடியிருக்க, ‘பெயின் ஏதாவது இருக்குமா? டல்லாயிருக்கா’ என்றவன் மாதுளை ஜூஸை வாங்க நினைத்தான். ஆனால் ஜூஸ் கடை இல்லை. இது டீ பேப்பர் கடையாக இருந்தது. பக்கத்தில் பழக்கடை கண்டவன் வாங்கலாமா என்று நகம் கடித்தவன், கௌசிக் என்ன நினைப்பானென்று கூட யோசிக்காமல், அங்கிருந்த மாதுளை பழத்தை வாங்கினான்.

   வாட்டர் பாட்டிலும் மாதுளை பழமும் வாங்கி வந்து, நேரிடையாக மிதுல கையில் நீட்ட, அவளோ வாங்கினாள்.

“பழமெல்லாம் எதுக்கு மச்சி வாங்கின? இதுவொரு சோம்பேறி, உறிச்சே சாப்பிடாது” என்று கௌசிக் கேட்க, ஹ்ருதேஷ் சமாளிக்கும் விதமாக, “அந்த பழக்கடைக்காரர் பழம் வேண்டுமா வாங்கிக்கயானு கேட்டு தொல்லைப் பண்ணிட்டார்டா. அதுக்காக வாங்கினேன்.” என்று மழுப்பினான்.

மிதுலாவோ, பழத்தை வாங்கிவிட்டு, அவள் செல்லும் பேருந்து வரவும் அதிலேறினாள்.‌

  கௌசிக்கோ ‘நல்லா சாப்பிடு. அங்க போனதும் போன் பண்ணு” என்று கூற, சரி நீ போ” என்று இங்கே ஹ்ருதேஷ் இருப்பதால் மனம் அதிகளவு அவனை தேடுகின்றது. எங்கே கௌசிக் அண்ணன் இருப்பதை மறந்து ஹ்ருதேஷை கட்டி பிடித்து விடுவாமோயென விரட்டினாள்.

   கௌசிக்கும் பேருந்து ஏறியமர்ந்தவளிடம், பெரிதாக என்ன பேசப்போகின்றோமென படிக்கட்டில் இறங்கிட, ஹ்ருதேஷ் மிதிலாவை பார்வையிட்டான்.‌

  அவளோ கண்ணீரை துடைத்து முடித்தாள். ஹ்ருதேஷும் மனம் வலிக்க கௌசிக்கோடு நடந்தான்.‌

   “ஏன் மச்சி… இன்டர்வியூ அட்டன் பண்ணினியே என்னாச்சு?” என்று கௌசிக் கேட்க, “இன்னும் ரிசல்ட் சொல்லலை.’ என்றான்.‌

   “அதையேன்டா.. கஷ்டமா சொல்லற. உனக்கு வேலையெல்லாம் கிடைச்சிடும்.” என்று ஊக்கப்படுத்தினான்.‌

  ஹ்ருதேஷ் மனதை மாற்றும் விதமாக, “ஆமா நீ என்ன செய்யலாம்னு ஐடியா?” என்று கேட்க, கௌசிக்கோ ”வச்ச அரியரை க்ளியர் பண்ணணும் மச்சி. அப்பறமா வேலையை பத்தி யோசிப்போம்.” என்று அசம்டுவிதமாக கூறினான்.

கௌசிக் ஹ்ருதேஷ் இருவரும் ஆளுக்கொரு திசையில் சென்றதும், ஹ்ருதேஷ் மனம் கேளாமல், குளத்தங்கரை வந்து சேர்ந்தவன், அவனாக மிதிலாவுக்கு அழைக்க முற்பட முயன்றான்.

  ஆனால் கௌசிக் நட்பு இழப்பாய் என்று மூளை அச்சுறுத்த, அங்கிருந்த கல்லை அதிவேகமாய் குளத்தில் எறிந்து கோபத்தை வெளிப்படுத்தினான்.‌

இங்கே மிதிலா பேருந்து புறப்படவும், மடியில் வைத்திருந்த பழமும் வாட்டர் பாட்டில் இருக்க, மூடியை திறந்து நீரை பருகினாள்.

  மடியில் மாதுளை இருக்கவும், ‘பச்’ என்று கடந்தவள், மூளை அதிவேகமாக சிந்தித்தது. இது அன்னை வாங்கிய மாதுளை இல்லையே… இது ஹ்ருதேஷ் வாங்கியது.

  மிதிலாவுக்கு இவர் ஏன் மாதுளை பழம் வாங்கினார். அன்னிக்கு கோவிலுக்கு போகலையானு கேட்டார். வீட்டுக்கு தூரம்னு சொன்னதும், இன்னிக்கு மாதுளை வாங்கி தந்திருப்பாரா? நானே இதெல்லாம் அவரிடம் சொல்லற மாதிரி போயிடுச்சேனு பீல் பண்ணினேன். இவர் என்ன புதுசா அக்கறையில வாங்கி தர்றான்.. லவ் பண்ண மாட்டானேனாம். இதுல இதுக்கு குறைச்சலில்லை.’ என்று முனங்கினாள்.

  ஏதேதோ ஹ்ருதேஷ் நினைப்புடன் வண்டியில் ஜன்னலில் சாய, ஹ்ருதேஷ் அழைப்பு போனில் அடித்தது.

  சந்தேகத்துடன் அட்டன் செய்திட, “பஸ் கிளம்பிடுச்சா?” என்று கேட்டான்.

  மிதிலாவோ “ஏன் கிளம்பலைன்னா வந்து பஸ்ஸை பின்னாடிலயிருந்து தள்ளி விடப்போறிங்களா?
 டிரைவரை தள்ளி உட்கார சொல்லிட்டு நீங்க ஓட்டிட்டு வந்து பெங்களூரில் விட்டுட்டு அப்பாடா சனியன் தொலைந்ததேனு நிம்மதியடைவிங்க அப்படி தானே?” என்று வாய் துடுக்காக பேசவும், ஹ்ருதேஷ் சிரித்தான்.‌

  மிதிலாவோ “ஆமா என்ன அதிசயமா விசாரிக்கறிங்க? இதுல தண்ணீ வாங்கிட்டு வர போனவர் மாதுளை பழம் எல்லாம் வாங்கிட்டு வந்து நீட்டறிங்க.” என்று கத்தினாள். அங்கே பஸ்ஸில் இருந்தவர்கள் தலை திரும்பி பார்க்க, அடங்கினாள்.

“ஏய்… பஸ்ஸை தள்ளி விட என்னால முடியாது. டிரைவர் பக்கத்துலயும் என்னால உட்கார்ந்து வண்டியோட்ட முடியாது. வேண்டுமின்னா உன் பக்கத்துல உட்கார்ந்துக்கறேன்.
  என்ன அக்கறைனு கேட்டியே.. நீ எதிர்பார்த்த அக்கறை தான்.  

   என் முடிவு சரியா தப்பானு தெரியலை மிதிலா. ஆனா உன்னை நேசிக்கறேன். கௌசிக் என்னை எப்படி எடுத்துப்பான்னு தெரியலை. பயமாயிருக்கு… ஆனா வீட்ல பொண்ணு பார்க்கறதா இரண்டு நாளா பேச்சு போகவும், எங்க உன்னை இழந்திடுவேனோனு அதை விடவும் பயமாயிருக்கு.
   நீ எப்பவும் விளையாட்டுத்தனமா பின்னால சுத்தறப்ப, உன் அருமை தெரியலை. இப்ப ரீசண்டா என் மனசுலயும் உன் மேல நேசம் விதைச்சிடுச்சு மிதிலா.
மிதிலா ஐ லவ் யூ” என்று கூற, மிதிலாவோ தேம்பினாள்.

“அழுவறியா? ஏய்… ஹாப்பில கத்துவனு நினைச்சேன்.. பஸ்ல எல்லாரும் திரும்பி பார்த்து உன்னை லூசுனு நினைச்சி பேசறதை கேட்க ஆவலா இருந்தேன். சத்தமில்லாம அழுவற.” என்று கேட்டதும், “போடா… எனக்கு இப்ப இங்க என்ன எமோஷனல் காட்டறதுன்னே தெரியலை‌. நேர்ல பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. இரண்டு மூனு தடவை பார்த்தியே. குளத்தங்கரையில லவ் சொல்லியிருக்கலாம்ல. இப்ப பஸ்ல போறப்ப காதலிக்கறதா சொல்லற‌. அதுவும் உங்க வீட்ல உனக்கு வரன் தேடவும் என் நினைப்பு வந்துச்சோ” என்று விசும்பல் குறைந்து‌ குரல் வந்தது.

ஹ்ருதேஷ் ”அதான் தெரியலை பயத்துல தான் காதலை உலறியிருப்பேன்” என்று சிரிக்க, “ஹ்ருத்… இது விளையாட்டு இல்லை.. இப்ப லவ் சொல்லிட்டு பிறகும் பயத்துல சொன்னேன், பாவப்பட்டு சொன்னேன்னு எஸ்கேப் ஆகக்கூடாது. நம்ம காதல்ல நான் பின் வாங்க மாட்டேன். நீயும் எக்காரணத்துக்காகவும் பின் வாங்கக்கூடாது ஓகேவா?” என்று சத்தியம் வாங்காத குறையாக கூறினாள்.

ஹ்ருதேஷோ “இனி அப்படி சொல்ல மாட்டேன். சாரி… எனக்கு கௌசிக் எப்படி எடுத்துப்பான்னு பயமிருக்கு. மத்தபடி வேற யாரையும் நான் மீன் பண்ணலை” என்றான்.

“ஹே.. எங்கண்ணாவுக்கு நான் உன்னை தான் லவ் பண்ணறேன்னா கண்ணை மூடி கல்யாணம் பண்ணி வைப்பான்.” என்று ஆணித்தரமாக உரைத்தாள்.

  ஹ்ருதேஷோ “அப்படி நடந்தா சந்தோஷம் தான். இனி நம்ம காதலுக்கு நீ மட்டும் யோசிக்க வேண்டாம். நானும் இருக்கேன்‌” என்றான்.

“அது. உம்மா.. லவ்யூ செல்லமே” என்று பனிக்கூழ் வார்த்தையில் கரைக்க வைத்திட, அதற்கு பிறகும் நிறைய பேசினார்கள்.
 
  மிதிலாவுக்கு ஏன் ஹ்ருதேஷ் மீது காதல் வந்தது, எந்த வயதில், எதனால், இதெல்லாம் வரிசையாக கூறிட, ஹ்ருதேஷோ புன்னகை முகமாக அதை கேட்டான்.

  மிதிலாவோ “பஸ்ல எல்லாரும் தூங்கறாங்க. நான் மட்டும் தான் சலசலனு பேசறேன். பக்கத்துல இருக்கற பொண்ணு திரும்பி பார்த்து கண்ணை மூடிக்கிச்சு. அதை பார்க்க பார்க்க சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கு” என்று சிரிக்க, “ஹே… உனக்கு இப்பவும் வயிறு வலிக்குதா?” என்றதும் மிதிலாவே, “அய்யோ… அதெல்லாம் வயிறு வலிக்கலை. ஏன் த்ரிடேஸ் பிராப்ளம்னா கண்டிப்பா வயிறு வலிக்கும்னு யார் சொன்னா? ஒவ்வொருத்தருக்கு உடல்வாகுவை வைச்சி பெயின் இருக்கும், இல்லாமலும் போகும்‌. என் உடலுக்கு இதுவரை இந்த மாதிரி நேரத்துல பெயின் வந்ததில்லை.
   வர்றப்ப நீ என்னை காதலிக்கலையேன்னு தான் சோகமா வந்தேன். இப்ப அந்த சோகமும் இல்லை. எப்பவும் போல நிம்மதியா.. ஏன் கூடுதலா சந்தோஷமா இருக்கேன் ஹ்ருத். ஆமா… அதுக்கு தான் மாதுளை பழம் வாங்கி தந்தியா?” என்று ஆனந்தப்பட்டாள்.

ஹ்ருதேஷோ “பின்ன… உடம்பு சரியில்லயோ…னு நினைச்சேன்.” என்று இழுத்தான்.

  “மனசு தான் சரியில்லாம இருந்தது இப்ப அதுவும் ஜம்முனு இருக்கு” என்றாள் மிதிலா.

  மிதிலாவுக்கு நிஜமாகவே இன்றைய நாளில், இப்படி பேருந்தில் பயணம் செய்யும் தருணம் ஹ்ருதேஷ் காதலிப்பதாக உரைத்ததும் அத்தனை சந்தோஷம். அதை வார்த்தையால் வர்ணிக்கவே இயலாதது.‌

  அதன் பின் நிறைய பேசினார்கள். ஹ்ருதேஷ் வீட்டுக்கு சென்றால் இந்தளவு பேச இயலாதென்று, வெளியேவே சாப்பிட்டான். உறங்கும் நேரம் என்றதும், தான் வீட்டுக்கு அடியெடுத்தான்.

அன்னையிடம் நான் வெளிய சாப்பிட்டேன்” என்று கூறிவிட்டு படுக்க சென்றான்.

  எப்பவும் வீட்ல தானடா சாப்பிடுவ? இப்ப என்ன அதிசயமா வெளியே சாப்பிட்டுட்ட?” என்று அதிகாரமாக கேட்க, “ம்ம்ம் வீட்டுக்கு வந்தா இரிட்டேட்டா  பேசறிங்க அதனால வெளியே சாப்பிட்டுட்டேன்” என்று முகம் காட்டி அறைக்கதவை தாழிட்டு படுத்தான்.
  
   கௌசிக் ஹ்ருதேஷிடம் ஏதாவது பேசியதிலும், தங்கள் மேல் கோபத்திலும், இருப்பதாக செல்வராணியும் பெரிதுப்படுத்தாமல் உறங்க சென்றார்.

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ்

1 thought on “நின் பிரேமம் என் சிநேகம்-5”

  1. ஒரு வழியா காதல் பயிர வளர்த்துட்ட்ங்க…. கௌசிக் குறுக்க வராம இருக்கனும்..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top