நின் பிரேமம் என் சிநேகம்-29

அத்தியாயம்-29

  வீட்டுக்கு வந்தவர்களை வாங்க என்று கூறவும் அருகதையின்றி ஹ்ருதேஷ் கூனிகுறுகி நின்றான். இதில் கௌசிக் வேறு மிதிலாவையும் ஹ்ருதேஷையும் மாறி மாறி பார்த்திடவும், ஹ்ருதேஷ் நடந்ததை விவரிக்க இயலாது எச்சி விழுங்கினான்.

  கஷ்டப்பட்டு தான் “வாங்க அத்தை. வாங்க மச்சான்” என்று கௌசிக்கை வரவேற்றான்.

  “அம்மா… லக்கேஜை கொண்டு வர ஒரு ஆள் வேண்டும்னு சொன்னிங்க. கொண்டு வந்துட்டேன். நான் அப்படியே கிளம்பறேன்” என்று கௌசிக் கூற, “திரும்ப இதெல்லாம் உங்க அப்பா வந்து எடுத்துட்டு போவாரா? மரியாதையா வாயை மூடிட்டு உள்ளவா” என்று தீபா அதட்டினார்.

மாப்பிள்ளையை அதட்ட இயலுமா?

  “நல்லாயிருக்கிங்களா?” என்று பொதுவாக கேட்க, மகளோ தலையாட்டி, நீங்க வர்றதா சொல்லவேயில்லை?” என்று கேட்டாள்.

“சொல்லிட்டு வந்தா உஷாரா இருந்திருப்பல்ல?” என்று சாடவும் ஹ்ருதேஷ் வந்தவர்களுக்கு குளிர்பானத்தை ஊற்ற கிச்சன் சென்றான். அங்கே ப்ரிட்ஜை திறந்து டம்ளரில் ஊற்றினான்.

  தீபா மகளிடம் “அண்ணி இல்லையா? இங்க தான் இருப்பதா உன் மாமனார் சொன்னார் ” என்று ஆரம்பித்தார்.‌

“காலையிலேயே குளிச்சி முடிச்சிட்டு ஏதோ கோவிலுக்கு போயிருக்காங்க.” என்றாள்‌.

  ஹ்ருதேஷ் அத்தையிடமும் மச்சானிடமும் குளிர்பானத்தை தர, தீபா முகம் பாராது எடுத்துக் கொண்டார்.

கௌசிக் ‘இவன் எதுக்கு கை ஓங்கியிருப்பான்? இதுக்கு முன்ன மிதிலாவை அடிச்சிருப்பானா? ஏதாவது பிரச்சனையா? இவ இதுக்கு முன்ன அம்மாவிடம் எதுவும் சென்ன மாதிரி தெரியலையே. சண்டைக்கு நான் தான் காரணமா இருப்பேனோ’ என்று பலவிதமான முறையில் நினைத்தவன் ஹ்ருதேஷ் நீட்டிய ஜூஸை வாங்கி விட்டான். கையில் வைத்தபடி பருகாமல் சிந்தனையில் உழன்றான்.‌

    “நான் அம்மாவுக்கு கால் பண்ணறேன்” என்று ஹ்ரீதேஷ் சற்று நகர்ந்து போனை செய்தான். அந்த போனோ ஹாலில் உள்ள ஷெல்பில் இருப்பதாக தன்னிருப்பை உணர்த்தியது.

“என்ன சண்டைடி? எதுக்கு அவர் கை ஓங்கினார்? நீ என்னத்த பண்ணி வச்சியிருக்க? இப்படி தான் வாழறியா?” என்று அவளது கையை பிடித்து பல்லை கடித்து தீபா கேட்க, “அம்மா கை வலிக்கு விடு. இது சாதாரண சண்டை தான். அவன் இதுக்கு முன்ன என்னை கை நீட்டியது இல்லை. சும்மா… இப்ப பார்த்ததை வச்சி இப்படி தான் வாழறேன்னு முடிவு கட்டாத.” என்றாள்.

அதற்குள் ஹ்ருதேஷ் முன் வந்து, தீபாவிடம், “எங்களுக்கு கல்யாணமானதிலருந்து அம்மா கூடயிருக்காங்க அத்தை. அவங்களை சேலத்துக்கு அனுப்பு, இன்னும் ஏன் இருக்காங்கனு தினம் தினம் கேட்டுட்டு தொல்லை பண்ணறா‌.

  அவங்க என்ன மோட்டிவ்ல இருக்காங்கனு தெரியலை. ஆனா கூட இருக்காங்க. இவ எப்ப பாரு அவங்களை விரட்டற மாதிரி பேசறா. நான் என்ன செய்யறது. இரிட்டேடா இருக்கு.
  அம்மாவுக்கு இவளுக்கும் நடுவுல மாட்டிட்டு, இதுல என் வேலை டென்ஷன்ல தலை பிச்சிக்குது.
  இவ பாட்டுக்கு படிக்க போறா. அவங்க பாட்டுக்கு ஹால்ல இருக்காங்க. இன்னும் என்னவாம்?” என்று மிதிலாவை பார்த்து பல்லை கடித்தான்.

  தீபாவுக்கு போன உயிர் திரும்ப வந்தது. ”என்னடி இதெல்லாம்? மாமியாரை விரட்டற பழக்கம்?” என்று மிதிலாவுக்கு தான் திட்டு விழுந்தது.

கௌசிக்கும் நண்பன் சும்மா எல்லாம் கை ஓங்க மாட்டானென்று நிம்மதி பரவியது. ஆனாலும் ஹ்ருதேஷிடம் பேசவில்லை. ஹ்ருதேஷும் கௌசிக்கிடம் தானாக பேசாமல் நின்றான்.

“நீயும் சேர்ந்துட்டியா? இப்ப எதுக்கு இங்க வந்த?” என்று காரமாக வினவினாள் மிதிலா.

செல்வராணியோ வாசலில் செருப்பை கண்டு, “யாரு வந்திருக்கா?” என்று கேட்டபடி வந்தார்.

”வாங்க அண்ணி” என்று தீபா வரவேற்க, கௌசிக் எழுந்து நின்றான்.‌

  “நீங்களா.. எப்ப வந்திங்க?” என்று சம்பிரதாயத்திற்கு கேட்டுவிட்டு ஹ்ருதேஷு தண்ணி கொண்டாடா” என்றார்.

அன்னைக்கு தண்ணீரை எடுத்து தந்தவன், “எங்க போனிங்க? இதெல்லாம் என்னது?” என்று கையிலிருந்தவையை கேட்டான்.

  “வளையலும் பூவும். மாசம் ஐந்தாக போகுது. குழந்தைக்கு கை நிறைய வளையல் சத்தம் கேட்க வேண்டாம். என் பேரனுக்கு கண்ணு காது மூக்கு எல்லாம் வளர்ந்திருக்கும். வளையல் சத்தம் கேட்டு சிரிக்கணுமே. அதான்… காலையிலேயே வளையல் பூ பழமெல்லாம் வாங்கிட்டு, கோவிலுக்கு போயிட்டு உங்க பேர்ல அர்ச்சனை பண்ணிட்டு நேரா வர்றேன்.

  டேய்… இந்த பிரசாதம் அவளுக்கு கொடு. நாம கொடுத்தா எங்க வாங்கும்” என்று குறைப்பட, ஹ்ருதேஷ் குங்குமம் வைத்துவிட்டு, இனிப்பான கேசரியை ஊட்டினான்.

   இதை தட்டுல வச்சி கொடு” என்று தூக்கு வாலியில் கேசரியை தர, “அம்மா… கோவில்ல இருந்து மொத்தமா வாங்கிட்டு வந்துட்டியா?” என்று கேட்டான் ஹ்ருதேஷ்.

“என்ன பார்த்தா எப்படி தெரியுது. கோவில்ல வரிசையில நின்னு, தூக்குல கேசரி வாங்கிட்டு வர்றேன்னா. அடேய்.. நம்ம வீட்ல செய்ததுடா. எங்க… புருஷனும் பொண்டாட்டியும் ரூமை மூடி நல்லா தூங்கி வழிஞ்சா, கிச்சன்ல என்னத்த சமைச்சேன்னு கூட தெரியாது.” என்றார்.

   ஹ்ருதேஷ் கேசரியை தட்டில் வைத்து அத்தை கௌசிக்கிற்கு தரவும், “நாங்களும் ஐந்தாம் மாசம் ஆரம்பிக்குதுனு தான் பலகாரம் சுட்டு கொண்டு வந்தோம். ஐந்து வகை சாதம் கூட கொஞ்சமா செய்துட்டு வந்திருக்கோம்.  வளையல் மட்டும் இங்க வந்து வாங்கிடலாம்னு இருந்தோம். கண்ணாடி பொருள் பாருங்க. பூவும் வாங்க நினைச்சது தான்.” என்று கூறினார்.

“நல்லதா போச்சு. ஒத்த பட்டையில வளையலை போட்டுட்டு சோறூட்டிடலாம்.” என்றார் செல்வராணி.

  தீபாவும் மிதிலாவை பார்த்து ஒவ்வொரு லக்கேஜை திறந்து வைத்தார்.

செல்வராணி தலை மறையவும், “உனக்குன்னு நான் சோறாக்கி ஐந்தாம் மாசம் வளையல் போட வந்திருக்கேன். அவங்களும் நினைவு வச்சி கேசரி செய்து கோவிலுக்கு போயிருக்காங்க. ஏன் நீயும் உங்கண்ணா மாதிரி தவறான கண்ணோட்டத்தில் பார்த்து தொலைக்கற?” என்று பொரிந்தார்.

  மிதிலாவுக்கு என்னவென்று சொல்வது? செல்வராணி கரித்து கொட்டும் போது, இங்கிருந்து இவங்க போனா தேவலை என்று தானே தோன்றுகின்றது. இப்படி தனக்காக கூட யோசித்தாரா என்ன? இருக்காது அவங்க பேரன் வளரணும்னு இதெல்லாம் பண்ணுவாங்க’ என்று கௌசிக்கை போலவே இடக்காக யோசித்தாள்.

இன்று சனிகிழமை என்றாலும் நல்ல நாளாக இருக்க, சேலை மட்டும் கட்டிக்கொண்டு வந்து அமர கூறினார்.‌

“எனக்கு இந்த சுடிதார் போதும். சேலை வேண்டாம்.” என்றாள் மிதிலா.

“இரண்டு நிமிஷமாகுமா? சேலை கட்ட? ஏன்டா இப்படியிருக்கா. ஒரு நல்லநாளு கூட சேலை கட்ட என்ன வலிக்குது?” என்று செல்வராணி ஆரம்பிக்க, மிதிலாவோ “ஆரம்பிச்சிட்டாங்க இனி இவன் வேற சேலைக் கட்டு நோட்டுனு இம்சை பண்ணுவான்” என்று முனங்கி செல்லவும் தீபாவுக்கு கோபமானது.

ஹ்ருதேஷ் எதிரே இப்படி பேசுவது, தீபாவுக்கு பிடிக்கவில்லை. கௌசிக்கோ ‘இவ என்ன இப்படி பேசறா. அவன் எப்படி அமைதியா விடறான்? ஓ இப்படி தான் கை ஓங்கற லெவலுக்கு போகுதோ?’ என்று தலையை உலுக்கி கொண்டான்.

  தன் கைக்கு கிடைத்த சேலையை மாற்ற வந்தவளிடம், கதவை தாழிட்டு, ”மே ஐ ஹெல்ப் யூ?” என்று கேட்டான்.

“ஒன்னும் வேண்டாம். காலையில கையை ஓங்கற” என்றாள்‌ மிதிலா.

“மேடம் உங்க சுடிதார் டாப்பை நீங்க தனியா கழட்ட முடியாது‌. அந்தளவு இறுக்கமா போட்டியிருங்க. கொஞ்ச நாளா நான் தான் கழட்ட உதவறேன். அதை நினைவு வச்சிட்டு கையை தூக்குங்க” என்றான்.

  “பெருசா உதவ வர்றான்’ என்று முனங்கியபடி, கையை தூக்க, உதட்டில் குறுநகையுடன், உதவியவன், நம்ம பைட்டை இப்ப தள்ளிவை மிதிலா. என் பிரெண்ட் வந்திருக்கான்… நான் எவ்ளோ ஹாப்பி தெரியுமா?” என்று முகம் அளவற்ற ஆனந்தத்துடன் கூற, “ம்கூம்.” என்றாள் மிதிலா.

“என்னடி ஒழுங்குகாட்டற?” என்று தாடை பிடிக்க, “விடுடா… அதான் வாயெல்லாம் பல்லா இருக்கு” என்று தட்டிவிட்டாள்.

சேலையை மடமடவென கட்டவும் அவளது ப்ளீட்ஸை எடுத்து ஒழுங்குப்படுத்தியவன், “ரொம்ப ரொம்ப அழகா மாறிட்டே வர்ற. கன்னம் புசுபுசுனு, உடம்பு ஒரு சுத்து பெருசாகுது. வயிறு வளருது.” என்று அணுஅணுவாய் கூறினான்.

  “கண்ணு வைக்காத” என்று அவனை தள்ளிவிட்டு, வெளியே வர, செல்வராணி பூவை நீட்டினார்.‌

“எனக்கு இந்த ஸ்மெல்லே பிடிக்கலை. வேண்டாம்” என்று மறுத்தாள்.

“ஒரு நிமிஷம் தானே வை” என்று தலையில் பின்னால் குத்தவும், ஹ்ருதேஷை அளவிட்டாள். அவனோ போன் கேமிராவால போட்டோ எடுத்துக்கலாம்” என்று கூறினான்.‌

செல்வராணி உடனடியாக “நீங்க நானு, என் பையன் உங்க பையன் நாலு பேர்ல வளையல் போடற மாதிரி வருது. ஒரு ஆள் குறையுதே. நான் பக்கத்து வீட்ல இருக்கற பொண்ணை கூப்பிடறேன்.” என்று செல்ல, “அவங்களாம் வேண்டாம். எனக்கு அந்த பொண்ணை பிடிக்காது” என்றாள் மிதிலா.

‘”உனக்கு யாரை தான் பிடிக்கும். என் பையனை தவிர” என்று செல்வராணி சென்றதும், ”அந்த பொண்ணு தானே உன்னை முழுங்கற மாதிரி பார்த்து பேசி ஹான்ட்ஸம்னு வழிஞ்சா. அவ வரணுமா?” என்று மிதிலா கூற, “வந்தா வந்துட்டு வளையல் போட்டுட்டு போகட்டும்.” என்றான் ஹ்ருதேஷ்.

“அவ அப்படியே உன்னை சைட் அடிப்பா. உனக்கு குளுகுளுனு இருக்கும்ல?” என்றாள்.

  “அம்மா தாயே.. வாயை மூடு” என்று ஹ்ருதேஷ் அதட்டினான்.‌

கௌசிக் இதை கேட்டு சிரிக்க முயன்றான். ஆனால் கோபத்துடன் வந்ததாக காட்டிக்கொள்ள மெனக்கெட்டான். அதனால் சிரிப்பை அடக்கினான்.

தீபாவும் செல்வராணியும் அழைத்து வர, ஹாலில் சேரில் அமர வைத்து வளையல் போட ஆரம்பித்தார்கள்.

  முதலில் செல்வராணி தான், கையில் வளையல் போட்டு, சந்தனம் முகத்தில் தடவி, பூக்களால் ஆசிவழங்கி ஆரத்தி எடுத்தார். அடுத்து தீபா செய்யவும், புன்னகை பூத்து அன்னை தனக்காக கொண்டு வந்த ஐந்து வகை சாதத்தை சுவைத்தாள்.

மூன்றாவதாக பக்கத்து வீட்டு பெண் செய்யவும் நடிப்பாக ஒரு சிரிப்பை உதிர்த்தாள்.

அவர்களுக்கு தட்டில் வளையல் பூ பழம் சில இனிப்புகள் தட்டில் வைத்து நீட்டவும் வாங்கிக் கொண்டார்.
   அடுத்து ஹ்ருதேஷ் போடட்டும் என்று கௌசிக்கும், கௌசிக் போடட்டும் என்று ஹ்ருதேஷும் இருக்க, ஹ்ருதேஷே “பொண்ணுக்கு அண்ணன் தான் கஷ்டப்பட்டு லக்கேஜை சுமந்து வந்தார். அவரே போடட்டும்‌.” என்று முன்னுக்கு தள்ளும் விதமாக பேச, கௌசிக் நண்பனை முறைத்துவிட்டு, தங்கைக்கு வளையலிட்டான்.

மிதிலா லேசாக கண்ணீர் துளிர்க்க, கௌசிக்கும் கலக்கமாய் போட்டுவிட்டான்‌.

  அவளுக்கு பிடித்த கருப்பட்டி மிட்டாய் எடுத்து ஊட்டி விட்டவன், முகம் காணாமல் எழுந்துவிட்டான்.

ஹ்ருதேஷும் மண்டியிட்டு வளையலை அணிவித்து கன்னத்தில் சந்தனம் குழைத்து பூசினான்.‌

  குங்குமம் வைத்து பூ மழை தூவவும், அவளை கண்டதும், மனதில் நிறைவு தோன்றி நிம்மதி தர, காலையில் இந்த பூமுகத்தையா அடிக்க கை ஓங்கினோமென அவன் நெஞ்சில் சாய்த்து கொண்டான்.‌

  “லவ் யூ பேபி” என்றான். “ஹ்ருத்” என்று அவளும் கட்டிக்கொண்டாள்.
   கௌசிக் தான் ஹ்ருதேஷ் வளையல் போடும் நேரம் கேமிரா போனை கௌசிக்கிடம் எதார்த்தமாக நீட்டிவிட்டு செல்ல கௌசிக் வாங்கி போட்டோவை எடுத்து தள்ளினான்.

  போட்டோ வால்பேப்பரில் கௌசிக் மிதிலா ஹ்ருதேஷ் மூவரும் ஒன்றாக எடுத்த போட்டோ இடம் பெற்றியிருக்க, முன்பு வந்தப்போது உடைத்து போட்ட ப்ரேமை தேடினான். அங்கே அதுயில்லை, உடைந்துவிட்டதோ? அல்லது அன்று உடைத்து விட்டதால் அவ்விடம் காலியாக உள்ளதா? என்று பார்த்தான். ஆனால் நண்பன் போன் வால் பேப்பரில் அந்த புகைப்படம் தான் இருந்தது‌. அதையே பார்த்தவன் நினைவு பின்னோக்கி சென்றது.

-தொடரும்.

பிரவீணா தங்கராஜ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top