Forum

உறவில் உதயமாகி உயிர...
 
Notifications
Clear all

உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் -6

2 Posts
2 Users
1 Reactions
53 Views
(@salmaamjathkhan)
Posts: 20
Trusted Member
Topic starter
 
[#117]

உதயம் - 💏 6💏

 

உலகத்தை பற்றிய எந்த ஒரு கவலையும் இன்றி சிறிது நேரத்திற்கு முன் கண்ட கனவில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த என்னை அறைக் கதவு தட்டும் சத்தம் எழுப்பியது.

 

கண்களைத் திறக்க மனமில்லாமல் புரண்டு படுத்தேன். சப்தம் வேகமானது. மெதுவாக கண்களை திறந்து மணியைப் பார்த்த போது மணி ஆறு முப்பது.

 

என் மீது படர்ந்து இருந்த போர்வையை நீக்கி விட்டு கதவை திறந்தேன். மாயா நின்று கொண்டிருந்தாள்.

 

அவளை கண்டும் காணாததுபோல் கட்டிலில் சென்று அமர்ந்தேன்.

 

" ஏய் என்ன ஆச்சு? இன்னும் கிளம்பலையா?"

 

" எங்க கிளம்ப?" நான் குழப்பமாக அவளிடம் கேட்டேன்.

 

"இன்னைக்கி உன்ன பொண்ணு பாக்க வராங்க. அதுக்கு ரெடி ஆகணும்ல."

 

" இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா? அவங்க பத்து மணிக்கு மேல தான் வருவாங்க. அதுக்கு ஆறு முப்பது மணிக்கு கிளம்ப சொல்ற."

 

" இப்ப இருந்து கிளம்புனா தான அப்போ ரெடியாக முடியும்."

 

" எனக்கு அரை மணி நேரம் போதும்." என்று கூறி பாத்ரூமிற்கு சென்றேன்.

 

இன்னும் கண்கள் சிறிது தூக்கத்தை கேட்க, அதற்கு அனுமதி அளிக்காதவளாய் தண்ணீரை தெளித்து முகத்தை துடைத்துக் கொண்டேன்.

 

வெளியே வந்து பார்த்தபோது மாயா காபி டம்ளருடன் காத்துக் கொண்டிருந்தாள்.

 

என் காபி தம்ளரை எடுத்துக் கொண்டு பால்கனியில் இருந்த சோபாவில் அமர்ந்தேன். மாயா என்னை பின் தொடர்ந்து சோபாவில் அமர்ந்தாள்.

 

என்னுடைய கண்களை சூரியனுக்கு விற்று விட்டது போல் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

 

" என்ன யோசிச்சுக்கிட்டு இருக்கே?"

 

" இல்ல. பிரேக்ஃபாஸ்ட்க்கு வர்றேன்னு சொன்னவ பெட் காபிக்கே வந்துட்டியேன்னு தான் பார்க்குறேன்."

 

"ஏய் இன்னைக்கு என் ஃபிரண்டுக்கு எவ்வளவு முக்கியமான நாள். நான் எப்படி வராமலிருப்பேன். அதைவிடு. மாப்பிள்ளை பத்தி கேட்டியா?"

 

"ம்ம் ம்ம்..."

 

"என்ன ம்ம்ம் ... வாயை திறந்து என்ன சொன்னாங்க னு சொல்லு. பேர் என்ன?"

 

"ஆதித்யா குமார்"ஏனென்று தெரியவில்லை அவர் பெயரை உச்சரிக்கும் பொழுது என்னை அறியாமலே ஒரு வெட்கம் என்னுள் எழுந்ததை அதை என்னால் உணர முடிந்தது.

 

"ஓஹோ... அதான் ஆதவனையே பார்க்கிறாயா..."

 

"ஹாஹா .... குட் ஜோக்.... "

 

"என்ன பண்றான்?"

 

"பிசினஸ். சொந்தமா பிசினஸ் பண்றாரு. அதோட அவரோட அப்பாவோட பிசினஸை பார்த்துக்குவாங்க."

 

"அப்போ ரொம்ப டேலன்ட் ஆனா பையனா இருப்பான் போல"

 

"எனக்கும் அப்படித்தான் தோனுது. அவரோட பிசினஸ் மட்டும் இல்லாம அவர் அப்பா பிசினஸ்ஸயும் பார்ப்பாங்களாம். எங்க அப்பாவோட பிசினஸை பிராப்ளத்தையும் சால்வ் பண்ணுனாங்களாம்."

 

"அதுக்குத்தான் பொண்ண அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க பாக்குறாங்களா. அப்போ உங்க அப்பாவுக்கு அவனே முன்னாடியே தெரியுமா?"

 

"தெரியும் . எங்க அப்பாவும் அவங்க அப்பாவும் சேர்ந்து தான் முதல்ல பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணுங்க. அப்புறம் தான் தனித்தனியா போனாங்க."

 

"அப்போ உனக்கும் அவங்கள தெரிஞ்சு இருக்கணும் இல்ல."

 

"இல்ல நானும் ஆதித்யாவும் சேர்ந்து ஒன்றாக விளையாடி இருக்கோம்ன்னு அம்மா சொல்றாங்க. எனக்கு அப்படி எதுவும் ஞாபகம் இல்லை. பட் அவங்க அப்பாவை எனக்கு தெரியும். அவங்க அடிக்கடி இங்க வருவாங்க அப்பாவை பார்க்க."

 

ஆதித்யா குமாரின் புகைப்படம் கிடைக்காதது தான் ஒரு பெரிய குறையாக இருந்தது. எனக்கு தெரிந்து அருண்குமார் மிக நல்லவர். நேர்மையான மனிதர். நிச்சயம் அவரும் அவ்வாறே இருக்க வேண்டும். அப்பா அவரை பற்றி சொல்ல கேட்டிருக்கிறேன்.

 

"ஆதித்யா ரொம்ப பிரில்லியண்ட் டான பையன். ஏதாவது ப்ராப்ளமா டக்குனு அதுக்கான சொலுசன்ன கண்டுபிடிச்சுடுவான். இவ்வளவு சின்ன வயசுல பிசினஸ்ல எவ்வளவு சாதனை பண்ணியிருக்கான். இத்தனை வருஷமா நான் சம்பாதிச்சத ரெண்டு மூணு வருஷத்துல சம்பாதிச்சுட்டான்.

 

அவன மாதிரி ஒரு கேரக்டர் உள்ள பையனா இதுவரைக்கும் நான் பாத்ததே இல்ல. நீ அவனை கல்யாணம் பண்ண கொடுத்து வச்சிருக்கணும்."

 

அப்பாவுடைய வார்த்தைகள் அதிகமாக அவனோட பிசினஸை சுற்றி தான் சொன்னது. 

 

ஆனால் என்னால் அவனை யூகிக்க முடிந்தது. சிறு வயதில் அவன் உடனான நியாபகங்கள் இல்லாத போதும் அவன் நல்லவனாக இருப்பான் என்று அது கூறியது.

 

என்னுடைய அப்பா தப்பான வரனை பார்த்திருக்க மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

 

நேரம் வேகவேகமாக கடந்து செல்ல நான் என்னுடைய காலை சிற்றுண்டியை முடித்து விட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்து பின் என்னை நான் தயார் செய்து கொண்டிருந்தேன்.

 

எனக்கு உதவி செய்து கொண்டிருந்தாள், மாயா.

 

சிறிது முக அலங்காரம் செய்து, சிகை அலங்காரம் நேரம் ப்ரீ ஹேர் விட்டு இருந்தேன். நான் அழகாக இருப்பதாக மாயா கூறினாள். சிறிது நேரத்திற்குப் பின் என் அறைக்கு வந்தாள் அம்மா தலையில் அடித்துக் கொண்டாள்.

 

"என்னடி இது கோலம். யாராவது பொண்ணு பார்க்க வரும் போது சுடிதார் போடுவாங்களா? சாரி தான் கட்டணும். தலைய என்னடி பத்திரகாளி மாதிரி விரிச்சு போட்டு இருக்க. அழகா பின்னி சடை போட்டா எவ்ளோ அழகா இருக்கும். இங்க பாரு உனக்காக பூ வச்சிருக்கேன். வச்சுக்கோ." என் கையில் திணித்தாள்.

 

"அம்மா போதும். பொண்ணு தான் பாக்க வராங்க. இந்த சல்வார்ல நான் நல்லாத்தான் இருக்கேன். என்னால சாரிலாம் கட்ட முடியாது .அப்படிக் காட்டினால் தான் அவங்க என்னை பார்ப்பாங்கன்னா எனக்கு அவங்கள பாக்க இஷ்டம் இல்லேன்னு சொல்லிரு."

 

'யாருதான் இது போன்ற சடங்குகளை கண்டுபிடித்தார்களோ. நான் என்ன சோ கேஸ் பொம்மை யா' என்று புலம்பிக் கொண்டிருக்கும் பொழுது என் அப்பா அங்கே வந்தார்.

 

"என்ன நடக்குது இங்க. பார்வதி பொண்ணு பாக்க வந்தா சாரி தான் காட்டணும்னு எந்த அவசியமும் இல்லை. என் பொண்ணு சல்வார்லயும் அழகா தான் இருக்கா. இதுவே இருக்கட்டும். இந்த பூ வாங்கிட்டு போய் உன் தலையில் வை. இல்லாட்டியும் சாமி கிட்ட போய் வை. அவள டிஸ்டர்ப் பண்ணாத." எங்கிருந்தோ வந்த அப்பா எனக்கு சாதகமாக பேசினார்.

 

ஏன் இந்த திடீர் கரிசனம். நான் கல்யாணத்திற்கு சம்மதம் கூறியதாலா? இல்லை. இப்போது கல்யாணத்தை நிராகரித்ததாலா? ஏதோ ஒன்று. ஆனால் எனக்கு சந்தோஷம். நான் என் சல்வாரில்லே இருக்கலாம்.

 

நான் எந்த நிலையிலும் மாற்றம் இல்லை அவர்கள் வருகைகாக காத்திருந்தேன்.

 

அப்போதுதான் இன்று காலை கண்ட கனவு ஞாபகம் வந்தது. அந்தக் கனவை மீண்டும் அசை போட்டுக்கொண்டிருந்தேன்.

 

என் கண்களை மூடும் போது அவனது தெளிவில்லாத முகம் என் கண்முன்னே தோன்றுகிறது. அது ஒரு அற்புதமான கனவு. இது கனவு தான். ஆனால் அதைவிட மேலாக தெரிகிறது.

 

அப்பா என் நெற்றியில் முத்தமிட்டு என்னுடைய கையை அவனிடம் ஒப்படைத்தார். யார் அவன்? எங்கிருந்து வருகிறான்? என்ன மாதிரியான மனிதன் அவன்?

 

என்னை மகாராணியாக பாவிப்பானா? இல்லை அடிமையாக நடத்துவானா?

 

எனக்கான மரியாதை கொடுப்பானா? என்னுடைய ஆசைக்கு முக்கியத்துவம் கொடுப்பானா? எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது.

 

தெரிந்ததெல்லாம் ஒன்று. என்னுடைய மீதி வாழ்க்கையை அவனுடன் தான் கழித்தாக வேண்டும். எனக்கு வேறு வழி இல்லை.

 

என் குடும்பத்தில் இருந்து விடைபெற்றுக் கொண்டு அவனுடைய காரில் அமர்ந்து இருந்தேன்.

 

யாரென்று தெரியாத ஒருவருடன் என்னை சந்தோஷமாக வழி அனுப்பினார்கள்.

 

என் குடும்பத்தை விட்டு பிரிந்து எங்கும் சென்றிடாத எனக்கு இது புதுமையாக இருந்தது.

 

அவர்களை விட்டுப் பிரிந்து செல்கின்ற வலி அதிகமாக பாதித்தது.

 

கண்ணீர் உருண்டு ஓடி என் கண்ணதை உரசி சென்றது.

 

அப்போது அவன் என் கைகளை ஆறுதலாக பிடித்தான். என் கண்கள் அவனுடைய கண்களை சந்திக்க அந்தக் கண்கள் எனக்கு ஆறுதல் கூறியது.

 

நான் என் கண்களைச் சிமிட்டியபடி வேகமாக தப்பிக்க நினைத்த கண்ணீரை அவன் துடைத்துவிட்டான்.

 

சிறு புன்னகை செய்துவிட்டு திரும்பிக் கொண்டேன். அவன் என்னை அவனுடைய வீட்டுக்கு அழைத்துச்சென்றான்.

 

ஒரு புதிய கோளுக்கு வந்தது போன்ற உணர்வு.யார் என தெரியாத பலர் என்னைச் சுற்றிக்கொண்டனர்.

 

என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன். அங்கிருந்த அனைவரும் என்னுடன் பேச முற்பட்டனர். அவர்கள் பெரும்பாலும் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன் கேள்விகளை கேட்டுக்கொண்டே என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றபோது என் கண்கள் அவனை தேடியது.

 

ஒரு சிறிய கூட்டத்தில் நின்று கொண்டிருந்தான்.

என்னை பார்த்ததும் அவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு என்னை நோக்கி வந்தான். என் இதயம் சீரில்லாமல் துடிப்பதை என்னால் உணர முடிந்தது. 

 

அதன் பின் நேராக என் கண்களை பார்த்து கையை பிடித்துக்கொண்டு என்னை அவர்களிடம் இருந்து பிரித்துக் கூட்டிக் கொண்டு சென்றான்.

 

அனைவரின் பார்வையும் எங்கள் மேல் படர்வதை உணர்ந்தேன்.ஆனால் அவன் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

 

அவனுடைய அறையில் என்னை உட்காரச் செய்து,

 

" நீ ரெஸ்ட் எடு. நான் உன்னை அப்புறமா வந்து பார்க்கிறேன்." என்று கூறி விட்டு சென்றான்.

 

என்னை தனிமையில் விட்டுச் சென்றான். அவனுடைய கட்டிலில் படுத்துக்கொண்டேன். இல்லை என்னுடைய கட்டிலில். இந்த வீட்டில் எதுவெல்லாம் அவன் உடையதாக இருக்கிறதோ, அதுவெல்லாம் இனி என்னுடையது. நான் அனுமதித்தால் அவன் அவைகளை உபயோகித்துக் கொள்வானம்.

 

அவனுடைய கள்ளம் கபடமற்ற பேச்சு எனக்கு பிடித்திருந்தது. சிறிது நேரத்திற்குப் பின் அவன் மீண்டும் என்னிடம் வந்தான்.

 

கட்டிலில் என் அருகில் உட்கார்ந்தான்.  உண்மையை கூற வேண்டும் என்றால் நான் சிறிது பயந்து இருந்தேன். 

 

இது வரை எந்த ஆணும் என் அருகில் இவ்வளவு நெருக்கத்தில் இருந்தது இல்லை.

 

அந்த ஒரு தருணம் என் இதயம் துடிக்க மறந்தது. பின்பு வேகமானது. நான் பெரு மூச்சு வாங்கினேன். கால்கள்கள் நடனமாடின. காய்ச்சல் வருவதுபோல இருந்தது.

 

நான் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் என் மனதில் உட்கார்ந்திருக்கிறான்.

 

ஏன் காலம் எவ்வளவு வேகமாக சுற்றுகிறது. இத்தனை நாள் பாதுகாத்து வைத்திருந்த என்னுடைய கற்பு இன்றோடு முடிந்து விடப் போகிறதா? கடவுளிடம் மன்றாடுவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.

 

எனக்கு தெரியும் நான் மனதில் நினைப்பதை கண்டு பிடித்து விடுவான் என்று.

 

அடுத்தவரின் மனதை புரிந்து கொள்வதில் திறன் படைத்தவன்.

 

  அவன் மெதுவாக என் கையை அழுத்தினான்.

 

என் கண்களை பார்த்து "டோன்ட் பானிக். ஐ அம் நாட் அ பீஸ்ட். அம் யுவர் ஹஸ்பண்ட். எனக்கு தெரியும் பொண்ணுங்க இந்த மாதிரி நேரத்துல எப்படி ஃபீல் பண்ணுவாங்கன்னு.

 

நம்மளோட ரிலேஷன்ஷிப் இப்பவே ஆரம்பிக்கனும்னு கட்டாயம் இல்ல.

 

நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்கணும். அதுக்கு நாம ப்ரெண்ட் ஆகணும்.இப்படி அமைதியா இருந்தா எதுவும் ஆகாது.

 

என்னோட ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட்ட அக்ஸப்ட் பண்ணுவீங்களா?" என அவனது கையை நீட்டினான்.

 

ஒரு பெரிய புன்னகையோடு என் கையை நீட்டினேன்.

 

நாங்கள் கைகுலுக்கிக் கொண்டோம். அதன் பிறகு நிறைய விஷயங்களை பற்றி பேசினோம்.

 

பள்ளிகள் கல்லூரிகள் என பேசிக் கொண்டே சென்றோம். அவனுடைய சிறு வயது ஆல்பங்களை காட்டினான்.

 

நான் அவனைக் கேலி செய்தபோது அழகாக சிரித்தான்.

 

என் பெற்றோர்களை பிரிந்தபோது வந்த வலி ஆறி சுகமானது.

 

ஒரு புதிய தொடக்கத்திற்காக தான் இந்த சுகமான வலிகள் என புரிந்து கொண்டேன். எனக்கு ஒரு நல்ல நண்பன் கிடைத்தான்.

 

இவ்வளவு அழகான கனவை என் அலைபேசியின் அலாரம் கலைத்து என்னை எழுப்பி விட்டது. அவன் எங்கே இருக்கிறான்? அவனுக்காக நான் இங்கே காத்துக் கொண்டிருக்கிறேன்.

 

வாழ்க்கை எவ்வளவு விசித்திரமாக இருக்கிறது. பெண்களை தனியாக அனுப்ப பயப்படும் மக்கள், யார் என்று தெரியாத நபருடன் தன் மகளை அனுப்பி வைத்துவிடுகின்றனர்.

 

பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை. தான் வளர்ந்த சூழ்நிலை யை விட்டு வேறு ஒரு புதிய சூழ்நிலையை ஏற்று பல கனவுகளுடன் நுழைகிறாள். 20 வருடத்திற்கு மேலாக தன்னை வளர்த்த பெற்றோரை விட்டு விட்டு யார் என்று தெரியாத ஒரு நபருக்காக பெற்றோரை விட்டு விட்டு செல்கிறாள். அவளுக்கான அன்பும் அங்கீகாரமும் கிடைக்குமா என்று தெரியாமலே.

 

எல்லா பெண்களுக்கும் அந்த அங்கீகாரம் கிடைப்பதில்லை.எல்லா ஆண்களும் தங்கள் மனைவிகளை புரிந்துகொள்வதில்லை. இன்னும் பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத கணவர்கள் இருந்து கொண்டு

தான் இருக்கிறார்கள். 

 

தன் கணவனுக்காக தன் ஆசைகளையும் கனவுகளையும் மூட்டைக் கட்டிக் கொள்ளும் பெண்களுக்கு கண்ணீர் மட்டுமே சுகமாகிறது.

 

ஆழ்ந்த சிந்தனையில் இருந்த என்னை தடுத்தாள், மாயா.

 


 
Posted : July 1, 2026 6:13 am
(@guna-sundari)
Posts: 139
Estimable Member
 
  • Yes really its  a painful.moment while we leave our home. But our partner will accept and understand our pain to overcome from this. In reality many men are neglect this understanding.

 
Posted : July 1, 2026 6:02 pm

Scroll to Top