இதயத்தில் வேறூன்றியவன்
இதயத்தில் வேரூன்றியவன்❤️
மருத்துவமனையே பரபரப்பாய் இருந்தது.
செல்லாம்மாவின் குழந்தை நார்மலாக பிறக்க வாய்ப்பில்வை என்று கூறிவிட்டனர்
ஆப்ரேஷன் செய்தா தான் குழந்தை எடுக்கப்படும். நீங்க இந்த பார்மில் கையெழுத்து போடுங்க." என்று, செவிலி கூறிச்சென்றதும், ராசு கணவன் என்ற முறையில் அந்த பார்மில் கையெழுத்து இட்டான்.
மடமடவென ஆப்ரேஷன் தியேட்டருக்கு செல்லம்மாவை மாற்றிட அதற்கான உடையை களைந்து மாற்றினார்கள்.
அந்த உடையோ முட்டி வரை போர்த்நியிருந்தது. ஒருமுறை மனைவியை பார்க்க, ஆசைப்பட்டான் ராசு.
காதலித்த காலத்தில் ராசுவை கட்டிப்பதாக செல்லம்மா வீட்டில் அடம்பிடித்து கூறிட, செல்லம்மாவின் அம்மா மகளது காதலை எதிர்த்து, ஒருமுறை செல்லம்மா காலில் சூடு வைத்தனர்.
இன்று பிரசவத்திற்கு தயாரான உடையில் செல்லம்மா இருக்க, ராசுவிற்காக அவள் வாங்கிற சூடு, கண்ணில்பட்டது.
அது கவனத்தை ஈர்த்திடவும் அதில் முத்தமிட்டபடி, தன் குழந்தையின் வருகையும், மனைவியின் வலியையும் உணர்ந்து, காத்திருப்பதாக கூறி வெளியேறினான் ராசு.
-பிரவீணா தங்கராஜ்.
-
துண்டு துண்டாய்...
1 month ago
-
வெற்றி அல்ல தோல்வி
1 month ago
-
ஓடிப்போன அம்மா (ஒருபக்க கதை)
1 month ago
-
புதுசெருப்பு
1 month ago
-
மூன்று சப்பாத்தி
1 month ago
- 25 Forums
- 331 Topics
- 1,595 Posts
- 0 Online
- 422 Members
