Forum

வெற்றி அல்ல தோல்வி
 
Notifications
Clear all

வெற்றி அல்ல தோல்வி

4 Posts
4 Users
1 Reactions
118 Views
(@praveena-thangaraj)
Posts: 266
Member Admin
Topic starter
 
[#280]

வினயின் அன்னை வீட்டின் அலமாரியை துடைத்து வைத்துக் கொண்டிருந்தார். வினய் வெற்றி பெற்று வாங்கிய பதக்கமும் கோப்பையும் துடைத்தா வைக்கும் தருணமெல்லாம் அகமகிழ்வது அன்னையின் வேலை

இன்று நடந்த ஓட்டப் பயிற்சியிலும் வெற்றி பெற்று ஓடி களைத்து மகன் வுருவானென, பரிசும் பாராட்டும் குவிந்திருக்க வருடினார்

வினயும் வெற்றி பெற்று அதை ஆசையாக அன்னையிடம் காட்டி மகிழும் நேரம், கலா மகனது அலமாரியில் மறைத்து வைத்த ஊக்கமருந்தை கண்டார்.‌

அதிர்ச்சியாகி ஆசையாக வந்த மகனிடமே காட்டி கேட்டார்.‌

''இந்த மாதிரி வெற்றி தான் வீட்டை நிறைச்சிட்டு இருக்கா வினய்?" என்று வலியுடன் இதயத்தின் பாரத்துடன் கேட்க, வினய் மௌனமாய் சென்று அமரவும், மகனது முதலிடம், வெற்றி கோப்பை எல்லாமே முன்பு பெருமையாக இருந்தது, இன்று அருவருப்பாக தான் வடுவாய் அமைந்தது கலாவிற்கு. துடைத்து வைப்பதற்கு பதிலாக தட்டிவிட்டு கண்ணீர் உகுத்தினார்.‌

-பிரவீணா தங்கராஜ்.


 
Posted : August 7, 2026 12:25 pm
Kalidevi reacted
(@crvs2797)
Posts: 189
Estimable Member
 

அச்சோ..! இப்படி ஏமாத்தியிருக்க வேணாம். திறமைக்கு அங்கீகாரம்  கிடைக்கிறதை விட்டு இப்படி ஊக்க மருந்தால வாங்கியிருக்க வேணாம்.

 

😒😒😬

CRVS (or) CRVS 2797


 
Posted : August 7, 2026 3:43 pm
(@guna-sundari)
Posts: 139
Estimable Member
 
  • Smart work may  give punishment any time. Super sis

 
Posted : August 7, 2026 10:03 pm
(@kalidevi)
Posts: 140
Estimable Member
 

NER VALILA KEDACHI IRUNTHA THAN ATHU VETRI


 
Posted : August 10, 2026 11:55 am

Scroll to Top